4 Apr 2015

தார் ரோடு,,,,,,


வொர்க்ஷாப் சந்து வழியே சென்றால் சீக்கிரம் போய் விடலாம். இல் லையென்றால் இப்படியே சாலை வழியே செல்வதென்றால் சுற்றி வடம்பிடித்துச்சென்றகதையாகிப்போகும்.நடக்கத்தெரியாதவன்பக்க த்துவீட்டிற்குபஸ்ஏறிப்போன கதையாக

மாவட்ட நூலக வாயிலில் இரு சக்கர வாகனத்தை ஸ்டார்ட்ப் பண் ணுகையில்கை பேசியில் அழைத்தமுருகன்தம்பிநிறையநேரம் பேசி னார்.கால் மணிக்கு ம் மேலாக நீண்டது அவரது பேச்சு.

மிதமான தூறல் பூந்தூறல் என்கிறார்கள் அதை. நானும் அதையே சொன்னேன்
அவரிடம்

மழையாஅந்தப்பக்கம்எனக்கேட்டபோது/””எங்களதுஏரியாவில்சரியான
மழை,வீட்டைவிட்டு வெளியேறமுடியவில்லை.மழை மட்டு பட்டது ம் இதோ உங்க ளை  சந்திக்க வருகிறேன், பர்மாக்கடையருகில் வந்து விடுங்கள்என்றார்.

ஆனால்அவர்அடையாளமிட்டநண்பர்வெளியூரில்இருப்பதாய்தகவல் சொன்னார்கள்.தெரிந்தவர்கள். ஆகவே பர்மாக்கடை செல்வது, நண் பரைப் பார்ப்பது பேசுவது அதிமுக்கியமாக பேசிக்கொண்டே டீக் குடிப்பது ,,,,,என்கிறஎல்லாமே கேன்சல்.

எல்லாவற்றையும் கைபேசியிலேயே பேசியும்,உறுதி செய்து விட்டு மாய்பெய்கிறமழையைநிறுத்திவிட்டுவரவேண்டாம்.தாங்கள்.மழை தன் போக்கில் பெய்யட்டும்,நீங்கள்உங்கள்போக்கில் வீட்டிலேயே இருங்கள்எனச்சொல்லி விட்டு மிதமாய் விழுந்த பூந்தூறலுடன் இருசக்கர வாகனத்தை நகற்றுகிறேன்.

அகன்று தெரிந்த நூலக வாயிலிலிருந்து வலப்பக்கமாய் செல்கிற சாலையில் சென்றால் சிக்கந்தர் பள்ளியைத்தாண்டி சிவகாசி பாலம் அருகே ஜேம்ஸ் டீக் கடை.

ஆனால்சிக்கந்தர்பள்ளியைகடப்பதுஅவ்வளவுஎளிதல்லஎனக்கு.இரண் டு பக்க முமாய் தன் அகன்ற வாயிலைக்காட்டி மிகவும் பெரிதாக நின்றபள்ளியது.அந்தந்த ஊர்களில் நின்று நிலைத்து விடுகிற மாற்று அடையா ளங்களில் எங்களூரில் சிக்கந்தர் பள்ளி.

புல்லப்பஸ் எடுப்பதற்கு கம்பி ஏற்றிவிடப்பட்ட கண்ணன் அலறிய அழுகைக்கு பி.டி மாஸ்டர் ஆறுமுகம் சிரித்த சிரிப்பில் விளையாட்டு மைதானமே அதிர்ந் தது அன்று/

எங்களதுவகுப்புவாத்தியார்வராததால்முதல்பீரியடே பி.டி பிரியட் எனச்சொல் லி விட்டார்கள். மாணவிகளெல்லாம் வகுப்பில் இருக்க நாங்களெல்லாம் ஒருவிதஏக்கம் கலந்த பிரிவுடன் கிரவுண்டுக்குப் போனோம்.எங்கள்வகுப்பின்சுவரைஒட்டித்தான்கிரவுண்ட்.அதுவும் மாணவிகள்அமர்ந்திருந்தஜன்னலோரம்,கொடுமைடாசாமி. இதற்கு பயந்தே நாங்களெல்லாம் தப்பில்லாமல் எக்ஸ்ர்ஸைஸ் பண்ண வும்விளையாடவுமாய்முயற்சிப்போம்.அதிலும்அந்தகுட்டைப்பையன் கண்ணன்இருக்கானே?வாயாலேகிரவுண்டைஅளந்துவிளையாட்டை விளையாண்டுவிடுவான்.

அவனுக்குபூக்களின்மீதுபிரியம்இருக்கிறதோஇல்லையோ,முன்பெஞ்சில்
அமர்ந் திருந்த மகேசின் மேல் பிரியம் இருந்தது. பள்ளியின்உள்ளே இருக்கிறதோட்டத்தில்உள்ளபூச்செடிகளுக்குவாடிக்கையாய்தண்ணீர் ஊற்றுவது அவன் தான். பூத்துமலர்ந்திருக்கிற பூக்கள் ஒவ்வொன்றி லும் மகேசின் முகம் பார்க் கிற திருப்தி அவனுக்குள்.

ஒருதடவைஅவள் கண்ணனிடம்ஊக்குகேட்டு வாங்கிவிட்டாள் என பத்து நாட்கள் வகுப்பு பூராவும்சொல்லிக்கொண்டும் சந்தோஷித்தும் திரிந்தான்.

அவனுக்கிருக்கிறகவலையெல்லாம்வேறுயார்பார்த்தாலும்சரி,மகே ஷ் தான் தப்பாய்விளையாடுவதையும், எக்ஸர்ஸைஸ் எடுக்கத் தெரியாமல் நிற்பதையும் பார்த்து விடக் கூடாது என்பதே அவனது அதிமுக்கிய கவலையாய் இருந் தது.

அவனது வீடு இருக்கிற தெரு வழியாகத்தான்நான்,மற்றும் இன்னும் நால்வர் சேர்ந்துவருவோம்,பள்ளிக்கு,நாங்கள்வரும்போது ரெடியாக நிற்பான் அவனது வீட்டு வாசலில்.

பட்டணம் பொடி பொம்மை தலையாட்டிகொண்டு நிற்கிற முருகன் கோயில் சந்து வழியாக வருகையில்எப்படியாவதுஅந்த பொம்மை யை தொட்டு விட வேண்டும் என்கிற ஆசை என்னுள் எழாமல் இருந் ததில்லை.என்னின்அந்தஆசைக்குஎண்ணைஊற்றுகிறவனாய்என்னு டன் வருகிற சந்திரன் இருந்திருக்கிறான் அப்போதெல்லாம்.

அவனும் நானும் பக்கத்துப் பக்கத்துத் தெரு,அவன் மணி முத்து சந்து, நான் சிதம்பரம் சந்து. இரண்டு பேரும் எப்போதாவது அபூர்வமாக தெருக் குழாயில் சந்தித்துக் கொள்வோம்.

எங்கள்இருவரின்தெருவுக்கும்ஒரேகுழாய்தான்.அதனாலேயேஎன்னவோ
சண்டைநொறுங்கும்.சண்டைஉச்சதில்இருக்கும்போதுநாங்கள்இருவரும்
தனியாகஒதுங்கிப்போய்பேசிக்கொண்டிருப்போம்சிரித்துவிளையாடிய வாறு/

அது என்ன ராசி எனத்தெரியவில்லை.நாங்கள் குழாயடிக்கு வருகிற நாட்களிலெல்லாம்சண்டைநடக்கிறது.ஒருவேளைதினசரி இப்படித் தானோஎன்னவோ? என நாங்கள் இருவருமாய் கவலை கொண்டி ருந்தநாளின்மாலைப்பொழுதொன்றில்நாங்கள்விளையாடிக் கொண் டிருந்த பொழுது கனகு அண்ணனை நான்கு ஐந்து பேர்கள் அடித்து இழுத்துப்போனார்கள்.சந்திரன் தந்த தைரியத்தில் கொஞ் சம் தயங்கி நானும் பின்னால் சென்றேன். கனகு அண்ணனுக்கு உடம்பெல்லாம் ஒரேஅடி,அவரால்நடக்கக்கூடமுடியவில்லை.உதடெல்லாம்கிழிந்து தொங்கியது.முகத்தில்ஆங்காகேதிட்டுத்திட்டாய் ரத்தம்/ இழுத்துப் போனவர்கள்கையில் கட்டையும்செங்கலும்கல்லுமாய்/ நன்றாக குடித்திருப்பார்கள்போலும்.கனகு அண் ணன் பாவம் வெட்டுப்படப் போகிறஆடுபோல பரிதாப மாய்முழித்துக்கொண்டும், தலையை கவிழ்ந்து கொண்டுமாய் சென்றார். கனகு அண்ணனின் வீட்டுக்காரப் பெண்கள் தலையிலடித்துக் கொண்டு அவர்களின் பின்னால் அழுது கொண்டே செல்கிறார்கள்.

அவர்கள்அடியும்கையும்வசவுமாகஅவர்களதுபின்னால்வந்தபெண்க ளையும்,கனகு அண்ணனையும் அடித்து இழுத்தபடி செல்கிறார்கள். அங்கு உள்ளவர்கள் தான் சத்தம் போட்டு கனகு அண்ணனின் வீட்டுப் பெண்களைவீட்டிற்குப் போகச் சொன்னார்கள். இல்லையென்றால் பெண்கள் மீது இருக்கிற கோபம் கனகு அண்ணன் மீது இன்னும் கூடக்கொஞ்சம் பாயும் எனச் சொன்னார்கள்.

அவரதுஅண்ணன்அந்தத் தெருவில் உள்ளவனுடன் பஜாரில் வைத்து சண்டைபோட்டுவிட்டானாம்.வார்த்தைமுத்திகைகலப்புஆகிவிட்டது போலும். அதற்கு பதிலடியாக ஆட்களை சேர்த்துக் கொண்டு வந்து விட்டான்,அந்ததெருக்காரன்அண்ணணைதேடிவந்தஇடத்தில் அவன் இல்லைஎனவும் சாப்பாட்டுத் தட்டின் முன் அமர்ந்திருந்த தம்பியை அடித்து இழுத்து வந்து விட்டார்கள்.

கனகுஅண்ணன்ரொம்பவும்நல்லவர்.கைவண்டிகள்நிறுத்தப்பட்டிருக்கும்
இடத்திற்குப்பின்னால்ஓடுகிறசாக்கடைவிளிம்பில்அமர்ந்துவழக்கமா ய்காலையிலும்மாலையிலுமாய் மலம் கழிக்கிறஎன்மீதும்,சந்திரனி ன் மீதுமாய் குப்பைகளை வீசி விட்டுப்போனப் போனவர்களை அடித் துத் துரத்தியவர். பார்க்கிற நேரங்களில்எங்கள் இருவருக்குமாய் மிட்டாய் வாங்கித்தருவார். சந்திரனுக்குச் சொந்த க்காரர்.

சந்திரனின்அப்பாதான்போய்கனகுஅண்ணனைஅடித்துஇழுத்துபோனவர்
களிடமிருந்துமீட்டுக்கூட்டிவந்தார்.கையுடன்கனகுஅண்ணனின்அண்ண னைதனது சொந்தக்கார்கள் இருக்கிறதூரத்துஊர்ஒன்றில்ஆறு மாதத் திற்கு விட்டு விட்டு வந்தார். கையோடு கனகு அண்ணின் வீட்டார் களை வீட்டை காலி பண்ணச் சொல்லி விட்டு தங்களது வீட்டின் அருகிலேயெ குடி வைத்து விட்டார்.

சந்திரனின்அப்பாவுக்குஊருக்குள் முக்கியப்புள்ளிகள்சில பேர் பழக் கம். அவரி டம் பேசப் பயப்படுகிறவர்களே கூட உண்டு,.பார்த்தும் நமக்கு ஏன் வம்பு என பார்க்காதது மாதிரி கடந்து போகிறவர்களும் உண்டு. இவன் குடியிருந்த காலத்தில் வேனல் பூத்திருந்த தெரு அது. இயல்பில்அப்படிஇல்லாவிட்டாலும்கூடதற்காத்துக்கொள்ளவாவது அப்படிஇருக்கவேண்டியகட்டாயத்திற்குஆளாகிப்போனார்கள்.

அங்கிருந்து சிக்கந்தர்பள்ளி இரண்டு கிலோமீட்டராவது இருக்கும். நடைதான் வாகனம்.செருப்புஇல்லாதகால்களுடனும்,வார்அறுந்த பையுடனும்விளையாட்டாய்ச்செல்கிறஅவர்கள்ஒருவனின் கிழிந்த சட்டையினுள்மற்றொருவன்பொடிப்பொடிகல்லைபோட்டுவிளையா டியவாறு செல்வார்கள்.டவுசர் தபால் பெட்டி.
முகத்தில் வெட்டுகாய தழும்பை சுமந்திருந்த பி.டி மாஸ்டர் ஆறுமு கம் அன்றைக்கு எந்த விளையாட்டும் இல்லை.பீரியட் முழுவதும் எக்ஸர்ஸைஸ் தான் எனச்சொல்லி விட்டார். அப்படிச்சொன்ன மறுகணமேசார் ஒண்ணுக்குஎன ஒற்றை விரலை தன் நெஞ்சுக்கு நேராய்காண்பித்தகண்ணன் பாத்ரூம் போய்பத்து நிமிடங்களுக்கு மேலாகியும் வராததால் பையன்கள் போய் அவ னை கூட்டி வந்தார்கள்.உடல் நெளிய வந்தவனை புல்லப்ஸ் கம்பத்தில் ஏற்றி விட்டு விட்டார்.பி.டி மாஸ்டர்.அனேகமாக எல்லோரும் தாவி கம்பத்தைப் பிடித்து விட்டார்கள்.முடியாத சில பேருக்கு பி.டி ரூமிலிருந்து ஸ்டூலைக் கொண்டு வந்து போட்டார்கள். ஸ்டூல் போட்டும் ஏற மறுத்த கண்ணனை ஒரு அதட்டு அதட்டி கம்பத்தை பிடிக்க வைத்தார்.ஒனக்கு என்னடா ஆச்சு,ரெண்டு வாரமா தப்பிச் சுட்டு வார,இந்தா அவனப்பாரு,முடியாது எனக்கு வராதுன்னு சொன்னவன் இன்னக்கு ஒரே தம்முல இருவது எடுத்துட்டான். நீயி,,,,,,,,,,, ஏறுடா, ஸ்டூல்மேல எட்டிக் கம்பத்தப்புடி. இன்னைக்கு ஒரு ரெண்டாவது எடுக்கணும்.இல்லதோல உரிச்சி அந்தக் கம்பத் துலயே தொங்க விட்டுருவேன். ராஸ்கல்.ஏறுடா மேல ஏறுடா,,,,,,, ,,,,,,,என அவர் அதட்டியதும் கண்ணன் கீழே தரை பார்த்து அழுது கை நழுவ விட்டதும் நிஜமாய் பழங்கதையாய் இன்று/

அவன்ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ஏதோ ஒரு பேங்கில் வேலைக்குச் சேர்ந்துவிட்டதாய்கேள்வி.பி.டிமாஸ்டரும்,என்.சி.சிமாஸ்டரும்எங்க ளுக்குதமிழுக்கு நாக்கைப்பழகியநாகேந்திரன் சாரும், வரலாற் று டீச்சரும்ஸ்கூல்பியூன்மணி அண்ணனு ம் மறக்க முடியா அடையா ளங்களாகவும்அடிமனதில் தங்கிப்போன வர்களாகவும்/

ஒவ்வொருமுறையும் பள்ளியை கடக்கிற போது இவர்கள் அனை வரின் நினைவும், பிம்பங்ளும், பள்ளியின் பிரமாண்ட தோற்றமும் இன்னும் பச்சையாகவே/

எப்போது போனாலும் அன்பும் பிரியமும் வாஞ்சையுமாய் பேசுகிற மனிதர் ஜேம்ஸ்ராஜ்.கண்பார்க்ககை செய்ய என வேலை கவனத்தில் இருந்தபோதும்கூடயாரிடம்எப்படிப்பேசுவது என்கிறஅளவு கோளை எந் நேரமும் மடியில் சுருட்டிவைத்துக்கொண்டிருக்கிறவராகவே/ அந்தஏரியாப்பக்கம்போய்விட்டால்அவரது கடையில் ஒரு வடையும் டீயும்சாப்பிடுவது உறுதி. குடிக்கிற டீயும், கடிக்கிறவடையும் கலந்து கட்டிஇருக்கிறபேச்சுமாய் இருக்கிற இனிய தருணம் அது.சமயத்தில் பேச்சு வாக்கில் டீயின் எண்ணிக்கைஇரண்டாகக் கூட உயர்வ துண்டு.

டீக்கடைகள் பொதுவாகவே என்னைப் போன்றமனிதர்களைக்கட்டிப் போட்டுதான்வைத்திருக்கின்றன.வாங்கிறகாய்கறிகளையும்,பலசரக் கு களையும் விட டீக்கடைகளின் முன்னோர தாழ்வாரங்களிலும், அதனுள்உள்ளஉறைவிடங்களிலுமாய்அமர்ந்துகுடிக்கிறடீயும், கடிக் கிறவடையும்,நிலவுகிறபேச்சும்நம்வாழ்வின் பிரதிபலிப்பாகவே/

அப்போதெல்லாம்டேப்ரிக்கார்டர்இல்லாதகடைகள்மிகவும் குறைவு. அதை யாரும் டீக்கடையாகப் பார்ப்பதில்லை.கூட்டமும் போகாது. அதிலும் கடைகளுக்குள் போட்டியே/ பாடலின் இசைக்கேற்ப அமர்ந் து அமர்ந்து எரிகிற பொடிப் பொடி லைட்டுகள் கொண்ட டேப்ரிக் கார்டர் மிகவும் பேமஸ்.

எனக்குத்தெரிந்துதாலூகாஆபீஸ்பக்கம்ஒருவர்இரண்டு டேப்ரிக்கார் டர் வைத் திருந்தார் அவரது டீக்கடையில்/இரண்டிலுமாய் இருந்து சப்தமிட்டு ஒலிக்கிற பாடல்கள்அந்தவழியே செல்கிறவர்களையும், கடையில்டீசாப்பிடுபவர்களையும் தலையாட்டவைக்கும்.அவர்ஒரு இளையராஜாரசிகர்.இத்துணூண்டுகடையின்மூன்றுபக்கச்சுவர்களிலும் இளையராஜாவுடன்சேர்ந்துஎடுத்துக்கொண்டபோட்டோக்கள்சிரிக்கும்.

மாஸ்டர்களுக்காகடீக்குடிக்ககுறிப்பிட்டகடைகளைதேடிச்செல்கிறவர்
களைப் போல டேப் ரிக்கார்டர் இருக்கிற கடைக்குப்போனார்கள்.

ஆனால் இது எதுவும் இல்லாமல் பிரிய மனிதர் ஜேம்ஸ்ராஜ் இந்த முப்பது ஆண்டுகளாக ஜெயித்துக்கொண்டு வருகிறார்.

வொர்க்ஷாப் சந்து தாண்டி மெயின் ரோட்டிற்கு வருகிறேன். வலப் பக்கம் ,இடப் பக்கம் மற்றும் நேராக பிரிந்து வழிகாட்டுகிற சாலை யின் உச்சி வகிடை பின் பற்றிச் சென்றால் வீட்டிற்குப் போகலாம். வலப்பக்கம் போனால் பஜாரு க்கு, இடப்பக்கம் சென்றால் ரயில்வே ஸ்டேஷனுக்கு/

கன்னியாகுமரிஎக்ஸ்பிரஸில்வருகிறேன்எனச்சொன்ன நண்பணை ர்சீவ் பண்ண வேண்டும். அதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கி றது, வீட்டிற்குப் போனால் வர முடியாது.ஏதாவது வேலையாகிப் போகலாம் அல்லது மிதமிஞ் சிய சோம்பல் வந்து உடல் போர்த்தி விடக்கூடும். ஆகவே இங்கேயே எங்கா வது ஒரு டீக்கடையில் நின்று பொழுதைக் கழித்து விட்டு ரயில் வருகிற நேரமாய்ப் போக லாம் என நினைக்கி றேன்.

நிறைலக்கேஜுடனும்தன்காதல்மனைவியுடனும்வருவதாகச்சொன்ன
வன்வேறு  யாருமில்லை.

அன்றுபுல்லப்ஸ்கம்பத்தில்தொங்கிவாறு அழுத கண்ணனும், அவனு க்கு முன் பெஞ்சில் அமர்ந்திருந்த மகேசும்தான் கணவன், மனைவி யாக வருகிறா ர்கள்/

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

முடிவை எதிர்ப்பார்க்கவேயில்லை... அருமை...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான விவரணம்...இறுதி வரி அட போடவைத்தது!

KILLERGEE Devakottai said...

அருமை ஸார்
தமிழ் மணம் 4

vimalanperali said...

வணக்கம் கில்லர்ஜி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வாக்களிப்பிற்கும்/