13 May 2015

ஆரஞ்சு நிறத்துண்டும் கூரிய கொம்புகள் வைத்த மாடும்,,,,

கூரியகொம்புகள்கொண்டமாடுகறுப்பும்வெள்ளையும்தரித்துமேய்ந்துகொண்டி ருக்கும் போது இவனது ஆரஞ்சுநிறத் துண்டைக் குத்தித்தூக்கி போகும் என நினைக்க வில்லை சிறிதளவேனும் கூட/

பேண்ட்சர்ட்போட்டுஇன்பண்ணவேண்டியதுதான்பாக்கிஎன்கிறநிலைகளுக்குள்ளெல்லாம் எட்டிப்பிரவேசிக்காமல் மனைவி சுட்டிருந்த மல்லிகைப்பூப்போன்ற இட்லிகள் நான்கை சட்னியில் தோய்த்துவிழுங்கிவிட்டு எழுந்திருக்கும்போது மணி9.00 ற்கும்மேல்ஆகிப்போனதை வட்டவடிவகடிகாரம்முன்னறிவித்துச்செல்கிறது.

அரிசி மாவும் உளுந்த மாவும்அரைச்சசுட்டதோசை,,,,,அந்த சொல் தோசைக்கு மட்டுமல்ல, இட்லிக்குமாய்பொருந்தியது.

அலுவலகத்தில்இருக்கிறசகஊழியர்களிடமும்நண்பர்களிடமும்பேசும்பொழுது சொல்லியிருக்கிறான். முன்னொருகாலத்துலஎன்ன நம் அப்பா, தாத்தா காலங் கள்ல பித்தளச்சட்டியில கையலத்துல இட்லி சுட்டு சாப்டுட்டு இருந்தோம். சாப்புறதுக்குன்னு செஞ்ச இட்லிசமயத்துலசண்டபோடுறதுக்கும் ஆகிப் போகு துங்குற கதையா கொஞ்சம் இறுக்கமா இருந்தாலும் சாப்புட்டோம்.ஆனா இப்பஅப்பிடியாபூப்போலானஇட்லியஉளுந்தவடைசைசுலசுட்டெடுக்கமுடியுது. நாலுவகைச்சட்னிகளோடஅதைத்தொட்டுச்சாப்புடமுடியுது.முன்னெல்லாம் சமையல்பண்ணனும்ன்னாஅடுப்புப்பக்கத்துலயேஉக்காந்துட்டு ஊது கொழாய வச்சிட்டுஊதிக்கிட்டேஇருக்கணும்.ஆனாஇப்பஅப்பிடியில்ல.ஸ்டவ்வசிம்முல எரிய விட்டு சமையல் பாத்திரங்கள ஏத்தி வச்சிட்டு நாம செய்ய வேண்டிய சின்ன வேலைகள் செஞ்சி முடிச்சிட்டு வந்து சமையல் பாத்துரத்த அடுப்புல இருந்து யெறக்கி வச்சிரலாம்.இதுலமைக்ரோஓவன்வசதிவேற,இது போலான வசதிக்கும் ,தோதுக்கும் நம்மள நாமே மாத்திக்கிமாதிரியும்,அதுக்கு ஏத்தாப் போலயும்அப்டேஷன்ஆகிக்கிறணும் என்பான்.

சரிஅதனால்என்னகெட்டுப்போனதுஇப்பொழுதுஎன்கிறவர்கள்அப்டேஷனுக்கு வரமறுக்கிறார்கள்.எப்பொழுதுமேஇப்படியாய்ஒரு கூட்டம் முரண்டு பண்ணிக் கொண்டும்தர்க்கம்பண்ணிக்கொண்டுமாய்இருக்கத்தான்செய்கிறார்கள்.அவர்
களிடம்தெளிவாகஒன்றுசொல்லவேண்டும்.உங்களின்அருகாமையிலேயே பேருந்தும் புகையிரதமும்இன்னபிற கனரக இலகு ரக வாகனங்களுமாய் செல் கிறதுதான்.அதில்ஏறிச்செல்வதைவிடுத்துநடந்துதான்செல்வேன்என்றால்உங்க ளுக்குமுன்னால்பேருந்துகளிலும்இன்னபிறவாகனங்களிலுமாய்சென்றவர்கள் போய்அடுத்ததலைமுறையைகூட்டிக்கொண்டுவந்துவிடுவார்கள்.அதற்காக
நடக்கவேண்டாம்உங்களைஎனச்சொல்லவில்லை.நடக்கவேண்டியவிஷயத்
திற்குநடக்கவேண்டியதுதான்.வாகனங்களில் போகவேண்டிய விஷயத்திற்கு வாகங்களில் செல்ல வேண்டியதுதான். எனச் சொல்வான்.

அடப்போப்பா, சைக்கிளு,பஸ்ஸீ,ட்ரெய்னு,வாகனம்ன்னு,,,,,,எல்லாம் தெரியும் எங்களுக்கும்எனச்சொன்னவர்களில் சிலர் ஆமாம்பா நீ சொல்றது வாஸ்தவம் தான் எனச்சொன்னார்கள் பின்நாளில்.சொன்ன சொல் அப்படியே நிற்க இவன் போய்கொண்டிருக்கிறான் அப்டேஷன் ஆகி/

9.00ற்கும்மேலாய்ஆகிப்போனமணியைகைபிடித்துநிறுத்திவிடஇயலாது,ஆனால் கிளம்பலாம் அதன் கைபிடித்தும் துணையுடனுமாய் என நினைத்துக்கொண்டு ஆஸ்க்கலர் பேண்டைமாட்டிக்கொண்டுவெள்ளைக்கலர்காண்பித்த முண்டா பனியனை தலை குனிந்து மாட்டப்போன வேளை சார்,சார் என்கிற கனம் மிகுந்த குரல் வந்த வாசல் திசையை நோக்கி விரைந்த போது அங்கே எதிர் வீட்டுக்காரர் அன்பின் உருவாய் ஓவியம் தரித்தது போல் நின்றார்.

மேலே துண்டு,இடுப்பிலே வெள்ளை வேஷ்டி,சட்டை எங்கே காணோம் எனக் கேட்கவும் இல்ல.கேட்க நினைக்கவும் இல்லை.

சார் ஒங்க துண்ட மாடு தூக்கீட்டுப்போகுது ,அங்க பாருங்க என அவர் கை காட்டிய திசையில் மாட்டின் இடது கொம்பில் சிக்கியிருந்ததுண்டு நீளமாய் தொங்கி அதன் முகத்தின் மீது படிந்து கொம்பிற்கும் காலுக்குமாய் இழுபட்டுத் தெரிந்தது.

நல்லகலர்துண்டுஅது.ஆரஞ்சுக்கலரில்வெள்ளையும்இன்னும்பிறகலர்களிலுமா ய் நூல் ஓடிக்காண்பிக்க அழகு பூத்து பிஷ்பித்தது போலவும் சேர்த்துக்கட்டிய இளம் மொட்டுகள் ஒன்றுடன் ஒன்றாய் உரசிக்கொண்டு இருப்பது போலவு மாய் கலர் காண்பிக்கிற துண்டு இவனுக்கு மிகவும் பிடித்ததாய் இருந்தது.

ஆறு மாதங்களுக்கு முன்னால் A R R ஜவுளிக்கடையில் அதை வாங்கி வந்த அன்று இரவு மழை நாள் என நினைக்கிறான்.வானம் விடாமல் அடம் காட்டி பெய்து கொண்டிருந்தது. புனுப் புனுவெனவும் தன் நிலையில் நின்றுமாய்/

வானத்திற்கும் பூமிக்குமாய் நட்டு வைத்த வெள்ளிக்கம்பிகளைப்போல் பிழை யற்றதோற்றத்துடனும், விசிறியடித்த மென் காற்றில் உடல் வளையும் நடனக் காரி போலவுமாய் மென் நடனம் ஆடிக்கொண்டிருந்தது.

கடையின் பெயர் தாங்கிய மஞ்சள் ஜரிகைப் பையினுள்ளாய் வைக்கப்பட்டி ருந்த துண்டை அந்த ஜரிகைப்பையுடன் சேர்த்து இன்னொருபாலீதீன்பையில் போட்டுச்சுற்றி கைப்பையில் வைத்த பொழுது இனி நனையாது துண்டு என நம்பிக்கை வந்தது இவனுக்கு. நனையாது என்பது வாஸ்தவமே,பையில் ஏற்கனவே இருக்கிற தண்ணீர் பாட்டில் காலி டிபன் பாக்ஸ் இவைகளுடன் வைக்கும் பொழுது கசங்கித்தானே போகுமெனவும் நினைக்கத்தவறவில்லை.

கடையில் துண்டு எடுக்கையில் இவனுக்குத் தெரியவில்லை இப்படி ஒரு மழை பெய்யும் என/

இவன் கடைக்குள்ளாய் நுழையும் போதேமுகம்மலர்ந்து வரவேற்ற கடையின் முதலாளிஎன்ன சார்எடுக்கணும் துண்டுதானே,,கீழ்த்தளத்துல போயி பாருங்க எனச்சொன்னவர்டேய்த்தம்பிசாரக்கூட்டிக்கொண்டுபோயிகாட்டபுடிச்சதுண்டா எடுத்துக்கட்டும் என கடைப்பையனை அழைத்துக்கூட்டிப் போகச்சொன்னார். கூடவே இவனது நலம் விசாரிக்கவும் மறக்கவில்லை.

நண்பர் ராஜ்தான் அந்தக்கடையை அறிமுகம் செய்து வைத்தார்.பெய்கிற மழைக்கும் நல்ல மனிதர்களுக்கும் சம்பந்தம் உண்டு போலும்.அடப்போடா என பிறர் சொன்ன போதும் கூட இவன் அதை மறுத்திருகிறவனாக/

பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம்,ஒருவரை நம்பிஓரிடத்தில்அறிமுகம் செய்விக்கிற மனம் வேண்டுமே/அதுதான் இவனைப்பொறுத்த அளவில் பெரிய விஷயமாய்ப்படுகிறது.அவரின் மன விசாலமே ஜவுளிக்கடையில் வேலை பார்த்தஅவரைஅரசாங்கஊழியராக்கிமாதாந்திரச்சம்பளம்வாங்கவைத்திருக்கிறது எனலாம்.வாழ்கநல்லமனங்களும்,ராஜ்களும்எனச்சொல்லிக்கொண்டிருந்த

வேளை இவன்முன்னாக துண்டு விரித்துப் போடப் படுகிறது.

காட்டப்பட்டநான்கைந்துதுண்டுகளில்இதுகொஞ்சம் பிடித்திருந்தது. நெசவும் கலரும் டிசைனும் சேர்த்து,இவன் அப்படித்தான் எல்லாவறையும் பிரிக்கச் சொல்லிஅது இது இது அது எனத்தாவித்தாவியெல்லாம் பார்ப்பதில்லை.

எடுத்துப்போடுபவர்கூடச்சொல்லுவார்.எனக்குவேறவேலைஎன்னசார்இருக்கு,,,? இதற்குத்தானேஇருக்கிறோம்நாங்கள்தவிரபிரித்துப்போட்டால்தான்துணியின் முழுமைதெரியும் என்பார்.

தெரிந்துவிட்டது,அவர்பிரித்துப்போட்டஆரஞ்சுக்கலர்துண்டில்.கையிலெடுத்து மென்மைபொங்கபார்த்துவிட்டும்ஒரு குழந்தையை கையில் தூக்கிப் பார்ப்பது போலாய் பார்த்து விட்டுமாய் கடைப்பையனிடம் கொடுக்கிறான்.இதையே மடித்து பேக்ப்பண்ணி விடுங்கள் என.

கடைக்காரரிடமிருந்து வாங்கி வந்த அன்று அந்தத்துண்டை நெஞ்சின் மீது இரண்டாக மடித்துப்போட்டுத்தான் தூங்கினான் அதன் மொட மொடப்பையும் புது வாசனையும் நுகர்ந்தவாறே/மென்மை பூத்த சிறுமலர்கள் நெஞ்செங்கும் பூத்திருப்பதாய்இருந்ததுஅன்றுஇரவுஅவனுக்கு/

புதுத்துண்டு,அதன் வாசனை,மொடமொடப்பு,அதன் மீது ஒட்டப்பட்டிருந்த பிராண்ட் தாங்கிய லேபிள் அதை ஒட்டியதாய் இருந்த துண்டின் டிசைன் என எல்லாமேபார்க்கநன்றாகவே/அதனாலேயேகூடஇவன்அப்படிப்படுத்திருக்கலாம் எனத்தோணியதுஇப்போதுநினைக்கையில்/

வாஸ்தவம்தான் பொதுவாகவே துண்டுகள்தோளுக்கு இல்லாமல்ப் போனால் பெரிதாக ஒன்றும் இல்லை. ஆனால்இடுப்புக்குமட்டுமாய்இல்லாமல் போய் விடக்கூடாது.அதுமாபெரும்தவறாகவும்சமூகக்குற்றமாகவும் ஆகிப் போகும்/  பிறகு மலிந்து போயிருக்கிற சமூகக்குற்றங்களில் இதுவும் ஒன்றாய் வரிசை கட்டி நிற்கும்.வேண்டாமே அது என நண்பன் ஒருவன் எப்பொழுதோ ஒரு நாளில் சொன்னது ஞாபகத்திற்கு வந்து போனதாக/

என்றாவது ஒரு நாளின்றின் பொழுதில் வால்நட்சத்திரம் போல் வந்து போகிற அவன் இப்படித் தான் ஒரு நல் வார்த்தையை அல்லது ஒரு நல்ல சொற் கட்டை முத்தாய் உதிர்த்து விட்டுப்போய் விடுவான்.

பஜாரில்அன்று பார்த்த ஒரு நாளில்தான் சொன்னான்.இல்லை நண்பா அப்படி நினைக்காதேநம்மிடம் காய்கறி விற்கும் இவர்களைவயிற்றுப் பிழைப்பிற்காக உழைப்பவர்கள்.ஆனால்அவர்கள் வயிற்றுப் பசியை அறியாதவர்கள் என இவர்களைக்கடந்துசென்றசிலரைப்பார்த்து காதருகேசொன்னான்.

இது போலான விஷயங்களை சப்தம் போட்டுச் சொன்னால் தான் வம்பாகி விடுகிறதே/ நல்லவனாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டுமென்றால் யாருக்கும் தெரியாமல்ரகசியமாகஇருந்துகொள்எனச்சொல்லப்படுகிற தமிழ் திரைப்பட வசனம் போல் வாழ்ந்து விட்டுப்பொக வேண்டியதுதானே, இதற்குப் போய்ஏன்இப்படி,,,?சிரமப்பட்டுக்கொண்டு,என்பான்பதிலுக்குநண்பனிடம்/

முடிஞ்சா துண்ட எடுத்துருங்க சார்,நான் கூடமொதல்லபாக்கல,அப்புறம்தான் தற்செயலாப் பாத்தேன் வீட்டு வாசல்லயிருந்து,,,,என்றார் எதிர் வீட்டுக்காரர். ரிட்டையர்ட் சிவில் எஞ்சினியர். இரண்டு பிள்ளைகள்,மனைவி வாடகை வீடு என என இருக்கிறவர்,மூத்த பெண்னை ஆறு மாதங்களுக்கு முன்பு கல்யா ணம் செய்து கொடுத்தார் பெங்களூரில்/கொடுத்த இடத்தில் ஏதோ பிரச்சனை என பெங்களூருக்கும் வீட்டிற்குமாய் அலைந்து கொண்டிருக்கிறார், மனைவி யையும் கூட்டிக்கொண்டு/

வாசல் விட்டு இறங்கியதும் இவனை விட்டு சற்று தூரத்திலாய் நின்றிருந்த மாடுகட்டாந்தரைக்கும்கொம்பிற்குமாய்இடையில்மாட்டிக்கொண்டு இழுபட்ட துண்டை எடுப்பதற்காய் மாட்டை நெருங்கி போகப்போக அது இவன் விரட்டு வதாய்நினைத்துஇவனைவிட்டுவிலகிப்போய்க்கொண்டிருந்தது.பரந்துவிரிந்த புல்வெளி,அதில்கடிக்கபுல்கிடைக்காமலேயாஇப்படிவந்துகாயப்போட்டிருக்கிற துண்டைஎடுத்துச்செல்லும்குத்திக்கொண்டு/என மனைவியிடம் சொன்னதும் அவள்சொன்னாள். அப்படியில்லை அது. கண்ணில் பட்ட துண்டை அள்ளிச்
சாப்பிடவா வந்திருக்கும் அது.தவிர தரைபாவி இருக்கும் புற்களும் பச்சைக ளும் இப்பொழுது பெய்த மழையில் நனைந்து மண்ணேறிப் போயிருக்கும். அதைத் தின்ன முடியாமல் பசியுடன் ஒட்டிய வயிறை எக்கிக் கொண்டு நம் வீட்டின் சுவரை உரசியிருக்கும்.அப்போது துண்டு அதன் கொம்பில் குத்திக் கொண்டிருக்கலாம்.அதற்குதான்வாய்ப்பதிகம்என்கிறஅவளின்பேச்சும் ஏற்றுக் கொள் கிறதாகவே இருந்தது.

மாட்டுக்காரம்மா எப்பொழுதாவது மாட்டை பத்திக்கொண்டு வருவாள்.அப்படி வரும்போதுஎல்லாமாட்டையும்பத்திக்கொண்டுவரமாட்டாள்.எண்ணிஇரண்டு மாட்டைமட்டுமே பத்திக் கொண்டு வந்து அதன்கழுத்தில்இணைத்திருக்கிற நீளமான கயிற்றால் கட்டிப் போட்டு விட்டுப் போவாள்அங்கிருக்கிற சீமைக் கருவேலைச்செடிகளில்ஒன்றில்/

தனித் தனியாய் பிரித்துக்கட்டப்படுகிறமாடுகள் இரண்டும்கயிறு உள்ளதூரம் மட்டுமாய்மேய்ந்துமுடித்துவிட்டுகனமாய்சபதம்கொடுத்துகத்தஆரம்பித்ததும் வந்துஅவிழ்த்துப் போவாள்.அப்படித்தான்ஒருமுறைகட்டிப் போட்டவள் அதை அவிழ்க்கவரவில்லை,நீண்டநேரம்கத்திப்பார்த்தமாடுகள்அசந்து படுத்து விட அதைப்பார்த்துக்கொண்டிருந்தஇவன்பிளாஸ்டிக்பக்கெட்நிறையதண்ணீர் கொ
ண்டுபோய்வைத்தான்.இரண்டுக்கும்தனித்தனியாக.இரண்டும்குடித்துக்கொண்டிருக் கையில்வந்துவிட்டாள்மாட்டுக்காரம்மா,வந்தவள்மாட்டுக்குதண்ணீர் வைத்த தைப் பார்த்ததும் கை எடுத்துக் கும்பிட்டாள்.

அவள்மாடுவளர்ப்பதுஅந்தத்தெருக்காரர்கள்யாருக்கும் பிடிப்பதில்லை.இதில் அந்தப்பாதையில் சென்று வருவோர் சிலரும் அடக்கம் என்பது பிற்சேர்க்கை. பின்னஎன்னசார் ரோட்டுக்கு ரெண்டுபக்கமுமா இருக்குற வீடுகளுக்கு நடுவுல வந்துட்டு இப்பிடிப்பண்ணுனா எப்பிடி,,?சாணி அள்ளிப் போடவும் மூத்திரம் மோந்து ஊத்தவுமா இருந்தா,,,எப்பிடி சார் என்கிறார்கள். அவர்கள்.

குவித்து வைக்கப்பட்டிருக்கிற சாணம்,அதில் நெளியும் புளுக்கள், மாட்டுத் தொழுவம் அதிலிருந்து போய் வீட்டின் முன்னால் இருக்கிற பள்ளங்களில் நிற்கிற மழைத்தண்ணீர் சாக்கடை இவைகளிலிருந்து கிளம்பி தெரு பூராவும் பறந்துதிரிகிறகொசுக்கள்மற்றும்இன்னபிறவைகள்அவர்களுக்குப்பிடிப்பதில்லை. அதன் விளைவு இப்படியெல்லாமுமாய் வெளிப்படுகிறது.

ஒரு முறை இவனது வேப்பமரத்தில் இலைகளுடன் கொப்பு ஒன்று ஒடிக்கப் பட்டிந்ததற்குஅவள்தான்அதைஒடித்திருப்பாள்எனஅவளுடன்போய் மல்லுக்கு நின்றதும்அவள்பதிலுக்குபேசியதும்ஞாபகத்திற்கு வந்தது. ஏன்சார் பொழப் போட மல்லுக்கட்டீட்டு நிக்குறவுங்களப்பாத்தா அவ்வளவு யெளக்காரமாவா போச்சு ஒங்களுக்கு.என அவள் அழுது கொண்டே சொன்னது இன்றும் ஞாபக த்தில் நிற்பதாக/

அவளதுமாடுதான்இவனுக்குப்பிடித்தஆரஞ்சுநிறத்துண்டைதூக்கிச்செல்கிறது கொம்பில் குத்தி/

7 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இரசிக்கவைக்கும் கதை அருமையாக உது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

கதை அல்லவே...?

Yarlpavanan said...

மாட்டைக் கருவாக்கி
A R R ஜவுளிக்கடைத் துண்டைப் போர்த்தி
நல்லா பின்னி இருக்கிறியள்

vimalanperali said...

வணக்கம் ரூபன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தன்பாலன் சார்
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக.

vimalanperali said...

வணக்கம் காசிராஜலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நிகழ்வுகளின் பாவு ஓட்டம்தானே கதையாகிவிடுகிறது இல்லையா சார்./