16 May 2015

குத்துக்கால்,,,,,,,

குத்துக்காலிட்டுஅமர்ந்திருந்தமீன்க்காரர்நினைத்தாவதுபார்த்திருப்பாராஅவனதுஅந்நேரத்தைய வருகையை

கட்டம் போட்ட கைலியும்,மடக்கி விடப்பட்ட முழுக்கைச் சட்டையுடனுமாய் அமர்ந்திருந்த அவரது கையில்முக்கால்அளவேகாலியாகியிருந்தடீக் கிளாஸ் இருந்தது.

புலியின்வரிக்கொண்டகண்ணாடிக்கிளாஸினுள்குடிகொண்டிருந்ததிரவத்தை குடிப்பதா அல்லது கீழ் ஊற்றுவதா என்கிற ஈரெட்டியான மனோ நிலையில் அவர் இருந்த சமயம் அவ னது வருகை அங்குநிகழ்ந்துவிட்டதுபோலும்.

பொதுவாகமீன்காரரின்இந்தமாலைவேலைகள்ஒயின்ஷாப்முன்புகுடிகொண்ட பொழுதாய்இருக்கும்.மாறாகஇப்பொழுதெல்லாம்சிலநாட்களாகடீக்கடைமுன் பாய்குடிகொண்டிருக்கிறார்.அவரதுஇந்தமாற்றத்திற்குகாரணம்அவரதுமகளும் மனைவிசிந்தியகண்ணீரும்என்றே சொல்லலாம்.

அழுதழுது ஆற்றாத கண்ணீரும் மருகிமருகி நின்ற காலங்களுமாய் இருந்த நாட்களில் அவரது போதை உச்சத்தில் இருந்தது,தினசரி யாருடனாவது பிரச் சனைதான். சண்டை தான்,மல்லுக் கட்டு தான், பஞ்சாயத்துதான்.மாலை நேரம் ஆகிவிட்டால் போதும் இது வாடிக்கையாகிப் போனது ஊருக்கும் ஒயின் ஷாப்இருக்கிற ஏரியாக்காரர்களுக்குமாய்/

இது சகிக்காத ஒயின் ஷாப்க்காரர் குடிச்சிட்டு இந்த யெடத்தவிட்டு சத்தம் காட் டாம போறது ன்னா கடைக்கு வா,இல்லைன்ன வராத என மிகவும் கறாராக சொல்லிவிட்டநாளன்றும்மறுநாளுமாய்நாரச வாய் வார்த்தைக ளும், சண்டை யும்,பஞ்சாயத்தும் கூடத் தான் செய்ததே தவிர குறையவில்லை.என்ன கடை க்குப்பக்கத்தில் வைத்து நடந்த இந்த விவகாரங்கள் எல்லாம் கடையை விட்டு சற்றுத்தள்ளி நடந்தது.

ஒரு நாள்பள்ளிமுடிந்துவந்து விட்ட மகள் வீட்டுப்பாடம்,பள்ளிப்படிப்புஎன்கிற கவனத் திலும், மனைவி அடுப்படியிலுமாய் இருந்த நேரம் மீன்க்காரர் ஒயின் ஷாப் முன்பு யாருடனோ சண்டை போட்டு மல்லுக்கட்டிகொண்டிருக்கிறார் என தாக்கல் சொல்லி வந்து விட்டார்கள் வீட்டுப்படியேறி/

மனம் பதைக்க மகளை கூட்டிக்கொண்டு ஓடிய சமயம் ஒயின் ஷாப்முன்பாக போலீஸ் பிடியில் இருந்தார் மீன்காரர்,தெரிந்தவர் என்பதால் அடிக்காமல் அதட்டி ஓரமாய் உட்கார வைத்துவிட்டதாய்ச்சொன்னார்கள். உடன் சண்டை போட்டு மல்லுக் கட்டிய வனை ரெண்டு பொய்யடி அடித்து அனுப்பி விட்டதா கவும் சொன்ன போலீஸ்க்காரர் பக்கத்து ஊர்க்காரர் தான் . சொல்ல போனால் மீன்காரர்அவரதுஊர்வரை மீன்விற்கப் போகிற நாட்களில் போலீஸ்க்காரர் வீட்டுக்கு கண்டிப்பாக ஒருகிலோ மீன் அரிந்து கொடுத்து விட்டுதான் வருவார்.

அந்த மீனின் ருசியோ அல்லதுவேறேதேனுமான காரணமோ அவரைஒன்றும் சொல்லவில் லை போலீஸ்க்காரர். மாறாக அவரது மனைவியிடம் சப்தம் போட்டார்.“ஏம்மா,அவன்தான்அப்பிடிகூறுல்லாமஇருக்கான்னாஒனக்குஎங்கம்
மா போச்சுபுத்திஇப்பிடிவயசுக்கு வந்த புள்ளையவீட்லவச்சிக்கிட்டு,,,,,,,,, கை கலப்புலஏதாவதுஒண்ணுநடந்துபோயிருந்துச்சுன்னா,,,,,கூடமல்லுக்கட்டனவன் மடியிலஅரமொழநீளத்துக்குகத்திவச்சிருந்தான்.என்னவோநல்லநேரம்அவனு க்குஅதஎடுக்கக்கூடதன்உசாரில்ல,இல்லைன்னாஇந்நேரம்குத்திவகுந்துருப்பா ன்.அப்பறம்அய்யோன்னாலும்வராது,அப்பான்னாலும்வராதுபாத்தும்மா,நானே நித்தம் இங்க நைட் டூட்டி இருப் பேன்னும் சொல்லீற முடியாது.வேறயாராவது ஆள்வந்திருந்தா இந்நேரம் புடிச்சி ஸ்டேசனுக்குகொண்டு போயிருப்பாங்க. கொஞ்சம் சூதானமா பொழப்ப நடத்துங்க,

அவன் கொணத்துக்கு நல்லா இருக்க வேண்டியவம்மா,இவங்க அப்பா எங்களு க்குகுடும்பப்பழக்கம்,கிட்டத்தட்டஒண்ணுக்குள்ள ஒண்ணு மாதிரிபழகுவோம். எங்க தோட்டத்துலதான் எந்நேரமும் கெடப்பாரு.6 ஏக்கர் கெணத்துப் பாசனம், அது வாட்டுக்கு வெளஞ்சு கெடந்துச்சு, அதக்கட்டிக்காப்பாத்துனவரு இவங்க அப்பாதான்.கடுமையான உழைப்பாளி.எந்தநேரமும் எதாவதுவேலை செஞ்சுக் கிட்டேஇருப்பாரு.களைப்பு அறியா மனுசன்.நான் போலீஸ் வேலைக்கு வர்ரதுக்கு முன்னாடி படிச்சி முடிச்சிட்டு அவரு கூட தான் தோட்டத்துல கெடப்பேன்,எனக்கு மம்பட்டிபுடிக்க சொல்லிக்குடுத்தவரு அவருதான். காடு, கரைபயிர்,பச்சையின்னுஅறிமுகப்படுத்துனவரும்அவருதான். அவரு மூலமா தான்விவசாயவேல செய்யக்கத்துக்கிட்டேன்.தோட்டம், காடுகதான் எங்களது உழைப்பு அவங்க அப்பாவோடயது. அவரோட ஒழைப்புல மண்ணு பொன்னா மாறி நின்ன வேளையது.அங்கனயே அவருக்குன்னு ஒரு ரூமு கட்டி குடுத்து ருந்தோம்.இவனோடஅம்மாவும்,அப்பாவும்அங்கன இருந்த நேரம்தான் இவன் பொறந்தான். அப்பிடி விவசாய நெலத்துல பொறந்தவன் பொறப்பு இப்ப ஒயின் ஷாப் முன்னாடி உருண்டு சந்தி சிரிக்கிது/ பாத்து சூதானமா வீட்டுக்கு கூட்டீட்டுப்போம்மா,டேய் எந்திர்ரா,கிறுக்கு,,,,,,,,எனக்கு வர்ற கோவத்து நாலு மிதி மிதிச்சி இடுப்பு எலும்ப ஒடிச் சிருவேன் பாத்துக்க,நீயெல்லாம் சோத்தத் திங்கிறியா இல்ல,,,,,,, எந்திரிச்சி ஒழுக்கமா ஓடிப்போயிரு ராஸ்கல், கொன்னு போடுவேன்,கொன்னு என அவனை மகளுடன் அனுப்பி வைத்து விட்டு மனைவியை கூப்பிட்டு சொன்னார்.சும்மா ஒரு அதட்டுக் காக அப்பிடிச் சொன்னேன்அவன/மத்தபடிநல்லபையன்அவன்.நீங்களும்அவன் சம்பாத்தியம் மட்டும்வீட்டுக்குவந்தாப்போதும்ன்னுநெனைக்காதீங்க,அவனையும்கொஞ்சம் அனுச ரிச்சி இருந்துக்கங்க”என்கிற பேச்சுடன் ஆறு மாதம் முன்பாக ஒயின் ஷாப் முன் பாக இருந்து அனுப்பி வைக்கப்பட்டவர் இன்று டீக்கடை முன்பாக/

நீளமான பட்டியல் கல் அது.மஞ்சள் பூத்திருந்த அந்த வெள்ளைக்கல்லை தூக்கி நிறுத்தினால்ஆறடியில்தன்ஆகுருதி காண்பிக்கும். மிஷின்வைத் தெல் லாம்அறுத்து எடுத்திருக் க மாட்டார்கள் போலும்,கைவேலைதானே அப்பொ ழுதெல்லாம்.உளிஊன்றி சம்மட்டி வைத்து அடித்துஎடுத்திருப்பார்கள் போலும். நீண்டுபடுத்துகிடந்த தூணில்ஆறுஇடங்களில் உளியின் தடம் இருந்தது. சொட் டையும் சொள்ளையுமாய் நெளிவு,சுளிவு காட்டி இருந்த அதை உற்றுப் பார்க் கையில் ஏதோ கண்டு வெக்கப்பட்டது போலத் தெரிந்தது.

தூணின்நுனியேமுகமாயும்,அடியேஉடலாயும்ஆகிப்போன பெண்ணைப் பார்த் தது போல் இருந்தது.அதன் மீது அமர்ந்திருந்த மீன்க்காரருக்குஅருகாமையாய் இன்னும்சில பேர் அமர்ந்திருந்தார்கள்.சிலர் பேண்ட் சர்ட்டிலும்,இன்னும் சிலர் கைலி, வேஷ்டி யிலுமாய்/

அடர்ந்துதொங்கியமீசையை வருடியவாறேகசலைதோற்றத்துடன் தன் நிலை மாறாது இவர்களை வெறிக்கப்பார்த்துக்கொண்டிருந்த மீன்காரருக்குள் சின்ன தாய்ஒரு யோசனை. பேண்ட்,சர்ட் போட்டவர்களை கைலி சட்டைக்கும் கைலி சட்டைமற்றும்வேஷ்டிகட்டிக் கொண்டிருந்தவர்களை பேண்ட் சர்ட்டிற்குமாய் மாறச்சொல்லி அதிரடி யாய் உத்தரவு போட்டால் என்ன?இதை அரசேகூடஒரு அவசர சட்டம் பாஸ் பண்ணி நடைமுறைக்குக் கொண்டு வந்து விடலாம்.

இது எப்படி பாஸ்கருக்குத் தெரிந்ததெனத் தெரியவில்லை.புடம் போட்டு கண்டு விட்டார். எண்ணண்னே நீ நெனைக்கிறதெல்லாம் சரிதான்.அது பேண்ட சட்ட மாத்ததுல மட்டும் இல்ல,மத்த எல்லா விஷயங்களையும் இருக்கு. வீடுகள்ல,ஆபீசுகள்ல,பொது யெடங்கள்ல,,,,,,,,,,,இப்பிடி நெறைய மாற வேண்டி யதுமா,மாத்திக்கவேண்டியதுமாநெறையஇருக்குண்ணே,ஆனாலும்அப்படியப் பிடியேதான் ஓடிக்கிட்டு இருக்கு.அவர் சொல்வதை முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளவோஅல்லதுஅரைமனதுடன்புறக்கணித்துவிடவோமுடியவில் லை.

டீயும் பஜ்ஜியும் வழக்கம் போல என்பதாய் ஆகிப்போகிறது.”பாலம் கட்டுற வேல நடக்குற தால பஸ்ஸீ பக்கத்தூருவழியா போகுது.ஐஞ்சு கிலோ மீட்டர் சுத்தானபாதை.விருப்பட்டவங்கஅதுலபோங்க,இல்லாதவுங்கயாராதுடூவீலர்ல வந்தா ஏறிப் போயிக்கங்க, அதுன்னா பாலத்துக்கு பக்கத்துல இருக்குற மண் பாதை வழியா போயிக்கிறலாம். போன வாரம் பேஞ்ச மழையில அரிச்சுப் போன மண் பாதைய இன்னும் சரி செய்யாம இருக்குறதால பஸ்ஸுக மட்டுமி ல்ல,ஒரு ட்ராக்டர் கூட போக முடியலன்னா பாத்துக்கங்க,அவ்வளவு சேதப் பட்டு போனதாலத்தான் இப்பம் எதுக்கும் வழியில்லாம முழிக்க வேண்டிய திருக்கு/ எனச்சொன்ன சொல்லின் ஆழம் இன்னும் பலரை யோசிக்க வைத்து விடுகிறது.

என்னசார்இவ்வளவு லேட்டாத் தெரியுது என பாஸ்கர் சொன்னபடி அப்படியெ ல்லாம்ஒன்றும்நேரமாகிவிடவில்லை.நீங்களும்,அவரும்,மற்றவர்களும்நினை க்கிறபடியெல்லாம்ஒன்றும்இல்லை.கொஞ்சம்இருட்டிப்போனதுஅவ்வளவே.
மணிமாலை 6.15 தான்.

முதலில் வெறும் டீ மட்டுமே சாப்பிடால் போதுமென சூடாக இருக்கிற கலர் திரவத்திற்கு நாவின் சுவையறும்புகளை அடகுவைக்கிற அவசரத்துடன் டீக்கு சொல்லி விட்டு நிற்கையில் சூடான பஜ்ஜி ஆவி பறக்க தட்டில் குவிக்கப்பட்டு/

ஆகாபாஸ்கரண்ணே,பாஸ்கர்சார்,பாஸ்கரய்யா,,,எனஅழைத்தவாறேஅருகில்
செல்லும்போதுதான்டீயின்சுவைபஜ்ஜியால்கூடும்எனஉண்மை(?)போட்டுடைக் கிறார்.எண்ணெய்ப்பலகாரங்களுக்கெனஎப்பொழுதுமேநாவையும்,மனதையும் அடகுவைத்து விடுவதில்லை தான். அதற்காக அப்படியில்லாமலும் இல்லை.

முன்பெல்லாம் எப்போதாவது ஒருசமயம் அடக்க மாட்டாத நாவை கட்டுக்குள் கொண்டு வர இவன் சாப்பிடுவதுண்டு.கணக்கு,பிணக்கு எனக்கு ஆமணக்கு என்றெல்லாம் இல்லாமல் டீக்கடை போகிற சமயங்களில் குவித்து வைக்கப் பட்டிருக்கிறதட்டில்அல்லதுகண்ணாடிப்பெட்டியினுள்மின்னுகிறபஜ்ஜிகண்ண சைத்து கூப்புடுகிற நேரம் அல்லது தன் எண்ணெய் மின்னுகிற உடல் காட்டி கூப்புடுகிறநேரம்மனம்லயிக்கஎடுத்துச்சாப்பிட்டுவிடுவதுண்டு.எண்ணெய் ப்ப் பலகாரத்தை எப்பொழுதாவது ஒருமுறைதானே சாப்பிடுகிறோம் என்கிற மனச்சமாதானத் திலும், தைரியத்திலுமாய்/என குடித்து முடித்து விட்ட டீக்கும், பஜ்ஜிக்குமாய் காசு கொடுத்து விட்டுத் திரும்புகையில் மீன்காரர்வாங்கி வைத் திருந்த பஜ்ஜி பார்சலை மகளிடம் கொடுத் துக்கொண்டிருந்தார்.

4 comments:

 1. கணக்கு, பிணக்கு, ஆமணக்கு இல்லாமல் ரசித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
   நன்றிவருகைக்கும்,.கருத்துரைக்குமாக/

   Delete
 2. அருமையான வர்ணிப்பு! டீக்கடை பஜ்ஜிக்கு ருசி தனிதான்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தளீர் சுரேஷ் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete