3 Jun 2015

உயிர்வாதை,,,,,,

அது எதுவாக இருக்கும்

என அவதானிக்கமுடியவில்லை.

எந்நேரம் இறந்திருக்கக்கூடும்

என்பதும் தெரியவில்லை.

உடல் நசுங்கி இறந்து போனது

ஒரு உயிர் என்பதற்கான

எந்த அடையாளமுமற்றுக்கிடந்தது.

அது யாருக்கு சொந்தமான உயிர்

எனத்தெரியவில்லை.

எந்நேரம் ஏன் அங்கு வந்தது

எனவும் புரியவில்லை.

எந்நேரமும் பரபரப்பாய் இருக்கும்

சாலையில் எந்த இடைவெளியில்

அது நுழைந்தது எனத்தெரியவில்லை.

அதன் நுழைவு எந்நேரம்

இங்கு நிகழ்ந்திருக்கக்கூடும்

எனவும் புரியவில்லை.

வீடு,வீதி குப்பைக்கிடங்குகள்,மரம்

என எதிலும் தேடிய உணவின்

அவசியம் கருதியும்,தேவை வேண்டியும்

இங்கு வந்திருக்கலாமோ?

கோழியா,சேவலா,

அல்லது மயிலா தெரியவில்லை.

சாலையில் தரையோடு தரையாய்

சிதறி அதன் நசுங்கிய உடலின் மீதும்,

இன்னும் ரத்தச்சுவடு காணப்பட்ட

சதைகள் மீதுமாய் ஒட்டிக்கிடந்த

இறகுகளே சாட்சியாய்/

அது எதுவாக இருக்கும் என

அவதானிக்க முடியவில்லை.

எதுவாக இருந்த போதிலும்

அது ஒரு உயிர்தானே?

11 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
கவிதையின் வரிகள் ஒருதடவை சிந்திக்க வைத்தது அருமையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
த.ம1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

vimalanperali said...

வணக்கம் ரூபன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

கரந்தை ஜெயக்குமார் said...

ஓர் உயிர் போயிருக்கிறது
வேதனை தங்களின் வரிகளில் தெரிகிறது
தம 2

KILLERGEE Devakottai said...

உயிர்களை நேசிப்போம் அருமை நண்பரே
தமிழ் மணம் 3

yathavan64@gmail.com said...

"உயிர் வதை"
ஜீவ காருண்ய சிந்தை உடைய வள்ளலார் வரிகளை வார்த்து தந்தது!
உயிரின் உயர்வை சொல்லும் உன்னத கவிதை!
அதனால்தான் கதை இன்று கவிதை ஆனது!
சிறப்பு!
த ம 5
நட்புடன்,
புதுவை வேலு

திண்டுக்கல் தனபாலன் said...

இரக்க மனம் சிறந்த மனம்...

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கில்லர் ஜி தேவகோட்டை சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் யாதவன் நம்பி அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

சசிகலா said...

மனக்குமுறல் எதுவாக இருந்தால் என்ன அதுவும் ஒரு உயிர் தானே?

vimalanperali said...

வணக்கம் சசிகலா மேடம்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/