தண்ணிக்குழாய்,,
குழாய் பதிக்கப்படுகிறது தெருவில்.
நன்றாக இருந்த தெருவின் இடது பக்கமாய்
வீடுகளின் வாசல்கலைகள் முன்பாக
கீறிய மண் குழியில் இறக்கிப் போடப்பட்ட
பிளாஸ்டி குழாய் வழியாய்
தண்ணீர் வந்த முதல் நாளில்
அடுத்த வீட்டுக் காரருடன் முறைப்பு ஏற்பட்டு விடுகிறது,
குழாய் இவர்களது வீட்டின் முன்பாக
வந்து நிற்கிறது சரியாக/
தண்ணீர் பிடிக்க வருகிறவர்கள்அனைவருக்கும்
நம் வீடும் வீட்டின் உள்ளும் தெரியும்
படம் பிடித்தது போலாய்
ஆகவே குழாயை இடம் மாற்றிப்
போடச்சொல்ல வேண்டும் என
இவனது மனைவி சொன்ன நாளிலிருந்து
மிகச்சரியாக இரண்டு நாள் கழித்து
குழாய் இடம் மாற்றிப் போடப் பட்டது
ஊர்ப் பஞ்சாயத்தால்,
குழாய்இடம்மாற்றி போடப்பட்டதினத்திலிருந்து
பேசிக்கொள்ளவில்லை பக்கத்து வீட்டுக்காரர்,
அன்னம்,தண்ணி உறவு ஒட்டு எதுவும்
வேண்டாம்
என்பது போல் இருந்து விட்டார்.
இரு வீட்டாருக்கும் பேச்சு நின்று போன
இரண்டு வாரங்கழித்து
ஒரு நாள் அதி காலையில்
சைக்கிளில் வந்து கொண்டிருந்த இவன்
தெருவிலிருந்த பெரியதான பாரங்கல்லுக்கு
விலக்கி ஓட்டும் போது விழுந்து விடுகிறான்
நிலை தடுமாறி.
தனது வீட்டு வாசலில் இரு சக்கர வாகனம்
துடைத்தவாறே இதையெல்லாம் கொண்டிருந்த
பக்கத்து விட்டுக்காரர் மனம் பதைத்து
ஓடி வந்து சைக்கிளோடு கீழே விழுந்து
கிடந்த இவனை தூக்கிய கணத்தில்
அவர்களுக்குள்ளாய் நின்று போயிருந்த
பேச்சு துளிர் விடுகிறது,
வேறென்ன வேண்டும் இதன் முன்.
கீழே விழுந்து ஏற்பட்ட காயமெல்லாம்
காணாமல் போய் விடும்தானே இக்கணத்தில்,,/
4 comments:
அருமை...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
ஈரம் இருக்கும் மனதில் கோபம் நிலைப்பது இல்லை! அருமை!
வணக்கம் தளிர் சுரேஷ் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment