7 Sep 2015

ஈரத்துண்டு,,,அப்படித்தான்தெரிந்தது பக்கத்து ஊரிலிருந்து காளியப்பனை அடிப்பதற்காய் ஆட்கள் வந்து நின்ற அன்றும்/

உடம்புதுடைத்தஈரத்துண்டைசைக்கிளின்ஹேண்ட்பாரில்காயப்போட்டவாறு அன்றாடம் கூலி தேடிபோய்வருகிறகாளியப்பனை அப்புராணி என்பார்கள்.

அவன்வேலைபார்க்கிறமில்லில்ஏற்பட்டசின்னப்பிரச்சனை பெரிதாகி அடிக்க வரும் வரை கொண்டுவந்துவிட்டிருக்கிறது.நல்ல வேலை அவர்கள் வந்த நேரம் காளியப்பன் அங்கு இருக்கவில்லை.

மில்லுக்குஇரவுலாரியில்வந்தலோடைஇறக்கஆளில்லாததால்மில்முதலாளி ஷிப்ட்முடிந்துபோகும்போதுஒருலோடுசரக்கையும் இறக்கி விட்டுப் போகச் சொன்னார், இவனும்உடன்வேலை பார்க்கிற பரமசிவனும்தான் இறக்கினா ர்கள்.

விஷயம் மறுநாள்வேலைக்கு வந்த லோடு மேன்களுக்குத்தெரிந்து போன து, மில் முதலாளிசொல்லிக்கூட கேட்கவில்லை அவர்கள்,எப்படிஅவர்கள் எங்களது வேலையைச்செய்யலாம்என்பதேஅவர்களது மிகப்பிரதானமான கேள்வியாயும் லோடு இறக்கியதன் மூலமாய் கிடைத்த கூலியை எங்க ளுக்குத்தந்தேஆகவேண்டும்என்பதேஅவர்களின்மிகப்பிரதானமான பேச்சாய் இருந்தது.

இதை முதலாளி உட்பட யாரும் ஏற்கவில்லை.தப்புதான் ,அவர்கள் லோடு இறக்கியது.லோடு வந்ததும் உங்களைத் தேடி னோம்நீங்கள் ஆள்கிடைக்க வில்லை.எங்களுக்குஒரு அவசரம். இறக்கி விட்டோம் இவர்களை வைத்து, அதனால் உங்கள் உரிமை பறிபோய் விட்டது எனச்சொல்வது எப்படி ஞாயம் ஆகும்,இது சரியில்லை, வேலை நடக்கிற இடத்தில் இப்படி வந்து பிரச்சனை பண்ணுவதுநல்லதில்லைஎனமில் முதலாளி சொன்னதும் அவர் களதுவார்த்தைக்கு மடங்கி சரி சரி எனப்போனவர்கள்இப்பொழுது காளியப் பனை வந்து பிடித்துக் கொண்டார்கள்.

லோடைஇறக்கியதும்அதன்மூலம்கிடைத்தகூலிபறிபோனதும்மட்டுமில்லை, இதுவரைதாங்கள்நிலைநாட்டிவந்தஉரிமை பறிபோய்விட்டது இதன் மூலம், நாளைப்பின் யார் வேண்டுமானாலும் மில்லில்வந்துலோடுஇறக்குவார்கள் ஏற்றுவார்கள்,ஆகவே இவனை ரெண்டு தட்டு தட்டினால் கொஞ்சம் பயம் இருக்கும்எனநினைத்துநாலுபேர்வந்திருக்கிறார்கள்முரட்டுத்தனமும்போதை யுமாக/

வந்தவர்கள் அங்கு நின்றிருந்த மாட்டு வண்டியிலிருந்த ஊணு கம்புகளை ஆளுக்கொன்றாய் பிடுங்கிக்கொண்டு சப்தம்போடஆரம்பித்திருக்கிறார்கள் நாரசவார்த்தைகளால்/பக்கத்துவண்டியில்பக்கத்துவண்டியில்படுத்திருந்த தங்கவேலு மாமாவிற்கு விஷயம் புரிய கொஞ்சம் தாமதமானது. 

என்னஏது என போய் கேட்ட அவரைசப்தம்போட்டவைதஇளவட்டங்களில் ஒருவன் அவரது நெஞ்சைப்பிடித்துத்தள்ளி விட்டு விட்டான்.

மெலிந்துஒடிசலானஉருவம்.இழுத்துக்கட்டிய கட்டம் போட்ட கைலி. கள்ளி ஜிப்பா,அரைஜான்நீளத்திற்கு முகத்தில் ஒட்டவைக்கப்பட்டது போல் தொங் குகிற தாடி,ஆனால் அவரது தோற்றத்திற்கும் அவரது குரலுக்கும் சம்பந் தம் இருக்காது.அதிலும் இரண்டு சொட்டு ஜலம் உள்ளே போய் விட்டால் போதும்.ஏயப்பா மந்தையையே ரெண்டு படுத்தி விடுவார்.அடப்பாவி மூடிய மோந்து பாத்ததுக்கே இந்தப்பாடா,,?என வையாதவர்கள் பாக்கி இருக்காது,
எப்பொழுதுமே மிகக்குறைச்சலாகவே குடிக்கும் தங்கவேலு அன்று கொஞ் சம் கூட போலும்,அவரைப்பொறுத்தவரை கூடுதல் என்றால் ஒரு மடக்கு ஜாஸ்தி அவ்வளவே,,,,,,,,/அப்படியான மறுநாளின் மறு நாட்களில் என்ன மாப்புளரொம்ப ஓவராசத்தம் போட்டுட்டேனா,,,,?என்பார்,இவனிடம்,அட போ மாமாநீஒண்ணு,பேசாமகெடக்காமகழுதையப்போயிக்குடிச்சிக்கிட்டு ரெண்டு சத்தம்போட்டுக்கிட் டு ஒடம்ப வேற கெடுத்துக்கிட்டு திரியாட்டித் தான் என்னவாம் இப்ப என்கிற இவனது பேச்சிற்கு ஆட போண்ணா மாப்புள அங்கிட்டுநீஒண்ணு/என்னத்தக்கண்டம்இப்பிடியேஇருந்து, கழுதை இருக்குற வரைக்கும் ஆண்டனுபவிச்சி செத்துப்போக வேண்டியது தான என்பார். அதுசரி செத்துப்போனா பரவாயில்ல, இழுத்துக்கிட்டுக் கெடந்தா, நேத்து போதையிலசளம்பீட்டுகீழவுழுந்துருக்க,நீயிவிழுந்தயெடத்துக்குபக்கத்துலயே கல்லுஒண்ணு பெரிசா கெடந்திச்சி.ஓன் தலை மாட்டுல கெடந்த கல்லு தலையிலபட்டுருந்துச்சின்னாபோகவேண்டியதுதாபரலோகத்துக்கு அப்புறம் ஓங் மக ஒத்தக்கதிராஆள்தொணையில்லாம நிப்பா ஆமா சம்மதமா ஒங்க ளுக்கு அது.செய்யிறது எதையும், யோசிச்சி செய்யி மாமா,எனச்சொன்ன இவனுக்கு தங்க வேலு மாமாவின் மகள் மீது ஒரு பிரியம் இருந்தது.

கட்டினால் அவளைத்தான் கட்ட வேண்டும்எனஅம்மாவிடம்சொன்ன போது அடசண்டாளப்பயலே,ஒங்கப்பாஇந்நேரம்உயிரோடஇருந்திருந்தாஇந்தப்பேச்சுப்பேசுவயா,,ஆம்பளஇல்லாதவீடுதான்,என்னவேணாலும் அம்மாகிட்டவரைமுறையில்லாமபேசாலாம்ன்னுநெனைச்சிகிட்ட,/ அப்பிடித் தானலூசுப்பயலேஒன்னையெல்லாம்,,,,கேட்டநாக்கக்கொள்ளிக்வச்சி பொசுக் கணும். பொசுக்கி/

அவுங்களும்ஒங்கப்பாவும்ஒருகாலத்துலஒண்ணாகூலிவேலைசெஞ்சிக்கிட்டுத் திரிஞ்சவுங்கடா,ஒங்க அப்பா எது செஞ்சாலும் அவருகிட்ட ஒரு யோசனை கேட்டுக்கிட்டுத்தான் செய்வாரு. அவரும் ஒங்க அப்பாவ கலக்காம எதுவும் பண்ணமாட்டாரு.நம்மபோதாதகாலம்ஒங்கப்பா அல்பாயிசுல போயிட்டாரு. அவரு இப்ப ரெண்டு ஆட்டுக் குட்டிகள் வச்சிக்கிட்டுபொழப்பஓட்டிக்கிட்டு இருக்காரு.அவரோடமகளையெல்லாம்நம்ம வீட்ல வச்சி பொத்திப் பொத்தி பாதுகாக்கணும்டா,அத வுட்டுட்டு கிறுக்கன் மாதிரி ஏதாவது பேசிட்டுத் திரியாத தெரிஞ்சுதா மொகத்துல முடி மொளக்கிற வயசுல வர்ற ஆசை தான் இது.முடிய சவரம் பண்ணி விட்ட மாதிரி இதையும் வெட்டி எரியத் தெரியணும் என்றாள் அம்மா/

ஒருதடவைஅம்மாவிடம் இது பற்றிப்பேசியதுதான் அடுத்து பேசவில்லை. தங்கவேலுமாமாவின்மகளைவேறுஎதற்காகவும்இவனுக்குப்பிடித்திருக்கவில் லை.அவள்வாயில் சப்புக் கொட்டியவாறே தாளம் இசைத்துக்கொண்டு அழகாகப்பாடுவாள்.அவள்பாடுகிறவேலையில் அவளது கருத்த ஒடிசலான உருவம்மறைந்துகுரல் மட்டுமே காதுகளையும் மனதையும் நிறைக்கும், ஒரு தடவை கம்மங்காட்டில் கருதருத்துக்கொண்டிருக்கும் போது மெய் மறந்து பாடிக்கொண்டிருந்தவளின் பின் புறமாய் பெரிய நல்லபாம்புஒன்று நெளிந்துஓடியதைஅவள் கவனிக்கவில்லை.கவனித்து விட்ட இவன் அவள் அவளது கையைப்பிடித்து இழுத்து வந்து தூரத்தள்ளி விட்டு விட்டான்.கூட வேலை பார்த்தவர்கள் பதறி ஓடிவர நடந்த விசயம் ஒன்ன இவனை உச்சி மோந்து கொண்டாடி விட்டார்கள்.அட பாதகத்தி மகளே செத்த ஒடத்துல ஓங்பாட்டுச்சத்தம்நிக்கத்தெரிஞ்சிச்சேடி.யாருபண்ணுனபுண்ணியமோ, தம்பி வந்துகாப்பாத்துச்சி,என்னாஅப்பிடிப்பாக்குறவ,நாங்களும்கவனிச்சிக்கிட்டுதான் வர்ரோம்ஒங்கரெண்டு பேரோட நடவடிக்கைய,தம்பி காட்டுக்கு வேலைக்கு வரும் போது ஓன் மனசுக்குறெக்கமொளச்சிருது.ஓன் பாட்டுல கூடுதல் ஒட்டுதல தெரியுது. தம்பியும்அப்பிடியே யெழஞ்சிக்கிட்டே திரியுது. என்ன மோ பாத்து இருந்துக்கங்க,ரெண்டுபேரும் மனசுலஆசையவளத்துக்கிட்டு அப்பறம்கெடைக்காதஒண்ணுக்காகதொண்ணாந்துக்கிட்டுதிரிஞ்சகதையாகிப் போகும் என்பாள் எப்பொழுதுமே வாய்த்துடுக்காகப் பேசும் நாகவள்ளி அக்கா.

அவளதுபேச்சின்சூடும் ஆத்தாமையும் தங்கவேலு மாமாவிடம் போக தங்க வேலுமாமாசொன்னகணத்தில்தங்கவேலுமாமாஇவனதுஅம்மாவிடம்சொல்ல இவனதுஅம்மாஇவன்ஆசையை சொன்ன கணத்தில் ஆசையின்முனையை தீ வைத்து கருக்கி விட்டாள்.

அன்றிலிருந்துஒருவாரம்வரைசரியாக சோறுதண்ணிஇறங்காமல்அம்மாவி டமும் தங்கவேலு மாமாவிடமும் பேசாமல் இருந்தவன் வேற்றுஊர்க்கார் கள்வந்துதங்கவேலுமாமாவின்நெஞ்சில்கைவைக்கவும் முன்னால் போய் நின்றிருக்கிறான் கோபமாகவும் முறைப்பாகவும்.

ஏ பெரிசு நீ என்ன ஒங்க ஊருல பெரிய ஆளா ஒன்னைய தொட்ட ஒடனே அவன் வாரான்,ரெண்டும் பேரும் ஒழுக்கமா இங்கனயிருந்து போயிருங்க, இல்லவகுந்துருவம்வகுந்து என தங்கவேலு மாமாவின் நெஞ்சை பிடித்துத் தள்ளியவனை ஓங்கி அறைந்து விட்டார்.போதையில் இருந்த அவன் அடி தாங்காமல் சுருண்டு விழுந்து விட்டான்,

அந்நேரம்வரை வாய்ச்சண்டையாகஇருந்தது கைகலப்பாக மாற அந்நேரம் மந்தையில் இருந்தவர்கள் அவசரத்திற்கு கண்மாய்க்கரைப்பக்கமாய் போய் வந்தவர்கள்என கூடிவிட்ட கூட்டம்விலக்கிவிட்டும்சண்டைநிற்கவில்லை. விஷயம் கேள்விப்பட்டுதங்கவேலுமாமாவின்மகள் கையோடு காளியப்ப னைகூட்டிக்கொண்டுவந்துவிட்டாள்.கையில்அரிவாள்மனையைதூக்கிக்கொண் டு/ 

ஏண்டாநாய்களாஎங்கவந்துயாருகிட்ட தகராறு பண்ணிக்கிட்டு இருக்கீங்க/ அவள்சப்தம்போடவும்சேர்ந்துவிட்டஆட்களில் சிலர் அவளுடன் கைகோர்த் துக் கொண்டு தகராறு செய்ய வந்தவர்களை துவைத்து விட்டார்கள் துவை த்து/அப்புறம்தன்காளியப்பன்சொன்னான்.விஷயத்தை/அப்புறமாய்சமாதானம் பேசி அனுப்பிவைத்திருக்கிறார்கள்.

அப்படியாய் சமாதானம் பேசி அனுப்பிவைத்த அடுத்த முகூர்த்ததில் தங்க வேலு மாமாவின் மகளுக்கும் காளியப்பனுக்கும் கல்யாணம், நடந்தது.   

6 comments:

 1. Replies
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
   நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/

   Delete
 2. சுபம் ஆச்சரியமாய் இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வலிப்போக்கன் சார்,
   நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/

   Delete
 3. நன்றே நிறைவுற்றதில் மகிழ்ச்சி நண்பரே
  நன்றி
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete