10 Sept 2015

வலைப்பதிவர் திருவிழா -நாங்க இப்படி, நீங்க எப்படி?

வரும் 11-10-2015 ஞாயிறு 
வலைப்பதிவர் திருவிழா-2015

புதுக்கோட்டையில் 
சிறப்பான ஏற்பாடுகள் 
நடந்து வருகின்றன.

புதுக்கோட்டைப் பதிவர்கள் 
நிதி உதவி செய்வதில் முந்திக்கொண்டு
விழாவுக்காக 
உடல் உழைப்பையும் தந்து வருகிறார்கள்..

மற்ற மாவட்டப் பதிவர்களும் இதில் பங்கேற்க வேண்டுகிறோம்.

(1)    கவிதை ஓவியக் கண்காட்சி
(2)    பதிவர்களின் அறிமுகம்
(3)    தமிழிசைப் பாடல்கள்
(4)    நூல்வெளியீடுகள்
(5)    குறும்பட வெளியீடுகள்
(6)    20க்கும் மேற்பட்ட பதிவர் விருதுகள்
(7)    தமிழ்வலைப்பதிவர் கையேடு வெளியீடு
(8)    பதிவர்களுக்கான போட்டிகள் பரிசுகள்
(9)    புகழ்பெற்ற சான்றோர் சிறப்புரைகளுடன்
(10)பதிவர்களின் புத்தகக் கண்காட்சி, விற்பனை என நிகழ்ச்சி நிரல் தயாராகிவருகிறது.        இதோடு,

பங்கேற்கும் அனைத்துப் பதிவர்களுக்கும் மனமுவந்து வழங்குவதற்கான வலைப்பதிவர் கையேட்டுடன், பயணக் கைப்பை, நிகழ்வுகளைக் குறிக்க... குறிப்பேடு- பேனா, இடையில் கொறிக்க... தேநீரோடு, நல்ல மதிய உணவு இவற்றோடு, அளவில்லாத அன்பை வாரி வழங்கிடத்  தயாராகிவருகிறார்கள் புதுக்கோட்டைப் பதிவர்கள்...  மேலும் நண்பர்கள் சிலர், பதிவர்களுக்கும் பள்ளிகளுக்கும் வழங்கிடத் தமது நூல்பிரதிகள் பலவற்றைத் தருவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்....

                   அப்ப நீங்க..?

பதிவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் இது நம் வலைப்பதிவர் குடும்பவிழா எனும் பங்கேற்பு உணர்வோடு, தாராளமாக நிதி உதவி செய்யக் கேட்டுக்கொள்கிறோம்!

வங்கிக்கணக்கில் பணம் செலுத்தி, செலுத்தியவர் பெயர், ஊர், தொகை விவரங்களை மின்னஞ்சலில் தெரிவிக்கலாம்.
நன்கொடையாளர் பெயர், ஊர்விவரம் விழா வலைப்பக்கத்தில் தொடர்ந்து வெளிவரும்... இதோ இதுவரை நன்கொடை தந்தோர் பெயர்விவரம் அறிய இங்கே வாருங்கள் –


--------------------------------------------------------------------------------------
பிரபல  வலைப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள் -
இந்தப் பதிவை அவரவர் தளங்களில் எடுத்து மறுபதிவு இட்டு,
விழாக்குழுவிற்கு உதவிட அன்புடன் வேண்டுகிறேன். 
நீங்கள் செய்யப் போகும் உதவிக்கு முன்கூட்டிய எங்கள் நன்றி.


நன்றி வளரும் கவிதை http://valarumkavithai.blogspot.com/ 

20 comments:

Geetha said...

பகிர்விற்கு மிக்க நன்றி சார்

vimalanperali said...

வணக்கம் கீதா மேடம்.
நன்றி வருகைக்கும்,நன்றிக்குமாய்/

திண்டுக்கல் தனபாலன் said...

உங்கள் தளத்திலும் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி தோழர்...

முக்கிய விசயம் நாளை எனது பகிர்வில்...!

Geetha said...

வணக்கம் புதுகை வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கின்றோம்.புத்தகம் பற்றி முன்பே தெரிவிக்க வேண்டுகின்றோம்.நன்றி சார்

Yarlpavanan said...

வரும் 11-10-2015 ஞாயிறு
“வலைப்பதிவர் திருவிழா-2015”
புதுக்கோட்டையில்
சிறப்பாக இடம்பெற
எனது வாழ்த்துகள்

http://www.ypvnpubs.com/

balaamagi said...

அருமையாக பகிர்ந்துள்ளீர்,
தங்கள் நூல் வெளியீட்டிற்கும் வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்

வலிப்போக்கன் said...

பகிர்வுக்கு நன்றி!!

வலிப்போக்கன் said...

பகிர்வுக்கு நன்றி!!

vimalanperali said...

வணக்கம் கீதாமேடம் ,
புத்தகம் இரண்டு காப்பிகள்
ஏற்கனவே அனுப்பியுள்ளேன்.
முத்து நிலவன் சார் முகவரிக்கு/
தவிர பள்ளிகள் மற்றும்
இதர ஆர்வலர்களுக்குத்தர
எனது முதல் தொகுப்பு காக்காச்சோறு
உள்ளது அனுப்பி வைக்கட்டுமா,,?

vimalanperali said...

நன்றி வாழ்த்திற்கு நாகேந்திர பாரதி சார்.

vimalanperali said...

வணக்கம் காசி ராஜலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் வலிப்போக்கன் சார்,
நன்றி வருகைக்கு/

vimalanperali said...

நன்றி வலிப்ப்போக்கன் சார்
வருகைக்கு/

vimalanperali said...

நன்றி வருகைக்கு
திண்டுக்கல் தனபாலன் சார்,
நான் புத்தகம் அனுப்பியிருந்தேன்.
பதிவர் விழாவில் வெளியிடுவதற்காய் ,
அது எந்த நிலையில் உள்ளது
எனத்தெரியவில்லை.

vimalanperali said...

வணக்கம் மஹேஸ்வரி
பாலச்சந்திரன் அவர்களே,
நன்றி வருகைக்கு,
இது எனது பதிவல்ல வளரும் கவிதைப்
பக்கத்திலிருந்து திரு முத்து நிலவன்
அவர்களின் உயரிய அனுமதியுடன்
எடுத்துப்போட்டது.
http://valarumkavithai.blogspot.com/

Thulasidharan V Thillaiakathu said...

தங்கள் தளத்திலும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி! புத்த வெளியீட்டிற்கு வாழ்த்துகள்! சந்திப்போம் நண்பரே!

மகிழ்நிறை said...

விழாக்குழுவின் சார்பாக நன்றிகள் அண்ணா!

vimalanperali said...

வணக்கம் துளசிதரன் சார்,
நன்றி வருகைக்கும் வாழ்த்திற்குமாய்/

vimalanperali said...

வணக்கம் மைதிலி கஸ்தூரி ரெங்கன் சார்,
நன்றி வருகைக்கு/

வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said...

நன்றி விமலன். முதல்தொகுப்பை அனுப்ப வேண்டியதில்லை. விற்பனைக்கும், பதிவர் புத்தகக் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்திருக்கிறோம் அல்லவா? எனவே, நீங்கள் விழாவுக்கு வரும்போது பிரதிகளைக் கொண்டுவந்தால் போதும்.நன்றி.