7 Nov 2015

சுற்றிச்சுழன்று,,,,,

இவ்வளவு ஒல்லியாகவா இருப்பான் ஒரு ஆள்.இருக்கிறானேஎன்னசெய்ய,,? ஏதோ மரக்குச்சிக்கு கையும் காலும் முளைத்தது மாதிரி ,,சரிதான் இருக்க ட்டும்,என்ன இப்பொழுது அதனால் கெட்டுப்போகப்போகிறது.தினசரி பார்க்கும் எத்தனையோ நல்லது கெட்டது போல இதுவும் ஒன்றாய்,,,,,,,,,/

நீண்டு அகன்ற தார் ரோடு இரண்டாக பிரிந்திரிந்தது.நடுவில் சின்னதாக எழுப்பியிருந்த சுவரில் பெயிண்ட் அடித்திருந்தார்கள் .

அதுபோக்குவரத்துபெயிண்ட்போலும்.பச்சைசிவப்புவெள்ளைஎன்கிறஇத்தியாதி இத்தியாதி கலர்களில் இது ஒரு கலர் போலும்,

மஞ்சள் கறுப்பு வெள்ளை பார்க்க நன்றாகவே இருந்தது, இதுஎப்படி இப்படி ஒருகலர்ஒற்றுமைஉருவானதுஎனத்தெரியவில்லை,உருவாக்கிசாஸ்வதமும் ஆக்கிவிட்டார்கள்,இடதுபக்கமாய்போனால்ஆபத்துஒன்றும்அதிகமில்லை,
வலது பக்கமாய் போகும் போது ஆபத்து சூழ்ந்து விடுகிறது,

இருசக்கர வாகனங்களை செக் பண்ணுகிறார்கள். ஒன்று ஹெல்மெட்டுக்காக இன்னொன்று லைசென்ஸீக்காக,,,./ மதுரை ரோட்டிலிருந்து பாலம் இறங்கி வந்து நாலு ரோடு முக்கில் நின்றால் எறிந்து அமந்து வழி சொல்கிற சிக்னல் விளக்கின் வழி விடலுக்கு ஏற்றவாறு போய் வந்து கொண்டிருக்கிற ஏற்பாட் டில் ஒரு சின்ன சிக்கல்.அந்த ரோட்டில்தான் ஜேம்ஸ்சுந்தர் டீக்கடையும், அதற்குஎதிர்த்ததெருவில்இவன்வைத்தியம்பார்க்கிறஹோமியோபதிகி்ளினிக்கும் இருக்கிறது,பாலம் இறங்கி விட்டால் அல்லது அந்த வழியாக போக வேண்டிய வேலை ஏதாவது இருந்தால் டீக்கடைக்கு வண்டி தன்னைப் போல திரும்பி விடும்,அல்லது ஹோமியோபதி வைத்தியரிடம் வைத்தியம் பார்க்கப் போகிற தினங்களில் கண்டிப்பாக அந்தகடைக்குப்போய்விடுவான், டீயின் ருசி அன்றி வேறென்னவாய் இருக்கப் போகிறது அப்படிப்போவதற்கு/

முன்பெல்லாம் கீழ ராஜ வீதியிலிருந்த கிளினிக்கிற்குமட்டுமே போவான், இப்பொழுதுஇங்கு,,,,,,,அதற்கானகாரணமாய்பெரிதாகஒன்றுமெல்லாம்இல்லை. ஹோமியோபதி படித்துக்கொண்டிருந்த நண்பரின் மகன் படிப்பு முடிந்து கிளினிக் போட்ட சிறிது நாளிலிருந்து அங்குதான் இவனின் வைத்தி யம் தொடர்கிறது,போன முதல் நாளே சொல்லி விட்டான்,டாக்டர் நீங்கள் பார்த்து என் உடம்பை சரி செய்து இந்த பூ உலகில் வைத்துக்கொள்வதானாலும் சரி அல்லது இவன் லாயக்கற்றவன் இங்குஇருக்க என நினைத்துமேலேஅனுப்பி வைத்தாலும் சரி.எது உங்களது சௌகரியமோ அதை செய்யுங்கள் எனச் சொன்னஇவனது பேச்சுக்கு டாக்டர் சிரித்துவிட்டார்.

இவன் தான் அவரை டாக்டர்வாங்க சார்,போங்க சார் என்கிற மரியாதையில் அழைக்கிறான்.ஆனால்டாக்டர்அந்தமரியாதைஎல்லாம் எதிர்பார்க்கவில்லை.

இவனைஇன்னும்மாமா,,,என்றுதான்வாய்நிறையகூப்புடுகிறார்,அப்படியா மாமா சரி மாமா,இந்தாங்க மாமா என இவன் வைத்தியத்திற்கு போகிற நாட்களி லெல்லாம் வரம்பு மீறாத பேச்சு பேசிவிட்டு இவன் ஏதாவது கோப மாகவோ அல்லது வரட்டுப் பேச்சாகவோ பேசி விட்டு வந்து விட்டா னானால் இவன் போய் வந்த சி்றிது நேரம் கழித்தோ அல்லதுஅது அரை நாள் விட்டோ போன்பண்ணுவார்,அதுஅப்படியில்லை,இதன்விளைவுஇதுதான்எங்களதுவைத்தி யத்தில் என/அவர் அப்படி சொன்ன மறு நாளே போய் போய் விடுவான் டாக்ட ரைப் பார்க்க./

அது மட்டுமில்லை,அந்த தெருவுக்குப்போவது இவனுக்கு மிகவும் பிடித்தமான விஷயமும் கூட/

பன்னிச்சாமி கோவில் தெரு என்றார்கள் அதை. பஜாருக்கு போய் வருகிற நாட்களிலும் மற்ற வேலையாக அந்தப் பக்கம் செல்லும் போதும் அந்தத்தெரு வழியாக போவதை விரும்பியே ஏற்பான்,வேறு வழியாய் போக வேண்டிய நிர்பந்தம் வந்த போதும் கூட அந்த வழியாய் வம்பாய் போய் வருவான்.ஊரே வெறுக்கிற பன்றிக்கு சிலை வைத்து கோவில் கட்டி கும்பிட்டு மரியாதை செய்வதும்,அதற்கு வருடத்திற்கு ஒரு முறை பொங்கல் வைத்து விமர்சை யாக கொண்டாடி மகிழ்வதும் இவனுக்கு மிகவும் மனம் பிடித்த விஷயமா கவே இருந்திருக்கிறது இதுநாள்வரை,ஒரு வேலை அது கூட காரணமாக இருக்கலாம் அப்படி போய் வருவதற்கு/

தோதாக அந்தத் தெருவிலேயே ஆஸ்பத்திரி இருந்ததும் இவனுக்கு தோதாக இருந்தது,போன் மாதத்தின் ஏழு மணி இரவன்றான ஒரு பயணத்தின்போது இங்கு வந்துதான் மாட்டிக் கொண்டான்.போலீஸாரிடம்/

பையனைபள்ளி விட்டு கூட்டி வந்து கொண்டிருந்தான்.பையன் பின்னால் உட்கார்ந்திருந்தான்.இவன்வண்டியோட்டிக்கொண்டுசென்றான்.

ஹெல்மெட்டைவண்டியின்கண்ணாயின்பிடியில்மாட்டியிருந்தான்.போலீஸ்க் காரரிடம்சொன்னதற்குஹெல்மெட்வண்டியில்மாட்டுவதற்குஅல்லதலையில் மாட்டுவதற்கு என்றார். சரிதான் அவர் சொல்வதும் என அதிகம் வாதாடாமல் ஸ்பாட்பைன்நூறு ரூபாய் கட்டி விட்டு வந்தான்.

இவனுக்குமுன்னால் ஹெல் மெட் இல்லாமல் பிடிபட்டவர் தன்னிடம் ரூபாய் இல்லைஎனச்சொல்லிக்கொண்டிருந்தார்.பரவாயில்லைபணம்இல்லைஎன்றா ல்என்ன,வண்டியைநிறுத்திவிட்டு பணம்கொண்டுவந்துகொடுத்து விட்டு எடுத் துக் கொள்ளுங்கள்என்றார்.வண்டிக்காரரும்வாதாடிக் கொண்டிரு ந் தார்,

வெளியூர்போலும்அவர், இவனுக்கானால் அவரைப்பார்த்த ஞாபகம் இருக்கி றது. எங்குபார்த்தோம்எப்பொழுது பார்த்தோம்என்பதுஞாபகமில்லை.இவன் உற்றுப் பார்ப்பதை கவனித்த அவர் சார் கொஞ்சம்வண்டிய பாத்துக்கங்க, நான் வழக்கமா சரக்கு வாங்குற கடையில் போயி ரூவா வாங்கீட்டு வந்திரேன் எனச் சொன்னவரின் இருசக்கரவாகனம் நிறை பாரமாய் நின்றது.

கிராமத்தில் பலசரக்குக்கடை வைத்திருக்கிறாராம்,காலையில் ஒரு நடை மாலையில் ஒரு நடை என சரக்கு வாங்கிப்போவாராம் கடைக்கு,காலையில் அருப்புக் கோட்டையிலும் மாலையில் இங்குமாய் வந்து வாங்கிப்போவேன் என்றார்,

எப்பொழுதும் இந்நேரம் ஊர் போய் சேர்ந்திருப்பாராம்.இன்று ஊரிலிருந்து வந்ததே கொஞ்சம் தாமதம்.தவிர இங்கே அரை மணி நேரமாய் நின்று கொண்டிருக்கிறேன்,என்றார்,சரி நீங்கள் கடைக்காரரிடம் போய் பணம் வாங்கி வர வேண்டுமானாலும் வாங்கி வாருங்கள் அல்லது என்னிடம் கூட வாங்கிக் கொள்ளுங்கள் ,இன்னொருநாள் பார்க்கும் போது கொடுங்கள் என்றான் இவன்,

மிகவும்தயக்கத்துடனும் அவர் கடைக்கு போய் ரூபாய் வாங்கிவர நேரமாகும் என்பதாலும் உங்களிடம் வாங்கிக்கொள்கிறேன் என இவன் கொடுத்த நூறு ரூபாய்நோட்டைவாங்கிக்கொண்டுபைனைக்கட்டிவிட்டுவண்டியைஎடுத்தவர் இவனைக்கொஞ்சம் நிற்கச் சொல்லி விட்டு வண்டியை போலீஸ் நிற்கிற இடத்திலிருந்து எடுத்து வந்து ஓரமாக நிறுத்தியவர் இவனது பைய னிடம் சேவுப்பாக்கெட் ஒன்றையும் மிக்சர் பாக்கெட் ஒன்றையுமாய் எடுத்துக் கொடு த்து விட்டு கையெடுத்து கும்பிடுபோட்டவாறு நகன்றார்.

பரவாயில்லை கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது.பள்ளிப்படிப்பு,டீச்சர்,சாரி வசவு பரிட்சை, படிப்பு மார்க்,ரேங்க் கார்ட் இன்னும் இன்னுமான இதர விஷயங்களில் இருக்கிற கவனங்களில் இருந்து சற்றே விலகி நிற்கிற மனோ நிலை இது போலான விஷயங்களில்தான் கிடைக்கிறது என மகிழ்ந்து போனான் மகன்.இதற்காக நூறு ரூபாய் என்ன இன்னும் கூட இழக்கலாம் என்றான் மகன்.

அவனைப்பொறுத்த அளவில் இது போலான சந்தோஷங்கள் எங்கு கிடைத்தா லும்எப்பொழுதுகிடைத்தாலும்ஏற்றுக்கொள்ளதயங்கக்கூடாதுஎனநினைக்கிறா ன். வாஸ்தவம்தான் ரிலாக்ஸேஷன் தேடி அலைகிற மனதுக்கு ஆறுதலாய் இரண்டு வார்த்தைகள் கிடைக்காதா என நினைக்கிறான்.அவ்வளவே/

அவன் நினைக்கிற ரிலாக்ஸேஷனும் பரந்து பட்ட அடர்வும் எங்கு கிடைக்கி றதோ அங்கு ஐக்கியமாகிப்போக எத்தனிக்கிறான் அல்லது ஐக்கியமாகி விடுகி றான், இதுதான்அவனைப்பொறுத்தஅளவில் நடக்கிற விஷயம். நடக்கட்டும் ஆனால் அவனைப்பொறுத்த அளவில் ரிலாக்ஸாக இருக்க முடியாத ஒரு விஷயம் அவனது வயிற்றுப்பிரச்சனைமட்டுமே,என்ன செய்ய அப்படித்தான் இருக்கிறது, தாங்கிக் கொண்டுதான் ஓடிகொண்டு இருக்கிறான்,ஓடட்டும் என அப்படியேவிட்டுவிடமுடியவில்லை.

படிப்புபடிப்பு ,எழுத்து,எழுத்து மனப்பாடம், மனப்பாடம் என்கிற கவனம் ஊன்று தலில்இரவு தூங்க லேட்டாகிப்போகிறது. காலை சீக்கிரம் எழுந்து விடுகிறான். சரியாக சாப்பிடமுடியவில்லை,சரியாக குளிக்க முடியவில்லை.சரியாக பாத் ரூம்கூடபோகமுடியவில்லை,விளைவுவயிறுகெட்டுப்போனது,வாரத்தில்ஒரு நாள் அல்லது இரண்டு நாள் ஒரு நாளைக்கு நான்கைந்து முறை பாத்ரூம் போய் விடுகிறான்.முதலில் உடலில் சூடு ஏறிப்போனது,அதனால்தான் இப்படி இருக்கிறது எனவிட்டு விட்டார்கள் இவனும் மனைவியுமாக/

சரியானது போல் இருந்தது.கொஞ்ச நாளைக்கு,பின் கொஞ்ச நாட்களில் தொட ரவும்இவன்பார்க்கிற ஹோமியோபதி ஆஸ்பத்திரிக்கு கூட்டி வந்தான்.டாக்டர் சொன்னார்,நத்திங்மாமா,ஒன்றும்கவலைப்படாதீர்கள்.பெரிதாகஒன்றுமில்லை. எல்லாமே மன அழுத்தம்தான்.விட்டுவிடுங்கள் இது சம்பந்த மாய் ரொம்பவு மாய் கவலைப்பட்டு நீங்கள் தனி மன அழுத்ததுக்கு ஆளாகிப்போகாதீர்கள், அப்புறம் என்னால் அதற்கு ஒரு தனி மருத்துவம் பார்க்கும் படியாகிப்போகும் எனச்சொன்னபோது மன அழுத்தம் எங்களுக்கு மட்டும் இல்லை சார் அவனுக் கும் சேர்த்துதான் இருக்கிறது என்றான்,

வயிற்றுப் பிரச்சனை அதிகமாக இருக்கிற நாட்களில் பள்ளிக்கு போக முடி யாத நாட்களில்மனஅழுத்ததிற்கும்,குற்ற உணர்ச்சிக்கும் ஆளாகிப் போகிறான் அதுதான் இப்பொழுது எங்களுக்கு கவலையாகியும் போகிறது என்றான் இவன் டாக்டரிடம்,விடுங்கள் இம்மாதிரி கவலை கடந்து வராத பெற்றோர்கள் இங்கு ரொம்பவே குறைவு என்று சொன்ன டாக்டர்கூடவே பையனுக்கென தனியாய் மாத்திரைகளும் ஆலோசனைகளும் கொடுத்தார்,

அப்படியாய் மாத்திரை வாங்க வந்த ஒரு நாளின் காலை வேளையில்தான் இப்படி ஒருவன் வந்து நிற்கிறான்,

ஏன் அப்படியாய் அவன்.தொலைக்காட்சி விளம்பரங்களெல்லாம் பார்ப்பானா என்னவெனத்தெரியவில்லை.ஒல்லியாகஇருப்பவர்களைகுண்டாகவும்குண்டாக இருப்பவர்களை ஒல்லியாக ஆக்கவுமாய் பயன்படுகிற எங்களது தயாரிப்பை வாங்கிச்சாப்பிடுங்கள்எனபரிந்துரைக்கிறஎதையும்பார்க்கமாட்டான்போலிருக்
கிறது.அல்லதுபார்க்கச்சொல்லியாரும் அவனுக்கு பரிந்துரைக்கவில்லையோ என்னவோ,,,?

காற்று வாக்கில் மிதந்தது போல் வந்தான்.அது சரி இப்படியெல்லாம் நடந்து வராவிட்டால் என்னவாம் இப்பொழுது,,?கொஞ்சம் பெலமாக காற்று அடிக்கிற சேர்த்துவிடும்தானே,,?எனநீங்கள்கேட்பதுபுரிகிறதுதான்.இருந்தாலும்இழுத்துப் போர்த்தியதோலும்அதன்உள்ளுமாய்இருக்கிறகொஞ்சம்எலும்புகளுடனுமாய் இருக்கிறான்.

சிவந்ததோல்தான்,தோலில்பசையில்லை.கண்களில் மலர்ச்சியில்லை. உடல் சூம்பிப்போய் இருந்தது.நீட்டிய முழங்கையின் மடக்கில் குமிழிட்ட எலும்பு அவனுடைய உடலில் வீக்னெஸை காண்பித்தது.அவ்வளவு வீக்னெஸ்ஸாக தெரிந்தாலும் நடையில் இருந்த துள்ளல் மாறவில்லை.வந்தான் நின்றான். நேருக்கு நேராய் பார்த்தவாறு சார் இந்த கல்யாணமண்டபம் எங்கே இருக்கிறது ஒரு மண்டபத்தின் பெயர் சொல்லிக்கேட்டான்.

கேள்விப்பட்டிருக்கிறான்இவன்.ஆனால்படக்கெனஞாபகத்திற்குவரவில்லை. முகவரி கேட்டவன் முன் நெற்றி சுருக்கி யோசித்து சுருக்கிய முகத்திலிருந்து வராத பதிலை முகவரி கேட்டவனிடம் எனக்குத்தெரியாது அந்த இடம் எனச் சொல்லாமல்இவன்நின்றிருந்ததெருவின்எதிரிலிருந்தலாரி ஆபீசை கையைக் காண்பித்துஅங்கு போய் கேட்டுக்கொள்ளுமாறு சொல்லி விடுகிறான்.

அந்த லாரி ஆபீஸின் பக்கமாய்த்தான் தங்கமுத்துவின் டீக்கடை இருந்தது, லாரி ஆபீஸில் லோடு இறக்கி,ஏற்ற வருகிற, லோடு மேன்களுக்கும் லாரி டிரைவர்களுக்கும் தேவாமிர்தமாயும்,சமயத்தில் பசி போக்குகிற ஒரு மடக்கு திரவமாயும் ஆகிப்போகிறதுதான் தங்கமுத்து கடையின் டீ/

பத்து வருடங்களுக்கு மேல் இருக்கும் என நினைக்கிறான்,அப்பொழுது திரும ணம் ஆகியிருக்கவில்லை.ஏதோ ஒரு வேலையாக லெனின் மன்றம் அருகிலி ருக்கிற நண்பனைப்பார்க்க போய்க்கொண்டிருக்கும்போது சரியாகமூன்றாவ து ரயில்வே கேட் அருகே சைக்கிளில் லைட் இல்லை என போலீஸ் பிடித்துக் கொண்டது.டைனமோ கேஸ் என்றார்கள் அதை,இவனது சைக்கிளில் டைன மோ இருந்தது ஆனால் எரியவில்லை. உள்ள படிக்கும் சைக்கிளில் லைட் எரிந்தது.போலீஸார் நிற்கிற தூரத்திற்கு ஒரு பத்தடி தூரத்திலிருந்துதான் எரியவில்லை,இவனும் அதை கவனிக்கவில்லை.அதை போலீசாரிடம் சொல் லிப்பார்த்தும்கேட்கவில்லை.

சைக்கிளைபோலீஸாரிடம்விட்டுவிட்டு நண்பனின் வீட்டுக்குவந்துவிட்டான். இதுமாதிரிஎனதகவல்சொல்லி/என்னசெய்ய எனக்கேட்கவில்லை, சரி வாருங் கள் போவோம் என உடன் வந்த தங்கமுத்து தோழர்தான் இன்று டீக்கடை வைத்திருப்பவராய் அறியப்படுகிறார்,

சற்றேகோபத்துடன்வந்ததங்கமுத்து தோழர்போலீஸாரிடம் வாதாடிப்பார்த்து ம் சைக்கிளைஸ்டேசனில்வந்துஎடுத்துக்கொள்ளுங்கள் என சொல்லி விட்டா ர்கள்.மறுநாள்போய்பைன்கட்டிவிட்டுசைக்கிளைஎடுத்துவந்தான்.அதைஇப்பொ
ழுதும் ஞாபகப்படுத்துவார் தோழர் தங்கமுத்து/

அவரதுக்கடைக்கு போய் முகவரியை விசாரிக்கச்சொன்னபின்தான்ஞாபகம் வருகிறதுதிருமணமண்டபம்எங்கிருக்கிறதுஎன/
பலவிஷயங்களில்இப்படித்தான் ஞாபகம் வருகிறது முன் நடந்தது பின்னாய்/

6 comments:

ஸ்ரீமலையப்பன் said...

அய்யா வார்த்தைகளுக்கு மத்தியில் இடைவெளி இல்லாததால் படிப்பதற்கு சிரமமாக உள்ளது அய்யா..

vimalanperali said...

வணக்கம் ஸ்ரீ மலையப்பன் ஸ்ரீராம் அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வார்த்தைகளில் இனி இடைவெளி விட்டுவிடுகிறேன்/

”தளிர் சுரேஷ்” said...

அருமை!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே
தம +1

vimalanperali said...

வணக்கம்தளிர் சுரேஷ் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
தீபாவளி நல்வாழ்த்துக்கள் அனைவருக்குமாய்/