16 Jan 2016

காலைப்பொழுது,,,,


நாலாவதுடீயா அதற்குள்ளாகவா,,,,,,,?அடப்பாவி காலை பத்தரைமணிக்குள் ளாக இத்தனை டீக்களைக்குடித்தால் உடல் என்னாவது/?

சொன்னாலும் கேட்க மாட்டாய் நீ,காலை சாப்பாடு இன்னும் சாப்பிட்டிருக்க மாட்டாய்தானே நீ,,,ஏன் இப்படிச்செய்கிறாய்?லீவு நாளென்றால் உன் தேனீர் தாகத்தைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் தனி படை ஒன்று அமைக்க வேண்டும் போலிருக்கிறதே,,,என்ற நண்பனின் பேச்சுடனுமாய் டீக்குடித்த கடை ட்ராக்டர் வேலுச்சாமியின் கடையாய் இருந்தது,

மிகச்சரியாக ஆனந்த் கறிக்கடைக்கு எதிர்த்தாற்ப்போல்இருந்தது,ஆனந்த் கடையில் கறி எடுக்க தனிபயிற்சி பெற்றிருக்க வேண்டும்.சனி ஞாயிறுகளில் களை கட்டுகிற கூட்டத்தைப்பிளந்து கறிவாங்குவது அவ்வளவு லேசுப்பட்ட காரியமில்லை.

காலை ஐந்து மணிக்கு வந்தால் கொஞ்சம் கூட்டமற்று இருக்கும் கடை என வந்தால்அந்நேரம்தான்ஆட்டைஉரித்துக்கொண்டிருப்பார்கள்.சரி என்ன செய்ய அதுவரை என வேலுச்சாமின் கடையில் டீக்குடிக்க தஞ்சமடைவது வாடிக் கையாகிப்போகிறது வாரநாட்களின் இறுதியில்/

வேலுச்சாமியின் கடை முன் இருக்கிற மண் பூத்த வெளியும் அதில் நிலை கொண்டு இருக்கிற ஒற்றை புங்க மரமும் அதைக்கடந்து படர்ந்து போகிற தார்ச்சாலையும் அதில் போகிற ஒன்றிரண்டு வாகனங்களும் அழகுபட்டுத் தெரிகிற அந்த இளங்காலை இவனுக்குள் ரம்யம் விதைக்கும்/

விதைக்கப்பட்டரம்யம்வீண்பட்டுப்போய்விடக்கூடாதுஎன்பதற்காகடீக்கடையி லிருந்து கிழக்கு நோக்கி கொஞ்ச தூரம் கை வீசி நடந்து போய் வருவான்.

ட்ராக்டர் வேலுச்சாமி இவன் வீடுக்கட்டிக்கொண்டிருக்கும் போது வீடு கட்ட தேவையான தண்ணீரை ட்ராக்டரில் கொண்டு வந்து ஊற்றினார்.தண்ணீர், தண்ணீர் என வீடுகட்டிக்கொண்டிருந்த நாட்களில் அலைந்து கொண்டிருந்த போது அவரைத்தான் கையைக்காட்டினார்கள் .

அவர்தான் அந்த ஏரியா முழுமைக்குமாய் ட்ராக்டர் வைத்து தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கிறார்.காலையில் தண்ணீர் குடம் நான்கு ரூபாய்க்கென தெருத் தெருவாக ஊற்றுவார்.மற்ற நேரங்களில் இது போல வீடு கட்டுபவர்களின் தேவைக்கு,திருமண வீடு விஷேச வீடு வீட்டின் மீதிருக்கும் டேங்கில் தண்ணீர்ஏற்ற என வண்டி நாள் முழுவதுமாய் பிஸியாய் ஓடிக்கொண்டிருக் கும், ஓடுகிற வண்டியின் டிரைவருக்கும் வண்டிக்கும் ஓய்வு வேண்டுமென் றால் அது மதிய நேர சாப்பாட்டு இடைவேளைதான்/

வண்டியின்டயர்பஞ்சர்அல்லதுவேறு ரிப்பேர் என்றால் கூட கூடிய விரைவில் சரிசெய்துகொண்டு தண்ணீர் ஊற்ற வந்து விடுவார்.

இரவு எட்டுமணிக்குக்கூட அவர் வண்டி நிறுத்தி வைத்திருக்கும் இடத்தில் போய் தண்ணீர் பிடித்துக்கொள்ளலாம். என்ன அவர் கொஞ்சம் தண்ணியில் இருப்பார்.கொஞ்சம் பொறுத்துக்கொள்ள வேண்டும்.தண்ணீர் பிடிக்கப்போன இடத்தில் தண்ணி தரிசனம் கிடைத்த கதையாகிக் காட்சிப்படும் அந்த நேரத் தை/

ஆனால்ஏதும் கூடக்குறைய இருக்காது.தண்ணீர்பிடிக்கப்போனால் ஒரு எளிய வணக்கம்.தண்ணீர் பிடித்து முடிந்தவுடன் ட்ராக்டரின் குழாயை மூடிவிட்டு தண்ணீருக்கானகாசுவாங்குவதுடன் முடிந்து போகும். அப்படி பிடித்துக் கொண் டிருக்கிற நேரங்களில் தண்ணீரின் தேவை கொஞ்சம் அதிகம். பத்து குடங்களுக்கும் மேல் தேவை ஏதாவது அவசரம் வீட்டிற்கு விருந்தினர் போக்குவரத்து என்றால் உடனே அவரிடம் இருக்கிற மினி பிளாஸ்டிக் டேங்கை தள்ளு வண்டியில் ஏற்றி அதில் தண்ணீர் நிரப்பி கொண்டு வந்து விடுவார். என்னதான் போதையில் இருந்தாலும் அவர் தள்ளிக்கொண்டு வருகிற வண்டி அவரைப்போல் தள்ளாடினாலும் மிகச்சரியாக இருப்பார் தொழிலில்/

தள்ளாட்டத்துடன் வீட்டிற்கு வருபவர் டேங்கின் கீழுள்ள திருகுக்குழாயில் ஓஸ் பைப்பை சொருகி விட்டு விட்டு காலிங் பெல் அடித்து விட்டோ அல்லது ஒரு சப்தம் கொடுத்து விட்டோ ஒரு பத்தடி தூரம் ஒதுங்கி நின்று கொள்வார் கைக்கட்டிக்கொண்டு/கூப்பிடாலும்அருகில்வரமாட்டார்.தண்ணிசாப்பிட்டிருக் கிறேன்எனசைகையால் சொல்லி விட்டு தண்ணீர்பிடித்து முடிந் ததும்தண்ணீர் பிடித்து முடிந்ததும் வண்டியை தள்ளிக் கொண்டுபோய்விடுவார். பணமெ ல்லாம் மறுநாள்தான்.தண்ணியை (போதையை) தொட்ட கையால் பணத்தை தொட மாட்டேன் என்பார்.

இவன்சென்றுடீக்குடித்தவேளைஅவனது மனைவிதான் இவனுக்குடீப்போட்டு க் கொடுத்தார். இவனது மூத்த மகளின் வயதிருக்கும் அவளுக்கு.

டீக்கொஞ்சம் லைட்டாகத்தான் இருந்தது.டீ டிக்காசன் கொஞ்சம்குறைவுபட்டு பால் கொஞ்சம் தூக்கலாகித் தெரிகிறது. கொஞ்சம் டிக்காசன் பிழயச் சொல்ல லாம் கிளாஸில் என நினைக்கிற நேரம் அரைக்கிளாஸ்வரை வற்றியிருந்தது டீ/

இவனோடும்இவனதுநாவின்சுவையறும்புகளோடும்ஒட்டிஉறவாடிக்கொண்டி ருந்த டீ கொஞ்சம் ஸ்டாரங்காய் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

டீன்னா கொஞ்சம் சுருக்குன்னு இருக்கணும்டா பெரியவனே என எப்பொழு தோ ஒருவேளை இவனிடம் சொல்லியிருந்த மாரியண்னனின் நினைவு இப்பொழுது வந்து போவதாக/

தலையில் வைத்திருந்த மல்லிகைப்பூ மாலையில் வெடித்துச் சிரித்திருப்பது போலவும்சிற்றோடையாய் சுழித்து ஓடிய தண்ணீர் சிறிது தூரம் கடந்து மடை திறந்தது போல் பெரிய வாய்க்காலில் ஓடுவது போலவுமாய் இருக்கிறது.

உண்மையிலே அது மடை திறந்த நீர் போல்தான் வருகிறது.தோட்டத்தில் மோட்டார் போட்டதும் பம்பிலிருந்து விசையுடன் விழுகிற தண்ணீர் தொட்டி யிலிருந்து வாய்க்கால் வழியாக வந்து பெரிய வாய்க்காலைத் தொட்டதும் திமுதிமுவென வருகிற தண்ணீர் வாய்க்காலை அடைத்து அறித்துவிடும்.

வாய்க்காலை அரிப்பதோடு மட்டுமல்லாமல் நிறையாய் வருகிற தண்ணீர் வாய்க்காலின் கரைகளை உடைத்துவிடும்.சரி என்ன செய்யலாம்இப்பொழுது இதற்குதீர்வுதான் என்ன என தண்ணீர் பாய்ச்சியவாறே யோசித்துக் கொண்டி ருந்த நேரத்தில் உதயமானதுதான் கல் வைக்கிற முடிவு/

தண்ணீர் வேகமாக இழுத்து வரப்படுகிற வாய்க்காலின் முடிவில் பக்க வாட் டாக கிளைவாய்க்கால்கள்பிரிகிற இடத்தில் வருகிற தண்ணீரைஎதிர்கொண்டு சற்றே ஏந்தலாக வாய்க்கால் அளவிற்கான சதுர அல்லது செவ்வகமான கல்லை வைத்து தண்ணீரை எதிர் கொள்ளச்செய்து விட்டால் தண்ணீர் வாய்க் காலை அறிக்காது என்கிற அனுபவ விஞ்ஞானத்தை தோட்டத்தில் குப்பை பரப்பிய ஒரு நாள் மாலையில் உணர்ந்து தெரிந்து கொண்டான்.

முக்கால் ஏக்கர் தோட்டத்தில் நான்கு வரிசையில் மூன்று குவியல்களாய் குவிக்கப்படிருந்த குப்பையை நான்குமணிக்குபோய்இருட்டுவதற்கு முன்பாய் இழுத்துப்பரப்பி விட்டு வந்து விட்டான்.

ஆச்சரியம்தோட்டத்துக்காரர்களுக்கு.அதற்குள்ளாகவாமுடித்து வந்து விட்டான் வேலையை என ஒரு ஆள் வைத்து சரி பார்த்து வரச்சொல்லிவிட்டு பேசிய ஐந்து ரூபாய் சம்பளத்தை கொடுத்து அனுப்பினார் தோட்டத்துக்காரர்.

செய்த வேலையை சோதித்து சரி பார்க்கப்போனவர் மறு நாளின் மறு நாள் இவனைப்பார்த்தபோதுஓடிவந்துகையைப்பிடித்துக்கொண்டார்.பெரியதொழில்க்காரனப்ப நீயி,ஒரு முழு ஆளு நாள் பூரா செய்யிற வேலையை சுதி சுத்தமா ரெண்டு மணி நேரத்துலமுடிச்சிட்டு வந்துட்டயேயா,அதுவும் தேஞ்சு போன அர மம்பட்டிய வச்சிக்கிட்டு என்றார்.

தோட்டம்முழுசும் முக்கா ஏக்கருக்கு பூப்பூத்திருக்குறது போல குப்பை அள்ளி பரப்பீருக்கயேப்பா எனச்சொன்னவர் கொண்டாய்யா ஓங் கையி ரெண்டையும் மொத வேலையா அதுக்கு முத்தம் குடுக்கணும்யா பெருசா எனச்சொல்லிய வாறே இவனது விரிந்த கையைப் பார்த்ததும் ஏய் சாமி என்னப்பா இது கையெல்லாம் உள்ளங்கை மடக்கு விழுகுற யெடத்துல இப்பிடி தோள் பேந்து போயிருக்குன்னு ஆத்திரப்பட்டவர் நீயி என்ன செய்யி,,,,,,அடுப்புல காய்ற சூடான சட்டியில் கைய பொத்திப் பொத்தி ஒத்தி எடு ஒரு நாலு நாளைக்கு என்றார்.

அவர் சொன்னது போலவே செய்த நாட்களில் கையில் தோல் பெயர்ந்திருந்த இடம் காணாமல் போய் கையில் காப்புக்காய்த்திருந்தது.அப்படிக்காய்த்திருந்த காப்பைப்பார்த்துவிட்டு அவர் சொன்ன யோசனைதான் இது,பார்க்கிற வேலை எதுவானாலும்சரி.எவ்வளவு நிறைந்த குறைந்த சம்பளத்திற்கு பார்த்த போதும் சரி.பார்க்கிற வேலையோடு மல்லுக்கட்டாதே நீ.வேலையை நேசித்தும் ரசித் தும் செய்.அது உனக்கு புது புத்தித்தெம்பைத்தரும்.எனச்சொல்லிய நாட்களில் சொன்னயோசனைதான் வாய்க்காலில் கல்வைப்பது.

அது மட்டுமாசொன்னார்.வேலை பார்க்கிற இடத்தையும் அதைச்சுற்றிலும் சுத்தமாகவைத்துக்கொள்நீ தண்ணீர் பாய்ச்சுகிற தோட்டத்தில் மையம் கொண் டிருக்கிறகிணற்றின்கரைஏன்அப்படிசெடியும்,கொடியும்புல்பூண்டும் புதருமாய் மண்டிக்கிடக்கிறது,

நீ அடிக்கடியாயும் அன்றாடமும்தண்ணீர் பாய்ச்சுகிற வாய்க்கால்ஏன்புல் மண் டிக் கிடக்கிறது.விடாதே அப்படி நமது உடலைப்போல் நாம் வேலைபார்க்கிற இடத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்லவேண்டும் என்பார்.

அவர் சொன்ன வார்த்தைகள்தான் இன்றும் ஓரளவிற்காய் மனதிற்குள்ளாய் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.இடம் காலம் வேலை என்கிற பரிமாணங் களை கடந்து வந்து விட்ட இந்த வயதிலும் கூட/

முருகன் கோவில் என்கிறதாய் நினைவு.நல்லதானஒருஅடைமழை காலத்து முகூர்த்தநாளில்நடந்தஉறவினர்வீட்டுத்திருமணத்தில்தான்மாரியண்ணனை ப் பார்த்தான்.கோவிலுக்குள் வைத்து அல்ல,டீக்கடை வாசலில்/

கையில்டீக்கிளாஸோடுநின்றிருந்த இவனைப் பார்த்து காலையில் இவ்வளவு வெள்ளன முகூர்த்தம் வச்சதுனால நேரத்துக்கு வர முடியாமப் போச்சி.இந்த அடைமழைநேரத்துல போயி5.30டூ6.30முகூர்த்தம் வச்சா இந்தாப்பாரு பாதி பேருகல்யாணநேரத்துக்கு வரமுடியாம கல்யாணம் முடிஞ்சப்பெறகு ஏழு மணிக்கும் ஏழரை மணிக்குமா வந்துருக்காங்க/ காலையில சாப்பாடு சொன்ன கடையில எட்டுமணிக்கு மேலதான் வரச் சொல்லியிருக்காங்களாம் .ஒரே சாப்பாடுதானாம். டிபன் எல்லாம் கெடை யாதாம். சரிதான் இல்லாதவுங்க வீட்டுக்கல்யாணம் இப்பிடித்தான் நடக்கும் .ஒரு வகையில பாத்தா கல்யாணங்கள் இப்பிடி நடந்தாக்கூட சரிதான் எனச் சொன்ன மாரியண்ணன் ஊருக்குள்ள வந்ததும் ஒரு கடையில டீ சாப்புட்டேண்டா சப்புன்னு உசிரே இல்லாம இருந்துச்சி.டீன்னா கொஞ்சம் சுருக்குன்னு இருக்கணும்டா பெரிய வனே என்றவர் இவனது கையிலிருந்த டீக்கிளாஸைப்பார்த்து இதுஒரு வேளை சரியாயிருக்குன்னு நெனைக்கிறேன். என்றார்.டீக்கு சொல்லியவா றே/ அவர் சொன்ன சரியாயிருக்கும் என நினைக்கிற ”சுருக்”தர டீக்கடைகளும் வீடும் மறந்து விடுகிற போது டீக்களின் எண்ணிக்கைக்கூடிப் போகிறதுதான்.

கறிவெட்டுகிறகடையில்புத்தகம் பற்றி பேசலாமா,,,,,?ஏன் பேசக் கூடாது என்கிறார் நண்பர் சுந்தரம்.சுந்தரம் இலக்கிய ரசிகர் இலக்கியத்தின் மீதும் ,மேடைப்பேச்சின் மீதும் தீராத பற்றுக்கொண்டவர்.ஒரு கவிஞரின் மேல் கொண்ட பற்றுக் காரணமாக தனது பெயரை கவிஞரின் பெயருடன் சேர்த்து புனைப்பெயராய்வைத்துக்கொண்டவர்.

இன்றிலிருந்துபத்துவருடங்கள் பின்னோக்கிப் போனால் அவரது இலக்கிய தாகம் மையம் கொண்ட புயலாய் சுழன்ற நாட்கள் கண்முன்னே தெரியும்.

பெரியமனிதர்கள் சிலரை அழைத்து வந்து பட்டி மண்டபம் நடத்தியிருக்கிறார். நாடகம் போட்டிருக்கிறார்.கவியரங்கம் மற்றும் இன்ன பிறவானநிறைய சமூக நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். நிகழ்ச்சி நடத்தி முடித்த பின்னாய் அவருக்கிருந்த நற்பெயரும் நிகழ்ச்சி நடத்தி முடித்த திருப்தியும் மட்டும் அவரிடம் தங்கியிருக்கும்.வரவு செலவு கணக்குப்பார்க்கையில்கண்டிப்பாய் கையைப்பிடிக்கும்/மிகக்குறைந்தபட்சமாய்ஆயிரத்திலிருந்து இன்னும் இன்னு மாய் கூடிக்கொண்டே போகிற தொகையில்/

அப்படியான நாட்களில் பட்ஜெட்டில் துண்டு விழுகிற தொகையை அவர் யாரிடமும் கேட்டுக்கொண்டு இருக்க முடியாது.இவரது கையிலிருந்துதான் போட்டு சமாளிப்பார்.

அது போலான தினங்களில் வீட்டில் மனைவி வைவதை சத்தமில்லாமல் வாங்கிக்கொள்வதைத்தவிர வேறொன்றுமாய் பெரிதாய் எதிர் வினையாற்றி விட முடியாது.

“ஏன் உங்களுக்கு இந்த வேண்டாத வேலை, கையில பொம்பளப்புள்ளைய வச்சிக்கிட்டு இப்பிடி ஊர் வழி அலைஞ்சிக்கிட்டு கைக்காசப்போட்டுக்கிட்டு கூட்டம்,நாடகம்ன்னுநடத்திக்கிட்டுத்திரிஞ்சாஎப்பிடி,,,?இப்ப கைக்கொழந்தை யா இருக்காசரியாப்போச்சி,ஏதோஒறவுக்காரங்களுக்கு மத்தியிலயும் எங்க அம்மா வீடு உள்ளூர்லயே இருக்குறதுனாலயும் அங்கிட்டு ரெண்டு இங்கிட்டு ரெண்டு ன்னு வாங்கி சமாளிக்கிறேன்.காசு பணம் கொழந் தைக்கு துணி மணின்னு போயிஅவங்ககிட்டநிக்கிறது சரி. அவுங்களும் ஒத்தப்பொம்பளப் புள்ளயின்னு சளைக்காமசெய்யிறாங்க, அவுங்க கிட்டப்சோத்துக்கின்னு எப்பிடிப் போயி நிக்க,,,?

பெத்த கொழந்தய காரணம் காட்டி எத்தன தடவ பொய் சொல்லி வாஞ்கூறது. போன தடவ கொழந்தைக்கு ஒரு செலவு இருக்குன்னு சொல்லி அப்பாகிட்ட வாங்குன ரூபாயிலதான் இந்த சேலை எடுத்தேன்.உடுமாத்துக்குக்கூட செம்மையா ஒரு சேலை இல்ல.வெளியில ஏதாவது கோயில்,கொளம் போக லாம்ண்ணாக்கூட ஆத்திர அவசரத்துக்கு ஒரு நல்ல சேலை துணிமணி கெடையாது.இந்த லட்சணத்துல வீடு பூரா புத்தகம் சீ.டீ கேஸட்டு டேப்ரிக்கார் டருன்னு,,,,அதுவா வந்து நாளைக்கு சோறு போடப்போகுது.கூட்டத்துக்கு ஆயிரம் ரூவா கைக்காசு செலவழிச்சேன்னு கூசாமச்சொல்றீங்களே,அந்த ஆயிரம்ரூவாகூடகூடநூறு ரூவா போட்டா ஒரு சிப்பம் அரிசி எடுத்துரலாமே. ஒரு சிப்பம் அரிசின்னா நம்ம குடும்பத்துக்கு ஒன்றரை இல்லைன்னா ரெண்டு மாசத்துக்கு தாங்குமே,,?அந்த யோசனை ஏன் ஒங்களுக்கு வரல,புள்ள ஏதோ இப்ப கொழந்தையா இருக்க சரியாப்போகுது.நாளைக்கி வளந்து நிக்கும் போது பள்ளிக்கூடம்,புத்தகம் துணி மணின்னு வேணுமா இல்லையா,,,,நானாவது ஏதாவது வேலைக்குப் போறேன்னா அதுவும் வேணாம்றீங்க,என்ன செய்யட் டும் நானு,சொன்னாங்ககல்யாணம்நிச்சயம் ஆன ஒடனேயே,கொஞ்சம் வீட்ட கவனிக்காத ஆளு நீங்கன்னு, நான்கூடஅவுங்கசொல்ற அளவுக்கு பெருசா ஒன்னும் இருக்காதுன்னு நெனைச்சேன்.ஆனா இங்க வந்து பாத்த பெறகுதான் தெரியுது ஒங்க கொடுமை பெரும் கொடுமையின்னு/என்கிற பேச்சு இவரது மனதிற்கு வலித்தாலும் இப்போது வேலைக்குப்போய்க் கொண்டு இலக்கியத் தின் மீது கொண்ட ஆர்வத்தை குறைக்காமல் வைத்திருக்கிறார் கட்டிக் காத்து/

நேற்றுஇரவுஉறவினர் வீட்டிற்கு போய் விட்டு தாமதமாய் வீடு வந்து சேர்ந்து இரவு கண் உறக்கம்கொள்ளாமல் காலையில் சீக்கிரம் எழுந்து கறி எடுக்கப் போகையில்தான்சுந்தரத்தைப்பார்க்கிறான்.

திருவிழா நாட்களிலும் பண்டிகைப் பொழுதுகளிலுமாய் கறி எடுப்பதென்பது பரமபிரயத்தனமாய்/ஏயப்பாகடையில்போய் நின்று அதற்கென தனி சாகசங்கள் தான் செய்ய வேண்டியிருக்கிறது,

பேசாமல் பண்டிகை தினங்களில் ஈசியாய் கறி எடுப்பது எப்படி என ஏதாவது கோர்ஸ் இருந்தாலும் படிக்கலாம் போலிருக்கிறது.

இதற்கு முன்பாய் போன கடையில் அரைமணி நேரமாய் நின்று பார்த்து விட்டு கறிஎடுக்கமுடியாமல்வந்துவிட்டான்,.வேறெங்காவது கடைகள் சிக்குமா என தியேட்டர் வரை கூட போய் வந்தான்,ம்ஹூம் இல்லை கடைகள் தட்டுப்பட்ட ஒன்றிரண்டும் கூட ஆட்டுக்கறிக்கடைகளாய் இருந்தது.பேசாமல் திரும்பி வந்து ஒரு டீ சாப்பிட்டு விட்டு வேறொரு கடைக்கு வந்து கடைக் காரரிடம் கறிக்குச்சொல்லிவிட்டு ஓரமாய் நிற்கிறான்.

இந்தக்கடைக்காரரிடம் கறி எடுத்து வருடக்கணக்கில் ஆகிப்போகிறதுதான். முன்பெல்லாம்இங்குதான் வாடிக்கையாக எடுப்பான்,காசு இல்லை என்றாலும் கூடஅல்லது காசு கூடக்குறைய இருந்தாலும் அதனால் ஒன்றும் இல்லை அப்புறமாய் வந்து கொடுங்கள் என்பார்,

அப்படியான நல்ல மனதின் நிழலிருந்து எப்பொழுது ஒதுங்கினான் என்பது அரிச்சலாய்க்கூடஞாபகம்இல்லை.

அன்று போனவன் மீண்டும் இன்றுதான் கடைக்கு வந்திருக்கிறான், முதலில் இவன் கடையையையும் கோழி உறிப்பதையும் மட்டுமே பார்த்துக்கொண்டு நின்றான்.பின் தெருவைப்பார்க்கத்திரும்புகையில் சுந்தரம் வணக்கம் சொல்லி நின்றார்,இவனது பதில் வணக்கம் கூப்பிய கரங்களை எதிர் கொண்டு/

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நண்பர் சுந்தரம் மனதில் லயித்து விட்டார்...

Sengai Podhuvan said...

கறிவெட்டுகிறகடையில்புத்தகம் பற்றி பேசலாமா - நன்று

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
தம +1

வலிப்போக்கன் said...

அருமை..த.ம4

vimalanperali said...

வணக்கம் வலிப்போக்கன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்கும்,
வாக்களிப்பிற்குமாக/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்கும்,
வாக்களிப்பிற்குமாக/

vimalanperali said...

வணக்கம் பொதுவன் செங்கை சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

ஆரூர் பாஸ்கர் said...

விவரங்கள் அபாரம் , தொடர்க ...

vimalanperali said...

வணக்கம் ஆரூர் பாஸ்கர் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/