23 Jan 2016

ஓலை விசிறி,,,,,,,

இரண்டு விசிறி கொண்டு விசிறிக்கொண்டால் எப்படியிருக்கும்? நன்றாகத் தான் இருக்கும் ,ஆனால் விசுறப்படுகிற விசிறிகள் இரண்டும் ஒத்துழைக்க வேண்டுமே?ஒத்துழைப்புமிகவும்அவசியமாகபடுகிறநாட்டில்இது சாத்தியமே?

மனதுக்குள் ஒன்றை நினைத்துக்கொண்டு வெளியில் ஒன்றை பேசக்கூடாது என சண்டைக்கு வந்தவனை போல ஆகிவிடக்கூடாது.விசிறிகளின் ஒத்து ழைப்பு மட்டுமல்ல, சண்டைக்கு நிற்பவர்களின் ஒத்துழைப்புஇங்கு அவசிய மாகிப் போகிற பொழுதாகிப் போகிறது. விசிறிப்பார்க்கலாம்.

”சரி அந்த விசிறிய எடுப்பா” எனச்சொன்ன போதுகையில்விசிறிதாங்கிவந்த சின்ன மகன் அவனது மாமா கொடுத்தான் என கோடுகள் தரித்தடீ சர்ட் அணிந்திருந்தான். 

சாம்பல்பூத்திருந்தகலரில்வெள்ளைக்கொடுகள்உடம்பின்குறுக்காகவரையப் பட்டு பார்க்க நன்றாகவேஇருந்தது.மாமா ஒரு தனியார் கம்பெனியில் சூப்பர் வைசராக வேலைபார்க்கிறான். அவ்வப்பொழுது இப்படி ஏதாவது எடுத்துக் கொண்டு வந்து நிற்பான். அவன் வேலைபார்க்கிற கிராமத்திலிருந்து வாரத் திற்கு ஒரு முறை ஞாயிறன்று வருகையில் இப்படி ஏதாவது சின்ன திலிருந்து ஒன்றைகொண்டுவந்து நிற்பான்.அந்த ஊரில் பிரியாணி நன்றாக இருக்கும் என பார்சல் வாங்கி வருவான். மூன்று அல்லது நான்கு பார்சல்கள். அதில் ஒன்றுஅவனுக்கேசரியாகிப்போகும் அவ்வளவு பெருந்தீனிக்காரன். இன்னும் கல்யாணம் ஆகவில்லை.அதனால் கூட இப்படி இருக்கலாம்.

திருமணமானவுடன் அப்படியேதலை கீழாக மாறிப்போகிறவர்கள்நிறைய பேரைப் பார்த்து இருக்கிறான்.இவனும் அப்படிஒன்றாய்ஆகிப் போய்விடக் கூடாதுஎன்பது இவனது ஆசையாயும் பிராத்தனையாயும் இருக்கிறது. கிடை க்கிற ஓசி பிரியாணி பறிபோய்விடக் கூடாது என்பதற்காகஅல்ல. அவன் நிலைகொள்வதற்காயும் இப்படி யான தொரு மனோநிலை கைவரப்பெற வேண்டும் என நினைத்தான்.

எட்டாம்வகுப்புபடிக்கிறமகன் என்ன விசிறி எடுத்துக்கொடுத்து விடுவான் என்கிற மனோநிலையில்அல்லஇருந்தாலும்க வனமாகஎடுத்துக் கொண்டுவா என்கிறதாய்முடித்துக்கொள்கிறான்வார்த்தைகளை.ரொம்பவுமாய் பேச முடிய வில்லை, ஏதாவது ஒன்றுசொல்லப் போய் ஏதாவதுஒன்றி ல்வந்துநிலை கொண்டு விடுகிறதாய் மாறிப்போகிறது வார்த்தைகள். அதனால்தான் இந்தப் பதமும் நெளிவு சுழிவும்/

அவனுக்குமுழுப்பரிட்சைஆரம்பமாகப்போகிறநேரம்.அவனுக்குள்இருக்கிறவிளையாட்டுத் தனங்கள்,சுட்டிமற்றும்சேட்டைத்தனங்களை புதைக்கவிரும்பாமல் டீவி பார்க்க,விளையாட, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டிற்குப் போக என்கிற தான அவனின் வாடிக்கைகளை குறைக்கவும் வெட்டவுமாய் விரும்பியதில்லை. 

வரட்டுமே போய் விட்டும்,பார்த்து விட்டும்பேசிவிட்டுமாய் என்கிற மனோ நிலை யிலிருந்து அவன் விலகியதில்லை எப்பொழுதும்,இவனிடம் கூட உறவி னர்கள் சிலர் கேட்டார்கள். ”என்ன பையனுக்கு பரிட்சை வரபோகுது டீ,வீ  கேபிள் கட்ப்பண்ணலயா” என.

“ரொம்பவும் இறுக்கிப் பிடிச்சா படிக்க மாட்டாங்க. ரொம்ப லூஸ்லயும் விட வேணாம். ரொம்பவுமா இறுக்கிபிக்கவும் வேணாம்,நடுவாந்திரமா இருப்போம். அப்பத்தான் பையனுக்கும் படிக்க இண்ட்ரஸ்ட் வரும்”என்பான்.

காலை எழுந்த ஏழு மணியிலிருந்து பல் துளக்கி சாப்பிடப்போகிற இப்பொழுது வரை சின்சியராக மாடிப்படியில்அமர்ந்துபடித்துக்கொண்டுதான் இருந்தான். மணிபத்தாகிப் போகிற அரை மணிக்கு முன்பாகத்தான் சாப்பிட்டு எழுந்தான். அவன் எழுந்து சிறிது நேரத்தில் கரண்ட் போய் விட்டது. காலை வேளையின் மின்வெட்டைமனதில் இருத்தியும், உடலில் தாங்கியுமாய்வீட்டின் வராண்டா வில் அமர்ந்திருந்த வேளை சின்னதான வராண்டாவின் இடது பக்கமாய் இருந்த தண்ணீர் மோட்டாரும், வலது பக்கம் சிவப்பு வர்ணம் காட்டி அமர்ந் திருந்த கேஸ் சிலிண்டரும் தத்தம் இருப்புக் காட்டியவாறு/

வலதும் இடதும் எதிரெதிர் திசையில் நிற்பதும்,பயணிப்பதும் புதிதாஎன்ன? வலது கையில் பனை ஓலை விசிறி,இடது கையில் தென்னை ஓலை விசிறி இரண்டின் நிறமும் பின்னலும் வேறு வேறாய் வித்தியாசம் காட்டியும் கலர் காண்பித்துமாய்/ 

கைகளிரண்லும்வைத்திருந்தவிசிறிகளைஎடுத்துஒருசேரவிசுறுகிறான்.விசையுடன் வருகிறது காற்று,என்ன இடதிலிருந்ததை விடவலதிலிருந்துசற்று குறைச்ச லா கவும் மட்டுப்பட்டுமாய்/

இடது கையில் இருந்த தென்னை ஓலை விசிறி சற்று பரப்பு காட்டியும் அகல மாய் கை விரித்து பழுப்புக்கலர் காட்டி/ பனைஓலைவிசிறி அப்படியல்லாமல் சிறிதான பரப்புக்காட்டி வெள்ளை நிற பின்னலில் இறுக்கம் காட்டித் தெரி கிறதாய்.

பழுப்புக்கலரில் இருந்து வருகிற காற்று எதிர் முனை விசிறியிலும், வெள் ளைக் கலரில் இருந்து வந்தது அதன் எதிர் முனையிலுமாயும் அதன் உள்ளின் உள்ளிலு மாய் படர்ந்து பரவிகண்ணுக்குப் புலனாகிறது.

உடல் வேர்வை தணித்து நிற்கிறது.இத்துடன் வெளியில் வந்தவேப்பமரக் காற்றும் சேர்ந்துகொள்ளமூன்றுமாய்கைகோர்த்து ஆடியகளி நடனம்வராண் டா வின் டைல்ஸ்பதித்த தரையில் பட்டு பிரதிபலிக்கிறது.இங்கிலீஸ்க் கலர் டைல்ஸ் எனச் சொல்வதை இன்னும் விட்டபாடில்லைகொத்தனார்களும்,வீடு கட்டுப வர்களும்,  டைல்ஸ் விற்பனையாளர்களும்/

வலதிலும் இடதிலுமாய் ஒரு சேர சீராக வீசிறிய விசிறிகளை சற்றே மாற்றி ஒன்று கீழேயும், இன்னொன்று மேலேயுமாய் வருமாறு வீசிக்கொண்டால் என்ன எனத் தோணியது.கைக்கு அதுஒருபயிற்சிபோல வுமாய் இருக்கும். காற் றும்மாறுபட்டு வரும்.

இடது மேலேசெல்கையில் வலது கீழேயும்,வலது மேலே செல்கையில் இடது கீழேயுமாய் வந்து வித்தைகாட்டியும் கண்சிமிட்டி விட்டுமாய் செல்கிறது இதுஒரு சுழற்சி முறையாயும், விஞ்ஞான ரீதியான செயலாகவும் பார்த்தறி யவும்அனுபவித் தறியவுமாய் நன்றாகத்தான் இருக்கிறது.

அப்பொழுதான் குளித்து முடித்த உடலிருந்து வழிந்த வியர்வைக்கோடுகளும், பூத்து ஈரம் பாரித்திருந்த உடலின் மீதுமாய் படர்ந்து காணப்பட்ட வியர்வை யையுமாய்உறிஞ்சிகாணாமல்போக்கிவிட்ட தென்னை ஓலை விசிறியையும்,  பனை ஓலைவிசிறியையும் தனது நிறத்தையும்,பின்னலையும் முன் வைத்து அழகு காண்பித்ததாய்/

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன் தோழர்...

கரந்தை ஜெயக்குமார் said...

நானும் ரசித்தேன்நண்பரே
நன்றி
தம +1

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நல்ல ரசனை. நன்றி.

vimalanperali said...

வணக்கம் டாக்டர் ஜம்புலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/