14 Feb 2016

பிப்ரவரி 14,,,,,,

பால்யதில் எனக்கு ஒரு ஆசை இருந்தது. காதல் திருமணம்தான் செய்து கொள்ளவேண்டும் என்பதே அந்த ஆசை.

எனக்குப் பிரியமான ஒரு பெண்ணைப் பார்த்து அவளின் மனதில் காற்றாகப் புகுந்து அவளைவாழ்க்கை துணையாய் அடைந்து விட வேண்டும் என்பதே அப்போதையஎன்னின்உயரிய(?/)லட்சியமாய் இருந்தது. (ஆகா என்னே உயரிய லட்சியம்) 

டிமாண்ட் டிராப்ட்,பரிட்சை நேர் காணல்கள், சமூகத்தின் உறவுகளிடையே அவமானம்இப்படியெல்லாம் பல படிகளை கடந்து கொண்டிருக்கும் காதல் அரும்பும் வயதுடையஎந்த இளைஞனைப் பற்றியும் கவலைப் படாமல் அரசு உத்தியோகத்தில் அமர்ந்துசுமாரானசம்பளத்தில் இருந்தநான்"காதல்ஒன்றே போதுமே" என்றலைந்த காலங்களும் தூக்கம் தொலைத்த நாட்களும் நிறைய வே. எனது வயதை ஒத்த அல்லது என்னைப் போன்று அரசுவேலை பார்த்த வர்களில் பெரும் பாலோர் பணம்,பதவி,இருக்கை சுகம்,லஞ்சப் பணம்,பதவி ,பதவிஉயர்வு,ப்ளாட்,வீடு,டூவீலர் ......,,,, இத்தியாதி,இத்தியாதி என்கிற குறைந்த பட்ச (?/) கனவுகளுடன் முன்னேறிக் கொண்டிருக்க அல்லது முன்னேறிய மனிதராய் நினைத்துக் கொண்டிருக்க நான் மட்டும் காதல் வலையில் சிக்கிக் கொண்டிருந்தேன்.குறிப்பிட்டுச் சொல்லும் படியாக இந்தப் பெண்தான் என இல்லை.

என் மனதுக்குப் பிடித்த அவளும் ,அவள் மனதிற்கு பிடித்த நானும்பரஸ்பரம் கடைக் கண்பார்வைபட்டு ஐக்கியமாகி விடமாட்டோமா? என ஏங்கிய நாட்கள் பல. ஆனால் யாரும் தப்பித் தவறிகூட கண்ணில் பட்டுவிடவில்லை(நானும் யார் கண்ணிலும் படவில்லை போலும்).

அப்படிப் பட்டுவிடும் யாராவது ஒருத்தியை ஒருதலையாய் மனதார நினைத்து உருகிய தருணங்கள் நிறையவே .மீசை அரும்பும் முன் அல்ல. மீசை அரும்பி விட்ட பின்பே எனது ஆசை அரும்பியது.

வெளியூரில் வேலை பார்த்த நாட்களில் எனது ரூமிற்கு எதிர் வீட்டிலுள்ள பெண்ணை மனதினுள்ளாக வரைந்து கொண்டேன்.அவள் வாயிலில் வந்து நிற்கும் போதும், கோலமிடும் போதும் ,யாருடனாவது பேசும் போதும் அவளது உடல் மொழியும்,வாய்ப் பேச்சும் என்னை வெகுவாகவே கவர்ந்து விட்டது. இத்தனையும்அவளைநேருக்குநேராகபார்த்துபேசியஅனுபவமெல்லாம்இல்லை.  எல்லாம் தூரத்துப் பார்வைதான்.ஏக்கப் பெருமூச்சுதான்.

அந்த பார்வையும்,ஏக்கப் பெருமூச்சும் அவள் செல்லும் கல்லூரி, டைப்ரை ட்டிங்க் இன்ஸ்ட்டியூட் ,கடை வீதி,தெரு என நூல் பிடித்துச் சென்றது.

என்னைபெற்று வளர்த்த பெற்றோரின் நினைவு,ஆசைஎன் மீதான அவர்களின் நம்பிக்கை, எதிர்பார்ப்புஅவர்கள் அடுக்கி வைத்திருந்த அத்தனை யையும் பொய்யாக்கி அலைந்து கொண்டிருந்தேன் தறி கெட்டு.

என்னை சுற்றியும் உள்ள உறவு என்வீடு, என்சமூகம், எனது சகோதர, சகோதரி கள்நண்பர்கள் குட்டி முருகேசன் போன்ற தோழர்கள்(இவர்களெல்லாம்
பிற்பாடு சம்பாதித்தவர்கள்) யாவரின் நினைவும்அவர்களின் பாடுகள்,அதில் எனது பிணைவு என்கிற எந்த பிரஞையும் இல்லாமல் பிரமைதட்டிப் போய் ஒரு தலையாய் காதலை வளர்த்துக்கொண்டு திரிந்த நாட்களை இந்த நாற்பை த் தைந்து வயதில் நினைத்துப் பார்க்கிறேன்.

இந்த வயதில் இம்மாதிரியான நினைவை அசைபோடுதலே பாவம்எனத் தான் நினைக்கிறார்கள். நாற்பதை தாண்டி விட்டாலே வெள்ளெழுத்துக் கண்ணாடி போடுவதில் ஆரம்பித்து சுகர், பீ.பி ,அல்சர், நரம்புப் பிரச்சனை,என எல்லாமே உடம்பில் வந்து ஒட்டிக் கொள்கிறதுதான்.ஏதோ நாம் ஆசைப் பட்டு தேர்ந் தெடுத்து போட்டுக் கொண்ட ஆடைகள் மாதிரி.

எத்தனைதான் மருத்துவ வசதிகளும் உடல் மற்றும் மனம் பற்றிய விழிப்புணர்வு வந்துவிட்ட போதும் கூட நம்மின் பாஸ்ட் புட் கலாச்சாரமும், ஸ்லிம் கிட் மற்றும் அன்னிய நாட்டு கோலா பானங்களின் மோகமும் வீரிய விதைகளின்(?/) உணவுப் பொருட்களின் சத்தற்ற தன்மையும் நம்மை இப்படி ஆக்கி விடுகிறது.

இதில்பாழாய்ப்போனஅன்னியகலாச்சாரமோகம் வேறு.அதை மனதில் ஏற்றிக் கொண்டு அரை மனிதனாய் அலைகிற அவலமும் இதனுள் அடங்கி விடுகி றதுதானே? 

அப்படியெல்லாம் அடங்கிப் போன எல்லாவற்றின் இடையே வாழும் எனக்கு பால்யத்தில் இருந்த ஆசை இப்போதும் இருக்கிறது. ஆசையின் நிறமும் பக்கு வமும் வேண்டுமானால் மாறியிருக்கலாம்.

திருமணமாகி இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பனாகிப் போன நான் எனது மனை வியையும்,பள்ளி உயர் நிலை வகுப்புப் படிக்கும் பிள்ளைகளையும்நான் சார்ந் திருக்கும்சமூகத்தையும்,நண்பர்களையும்,தோழர்களையும்மிகவும்நேசிக்கிறேன்.

அந்தநேசமானஉறவுகாதலாய்கசிந்தோடத்தான்செய்கிறது.அந்தகசிந்தோடலே  பிப்ரவரி 14 காதலர் தினமாயும் பார்க்கப் படுகிறது.பகிர்ந்தளிக்கப் படுகிறது.என எனது காதல் மனைவியிடம் சொன்னபோது அவள் சொன்னாள். 

அந்நியப் பொருட்களின் இறக்குமதி அவற்றின் மேலான மோகம் அவற்றின் விற்பனை என்பதைத் தாண்டி உண்மையான பந்தத்தின் மீதும் ,காதல் என்கிற உணர்வின்மீதுமாய்,கல்லெறிபட்டு காயம் ஏற்படாமல்பாதுகாத்து தினங்களை கொண்டாடுவதில் காட்டும் அக்கறையைப்போலவே காதலையும் உயர்வாக கொண்டாட வேண்டும் எந்நாளும் என்றாள்.

6 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அப்படியெல்லாம் அடங்கிப் போன எல்லாவற்றின் இடையே வாழும் எனக்கு பால்யத்தில் இருந்த ஆசை இப்போதும் இருக்கிறது. ஆசையின் நிறமும் பக்கு வமும் வேண்டுமானால் மாறியிருக்கலாம்.//

இது தங்களுக்கு மட்டுமல்ல. அனைவருக்குள்ளும் என்றுமே மறக்காமல் உள்ள உள் உணர்வுகள்தான். எல்லோராலும் எல்லாவற்றையும் மனம் திறந்து சொல்லமுடிவது இல்லை என்பதே இதில் உள்ள உண்மையாகும்.

அந்தக்கால அனுபவ உணர்வுகளில் சிலவற்றை நாகரீகமாகச் சொல்லியுள்ள தங்களின் இந்தப்பதிவு எனக்கு மிகவும் பிடித்துள்ளது. பாராட்டுகள். வாழ்த்துகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
காதலையும் உயர்வாய் கொண்டாடுவோம் எந்நாளும்

திண்டுக்கல் தனபாலன் said...

"எந்நாளும்" அருமை ஐயா...

vimalanperali said...

வணக்கம் வை கோபாபல் கிருஷ்ணன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைகும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி சார் வாக்களிப்பிற்கு/