25 Mar 2016

பிரதி பிம்பம்,,,,,,,,

வீட்டிற்கு தபால்க்கொடுக்க வந்திருந்தவரைப்பார்த்து ஸ்னேகித்துச்சிரித்து அவர்கேட்டகுடிநீரைக் கொடுத்த போது அவர் சொல்லிப்போனநன்றிஇன்னும் மனம் இனித்துக்கிடக்கும் ஒன்றாக.

அவர் சொல்லிபோய் வாரம் ஒன்றை தாண்டியிருக்கும்.

ஒரு விடுமுறை நாளின் வெயில்ப்பொழுதில்தான் வந்தார், அவர்வரும் பொழுது மதியம் ஒரு மணி இருக்கலாம்,இன்னும் சாப்பிட்டிருக்க மாட்டார் போல் தோணியது,அவர் வைத்திருந்த சைக்கிள் போலவே அவரும் நைந்து போய் காணப்பட்டார்,

தலை கலைந்து களைத்துப் போய் வாடி நின்று அவரும்டல்லாகி பார்ப்பவரை யும் டல்லாக்கி,,,,என்கிற ஏற்பாட்டிற்குள்ளெல்லாம் இல்லாமல் கொஞ்சமாய் களைத்துக்காணப்பட்டார்,

அன்றைக்குஇவனுக்கு லீவு என்பதால் வீட்டில்தான்இருந்தான்.அப்பொழுதான் பஜார்வரைப்போய் வந்திருந்தான் காய்கறி வாங்கி வர/

காய்கறி வாங்க வேண் டிய தேவை என ஏதும் இல்லாத நாட்களில் கூட ஏதாவது ஒரு சாக்கு வைத்து போய்விடுவான் பஜார்ப்பக்கமாய்.

மனைவிகூடவைவாள்ஏன் இப்பிடி கால்ல சக்கரத்தக் கட்டிக்கிட்டு ஓடிக்கிட்டு திரியிறீங்க,அங்க போய் வர்ற நேரத்துல வீட்ல ஏதாவது உதவியா இருக்க லாம்ல என/அவள் என்னதான் பொரிந்த போதும் கூட வீட்டில் பெயரு க்கு இரண்டு வேலைகளை அரைகுறையாக வேணும் செய்து முடித்து விட்டு கிளம்பி விடுவான்.

நீண்டநாட்களாய்இவனுக்குள்இருக்கிறஆசைசைக்கிளோட்டிக்கொண்டுபஜாரு க்கு போகவேண்டும்என்பதே.

நினைத்துநீண்டநாட்கள் ஆனபோதிலும் கூட ஆசை இன்னும் நிறைவேறாம லேயே. இன்றும் அப்படியாய் மனதில் குடிகொண்ட ஆசை நிறைவேறாமல் போய் விட்டது,

மனதினுள்ளாக உருவகிக்கிற ஆசையை செயலில் உருவெடுக்க வைக்கை யில் கொஞ்சும் பின்னடைவு அல்லது சுணக் கம் ஏற்பட்டுப் போகிறதுதான்.

சில சமயங்களில், சில சமயங்களில் கூட இல்லை பல சமயங்களில் அந்த வேலை நடக்காமல் விட்டுப்போனதுண்டு. அப்படித்தான் இன்றும் விடுபட்டுப் போனது.

அப்பொழுதான்வந்துஇறங்கியிருந்தான்,பஜாரிலிருந்து வரும்வழியில் எங்கும் செல்லமுடியாத பாத்ரூம் வேலையைமுடித்து விட்டு மனைவியிடம் ஒரு டீயைப்போடச் சொல்லி விட்டு வாங்கிவந்த காய்கறிகளை பையிலி ருந்து எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தான்,

பரவாயில்லைபைகொஞ்சம்தாங்குகிறதுபை.போன தடவை காய்கறி வாங் கியி ருந்தான்,இது போல்தான் காய்கறி வாங்கப்போன ஒரு நாளன்றின் மாலை வேளையில் இவனது தோள்பை காய்கறிகளை உள்ளடக்கிவைத்துக் கொள்ள போதுமானதாய் இல்லை.

இத்தனைக்கும்மனைவி போன் பண்ணும் பொழுது தக்காளியும் தேங்காய்கள் இரண்டும்மட்டும்போதும் என்றிருந்தாள்.இவனுக்குத்தான்காய்கறிகடைக்கு ப் போனதும்கூடஇரண்டு காய்கறி களை சேர்த்து வாங்கும் ஆசை வந்துவிட்டது, எப்பொழுதும்வாங்குகிறதக்காளி, முட்டைக்கோஸ் உருளைக் கிழங்கு,,, இன் னும்இன்னுமானசிலகாய் கறிதவிர்த்துவாழைப்பூவும்,முள்ளங்கியும் சேனைக் கிழங்கும் அப்பொழுதான்பிடுங்கிவந்தது போல புதிதாக இருந்தது, தக்காளி யைப் பார்த்த கண்களில் மேற்பட்ட காய்களின் குளிர்ச்சி தட்டுப்பட்டு விட வாங்கிப் போட்டுக் கொண்டான்,

காய்வாங்க பணம்இருந்தது மனமும் இருந்தது, ஆனால் வாங்கிய காய்கறி களைக்கொண்டுபோகபைதான் இல்லை என யோசித்த போது வாங்கியதுதான் இது,

இருபதுரூபாய் என்றார்கள்.என்ன யூரியா சாக்குல தைத்ததா என கடைக்கார ரிடம்கேட்ட பொழுது அவர் இல்லை,இது ஒரு தார்ப்பாலின் மெட்டீரியல் போ ன்ற ஒன்றில் தைத்தது என்றார்,

நல்ல கனமாக இருந்தது, வாங்கிஅந்தஅன்று மனைவிஆச்சரியப்பட்டாள், பரவாயில்லையே ,இந்த வெலையில இப்பிடி ஒண்ணு கெடைக்குதுன்னா ஆச்சரியம்தான் என/

பையிலிருந்து காய்கறிகளை எடுத்து வெளியில் வைத்துக்கொண்டிருக்கை யில்தான் வந்து விட்டார் தாபால்க்காரர்,

ஊரெல்லாம் லீவாய் இருக்கையில் அவர்களுக்கு வேலைநாளாய் இருக்கும், அவர்களுக்குலீவாய்இருக்கையில் ஊரெல்லாம் வேலை நாளாய் இருக்கும்.

சார் வாங்க நல்லா இருக்கீங்களா என்பதேஇவன் கேட்கிற முதல்கேள்வியாய் இருக்கும்யாரைசந்தித்தபோதும்/அப்படித்தான்தபால்க்காரரைப்பார்த்ததுமாய்க் கேட்டான்,அவரும்நன்றாகஇருக்கிறேன்எனச்சொல்லிவிட்டுகுடிக்க தண்ணீர்  கிடைக்குமா எனக்கேட்டு வாங்கிக்கொண்டார்,

மணிஒன்னாகப்போகுது இனிதான் போயி சாப்பாடு, போறதுக்குள்ள இதோ ஒரு நாலஞ்சி தபால் இருக்கு ,நாலஞ்சும் நாலஞ்சி தெருவுல இருக்கு ,சைக் கிளில்ல வெக்கு வெக்குன்னு மிதிச்சிப்போயி குடுத்துட்டு போயி சாப்புடு றதுக்குள்ள பாதி பசியடங்கீரும், என்ன செய்ய அப்படியே சாப்புட்டுட்டு கெளம்பி மதிய டெலிவரிக்கி கெளம்பீருவோம்/இப்பிடித்தான் இருக்குஎங்க பொழப்பு.எனசலித்துக்கொண்டவரின்பேச்சுக்குப்பின்னால் இருக்கிற உண்மை இவனைப்போன்ற கடை நிலை ஊழியர்களுக்கு தெளிவாக புடி படுவதாக/

வந்திருந்ததபால்இண்லட்லெட்டராகஇருந்தது,அதுஎங்கிருந்துவந்திருக்கிறது, என்னசெய்தியை உள்ளடக்கி இருக்கிறது எனத்தெரிய வில்லை, இப்போதைக் குள்ளாகஇவனுக்கு இம்மாதிரியாய் எதும் தபால் வந்ததாய் ஞாபகம் இல்லை.

போன வாரம் கூட இவனுக்கு ஒரு தபால்வந்திருந்தது. அதுவும் கூட முழு கவரில் தான் வந்தது,அதுவும் கொரியரில்.

இது போலான இண்லண்ட் லெட்டரில்கடிதம் எழுதி பலகாலம் ஆகிவிட்டது. இவனுக்கும் இப்போதைக்கு இது மாதிரியாய் எதுவும் வந்ததில்லை, முன்பெ ல்லாம் கையில் எப்பொழுதும் பத்துக்கும் குறையாமல் இண்லண்ட் லெட்டர் வைத்திருப்பான், நினைத்த நேரங்களில் இவன் நினைக்கும் நபருக்கு கடிதம் எழுதி அனுப்பி விடுவான்.ஒன்றும் விஷயமிருக்காது பெரிதாக ,என்ன ஏது எப்படியிருக்கிறீர்கள், நலமா வீட்டில் அனைவரும் எனக்கேட்டு எழுதி அனுப் புகிற கடிதமாய்த்தான் இருக்கும் பெரும்பாலுமாய்/

இனிப்பையும்கசப்பையும் சிரிப்பையும் வருத்தத்தையும் சேர்த்துக்கட்டி அனுப் பிய கடிதங்கள் இவனில் சில சமயங்ளில் சந்தோஷங்களையும் சில சமயங் களில்வருத்ததையுமாய் உண்டு பண்ணியிருக்கிறது.

அம்மாதிரியானவருத்தங்களையும்சந்தோஷங்களையும்இவன்கடிதம்அனுப்பி யவர்களுக்கு, ஒரு சேரவும் காலதாமதமாகவும் பகிர்ந்து கொண்டதுண்டு,

இவனில்அந்தப்பழக்கம் எப்பொழுது குடி கொண்டது அல்லது எப்பொழுது கை வரப்பெற்றதுஎன்பதுசரியாகஞாபகம்இல்லாவிட்டாலும்கூட அரிச்சலாகவும் கொஞ்சமாகவேனும் ஞாபகம் உள்ளது.

இவன்தற்காலிஊழியனாக வேலைபார்க்கிற சமயங்களில் சங்க அலுவலகத் தில்இருந்தஅந்த தலைவரைப்பார்த்து ஏற்பட்ட பாதிப்பு காரணமாக வந்த பழக் கம் எனகூடச்சொல்லலாம்.

அவர் அப்படித்தான் ஒரு நாளின் பாதியில் ஏதாவது எழுதிக்கொண்டே இருப் பார் விடாமல்/

யாருக்குஎன்னஎழுதுவார்அப்படிஎனஎண்ணத்தோன்றினாலும்கூடஅவர்கடிதம் எழுதும்முறைஅதைகவரில் போட்டு அனுப்பி வைக்கும் அழகு என இவனை மிகவும் கவர்ந்ததுண்டு,

பெரும்பாலுமாய் வெள்ளைப் பேப்பரில்தான் எழுதுவார்,எழுதிய கடிதத்தை மடித்து கவருக்குள் வைத்து விட்டு அதை ஒட்டி அட்ரஸ் எழுதிவிட்டு அட்ர ஸிற்கு ப்பக்கத்தில் டிசைன் போடுவார், அல்லது ஏதாவது ஒரு சின்ன தான ஸ்டிக்கர் ஒன்று ஒட்டி அனுப்புவார்,

அதில் பெரும்பாலுமாய் பூ அல்லது பறவை,மீன்,ஏரோப்ளான் என இன்னும் இன்னுமான நிறைந்து போன படங்கள் காணப்படும்.அப்படியாய் அவர் அனுப் பும்ரசனைமிகுந்த கடிதங்களை இவன்தான்கொண்டு போய் போஸ்ட் பண்ணி விட்டு வருவான்.

போஸ்ட் ஆபீஸில் இவனுக்குத்தெரிந்தவர் ஒருவர் இருந்தார். அவர் பெட்டி திறந்து கடிதம் எடுத்து முடித்து விட்ட போதும் கூட இவன் தபால் கொண்டு வருவதற்காய் காத்திருப்பார்.

இவன்வந்ததும்தான்தபால்களைபைக்குள்ளாகப்போட்டுக்கட்டுவார்,தபால்கள் போடப்பட்ட பையை இழுத்துக் கட்டி அரக்கு சீல் வைத்து தள்ளு வண்டியில் வைத்து ரயில்வே ஸ்டேசன் வர அவர் கொண்டு போகிற அழகே தனி/

அந்த அழகும் ரசனையும்தான் இவன் கடிதங்கள் கொண்டு வரும்வரை அவ ரை காத்திருக்க வைத்திருக்கிற ரகசியம் என பின்னாளில் ஒரு பொழுதில் அவரிடம் பேசிய பொழுது தெரிந்து கொண்டான்,

பெரிசா ஒண்ணுமில்ல சார்,ரோட்டுல போகும் போது நல்ல பாட்டு கேட்டா தலையசைக்கிறமில்லையா,அதுதான் இங்கயும் சாத்தியமாயி இருக்கு,நீங்க கொண்டு வர்ற கடிதங்க எப்பிடியும் ஒரு நாளைக்கு பத்தாவது இருக்கும்,அந்த பத்துலயும் தெரியிற பத்து மாதிரியான அழகு என்னைய ரொம்பவே கவர்ந்து ருக்கு,அதுனாலதான் நீங்க வர்ற வரை காத்திருந்திருக்குறேன், பலநாட்கள்ல எங்கமேல்அதிகாரிகிட்டதிட்டுவாங்குனப்பக் கூட என்பார்,

வாஸ்தவம்தான் முகம் தெரியாத சரியாக பழகாத ஒரு மனிதரின் மேல் ஈர்ப்பு ஏற்பட வைக்க அவரது செயல்பாடுகளே காரணமாகி போகிறது எனலாம்,

இவனும் கூட அது போல் முயன்றிருக்கிறான் கடிதம் எழுத ஆனால் வந்ததி ல்லை,என்ன இருந்தாலும் அசல் அசல்தான் நகல் நகல்தான் என்பார் இவனு டன் வேலை பார்த்த ரமேஷ் கண்ணன்.

இவனதுவேலை,சம்பளம்,ஹோட்டல்சாப்பாடு ரூம் என இருந்த நாட்களில் ரமேஷ் கண்ணன் இவனைஒரு நாள் இரவில் ஒரு திருமண வீட்டிற்கு டெகரெஷன் பண்ணக் கூப்பிட்டுப்போயிருந்தார்,

மறுநாள் கல்யாணம்முதல்நாள் இரவு மண்டபத்தை அலங்கரிக்க வேண்டும், இரவு டிபன் முடித்தப் பிறகு எல்லோரும் தூங்கிப் போன இரவில் ரமேஷ் கண்ணன் சேர் போட்டு முன்னால் அமர்ந்து கொள்ள இவன் ஒருவனாக டெகரேஷனை செய்து முடித்தான்.டெகரேஷன் பண்ணிக் கொண்டிருக்கும் போது திருமண மேடையில் டாப்பில் தொங்கிய வயரில் கைபட்டு விட கரண்ட் அடித்து விட்டது,

நல்லவேளையாக பெரிதாக ஒன்றும் இல்லை பாதிப்பு.இதைமறு நாள் ரமேஷ் கண்னனிடம் சொன்ன போது ஏன் அப்பொழுதே சொல்லவில்லை என கோபி த்தார், நீங்கள் தூங்கிப்போன பின் எப்படி வந்து சொல்வது என விட்டு விட்டேன் என்றான்.

ரமேஷ்க்கண்ணன் மறு நாள் திருமண வீட்டாரிடம் விஷயத்தைச்சொலவும் பயந்து போனார்கள் அவர்கள்.நல்ல வேளையாக ஏதும் ஆகவில்லை அந் நேரம் இல்லையெனில்,,,,நினைத்துப்பார்க்கவே முடியவில்லை என திருமண வீட்டார்கள் ரமேஷ் கண்ணனிடம் உங்களிடம் சொன்னது போல வேறு யாரிடமும்இப்படிசொல்ல வேண்டாம்எனசொல்லுங்கள் எனச்சொல்லி விட்டு ரமேஷ்கண்ணன்கையில்ஐநூறுரூபாயைக்கொடுத்துஅனுப்பியிருக்கிறார்கள்,

இது அந்தப் பையன் நேற்று இரவு முழுவதும் கண்விழித்து வேலை செய்தற் கான சம்பளம் மட்டுமில்லை.கரண்ட் ஷாக் அடித்த அந்நேரம் ஏதும் களேபரம் பண்ணாமல் இருந்ததற்காக எனச்சொல்லியிருக்கிறார்கள்.ரமேஷ்க்கண்ணன் வந்து அதை அப்படியே சொல்லிவிட்டார் இவனிடம்,

அப்பொழுதான் ஏதோ புடிபட்டது போல் இருந்தது,அந்த புடிபடல் பல நேரங்க ளில் பல உருக்களில் இவன் முன்னாய் காட்சிப்பட்டு நிற்பதுண்டு.

அப்படியான விஷயங்களெல்லாம் இவன் எழுதும் கடிதங்களில்பட்டுபிரதிபலி ப்பதுண்டுதான் சமயங்களில்/

இவன்எழுதுவதுஎல்லாம்பெரும்பாலுமாய் இன்லண்ட் லெட்டரில்தான். அதை வாங்க ஹெட் போஸ்ட் ஆபீஸ் போக வேண்டும்.

இவன்வேலைபார்க்கும்ஆபீஸிற்கு பக்கமாய் இருப்பது ஆர் எம் எஸ் போஸ்ட் ஆபீஸ்தான்.இவனுக்கு அதுதான் பக்கம் என்பதை விட அங்கு போவதே சௌ கரியமாய்இருந்தது,

மாலைஅலுவலகம்முடிகிறஐந்துமணிபொழுதிற்குஅல்லதுஅலுவலகஇடை
வேளையின் போது போய் வந்து விடுவான்.

அங்குதான் சீனி பெரியப்பா வேலை பார்க்கிறார்,அவரை இவனுக்கு சொந்தம் என ஆரம்பத்தில் தெரியாது.அவரது ஊர்எனத்தெரியும்.ஆனால் யார் என்ன எனத்தெரியாது. அவர்தான் சொன்னார். நான் இன்னார் என/

அதற்கப்புறம் போஸ்ட் ஆபீஸ் போகும் ஒவ்வொரு முறையுமாய் அவர் தட்டுப்படுகிறாரா எனபார்க்க ஆரம்பித்து விடுவான்,அந்த ஆபீஸில் அவரும் ஒரு போஸ்ட் மாஸ்டர் அம்மாவும் மட்டும்தான் இருந்தார்கள்.

அவர்தான் ஒருமுறை கேட்டார், எப்படியும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்றுமுறையாவது பத்துப்பத்து இன்லண்ட் லெட்டர் வாங்கி விடுகிறீர்களே, என்ன அவ்வளவு பேருக்கா கடிதம் எழுதுகிறீர்கள் என,ஆமாம் எழுதுவேன் எதையாவதை படித்ததை ,கேள்விப் பட்டதை,பார்த்ததை,,,,என இன்னும் இன்னுமான பலவற்றைபற்றி எழுதுவேன் என்பான்.

கடிதம் வாங்க வந்து அவரிடம் பேசிக்கொண்டிருந்த ஒரு நாளில் வெளியில் இருந்து ஆபீஸிற்குள் நுழைந்த சீனிப்பெரியப்பா வேலைமுடிஞ்சி போகும் போது சொல்லு, நானும் கூட வர்றேன் என்றார்,என்ன விசேஷமா எனக் கேட்டபோது விஷேசம்ன்னு என பெரிசா ஒன்னும் இல்லை,சும்மா ஓங் கூட வந்து டீ சாப்புட்டு வரலாம்ன்னு இருக்கேன் என்றார்,

டீ சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதுதான்சொன்னார்,டேய் தம்பி அந்தம்மா வுக்குஒருபொண்ணு இருக்கு பத்தாவது படிச்சிக்கிட்டு இருக்கு,ஒனக்கு வேணு ம்ண்ணா கேப்பமா, ஒனக்கு என்ன 25 வயசுதான ஆகுது ,அந்தப்பொண்ணுக்கு பதினைஞ்சி வயசு, பத்து வயசு இடைவெளி ஒண்ணும் பெரிய வித்தியாசம் இல்ல.நல்ல அழகா இருப்பா ஓன் ஒசரத்துக்கும்,ஓன் கலருக்கும் ஈக்கோலா, வீட்ல கேட்டுச்சொல்லு, பேசுவம் வேணும்ண்ணா என்றார்,

இதை ரமேஷ் கண்ணனிடம் சொன்ன போது நீ வேற சும்மா கெட,பொண்ணு நல்ல பொண்ணுதான்ங்குறதுல எந்த மாத்தமும்இருக்க முடியாது,ஆனா பத்து வயசு வித்தியாசத்துலயா ஒரு பொண்ண போயா கல்யாணம் பண்ணுவாங்க என்றார்,

இவனுக்கும் அது சரிதான் எனப் பட்டது.அந்தசரிப்படல் இந்த52வயதிலும் பலவிஷயங்களிலும்இவனைசரியாகவே இயக்கிக்கொண்டிருக்கிறது.

போஸ்ட்மேனிடமிருந்துகடிதத்தைவாங்கிக்கொண்டு வரும்போது செங்காவி பூசிய வாசலின் படிகள் மூன்றும் இவன் பாதம் படக் காத்திருந்ததாய்,

வேல்க்கொத்தனார்தான்சொன்னார்வீடுக்கட்டிக்கொண்டிருக்கும்போது, அதெ ல்லாம் ஒன்னுமில்லை சார்,படிக்கட்டு அழகா இருக்கணுமுன்ன மார்பிள் கல்லு தான் பதிக்கணுமின்னு யாருசொன்னது/தேவையிலை சார், பேசாம சிமிண்ட வச்சி பூசி மேல செகப்புக்காவிய வாங்கி தேச்சமுண்ணு வைங்க சும்மாபளபளண்ணுபளிங்குக்கல்லுகணக்க ஆகிப்போகும் படிக்கட்டு, அப்புறம் பாருங்க வீட்டுக்கு வந்து போற எல்லாரும் கேப்பாங்க நீங்க பதிச்சிருக்குறது பளிங்குக்கல்லான்னு,,,என்றார்/

அவர் சொன்ன படியே வீடு கட்டி முடிக்கும் போது பலபேர் கேட்டார்கள் ஆனால் வேலைதான் கொஞ்சம் இழுத்து விட்டது,வேல்க்கொத்தனார் அப்படி ஒன்றும் காசுக்கு ஆசைப்பட்டு வேலையை இழுப்பவரல்ல,ஆள் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி வேலையில் அதே வேகம் அதே தெளிவு,பின் ஏன் படி வேலை மட்டுமாய்இப்படிஇழுத்து விட்டது எனக்கேட்டதற்குச்சொன்னார்,

இந்தவேலை இழுக்கத்தான் செய்யும் சார்,ஏன்னா படிக்கட்ட கட்டி முடிச் சிட்டு விட்டு வந்துட்டா பரவாயில்ல,

மேல காவி பவுடற போட்டு கரண்டியால நல்லா தேய்க்கணும் சார். அப்பத் தான் பளபளப்புக் கெடைக்கும் சார்,இல்லைன்னாஒருமாதிரி மக்கடிச்ச மாதிரி மூடிப்போயிஇருக்கும்,எவ்வளவுக்கெவ்வளவுதேய்க்கிறோமோ அவ்வளவுக்க வளவு நல்லது செட்டாயிருக்கும் பளப்பும் கூடித்தெரியும்என தாமத்திற்கான காரணத்தைச்சொன்னார்.அந்தக்காரணம்இப்பொழுது மனம் குடிகொண்டிருக்க படி ஏறி வந்தவனின் பிரதிபிம்பம் படிக்கட்டுகளில் பிரதிபலித்ததாய்/

4 comments:

துரை செல்வராஜூ said...

பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருப்பதாக இருக்கின்றது..

வாழ்க நலம்..

vimalanperali said...

வணக்கம் துரை செல்வராஜீ சார்,
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/

கரந்தை ஜெயக்குமார் said...

வலையில் தங்களின் பதிவு கண்டு நாட்கள் பல கடந்து சென்றுவிட்டன நண்பரே
தொடர்ந்து எழுதுங்கள்
நன்றி

vimalanperali said...

வணக்கம்கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
எழுதுகிறேன் கண்டிப்பாக/