22 Apr 2016

சொல் நதிகள்,,,,

இச்சி மரம் சொன்ன கதை  (நூல் விமர்சனம்)
             
சொற்கள் கசிந்துருகி பிரவாகமெடுத்தோடும் நதியின் போக்கில் உருண்டோடு ம் கூழாங்கற்கலாய் உரைநடைகள் வாழ்வின்சுழற்சியில் திசைகள் தோறும்/

அலைவுரும்அனுபவத்தின்அத்தனையையும்அள்ளியெடுத்துபின்னிமுடிக்கப் பட்டகருங்குழலைப்போல்மொழிகளின்மயிரிலைகள்,காற்றில்மிதந்தபடியிரு க்க,கற்பனாபுரவியிலேறி,புழுதிபறக்கவார்த்தைக்கூட்டங்களை,மனித பாஷை களை, குலக்குறிகளை, மொழியாளுகையால் வசிகரமாய், பதிவுருத்தி சென்ற தின் நீட்சி,,,,புராணமாய்,இதிகாசமாய், காவியமாய், இலக்கியமாய்,கலையா ய், நம் முன், விரிந்து பரந்து கிடக்கிறது.

அதுகாற்றின்திசையில்சென்றுவார்த்தை ஜாலங்களில், மொழியாளுகையில் இலக்கிய பிரதிகளில் எழுதிக் கொண்டேயிருக்க,இதோ விமலன் என்ற மூர்த்தி (எளிய உரை நடைக்காரர்) அவரும் வாழ்வியல் கோட்பாடுகளை அதன் தீர்க்கதரிசனங்களை, தர்க்கங்களை, பரஸ்பர மனித உறவுகளை, மனங் களின் உள்ளிருந்தும், வெளியிலிருந்தும், அருகாமையிலும், தொலை தூரமா யும், கேட்ட, பார்த்த, நுகர்ந்த நொடிகளையும், உபாதைகளையும், நுட்பமாய் உணர்ந்து கடக்கும் உத்தி கதைகளில் உறைந்திருக்க வைத்திருக்கிறார்/

‘’சொல்லூக்கி’ (முதல் கதை,,,,,,,)

மரணச் செய்தியை வழக்கமாக்கியபடி எழுபது வயது தோழனோடு கடந்தி ருந்த நாட்கள், அவரின் மரண படுக்கையில் கசிந்திருந்த கடந்த காலங்கள் படிமமாய்வழிந்தோடி கால்தழுவிடதொழிற்சங்கதோழனாய் அதன்இயக்க பணிகளில்இயங்கியபசுமையானநாட்களை வால்போஸ்டரிலும், பசையிலும், நகரின் மையத்தில் கம்பீரமாய் வீற்றிருக்கும் தேரடி உணவு விடுதியில் ருசித்துச் சாப்பிட்ட பூரியிலும் டீயிலுமாய் வைத்து விட்டுபேசி விவாதித்த மார்க்ஸியசத்தையும், சோசலிஸத்தையும் மரண ச் செய்தியின் வழியாக பயணிக்க வைத்திருக்கிறார்/

பாதம்தழுவும்கூந்தல்பாய்விரிக்கும்கூந்தல்,காற்றில்சுழன்றுசுருளும் சுருண்ட கார்குழல்பின்னிருமுகங்களில்தம்பூராமீட்டும்கூந்தல்முனைஆரத் தழுவிடும் போதுஆடவனைமூடிமறைக்கும்கூந்தல்,நல்லபாம்பும் சாரையுமா ய் பிணைந் திருக்கும் கூந்தலுக்குள்சடையாகமறைத்திருக்கும் வசீகரமான கூந்தல்கள். இவைகளில்ஒன்றைகொண்டஇளம்பெண்ஒருத்தி பேராலி கண்மாய் மடை குழியில் அகப்பட்டு புதிய நீரில் மூழ்கடிக்க பட்டுஅமிழும்போதுகூந்தல்அழகு மட்டுமல்ல, ஆபத்தும் தான் என்பதை ‘’இச்சி மரம் சொன்ன கதை’’யில் சொல்கிறார்.இது யாரும் சொல்லாத கதைதான்.

அந்த கதையை படித்த கனம் முதல் பெண்களின் கூந்தலை பார்க்கும் போதெல்லாம் மடைக்குழி விழுங்கிய அப்பெண்ணின் வாதை அவளின் மரண குரல் செவிகளில் ஒலித்தப்படி இருக்கிறது.

நீர்தேங்கும் இடமெங்கும் இன்னும் குமிழிட்டப்படி உடையும் நீர் குமிழ் களில் கூந்தலின் மயிரிலைகள்,மிதந்துச் செல்வதும் பேராலி கண்மாயில் மட்டு மல்ல நீர் தேங்கும் இடமெங்கும் கருத்து விரிகிறது.

கூந்தல் நறுக்கி புருவம் திருத்தி புஜத்தில் புரளும் அரைகுறையாக கூந்தல் வளர்க்கும் நாகரீக பெண்கள் முன் ஜாக்கிரதையாய் தெரிந்தா லும், இன்று கிராமங்களின் கண்மாய் நிரம்பி வழிகிறதா? நீர் சுழன்று ஓடுகிறதா? மடைக் குழிகள் நீண்ட கூந்தலுக்காக வாய் பிளந்துள்ளதா? என்ற கேள்விகள் தொக்கியபடி இருக்கிறது.

இன்றைய இளம் பெண்கள் நீண்டு விரிந்த கூந்தலோடு, நீர் பரப்பில் தக்கை யைப் போல் மிதந்துச் செல்ல இருக்கிறார்களா? நவீன குளியலறையில்மலர் மேனியில் பூத் தூறலில் உடல் நனைப்பதும், பிளாஸ்டிக் வாளியில் தண்ணீர் கோதிஉடலபிஷேகித்துக்கொள்வதுமாய்இந்நொடிகள் கடந்திருக்க, இச்சிமரம் சொன்ன கதை யாரும் சொல்லாத கதையாக வரலாற்றின் விடுப்பட்ட பக்கங்களில் பதிவுருத்தபடவேண்டியவை.

வாங்கிய கடனை திருப்பி தரும் நல்லொழுக்கம் எத்தனை பேருக்கு இருக்கும். ஆயிரமாயிரம்கோடிகளைவங்கிகளில்பெற்றுஅதைபன்னாடுகளில் பதுக்கி விட்டு தப்பி ஓடிடும் பெருந்தனக்காரர்கள், ஒரு புறம், சில லகரத்தில் கலப்புஏர் விசை வாகனம் வாங்க வங்கியில் கடனாக பெற்ற விவசாயியை, அங்கீகாரம் பெற்ற ரவுடிகள், மூலம் அப்பாவி விவசா யியை அடித்துஉதைத்து பறி முதல் செய்வதும் மறு புறம்.நம் நாட்டில் புரை யோடிப் போன கலாச்சாரம்.

ஆயிரமாயிரம் பெண்களின் கிளர்ச்சியறிந்து பொன் வைக்குமிடத்தில் பூவைப்பதாய் பட்டு புடவைகள் வாங்க இயாலாமல், பூ போட்ட சேலை கள் தன் மனைவிக்கும், மகளுக்குமாய், கடனாக பெற்று தரும் குடும்ப தலைவனின்பொறுப்பு.அதை கடனாக தருகின்ற ஜவுளிக் கடை உரிமை யாளர். அந்த கடனை கன்னியமாய் அடைக்கும் மாத சம்பளகாரர். என எல்லோரும் தத்தமது இடத்திலிருந்து விலகாமல் நேர்மையாக செய லாற்றுவதும், மகள் கல்லூரியில் உடன் படிக்கும் மாணவன் ராக்கிங் செய்தபோது அவனை எதிர் கொள்ளும் தன் மகளை பாரட்டும் தந்தை அதை தட்டிக் கேட்கும் அம்மா என குடும்ப உறவின் முடிச்சுகள் மிக சாதுரியமாக அவிழ்த்தப்படி செல்கிறார் சிறு கதை ஆசிரியர்.

ஆனால் காலந்தோறும் நிகழும் சம்பவங்களை ஒரு சிமிழுக்குள் அடக்கும்  ஒரு நாள் ஒரு பொழுது தலைப்பு பொறுத்தமற்றதாய் படுகிறது.

மனுதர்மத்தின்கொடூரகரங்கள்மனித உடல்களை தழுவி நிற்கிற போது அதே உடல்கள் பூத உடல்களாக உருமாறும் போது விலங்குகளின் வகைகளில் ஒன்றாகதான் மடிந்த மனிதயினத்தை பார்க்கிறது. தீண்டாமை என்பது இழி நிலையினர்களுக்கு மட்டுமல்ல. பார்ப்பண பிணத்தி ற்கும்உண்டு என .மனுவின் தர்ம சாலையில் வகுக்கபட்ட கோட்பாடு.

கஸ்தூரி ருதுவாகி தீட்டாக வீட்டில் இருக்கும்போது அவளின் தந்தை சுப்புராம் பிணமாக தூக்கி வரப்படும் துயரம் சொல்லி மாளாத துயரம்.

சுப்புராம் வாழ்வு முடிந்த தீட்டு, கஸ்தூரி பருவ மாற்றத்தால் உருவான தீட்டு என மனு வகுத்த கொள்கை இந்த எளிய மக்களுக்கு எப்படி கற்றுத் தந்தி ருக்கிறது.

தன் கையடக்கத்தில் அன்பு மகளை வாஞ்சையோடு உச்சி முகர்ந்து கை பிடித்து இந்த உலக சூட்சுமத்தை கற்றுத்தந்த முதல் ஆசிரியன் தந்தை.அவன் மடிந்தப்போது அவனருகில் ஆசுவாசமாய் அமர்ந்து ஒரு துளி கண்ணீரோ, மனதில் தேங்கி நிற்கும் அழுகையையோ வெளிப் படுத்தவிடாமல்தடுக்கும் சமூகம். அதற்கு அவர்கள் சொல்லும்காரணம் சமஞ்சவபிணத்துக்குபக்கத்தில் இருக்க கூடாதுதென்று. இந்த உலகுக்கு முதன் முறையாக அறிமுக படுத்தி யவன், தன் ரத்தத்தில் பாதியை தாரை வார்த்து வளர்த்த தந்தை அருகில் இருந்தால் நோய் வாய் படும் என எந்த அறிவியலும் சொல்ல வில்லை. இது மநுவின் கொள்கை அது காலந்தோறும் மனித மணங்களில் பரவி வளர்ந்த புற்று நோய்.

சாஸ்திரமும், சம்பிரதாயமும், புரையோடிப்போன சமூக வலையில் சிறு பூச்சி களாய் சிக்குண்டு தப்பி பிழைக்க வழியின்றி அல்லாடும் மனி த மனங்கள் இருக்கும்இதேவேளையில் சாதி,மதம்,கடந்து வெற்று முகத் தாட்சணைக்காக மட்டும் சுப்புராம் என்ற பிணத்தை அண்டை வீட்டில் வைத்து சாஸ்திரம், சம்பிரதாயத்தின்படியும் அவர்கள் குல வழக்கப்படி யும் அனைத்து விதமான காரியங்களையும்செய்திடஅனுமதிக்கும்அண்டை வீட்டாரின்மனித நேயம் இதே சமூகத்தில்இருப்பதைஉணர முடிகிறது.

ஆண்டாண்டு காலமாய்ஒரே ஊரில், ஒரே தெருவில் ரத்தமும், சதையுமாக உறவாடி மறைந்த ஒரு மனிதனை அதே ஊரில், அதே தெருவில் பிணமாக தூக்கி செல்கிறபோது, ஒவ்வொருவர், வீட்டின் வாசல்களில் ஒரு குவளை தண்ணீர் தெளித்து தீட்டை விலக்குவதாக நம்பும் இக் காலத்தில் அண்டை வீட்டில்சுப்புராமை பிணமாக கருதாமல் நம்மோடு ஒட்டி உறவாடி சென்ற ஒரு உயிர் அது. என்பதை மட்டும் மனதிலேந் திடும். பரந்தமனமுள்ள, ஈரம் இன்றும்காயாததை கரிசத்தரையில் உணர முடிகி றது.

புவிக்கோலம் சதா கொதி, கொதித்து வெடித்து சிதறி மூன்று பகுதிகள் நீராக வும், ஒரு பகுதி நிலமாகவும் உருமாறி இயக்கமானது. நிலத்தின் பெரும் பகுதி நீராக இருந்தும் அது மனிதர்களின் தாகம் தீர்ப்பதில்லை. இது இயற்கை யின் விதி.

வெயில் மட்டுமே கரை புரண்டோடும் விருதுநகர் அதன் சுற்றுப்புறம், வெப்ப தணலில் உருகி ஓடிக்கொண்டேயிருக்கும். அதனாலதான் இந் நகருக்கு வெயில் கந்தம்மன் பட்டிணம் என்ற பெயரும் உண்டு. பெயருக் கேற்றப்படி வெயில் உறைந்த ஊரில் ஒரு சொட்டு நீர் பார்ப்பது சிரம மானது.

இந்த நகருக்கு யாரும் துணிந்து பெண் கொடுக்க மாட்டார்கள். ஆனால் பெண் எடுப்பார்கள். ஏனென்றால்? விருதுநகர் பெண்கள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதில் கில்லாடிகள். நீர் ஏழு கடலை தாண்டி எட்டாத உயரத்தில் இருந்தா லும்அதைஅடையமனத்திடத்துடன் செயலாற்றுவார்கள். எங்கள் பெண்கள் மென்மையானவர்கள் மட்டுமல்ல, உருதியானவர்கள். அதனால் விருதுநகர் பெண்களை திருமணம் செய்வதற்கு போட்டி நிகழும்.

காற்றும் நீரும் பொதுவானது, ஒருகாலத்தில்/ ஆனால் இன்று தண்ணீர் வியாபாரமாக்கப்பட்டுவிட்டது. இனி காற்றையும் விற்பணை செய்வ தற்கு ஆட்சியாளர்கள் ஆலோசனை செய்யலாம்.

அம்புக்குறி கதையில் வரும் பங்களா வீடு நீர் விற்பனை செய்யும் இடமாக உள்ளது. இது வியாபார நகரமான விருதுநகருக்கே உரித்தானது.

நகரமக்கள் காலிக் குடங்களை தூக்கிக்கொண்டு பஞ்சம் பிழைக்க செல் லும் பராரிகளாக ஒரு குடம் தண்ணீருக்காக புகைவண்டி நிலையத்தில் பயணி களை இறக்கவும், ஏற்றிக்கொள்ளவும், தண்ணீர் நிரப்பிக் கொள் ளவும், புகை வண்டிகள் நிற்கும்போது. அந்த வண்டியிருந்து பழைய கழிவு சூடான தண்ணீ ரை வெளியேற்றும்போது அதை குடங்களில் பிடிப்பதற்கு மக்கள்படும் அவதி எழுத்தில் சொல்லி தீருவதில்லை.

அதைப்போன்று வண்டியிலேறி கழிப்பறைக்குள் வரும் நீரை பிடிக்க போட்டி போடும் பெண்களின் கூட்டம் அவர்களை அனுமதியின்றி புகை வண்டி நிலையத்தில் நுழைந்து நின்றிருக்கும் வண்டியில் புகுந்து கழிவறைகள் மற்றும் வண்டி வெளியேற்றும் கழிவு நீரை பிடித்த குற்றத்திற்கு தேச குற்றவாளியாக ரயில்வே போலீஸ் வழக்கு போட்டு கோர்ட்டில் நிறுத்துவது. உறைந்துப்போன உண்மை ஆனால் இந்த பகுதியை விமலன் சொல்ல தவறிவிட்டார். இருப்பினும் மெலிதாய் உரசி சென்றது அம்புக்குறியின் கதை யில் தென்படுகிறது.

இது போன்ற மண்ணின் கதைகள் அவர் களமாக அமைகிறது. ஒரு சில கதைகள் அதன் போக்கில் கடக்கவிடமால், அதன் கால்களை மடக்கி பிடித்து கட்டி வைத்திருப்பது அப்பட்டமாகிறது.

ஒரு கரு காற்றின் திசையில் மிதந்துசெல்லும் இறகைப் போல் விட்டு விட வேண்டும் அதன் எல்லையை அது தீர்மானிக்கும். இச்சிமரம் சொன்ன கதையும் இன்னும் சில கதைகளும் நெடிய கதைக்கான களமாக விரிவடைய எத்தனிக்கிறது.

அது அவருக்கே தெரிந்து நிகழ்கிறதா இல்லையா என்பது அவரின் பாணியா என்பதும் குழப்பத்தை தருகிறது. ஒரு சிறு கதை என்பது பல பக்கங்களை உள்ளடக்கியதுதான். ஆனால் சிறு கதை என்பது சில பக்கங்கள் எழுதினால் போதும் என்றும், நிமிட கதை களமாகவும் சுருங்கிப்போனது. நாவல் என்றால் நூறு பக்கத்தை தாண்டக்கூடாது என்ற விதி சில எழுத்தாளார்களின் கருத்தாக உள்ளது. சிங்கிஸ் ஐத்மாத்வ் வின் குல்சாரி குறு நாவல் வெறும் அறநூறு பக்கம்தான் லியோ டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு என்னூறு பக்கம் நாவல். ஆனால் அதையே குறு நாவல் என்றுதான் அவர் பேட்டியில் சொல்லி உள்ளார்.”ஆனால்அவசரஉலகத்தில்அதிகபக்கம்எழுதினால்யாரும்புத்தகத்தை புரட்டிக் கூட பார்க்க மாட்டார்கள். அதனால் நான் குறைந்த பகுதியில் நிறைந்த செய்தியை சொல்கிறேன்” என்ற வரிசையில் விமலன் சேரக் கூடாது என்பது அன்பான வேண்டுகோள்.

ஆண்டன்செக்காவ் தன் கதைகளில் எழுத்தாளனை அனுமதிக்க மாட்டார், புதுமைபித்தன் தன் கதை போக்கில் ஓடியபடி அவ்வப்போது லாகனை பிடித்து இழுத்து அதன் கழுத்தை வருடிக்கொடுப்பார். இருவரும் வரிந்துக் கட்டிக் கொண்டு எழுத்தாளனை கைபாவையாகத்தான் வைத்திருப்பார்கள். அத்து மீறி கதைக்குள் புகுந்து அடவடித்தனம் செய்ய விடமாட்டார்கள்.

விமலன் சொல்லிய கதைகளில் சொல்லாத கதைகள் துருத்திக் கொண்டு துள்ளாட்டம் போடுகிறது.

ஒருசிலகதைகளில்தலைகை கால்கள் நறுக்கப்பட்டு முண்டமாக அலை வுறுவது வாசகனை ஏமாற்றத்தின் ஆல் நிலைக்கு வலுக்கட்டாயமாக இழுத்து செல்கிறது.

விமலனின் அனேக கதைகள் டீமுக்கிய பாத்திரமாய் வந்துசெல்கிறது. இளம்மஞ்சள்நிறதிரவத்தில் பசுவின் சிகப்பணுவிலிருந்து பிரித்து தரும் வெண் பால் பல எடைக் கட்டுக்குப்பின் இளம் மஞ்சள் தேயிலைச் சாரில் கலந்து வழங்கப்படும் டீ பற்றி மிகவும் லயித்து எழுதப்பட்ட கதைகளை படிக் கும் வாசகன் டீயை ஒரு மிடர் பருகாமல் தப்பிக்க முடியாது.

தேயிலைசார்நம்நாட்டின்தேசியபானம்.என்றகோட்பாட்டைஆங்கிலேயர் உருவாக்கி சென்றனர்.

பசியின் கொடூரத்தில் இருக்க இடமும், உடுக்க உடையுமின்றி மனிதர்கள் கூட்டம், கூட்டமாய் கிராமத்தின் தன் கூடுகளை இழந்து, இடம் பெயர்ந்து எங்கேயாவது ஒரு கவளம் உணவு கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்தில் அலைந்த பஞ்ச காலத்தில் ஆங்கிலேயர்களின் அடி வருடிக ளான கங்கானி களின் கையில் அகப்பட்டு நல்ல உணவும், உடையும், ஒழுகாத கூரையும் என்ற வசீகர வார்த்தைக்கு மகுடியில் மயங்கிய பாம்பாக பின்போய் மலை சரிவுகள் என்ற மாய குகைக்குள்அகப்பட்டு பச்சை இலைகளில் சிகப்பு ரத்தத்தை சிந்தி, அட்டை, பூரான் சியான் பாம்புகளிடம் கடிப்பட்டு சிகிச்சைக்கு கூட அனுமதியின்றி மாண்டவர் கள், கங்கானிகள், அதிகாரிகளின் ஆசைக் கிணங்க மறுக்கும் பெண்க ளின் தற்கொலை, இணங்கிய பெண்கள் பாலியல் நேயால் அவதியுற்று இறந்த பெண்களின் கண்ணீரும், கதறலும், அவர்கள் சிந்திய குருதியும் தான் தேயிலை சார்.

பாரத தாயின் தலை பகுதியான மலைகளில் ஏலக்காய், மிளகு, காப்பிக் கொட்டை, தேயிலை, என்ற பண கொழிக்கும் பயிர்களை விளைவிக்க நமது மக்களை நவீன அடிமைகளாக, கொத்தடிமைகளாக,விலங்கிலும் கேவலமாக, நடத்தி அவர்கள் உழைப்பில் விளைந்தவைகளை அவர்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்தது போக மீந்தவைகளை நம் மக்களும் பயன்படுத்த கற்றுக் கொடுத்தனர்.

அதிகாலையில் கதிர்கள்முற்றியவயல்களில் பாடுபடசெல்வதற்கு முன் ஒரு குவளை பழைய கஞ்சித் தண்ணியான நீராகாரத்தை அருந்தி விட்டு, நண்பகல்வரை உப்பு நீர்படிய உழைத்திடும்,விவசாய தோழனின் தேசிய பானாமான டீ இன்று பட்டி தொட்டியெங்கும் தொலைக்காட்சி தொடர்கள், கேலிக் கூத்துக்கள், நகை சுவை என்ற ஆபாச வசனங்கள், வக்கிர பாடல்கள், இவைகளோடு உலக மய வியாபார விளம்பரங்கள். எனஇருந்த போதும் கூடஆங்கிலேயர் நம் நாட்டைவிட்டு போன பின்னும் அவர்கள் விட்டுச்சென்ற எச்சங்கள் இன்னும் காயவில்லை.

அன்னியஆட்சியின் நீட்சி இந்திய செல்வங்களை மட்டும் அழிக்கவில் லை பண்பாடு, கலாச்சாரம், மொழி, இனம்,குடும்பஉறவுஅனைத்தையும் அழித் தொழித்து விட்டது.இதுஇந்தியாவுக்குமட்டுமல்ல ஆசியா கண்டம் முழுவதும் பரவலாக்கப்பட்டது.

மதுபானம்என்பது உயர் குலத்தார், பெருந்தனக்காரர்கள் மட்டுமே பயன் படுத்திய ஒன்று. அதுவும் அரசு அனுமதி சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டும். ஆனால்இன்று பத்தாம் வகுப்பு மாணவன் மட்டுமின்றி மாணவிகளும் மது வருந்திபிரதானசாலையில் பட்டபகலில் உடை களைந்து அரை நிர்வாணமாய் கிடக்கசெய்து மதுவுக்கு அடிமையாக்கிய நம் ஆட்சியாளர் செய்த புண்ணியம் போல் அன்று அண்ணிய ஆட்சியாளர்கள் தேயிலை தூளை வீட்டு, வீட்டுக்கு இலவசமாக கொடுத்தும் அதை சாரக்கி பானமாக அருந்த கற்றுக் கொடுத்தும், கோயில் குளம், இன்னும், இன்னும் மக்கள் கூடுமிடமெங்கும், சென்று இலவச தேயிலை சாரைக் கொடுத்து அதைஅருந்தாமல் அதிகாலை விடியாது என்ற போதைக்கு அடிமையாக்கி மக்கள் டீ குடிக்காமல் ஒரு நொடியைக்கூட கடந்துவிடமுடியாது என்ற ஏக்கத்தை உருவாக்கி பின்பு அதை சந்தை பொருளாக்கியது மட்டுமல்லாமல் ரஷ்யாவின் தேசிய பானம் ஓட்கா போன்று இந்தியாவின் தேசிய பானம் டீ என ஆக்கியது.

அதை நம் வீட்டின் விருந்தினர்களுக்கு வழங்கும் முதல் பழக்கமாக்கிக் கொண்டுஉடலில்ரத்தம் ஓடுகிறதோ இல்லையோ தேயிலை சாறு நிச்சியமாக ஓடுமளவுக்கு அடிமையாக்கப்பட்டு விட்டோம்/. அப்படிபட்ட பானத்தை தான் விமலன் அனைத்து கதைகளிலும் தெளித்து உள்ளார்.

பிறப்புக்கும், இறப்புக்கும், சடங்கு, சம்பிரதாய விருந்தோம்பலுக்கும் முதல் பானமாக வழங்க வேண்டும் என்ற கலாச்சாரம் மக்கள் மனதில் உறைந்துப் போனதின் நீட்சிதான் ஒரு அடிக்கு ஒரு டீ கடை ஒரு மணி நேரத்திற்கு ஒரு டீ என்கிற நிலையை விதைத்துவிட்டுப்போனது.

இப்படி வரலாற்றின் அழித்தெடுக்கமுடியாத பக்கத்தில் நிறைந்து ததும் பும் டீசாரை ஒரு மிடர் அருந்தும் வகையில் விமலன் கதைகள் வாசக னுக்கு ஆசைக்காட்டி செல்கிறது.

ஆனால் அந்த கண்மாய் நீர் வண்ண திரவத்தை வாயில் வைக்கும் போதெல் லாம் லட்சோப லட்ச தேயிலை தோட்ட தொழிலாளிகளின் குருதியின் நெடி நாசியை வருடி செல்கிறது.

விமலன்பதிவுருத்திய பெரும் கதையாடல்களில் பாத்திரங்களின் பெயர்கள் இல்லை.பெயரற்றபாத்திரங்களை நினைவில் கொள்வது சிரமத்தை தருகிறது. இருப்பினும் அவர் தேர்வு செய்திருக்கும் களங்கள் மிக முக்கியமானது. அதனால் எல்லாவற்றையும் அழித்துக்கொண்டு கரு முக்கியப் படுகிறது.

காக்காசோறு என்ற முதல் தொகுப்பின் மூலம் தமிழ் கூறும் நல்லு லகில் எழுத்தாளனாய் தென்பட துவங்கிய விமலன் தட்டாமாலை,,,, வேர்களற்று,,,, பந்தக்கால்,,,,,பூப்பதெல்லாம்,,,, இச்சி மரம் சொன்ன கதை,,, என ஐந்து சிறுகதை தொக்முப்புகளை வெளியிட்டுள்ளார்.

இவையெல்லாம் சிட்டுக்குருவி,என்கிற அவரது வலை தளத்திலும், அவரது முக நூல் பக்கத்திலுமாய் ஆயிரக்கணக்கான வாசகர்களால் வாசிக்கப்பட்டு அவர்கள் அளித்த ஊக்குவிப்பில் ஐந்து தொகுப்புகளாக உருவேறி இருக்கிறது என்பது வரலாறு/

விமலன்என்ற எழுத்தாளன் அறிவொளி இயக்கவாதியாய், நாடக கலை ஞனாய், தொழிற்சங்கவாதியாய்,, சகோதரி விமலாவின் கணவனாய், சந்துரு, சுப இளங்கோ,இருவரின் தந்தையாய், எல்லாவற்றையும்விட பழக இனிமை யான மனிதனாய், சாந்த சொரூ பமாய், பாதுகாப்பாய் எழுதும் இலக்கியவாதி யாய், பயணிக்கும் விமலன் இலக்கியத்துக்குள் இன்னும் கொஞ்சம் உழைப் பை செழுத்த வேண்டியுள்ளது.

உலக இலக்கியங்களிலிருந்து உள்ளூர் இலக்கியங்களையும், தற்கால படைப் புகளையும், ஆசுவாசமாய் அவதானித்தால் அவரின் இலக்கிய பிரதிகள் காலத் தை கடந்து நிற்கும் என்பது நிச்சயம்.

குறிப்பாக இச்சிமரம் சொன்ன கதை, ஒரு நாள் ஒரு பொழுது, இன்னும் சில கதைகளில் அதற்கான அடையாளங்கள் தென்படுகிறது.

அனுபவ படிமங்களை கதைகளமாய் மாற்றுகிற போது அது கடந்த காலமாக இருக்கிறது. ஆனால் விமலன் எல்லாவற்றையும் நிகழ் காலத்தில் சொல்வது வாசிப்பு தளத்தை அழித்துச் செல்கிறது.

காலத்தை மீறுவதும், காலத்துக்குள் நிற்பதும், காலத்தை நிர்ணயம் செய்வதும் படைப்பாளிகளின் கடமை கிடையாது. காலம் காத்திருப்பது இல்லை நாம் தான் அந்த சூட்சுமத்தை கற்றுக்கொள்ளவேண்டும்.

                                                                                                                 பாண்டியக்கண்ணன் 
                                                                                                                (நாவலாசிரியர்) 
                                                                                                                 21.4.16

இச்சி மரம் சொன்ன கதை

விலை 120

வெளியீடு

ஓவியா பதிப்பகம் 


(என்னுடைய இச்சி மரம் சொன்ன கதை சிறுகதை நூலுக்கு நாவலாசிரியர் திரு பாண்டியக்கண்னன் அவர்கள் எழுதிய விமர்சனம்)

8 comments:

 1. அருமையான திறனாய்வுப் பார்வை

  உங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்!
  http://www.ypvnpubs.com/2016/04/blog-post_18.html

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் காசி ராஜலிங்கம் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. வாழ்த்துக்கள் நண்பரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
   நன்றி வாழ்த்திற்கு/

   Delete
 3. அருமையானதொரு பார்வை...
  வாழ்த்துக்கள் அண்ணா.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சேக்குமார் அண்ணா,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 4. மேலும் பல சிறுகதைகளைப் படைத்தற்கு அன்பின் நல்வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் துரை செல்வராஜ் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete