25 Apr 2016

கரு நிறச்சாலை,,,,,,

நேற்று இரவு தங்களைப் பார்த்தேன் சாத்தூர் சாலை திருப்பத்தில் வைத்து/

பார்த்தது தான் பார்த்தேன் ஏன் பார்த்தேன் எப்படிப்பார்த்தேன் என்கிற பதிவு இல்லை என்னில்/

அடர் நிறச்சட்டையும் வெளிநிற கால்சராயுமாய்அணிந்துகொண்டு கண்ணாடி மாட்டிக்கொண்டு தொங்கிப்போன உடலினானாய் நின்ற நான் அப்பொழுதான் ராமநாதபுரத்திலிருந்துவந்திருந்த பஸ்ஸிலிருந்து இறங்கினேன்.முன் படியில் இறங்கலாம் என நினைத்து அங்கே கூட்டம் அதிகமாகி அடைத்துக்கொண்டு அர்த்தப்பட்டுத்தெரிந்ததால் தெரிந்ததால் வேண்டாமே என நினைத்து பின் வாசல்ப்படி வழியாய் இறங்கி வந்து விட்டேன்,

இறங்குற படியில் என்ன அர்த்தப்பட்டுத்தெரிந்து விடப்போகிறது,,,,,?என நீங்கள் கேட்பது புரிகிறது.

படியில் முதலாக இறங்கிய பெண்ணின் சேலையில் ஒருவரின் கால் பட்டு விட்டது, அவ்வளவுதான்களேபரம்பண்ணிவிட்டாள்அந்தப்பெண், நீயெல்லாம் முன்னபின்ன பொம்பளையப்பாத்ததில்லையா என்பதில் ஆரம்பித்து,,,,,, இதுக் குன்னே பரப்பெடுத்துப் போயி அலையுறீங்க என முடித்தாள்,அதற்கு ஊடாக வந்தநாரசப்பேச்சுகளும்அது அற்ற பேச்சுகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை இந்த இடத்தில்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த டிரைவர் பஸ்ஸை நிறுத்தி விட்டு வந்து அந்தப்பெண்ணை பிடிபிடியென்று பிடி பிடித்து விட்டார்,முதலில் கொஞ்சம் பதனமாக சொல்லிப்பார்த்த அவர் சொன்ன பேச்சை அந்தப்பெண் கேட்கவில்லை என்றதும் உச்சஸ்தாயில் எக்கிவிட்டார் எக்கி/

ஒழுக்கமா ஓடிப்போயிரு ஒன்னையப்பத்தித்தெரியாதுன்னு நெனைச்சிட்டுத் திரியிறயா,,,,,,,,,,,,,,எனச்சத்தம் போட்டதும் அவள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோய்விட்டாள்.பின் பஸ் போனது பஸ் சென்ற திசையை நோக்கி கையைக்காட்டி சப்தம் போட்டுக் கொண்டிருந்தாள்.

டிரைவர் பஸ்ஸை எடுக்கையில் சொல்லிக்கொண்டுதான் எடுத்தார், ,இனிம ஏங்பஸ்ஸீப்பக்கம்ஒண்ணையப்பாத்தேன்என்கிறஎச்சரிக்கைவார்த்தைகளுடன்/  இவர்களையும் இவைகளையும் கடந்து இறங்கி ரோட்டில் நின்று கொண்டி ருந்த போதுதான் பார்த்தேன்,

இரவும் பகலுமாக தன்னுள்ளாய் ஒரு அடர் இயக்கத்தை அடக்கி வைத்துக் கொண்டிருக்கிற சாலையாய் காட்சி தருகிற அந்தஇடம் இரவின் குறிப்பிட்ட நேரம் தவிர்த்து எந்நேரமும் பரபரப்பு காட்டிக்கொண்டிருக்கிற ஒன்றாய் காட்சிப்பட்டும் உருப்பெற்றும் தெரிகிறதாய்.

நாற்புறமுமாய் போக்குவரத்து சிக்னலுக்கு வழி விட்டு கத்தரித்து வைக்கப் பட்டதுபோல் இருக்கிற சாலை பிடிக்குள் அகப்படாத நீண்டு கருத்து விரிக்கப் பட்டிருக்கிற போர்வையாய் காட்சிப்பட்டுக் கொண்டிருக்கிறதுதான் எந்நேர முமாய்/

கிழக்கிலிருந்துமேற்கு நோக்கியும் மேற் கிலிருந்து கிழக்குநோக்கியும் வடக்கி லிருந்து தெற்கு நோக்கியும் தெற்கிலிருந்து வடக்கு நோக்கியுமாய் வீறு கொண்ட வேகத்தில் பயணிக்கிற பயணம் தன்னுளாய் அந்த சாலையை நினை வில் வைத்துக்கொண்டவாறே நகர்ந்து செல்கிறது அன்றாடங்க ளில்.அது நகர்ந்து செல்கிறவேகமும்காட்டுகிற சாதுர்யமும் சொல்லிஅடங்கி மாளாது/

அருப்புக்கோட்டையிலிருந்து மேம்பாலம் வழியாக ஏறி இங்கு முடியும் இறக்கத்தின் முடிவாயும்,சிவகாசி சாலையின் ஆரம்பமாயும்,சாத்தூர் சாலை யின் எல்லையாயும் பஜாரிலிருந்து பள்ளிக்கூட சாலை வழியாக இறங்கி வருகிற சாலையின் முடிவாகவும் இருக்கிற சாலையின் நான்கு முனைக ளும் ஒன்றோடு ஒன்று கைகுலுக்கிக்கொள்கிறதாய் காட்சிப்பட்டு நிற்கிறது தான் அங்கு.

நிமிட நேர போக்குவரத்து நிறுத்ததிற்க்கே சேர்ந்து போகிற பஸ்களும் லாரிக ளும் இன்னபிற வாகனங்களுக்குமாய் மிகச்சரியாக வழி விட அங்கிருக்கிற சிக்னல் விளக்கும் அதை இயக்குகிற போலீஸ்காரரும் சற்றே மறந்து போனால் அந்த சாலையின் கதி அதோ கதியாகவும் மிகவும் சிரம திசைக்கும் ஆளாகி விடும் போலிருக்கிறது.

நேற்றைக்கு முன்தினமோ அல்லது அதற்கு இரண்டு தினங்களுக்கு முன்போ என்பதாய் நினைவு. போக்குவரத்து சிக்னல் விளக்கு ரிப்பேர் ஆகிப்போனது. சரி செய்து கொண்டிருந்தார்கள்.

ஆள் உயரத்திற்கும் மேலே வளர்ந்து நின்ற கோக்காலியின் மேல் நின்ற சற்றே உயரம் குறைந்து காணப்பட்ட நபரும் கோக்காலியின் படிகளில் இரண்டாவது படியில் நின்றவாறு அவரிடம் ஏதோ பேசிக்கொண்டவாறே இருந்த இரண்டாவது நபரும் அவர்கள் இருவரையும் சுமந்து கொண்டிருக்கிற கோக்காலியை தாங்கும் மரமாய் பிடித்துக் கொண்டிருந்த மூன்றாவது நபருமாய் பேசி கலந்து அந்த வேலையை செய்து கொண்டிருந்தார்கள்,நேரம் கூடுகிறது,அடிக்கிற வெயில் சுட்டுச் செல்கிறது கடுமையாக/ நடந்தும் ஓடியும் பயணித்தும்கொண்டிருக்கிறமனிதர்கள் வெயிலின் கடுமையை இரண்டு அல்லது மூன்று மடங்காக உணர்ந்தார்கள்.வேலைசெய்து கொண்டிருந்த மூவருமாய்,

இதுபோதாதென்றுஅவ்வப்பொழுது அங்கிருந்த போக்குவரத்துக் காவலர் வந்து என்னாச்சுவேலைஎன்பதுபோலஅவசரப் படுத்திக்கொண்டிருந்தார்.

போக்குவரத்துக்காவலர் வந்து கேட்க கேட்க பயணிகளின் பயணம் தங்கு தடையில்லாமல் நடந்து கொண்டிருக்க நடந்து கொண்டிருக்க நேரம் ஓட ஓட,வெயிலின் கடுமை கூடக்கூட மூவருமாய் மாறி பேசிக்கொண்டிருந்த பேச்சும் வேலையும் நின்று கீழிருந்தவர் மேலே ஏறுகிறார்,மேலிருந்தவர் கீழே இறங்குகிறார்.மேலேறிய அவர் வேலையில் காட்டிக்கொண்டிருந்த மும்பரத் தில் வேலை முடிந்து விடும் போல் தோன்றியது.

அந்த வேலையை முடித்து விட்டுசிக்னல் கம்பத்திற்குஅருகாக சற்றுத் தள்ளி காணப்பட்ட விளம்பரப்பலகை மேலிருந்து கம்பி அறுந்து தொங்கிக் கொண்டி ருந்தது.ஒற்றைப்பிடிமானத்துடன்/

நல்ல கனமான பலகை இரும்பு தகடால் அடிக்கப்பட்டு உள்ளே ட்யூப் லைட் டுகள் வைக்கப்பட்டு முன்னால் பிளாஸ்டிக் மூடிபோடப்பட்ட போர்டாய் இருந்தது.

இரண்டு பக்கமுமாய் கம்பி வைத்துக்கட்டப்பட்டிருந்த போர்டு ஒரு பக்கமாய் அறுந்து தொங்கிக்கொண்டிருந்தது,விட்டால் விழக்காத்திருப்பது போல காட்சி தந்த போர்டையும் இழுத்துக்கட்டி சரி செய்து விடுங்கள்.இல்லையானால் போக்கு வரத்திற்கு இடையூறாய் ஏதாவது ஆகிப்போகலாம் என்கிற கவலை யில் அதை சரி செய்யச்சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

வலது பக்கமாய் அறுந்து தொங்கியவாறு இருந்த போர்ட் இடது பக்க கம்பி கட்டின் பலத்தில் மட்டுமாய் தொங்கி நின்றிருந்தது.அப்படியானால் வலதை யும் தூக்கிக்கட்டி விட்டால் சரியாகிப்போகும்தானே?

வலதும் இடதும் சரியாக இருக்க வேண்டும் என்றார் போக்குவரத்துக்காவலர் அவர் சொன்னதில் ஒரு வாஸ்தவம் பிடிபடாமல் இல்லைதான்/

சாப்பாடற்ற ஒரு காலை வேலையின் ஒன்பது மணிப் பொழுதிற்கு சாத்தூர் சாலையில் பஸ்ஸ்டாப்பிற்கு எதிராக இருக்கிறஹோட்டலில்போய்தான் சாப்பிட்டான்,

பூரி மொச்சை வடை மற்றும் வழக்கம் போல் தோசை இட்லி இருக்கிறது என்றார்கள்,இவனுக்கு ஒரு வழக்கம் கை நிறைய காசுஇருந்தபோதும் வயிறு நிறைய பசி இருந்த போதும்கூடஇதுபோலான சின்னக்கடைகளில் வந்து சாப்பிட்டுத்தான் பழக்கம், அதுவும் எப்பொழுதாவது.

அன்றும்அப்படித்தான் போனான்,போனபின்தான் தெரிந்தது,அங்கு போயிருக் கக் கூடாது என, ஹோட்டல் ஓனர் பார்வையிலும் கடையில் கூடி நிற்பவர்க ளிடமும் ஒரு அந்நியம் தென்பட்டது.

சாப்பிட்டுக் கொண்டே எதிர்த்தாற்ப் போல் இருக்கிற பஸ் டாப்பை பார்த்தான், அங்கு வழக்கம் போல பஸ்கள் வரவும் வந்து நிற்கிற சேர் ஆட்டோவில் பயணிகள் ஏறி பயணிக்கவுமாய் இருந்தார்கள்.

பஸ்டாப்பிலிருந்துகடையும் கடையின் உள்ளிருந்து பஸ்டாப்பும் தெளிவு பட காட்சிப்பட்டு கொண்டிருந்ததாய்.

பரவாயில்லை கடையில் இருக்கிற இருப்புக்குஅது கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.அந்தஆறுதல்களே இப்பொழுதுவரை ஓடிக்காண்பித்துக் கொண்டி ருக் கிறதாய்,,,,,,/

சாலைத் திருப்பத்தில் பார்த்த தங்களை எட்டிப்பிடிக்க குரலை மட்டுமாய் அனுப்பி கூப்பிட வேண் டும் என நினைக்கிறேன் முடியவில்லை,

அதற்குள்ளாக திரும்பி விட்டீர்கள் சரேலெனவும் வேகமாகவும்/(அதென்ன அப்படி ஒரு வேகம் எனக்குத்தெரிந்து இருசக்கர வாகனம் வைத்திருக்கிறவர் களில் வேகமாக வண்டி ஓட்டும் மிகக் குறைந்த நபர்களில் நீங்கள் ஒருவ ராய் அறியப்படுகிறீர்கள்/)

தங்களை சப்தமிட்டு அழைத்து நிறுத்த மனமில்லை.அப்படியாய் கூப்பிடு கையில் தங்களின் குவிக்கப்பட்ட கவனம் கீழே விழுந்த கண்ணாடிச்சில்லாய் சிதறிப்போகலாம் என நினைத்துக்கூப்பிடவில்லை.

நேற்று இரவு தங்களைப் பார்த்தேன் சாத்தூர் சாலை திருப்பத்தில் வைத்து/

6 comments:

 1. Replies
  1. வணக்கம் கரந்தை ஜெயக்க்குமார் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. கூப்பிடத்தான் நினைத்தேன்.. ஆனால் கூப்பிடவில்லை..

  பரபரப்பான சூழலில் மின்னலிடும் எண்ணங்கள்...

  நன்று..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் துரை செல்வராஜ் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 3. படித்த பிறகு என்னையும் இப்படித்தான் சொல்வார்கள்..தங்களைப் பார்த்தேன் என்று சொல்லியது நிணைவுக்கு வந்தது.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வலிப்போக்கன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete