29 May 2016

மத்தாப்பூ,,,/


இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.மெலிதான சாரல்.மத்தாப்பூவாய் மலர்ந் திருக்கிற மனது.சாலையில் எதிர்ப்படுகிற இருசக்கரவாகனமும், மிதரக
வாகனமும், கனரகவாகனமுமாய்/

அருப்புக்கோட்டையிலிருந்துநூல்ப்பிடித்துவிருதுநகர்வரைவருகிறசாலையது. கருப்பாய் நீண்டு வாலோடியாய் படுத்திருந்த சாலையின் மார் மீது எனது இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருக்கிறேன். சக்தியண்ணன் கடையில் டீக்குடிக்கையில்பெரிதாய்வீசியெறிந்தசாரல்என்முகத்தில்வீசியெறிந்துதெரித்தது. ஒவ்வொருதுளியாகவும்.ஒவ்வொருமடக்காகவும்நாவின் சுவையறும்புகளில்
ஊறித்திளைத்தடீசுவையூட்டிய நேரம். மழையின் துளியும் உடன் சேர்ந்து கைகோர்த்துக்கொள்ள ரோட்டின் வலது பூரமாய் பெரிதாய் கூரை வேயப்பட்டு அமர்ந்திருந்த டீக்கடை பார்க்க நன்றாகவே இருந்தது.

அந்தநன்றாக இருந்ததுக்கு மட்டுமே அல்ல டீசாப்பிடப்போவது.எப்படியோ ஏற்பட்ட பழக்கத்தின் நுனி விரிந்துபரப்பியமென்பரப்பின்மீதுஏ ற்பட்டபழக்கம். இப்போது டீயும், பஜ்ஜியுமாய் கழிகிறது.ஒரு வடைஅல்லதுபஜ்ஜிடீ இரண்டு மாய் சேர்த்துஆகிப்போகிற பத்து ரூபாய்க்கு இது தேவையா என நினைப் பிருந்தபோதும்கூடஎளிதாக விட்டு விட முடியவில்லை பழக்கத்தை.

தினசரி காலையில் அலுவலக்ம் செல்கிற வேலையில் ஒரு டீ,மாலையில் அலுவலகம் விட்டு வருகையில் ஒரு டீ/என்றாவது நாக்கு நமநமக்கிற வேளைகளில் ஒரு வடை அல்லது ஒரு பஜ்ஜியுடன் உடன் சேர்த்துக் கொள் வதுண்டு.அதுவும் நன்றாகத்தான் இருந்திருக்கிறது பலசமயங்களில். எப்போ தாவதுஒருசிலசமயம்ஏதோஒரு மாதிரியாய்/ அது டீயின்சுவைக் குறைவா அல்லதுடீக்குடிப்பவரின்மனோநிலையாஎன்பதுதெரிய வில்லை.

இன்று கடைக்குப்போன நேரம் மூன்று பெண்பிள்ளைகள்ஒரேமட்டத்தில்.ஒரு பஜ்ஜி இரண்டு ரூபாய்க்கு என்றால் இரண்டு பஜ்ஜி நான்கு ரூபாய் எனகணக்கு சொல்லிக் கொண்டிருந்தார்கள்,

பள்ளி லீவு தின சீசன்.வீதியெங்குமாய் விரிந்திருக்கிறமென்பூக்களாய் ஓடித் தெரிகிற பிள்ளைகளை தத்தெடுத்துக்கொண்டிருக்கிற டீவீக்கள் விரித்த அடர் படலத்தையும் மீறிதெருவிறங்கிவிளையாடவந்த பிள்ளைகள் போலிருக்கி றார்கள் அவர்கள்.

அவர்களை கடையும்,கடை கொண்ட வடையும்,பஜ்ஜியும்தேர்ந்தெடுத்து கொண்டது இப்போது.ஒல்லியாய் ஜடைபோட்டவள்,பாவாடைசட்டை அணிந் திருந்தவள், சுடிதார் போட்டிருந்தவள்,,,,,,எனஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய்தனித்துக்காட்சிப்பட்டுத் தெரிந்தவர்களாய்.இவர்களைப்பார்த்தவா றும் அவர்களது படிப்பு,வகுப்பு,வீதி எல்லாம் தெரிந்து கொண்டவனாயும் முகத்தில் தெரித்து விழுகிற தண்ணீர்த்துளியின் ஈரத்துடனும், ஜில்லிப்புட னுமாய் கிளம்புகிறேன்.

கிளம்பக்கிளம்ப,,போகப்போக,,,மேலேவிழுந்தஇளம்சாரல்வளுக்கவும்இல்லை.
குறையவும்இல்லை.லேசாகஒவ்வொருபொட்டாய்வந்துமேல்விழுந்துகொண்டிருக்கிறது.ஒன்ற்று, இரண்டு ,மூன்று,,என பொட்டு வைத்த சொட்டுக்கள் சடசடவென வேகமெடு த்துப் பெய்கிறது.

இரண்டு நிமிட நேரத்திற்கும் குறைவான நேரம்தான்.வேகமெடுத்த சொட்டு க் கள் அடங்கி விடுகின்றன.அப்புறம் மெல்ல பழைய மாதிரியே தூறலாய் உருவெடுத்து/ 

ஜில்லிட்டுமுடித்தகாற்றுடன்பெய்ததூறல்துளிகள்முகத்தில்பட்டுத்தெரிக்கஇனிமை கடந்த பொழுதுடன் மென் காற்றையும் அனுபவித்தவனாய் வந்து கொண்டி ருந்தேன். 

இதுவும்நன்றாகத்தானேஇருக்கிறது.மெலிதானசாரல்மத்தாப்பூவாய்மலர்ந்திரு க்கிற மென் மனது,சாலையில் எதிர்படுகிற இருசக்கரவாகனமும்,மிதரக கனர க வாகனங்க ளுமாய்/

4 comments:

 1. இதுவும்நன்றாகத்தானேஇருக்கிறது.மெலிதானசாரல்மத்தாப்பூவாய்மலர்ந்திருக்கிறமென மனது,சாலையில் எதிர்படுகிற இருசக்கரவாகனமும்,மிதரக கனரக வாகனங்களுமாய்/

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வலிப்போக்கன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. உங்களின் ரசனையை ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் டாக்டர் ஜம்புலிங்கம் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete