Showing posts with label சொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம். Show all posts
Showing posts with label சொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம். Show all posts

6 Apr 2019

மிதமிகு,,,,

சற்றே தாமதமாகித்தான் போனது மன்னிக்கவும் அன்பே,

மலர ஆரம்பிக்கிற மொட்டு இதழ் விரிக்க தாமதமானது போல/

இந்நேரம்நீ எந்த நிலையில் இருப்பாய் ,என்ன மனோ நிலை கொண்டிருப்பாய் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி/

மிகவும் பல்லைக்கடிக்காதே,மிகவும் கோபம் கொள்ளாதே,மிகவும் இறுக்க மாகிப் போகாதே,,,,நாம் கோபம் கொள்ள வேண்டிய இடமும்,கோபம் கொள்ள வேண்டிய நேரமும் வேறு,

கட்டிக்காத்து வைக்க வேண்டிய கோபத்தை தேவையற்று சிதறி விட்டுவிடு வாயானால் பின் ஒன்று சேர்த்து கூட்டி அள்ள கோபம் இருக்காது, அதைக் காணவும்முடியாது,கண்ணாமூச்சிகாட்டியவறாய் ஓடி ஒளிந்து கொள்ளும்.

மிகவும் இறுகியும் போகாதே,பிசைந்து நெகிழ்த்தபட மண்ணும் நெகிழ்ந்து பரவியிருக்கும் நிலமும் இறுகிப் போனதைப் போலவுமாய்/ பின் தேவையான உருவத்திற்கு மாறிக்கொள்ள முடியாது.

பின் உடலின் சகலமும் சிறியதிலிருந்து பெரியது வரை ஏதாவது ஒரு சின்ன பாதிப்பில் ஆரம்பித்து நிற்கும்.இப்பொழுது உனக்கு மாதந்தோறுமான மாத விடாய் பிரச்சனை இருப்பதாய்ச்சொன்னாய்,

வீட்டிலும் உனதுஉறவுக்காரர்கள், மற்றும் தோழிகள் யாரிடமும் சொல்லவும் பகிரவும் மறுத்து என்னிடம் மட்டுமாய் சொல்லி வருத்தப்பட்டுக் கொள்கி றாய் அடிக்கடி,

மருத்துவரிடம் போன ஒரு மாலை கனிந்த இரவு வேளையில்”என்ன உடலு க்கு”,,? எனக்கேட்டு விட்டு சற்றே காத்திருங்கள் இன்னும் நான்கைந்து பேர் தான் இருக்கிறார்கள் அவர்களுக்கு வைத்தியம் பார்த்து அனுப்பி விட்டு உங்களை கூப்பிடுகிறேன் என்றார்.

நாம் மருத்துவரின் அறையை விட்டு வெளியே வரவும் காத்திருந்தவர்கள் வைத்தியம் எடுத்துக்கொள்ளவுமாய் குறைந்தது அரை மணியிலிருந்து ஒரு மணி நேரமாவது ஆகலாம்,

சூடு கொண்ட சூரியன் மெதுமெதுவாய் தன் சூடு ஆற்றி மாலை கனிந்து இரவு வரப்போகிற நேரமாய்ப்பார்த்து யார் அனுமதியும் இல்லாமல் மேகக் கூட்ட ங்களுக்குள்ளாய் தன்னை உள் அடைத்துக்கொள்கிறதைப்போல இது வரை காத்திருந்தவர்கள்ஒவ்வொருவராய்போய்வருவதற்குள் நாம் போய் சாப்பிட்டு விட்டு வந்து விடலாம்.என் அன்பே/என உன்னிடம் கேட்ட போது ”மதியம் சாப்பிட்ட சாப்பாடே இன்னும் வயிறு தாண்டி நிற்கிறது. இந் நிலையில் வேண்டாம்” எனச்சொன்ன உன்னிடம் ’சாப்பிட வேண்டும் அவசி யம் ,தேவையிருந்த போதும் கூட ஏதோ ஒரு மனப் பிடிவாதத்தினால் மதியம் சாப் பிடவில்லை நான்.அது இப்பொழுது சிறுகுடல் தாண்டி பெங்குடல் வரை பயணித்து வந்து அங்கே முகாமிட்டு அமர்ந்து கொண்டிருக்கிறது. ஆகவே வாப்போகலாம்கைகோர்த்தும் மனம் கோர்த்துமாய்/’

’மண்கீறி முளைவிட்ட தளிர் இலைவிட்டு கிளை பரப்பி தன் ஆகுருதி காட்டு கிற பெரும் மரம் போல் விழுதிறங்கி நிற்கிற பசி வயிற்றில் அழுந்தக் காலூன்றி நிற்கிறது.ஆகவே வா அன்பே வா என கூட்டிச்செல்கிறேன் ஹோட் டலுக்கு,என்கிற சொல்லின் கைபிடித்துச்செல்கிறோம்./

பார்க்க மிகவும் பெரிதாக இல்லாமலும், மிகவும் சிறியதாக இல்லாமலும் நடுவாந்திரமாய் காட்சிகொண்டு தெரிந்த ஹோட்டலில் பெண்கள் அமர்ந்து சாப்பிட சரியாக இடம் இல்லாமல் போனது வருத்தமாய் இருந்தது,

இருந்த நான்கைந்து டேபிள்களிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆண்க ளே சிதறலாய் அமர்ந்திருந்தார்கள்.

ஹோட்டலில் என இல்லை அனைத்து இடங்களிலும் இது போலாய் இருப்ப தாய்த்தான் அறிகிறேன்.

”இவ்வளவு வளர்ந்த நகரத்தில் ஆங்காங்கே ஆண்களுக்கென சிறு நீர்கழிக்க ஏற்பாடு இருப்பது போல் பெண்களுக்கும் இல்லையே,சிறு நீர் கழிக்க மட்டு மா, ஆத்திர அவசரத்திற்கு டீக்குடிக்க ஒரு கடை,நின்று இளைப்பாற ஒரு நிழல்,பேசி அளாவளாவிக்கொள்ள ஒரு பார்க் இப்படி ஏதாவது ஒன்று இல் லை என்பதுதானே முகத்தில் அரையும் உண்மையாக இருக்கிறது, இல்லை யா,

”இது போக ஆயிரங்காலிட்ட நாற்றாங் காலாய் பெண்மக்களுடன் பிறந்திருந் தாலும்,ஒரு பெண்ணுக்கு தந்தையாக இருந்தபோதும் கூட இது போலான விஷயத்தில் பொது வெளியில் நம் நடத்தை நான்,எனது என்கிற அளவிலாய் மட்டுமே சுருக்கம் கொண்டு நின்று போகிறதே தவிர்த்து நாம்,நமது என்கிற தாய் இன்னும் பரிணாமம் கொள்ளவில்லையே,,,,என்கிற சிந்தனையுடன் வேண்டாம்வயிற்றில் இடம் இல்லை எனச்சொன்ன உன்னையும் வற்புறுத்தி கொஞ்சமாய்சாப்பிட வைத்து கூப்பிட்டுக்கொண்டுவருகிறேன் ஆஸ்பத்திரி க்கு,

அதுவரை பொறுமை கொண்டு அமர்ந்திருந்த டாக்டர் உங்களுக்காகத்தான் காத்திருக்கிறேன்எனச்சொன்னவராய்உன்னிடம்நோய்என்னஎனக்கேட்டுவிட்டு அதற்கான மருந்து மாத்திரைகளை எழுதிக்கொடுத்து விட்டு இருவரையும் வெளியே அனுப்பிய பிறகு கைகோர்த்துக்கொண்டு வருகிறோம் அன்பும் காதலுமாய்,,,/

21 Jan 2019

லால் சலாம்,,,,,,,

வணக்கம் தோழர் லெனின் அவர்களே/

யார் சொன்னது நீங்கள் இறந்து விட்டதாக?

இறந்தபின்னாலும் அவரது செய்கைகளின் மூலமாய் நினைக்கப்படுகிற மாமேதைகளில் ஒருவராய் நீங்கள்/ இன்றும் லட்சக்கணக்கான கம்யூனிஸ்டு க ளின் இதயத்தின் அருகிலிருந்துஅவர்களது சிந்தனையை ஆக்ரமிக்கிறீர்கள். அவர்களின் செவ்வணக்கமும், அவர்களின் கொள்கைப்பிடிப்பும் உங்களை இன்னும் வாழ வைத்துக் கொண்டு இருக்கிறதுதான் லெனின் அவர்களே/

உங்களைப்பற்றியும் உங்களது வீர வரலாறு பற்றியுமாய் நேரடியாய் பார்த்து எழுதும் பாக்கியம் எனக்கு இல்லைதான்,அதற்காக உங்களைப்பற்றி எப்படி எழுதாமல் விட,,,?

அது வேறொரு தேசம் வேறொரு வாழக்கை முறை,வேறு மாதிரியான வேலை முறை.வேறு மாதிரியான சம்பவங்கள்,உணவு உடை பழக்க வழக்கம் இருப்பிடம்இத்தியாதிஇத்தியாதிஇத்தியாதிகள்,,,,,,,வேறு வேறாய்,,,,,,/ ஆனால் எங்கும் இருக்கும் வர்க்க வித்தியாசம் அங்கும் இருந்ததுதான். ஆளும் வர்க்க த்திற்கும் ஆளப்படுகிற வர்க்கத்திற்கும் இருக்கிற மிகப்பெரிய இடைவெளி உங்கள் தேசத்திலும் உங்கள் காலத்திலுமாய்,,,/

ஆளும் ஜார் மன்னனால் உங்கள் ருஷ்யாவே அடிமை தேசமாய்,,/ஆமாம் தோழர் லெனின் அவர்களே,நீங்கள் பிறக்கும் போதே அடிமை தேசத்தில்தான் பிறக்கிறீர்கள்,

அது வரலாற்றின் இருண்ட காலம்.1870 ஏப்ரல் 22 ல் உங்கள் பிறப்பு அந்த இருட்டில் ஒரு சிறு ஒளியை ஏற்படுத்துகிறது.ஆமாம் அப்படித்தான் சொல்கி றார்கள் உங்கள் வரலாற்றை எழுதியவர்கள்.

உங்களது பிறப்பின் போது ஸிம்பர்ஸ்க் நகரமே வசந்ததில் திளைத்ததாம். வானம் பாடிகள் இசைக்க,வோல்கா ஆறு நடனமிட்டு அலைபாய வீதிகளிலும் தோட்டங்களிலும் பட்சிகளின் கீச்சொலியும் பீர்ச் மரக்கிளைலும் ஸ்தெப்பி ப் புல் வெளியெங்கும் காற்று களி நடமாடியதாகவும் பதிவு செய்கிறார்கள். வோல்கா ஆற்றின் குறுக்கே உங்கள் குடும்பத்தையும் தொற்றிக்கொண்ட சந்தோஷத்து டன் நீங்கள் பிறந்து படுத்திருந்த அந்த தொட்டிலைப் பார்க்கிறார் கள் உங்கள் குடும்பத்தார்கள்.

உங்களின் பிறப்பைப்பற்றி உலக வரலாற்றின் காதுகளுக்கு எந்தத்தகவலும் இல்லையாம் அப்போது/

உலக நாட்களின் நகர்வுகள் அதனதன் போக்கில்/ உல்யானவ் குடும்பத்து உறுப்பினர்கள் என்றழைக்கப்பட்ட உங்களது குடும்பத்து உறுப்பினர்களின் எண்ணிக்கை சற்றே அதிகம்தான்.

தந்தை இல்யா நிக்கலாயெவிச்.தாயார் மரியா அலெக்சாந் திரவ்னா/உங்களது சகோதரசகோதரிகளானஆன்னா,அலெக்சாந்தர்,திமித்ரிஓல்கா,மரியாஇன்னும் விளாதிமீர்,,,,,,,,,ஆனஉங்களுடன் சேர்ந்து எட்டுப்பேர் என அறிகிறோம்/

அதனால்தானோ என்னவோ குடும்பப்பற்றும் மனிதர்கள் மீதான மகோன்ன தனமான அன்பும் பிரியமும் நட்பும் காதலும் அன்பும் பிடிப்பும் அதீதமாய் இருந்தது உங்களிடத்தில்/

உங்களது சகோதரர் ஆன்னாவும், அலெக்சாந்தரும் உயர் நிலைப்பள்ளியில் பயின்ற பொழுது நீங்கள் தொடக்கக் கணிதமும், ஆரம்பப்பாடமும் வீட்டிலே யே பயின்றீர்கள் ஆசிரியர் மூலமாக/

புத்தகப்பாடங்கள் தவிர உங்களது தாயார் மூலமாக உங்களுக்கு வீர வரலா ற்றுக் கதைகளும் உலக நடப்புகளும் நாடுகளும் என பல கதைகள் சொல்லப் பட்டன.நெப்போலியன் ருஷ்யா மீதுபடையெடுத்த தையும் பரதினோ என்னும் கிராமத்தின் அருகே அவனுடைய படைகளுக்கும் ருஷ்ய படைகளுக்கும் நடந்த போர்பற்றிக் கூறினார்கள்.குளிர் கால மாலைகளில் உங்களது தாயார் சொன்ன கதைகளை கணக்கிடவே முடியாது.

அந்த மாலைநேரங்களும்,ஜன்னல் கண்ணாடிகளின் மேல்வெண்பனி வரைந்த கோலங்களும் தாயாரின் குரலும் புத்தகத்தின் பக்கங்கள் திருப்பும் சரசரப்பான ஒலியும் உங்களை வேறோர் உலகிற்கு இட்டுச் செல்லும் தோழரே/

மேலும் அந்தக் கதைகளே உங்களது உள்ளத்திற்கும் வீரத்திற்கும் உரமாய் இருந்துள்ளது.புத்தாண்டுவிழாவிற்குமுன்பனிக்காலம்உச்சத்திலிருந்தமாலை வேளைகளில் குழந்தைகள் அதிக உற்சாகத்துடன் இருப்பார்களாமே,,,? அதற்கு நீங்களும் உங்களது குடும்ப உறுப்பினர் மட்டும் விதிவிலக்கா என்ன,,?

அந்தவிதிவிலக்கில்லாதசந்தோசத்தையும்,விளையாட்டையும்பார்த்துதங்களது தந்தை இப்படிக் கூறினாராம். இப்பொழுது போல் எப்பொழுதும் இப்படியே சந்தோஷமாகவும் ஒற்றுமையாகவும் இருங்கள் என் அன்புக் குழந்தைகளே என்றாராம்.

உங்களது வீட்டுக்குப்பின்னால் இருந்த தோட்டம் சிறியதுதான். ஆனால் அதில் இல்லாத மரங்கள் இல்லை எனலாம்.அதற்கு ,மஞ்சள்கொல்லைஎன பெயருமாமே,..?அதிகாலை எழும் நீங்கள் உடற்பயிற்சி குளியல் எல்லாம் முடிந்து தோட்டம் போய் விடுவீர்கள்/இரவில் உதிர்ந்த ஆப்பிளை சேகரிப்ப தும், பூச்செடிகளுக்கு நீர் பாய்ச்ச கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து வந்து தொட்டியில் நிரப்புவதும் உங்கள் வேலை/

தினந்தோறும் ருஷ்ய மொழியில் பேசுவதும் ருஷ்ய மொழியில் பயில்வதும் எளிதாக இருக்கும்தான். ஆனால் வார நாட்களில் ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு மொழியில் கற்க வேண்டும் என்பது தங்களது தாயாரின் ஆழ்ந்த கருத்து.

தங்களது சகோதரர் எப்பொழுதும் ஆழந்த சிந்தனையை தூண்டும் புத்தக ங்களை படித்துக் கொண்டிருப்பார்.ரசாயனத்திலும் இயற்பியலிலும் அவரு க்கு மிகுந்தஈடுபாடு/இது தவிர வீட்டின் முகப்பில் ரசாயன் ஆய்வுக் கூடமும், சின்னதாக விலங்குக்காட்சி சாலையும் ஏற்படுத்தி இருந்தார். காலை ஆகாரத் திற்குப் பின் வேண்டிய புத்தகங்க ளை எடுத்துக்கொண்டு தோட்டத் தின் நிழல் அடர்ந்த பகுதிக்குள் அமர்ந்து படிக்க ஆரம்பித்து விட்டால் மற்றது எல்லாம் மறந்துபோகும்.பறவைகளின் ஒளியும் வீட்டிற்குள்ளிருந்து வரும் அம்மாவின் தையல் மிஷின் ஒலியும் மட்டுமே காதில் படும்.

ஏதாவதுதைத்துக் கொண்டிருப்பார். உங்களது தாயார் ஆறுகுழந்தைகளுக்கும் தையல் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

நீங்கள்குடும்பத்துடன் ஸ்வியாகாஆற்றுக்கு குளிக்கச் செல்லும் போது உங்க ளுக்கும் உங்களது சகோதரர் அலெக்சாந்தருக்கும் நடந்த சம்பாஷனைகளே உங்களை நிறைய யோசிக்க வைத்திருக்கின்றன.நாம் எதற்காக வாழ்கிறோம் நமது குறிக்கோள் என்ன?வாழ்வதும்சிந்தனை செய்வதும் ஏதாவது அறிவதும் கேட்பதும்ஏதேனும் செய்வதும் சுவையானவைஎன்கிற எண்ணங்களே உங்கள து மனதில் மையமி ட்டிருந்தன/ என் சகோதரன் அலெக்சாந்தர் போலவே நானும் இருக்க ஆசைப் படுகிறேன் எனவும் எண்ணமிட்டீர்கள்.

1879 ஆம் ஆண்டு நகரின் மத்தியிலுள்ள வோல்கா நதிக் கரையிலிருந்த பள்ளி யில் இடம் கிடைத்த தங்களுக்கு தந்தையின் அலுவலக அறை மீது சிறுவயது முதலே மரியாதை.ஒரு புறம் புத்தக அலமாரியும் பெரிய எழுது மேஜையும் மறுபுறமும் காண வருபவர்களுக்கான முட்டை வடிவ சிறு மேஜையும் நீள் சோபாவும் இருந்தன.

தங்களது தந்தை நிறைய வேலை செய்தார். மாவட்டம் பூராவும் பல நூறு கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருந்த கிராம பள்ளிகளுக்கு பனிகால கடுங்கு ளிரிலும் குளிர் கால சேற்றிலும் வருவார்.மாவட்ட கல்வி நிலையங்களின் இயக்குனரானஅவர்ஆசிரியர்களுக்குஉதவப்போகாதஆரம்பப்பள்ளிகளேஇல்லை ஸிம்பீர்க்ஸ்க் மாவட்டத்தில்/

இத்தனைக்கும் மத்தியில் தங்களது படிப்பைப் பற்றியும் விசாரித்து அறிந்து கொண்ட உங்கள் தந்தைக்கு நீங்கள் உழைக்கப்பழகுவீர்களா என்ற கவலை. ஆனால்உழைப்பிற்கு மரியாதை தரும் குடும்பத்திலிருந்த தாங்கள் அளவிற்கு அதிகமான திறமைசாலியாக இருந்ததும் புது விஷயங்களை எளிதில் கிரகித்துக்கொண்டதும் ஆச்சரியம் அல்லவே/

உயர் நிலை படிப்பை முடித்து விட்டு பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததங்களதுசகோதரன்அலெக்சாந்தரிடம்கேட்டீர்கள்.மனிதனிடம் உனக்கு எல்லாவற்றையும் விட பிடித்தது எது என/உழைப்பு நேர்மை விஷய ஞானம் என பதிலளித்த தங்களது சகோதரர் நம் தந்தை அப்படிப்பட்டவர்தான் என நினைக்கிறேன் என்றார்,

ஒரு முறைப்பணிக்குச்சென்று விட்டு தாமதமாக வந்த தங்களது தந்தை கூறினார்.ஸ்தெப்பிப்புல்வெளியில்எங்கோதூரத்து கிராமத்திலிருக்கும் அந்தப் பள்ளிக்குசெய்தித்தாளோபுத்தகங்களோ வருவதில்லை. குளிர் காலத்தில் கத கதப்பு மூட்டக்கூட விறகு சேமிக்காமல் விட்டுவிட்டார்கள். இதற்கெல்லாம் நிலப்பிரபுவான அந்த கிராமத்துத் தலைவனை பள்ளி ஆசிரியை திருப்திப் படுத்தவில்லை என்பதுதான் என்றார். குடியானவர்க ளுக்கு எந்த உரிமையும் அற்ற அந்த கிராமத்தில் குடியானவர்களின் நிலம் பூராவும் பணக்காரர்களிட த்திலும்,நிலப்பிரப்புகளிடத்திலும்இருக்கிறது.இந்நிலையில் தான் அந்த ஆசிரி யருக்கு பரிந்து பேசியது பிரயோசனமற்று போயி ற்று என்றார்,

அது1886ஜனவரி 16தங்கள் தந்தை உயிர் நீத்த துயர நாள்.அவரது சவ ஊர்வல த்தில் கலந்து கொண்ட அசிரியர்கள்,மாணவர்கள் நண்பர்கள் ஆகியோரின் வருகையை வைத்தே அவர் மக்களுக்கு எவ்வளவு நன்மைகள் செய்துள்ளார் என்பதைபுரிந்துகொண்டீர்கள்.அந்தப்புரிதலேசுவாஷ்இனத்தவருக்கு தங்களை படிப்பை சொல்லித்தரத் தூண்டியது. மக்களின் நன்மைக்காக வாழ்வது எப்படி என உங்களுக்குள் எழுந்த விஸ்வரூபம் எடுத்த கேள்வி உங்களை மக்களின் காவலர்கள் புரட்சிக்காரர்களே என தீர்மானிக்க வைத்தது. சமூகம் எவ்வளவு நியாயம் அற்ற முறையில் இயங்கிக் கொண்டிருக் கிறது.. பணக்கார்கள் வீண் பொழுதுபோக்குகிறார்கள்.ஏழைகளோஓய்வுஒளிச்சல் இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியும் அவர்கள் ஏழ்மையிலே யேகாலம் தள்ளுகி றார்கள். இதுநியாமா என உங்களுக்குள் வதைத்த கேள்வி தான் நீங்கள் கழுத் தில் மாட்டியிருந்த சிலுவையை அறுத் தெரிய வைத்தது.கொடுங்கோலன் ஜாரை எதிர்த்துப்போரிடுவது எப்படி எனவும் சிந்திக்க வைத்தது.

1887 மார்ச்சில் ஒரு காலை நேரத்தில் உங்களை பள்ளியிலிருந்து வரச் சொன் னார்கள்.ஆசிரியை வோரா வஸிலியெவ்னா கஸ்க தாமாவா. ஜார் மன்னன் மூன்றாம் அலெக்ஸாண்டரை கொல்ல முயன்றதாக கைது செய்யப்பட்ட மாணவர்களில் உங்களது சகோதரும் சகோதரி ஆன்னாவும் உள்ளனர் என அவர் தந்த கடித்ததில் இருந்தது. அக்கடிதம் பீட்டர்ஸ்பர்க பல்கலைக்கழகத்தி லிருந்து வந்திருந்தது. அந்தக்கடிதம் ஏற்படுத்திய பாதிப்பு அடங்கும் முன்னரே தங்கள் சகோதரருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

அண்ணன் தூக்கிலிடப்பட்டார் என்கிற செய்தி உங்களை வெகுவாகத்தான் பாதிக்கிறது தோழரே/ அன்றிலிருந்து ஸிம்பர்ஸ்க் நகரில் உங்களது குடும்பத் திற்கு தெரிந்த எல்லோரும் விலகிக் கொள்ள ஆரம்பித்தார்கள்.உங்களது தாயார் வீதியில் வரும் பொழுது எதிரே வருபவர்கள் அவசர அவசரமாக எதிர் சாரிக்கு செல்வார்கள்.அல்லது மேகத்தையோ தரையையோ ஆராய முற்படு பவர்கள் போல் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார்கள். மரண தண்டனை அடைந்த மகனின் தாயாருக்கு முகமன் தெரிவிக்காமல் இருப்பத ற்காக/

ஆனால் தோழரே இதைகண்டெல்லாம் உங்களது தாயார்இம்மியளவும் மனம் உடைந்து போக வில்லை. அவர்கள் அழவில்லை. தலையை நிமிர்த்தியவாறு தெருவில் நடமாடினார்கள். தன்மானமும் மிகவும் உளவலிமையும் உள்ளவள் நம் அம்மா என்று எண்ண தொடங்கினீர்கள் நீங்கள்/

இதற்குள் உங்கள் உயர் நிலைபள்ளிப்படிப்பும் முடிவடைகிறது. பல்கலைக் கழகத்தில்சேர வேண்டும்.பீட்டர்ஸ்பர்க்பல்கலைக்கழகம் உங்களை அனுமதி க்குமாஎன்கிறகேள்வி உங்கள் முன்.என்ன செய்வது,,?என்னசெய்வது,,? என்ன செய்வது,,, இப்பொழுது,,,?என மனதுள் வதைத்தகேள்வியின்முடிவாக நீங்கள் இதுவரை வசித்த ஸிம்பர்ஸ்க் நகரின் உறவை அறுத்துக் கொண்டு கஸான் நகருக்குகுடும்பத்தைகொண்டுபோய்விடலாம்என்கிறமுடிவுக்குவருகிறீர்கள்.

தவிரவும் தங்களது தாயாருக்கு கிடைத்து வந்த தகப்பனாரின் பென்ஷன் குடு ம்பச் செலவிற்குப் போதவில்லை.

இப்படியான சூழலில் ஸிம்பர்ஸ்க் செய்தித்தாளில் பின்வரும் விளம்பரம் வெளியாகிறது சிறிது நாட்களில்/ தோட்ட வீடும் பியானோவும் ,நாற்காலி, மேஜை முதலியனவும் உடமையாளர் அயலூர் செல்வது காரணமாக விற்கப் படுகிறது. என,,,/

அன்றிலிருந்து தங்களது வீடு வழிப்போக்கர்கள் சாவடி போல் தோற்றம் அளிக் கிறது.வாசலில்மணி அடித்த வண்ணம் உள்ளது.வாங்க விரும்புவோர் வந்தார் கள், ஒவ்வொரு அறையாக சுற்றிப் பார்த்தார்கள்.பொருட்களை நோட்டமிட் டார்கள்.கிசுகிசுத்தார்கள்.வெளிறியநிறமும்,கண்டிப்பானதோற்றமும்வெள்ளை  தலையுமாக அம்மா வாயில் அருகே நின்றார்கள்.அன்னையின் பக்கத்தில்ஓடி ஓடி நல்லியல்பற்று நோட்டமிடும் பார்வைகளிலிருந்து அவர்களைகாக்க
விரும்புகிறீர்கள்.

வீட்டுவாசலில் மணியோ திரும்பத்திரும்ப அடித்த வண்ணம்/

புதிது புதிதாக ஆட்கள் வருகிறார்கள். வீட்டின் பொருட்களை தொட்டு தூக்கிப் பார்க்கிறார்கள்,விலை பேசுகிறார்கள்.இறுதியில் பியானோ தவிரஅனைத்தும் விலை போகிறது.உங்களது குழந்தைப்பருவமும்,உங்களது இன்பமும் நிறைந் திருந்த பியானாவோடு உங்கள் குடும்பம் கஸான் நகரை நோக்கி. உங்கள் தொப்புள் கொடி உறவான ஸிம்பர்ஸ்க் நகரை விட்டு பியானாவோடு ஊங்கள் குடும்பம் கஸான் நகரை நோக்கி/

உங்கள் தொப்புள் கொடி உறவான ஸிம்பிர்ஸ்க் நகரை விட்டு உங்கள் குடும்பம் பியானோவின் இசையாய் எங்கும் பறந்து பரவி நுழைகிறது கஸான் நகருக்குள்.

முற்றிலும்வேறுபட்டசூழல்,பழகாதமனிதர்கள்,புதுமுகங்கள்இன்னும் நிறைய நிறையவான புதுச்சூழலில் உங்களது குடும்பமும் அங்கே வேர் விடுகிறது. கஸான் நகர பல்கலைக் கழகத்தில் ஒழுங்கு முறைகள் அதிக கட்டற்றவை யாக இருக்கும் என்கிற உங்களது கூற்று தவறாகிப் போகிறது தோழரே/

அங்கிருந்த கண்காணிப்பாளர்கள் மாணவர்களின் ஒவ்வொரு அடியையும், ஒவ்வொரு அசைவையும், ஒவ்வொரு சொல்லையும் கண்காணிக்கிறார்கள். ஜார்அரசாங்கத்திற்குஎதிராகவோதலைமை போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக வோ யாராவது அசைகிறார்களா என கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

கஸான் பல்கலைக்கழகம் கடுகடுப்பும் ஏக்கமும் நிறைந்த ஒரு சூழ் நிலை யை உருவாக்கித் தந்தது. ருஷ்யா முழுவதும் சிறைகூடம் போலவே காட்சிய ளித்தது உங்களுக்கு/

இச் சூழ்நிலையில்தான் 1887 டிசம்பர் 4ல் மாஸ்கோவில் மாணவர்கள் கலக நடவடிக்கைகள் பற்றிய செய்திகள் பத்திரிக்கைகளில் வெளியாயின.உங்கள் உரிமைகளைகாப்பாற்றிக்கொள்ளுங்கள்,போராடுங்கள்என்கிறரகசிய வேண்டு கோள் கஸான் மாணவர் களிடையே தோன்றியது.

ரகசியவேண்டுகோள் தோன்றிய சில மணி நேரங்களிலேயே ஒரு குரல் எழும் பியது.மாணவர் களே கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதான ஹாலுக்கு வாருங் கள் என/மாணவர்கள் தடதடவென ஓடி இரண்டாவது மாடியில் இருந்த ஹாலுக்கு சென்றார்கள். அந்த மாணவர் கூட்டத்தில் முன்னால் இருந்தவர்க ளில் நீங்களும்ஒருவர் என சொல்லித்தான் தெரியவும் வேண்டுமா,,, என்ன,,,?

அப்போதுகூட்டத்தலைவர்பேசுகிறார்.தோழர்களேவாருங்கள்சபதம்செய்வோம்.ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதாக/நாம் நமது கோரிக்களுக்காக போராடுவதாக நாம் கோருகிறோம்.சுதந்திரம்சட்டஉரிமை,உண்மை,அந்நேரம்தான்மாணவர்இருந்த ஹாலுக்குள் நுழைகிறது போலீஸ். கனவான்களே சட்டத்தின் பெயரால்
கோருகிறோம்.இந்தக்கணமே கலைந்து போய் விடுங்கள் என்கிறது போலீஸ்.

“முடியாது ஒழி வெளியே போ,என்று குரல் கொடுக் கிறது மாணவர் கூட்டம். பின் பல்கலைக் கழகத் தலைவர் வரவும் சமாதானமடைந்து விண்ணப்பதை சமர்ப்பிக்கிறார்கள்.ருஷ்ய மாணவர்களின் வாழ்கை சகிக்க முடியாதது ஆகி விட்டதுஎனவிண்ணப்பதில்எழுதப்பட்டிருந்தது,அமைதிஅடையுங்கள்கனவான் களே,என மாணவர்களை சமாதானப்படுத்த முயன்ற பல்கலைத் தலைவரை நோக்கி உக்கிரமாய் குரலெப்புகிறது /அப்படியானால் எங்கள் கோரிக்கை களை நிறைவேற்இசையவில்லையா நீங்கள்,அப்படி இல்லாத பட்சத்தில் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறுவோம் நாங்கள், மாணவர் சீட்டுக்களை திரும்பக் கொடுத்துவிடுவோம்.எனக்கூறியகணத்தில்பல்கலைக்கழகத்தலைவர் சாய்வு மேஜையின்மீதுமுதல்மாணவர்சீட்டு வைக்கப் படுகிறது.அப்புறமென்ன கண்க ளிலும் மனதிலும் கோபம் கொப்பளிக்க நின்ற மாணவர் கூட்டம் நுழைவுச் சீட்டுக்களைதூக்கிப்போட்டதுமேஜை மேல்.பத்து இருபது முப்பதுஎன நூற்றுக் கணக்கில் குவிந்த நுழைவுச் சீட்டுக்களில் உங்களதும் ஒன்று.

பின்னே சூரியன் சுட்டெரிப்பது சகஜம்தானே,,? நுழைவுச்சீட்டைக்கொடுத்த அன்று மாலை நீங்கள் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்படுகிறீர்கள். அன்று இரவே கைதும் செய்யப் படுகிறீர்கள்.கைது செய்யப்பட்ட சில நாட்களில் போலீஸ் கண் காணிப்பில் கக்கிஸ்கினோ கிராமத்திற்கு அனுப்பபடுகிறீர்கள். இளம் மாணவப்பிராயம், அதற்கே உண்டான பிரத்யோக மனோ நிலையும் எண்ணங்களும் நடைமுறையும் அந்நிலையில் போலீஸ் காவலில் இருந்த தங்களின் மனோ வலிமையை நூற்றாண்டு கடந்தும் இப்பொழுது நினைக்கும் பொழுதும் மெய் சிலிர்க்கிறது,தோழரே/

கிக்கிஷ்கினோ கிராமத்தில் பனிகாலம் கடும் குளிரும் புயலுமாக இருந்தது, தாங்கள் இருந்த சிறு வீடு அற்றலைந்தது,அதற்குள் எல்லாப்பக்கமும் இருந்து காற்று வீசியது,புகைபோக்கி குழாய் வழியே சூறாவளி சீழ்கை அடித்தது. வெண் பனிக் குவியல் ஜன்னல் வரை மேடிட்டிருந்தது. பனிக்கால கக்கிஷ்கி னோ கிராமம் ஏக்கமும் தனிமையும் நிறைந்ததாய்க்கழிந்தது.

அப்படியானால் அந்தப் பனிக் காலம்முழுவதுமான தனிமையை எதைக் கொ ண்டு விரட்டிஅடித்தீர்கள்? எதைக் கொண்டு தூற்றினீர்கள்.எப்படி அதன் முகத் தில் காறி உமிழ்ந்து விரட்டியடித்தீர்கள்,,?

வேறெப்படி படிப்பின் மூலமாகத்தான் பனிக்காலம் முழுவதும் உங்களைப் பிடித்திருந்த தனிமையை விரட்டப் படித்தீர்கள்,,,

படித்தீர்கள்,,,படித்தீர்கள்அதுவே உங்களின் சிந்தனையையும் செயலையும் கூர்மையாக்குகிறது.புத்தகங்களின்பக்கங்களைபுரட்டப்புரட்டதாங்களும்புரட்டப்படுகிறீர்கள். ஆகர்சிக்கப் படுகிறீர்கள்.சிந்தனைத்தெளிவுப் பெறுகிறீர்கள்.







(மாமேதை லெனின் அவர்களின் நினைவு தினத்தை ஒட்டி எனது லால் சலாம் பிரசுரத்திலிருந்து,,,,)

13 Nov 2018

சென்ற திசை,,,,/

அவருடனான உறவின் முடி எப்பொழுதிலிருந்து ஆரம்பிக்கிறது என்பதை அறுதியிட்டு கூறிவிட முடியாத போதும் கூட அரிச்சலாய் ஞாபகம் இருக் கிறதுதான்,

அது 1985 இன் மத்திம காலம், ஈரப்பிசு பிசுப்பு மனம் முழுவதுமாய் ஒட்டிக் கிடந்த நேரம்,ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து சாத்தூருக்கு மாறுதலாகி வருகிறேன் கண் முழியாத கோழிக்குஞ்சாய்/

பணி சாத்தூரில் .குடியிருப்பு மதுரை பாண்டியன் காலனியில் உள்ள அக்கா வீட்டில் என இருந்த நேரம்,

வேலை ,,,வேலை விட்டால் வீடு,வீடு விட்டால் வேலை என்கிறதான ஆகம விதிகளுக்குள் அடைபட மறுத்த மனது ,வயிற்றுக்கு அலுவலக வேலை மனதுக்கு,,,,,? என்கிற தேடலுடன் வலை விரித்த நாட்களில் மண் பிளந்து துளிர்த்து இலை விட்டு கிளை பரப்ப ஆரம்பித்திருந்த இயக்கம் பார்க்கக் கிடைக்கிறது,

இயக்கத்தின் வேர்களாய் அப்பொழுதான் கால் பாவி தரை உன்றியிருந்த ஜே,ஜே சீனிவாசன்,சேகர், தீக்கதிர் ராஜேந்திரன்,சந்துரு மற்றும்மற்றுமாய் துணை வேர்களாய் காட்சிப்பட்ட முருகன்,கெரோ கண்ணன்,அசட்டுச்சீனி(சீனி மன்னிக்கவும் பட்டப் பெயரை சொல்லவேண்டிய அவசியம்)இன்னும் இன்னு மான ஒரு மரத்து பறவைகளான தோழர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஏதாவது ஒரு இயக்க வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது ஊர்ந்து செல்கிற எறும்பின் சுறுசுறுப்பை படம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்ததாய்,,/

இயக்கம் சம்பந்தமாய் போஸ்டர் ஒட்டினார்கள், நோட்டீஸ் கொடுத்தார்கள், பேனர் எழுதினார்கள். பொதுக்கூட்டம் என்றால் அந்த ஏரியா முழுவதும் தோரணம் கட்டி நிறைத்தார்கள்,கோரிக்கைள் எழுதி தட்டி போர்ட் வைத்தார் கள், ஊர் ஊராய் சைக்கிள் பிரச்சாரம் போனார்கள்,இப்படியெல்லாம் இயக்கம் கட்டுவறவர்களின் வேலையில் அப்படி என்னதான் நடக்கிறது என அவர்க ளுடன் கை கோர்த்த போதும், அவர்கள் தோள் தொட்டுப் பாவி படர்ந்த போதும் அவர்கள் செய்த வேலையில் மேம்பட்ட ஒரு உயிரோட்டம் தெரிகிறது,

ஆழ்ந்துபட்ட அந்த உயிரோட்டத்தின் கரம்பற்றியும்மனம்தொட்டும்உறவாடிக் கொண்டிருந்த நாட்களில் அவ்வியக்கத்தின் வேர்களில் ஒருவராய் இருந்த சேகர் அவர்கள் இயக்கப் பணிகளின் உச்சம் தொட்டு அவர் சார்ந்தி ரு ந்த இயக்கத்தின் உயர் பொறுப்பிற்கு வருகிறார்,

வந்த பின்னாய் அவருடனான உறவு கொஞ்சம் மட்டுப்பட்டதாய் தெரிந்தாலும் இன்னார் என்றால் இப்படித்தான் என என்னைப்பற்றிய ஒரு உயர் வரைவு அவரிடம் இருந்ததை தோழர்கள் சொல்லி கேள்விப் பட்டிருக்கிறேன்,

இப்படியாய் அவர் பற்றி நானும் என் பற்றி அவருமாய் பரஸ்பரமானதொரு உயர் வரைவை மனம் தேக்கி வைத்திருந்த நாட்களில் அவருக்குள் குடி கொண்டிருந்தகொடிய நோயான கேன்சர் ரகசியம் காக்காமல் அவரது உயிரை குடித்துக் கொண்டு போய் விடுகிறது.

இனிய நண்பனாய் உற்ற தோழனாய் ,சகோதரனாய் அவர் இயக்கம் தவிர்த்து சக தோழர்களின் குடும்பங்களில் தன் மனம் கலக்க விட்டிருந்தார்,

ஒரு சமயம் இயக்கத்தோழர் ஒருவரின் பதினாறு வயது மகன் நண்பனின் வீட்டிற்கு படிக்கப் போகிறேன் எனச்சொல்லிப்போனவன் இரவு பதினோரு மணிக்கு மேலாகியும் வீட்டிற்கு வரவில்லை.

விஷயம் கேள்விப்பட்டதும்வந்துவிட்டார் நான்கைந்து தோழர்களுடன்/

இயக்கத் தோழரை பதட்டப்படாமல் இருக்கச் சொன்னவர் மகன் எங்கு போனான், அவன் சென்ற இடம் எது, என்கிறது போலான விபரங்களை கேட்டு விட்டு தோழரையும் இரு சக்கர வாகனத்தின் பின் அமரச் செய்து நகரின் முக்கிய வீதிகள் எங்கும் தேடிய பின் பணிரெண்டுமணி வரை பள்ளித் தோழ னின் வீட்டில் பரிட்சைக்கு படித்து விட்டு இப்பொழுதான் வருகிறேன் எனக் கூறி சிரித்தவனாய் வந்து கொண்டிருந்த தோழரின் மகனை அவரது இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர வைத்தும் தோழரிடம் மகனின் சைக்கிளை வாங்கிக் கொடுத்து விட்டுமாய் அவனை வீட்டில் கொண்டு போய் இறக்கி விட் டார் அதே நான் கைந்து தோழர்கள் புடை சூழ/

வீட்டிற்குபோய்பையனைவிட்டுதோழரிடம் சொல்லிக் கொண்டு அவர் கிளம் பும் போது அவர் செல்லும் திசையையே பார்த்துக் கொண்டிருந்த மகனிடம் தோழர் கேட்கிறார்,

”என்னடா அவரு போறதையே பாத்துக் கிட்டு இருக்க” என,,,,

,”அப்பா அவரு என்னைய வண்டியில இருந்து யெறக்கி விட்டுட்டுப் போகும் போது ஒண்ணு சொல்லீட்டுப் போனாருப்பா,

“நல்லதையே படிச்சி நல்லவனா வளந்து விருட்சமாகி நில்லுன்னு,,,/

அன்று அவர் சொன்னது போல் தோழரின் மகன் விருட்சமாகி நின்றானோ இல்லையோ நான் அறியேன்,

ஆனால்இன்று தோழர் சேகர் அவர்களின் புதல்வன் திரு.பகத்சிங் அவர்கள் நல்லதையேகற்றுநல்லவராய் வளர்ந்து ஆழக்காலூன்றிவேர்விட்டு நிற்கிறார் இம்மண்ணில்.

ஆழக்காலுன்றலும் வேர்விடலும் கடந்த 12.11.2018 அன்று காலை அவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியாய் படம் விரித்து நிற்கிறதுநட்புகளும் தோழ மைகளும் உறவுகளும் புடை சூழ/

திரு பக்த்சிங்க் அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நானும் எனது துணைவியாரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி விட்டு மன நிறை வுடன் திருமண மண்டபம் விட்டு வெளி வருகையில் கையிலெடுத்த ஒற்றை வெற்றிலையை புறம் பார்த்து திருப்பிப்போட்ட போது வெற்றிலையெங்கும் ஓடிக்காட்டியநரம்புகளின் பிணைப்பே மண்டபத்தினுள் அமர்ந்திருக்கிற நட்புக ளும் ,தோழமைகளும் ,உறவுகளும் இன்ன பிறர்களும் எனச்சொல்லிச் சென்ற தாய்,,,/

மண்டபத்தின் வாசல் படியை தாண்டுகையில்ச ப்தமிட்டு சொல்லிக் கொண்டு வருகிறேன்,

”போய் வருகிறேன் தோழர்  அவர்களே,போய் வருகிறேன்”என/

5 Aug 2018

நெடுந்தேட்டங்களில்,,,,,


ஓடுகிற சைக்கிளுக்கும் மிதித்த கால்களுக்கும் நெசவிடுகிற இயக்கம் மனம் மாச்சரியமற்றாய்,,,/
              ________________________
மன மாச்சரியங்கள் ஆரம்பிக்கிற புள்ளிகளிலும் தொடர்கிற விழுமியங்களிலுமாய் துவக்கம் கொள்கிற வாழ்க்கை,,,/
         ------------------------------
துவக்கம் கொள்கிறதன் முதல் புள்ளிகள் நீட்சிகொண்டு வேர்விட்டும் கிளை பரப்பியுமாய்,,,/
                    --------------------
பரப்பிய கிளைகளும் ஆழமிட்ட வேர்களும் தன் முனைப்பில் கவனம் கொண்டே,,,
                ---------------------------
கொண்ட கவனத்தின் சிதறாத முனைகள் மழுங்கிக் காணாமலும் திசை திரும்பிப் போகாமலுமாய்.,,,/
                 -------------------------
திரும்பாத திசையின் உள் வகிடுகள் வகித்துக்கொண்ட கோலம் காலம் அழியாயமலும் அழிக்கப் படாமலு     மாய்,,,/
         --------------------------
அழிக்கப்படாதவைகளின் சுவடுகள் சுமந்து நின்ற வடுக்கள் நம் பின் தொடரும் நிழலாய்,,,/
              ----------------------
தொடரும் நிழல்கள் சுமந்து செல்கிற உரு நீண்டும் சுருங்கியுமாய் காட்சி கொண்டு,,,/
                 ------------------------
காட்சி கொண்ட உருக்களின் சூழ்கொள்ளல்கள் மனம் தாங்கியும் அது அல்லாத்தாயும்/
                ----------------------
அல்லாததும்,அல்லதுமாய் இருக்கிறவைகள் சாஸ்வதப்பட்டா,நிரந்தரம் சுமந்தா ,,,?
                     -----------------
சுமந்த நிரந்தரங்களின் கனமும் அது அல்லாதனின் லேசும் உள்ளும் புறமுமாய்,,,/
                     ------------------
உள்ளும் புறமுமாய் உருக் கொண்ட லேசும் கனமும் நீட்சிகளில் காட்சி கொண்டும் அது அல்லாததுமாய்,,,/
                          ------------------
இருப்பதும் இல்லாததுமாய் தொட்டுத்தொடர்கிறதான நினைவுகள் சூழ்க்கொண்ட உறைவிடமாய் வாழ்க்கை.../
                      --------------
கரிப்பும் இனிப்பும் யார் கொண்டு வந்ததென தெரியவில்லையாயினும் கூட ஏற்றுக்கொண்டு ஓட்டமிடும் தேட்டம்,,,/
                 ----------------------
ஓடுகிற ஓட்டங்கள் உன்னையும் என்னையும் நம்மையும் நம் மனம் கொண்டவர்களையும் அரவணைக்கிற கிளைகளாகவும் வேர்களாகவும்...,,,/
                 ------------------
பூமி கொண்ட வேர்களும் வானம் பார்த்த கிளைகளுமாய் தாங்கி உருபட்ட மரம் கொடை கொண்டதை அள்ளி உருபடுகிறதாய்,,,,/
                  --------------------
கொடைகொண்டதை கடந்தும் அதனில் சுகித்தும் செல்கிறவைகள்கடக்கிற தூரம் சற்றே நீண்டதாயும் கொஞ்சம் புள்ளிகாட்டியுமாய்,,/
                   --------------------
காட்டிய புள்ளிகள் இயங்கியவையையும் இயக்கியவனையும் அடையாளமிட்டும் சுற்றம் காட்டியும்,,/            

28 Jun 2018

திருஉரு,,,,

அலுவலகத்திலிருந்து கிளம்புகையில் மாலை மணி ஐந்து முப்பது ஆகியிரு ந்தது.

அழுத்துகிற வேலை பழுவை அழுத்தமற்ற மனோநிலையில் செய்து முடித்து விட்டு மீண்டெழுந்து வீட்டிற்குக் கிளம்புகிறான்.

கோர்த்திருந்தபூக்களை சேர்த்து கட்டியிருந்த நூலின் இறுக்கத்திலிருந்து விடு படுவதும் இறுகமற்று இருப்பதும் நல்லதனம் காட்டிய விஷயமாகவே/

அலுவலகத்தில் ஒட்டு மொத்த இருப்பும் இன்மையும் இவனில் பொதிந்திரு க்க இவன் அலுவகத்தை விட்டுக் கிளம்பும் போது டீக்கடைப்பையன் டீ ஆர்டர் கேட்டு வருகிறான்.

பூஞ்சையான உடல்,சின்னப்பையன்.நன்றாக இருந்தால் அவனின் வயது பதிமூன்று இருக்கலாம்.படிக்க வேண்டிய வயதில் பிழைப்பின் அவசியம் கருதியும்,அழுந்தி வாழ வாய்க்கபெற்ற வாழ்க்கையின் அவசியம் கருதியும் டீக்கடைக்கு வேலையை தத்தெடுத்துக்கொண்ட அவன் அலுவகத்தில் இருக் கிற அத்தனை இருக்கையில் இருந்த இருபதிற்கும் மேற்பட்ட எல்லோரிட மும் டீக்கும் காபிக்குமாய் ஆர்டர் எடுத்து விட்டு இவனிடம் வந்த போது இவன் சொல்கிறான் ”வேணாம் டீ எனக்கு ,இதோ இன்னும் ஒரு சில நிமிடங்களில் அலுவலகத்தை விட்டு வெளியேறிவிடுவேன்,ஆகவே” ,,,,,,,,, என புள்ளி வைக்காமல் வார்த்தையை முடித்து விட்டுக்கிளம்புகிறான் அவ் விடம் விட்டு மைதானத்தை விட்டு வெளியேறிய பந்தாக,,,,/

டேபிளையும் சேர்களையும் கணிணியையும் இன்னும் சில எழுது பொருட்க ளையும் கடந்து செல்லும் போது திறந்துநின்ற அலுவலகத்தின் இரட்டைக் கதவில் இடது பக்கக்கதவின் கை பிடி ஓரம் தெரிந்த அழுக்கு நவீன ஓவியம் போலவும் அதன் பின்னால் வாசலை ஒட்டி இருந்த மண்ணெண்னை கேனும் அதை ஒட்டித்தெரிந்த பிளாஸ்டிக் புனலும் ஓவியத்திற்கு அழகு சேர்த்ததாயும் தனித்டு நின்ற இன்னொரு ஓவியம் போலவும் ஆகித் தெரிந்தது.

கதவின் கை பிடியை பிடித்தவனாய் வெளியேறுகிறான் அலுவலகம் விட்டு,,/

ஊருக்குச் செல்ல வேண்டும்,இவன் நிற்கிற இடத்திலிருந்து சரியாக ஐந்து கிலோ மீட்டர் இருக்கும் ஊருக்கு .இவன் அடிக்கடி சென்றதில்லையானாலும் கூட அவசியம் நேர்கிற போதும் சந்தர்ப்பங்களிலும் அவசிய அவசரங்களின் அழுத்தத்திலும் சென்று வந்திருக்கிறான்,

அலுவலத்தின் உள்ளிருந்து இரு சக்கர வாகனத்தை வெளில் எடுத்து கிளம் புகிறான் கூட்டிலிருந்து வெளிக் கிளம்பும் பறவையைப்போல/

இறக்கையின் வீச்சும் சுழற்சியும் காற்றின் வேகம் அறுத்து செல்வது போல செல்கிறான் வீறு கொண்டு/

இவன் செல்கிற வேகத்தில் சென்றால் அடுத்த கால் மணிக்கும் குறைவான நேரத்தில் ஊரில் இருக்கலாம்.

ஒரு ஊரில் ஒருவன் குடியிருப்பதற்கும் ஒரு ஊர் ஒருவனை வளர்ப்பதற்கும் வித்தியாசம் இருப்பதாய் சொல்வார்கள்,இவன் விஷயத்தில் ஊரே ஒன்று கூடி இவனை வளர்த்தது.

ஆமாம் சாப்பாடு மற்றும் துணி மணிகள் மற்றும் இதர இதரவைகளை சொந்த வீடு தந்த போதும் கூட பொதுவான அறிவையும் மனித முகங்களின் உள் விலா சங்களையும் மனித மனதின் உள் ஆழத்தையும் கற்றுக் கொடுத் ததும் அறிமுகம் செய்து வைத்ததும் ஊர்தான்,

அந்தவகையில் இவனுக்கு ஊர் மேல் எப்பொழுதும் ஒரு தனி மதிப்பும் பிரிய மும் இருந்தது,

சிறிது வேகம் கூட்டியே சென்று கொண்டிருந்தான், ஊருக்குச் செல்கிற வழியில் இரண்டு பக்கமுமாய் அடை கொண்டிருந்த காடுகளில் காட்சிப்பட்ட வெள்ளாமையை அழித்து அதன் மீது கட்டிடங்கள் கனரக மற்றும் மித ரக இயந்திரங்களை ஒரு சேர அடை கொண்ட மில்களும் சிறியதும் பெரியது மான வீடுகளுமாய் இருந்தன,

காட்சிப்பட்டவீடுகளின் வெளிப்புற சுவர்களில் பூசப்பட்டிருந்த வர்ணங்கள் இவன் மனதைப்போல் கலர்க்கலராகவும் புதிது பட்டும்/

ஊருக்குச் செல்கிறது வரை இது போல் பராக்குப்பார்த்துக் கொண்டேதான் சென்றான்.

இந்த வயதிலும் யார் ,என்ன, எங்கே, என்னது, ஏன், எப்படி,,,,,என பாராக்குப் பார்க்க வாய்க்கப்பெற்ற பாக்கியமும் உயர்தனமும் கிடைத்திருப்பது ஒரு வரம் போலவே,,,,,,என நினைத்து மகிழ்ச்சி கொள்வதுண்டு சமயத்தில்/

இவன் ஊருக்குச்சென்ற நேரத்தில் அனைவரும் தண்ணீர் பிடித்துக் கொண்டி ருந்தார்கள் தெருக்குழாய்களில்.

ஊர் பொதுக்கிணற்றில் வாளிபோட்டு இறைத்த நீரை இப்பொழுது தெருக் குழாய்கள் தந்து கொண்டிருந்தன.கிராமத்தின் திண்ணைகள் ஓரம் சாத்தி வைக்கப்பட்டிருந்த கலப்பைகள் இருந்த இடத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன,

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தோடு இரு சக்கர வாகன மாய் இவனது வாகனத்தையும் நிறுத்தி விட்டுஅம்மாவீட்டிற்கு செல்கிறான், பூட்டிக் கிடக்கிறது வீடு.சாவியை பையிலிருந்து தேடி எடுத்து திறக்கிறான் கதவை. திறந்த கதவு படியேறி இவனை உள்ளே வரச்சொல்லி அழைத்ததும் மெய் சிலிர்க்கச் செல்கிறான் வீட்டிற்குள்/

அங்கு அம்மா இல்லை, மாறாக புத்தம் புதிதாய் பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்த வீட்டின் எதிர்ப்புறச் சுவரில் மாட்டப்பட்டிருந்த போட்டோவில்,மாலைக்குப் பின்னால் வாய் கொள்ளாத வெள்ளந்தியான சிரிப்புடன் ரூபமாயும், அரூப மாயும் மாறி மாறி காட்சிப்பட்டார்,

“இனி அவர்கள் இருந்த இடத்தில் அவர்கள் இல்லை,அவர்கள் அமர்ந்திருந்த இடம் வெற்றிடமாகவே,அவர்கள் நின்ற இடமும் நடந்த இடமும் இனி வெற்றிடமாகவே/,அன்பும் பிரியமும் வாஞ்சையுமாய் அவர்கள் இட்ட சோறும் குழம்பும்,வெஞ்சனமும் இனி காணக்கிடைக்கப்போவதில்லை. இடுப் பில் கைவைத்துஅரட்டி சண்டை போட்டுவாதிட்ட நாட்கள்இனி வரப் போவ தில்லை, வாழ்நாள் முழுக்கவுமாய் பிள்ளைகளை வளர்க்கவும் ஆளாக்கவும் அவர்களை நல்லதான ஒரு இடத்தில் அமர வைக்கவுமாய் பாடு பட்டு ஓடாய் தேய்ந்த அந்த திரு உரு இனி காணக்கிடைக்கப்போவதில்லை. மறையப் போவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வரை தனி ஆளாய் உறை கொண்டு தன்னையும் தன் குஞ்சுகளையும் இறக்கைக்குள் வைத்து பாது காக்கிற தாய்க் கோழியாய் தன்னை உருவகித்துக்கொண்ட ஈர உள்ளம் இனி காணக் கிடைக் காதுதான் என்கிற நினைப்புடன் அவர்கள் வாழ்ந்து மறைந்த அந்த வீட்டைச் சுற்றிப் பார்த்து விட்டு படியிறங்குகையில் தடுக்கி விட்ட ஒற்றைக்கால் அவர்களின் அந்திமத்தில் இறுக்கிப்பிழியப்பட்ட கறும்புச் சக்கையாய் படுத்தி ருந்த கட்டிலை நோக்கி முன்னேறி தொட்டுக்கும்பிட்டு வருமாறு பணிக்கிறது,

அவ்வாறே செய்து விட்டு வீட்டை விட்டு வெளிவரும் முன் அம்மாவின் திரு உருவப் படத்திற்கு முன் விளக்கேற்றி வைத்து விட்டு படியிறங்குகிறான் கதவை பூட்டி விட்டு/

பூட்டி கொள்ள மறுத்த கதவின் உள்ளிருந்து பக்கவாட்டாக எட்டிப்பார்த்த அம்மாவின் திரு உரு இவன் கன்னத்தை அழுந்தப்பற்றி முத்தமிடுகிறது வாஞ்சை மிக,,,/

கண்ணீர் மல்க முத்தத்தை ஏற்றுகொண்ட இவன் பின்னால் திரும்பிப் பார்த் தவாறே வருகிறான்,போய் வாருங்கள்,தாயே போய் வாருங்கள் என்கிற சொல் தாங்கியும் மறைந்து நான்கு நாட்கள் ஆகிப்போன தாயின் திரு உருவை மனதில் ஏந்தியவனாயும்,,,,/

12 Oct 2017

துளிர்ப்பு,,,,,,

தண்ணீர் ஊற்றியதை தவிர்த்து பெரிதாக என்ன செய்து விட்டோம் அவைகளு க்கு?

கூடவேகொஞ்சம்பிரியமும்,பாசமும்என்றுவேண்டுமானால் சொல்லிக் கொள் ளலாம். நான் ஒரு குடம்,எனது மனைவி ஒரு குடம்,மூத்த மகன் ஒரு குடம், இளைய மகள் இரண்டு குடங்கள் எனமாற்றி, மாற்றி ஊற்றிய தண்ணீர் மண் பிளந்து,துளிர்த்துநெடித்தோங்கி,உயர்ந்துகிளைபரப்பி,பூவும்,பிஞ்சும்,இலைகளும், காய்களுமாய் நிற்கிறது.

அதென்ன அவள் மட்டும் இரண்டு குடம்?ஆமாம் அவளுக்கு மரங்களின் மீது அலாதிபிரியம்உண்டு.மனிதர்களீன்மீதும்தான்/

வேப்பமரங்கள் இரண்டு+ஒன்று=மூன்று,பன்னீர் மரங்கள் இரண்டு,அதோ நீங்கள் பார்க்கிற அந்த சிறு வெற்றிடத்தில் நின்ற நெல்லிக்காய் மரம் நிலைக்க வில்லை.பூச்சி விழுந்து இறந்துபோனது.அது தவிர நீங்கள் நிற்கிற இடத்தி லும், மூலைக்கொன்றாயும்,வரிசைதப்பியுமாய் ஊன்றி வைத்திருந்த நெட்லி ங் கம் மரங்கள் வேர் புழு வந்து இறந்து போனது.

மனிதர்களுக்குமட்டும்தானா,மரங்களுக்கும்,தாவரங்களுக்கும்நோய்வந்து விடுகிறதுதானே?

நட்டு முளை விடுக்கிற நேரத்தில், பயிர்விளைந்து முழுதாகபலன்தருகிற நேரத்தில்,இவை இரண்டும் இல்லையென்றாலும் கூட இடையில் வந்து விழு ந்து விடுகிற நோயில் கருகிப்போகிற அல்லது மடிந்து விடுகிற நோய் தாக் கிய பயிர்களையும்,இதுமாதிரியான மரங்களையும் நட்ட விவசாயி நிலத்தில் விதைத்ததைகையில்அள்ளிபலனாய்பார்க்கிறவரைமனதில்ஈரத்துணியைசுற்றிக் கொண்டுதான் திரியவேண்டியிருக்கிறது.

எங்களைப்போலவீட்டைசுற்றியிருக்கிறபக்கவாட்டுவெளிகளில்மரம்,செடி நடுகிறவர்களின்கவலைமனதரிக்கிறஅளவிற்குஇல்லாவிட்டாலும் கூட மன மரிக்கிறவர்களின்கவலையைதன்னில்தாங்கப்பழகிக் கொண்டவர்களாகவும், மரங்க ளின் மீதுதனி காதல் கொண்டு இப்படி இரண்டு குடங்கள் தண்ணீரை மொண்டு கொண்டு ஊற்றுவாள்.

அதிலும் அந்த பன்னீர் மரங்கள் மீது அவளுக்கு தனிபிரியம் உண்டு.அதுதானே பூக்களைச்செரிகிறது.இலைகள் உதிர காய்கள் விழ,பிஞ்சுகள் கிடக்க மரங்களி லிருந்து செரிந்த பூக்களை பூ ஒன்று நடமாடி பெறக்கி எடுத்த காட்சியை காண கண் கோடி வேண்டும் போலிருக்கிறது.

பன்னீர மரப்பூக்களை பொறுக்கி நீட்டிய உள்ளங்கையில் வரிசையாக வைத்து பார்ப்பாள்.வலது கையால் எடுத்து இடது கையில் அடுக்கி வைத்து இரண்டு கைகளாலும் தொடுத்து தலையில் சொருகிக்கொண்டு வளைந்த நாணலாய் நடந்து வருவாள்.

அவளது ஆசைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.ஆனாலும் அணையிட்டு விடவும் முடியவில்லை.செய்யட்டுமே இதுமாதிரியானவைகளை அவள் மன லயங்களிலிருந்து மீட்டெடுத்தவாறு/

“ஏன் இப்படியெல்லாம் செய்யிற அசிங்கமா” எனச்சொல்லும் அவளது அண்ண னின்காதில் இரண்டு பூக்களை சொருகிவிட்டு நாக்கை சுழற்றிக்கொண்டு முன் வரிசைபற்கள் தெரிய வாய் கொள்ளாமல் சிரிப்பாள்.

“போ அங்கிட்டு” என அந்த சப்ததை பார்த்து அதட்டும் அவளது அப்பாவிடம் “ஊம் அவன் மட்டும் நேத்து ஏன் ஜாமெண்ட்ரிபாக்ஸ தூக்கீவச்சிக் கிட்டான்” .என முகப்பலிப்புக்காட்டி அப்பாவின் கழுத்தை கட்டிக்கொள்ளுகிற அவளைப் போல் உள்ள பிள்ளைகளின்,பையன்களின் பேனா, ஜாமெண்ட்ரி பாக்ஸ் வரை மறைந்து போகிறதாய் சொல்லப்படுகிற புகார்கள் வீடுகளெங்கும் நிறைந்து போய்த்தான் உள்ளது.

“ஏன் அப்படி”? அவைகளைமட்டுப்படுத்த வேண்டியதுதானே?என்கிற கேள்விக ளுக்கு “விடுங்கள் அதெல்லாம் வேண்டாம்,நடந்து விட்டுப்போகட்டும் இது மாதிரியானநிகழ்வுகள்என்பதேபதிலாய்இருக்கிறது.

அடித்துக்கொள்கிறசகோதர,சகோதரிகளும்காணாமல்போகிறஅவர்களதுபேனா, பென்சில்களும்,ஜாமென்ட்ரிபாக்ஸீகளும்தொடுத்துச்சொல்லப்படுகிறஅவர்களது
புகார்களும்இருக்கிறவரை வீடுகள் நிறைந்தே காட்சியளிக்கிறது.

அந்தகாட்சிகளின்வெளிப்படுதலில்அன்பும்,கோபமும்,கண்டிப்பும்மனலயங்க
லிருந்து மீட்டெடுக்கப்படுகிறநெகிழ்தலும்நடந்துபோய்விடுகிறதுதான்.

அப்படியான நடப்புகளும், பிள்ளைகளின் அசைவுகளும், பூப்பெறக்கல்களும்,
பூத்தொடுத்தல்களும்நன்றாகவேயிருக்கிறதுபார்ப்பதற்கு.மனம்லயிக்கவும்,
ரசிக்கவும்முடிகிறது.

வாய்கொள்ளாஅவளதுசிரிப்பிலும்,கைவிரித்துமலர்ந்த அவளது மென்ஸ்பரிச த்திலும்  மனம்அவிழச்செய்து விடுகிறாள்.

தண்ணீர் ஊற்றியதை தவிர்த்து என்ன செய்தோம் அவைகளுக்கு?கூடவே கொஞ்சம்,பிரியமும் பாசமும்/

9 Oct 2017

பாவு,,,,

கண்டகனவின்பரிமாணம்எட்டுதிக்கும்நீட்சிபெற்று நெசவோடித்தெரிவதாக/

நான்,அவன்மற்றும்இன்னும்சிலருமாக அமர்ந்திருந்தோம். புற்கள்பூத்திருக்க, செடிகள் முளைத்திருக்க நெடித்தோங்கி நின்ற முள் மரங்கள் மற்றும் சில வுமாய் காற்றில் உடலைசைத்துஆடிக்கொண்டிருக்க,,,,,, இவைகளின் ஊடாக வும், அவைகளை உரசியவாறுமாய் பறந்து திரிந்த பட்டாம் பூச்சிகளும், தரையில் ஊர்ந்த இன்ன பிறவுமாய் தரையில் செடிகளினூடாகவும் அதன் உதிர்ந்த இலைகளினடி நிழலிலுமாய் ஒதுங்கி ஊர்ந்து கொண்டிருந்த புழு, பூச்சி,எறும்புகளை நலம் விசாரித்தவாறும் அவைகளை நோக்கி நேசமுடன் சிறகசைத்தவாறும்,மரங்களின்,பூக்களின் செடிகளின்இலையுதிர்வும்,தலைய சைவும் எங்களைநோக்கிஇருந்ததாகவும்,எங்களைப்பார்த்து சிரித்ததாகவும்/

ஹாய்நலமாநலம்தான்சாப்டீர்களாசாப்பிட்டோம்தரையிலிருந்தபுரதங்களே எங்களுக்கு சிறப்புணவு / 

குளித்தீர்களா?நேற்றுபெய்தமழையில்தான் குளித்துத்தீர்த்தோம்.இன்று மழை வரும் போல தெரிகிறது.வந்தால் திரும்பவும் குளிப்போம் ஆசைதீர/ மிதமா னது முதல் பலமானது வரை என்ன கொஞ்சம் ஜலதோசம் பிடிக்கும். ஆகவே வர்ண பகவானிடம் சொல்லி மழைக்கு லீவு விடச் சொல்ல வேண்டும். நாங்களும் விண்ணப்பிக்கிறோம்.

முடிந்தால் நீங்களும் பரிந்துரை பண்ணுங்களேன்,தூங்கி விட்டீர்களா? தூங்கி னோம் இரவின் மடியில்.எங்களினடியில் தூங்கி விடுகிற யாராவது நாங்கள் வெளிவிடுகிற கரிய மில வாயு தாக்கி பாதிப்படைந்து விடக்கூடாது என்கிற விழிப்புடன்பாதிதூக்கத்துடன்தூங்கியும்தூங்காமலும்இருக்க வேண்டியதாகிப்போகிறது.

மறுநாள் அதுவே தீராத உடல் அசதியாகிப்போக அடிக்கிற காற்றுக்குஎங்களது உடலை அசைக்ககூடபெரும்பிரயணத்தட்டுப்போகிறோம். என்கிற பெரு மூச்சு டனும்,ஆதங்களுடனுமாய் சொன்ன அவைகளை நேசிப்புடன் பார்த்தவாறு ஓடை, ஒடப்புகள் ஓடித்தெரிந்த பள்ளமும்,மேடுமான சமமற்ற சமவெளியில் எங்களது இருக்கை பாய் விரித்து/

நான் அவன்,மற்றும் இன்னும் சிலருமாக அமர்ந்திருந்த வெளியில் எங்களின் முன்பாக சற்று இடைவெளிவிட்டுஒரு குடில்/

அதனுள் யார் தங்கியிருக்கிறார்கள்?அது அங்கு அங்கு ஏன் அனாவசியமாய் என்கிற கேள்விகளை பின் தள்ளி விட்டு முன் நின்று காட்சியளிப்பதாக/

காட்சியளித்தகாட்சியின்முப்பரிமாணங்கள் அடர்த்தியாகவும்,மிதமற்றுமாய்/
குடிலைவிட்டுதள்ளிகுடிலின்வலதுபக்கமாகநின்றுகொண்டிருந்த,நின்று கொண்டிருந்த என்ன,,,,?பாடம்நடத்திகொண்டிருந்த அவர் என்னையும் எனது நண்பரையும்,பிறரையும் நோக்கிசபதமில்லாமல்ஏதோசொல்கிறார்.

கறுப்பு நிற பேண்டும்,ஊதாக்கலரில் கோடுகள் ஓடிய சட்டையுமாய் தென்பட்ட அவர் என்ன சொன்னார்?அது என்ன வகுப்பு?நாங்கள் ஏன் அங்கு அமர்ந்தி ருக்கிறோம் என்பது தெரியாமலும்,புரியாமலும்/

தரை தவழும் குழந்தை,தன் பூம்பாதங்கள் தரையில் பதிய வைக்கிற முதல் எட்டு போலான அவரது பேச்சு மிருதுதன்மை வாய்ந்ததாக இருந்த நேரத்தில் எனது நண்பனின் தந்தை வருகிறார்.

அவர் ஒரு விவசாயக்கூலி.தோட்டம்,காடு,வயல் கிணறு வெட்டு,மரவெட்டு வேலைகொத்து வேலை என எல்லாவற்றிலும் அவரது கரங்களும்,உழைப்பும், வேர்வை வாசமும் கலந்து இருக்கும்.

தேடிவந்துநண்பனிடம்பேசிக்கொண்டிருந்தவரைபாடம் நடத்தியவர் பார்த்து விடுகிறார்."என்ன அங்க பேச்சு" என நெற்றி சுருக்கி இடுங்கிய கண்களுடன் வந்த அவர் ஆழ்ந்த பார்வையால் எனது நண்பனையும் அவரது தந்தையையும் பார்க்கிறார். கூடவே என்னையும்சேர்த்து/

அருகில்அமர்ந்திருந்தவர்களெல்லாம்திரும்பிப்பார்க்கஎனதுநண்பனைபார்த்து யாரது என அதட்டியவராககேட்டபோது தந்தைஎன்கிற அடையாளத் தை சமர்ப்பித்த அவன் அவரைப்பற்றி சொல்கிறான்.

"பரவாயில்ல,இத்தனகஷ்டத்துலயும் புள்ள இங்கவந்துஇலக்கியம் படிக்கனும் னு அனுப்பி வைக்கிறீங்களேரொம்பசந்தோசம்எனஎனது நண்பணினது தந்தை யின் வியர்வைமின்னியவெற்றுடலைகட்டிக்கொள்கிறார்.வாரி அணைத்துக் கொள்கிறார். புழங்காகிதப்படுகிறார்.

பரஸ்பரம் புழங்காகிதப்பட்ட இருவர் மனதிலிருந்தும் ததும்பியமௌனவார்த் தைகளையும்,கண்ணீரையும் சுமந்து அங்கு நிறைந்து படர்ந்து காட்சி தருகி றார்கள்.

நான் நண்பனை பார்க்க,நண்பன் என்னை பார்க்க நான் அன்றலர்ந்து விரிந்து நிற்கும்பச்சைகளையும்,மரங்களையும்கண்ணுற்றவனாய்நண்பனின்கரம்பற்றி அமர்ந்திருகிறேன்.

கண்டகனவின்பரிமாணம்எட்டு திக்கும் நீட்சி பெற்று நெசவோடித் தெரிவதாக/ இது மாதிரியான கனவுகள் அடிக்கடி வரட்டும்.தினசரி வந்தாலும் எனக்கு சம்மதமே/

24 Sept 2017

உருண்டை பல்பு,,,,,,,,

கரண்ட் போய் விட்டதே என கையைக்கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த இரவு 12 மணி நிசப்தத்தில் வந்த கைபேசி அழைப்பு அவள் பஸ் ஏறி விட்டதை உறுதிப்படுத்துகிறது.
பஸ்ஸினுள்ளே ஏறி அமர்ந்து விட்டோம் இன்னும் ஒரு பஸ்ஸிற்கு ஆட்கள் காத்துக் கொண்டு நிற்கிறார்கள்,அந்த இன்னொன்று வரவும் இரண்டு சேர்ந்து செல்வதாக ஏற்பாடு.
இன்னமும்ஒருகால்அல்லதுஅரைமணிப்பொழுதுதாமதமாகலாம்பஸ்கிளம்ப,
கிளம்பியஉடன்திரும்பவுமாய்போன்பண்ணுகிறேன்அல்லதுநீங்களேபண்ணுங்கள்,அடுத்தவரிடம் போனை வாங்கி அடிக்கடி பேசுவது அழகுமல்ல.”
“வீட்டில்இருந்தஇரண்டில் ஒன்றை உங்களுக்கும்,மற்றொன்றை வெளியூரில் விடுதியில்தங்கிப்படிக்கும்மூத்தமகளுக்குமாய்பிரித்துஎடுத்துக் கொண்டீர்கள்.
ஆகவே நான் எடுத்துச் செல்ல போன் இல்லாமல் போனது.இனி ஒவ்வொரு வீட்டிலுமாய்எத்தனை பேர்இருக்கிறார்களோஅத்தனைசெல்போன்களும்,
அத்தனை இரு சக்கர வாகனங்களும் வாங்க வேண்டும் போல் இருக்கிறது”
“பெரும்பாலானோர்இரவுஉணவுஇல்லாமல்படுக்கைக்குசெல்கிறதேசத்தில்
இம்மாதிரியானஆடம்பரங்களும்அத்தியாவசியதேவைகளாய் கடை விரித்துக் காண்பிக்கப்பட்டு மனித மனதில் விதையூன்றி வைக்கப்படுகிறது யாருக்கும் தெரியாமலும், மிகவும்ரகசியமாகவும்/என சொல்கிற அவள்இந்த ஆடம்பரம் நாமாக விரும்பி ஏற்றுக் கொண்டதா அல்லது நம் மீது வலிய திணிக்கப் பட்டதா தெரியவில்லை” என்கிறாள்,
“ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு வரை இல்லாத பழக்கம் இத்தனை வருடங் களில்? வ்வளவுசீக்கிரமாகவும்,பூதாகரமாகவும்எப்படிவளர்ந்துதன்பூதஉருவம் காட்டிநிற்கிறது?என்கிற அவளது கேள்விக்கு பதிலில்லை அவனிடம்.
“கருப்பட்டிப்பானையை கொண்டு வந்து மூக்கருகே வைத்து முகர்ந்து பார்த்து அதன் வாசனை சொல்லுங்கள் என்றால் யார்தான் பானைக்குள் கைவிடாமல் இருப்பார்கள்?
காண்பிக்கப்பட்டகருப்பட்டிப்பானையைப்போலநிறையவைத்துகடையைவிரிக்கிறார்கள்தான்.கடையையும்,கடைசரக்கையும்பார்த்தவுடன்இயல்பாகஎழுகிற ஆசையாகவும்,தூண்டிவிடப்பட்டஒன்றாகவும்தானேஇருக்கிறது.அப்படி
தூண்டியவர்கள்கெட்டிக்காரர்களாகவும்தூண்டப்பெற்றநாம்இப்படிசீரழிந்துமாய் காணப்படுகிறோம்”எனச் சொன்னவள்அவர்கள்வீடிருக்கிறவீதிபக்கத்து வீதிஎன பத்துப்பேருடன் சேர்ந்து டூர் செல்கிறாள்.
“திருச்செந்தூர்மற்றும்,மற்றும்எனஐந்தாறுஊர்களின்பெயர்களைசேர்த்துச் அச்சடிக்கப்பட்டிருந்தநோட்டீஸை காண்பித்து பக்கத்து தெரு ஸ்டேட் ஸ்டேட் பேங்க் அக்கா சொன்னார்கள்,
“ஆளுக்கு இவ்வளவு,சாப்பாடு நம்ம பொறுப்பு எனஅவள்சொன்ன கணங்களில் அவன் மனைவி,இளைய மகன் மூவருமாய் சேர்ந்து சொல்வதாக ஏற்பாடாகி அட்வான்ஸீம் கொடுத்தாகி விட்டது.
அந்த ஏற்பாட்டின் வேரில் ஊற்றப்பட்ட வெந்நீராய் அவனுக்கு அலுவலகத்தில் லீவுகிடைக்காமல்போனதும்,சின்னவன்“மேட்ச்இருக்கிறது,நான்வரஇயலாது”
எனச்சொன்ன சொல்லும் பதிவான தினத்தன்றிலிருந்து அவள் மட்டுமே போவ தென எடுத்த முடிவை இன்று கையில் தூக்கி சுமந்து கொண்டு செல்கிறாள்.
நல்ல மனுசி.அவனை நம்பி அவனை கரம் பிடித்து வந்த நாளிலிருந்து அவளு க்கெனதனித்த ஆசைகள்,விருப்பு,வெறுப்பு,ஏதுமற்று வாழ ஆரம்பித்த அவளது மனவெளி மிகவும் பெரியது.உடல்,பொருள் ஆவி அனைத்தையும் அவனிடம் ஒப்படைத்துவிட்டுஎங்கவீட்டுக்காரரு,எங்கவீட்டுக்காரரு,,,,,,,,,எனஇருந்தஅவள் இப்போது பிள்ளைகள் என்கிற வார்த்தைகளையும் சேர்த்துக்கொள்கிறாள். அதெல்லாம் சேர்க்க வேண்டியதுதான்,இருக்க வேண்டியதுதான்.அதற்காக தன் சுயம் மறைகிற அளவிற்கா?
அவளைக் கேட்டால் என்ன இப்போ கெட்டு விட்டது அதனால் என்பாள்.அந்த அதனாலில்அடங்கிப்போயிருக்கிறஅவளதுஇயந்திரத்தனமானஅன்றாடங்களின் மத்தியில் இன்று டூர் செல்கிறாள் அவள்.
“தேவையானதை எடுத்து வச்சிக்க,காலையிலைக்கு இட்லி எடுத்துக்க,மதியம்  
இரவும்எனஇருபொழுதுகளுக்குஎங்காவதுகடைகளில்சாப்பிட்டுக்கொள்ளுங்கள். எங்குபோனாலும்மொத்தமாகவேஆட்களுடன் போய் வா,தனியாக செல்லாதே எங்கும்,பணத்தைஎடுத்துக்கொள்தேவையானஅளவிற்கும்சற்றுஅதிகமாகவே, துணிமணிகளின்விசயத்திலும்அப்படியேசெய்துகொள்”என்கிறசொற்கட்டையும்,இன்னும்சிலவற்றையுமாக சேர்த்துக்கட்டிஅவளிடம்தந்துவழியனுப்பிவிட்டுகரண்ட்போனஇரவின் அமைதியில் 
இருந்து எழுந்திரிக்க மனமில்லாமல் அமர்ந்திருந்த பொழுது அவளிடமிருந்து கை பேசி அழைப்பு வருகிறது மறுபடியுமாய்.
அழைப்பிற்கிணங்கிபோனைஎடுத்து ஹலோ சொன்ன வேளையும் அணைந்து
இருந்த கரண்ட் திரும்பவுமாய் வந்த வேளையும் ஒன்றாக இருந்தது.
ட்யூப் லைட் எரிந்தது, பேன் சுழன்றது. வீடு வெளிச்சம் பெற்றது. கூடவே அவளது நினைவுகளும்/ 

26 Aug 2017

கிராதிப்பூக்கள்,,,,

 
வீடு தாண்டிப்போகும் போது நிலை வாசல் கேட்டின் ஓரமாய் இடித்து விடுகி றது.

இடித்து விட்ட கை வலதுகையாய்ப்போகிறது.டாக்டர் சொல்லியிருந்தார் கை வலி எனப்போனபோது,கொஞ்சம் கவனமாக இருங்கள்,முக்கியமாக கிராதி வைத்தஇரும்பு கேட்டை கடக்கையில் கொஞ்சம் பார்த்து,,,/

கேட்டைகடக்கையில் கூட ஒன்றும் இல்லை சார்,மனிதர்களைக்கடைக்கை யில் வேலை நேரத்தில் வேகமெடுத்து விடுகிற கை வேலைகளை இழுத்துப்போட்டு செய்து விட்டு அப்புறம் கை வலி கால் வலி என இழுத்து வைத்துக்கொண்டு வந்து நின்றால் என வைகிறார் டாக்டர்,

என்ன செய்யச்சொல்றீங்க சார்,காக்காவலிப்புக்காரனுக்கு கையில இரும்பக் குடுத்தாத்தான் நிக்கும்ங்குறது மாதிரி எனக்கு வேலைக்குப்போற யெடத்துல்க அப்பிடி பரபரப்பாவும் வேகமாவும் இருந்தாத்தான் வேலை செஞ்சது போல இருக்கு,நான் என்ன செய்யட்டும் சார்,இது மாதிரியான வேகம் நிக்கிறதுக்கு வேணுமுன்னா ஏதாவது மருந்து மாயம் இருந்தாக்குடுங்க என்றபோது சார் சும்மாயிருங்க நாட்டுல தன்னால ஒங்க வயசுல வேகம் இல்லைன்னு சொல் லி ஏங்கிட்ட வர்றவங்க வேகம் வேணும்ன்னு ஏங்கிட்ட மருந்து வாங்க வர்றாங்க,நீங்க என்னடான்னா இருக்குறத வேணாம்ன்னு சொல்லி மருந்து மாயம் வேணாம்ன்னு சொல்லி வந்து நிக்கிறீங்க,,,/

அதெல்லாம் வேணாம் மொதல்ல இந்த யெடத்தவிட்டுகெளம்புங்க,வேகம் ஒங்களோடயேஇருக்கட்டும்,நிதானமானவுங்கஏங்கிட்டவந்துவேகம் வேணும் வேகம் வேணுமின்னு மருந்து மாயம் வாங்கீட்டுப்போகட்டும்,

தானா வாய்ச்ச வரப்பிரசாதத்த கைவிட்டுறாதீங்க,என்று சொல்லியவராய் அனுப்பி வைத்த டாக்டர் இவன் ஆஸ்பத்திரியை விட்டு கடக்கையில் டாக்டர் சொன்னார்,

சார் ஒங்களுக்கு இந்த பேண்டும் சர்ட்டும் நல்லாயிருக்கு சார்,என/ பிரவ்ன்க் கலர் பேண்ட்டும் வெள்ளை சட்டையும் அணிந்திருந்தான்.

அணிந்திருந்த சட்டை ரெடிமேடாகவும் பேண்ட் தைத்துபோட்டதாகவுமாய் இருக்கிறது,முன்பெல்லாம் அளவு கரெக்ட் கச்சிதம்,,,என தைத்த துணிகளில் ரகம் பார்ப்பவன் இப்பொழுதெல்லாம் தைத்து வந்தவுடன் போடுவதற்கு சரியாக இருக்கிறதா போதும் என விட்டு விடுகிறான்,கரெக்ட்டும் கச்சிதமும் ரெடிமேட் சர்ட்டுகளில் இல்லாதபோதும் அமையாத போதும் கூட அட்ஜெஸ்ட் செய்து அணிந்து கொள்கிறான்,

அந்த அட்ஜெஸ்ட்டே இவனது ஆடை டேஸ்டை மாற்றி இருக்கிறது போலும், முன்பெல்லாம் கறுப்புக்கலர் பேண்ட்,அதற்கு மேட்சிங் அற்று ஏதோ ஒரு கலரில் ஒரு சட்டை,இதுதான் இவனது உடை நாகரீகமாக இருந்தது,அதிலும் டீ சர்ட் என்றால் கொஞ்சம் விருப்பம் அதிகம்.டீ சர்ட் தேடி பைத்தியமாக அலைவான்,ஊர் காட்டில் இருக்கிற கடைகள் எங்குமாய்.

அப்பொழுதெல்லாம் கடன் வைத்து துணி எடுக்கிற அளவிற்கு பழக்கம் கிடை யாது.பஜார்ப்பக்கமாய் போகிற போது பார்த்து வைத்துக்கொள்வான், அடுத்த மாதம் சம்பளம் வாங்கியதும் போய் முதல் அல்லது கொஞ்சம் தாமதமாக வேனும் வாங்கிக் கொள்வான்.

அப்பொழுதெல்லாம் கட்டம் போட்ட சட்டை மீதும் ப்ளைன் பேண்ட் துணி போடப்பிடிக்காது,இப்பொழுது அது போலான துணிகள் மிகவும் பிடிக்கிறது.

ஆனால் போடுவதற்கும் வாங்குவதற்குமாய் கொஞ்சம் கால தாமதம் ஆகிப் போகிறது.

அதற்குள்ளாய் வேறொரு டிசைன் வந்து விடுகிறது,இருந்தாலும் இவனுக்கு கட்டம் போட்ட சட்டை மீது இவனுக்கு மேகம் குறைந்த பாடாய் இல்லை.

செல்கிற வேலையின் அவசரம் கருதி நடையையோ ,நடை வாசலில் இருக் கிற கேட்டையோ அல்லது எதிர்ப்படுகிற மனிதர்களையோ இடித்து விடுகிறது போல் செல்ல வேண்டாம்,அது உங்களுக்கும் உங்களைச்சார்ந்திருக்கிற மற்ற வர்களுக்கும்உறவுகளுக்கும்நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் நல்லதில்லை. எச்சாரிக்கை என்றிருந்தார் டாக்டர்.

வீட்டில் கூட சொன்னார்கள்,ஏன் இப்பிடி மடமடன்னு திரியிறீங்க,பரபரப்பா திரியாம மெல்ல நிதானமா சூதானமா போனாத்தான் என்னவாம்,

அவர்கள் சொல்கிற நிதானமும் சூதானமும் வேறு வேறு பட்டதாய் தெரிகிற து.

அந்த வேறு படல்களில் இவன் எப்பொழுதும் எச்சரிக்கையாகவே இருக்கிறா ன், ஆனாலும் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

வாஸ்தவம்தான் கொடுத்த எச்சரிகையை மீறிச் செல்கிற போது ஏதாவது இது போல் நடந்து விடுகிறதுதான், கடந்து போன வாரத்தின் ஒரு நாளில் அலுவல கத்தில் ஏதோ ஒரு வேலையின் காரணமாக வேகம் காட்டி சென்ற போது எதிர்த்தாற்போல் வந்த உயர் அதிகாரியின் மீது இடித்து விடத் தெரிந் தான்,

அவர் கூட பின்னால் ஒரு அலுவலக ஊழியரிடம் சொன்னதாக சொன்னார் கள்,ரொம்பவும்தான்வேகமாகஇருக்குறாருஎன/இதுதான்எனதுமைனஸாகவும் பிளஸாகவும் இருக்கிறது என்றான்,அப்படிச் சொன்ன நபரிடம்/

சரி விடுங்க அப்பிடித்தான் பிளஸ் மைனஸ் கலந்ததுதானே வாழ்க்கை,அதில் அடுத்தவர் விருப்பம் பார்த்தோ நாம் நடந்து கொள்ள முடியாது.பார்ப்போம் இருக்கும் வரையும் ஓடும் வரையுமாய். இருக்கும் வரையுமாய்ஆடிஅசைந்து கூட ஜீவிதம் செய்து கொள்ளலாம்,ஆனால் ஓடும் வரை வேகம் காட்டித் தான் ஆக வேண்டி இருக்கிறது என அந்த நண்பரிடம் சொன்ன போது சரி அப்படியே செய்து கொள்ளுங்கள்,

ஆனால் காட்டுகிற வேகத்தில் எதிர் வருகிற எங்களை கீழே தள்ளி மென்னி யில் ஏறி மிதித்துவிட்டு சென்று விடாதீர்கள்.என்ற போது ஐய்யையோ அப்படியெல்லாம் ஆசை இல்லை சார் எனக்கு,என் பணி சுமந்த அவசரம் அப்படி,அதனால் ஓடுகிறேன்,இல்லையெனில் அப்படியெல்லாம் போக வேண் டிய அவசியம் எனக்கு இருக்காது என நினைக்கிறேன் என்ற போது சொன் னவர் சிரித்தார் இவனது தோள் தட்டி/

நேற்றைக்கு முன் தினம் அலுவலகம் வந்திருந்த வாடிக்கையாளர் சொன்னார் ரொம்ப வேகமா இருக்கீங்களே சார் என,

ஆமாம் எங்களை நம்பி வருகிற உங்களை விரைவில் உங்களது பணி முடித் து அனுப்புவது எங்களது கடமை, தவிர இந்த இடத்தில் அமர்ந்து கொண்டு டல்லாகவும் சோம்பேறித்தனம் பூசியும் அமர்ந்திருந்தேனானால் என்னைப் பார்க்கிறவர்களுக்கும்அலுவலகத்திற்குவருகிறவாடிக்கையாளர்களுக்குமாய் மனம் சூம்பிப்போகக்கூடும்,ஆகவே பிடிக்கிறதோ இல்லையோ இது போல் நடந்துகொள்ளபழகிவிட்டேன்எனஅவரிடம்சொன்ன போது உண்மையிலேயே உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட் சார்,எனச்சொல்லி விட்டுப்போனார்,

பச்சை நிறம் வைத்த இரு சக்கர வாகனத்தை நிறுத்துகிற இடத்தில் நின்றி ருந்த கொன்றை மரத்தில் பூத்து அடர்ந்திருந்த பூக்களை சுமந்திருந்த மரம் அந்த இடத்திற்கு அந்நியபட்டுத்தெரிந்ததாய்/

வண்டியை நிறுத்துகிற போதெல்லாம் மெலிதாக அடிக்கிறமூத்தி நாற்றத்தை தாங்கிக்கொண்டுதான் நிறுத்திவிட்டுவரவேண்டியதாய் இருக்கிறது,

அலுவலகத்திற்கு பக்கத்தில் இருக்கிற அந்த சந்தும் சந்தில் நிலை கொண்டி ருக்கிற பூக்கள் சுமந்த கொன்றை மரமும் அந்த இடத்திற்கு அந்நியப்பட்டுத் தெரிந்ததாக/

வாங்கம்மா நல்லா இருக்கீங்களா என்பதே மாதம் முதல் இரண்டு நாட்களுக் குள்ளாக அலுவலகத்திற்குவருகிற அந்த அம்மாவிடம் இவன் முன் வைக்கிற பேச்சாக இருக் கும்,வாங்கம்மாஎப்பிடியிருக்கீங்க ,நல்லாயிருக்கீங்களா, வீட்லஎல்லாரும் எப்பிடியிருக்காங்க,,,,?

நல்லாயிருக்காங்கதம்பி,அய்யாவுக்குதோட்டம்காட்டகட்டிக்கிட்டுபொறழவே நேரம்சரியாஇருக்கு,வாங்க ஒரு நா ஒரு பொழுதாவது ஆபீஸ் பக்கமா போயி ட்டு வருவோன்னு சொன்னா கேக்க மாட்டேங்குறாரு,வேணாம் அதுக்குதான் நீயி இருக்கயில்லன்னு என்னைய ஒதுக்கி விட்டுருறாரு,சும்மா சொல்லக் கூடாது அவரையும், எந்த ஜென்மத்துல என்ன புண்ணியம் பண்ணுனேனோ நான்அவருக்குபொண்டாட்டியாவாச்சதுக்கு/என்னையபொண்ணுபோலபாத்துக் கிறாரு,இந்தஅம்பத்துசொச்ச வயசுல பெரிசா எங்களுக்குள்ளஒண்ணும் கருத்து வேறுபாடோ சண்டையோ வந்ததில்ல,ஏதோ சின்ன சின்னதா அப்பப்ப வர்றது தானே தவிர்த்து பெரிசா ஒண்ணும் இல்ல இது நாள் வரைக்கும் எனச் சொல் பவர் ஏன் ஒத்தையில வராட்டி புள்ளைங்க யாரையாவது கூட கூட்டிக் கிட்டு வரவேண்டியதுதானே என்கிற கேள்விக்கு,,,இல்லைய்யா,,,,,, புள்ளைங்க யாரும் இங்க பக்கத்துலஇல்ல,எல்லாம்தூரத்துலஇருக்காங்க

ஒருத்தன்பெங்களூர்லவேலையாஇருக்கான்,அவன் குடும்பம் புள்ளைங்கன்னு ஆகிப்போச்சி, பொண்ணு உள்ளூர்லயே கட்டிக்குடுத்துருக்கேன்,அவளையும் சும்மாசொல்லக்கூடாது,அம்மாவுக்குஒண்ணுன்னாதுடிச்சிப்போவா துடிச்சி,,,,,,

ஆனாலும் பொழப்ப போட்டுட்டு வர முடியாது,அவளுக்கும் குடும்பம் குட்டி ன்னு ஆகிப்போச்சி, எதுக்குப்போட்டுக்கிட்டு அவள வம்பா இழுத்துக்கிட்டு, எதுக்குஅனாவசியமாஅவுங்களப்போயிக்கிட்டு,,,,,நம்மளாலமுடிஞ்சஅளவுக்கு ஓடுவம்யா,,,முடியா தப்ப வந்து படுத்துக்கிருவோம்,புள்ளைங்க மனசு வந்து பாத்தா பாக்கட்டும், இல்லைன்னா அனாதையா தெருவுல கெடப்போம் என்ன இப்போ என்பார்,

இல்லாம்மா அப்பிடியெல்லாம் சொல்லாதீங்கம்மா புள்ளைங்க அப்பிடி ஒண் ணும்கடினமனசோடஇருந்துறப்போறதில்ல,அவுங்கசூழ்நெல,அப்பிடி இருக்கச் சொல்லுது அவுங்கள,சில நேரம் வந்து உதவி பண்ணனும்ன்னு நெனச்சாலும் செய்ய முடியாமப்போகும்,சில நேரம் செய்யணும்ன்னு நெனச்சி வருவாங்க, இங்கன ஏதாவது முட்டுக்கட்டையா இருக்கும் மனசளவுலயோ,இல்ல நடப்பு லயோ,,என இவன் சொன்னதும் என்ன தம்பி பெரிசா,மனசு நடப்புன்னுக்கிட்டு, என்னமோ,எல்லாம் வந்துக்கிறவள்க பண்ணுற வேல,

அப்பிடியெல்லாம்சொல்லாதீங்கம்மா,பாவம்அவுங்கசூழ்நிலைஅங்கஎப்பிடியோ, தெரியலையில்லம் மா பாவம்,நீங்க தூரத்துலயிருந்து பாக்குறீங்க,பக்கத்துல போயிபாத்தாத்தான்கஷ்டம் தெரியும்,ரெண்டாவது ஒங்க வயசு வேற ,அவுங்க வயசு வேற, எதையும் சீர்தூக்கிப்பாக்குற மனசு ஒங்களுக்கு இந்த வயசுலயும் ஒங்க அனுபவத்துலயும் கெடச்சிருக்கும்மா,ஆனா அவுங்களுக்கு அதுகெடை க்க இன்னும் லேட்டாகலாம்.அதுவரைக்கும் கொஞ்சம் அப்பிடி இப்பிடித்தான் இருக்கும்.பொறுத்துக்கங்க,அவுங்கஎன்ன வருசமெல்லாமும் இப்பிடியா இருந் துறப்போறாங்க,

கவலைப்படாதீங்கரொம்பத்தானா,நீங்கஒங்கயெளம்பிராயத்துலஎப்பிடிஇருந்து
ருப்பீங்க, நாங்களெல்லாம் செய்யிறத விட இன்னும் ரெண்டு மடங்கா இல்ல செஞ்சிருப்பீங்க,இதுலஎங்களப்பத்துன குற்றச்சாட்டுவேற.எனச்சொன்னவனா ய் இன்னும் இன்னுமாய் கொஞ்சம் பேசி விட்டு அனுப்பி வைப்பான் அந்த அம்மாவை/

அந்தம்மாவும் இவனது சொல்லை தட்டாமல் ஏறுக்கொண்டு போய் விடுவார்/

கறுப்புகலர் வைத்து கிராதி போட்ட இரும்பு கேட்,கீழிருந்து கூஜா செய்து பூக்களை வளைய விட்டிருந்தார்கள்.வளர்ந்து நின்ற பூக்கள் எல்லாம் ஒரே டிசைனில் கலர் தரித்து காணப்பட்டதாக/

பூத்திருந்தபூக்களிள்யாவும்ஒன்றின்மீதுஒன்றுஇடித்துவிடாமலும்இடைவெளி விட்டுமாய்காணப்பட்டது.இப்படியாய் ஒன்று போல் ஒன்றன் மீது ஒன்று மோதி சேதப்பட்டுவிடாமலும் மிகையில்லாமலுமாய் தூக்கி வைத்து இந்தப் பூக்களை இங்கு இந்த கேட்டின் சட்டகத்திற்குள் பதியனிட்டு வளர்த்தது யார், என்கிற ஆச்சரியம் கேட்டை கடக்கிற பொழுதெல்லாம் இவனுள்ளாய் பட்டு எழாமல் இல்லை.

இடித்தவலது கையை விடவும் கேட் எழுப்பிய சப்தம் கொஞ்சம் பெரிதாகவே/ வலது கையில் இருக்கிற வலி எப்பொழுதும் போல் கேட்டில் இடித்த போதும் வலிக்கத்தான் செய்தது.புஜத்திலிருந்து புறப்பட்டு கையின் நடுவாந்திரமாய் அடைகொண்டு கைபூராவுமாய் பரவி நிற்கிற வலியாய் இருந்தது.

வீட்டை தாண்டிப்போகும் போது நிலைவாசல் கேட் இடித்து விடுகிறது.

4 Aug 2017

மேட்டுக்குடி,,,,,

சற்றே மேடிட்டுத்தெரிகிறது வயிறு.தன் உடலே தனக்கு அந்நியமானது போல/
 
சற்றைக்குமுந்தையசிலவருடங்கள்முன்புவரைகொஞ்சமாகமேடிட்டுத்தெரிந்ததுதான். ஆனால்இவ்வளவுபெரிதாய்அல்ல.ஏதோசின்னதானஒருஇளம்தொந்திபோன்ற அமைப்புடன் உடலை விட்டுத்துருத்தித்தெரியாமல்உடலுடன்ஒட்டியேதான் இருந்தது. அஞ்சுக்கு ரெண்டு பழுதில் லாமல்.

தினசரிகளின்நகர்வுகளில் எப்படியும் ஐந்து கிலோ மீட்டராவது சைக்கிள் ஓட்டி விடுவான். அலுவலகத்தில் அவனது வேலை அப்படி.கடை நிலை ஊழியனு க்கு ஏது ஓய்வு?அதுவும் தனியார் நிறுவனத்தில்/

கடை நிலை ஊழியருக்கான சீருடையிலிருந்த அவன்அனைத்து நிலைப்பணி யாளர்களுக்கான வேலைகலைச்செய்தவன் அந்த அலுவலகத்தில்/

டீ வேண்டுமா,,,?கூப்பிடு அவரை.பைல் எடுக்க வேண்டுமா அவரை அழை யுங்கள்/ வேறெதுவும் தேவையா கறாராக அழைத்து விடுங்கள் அவரை/ இது போக கம்ப்யூட்டரில் ரிப்பேர், கரன்சி எண்ணுகிற மிசின் வேலை செய்யவில் லையா?எங்கேனுமாவது ஒரு பேங்கிற்கு போக வேண்டுமா? அலுவலகத்தில் ஏதேனும் ஒரு டெக்னிக்கல் ஒர்க்கா?எல்லாம் அவன் தலையில்தான்.

சுவர்கள்சூழ்ந்துநின்றஅலுவலகத்தின்ஊழியர்கள்நான்குதிசைகளிலிருந்துமட்டு மல்ல எட்டு திசைகளிலிருந்தும் அழைக்கிற அழைப்பிற்கு அவன் செவி சாய்த்தும் ஓடோடித் திரிந்துமாய்/

அப்படியாய் ஓடித்திரிந்த பொழுதுகளிலும்,வேலை சுமந்த நேரங்களிலுமாய் சைக்கிள்மிதிஅவனுக்கு சுகம் அளித்ததுண்டு.கால ஓட்டத்தில்தான் தெரிந்தது, அது ஓரு சுகம் அல்ல உடற் பயிற்சி என/அதுவாகவும் இருக்கட்டும், இதுவாக வும் இருக்கட்டும்.என்ன இப்போது என அலைந்து திரிந்த நாட்களில் இருந்த உடல் இல்லை இப்போது. அந்த சுறுசுறுப்பும், ஓட்டமும் ஏனோ குறைந்து போனது இப்போது.

அதுஎன்னவெனத்தெரியவில்லை,அதுஎன்னமாயம் எனப்புரியவில்லை. ஓட்ட ம் குறைந்தும் உட்கார்வது அதிகமாக ஆகிப்போன காரணமாய் இருக் கலாம்.

குழித்தொந்தி என்பார்களாம் அந்த மாநிலத்தில்/அது இல்லாதவர்கள் அங்கு மிகவும் குறைவு என ஒரு அறிக்கை போகிற போக்கில் சொல்லிச் செல்கி றதாய்/

அது மாதிரி அவன் நண்பனுக்கு இருந்தது.நண்பனிடம் அவன் பலசமயங்களில் கேட்டதுண்டு, உனக்கு வயிறு எங்கிருந்து ஆரம்பிக்கிறது,வயிறு ஆரம்பிப்பது வயிற்றிலிருந்தா கழுத்திலி ருந்தா? தெரியவில்லை சொல் நீ எனக்கு என/

அவன் நண்பனாவது பரவாயில்லை.இன்னும் குண்டாக இருக்கிற ஒரு சிலரை பார்க் கிற போது அவனுக்குள் ஒரு நினைவு எழுந்து மறைவதுண்டு. இவர்க ளுக்கெல்லாம் எப்போது தும்பிக்கை முளைக்கும் என/

நினைப்பதுண்டுதான் அவ்வப்போது அல்லது தினசரிகளின் விடியலில் பல சமயங்களில்/ காலையில் சீக்கிரம் எழ வேண்டும். வாக்கிங் போக வேண்டும் அல்லது சைக்கி ளிங்காவது போக வேண்டும் என/எங்கே எதுவுமற்று எதுவு மற்று தூக்கத்தை அள்ளிப் போட்டுக்கொண்டு தூங்கி போய் விடுகிற அதி காலைப்பொழுதுகள் இமைகள் திறப்பதை மறக்கச்செய்து சொக்க வைத்து விடுகிறதுதான்.கூடவே ஓடோடி வந்து போர்த்தி க் கொள்கிற சோம்பலுமாய் சேர்ந்து கொள்ள மெலிதான புரளலுடன் தொடர்கிற தூக்கம் இது எதையும் செய்ய விடுவதில்லை. மாறாக உடல் சோம்பலை வளர்த்து இப்படி குண்டாக்கி வைத்திருப்பதாய்/

சற்றே மேடிட்டுத்தெரிகிறது வயிறு,தன் உடலே தனக்கு அந்நியமானது போல/ கீழ் நோக்கிகுனிகையில் தெரிகிற உடலில் வெள்ளையும் கருப்புமானமுடிகள் அலைபாய்ந்திருந்த உடல் நிறைந்து போன உபாதைகளுடனும், சங்கடங்களு டனுமாய்/

31 Jul 2017

வழி பற்றி,,,,,,

சொல்லாமல் கொள்ளாமல் அவிழ்ந்து விடுகிறது வானம்,அதுவரையாய் சூழ்க் காட்டி கட்டி வைத்திருந்த நீரை மழையாய் பெய்யச்செய்து கொண்டிருந்தது. யாரிடமும்எந்தஅனுமதியும்பெறாமல்எந்தத்தகவலும்சொல்லாமல் இப்படி திடு திப் என வந்து நின்றால்,,,,,,,?கொஞ்சம் பின் வாங்கிப் போகிறதுதான் மனம்.

மழை வந்த நேரம் இவன் போய்க்கொண்டிருந்த இடம் ரயில்வே ட்ராக்காக இருந்தது,

மேம்பாலம்கட்டுகிறபணி ஆரம்பான நாளிலிருந்து இவன் குடியிருக்கிற ஏரியாவாசிகளும்அதைச்சுற்றிஇருக்கிறஊர்க்காரர்களும்ரயில்வேட்ராக்கிற்கு  அந்தப்பக்கமாய்இருக்கிறவர்களும்டவுனுக்குள்போய் வருகிற வழி இதுவாகத் தான் இருந்தது.

இல்லையெனில் இரண்டாவது அல்லது மூன்றாவது கேட் வழியாகத்தான் போக வேண்டும்,அதுவும் இல்லையெனில் மேம்பாலம் ஏறித்தான் பயணிக்க வேண்டும்.

அப்படியாய் பயணிப்பதும் இல்லாமல் இருப்பதும் அவரவர்கள் சௌகரியம் என்றாலும் கூட பாலம் ஏறிப்போவைதையோ இல்லை இரண்டாவது, மூன்றா வதுகேட்டின்வழியாய்போவதை விடுத்து இந்த ரயில்வேட்ராக்கின் வழியாகத் தான் வந்து போகிறார்கள்,பெரும்பாலுமாய்/

அது போலத்தான் இவனும் அவ்வழியே செல்கிறான்.வருகிறான்,அலுவலகம் செல்வதற்கும் இதர வேலைகளுக்குமாய்/

மாலையில்அலுவலகம்விட்டுக்கிளம்பும்போதுசற்றுதாமதமாகத்தான் ஆகிப் போகிறது,கிளம்ப நினைக்கிற வேளையில் கிளம்ப நினைக்கிற வேலைக்கு சரியாய் கிளம்பிப்போய் விட முடியவில்லைதான்அது இன்றென இல்லை, என்றைக்குமே அப்படித்தான் ஆகிப்போகிறது.

பாரக்கிற வேலையை காதலிக்கிறவர்களுக்கு இந்தக்கதிதான் போலும், அலு வலகத்திற்கு அலுவலகம் இவன் போல் நேர்ந்து விடப்பட்டவர்கள் கொஞ்சப் பேர் இருத்தான் செய்கிறார்கள்,அந்த ரகத்தில் இவன் முழுமுதல் ஆள் போ லும்/

அலுவலகம் முடிந்து பஜார் போய் காய்கறி வாங்கிக்கொண்டு போக வேண் டும் என நினைத்திருந்தான்,

கத்திரிக்காய்,வெண்டைக்காய்,முட்டைக்கோஸ்,புடலங்காய்நன்றாகஇருந்தால் சுரைக்காய் சௌச்சௌக்காய் இதுதான் அவன் வாங்குகிற வழக்கமான காய் கறிகளிகளாய் இருக்கும்,பின் தக்காளி இல்லாமலா,,,?

மேற்சொன்னஎல்லாக்காய்கறிகளிலும்அரை அரைக்கிலோவாக வாங்குபவன்  தக்காளியை மட்டும் ஒருகிலோ வாங்குவான்,

இப்பொழுது தக்காளி விலை ஏறிப்போனதிலிருந்துகடைக்குப்போகிற போதெல் லாம் ஒவ்வொரு காய்கறிகளின் விலையையும் கேட்டுத்தான் வாங்குகிறான்,

தக்காளி விலை ஏறிப்போன சிறிது நாளிலிருந்து கத்திரிக்காய் விலையும், வெண்டைக்காய் விலையும் ஏறிப்போனது ஏகத்துக்கு/

இது பரவாயில்லை.சின்ன வெங்காயம் வாங்க இன்னும் கொஞ்ச நாள் போ னால் ஒரு மாதச்சம்பளம் முழுவதையும் கொண்டு போக வேண்டியிருக்கும் போலிருக்கிறது.என்று நினைத்துக்கொண்டுதான் போய் வந்து கொண்டிருக்கி றான் பஜாருக்கு/

இப்பொழுது அதுவும் போவதில்லை.வழக்கமாக வாங்குகிற கடையில் இப் பொழுது கடைக்காரர் இல்லை,அதற்குப்பதில் அவரது உறவினர் ஒருவர்தான் இருக்கிறார்,பெரியவர் அவர்,அவரது மாமனார் என்றார்கள்,

கடைக்கார் இல்லாத ஒரு நாளில் அவரிடம் காய்கறி வாங்கிய போது கொஞ்சம் கூட குழைவற்று தெரிந்தார்,பேச்சிலும் சொல்லிலும் செயலிலுமா ய்/

கடைக்குக்கடைஇதுபோலானவர்கள்வியாபாரத்தைகெடுக்கவென்றேஇருப்பார்கள்.அதில் இவரும் ஒருவர் போலும்.

அதனால் அவர் இருக்கிற போது கடைக்குப் போக மாட்டான்.இப்பொழுது சிறிது நாட்களாக வாடிக்கையாகவே அவர்தான் இருந்தார் கடையில்.பஜார் வழியாய் போகிற போது வண்டியை விட்டு இறங்காமல் பார்த்துக்கொண்டே போவான்,அவர் கடையில் நின்றால் காய்கறிகள் வாங்க மாட்டான்.

இப்படியாய் மூன்று நான்கு தடவைகளுக்கு மேல் ஆகிப்போனது,

நான்காவது தடவையாய் கடையைப்பார்த்து விட்டு அவரில்லா வெறுமையை தாங்கிப்போன பொழுது இடையில் அவரை பார்க்க நேரிட்டுப்போகிறது,

ஏன் இப்படி பெரும்பாலான நேரங்களில் கடையில் பார்க்க முடிவதில்லையே எனக்கேட்ட பொழுது இல்லை சாயங்கால வேளைகளில் எனது மகளைக் கூப்பிடபள்ளிக்குப்போய்விடுவேன்.அதனால்தான்இருப்பதில்லைஎன்றார்.ஆனால் உண்மை அது இல்லை என்பது போகபோகத்தெரிந்தது.

அவர்வைத்திருக்கிற ட்ராவல்ஸில் வண்டியின் ட்ரைவராகப்போய் விடுவார் எனத்தெரிந்தது,

ஒரே ஒரு வண்டிதான் வைத்திருந்தார்,

காய்கறிகளின் விலைகள் ஏறியதிலிருந்து கடையில் சரியாக வியாபாரம் ஓடவில்லை,நான் பெரியவர்(எனது மாமனார்)அப்புறம் வேலைக்கு என இருக் கிற பையன்என அனைவருக்கும் சம்பளம் கட்டுபடியாகவில்லை. அதனால் தான்எனதுட்ராவல்ஸ்ஒருவண்டிக்குநானேடிரைவராகஓடிக்கொண்டிருக்கிறேன்.

டிரைவரும் கொஞ்ச நாளாக சரியில்லை.அவனுக்கு பணம் கொடுத்து மாள வில்லை,அது சரியில்லை இது சரியில்லை என வண்டியை காரணம் காட்டிக் கொண்டுவந்து நிற்கிறான்,இல்லையானால் எனக்கு சம்பளம் கூட்ட வேண்டும் கட்டு படியாகவில்லை என்கிறான்,சரி எதற்கு வம்பு நமக்குத்தான் டிரைவிங்க் தெரியுமேஎன நானே வண்டியை ஓட்டிக்கொண்டு இருக்கிறேன் இப்பொழுது, வண்டிக்குப்போகாத தினங்களில் என்னை கடையில் பார்க்கலாம் நீங்கள்,

போன மாதத்தின் மாலை வேளையாய் என்னை நீங்கள் கடையில் பார்த்த அன்று நான் வண்டிக்குப் போகவில்லை.ஆகவே என்னை முழு உருத்தரித்து நின்றவனாய் காணும் வாய்ப்புக்கிடைத்திருக்கிறது உங்களுக்கு.என்றவர் சரி நான் இல்லையானால் என்ன ,,கடை இருக்கிறதே என் பெயர் சொல்லிச் செல்கிற காய்கறிகள் அங்குதானே அடை கொண்டு கிடகின்றன,பின் ஏன் வருத்தம் கொள்கிறீர்கள் வாங்கிக்கொள்ள வேண்டியதுதானே வழக்கம் போல எனச்சொன்னவராய் சிறிது நேரம் பேசி விட்டு சரி அப்படியே கிளம்புவோம் எனகிளம்பும் முன்பாக வாருங்கள் ஏதாவது கடையில் போய் டீ சாப்பிடலாம் என்றார்.

கடைக்குச் செல்கிற பொழுதுகளில் என்றாவது ஒரு நாட்களில் கடைக்கு வருகிற டீயை இவனுடனாய் பங்கு போட்டுக்கொள்ளபிரியப்பட்டுக் கொண்டு டீ சாப்பிடுங்கள் என்பார் இவன் மட்டும் தனியாக கடைக்கு காய்கறி வாங்கப் போயிருந்தால், அது அல்லாது இரண்டு மூன்று பேர் நின்றிருந்தால் கேட்க மாட்டார்,நாகரீகம் கருதி மட்டுமல்ல,ஒருவரை விட்டு ஒருவரிடம் மட்டுமாய் கேட்பது அவரது வியாபாரத்தை பாதிக்கும் என்கிற கணக்கில் கேட்க மாட்டார்,

அவரது கணக்கு அந்த நேரத்தில் சரிதான் எனத்தோணி காட்சிப்படும் அந்த இடத்தில் /

அப்படியாய்தவறவிட்டஒன்றை சரி செய்கிற விதமாய் இப்பொழுது கடைக்குக் கூட்டிக்கொண்டு போகிறார் போலிருக்கிறது.

ரோட்டோரக்கடையில்தான் டீ சாப்பிட்டார்கள்,ஒருடீயும் கூடதுணைக்குச் சேர்த்துக் கொள்ள ஒரு வடையுமாய் எடுத்துக்கொண்டார்கள். எப்பொழுது டீக் கடைக்குப்போனாலும்அதுதான்அவனது வழக்கமானமெனுவாக இருந்து போன துண்டு,அதுதான்இன்றும்அதே கடையில்,,,,

டீயைக்குடித்துக் கொண்டே கடைக்குஅருகில் இருக்கிற மரத்தை பார்க்கிறான். இது போல மரங்களைப்பார்ப்பது இப்பொழுதெல்லாம் மிகவும் அரிதாகவே போய் விட்டது,சாலையோரத்தில் ஏதாவது பணி என்றால் இல்லை சாலை யை விரிவு படுத்த வேண்டும் என முடிவு பண்ணி விட்டால் முதல் வேலை யாய் மரத்தைத்தான் வெட்டி எடுத்து விடுகிறார்கள். அப்புறம்தான் சாலை வேலை மற்றது மற்றது பற்றியெல்லாம் யோசிக்கிறார்கள். அப்படியான நேரத்தில் இப்படி கிடைத்த இடத்தில் கடையின் ஓரமாய் சின்னதான ஒரு குழியில் மரத்தை வளர வைத்திருப்பது நல்லவிஷயமாகவே இருக்கிறது.

அது எந்த ஒரு மரமாக வேண்டுமானாலும் இருக்கட்டும்,மரம் என்பதுதானே கணக்கு என்கிறார் டீக்கடைக்காரர்.இவர்கள் இருவரது பேச்சையும் கேட்டவ ராய்/

வீட்டின் ஓரமாய் இருக்கிற வேப்ப மரத்தில் வந்து அடைகிற பறவைகளின் எண்ணிக்கைகொஞ்சம்கூடுதல்காட்டியேஆகிப்போகிறதுசிறிதுநாட்களாகவே/

தின்ன ஏதுமற்றதாலா அல்லது அடைய இடமில்லாமலா என்பது சற்று குழப்பமாகவே உள்ளது இந்த விசயத்தில் ,

சரி இருக்கட்டும் எதற்கும் அந்த பறவைகளிடமே கேட்டு விடலாமே என எத்தனித்தவனினாய் கேட்க முற்படுகிற போது இடறிடுகிற ஒன்றாய் பறவை களின் பாஷையும் அதன் நடவடிக்கைகளும் கொஞ்சம் சிவப்பு சிக்னலாய் வந்து கை காட்டியும் கண் சிமிட்டியுமாய்நின்று காட்சிப்படுகிறது.

சரி சரி வேண்டாம் இந்த பரிட்சை என முடிவெடுத்தவனாய் தினசரி காலை யிலும்மாலையிலுமாய் இரண்டு மூன்று கை நிறைந்த தானியங்களை மொட் டை மாடியில் தூவி விட்டும் அதற்குப்பக்கத்திலேயே மண்பானை மூடியில் தண்ணீர் ஊற்றி வைத்து விட்டுமாய் வந்து விடுகிறான்.

இவனால் முடியாத அன்று இவனது மனைவி அந்த வேலையை செய்து விடுகிறாள்.இவர்கள் தானியம்போட்டதால் அந்த பறவைகள் வந்ததா இல்லை பறவைகள்வந்ததால்இவர்கள் தானியம் போட்டார்களா,தெரியவில்லை, எனப் புரியாத அளவிற்கு பறவைகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போனது,

ஆனால் கூடியப்பறவைகளுக்கு இவர்களால்தான் வாடிக்கையாக உணவு வைக்கமுடியவில்லை.கம்பு கேப்பை என்றால் விரும்பி உண்ணுகிற புறாக்கள் வேறு கோதுமை அரிசி என ஏதாவது போட்டால் தின்னவே மாட்டேன்கிறது. இதில் அந்த சாம்பல் கலர் பூத்த புறா செய்யும் அலும்பு சொல்லித் தாங்குவ தாய் இல்லை.

கழுத்தைக்கழுத்தை சாய்த்து வைத்துக் கொண்டு கொர்க்,,,,,கொர்க்,,,,என கத்திக்கொண்டு மாடியை ஒரு சுற்று சுற்றி வந்து அப்புறம்தான் மாடியில் விரித்துப்போட்டிருக்கிற கம்பு அல்லது கேப்பையை தின்னும். அப்படித் தின்றால்தான் அதற்கு நிம்மதி.

அதுவும் காலையில் பக்கத்து வீட்டு மாடிக்கு சினப்பிள்ளைகள் பல்துலக்க வந்து விட்டால் அன்று பறவைகள் வராது,

வராது என்றால் அந்த நேரத்தில்தான்,அப்புறம் நேரம் கிடைக்கும் போது வரும் போலிருக்கிறது.

காலையில்சாப்பிடவில்லை,ஒன்பதுமுப்பதுமணிக்கெல்லாம்அலுவலகத்திற்கு வந்து விட்டான். வீட்டில் சாப்பிடவில்லை,

காலைச்சாப்பாடை விட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகப் போகிறது.

காலையில் சாப்பிட்டுவிட்டு வயிற்றைதூக்கிக்கொண்டு ஓடிவர முடியவில் லை, நிறைந்திருக்கிற வயிறு காற்றடித்தது போல் உப்பிப்போய் மூச்சித் திணறுகிற அளவிற்கு திக்குமுக்காட்டம் காட்டி விடுகிறது.

அதற்கு பயந்தே பெரும்பாலுமாய் சாப்பிடாமல் விட்ட வயிறு இப்பொழுது பசி தாங்கப்பழகிப்போனது.

தவிர உடல் உழைப்பு இல்லாத உடம்பில் களவாணிசதைவிழுந்து தொந்தி வைத்துப்போனது இவனுக்கு.

தொந்திவைத்துப் போனதில் கூட வருத்தம் இல்லை இவனுக்கு,ஆனால் உடல் பெருத்தது போல்காணப்படுவதும்முன்பு போல் இலகுவாக இருக்க முடியா மல் போனது தான் கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது.

ஆகவே காலைச்சாப்பாட்டை கட் பண்ணி விட்டான்.மதியச்சாப்பாடுதான் நேரடியாக/,

அதுவரை டீயும் வடையும் மட்டுமே,சமயத்தில் அது கூட இல்லை.

இன்றைக்கு காலையில் கேப்பை வடையும் டீயும் சாப்பிட்டிருந்தான்.அது கொஞ்சம் மதியச்சாப்பாடு வரை தாங்கியது,தவிர நெஞ்செரிச்சல் புளிச்சே ப்பம வயிற்று கனம்,அதனால் அனாவசிய உடல் தொந்தரவு என்கிற பயம் இல்லை அதுவேகொஞ்சம் நிம்மதியாக இருந்தது.அதையே பழக்கமாக்கிக் கொள்ள முடிந்தால் அந்த நிம்மதியை கைக்கொண்டும் வசப்படுத்தியும் விட லாம் எளிதில் என்பது இவனது மனக்கணக்காக இருக்கிறது சிறிது நாட்களாக/

அந்தசிறிதுஎன்கிற மனக்கணக்கு பொய்யாகிவிடக்கூடாது என்பதில் இப்பொ ழுது கொஞ்சம் உறுதியாக இருக்கிறான்.

சாய்ங்காலம் வீட்டிற்குப்போகிற போது கொஞ்சம் லேட்டாகிப் போனது. இரண் டாவதுகேட்வழியாகப்போகலாம்தான். ஆனால் இந்நேரம்கேட்மூடியிருக்கும், கேட் திறக்க லேட்டாகும்,ஆகவே ரயில்வே லைன் வழியாகப்போய்விடலாம் என நினைத்து வந்தான்.

அலுவலகம் தாண்டி பாய் டீக்கட்டையில் நின்று டீசாப்பிடும் போது மேகம் கட்டிக் கொண்டு நின்றது,கட்டிக்கொண்டு நின்ற மேகத்தை குத்தி விட்டால் தண்ணீர் பொத்துக்கொண்டு விழுந்து விடும் போலிருக்கிறது.

டீயைக்குடித்து முடிக்கும் முன்பாக லேசாக சொட்டு வைத்த மழைத்துளி டீக்கிளாஸில் வந்து சொட்டியது. சொட்டிய தண்ணீர் டீயில் கலந்து டீக்கு ருசி கூட்டியது.கூடிய ருசியுடனான டீயைக் குடித்து விட்டு வண்டியை எடுத்துக் கொண்டு போனபோதுதான் அந்த விபத்து நடந்ததாக அறிகிறான்,

குடித்து முடித்த டீயின் ருசிநாவின் சுவையறும்புகள் எங்குமாய்பரவி பாவி யிருக்க அதன் மணத்துடன் போய்க் கொண்டிருக்கிறான்,

கடை,கடைதாண்டி லாட்ஜ்,லாட்ஜ் தாண்டி வந்த ரயில்வே ஸ்டேஷன் அது தாண்டி வந்து விட்டிருந்த ரயில்வே லைனை கடக்க முனைந்து கடந்தும் விடுகிறான்.

முதலாவதுலைனைக்கடந்து முடித்து இரண்டாவது லைனைக் கடந்து கடக்க முற்படுகையில்தான்எதிரேவந்த இருசக்கரவாகனத்தில் லைனைக் கடக்க முனைந்தவர்கள் வண்டி சறுக்கி விட்டு விழுந்து விடுகிறார்கள்.

கணவனும் மனைவியும் கைக்குழந்தையுமாய் வந்தவர்கள் மழைக்கு முன் பாக போய் விடலாம் என நினைத்து ரயில்வே லைனில் ஏறிய மறுகணம் அது சறுக்கிவிட்டு விட்டு விழுந்து விடுகிறார்கள்.

விழுந்தஅதிர்ச்சியில் அய்யோஎன் குழந்தை என கைக்குழந்தையுடன் அவர் கள் வந்த இரு சக்கரவாகனத்தின் பின் சக்கரத்தில் விழுந்த மனைவி சப்தமிடு கிறாள்,
 
சப்தம் கேட்டு திரும்பிய இவன் அப்பொழுதுதான் கவனிக்கிறான்,

லைனைக்கடந்துவிட்ட இவனது வண்டியின் பின் சக்கரத்திற்கு நேராகவும் அதன் பக்கமாகவும் விழுந்திருந்தார்கள்.இவன் வண்டியை விட்டு கீழிறங்கி கீழே விழுந்து விட்ட கைக்குழந்தையை தூக்கி தாயிடம் கொடுத்து விட்டு கொழந்தைக்குஒண்ணும் இல்லம்மா பயப்படாதீங்கஎனச்சொல்லியவனாய் அந்தஇடத்தைவிட்டுநகர்கிறான்,

அதுவரையிலுமாய் பெய்ய மறந்திருந்த மழைதன் பலம் காட்டிப்பெய்கிறது. குழந்தையை தூக்கிக்கொண்டு தாய் ரயில்வே லைனின் அருகிலிருந்த கோ யிலுக்கு ஓடுகிறாள்.

கணவனும்பின்னாலேயஇருசக்கரவாகனத்தைஉருட்டுக்கொண்டு போகிறான். இவனும்மழை நிற்கும் வரை அதே கோயிலில் ஒதுங்கி நிற்கிறான்.

சொல்லாமல் கொள்ளாமல் அவிழ்ந்து விடுகிறது வானம்,அதுவரையாய் சூழ்க் காட்டி கட்டி வைத்திருந்த நீரை மழையாய் பெய்யச்செய்து கொண்டிருந்தது. யாரிடமும்எந்தஅனுமதியும்பெறாமல்எந்தத்தகவலும்சொல்லாமல்/