5 Jun 2016

சாப்பாட்டுப்பொட்டலம்-----(பாகம் -2)

கொஞ்சம் மலைப்பாகத்தான் இருந்தது.இத்தனை வேலையையும் ஒற்றை ஆளாக செய்து முடிப்பது மிகவும் சிரமம்தான் எனவும் உணர முடிந்தது.

செய்துபழக்கமானவேலைதான்.ஆனால்கொஞ்சம்டச்விட்டுப்போனது.ஏதாவது திருவிழாஅல்லது மீட்டிங் என்றால் இவனிடம்தான் சொல்வார் தலைவர். இவனும் அவர் சொல்லச்சொல்ல குறித்து வைத்துக் கொள்வான் வேலைக ளை/

எல்லாவற்றையும் சொல்லி முடித்தவுடன் இவன் இவனுக்குத்தகுந்தவாறு அதை வரிசைப்படுத்திகொள்வான்.அந்த வரிசையில் முதலில் இடம் பெறுவது திருமண மண்டபம்தான்.

மண்டப வாடகை கேஸ்,எத்தனை ரூம்கள் சேர்கள் பெட் சீட் எவ்வளவு பேர் அமரலாம் மைக் சத்தம் எதிரொலிக்குமா மண்டபத்திற்குள்ளாக,,, என்பதை கேட்டுக் கொள்வான்.

மண்டபத்துக்காரர்கள்என்னதான்போனில்சொன்னபோதும்இவனுக்கு திருப்தி இருக்காது.இவனே மண்டபத்திற்குப்போய் நேரடியாக ஒரு எட்டுப் பார்த்து விட்டு வந்து விடுவான்.அடுத்ததாக மைக்செட்,மேடை அலங்காரம் சேர் தண்ணீர் பூ கொடிமரம் தோரணம் அது கட்ட கயிறு கொடி உடன் பணியாற்ற தோழர்கள் மூன்று அல்லது நான்கு பேர்,(அதிகம் பேர் சேர்ந்து விட்டால் ஆக வேண்டிய வேலை ஆகாது,கொத்தவேலை நடக்கிற இடம் போல ஆகி விடுமாதலால் கிட்டத்தட்ட கூப்பிடுவதில்லை.)

தேவையில்லாத மனச்சுமைகளையும் சங்கடங்களையும் ஏற்றிகொள்ள வேண்டியதில்லை. மண்டபத்தின் முன் வாயிலில் வைக்க தியாகிகள் ஸ்தூபி என எல்லாம் வரிசைப்படுத்தி வைத்து செல்போனிலேயே எல்லோருக்கும் தகவல் சொல்லி போன்வழியாகவே அவர்களதுபதிலையும் உறுதியையும் வாங்கிக் கொள்வான். அப்படியும் பதில் வாங்க முடியாத சில இடங்களுக்கு நேரடியான அவதாரமாக இவன்/

போனைஎடுத்துபேசஆரம்பித்தடுமே என்ன சௌக்கியமா இருக்கீங்களா என்று தான் ஆரம்பிப்பான்.உடன் இருக்கிற அண்ணா சிரிப்பார் இவனது பேச்சிற்கு/ அல்லது இவன் பேசும் போது இவனை கேலி பேசுவார்/

அந்தப் பேச்சுகளும், ஏற்பாடுகளும், வேலைகளும்சுத்தமாகநின்று போனது இப்பொழுது/இவனதுபணியிடமாறுதல் மற்றும் சில பல நிகழ்வுகள் இவனது அந்த வேலையை இதுவரை செய்ய அனுமதிக்கவில்லை.

சாப்பாடு என அவர்கள் சொன்னதும் முதலில் இவனுக்கு ஞாபகம் வந்தது நண்பர் முருகவேலின் ஞாபகம்தான்.அவரிடம் பேசிய போது சரி கேட்டுச் சொல்கிறேன் இன்று இரவிற்குள்ளாக,/ இரவு பத்து மணிக்கு மேல் எனக்கு போன்பண்ணுங்கள்என்றார்.

இவனுக்குஅந்தத்தேவை இருக்கவில்லை. இரவு எட்டு மணிக்கு அவரை பஜாரில் வைத்துப்பார்த்து விட்டான்.அவர் சாப்பாடு பேசிய ஹோட்டலுக்கே கூட்டிச்சென்று விட்டார் கடைக்காரர் இது போலான ஆர்டர்கள் என்றால் நான் சூப்பராக பண்ணித்தருவேன்.என பேசியது சொன்னது சாப்பாடு அதற்கான காய்கறி எல்லாம் சொன்னது வரை ஓ.கே/ஆனால் அவர் விட்ட கொஞ்சம் ஓவரான உதார்தான் இவனை யோசிக்கவைத்துவிட்டது.இவன் மறு நாள் முடிவைச் சொல்கிறேன் என வந்து விட்டான்.

மறு நாள் காலையில் அலுவலகம் வந்ததும் ஜெய்லானி ரஹ்மான் அவர்க ளின் ஞாபகமே முன் வந்து நிற்க அவரிடம் பேசினான் சாப்பாட்டு விஷயத் தை/

மேலும் இரவு நடந்ததையும் ஹோட்டல் உரிமை யாளர்விட்டஉதாரையும் சொன்னான்.அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.அவரது அனுப வத்திற்கு எத்தனை பார்த்திருப்பார்.

மாறாக சொல்லுங்க மாமா ஒங்க சொல்லுக்காக எதுவேணாலும்செய்யிறேன் எனச்சொன்ன அவர் உடனே அவருக்குத்தெரிந்த ஹோட்டலுக்குப் போன் பண்ணி இவன் சொன்னதை அப்படியே அவரது ஸ்டைலில் சொல்லி பேசி முடித்து விட்டார் விஷயத்தை/

அவர் சொல்லில் அடங்கியிருந்தது முன்னூறும் முன்னூறுமாக அறுநூறு சாப்பாடுகள்என்பதுமட்டுமில்லை.அவரது சொல்லிலும் செயலிலுமாய் உள்ளட ங்கியிருக்கிற அனுகூலங்களுமே அவர் சொல்லுக்கும் செயலுக்கும் பலமூட்டி விடுகின்றன/

அப்படியான பல மூட்டலுக்கு எப்போதுமே பக்க பலமாய் நிற்கிற ஜெய்லானி ரஹ்மான் அவர்கள் சொன்ன முன்னூறும் முன்னூறுமான அறுநூறு சாப்பா டுகளே இவனது வேலைகளுக்கு ஆரம்பப்புள்ளியாய் அமைந்த போது மற்ற வேலைகளில் மலைப்பு விலகி நின்று நினைத்த வேலை கைகூடி வந்ததாய்/

5 comments:

 1. Replies
  1. வணக்கம் வலிப்போக்கன் சார் ,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. தொடர்ச்சி அழகாக கடக்கின்றது..
  தமிழ் மணம் 2

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கில்லர் ஜி சார்,
   நன்றி கருத்துரைக்குமாக/

   Delete
  2. நன்றி வாக்களிப்பிற்கு சார்/

   Delete