26 Jun 2016

பரப்பினூடே,,,,,,,,

கால் பரப்பிப்படுத்துக்கிடந்த நாய்கள் மூன்றில் செந்நிறம் பூசியது இரண்டும் கரு நிறம் கொண்டது ஒன்றுமாய் ஆகிக்காட்சிப்படுகிறது.

கரு நிற முடிகளில் நீட்டித்தெரிகிற வெள்ளை முடி போலவும் வெள்ளை முடிக ளின் மத்தியில் காட்சிப்பட்டுத்தெரிகிறகருநிறமுடி போலவுமாய் காட்சிப் பட்டுத்தெரிகிறமுடிகள் போல சிலிர்ப்பாய் நட்டுக்கொண்டு நிற்கிற முடிகள் சின்னச்சின்னதாய் அழகு காட்டி அதன் அழகைக் கூட்டிக் காண்ப்பிக்கிறதாய்/

மூன்றுநாய்களின்இருப்பில் உள்நுழைந்ததாய் பிறிதொன்றாய் வந்து நுழைந்த வெள்ளைகுட்டி இடையிடையிலாக இடையிடையிலாக பிரவ்ன்க்கலர் கலந்து பூசிக்கொண்டதாய் தெரிகிறது,

மற்றமூன்றும் படுத்துக்கிடந்த போது அது மட்டும் எங்கோஓடியும்ஆடியுமாய் திரிகிறது,அது படுத்துக்கிடக்கும் போது மற்ற மூன்றுமாய் அது செய்த அதே வேலையைச்செய்கிறது. 

சிறிது நாட்களுக்கு முன்பான அதிகாலை கண் விழிப்பின் போது வெளி வரா ண்டாவில் உட்கார்ந்திருந்த போது இந்தக்குட்டிகளையும் அதன் தாயையும் பார்க்க முடிந்தது,

எங்கு போய் புரண்டு விட்டு வந்திருக்கும் எனத்தெரியவில்லை.உடலெல்லாம் அழுக்கு சுமந்தும் சாக்கடையில் புரண்டு எழுந்த கரையுடனுமாய்.

பக்கத்தில் போகவே அருவருப்பாக இருந்தது.பயமும் ஒரு காரணமாய், குட்டி களை பாதுகாக்கிறேன் என கடித்து வைத்து விட்டால்,,,,,,,/

இது போலான நிறைய யோசனைகள் ஊர்ந்துவருகிற நேரமாய் உட்கார்ந்திரு ந்த படிக்கட்டில் இருந்து எழுந்து போய் அதற்கு கொஞ்சம் சோறாவது வைத் திருக்கலாம் என சிறிது நேரம் கழித்துத் தோணுகிறது,

எலும்பும் தோலுமாய் இருந்த தாய் நாய் அதன் குட்டிகளை எங்குஈன்றுஇங்கு கூட்டிக்கொண்டுவந்திருக்கிறதோ தெரியவில்லை, இப்பொழுது அதன் உணவு என்னவாக இருக்கும் அது எங்கு போய் சாப்பிடும். குட்டிகளை எப்படி அது பாதுகாக்கும்,பகல்முழுவதுமாய்இப்படி கிடைக்கிற இடமாய் அலைந்து விட்டு  இரவு தங்கவும் தூங்கவுமாய் எங்கு போகும்,,,,? தெரியவில்லை,

எவ்வளவு நேரமாய் அதை அப்படிப்பார்த்துக்கொண்டிருந்தான் எனத் தெரியவி ல்லை.போய்விட்டான் உள்ளே மனைவி கொண்டு வந்த டீயைக்குடித்தவா றும் அவளிடம் பேச்சுக்கொடுத்தவாறுமாய்,

அந்தப்பேச்சில்அந்தநாயைப்பற்றிவிசாரணை இல்லாமல் இல்லை.நாய் அதன் பிறப்பு அதன் இருப்பிடம்,அதன் உணவு இன்னும் இன்னுமான பேச்சுக்கள் பிற சுமந்து காணப்பட்ட அந்தப்பேச்சுத்தொகுப்பு அது முடிந்து பிறிதொன்று எனப் போய்க்கொண்டிருந்தது.

இவனும்அலுவலகம் கிளம்பி விட்டான்,அதற்கப்புறம் இன்று பார்த்த நாளின் காட்சியில் இப்படியாய் தென்பட்டுத் தெரிவதாக/

முந்தையதினங்களின் முந்தைய தினங்களின் இரவிலும் பகலிலுமாக லாரிக ளில்வந்துஇறக்கிக்கொட்டப்பட்டிருந்த மணல் இரண்டு லோட் எனக் கணக்கு/ 

முதல்மணல்லாரிவந்த இரவு12மணிக்கு மேல் இருக்கும், ஏதோஒரு ஆங்கிலச் சேனலில் படம் பார்த்துக்கொண்டிருந்தான்.நல்ல படமாய் இருந்தது. எப்பொழு தாவதுஇது போலாய் பார்ப்பதுண்டு,அன்றும் அப்படித்தான் பார்த்துக் கொண் டிருந்தான்,மிகவும்கண்சொக்கிப்போகபடம்பார்க்கிற கவனம் சிதறிப்போகிறது, தூங்கப்போய்விடுகிறான்,தூங்கியும் விடுகிறான்,நல்ல தூக்கம் திடீரெனக் கேட்டலாரிச்சப்தம்இவன் தூக்கம் கலைக்க எழுந்தமர் ந்தவன் மணல் இறங் கிப் போனதும்தூக்கம் வராமல் கொட்டப்பட்டிருந்த மணல் மீதே அமர்ந்து கொண்டிருந்துவிட்டு விடிந்ததும் தெரு முக்கில் டீ சாப்பிட்டு விட்டு வந்து கொ ண்டு வந்திருந்த மணலை சலிக்க ஆரம்பித்து விடுகிறான்/ 

அப்படியாய் சலித்துக் கொட்டப்பட்டிருந்த மணல் மீதுதான் படுத்துக் கிடக்கி றது நாய்க்குட்டிகள் மூன்றும் ஓடி திரிந்த ஒன்றும்,,,/

2 comments:

 1. நல்ல வர்ணனை. பாவம் நாய்குட்டிகள். இப்படித்தான் தெரு நாய்கள் பல உணவின்றி உறைவிடமின்றி பெருகி அலைந்து கொண்டிருக்கின்றன. இதில் கல்லடி வேறு இவர்களுக்குக் கிடைக்கும். பாவம்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் துளசிதரன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete