4 Dec 2016

லால் சலாம்,,,,

வணக்கம் தோழர் லெனின் அவர்களே/

யார் சொன்னது நீங்கள் இறந்து விட்டதாக?

இறந்தபின்னாலும் அவரது செய்கைகளின் மூலமாய் நினைக்கப்படுகிற மாமேதைகளில் ஒருவராய் நீங்கள்/இன்றும் லட்சக்கணக்கான கம்யூனிஸ்டு க ளின் இதயத்தின் அருகிலிருந்துஅவர்களது சிந்தனையை ஆக்ரமிக்கிறீர்கள். அவர்களின் செவ்வணக்கமும், அவர்களின் கொள்கைப்பிடிப்பும் உங்களை இன்னும் வாழ வைத்துக் கொண்டிருகிறதுதான் லெனின் அவர்களே/

உங்களைப்பற்றியும் உங்களது வீர வரலாறு பற்றியுமாய் நேரடியாய் பார்த்து எழுதும் பாக்கியம் எனக்கு இல்லைதான்,அதற்காக உங்களைப்பற்றி எப்படி எழுதாமல் விட,,,?

அது வேறொரு தேசம் வேறொரு வாழக்கை முறை,வேறு மாதிரியான வேலை முறை.வேறு மாதிரியான சம்பவங்கள்,உணவு உடை பழக்கவழக்கம் இருப்பிடம்இத்தியாதிஇத்தியாதி இத்தியாதிகள்,,,,,,,வேறு வேறாய்,,,,,,/ ஆனால் எங்கும் இருக்கும் வர்க்க வித்தியாசம் அங்கும் இருந்தது தான்.ஆளும் வர்க்கத் திற்க்கும் ஆளப்படுகிற வர்க்கத்திற்கும் இருக்கிற மிகப்பெரிய இடை வெளி உங்கள் தேசத்திலும் உங்கள் காலத்திலுமாய்,,,/

ஆளும் ஜார் மன்னனால் உங்கள் ருஷ்யாவே அடிமை தேசமாய்,,/ஆமாம் தோழர் லெனின் அவர்களே,நீங்கள் பிறக்கும் போதே அடிமை தேசத்தில்தான் பிறக்கிறீர்கள்,

அது வரலாற்றின் இருண்ட காலம்.1870 ஏப்ரல் 22 ல் உங்கள் பிறப்பு அந்த இருட்டில் ஒரு சிறு ஒளியை ஏற்படுத்துகிறது.ஆமாம் அப்படித்தான் சொல்கி றார்கள் உங்கள் வரலாற்றை எழுதியவர்கள்.

உங்களது பிறப்பின் போது ஸிம்பர்ஸ்க் நகரமே வசந்ததில் திளைத்ததாம். வானம் பாடிகள் இசைக்க,வோல்கா ஆறு நடனமிட்டு அலைபாய வீதிகளிலும் தோட்டங்களிலும் பட்சிகளின் கீச்சொலியும் பீர்ச் மரக்கிளைலும் ஸ்தெப்பி ப் புல் வெளியெங்கும் காற்று களி நடமாடியதாகவும் பதிவு செய்கிறார்கள். வோல்கா ஆற்றின் குறுக்கே உங்கள் குடும்பத்தையும் தொற்றிக்கொண்ட சந்தோஷத்துடன் நீங்கள் பிறந்து படுத்திருந்த அந்த தொட்டிலைப் பார்க்கிறார் கள் உங்கள் குடும்பத்தார்கள்.

உங்களின் பிறப்பைப்பற்றி உலக வரலாற்றின் காதுகளுக்கு எந்தத்தகவலும் இல்லையாம் அப்போது/

உலக நாட்களின் நகர்வுகள் அதனதன் போக்கில்/உல்யானவ் குடும்பத்து உறுப்பினர்கள் என்றழைக்கப்பட்ட உங்களது குடும்பத்து உறுப்பினர்களின் எண்ணிக்கை சற்றே அதிகம்தான்.

தந்தை இல்யா நிக்கலாயெவிச்.தாயார் மரியா அலெக்சாந் திரவ்னா/உங்களது சகோதரசகோதரிகளானஆன்னா,அலெக்சாந்தர்,திமித்ரிஓல்கா,மரியாஇன்னும் விளாதிமீர்,,,,,,,,,ஆனஉங்களுடன் சேர்ந்து எட்டுப்பேர் என அறிகிறோம்/

அதனால்தானோ என்னவோ குடும்பப்பற்றும் மனிதர்கள் மீதான மகோன்ன தனமான அன்பும் பிரியமும் நட்பும் காதலும் அன்பும் பிடிப்பும் அதீதமாய் இருந்தது உங்களிடத்தில்/

உங்களது சகோதரர் ஆன்னாவும், அலெக் சாந்தரும்உயர் நிலைப்பள்ளியில் பயின்ற பொழுது நீங்கள் தொடக்கக் கணிதமும், ஆரம்பப்பாடமும் வீட்டிலேயே பயின்றீர்கள் ஆசிரியர் மூலமாக/

புத்தகப்பாடங்கள் தவிர உங்களது தாயார் மூலமாக உங்களுக்கு வீர வரலா ற்றுக் கதைகளும் உலக நடப்புகளும் நாடுகளும் என பல கதைகள் சொல்லப் பட்டன.நெப்போலியன் ருஷ்யா மீது படையெடுத்ததையும் பரதினோ என்னும் கிராமத்தின் அருகே அவனுடைய படைகளுக்கும் ருஷ்ய படைகளுக்கும் நடந்த போர்பற்றிக் கூறினார்கள்.குளிர் கால மாலைகளில் உங்களது தாயார் சொன்ன கதைகளை கணக்கிடவே முடியாது.

அந்த மாலைநேரங்களும்,ஜன்னல் கண்ணாடிகளின் மேல்வெண்பனி வரைந்த கோலங்களும் தாயாரின் குரலும் புத்தகத்தின் பக்கங்கள் திருப்பும் சரசரப்பான ஒலியும் உங்களை வேறோர் உலகிற்கு இட்டுச்செல்லும் தோழரே/

மேலும் அந்தக் கதைகளே உங்களது உள்ளத்திற்கும் வீரத்திற்கும் உரமாய் இருந்துள்ளது. புத்தாண்டு விழாவிற்கு முன் பனிக்காலம் உச்சத்திலிருந்த மாலை வேளைகளில் குழந்தைகள் அதிக உற்சாகத்துடன் இருப்பார்களாமே,,,? அதற்கு நீங்களும் உங்களது குடும்ப உறுப்பினர் மட்டும் விதிவிலக்கா என்ன,,? அந்தவிதிவிலக்கில்லாதசந்தோசத்தையும்,விளையாட்டையும்பார்த்துதங்களது தந்தை இப்படிக்கூறினாராம்.இப்பொழுது போல் எப்பொழுதும் இப்படியே சந்தோஷமாகவும் ஒற்றுமையாகவும் இருங்கள் என் அன்புக் குழந்தைகளே என்றாராம்.

உங்களது வீட்டுக்குப்பின்னால் இருந்த தோட்டம் சிறியதுதான். ஆனால் அதில் இல்லாத மரங்கள் இல்லை எனலாம்.அதற்கு ,மஞ்சள்கொல்லைஎன பெயரு மாமே,..?அதிகாலை எழும் நீங்கள் உடற்பயிற்சி குளியல் எல்லாம் முடிந்து தோட்டம் போய் விடுவீர்கள்/இரவில் உதிர்ந்த ஆப்பிளை சேகரிப்பதும், பூச் செடிகளுக்கு நீர் பாய்ச்ச கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து வந்து தொட்டி யில் நிரப்புவதும் உங்கள் வேலை/

தினந்தோறும் ருஷ்ய மொழியில் பேசுவதும் ருஷ்ய மொழியில் பயில்வதும் எளிதாக இருக்கும் தான்.ஆனால் வார நாட்களில் ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு மொழியில் கற்க வேண்டும் என்பது தங்களது தாயாரின் ஆழ்ந்த கருத்து.

தங்களது சகோதரர் எப்பொழுதும் ஆழந்த சிந்தனையை தூண்டும் புத்தகங் களை படித்துக்கொண்டிருப்பார்.ரசாயனத்திலும் இயற்பியலிலும் அவருக்கு மிகுந்தஈடுபாடு/இது தவிர வீட்டின் முகப்பில் ரசாயன் ஆய்வுகூடமும், சின்ன தாக விலங்குக்காட்சி சாலையும் ஏர்படுத்தி இருந்தார்.காலை ஆகாரத்திற்குப் பின் வேண்டிய புத்தகங்களை எடுத்துக்கொண்டு தோட்டத்தின் நிழல் அடர்ந்த பகுதிக்குள் அமர்ந்து படிக்க ஆரம்பித்து விட்டால் மற்றது எல்லாம் மறந்து போகும்.பறவைகளின் ஒளியும் வீட்டிற்குள்ளிருந்து வரும் அம்மாவின் தையல் மிஷின் ஒலியும் மட்டுமே காதில் படும்.

ஏதாவது தைத்துக் கொண்டிருப்பார். உங்களது தாயார் ஆறு குழந்தைகளு க்கும் தையல் கற்றுக் கொடு த்துக் கொண்டிருந்தார்கள். நீங்கள்குடும்பத்துடன் ஸ்வியாகாஆற்றுக்குகுளிக்கச் செல்லும் போது உங்களுக்கும் உங்களது சகோதரர் அலெக்சாந்தருக்கும் நடந்த சம்பாஷனைகளே உங்களை நிறைய யோசிக்க வைத்திருக்கின்றன. நாம் எதற்காக வாழகிறோம் நமது குறிக்கோள் என்ன?வாழ்வதும்சிந்தனைசெய்வதும்ஏதாவதுஅறிவதும் கேட்பதும் ஏதேனும் செய்வதும் சுவையானவைஎன்கிறஎண்ணங்களே உங்களது மனதில் மையமி ட்டிருந்தன/ என் சகோதரன் அலெக்சாந்தர் போலவே நானும் இருக்க ஆசைப் படுகிறேன் எனவும் எண்ணமிட்டீர்கள்.

1879 ஆம் ஆண்டு நகரின் மத்தியிலுள்ள வோல்கா நதிக் கரையிலிருந்த பள்ளியில் இடம் கிடைத்த தங்களுக்கு தந்தையின் அலுவலக அறை மீது சிறுவயது முதலே மரியாதை.ஒரு புறம் புத்தக அலமாரியும் பெரிய எழுது மேஜையும் மறுபுறமும் காண வருபவர்களுக்கான முட்டை வடிவ சிறு மேஜையும் நீள் சோபாவும் இருந்தன.

தங்களது தந்தை நிறைய வேலை செய்தார்.மாவட்டம் பூராவும் பல நூறு கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருந்த கிராம பள்ளிகளுக்கு பனிகால கடுங்கு ளிரிலும் குளிர் கால சேற்றிலும் வருவார்.மாவட்ட கல்வி நிலையங்களின் இயக்குனரானஅவர்ஆசிரியர்களுக்குஉதவப்போகாதஆரம்பப்பள்ளிகளேஇல்லை ஸிம்பீர்க்ஸ்க் மாவட்டத்தில்/

இத்தனைக்கும் மத்தியில் தங்களது படிப்பைபற்றியும் விசாரித்து அறிந்து கொண்ட உங்கள் தந்தைக்கு நீங்கள் உழைக்கப்பழகுவீர்களா என்ற கவலை. ஆனால்உழைப்பிற்கு மரியாதை தரும் குடும்பத்திலிருந்த தாங்கள் அளவிற்கு அதிகமான திறமைசாலியாக இருந்ததும் புது விஷயங்களை எளிதில் கிரகித்துக்கொண்டதும் ஆச்சரியம் அல்லவே/

உயர் நிலை படிப்பை முடித்து விட்டு பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த தங்களது சகோதரன் அலெக்சாந்தரிடம் கேட்டீர்கள்.மனிதனிடம் உனக்கு எல்லாவற்றையும் விட பிடித்தது எது என/உழைப்பு நேர்மை விஷய ஞானம் என பதிலளித்த தங்களது சகோதரர் நம் தந்தை அப்படிப்பட்டவர்தான் என நினைக்கிறேன் என்றார்,

ஒரு முறைப்பணிக்குச்சென்று விட்டு தாமதமாக வந்த தங்களது தந்தை கூறினார்.ஸ்தெப்பிப்புல்வெளியில்எங்கோ தூரத்து கிராமத்திலிருக்கும் அந்தப் பள்ளிக்குசெய்தித்தாளோபுத்தகங்களோ வருவதில்லை. குளிர் காலத்தில் கத கதப்பு மூட்டக்கூட விறகு சேமிக்காமல் விட்டு விட்டார்கள். இதற்கெல்லாம் நிலப்பிரபுவான அந்த கிராமத்துத்தலைவனை பள்ளி ஆசிரியை திருப்திப் படுத்தவில்லை என்பதுதான் என்றார்.குடியானவர்களுக்கு எந்த உரிமையும் அற்ற அந்த கிராமத்தில் குடியானவர்களின் நிலம் பூராவும் பணக்காரர்களி டத்திலும்,நிலப்பிரப்புகளிடத்திலும் இருக்கிறது. இந்நிலையில் தான் அந்த ஆசிரியருக்கு பரிந்து பேசியது பிரயோசனமற்று போயிற்று என்றார்,

அது1886ஜனவரி 16தங்கள் தந்தை உயிர் நீத்த துயர நாள்.அவரது சவ ஊர்வல த்தில் கலந்து கொண்ட அசிரியர்கள்,மாணவர்கள் நண்பர்கள் ஆகியோரின் வருகையை வைத்தே அவர் மக்களுக்கு எவ்வளவு நன்மைகள் செய்துள்ளார் என்பதைபுரிந்துகொண்டீர்கள்.அந்தப்புரிதலேசுவாஷ்இனத்தவருக்கு தங்களை படிப்பை சொல்லித்தரத் தூண்டியது.மக்களின் நன்மைக்காக வாழ்வது எப்படி என உங்களுக்குள் எழுந்த விஸ்வரூபம் எடுத்த கேள்வி உங்களை மக்களின் காவலர்கள் புரட்சிக்காரர்களே என தீர்மானிக்க வைத்தது. சமூகம் எவ்வளவு நியாயம் அற்ற முறையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.. பணக்கார்கள் வீண் பொழுதுபோக்குகிறார்கள்.ஏழைகளோஓய்வுஒளிச்சல் இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அப்படியும்அவர்கள்ஏழ்மையிலேயேகாலம் தள்ளுகிறா ர்கள். இதுநியாமா என ஊங்களுக்குள் வதைத்த கேள்விதான் நீங்கள் கழுத்தில் மாட்டியிருந்த சிலுவையை அறுத் தெரிய வைத்தது.கொடுங்கோலன் ஜாரை எதிர்த்துப்போரிடுவது எப்படி எனவும் சிந்திக்க வைத்தது.

1887 மார்ச்சில் ஒரு காலை நேரத்தில் உங்களை பள்ளியிலிருந்து வரச் சொன் னார்கள்.ஆசிரியை வோரா வஸிலியெவ்னா கஸ்க தாமாவா. ஜார் மன்னன் மூன்றாம்அலெக்ஸாண்டரைகொல்ல முயன்றதாக கைது செய்யப்பட்ட மாணவர்களில் உங்களது சகோதரும் சகோதரி ஆன்னாவும் உள்ளனர் என அவர் தந்த கடித்ததில் இருந்தது.அக்கடிதம் பீட்டர்ஸ்பர்க பல்கலைக்கழக த்தி லிருந்து வந்திருந்தது.அந்தக்கடிதம் ஏற்படுத்திய பாதிப்பு அடங்கும் முன்னரே தங்கள் சகோதரருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

அண்ணன் தூக்கிலிடப்பட்டார் என்கிற செய்தி உங்களை வெகுவாகத்தான் பாதிக்கிறது தோழரே/அன்றிலிருந்து ஸிம்பர்ஸ்க் நகரில் உங்களது குடும்பத் திற்கு தெரிந்த எல்லோரும் விலகிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.உங்களது தாயார் வீதியில் வரும் பொழுது எதிரே வருபவர்கள் அவசர அவசரமாக எதிர் சாரிக்கு செல்வார்கள்.அல்லது மேகத்தையோ தரையையோ ஆராய முற்படு பவர்கள் போல் பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டார்கள். மரண தண்டனை அடைந்த மகனின் தாயாருக்கு முகமன் தெரிவிக்காமல் இருப்பத ற்காக/

ஆனால் தோழரே இதைகண்டெல்லாம் உங்களது தாயார் இம்மியளவும் மனம் உடைந்து போகவில்லை.அவர்கள் அழவில்லை. தலை யை நிமிர்த்தி யவாறு தெருவில் நடமாடினார்கள்.தன்மானமும் மிகவும் உளவலிமையும் உள்ளவள் நம் அம்மா என்று எண்ண தொடங்கினீர்கள் நீங்கள்/

இதற்குள் உங்கள் உயர் நிலைபள்ளிப்படிப்பும் முடிவடைகிறது. பல்கலைக் கழகத்தில்சேரவேண்டும்.பீட்டர்ஸ்பர்க்பல்கலைக்கழகமஉங்களைஅனுமதிக்கு
மா என்கிற கேள்வி உங்கள் முன்.என்ன செய்வது,,?என்ன செய்வது,,? என்ன செய்வது,,,இப்பொழுது,,,?என மனதுள் வதைத்த கேள்வியின் முடிவாக நீங்கள் இதுவரை வசித்த ஸிம்பர்ஸ்க் நகரின் உறவை அறுத்துக் கொண்டு கஸான் நகருக்குகுடும்பத்தைகொண்டுபோய்விடலாம்என்கிறமுடிவுக்குவருகிறீர்கள்.
தவிரவும் தங்களது தாயாருக்கு கிடைத்து வந்த தகப்பனாரின் பென்ஷன் கும்பச்செலவிற்குப்போதவில்லை.

இப்படியான சூழலில் ஸிம்பர்ஸ்க் செய்தித்தாளில் பின்வரும் விளம்பரம் வெளியாகிறது சிறிது நாட்களில்/தோட்ட வீடும் பியானோவும் ,நாற்காலி, மேஜைமுதலியனவும்உடமையாளர்அயலூர்செல்வதுகாரணமாக விற்கப்படு கிறது.என,,,/

அன்றிலிருந்து தங்களது வீடு வழிப்போக்கர்கள் சாவடி போல் தோற்றம் அளிக்கிறது. வாசலில் மணி அடித்த வண்ணம் உள்ளது.வாங்க விரும்புவோர் வந்தார்கள், ஒவ்வொரு அறையாக சுற்றிப்பார்த்தார்கள்.பொருட்களை நோட்ட மிட்டார்கள். கிசுகிசுத்தார்கள்.வெளிரிய நிறமும்,கண்டிப்பான தோற்றமும் வெள்ளை தலையுமாக அம்மா வாயில் அருகே நின்றார்கள்.அன்னையின் பக்கத்தில்ஓடிஓடிநல்லியல்பற்றுநோட்டமிடும்பார்வைகளிலிருந்துஅவர்களை காக்க விரும்புகிறீர்கள்.வீட்டுவாசலில் மணியோ திரும்பத்திரும்ப அடித்த வண்ணம்/

புதிது புதிதாக ஆட்கள் வருகிறார்கள். வீட்டின் பொருட்களை தொட்டு தூக்கிப் பார்க்கிறார்கள்,விலை பேசுகிறார்கள்.இறுதியில் பியானோ தவிர அனைத்தும் விலை போகிறது.உங்களது குழந்தைப்பருவமும்,உங்களது இன்பமும் நிறைந் திருந்த பியானாவோடு உங்கள் குடும்பம் கஸான் நகரை நோக்கி.உங்கள் தொப்புள் கொடி உறவான ஸிம்பர்ஸ்க் நகரை விட்டு பியானாவோடு ஊங்கள் குடும்பம் கஸான் நகரை நோக்கி/

உங்கள் தொப்புள் கொடி உறவான ஸிம்பிர்ஸ்க் நகரை விட்டு உங்கள் குடும்பம்பியானோவின் இசையாய் எங்கும் பறந்து பரவி நுழைகிறது கஸான் நகருக்குள்.

முற்றிலும் வேறு பட்ட சூழல்,பழகாத மனிதர்கள்,புது முகங்கள் இன்னும் நிறைய நிறையவான புதுச்சூழலில் உங்களது குடும்பமும் அங்கே வேர் விடுகிறது. கஸான் நகர பல்கலைக் கழகத்தில்ஒழுங்கு முறைகள் அதிக கட்டற்றவையாக இருக்கும் என்கிறஉங்களது கூற்று தவறாகிப்போகிறது தோழரே/

அங்கிருந்த கண்காணிப்பாளர்கள் மாணவர்களின் ஒவ்வொரு அடியையும், ஒவ்வொரு அசைவையும், ஒவ்வொரு சொல்லையும் கண்காணிக்கிறார்கள். ஜார் அரசாங்கத்திற்கு எதிராகவோ தலைமை போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராகவோ யாராவது அசைகிறார்களா என கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

கஸான் பல்கலைக்கழகம் கடுகடுப்பும் ஏக்கமும் நிறைந்த ஒரு சூழ் நிலை யை உருவாக்கித் தந்தது. ருஷ்யா முழுவதும் சிறைகூடம் போலவே காட்சிய ளித்தது உங்களுக்கு/

இச்சூழ்நிலையில்தான் 1887 டிசம்பர் 4ல் மாஸ்கோவில் மாணவர்கள் கலக நடவடிக்கைகள் பற்றிய செய்திகள் பத்திரிக்கைகளில் வெளியாயின.உங்கள் உரிமைகளைகாப்பாற்றிக்கொள்ளுங்கள்,போராடுங்கள்என்கிறரகசிய வேண்டு கோள் கஸான் மாணவகளிடையே தோன்றியது.

ரகசிய வேண்டுகோள் தோன்றிய சில மணி நேரங்களிலேயே ஒரு குரல் எழும்பியது.மாணவர்களே கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதான ஹாலுக்கு வாருங்கள் என/மாணவர்கள் தடதடவென ஓடி இரண்டாவது மாடியில் இருந்த ஹாலுக்கு சென்றார்கள். அந்த மாணவர் கூட்டத்தில் முன்னால் இருந்த வர்களில் நீங்களும் ஒருவர் என சொல்லித்தான் தெரியவும் வேண்டுமா,,, என்ன,,,?

அப்போதுகூட்டத்தலைவர்பேசுகிறார்.தோழர்களேவாருங்கள்சபதம்செய்வோம்.ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதாக/நாம் நமது கோரிக்களுக்காக போராடுவதாக நாம் கோருகிறோம்.சுதந்திரம் சட்ட உரிமை ,உண்மை, அந் நேரம்தான்மாணவர் இருந்தஹாலுக்குள் நுழைகிறது போலீஸ்.கனவான்களே சட்டத்தின் பெயரால் கோருகிறோம்.இந்தக்கணமே கலைந்து போய் விடுங்கள் என்கிறது போலீஸ்.

“முடியாது ஒழி வெளியே போ,என்று குரல் கொடுக்கிறது மாணவர் கூட்டம். பின் பல்கலைக்கழகத்தலைவர் வரவும் சமாதானமடைந்து விண்ணப்பதை சமர்ப்பிக்கிறார்கள்.ருஷ்ய மாணவர்களின் வாழ்கை சகிக்க முடியாதது ஆகி விட்டதுஎனவிண்ணப்பதில்எழுதப்பட்டிருந்தது,அமைதிஅடையுங்கள்கனவான் களே,என மாணவர்களை சமாதானப்படுத்த முயன்ற பல்கலைத் தலைவரை நோக்கி உக்கிரமாய் குரலெப்புகிறது /அப்படியானால் எஙகள் கோரிக்கைகளை நிறைவேற்இசையவில்லையா நீங்கள்,அப்படி இல்லாத பட்சத்தில் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறுவோம் நாங்கள், மாணவர் சீட்டுக்களை திரும்பக் கொடுத்துவிடுவோம்.எனக்கூறியகணத்தில்பல்கலைக்கழகத்தலைவர் சாய்வு மேஜையின்மீதுமுதல் மாணவர்சீட்டுவைக்கப்படுகிறது. அப்புறமென்ன கண்க ளிலும் மனதிலும் கோபம் கொப்பளிக்க நின்ற மாணவர் கூட்டம் நுழைவுச் சீட்டுக்களை தூக்கிப்போட்டது மேஜை மேல்.பத்து இருபது முப்பது……என நூற்றுக்கணக்கில் குவிந்த நுழைவுச் சீட்டுக்களில் உங்களதும் ஒன்று.

பின்னே சூரியன் சுட்டெரிப்பது சகஜம்தானே,,? நுழைவுச்சீட்டைக்கொடுத்த அன்று மாலை நீங்கள் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்படுகிறீர்கள்.அன்று இரவே கைதும் செய்யப் படுகிறீர்கள்.கைது செய்யப்பட்ட சில நாட்களில் போலீஸ் கண்காணிப்பில் கக்கிஸ்கினோ கிராமத்திற்கு அனுப்பபடுகிறீர்கள். இளம் மாணவப்பிராயம்,அதற்கே உண்டான பிரத்யோக மனோ நிலையும் எண்ணங்களும் நடைமுறையும் அந்நிலையில் போலீஸ் காவலில் இருந்த தங்களின் மனோ வலிமையை நூற்றாண்டு கடந்தும் இப்பொழுது நினைக்கும் பொழுதும் மெய் சிலிர்க்கிறது,தோழரே/

கிக்கிஷ்கினோ கிராமத்தில் பனிகாலம் கடும் குளிரும் புயலுமாக இருந்தது, தாங்கள் இருந்த சிறு வீடு அற்றலைந்தது,அதற்குள் எல்லாப்பக்கமும் இருந்து காற்று வீசியது,புகைபோக்கி குழாய் வழியே சூறாவளி சீழ்கை அடித்தது. வெண் பனிக்குவியல்ஜன்னல் வரை மேடிட்டிருந்தது.பனிக்காலகக்கிஷ்கினோ கிராமம் ஏக்கமும் தனிமையும் நிறைந்ததாய்க்கழிந்தது.

அப்படியானால் அந்தப் பனிக் காலம்முழுவதுமான தனிமையை எதைக் கொ ண்டு விரட்டிஅடித்தீர்கள்? எதைக் கொண்டு தூற்றினீர்கள்.எப்படி அதன் முகத் தில் காறி உமிழ்ந்து விரட்டியடித்தீர்கள்,,? வேறெப்படி படிப்பின் மூலமாகத் தான் பனிக்காலம்முழுவதும்உங்களைப்பிடித்திருந்ததனிமையை விரட்டப் படித்தீர்கள்,,, படித்தீர்கள்,,,படித்தீர்கள்அதுவே உங்களின் சிந்தனையையும் செயலையும்கூர்மையாக்குகிறது.புத்தகங்களின்பக்கங்களை புரட்டப் புரட்ட தாங்களும் புரட்டப்படுகிறீர்கள். ஆகர்சிக்கப்படுகிறீர்கள்.சிந்தனைத்தெளிவுப் பெறுகிறீர்கள்.

2 comments:

  1. Replies
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
      நன்றிவருகைக்கும்,கருத்துரைகுமாக/

      Delete