8 Dec 2016

முள் பாதை,,,,/(லால் சலாம் பாகம் 2)

பனிக்காலம் முழுவதும் உங்கள் தனிமையை விரட்ட படித்தீர்கள்,படித்தீர்கள் படித்துக்கொண்டே இருந்தீர்கள்,,,,,,,,அதுவே உங்களது சிந்தனையையும் செய லையும் கூர்மையாக்குகிறது.

புத்தகங்களின் பக்கங்களை புரட்டப்புரட்ட தாங்களும் புத்தகங்களால் புரட்டப் படுகிறீர்கள்.ஆகர்சிக்கப்படுகிறீர்கள்.சிந்தனைத்தெளிவுபெறுகிறீர்கள்.

உங்களுக்கு பிடித்த ருஷ்யஎழுத்தாளர் செர்னிஷேங்ஸ்கி/ அவருடைய புரட்சி கரமான எழுத்தே உங்களது எண்ணங்களுக்கு உரமிடுகிறது.ருஷ்ய சமூகத்தில் ஜார் மன்னரது ஆட்சியைச்சொல்லும் அவர். அதிகார வர்க்கமும் தொழிலதி பர்களும்நிலபிரப்புக்களும்தான்ருஷ்யாவைஆள்கிறார்கள்.குடியானவர்தொழிலா ளர் பாடு மிகவும் சகிக்க முடியாததாகஇருக்கிறது எனக்கூறும் அவர் ருஷ்ய வாழ்வின் ஒழுங்கீனம் முழுவதையும் கூறி போராட அழைக்கிறார்.புரட்சிக்கு அறைகூவல் விடுக்கிறார்.அப்படியானவரது உழைப்பும் வேண்டுகோளும் அடங்கிய புத்தகத்தின் பக்கங்கள் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஓவ்வொரு புது விஷயத்தை உங்களுக்கு விதைத்து நிறைய கருத்துக்களை யும் கனவுகளையும் திட்டங்களையும் வாழ்க்கை குறிக்கோள்களையும் உருவாக்குகிறது.

ஆமாம் உங்களின் வாழக்கை குறிக்கோ ளாக எதை தேர்வு செய்தீர்கள்? புரட்சிப்போராட்டத்தை/ கொடுங்கோலன் ஜார் மன்னனுக்கும் பணக்கார வர்க்க த்திற்கும் எதிராக போராடுவதற்கே தன் வாழ் நாள் முழுவதையும் ஆற்றல் முழுவதையும் அர்பணிக்க விரும்புகிறீர்கள். மக்களின் இன்பத்திற்காகவும் விடுதலையின் பொருட்டும்/

அன்றிலிருந்து புரட்சிப்போராட்டமே தங்களது முக்கிய குறிக் கோளாகிறது. ஆனால் வாழ்க்கை நடத்த உழைத்துப்பொருள் ஈட்ட வேண்டும்.அதற்கு பல்கலைக்கலைக்கழக பட்டப்படிப்பை முடித்து பட்டம் பெற்று ஏதேனும் துறையில் தனித்தேர்ச்சி அடைய வேண்டும் என நினைக்கிறீர்கள்/

வசந்த காலம் வந்ததும் மீண்டும் கஸான் பல்கலைக்கழக்கத்தில் படிக்க மனுப் போடுகிறீர்கள்.ஆனால் மனு நிராகரிக்கப்படுகிறது.அதனால் என்ன,,,, தங்களது உறுதிதளராமனதின்முன்இதெல்லாம்,,,,,நான்குவருடப்பட்டப்படிப்பைஒன்றை ஆண்டுகளில்கற்றுத் தேர்ந்து பரிட்சை எழுத பீட்டர்ஸ்பர்க்குப் போனீர் கள்.நரைத்த தலையும் ,பெருமித தோற்றமும் கொண்ட பேராசிரியர்கள் கேட்ட கடினமான கேள்விகளுக்கு சற்றே அகன்ற தாடையும்,ஒளிவீசும் கண்களும் கொண்ட நீங்கள் சரளமாக விடையளிக்கிறீர்கள்.

நீங்கள் பலகலைக்கழகச்சேர்க்கைக்கு பரிட்சை எழுத தயாராகிவிட்டீர்கள். பரிட்சை எழுதி முடித்து விட்ட சந்தோசத்திலும் விரைவில் பீட்டர்ஸ்பர்க்கில் நிலையாகக்குடியேறி நமது புரட்சிகர நடவடிக்களை தொடங்க வேண்டும் என்கிற திட்டமிடலுமாய் இருந்த அந்த 1981 மே தங்களது தங்கை ஓல்கா உடல் நலமின்றி இறந்து போகிறார்கள், தோழரே/

தங்களது தங்கை இறந்து போன அதே நாள்தான் நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக தங்களது சகோதரர் அலெக்சாண்டர் மரண தண்டணைக்கு உள்ளான நாள் என்பது உங்களை வெகுவாக வாட்டுகிறது.

தங்கையின் மரணத்திற்கு பின்பாக தங்களது குடும்பம் ஸ்மாரா நகருக்கு குடி போகிறது.ஸ்மாரா நகரில் வாழ்ந்த தங்களது வாழ்நாட்களில்தான் பல்கலைக் கழகத்தேர்வுக்கு பயிலவும் மார்க்ஸின் போதனைகளை நன்கு ஆழ்ந்து கற்கவும் செய்தீர்கள். மார்க்ஸின் மூலதனம் நூலும் மார்க்ஸீம் ஏங்கெல்ஸீம் சேர்ந்து வெளியிட்ட கம்யூனிஸ்ட கட்சி அறிக்கையும்,,,,,,தொழிலாளி வர்க்கம் முதலாளிகளை வெற்றி கொண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி புதிய சமூகம் அமைக்கும்.. என மார்க்ஸ் சான்றுகளுடன் காட்டியிருந்த கூற்றும், போதனையும் தங்களை மனமாரக் கவர்ந்தது. ஆட்கொண்டது.அந்த ஆட் கொள்ளலே தங்களைமார்க்சியவாதிஆக்கியது முமுமையாய்/

ஸ்மாராவிலிருந்துமார்க்ஸீயவாதிகள் வட்டத்தில் கலந்து கொண்டு மார்க்சின் கருத்துக்களை விளக்கவும் பரப்பவும் தொடங்கினீர்கள்.அதுவும் அரசியல் போலீசாரின் பிடியில் சிக்கிக்கொள்ளாமல் ரகசியமாக/

பல்கலைக்கழக தேர்வு முடிந்து அதில் வெற்றி பெற்ற பின் ஸமாரா நீதி மன்றத்தில்வழக்குரைஞராகபணியாற்றிய தாங்கள் குடியானவர்கள் ஏழைகள் தரப்பில் நிறைய வாதாடினீர்கள்.வெற்றி பெற்றீர்கள்.

வேலையில்இருந்து கொண்டே புதிய விஷயங்களை கற்ற தாங்கள் உங்களது விருப்படியே1893 ல் பீட்டர்ஸ்பர்க செல்கிறீர்கள் வலிவும் உற்சாகமும் பொங்க/

தங்களது குடும்பம் மாஸ்கோ நோக்கி,,/பீட்டர்ஸ்பர்க்கில் குடியேறிய ஒருநாள் மாலை நேரம் விளக்குகள் மங்கலாக எரிந்த வீதிகளில் நீங்கள் குதிரை வண்டியில் பயணம் செய்கீறீர்கள்.தொழிலாளர்கள் குழுகூட்டத்திற்கு,,,/

தாங்கள் ஏறிய குதிரை வண்டியில்தான் கறுப்புக்கண்ணாடி மாட்டியிருந்த சிறுசுடான ஆள் ஒருவன் இருந்தான், அதுதான் அவன் நெற்றியிலேயே எழுதி ஒட்டியிருக்கிறதே, அவன் போலீஸ் உளவாளி என,,/ செய்தித்தாள் படிப்பது போல நோட்டமிடுகிறான் உங்களை/

இப்பொழுது நீங்கள் என்ன செய்வது,,? குதிரை வண்டியின் வெளிவாயில் அருகே உட்கார்ந்து மேல் கோட்டுக் காலரை தூக்கி விட்டவாறு உளவாளி யிடமிருந்து எப்படி தப்பிப்பது என யோசிக்கிறீர்கள்/

தூங்குவது போல பாசாங்கு செய்தவாறு வண்டியின் ஜன்னல் கண்ணாடி மேல் வெப்பக்காற்றை ஊதி அதில் படித்திருந்த வெண்பனியில் சிறு வட்டத்தை ஏற்படுத்துகிறீர்கள்/

நிறுத்தத்தை தவற விடாதிருக்கவும்,வெளியே பார்க்கவும்,,/நீங்கள் இறங்க வேண்டிய நிறுத்தம் வருவதற்கு இனி சிறிது தூரமே/வண்டி நிற்கிறது.நீங்கள் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் யாரும் இறங்க வேண்டுமா,,,,கண்டக்டர் கேட்டார்.நீங்கள் இறங்கவில்லை.வண்டி புறப்படுகிறது.சிறிது தூரம் போயும் விடுகிறது,அப்போது நீங்கள் இருந்த இடத்தை விட்டு துள்ளி எழுந்து வண்டியிலிருந்து கீழே குதித்து ஒரே ஓட்டமாக அடுத்த வீதிக்குச்செல்லும் சந்தில் பாய்கிறீர்கள்.உளவாளியும் வண்டியிலிருந்து குதிக்கிறான்.இடமும் வலமுமாக நோக்குகிறான். ஒருவரை யும் காணவில்லை.நீங்களோ அடுத்த தெருவில் சென்று அங்கிருந்த வீட்டில் தொழிலாளர்க்குழுக்கூட்டத்தை தடங்கலின்றி நடத்தினீர்கள்.

உலோக கம்பியர் பாபுஷ்கின் எனும் தொழிலாளி வீட்டில் ரகசியமாக கூடி தங்கள் நிலைமை பற்றி விவாதித்தார்கள் தொழிலாளர்கள். அவர்கள் சூரிய னைக் கண்டதில்லை.அதிகாலை இருளில் சங்கொலியால் எழுப்பப்பட்டு வேலைக்குப்போய் இரவானதும் திரும்புவர்களாகவே இருந்தார்கள்.ஒளியற்ற அவர்கள் வாழ்க்கை அதை மாற்றும் பொருட்டு மார்க்சின் போதனைகள் பின்வருமாறுபோதிக்கிறது.தொழிலாளர்கள் சமூகத்தை மாற்றி அமைக்க வல்ல சக்தி ஆவர்.

தொழில் அதிபர்களுக்கும் ஜார்மன்னனுக்கும் எதிராக தொழிலாளர்கள் கிளர்ச்சி செய்யவிரும்பினால் அதற்கு அவர்களால் முடியுமானால் அவர்க ளை முறிய டிக்க ஒருவராலும் ஆகாது.எனவே தொழிலாளர்கள் ஒன்று சேர வேண்டும். குறிக்கோளை திட்டம் செய்து கொண்டு அதை நோக்கி முன்னேற வேண்டும். தொழிலாளர்கள் குறிக்கோள் எதுவாக இருக்க முடியும்,,? உழைப் பாளிகள்அரசை ஸ்தாபிப்பதுதான்.நேர்த்தியான அரசு, நியாயம் உள்ள சமூகம்,  மார்க்ஸ் இந்தசமூகத்தை கம்யூனிஸசமூகம் என அழைக்கிறார்என்கிற அரிய கருத்தை போதிக்கவே தொழிலாளர் கூட்டங்களுக்கு சென்றீர்கள். தோழரே,,. அதன் மூலமாய் புரட்சி போராட்ட சங்கம் உருவாக்கினீர்கள்.அதற்கு தலைமை தாங்கி செல்வதோடு நின்று விடவில்லை நீங்கள்.படித்தீர்கள். எழுதினீர்கள். பகலில் ,முன்னிரவில்,பின்னிரவுவரை,,,, என படிக்கவும் எழுதவும், சிந்திக்கவு மாய்,,,

மூலதனஆட்சியைஎதிர்த்தபோராட்டத்தைசரியானவழியிலும் ஒழுங்கமைத்த முறையிலும் எப்படி நடத்துவதுஎன்கிற நூலை எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்.

வெளிப்படையானஅரசியல்போராட்டம்என்னும்நேர்வழியில் வெற்றிகரமான கம்யூனிச புரட்சியை நோக்கி ருஷ்ய தொழிலாளர்கள் முன்னேறுவார்கள் என சிந்திக்கிறீர்கள்.அந்த 24 வயதில் புத்திளமையில்/

வெற்றி வாகை சூடும் கம்யூனிச புரட்சிக்கு தொழிலாளர்களை அறைகூவி அழைத்தது தாங்கள் எழுதிய புத்தகம்.

அதற்கு முன் யாருமே ஒரு போதும் ருஷ்ய தொழிலாளர் களுக்கு இவ்வளவு துணிவுள்ள அறைகூவல் விடுத்ததில்லை.மடை திறந்த புது வெள்ளம் கட்டற்று எந்த வழியும் பாயும்தானே,,?முதன் முதலாக தொழிற்சாலையில் உண்டான கலகம் முதலாளிகளின் கடை உடைப்பிலும் நிர்வாகிகள் வீட்டில் தீ வைப்பதிலும் போய் முடிந்தது.

அதைக்கண்டும்,கேள்விப்படவும்செய்ததாங்கள் மிகவும் மனம் பதை பதைத்துப் போனீர்கள். அரசியல் உணர்வு உள்ள தொழிலாளர்கள் அடிதடி போராட்டம் நடத்தக் கூடாது.

தொழிலாளர்கள் அடிமைத்தளையிலிருந்து மீள தீர்வு அடிதடி போராட்டம் அல்ல. ஒன்று பட்ட போராட்டமே என்று இன்றே துண்டு பிரசுரம் எழுதி அதை தொழிலாளர் மத்தியில் விநியோகிக வேண்டும் என முடிவெடுக்கிறீ ர்கள்.எழுதுகிறீர்கள்.தொழிலாளர் பாபுஸ்கினுடைய வீட்டில் இதுதான் நமது முதல் பிரசுரம்.இன்னும் நிறைய பிரசுரம் எழுத முடியவில்லை என்பதில் எனக்கு வருத்தமே,எனக்கூறியவாறு பிரசுரத்தைபாபுஷ்கினிடம் ஒப்படைக்கி றீர்கள்.

இன்று நள்ளிரவோடு பாபுஷ்கினோடு சேர்ந்து துண்டு பிரசுரம் தயாரித்து ஒரு வருடம் ஆகிறது.இப்போதெல்லாம் பீட்டர்ஸ்பர்க் போராட்டச் சங்கம் நூற்றுக் கணக்கான பிரசுரங்களை ரகசியமாக அச்சிட்டு வெளியிட்டது.

நீங்கள் வெளியிட்ட பிரசுரம் எவ்வளவு ரகசியமானதோ அதைப்போலவே நீங்கள் உளவாளிகளால் கண்காணிக்கப்படுவதும் பின் தொடரப்படுவதும் படு ரகசியமாய் நடைபெற்றது.

ஒவ்வொருமுறையும்உங்கள் புத்தி சாதுர்யத்தினாலும் சாமர்த்தியத்தினா லும்  தப்பி விடுகிறீர்கள்.1985 டிசம்பர்8 நதேழ்தா கன்ஸ்தன்னீவ்னா குரூப் ஸ்கயாவின் வீட்டில் நடந்தபோராட்டசங்கஉறுப்பினர் கூட்டத்தில் ரபேச்சிய தெலோ (தொழிலாளர் விவகாரம்) என்கிறசெய்தித்தாளைசட்டவிரோதமாக வெளிவிடுவதுஎனதீர்மானிக்கிறீர்கள்.போராட்டஉணர்வும்துணிவும் நிறைந்த தலையங்களைநீங்கள்தொழிலாளர்விவகாரம்பத்திரிக்கையில் எழுதினீர்கள். எழுதியகட்டுரைகளும்தலையங்கமும்,இருபத்தவயது மூன்று வயது நிரம்பிய புரட்சிஎண்னம் கொண்ட இளைஞன் அந்த்தோலீவன்யேவிடம் ஒப்ப டைக்கப் படுகிறது தங்களால்../

அவை அச்சகத்திற்கு சென்ற மறு நாள் கட்டுரைகளும் தலையங்கமும் விரைவில் செய்தித்தாளாக தொழிலாளர் கையில்/

தங்களிடமிருந்து இளைஞரின் கைக்கு,இளைஞரிடமிருந்து அச்சகத்திற்கு அச்சகத்திலிருந்து உருமாறி செய்தித்தாளாக தொழிலாளியின் கைக்கு என்கிற ஏற்பாடு ஆளும் வர்க்கத்திற்கு உவப்பானதா என்ன,,,?அல்லதுஅதுதான் தனது விஷ நகங்களை முடக்கி வைத்துக்கொண்டு சும்மா இருக்குமா என்ன,,?

தங்களுக்கு கைது வாரண்டு பிறப்பிக்கப்படுகிறது ஒரு நாளின் பின்னிரவில்/ அதைக்கண்டு கலங்காத தாங்கள் மற்ற தோழர்களைப்பற்றித்தான் கவலைப் பட்டீர்கள்.கைது செய்யப் பட்டது நான் மட்டும்தானா,,,?தோழர்களுமா,,,,இந்த கைது நடவடிக்கையின் மூலம் எங்களை சிதைத்து விட முடியாது,எங்கள் செயலை அழிக்க முடியாது.மேலும் லட்சோப லட்சம் தொழிலாளர்கள் போரா ட்டத்திற்கு வருவார்கள்.ருஷ்யாவில் எல்லா தொழிலாளி மக்களும் கிளர்ந்து எழுவார்கள் என எண்ணீர்கள் தோழரே,,,/

கைது சிறைவாசம் கேள்விப் பட்டதும் தங்கள் தாயாரும் சகோதரியும் வந்து விட்டார்கள் மாஸ்கோவிலிருந்து.

ஒருமுழு நேர புரட்சி யாளனை சிறைக் கொட்டடி ஒன்றும் முடக்கிப் போட்டு விடவில்லை.சிறைச் சாலையில் இருந்து தரப்படுகிற பன்ரொட்டியின் நடுவே ஏற்படுத்திய சிறிய குழிதான் நீங்கள் தயாரித்த மைக்கூடு.சிறையில் தரப்படும் மைதான் பன் ரொட்டியின் குழியில் ஊற்றி எழுதப்பயன்படுத்தப்படும் மை,,/

ஒரு புத்தகத்தை எடுத்து அதன் வரிகளுக்கு நடுவே பாலினால் ஒரு சொல் எழுது வீர்கள்.பால்உலர்ந்ததும்சொல்உலர்ந்து விடும்.அடுத்ததாய்,, அடுத்த தாய்,,,,, என உங்களது எழுத்துப்பணிகளுக்கு ஊடாய் சிறைக்கண்காணிப்பாளர் வந்து விட்டால் பன்னும் பாலும் உங்களுக்கு உணவாகிப்போகும்.

அப்படி எழுதிய புத்தகத்தை வீட்டுக்கு கொடுத்து அனுப்புவீர்கள்.தங்களின் சகோதரிகள்புத்தகத்தின்பக்கத்தைவிளக்கின்அருகேகாட்டிசூடுபடுத்துவார்கள். சொற்கள்ஒவ்வொன்றாய்புலப்படத்தொடங்கும்புகைப்படபிலிமின்நெகடிவைப் போல/இப்படித்தான்சிறையிலிருந்ததங்களின்எண்ணங்கள் துண்டு பிரசுரமாகி தொழிலாளர்களின் கையில்/

காற்றைக்கட்டிக்கொண்டு போய் சிறையில் அடைத்தால்,,,?அது ரகசியமாக வெளியில் வீசவும் செய்தது. இப்படியெல்லாம் தங்களின் கருத்துக்களைப் பரப்பியதில் தங்களின் மணப்பெண் நதேழ்தா கன்ஸ்தந்தீனாவுக்கும் முக்கிய பங்கி ருந்தது.

பதினான்குஆண்டு சிறை வாசமும் தொலைதூர சைபீரிய கிராமத்தில் ஓர் ஆண்டும் கழித்து விட்ட தங்களுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் சைபீரிய கிராமத்துசிறைகுடியிருப்புவாசம்பாக்கியிருந்தது.தங்களதும்மற்றதோழர்களது மான கைதுக்குப்பின் சிறையிலடைக்கப்பட்ட நதேழ்தாகன்ஸ்தந்தீனவ்னா, சிறைவாசத்திற்குப்பின் சைபீரிய சிறைக்குடியிருப்பில் வசிக்க வேண்டும் என தண்டனை விதிக்கப்பட்டிருந்த போதிலும் தன்னையும் உங்களுடன் சேர்ந்து வசிக்க அனுமதிக்க வேண்டும் என அனுமதி பெற்று விடுகிறார்.

நதேழ்தாகன்ஸ்தந்தீனவ்னா சைபீரிய கிராமத்திற்கு வந்ததும் ஆற்றின் கரை யோரமாக உள்ள புது வீட்டில் குடிபெயறுகிறீர்கள்.அங்கு ருஷ்யாவில் முதலா ளித்துவத்தின் வளர்ச்சி எனும் நூலை எழுதி முடிக்கிறீர்கள்.

அது மட்டுமா அந்த சைபீரிய கிராமமான ஷ்னென்கோயே வாசத்தின் போது எத்தனையோ குடியானவர் உள்ளங்களில் உங்களை நல்லவிதமாக பதித்து விட்டீர்கள்/

                                                                                                                 
                                                                                                                  
                                                                                                                      தொடரும்,,,,,,,,,

2 comments:

 1. முள்பாதை எப்பவும் போல் உங்கள் எழுத்தில் மிளிர்கிறது அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete