13 Dec 2016

இதற்குத்தானா ஆசைப்பட்டாய்,,,,,,??????



 
நாங்க தெனத்துக்கும் பேங்குக்கு
போறோம் சந்தோஷமா
நாங்க தெனசரி பேங்குல இருந்து
திரும்புறோம் வருத்தம் சொமந்து கிட்டு/
நகைக்கடன் வாங்குறதுக்குப் போறோம்,
அடகுவச்ச நகைய திருப்புறதுக்காக ப்போறோம்.
பணம் போடுறதுக்காகப் போறோம்,
பணம் எடுக்குறதுக்காகப்போறோம்.
நாங்க பணம் கட்டி ஆரம்பிச்ச எங்க கணக்குல
பணம் கட்டுறதுக்கும்,பணம் எடுக்குறதுக்கும்
ஆயிரம் கட்டுப்பாடும் விதிமுறையும் சொல்றாங்க/
பேங்குல வேலை பாக்குறவுங்களும்
அவுங்களால முடிஞ்ச அளவுக்கு
எங்களுக்கு சேவை செய்யத்தான் செய்யிறாங்க/
ஒத்துழைக்கவும் செய்யிறாங்க,
ஆனாலும் எங்களது எதிர்பார்ப்பை
அவுங்களால பூர்த்தி செய்ய முடியாத
கையறு நெலையில அவுங்க/
அரிசி டப்பாவுலயும் ,அஞ்சறைப்பெட்டியிலும்
பீரோவுக்குள்ளையுமா,,,,,,,,,,
சேமிச்சி வச்சிருந்த பணத்தையும்
வீட்டு செலவுக்காக வச்சிருந்த கொஞ்ச நஞ்சத்தையும்
500.1000 ரூபாய் தாளு செல்லாதுன்னு சொன்ன ஒடனே
 பேங்குல கொண்டோயி கட்டீட்டோம் பயந்து போயி./
இப்ப கையில இருக்குற பணமும் போயி
பேங்குலயும் தேவைக்கு பணம் வாங்க முடியாத
நெலையில பேங்க் வாசல்ல வரிசையில நிக்கிறோம்,
ஆஸ்பத்திக்கு செழவழிக்க முடியாம,
புள்ளைங்க படிப்புக்கு
பள்ளிக்கூடத்துக்கு பீஸ் கட்ட முடியாம
அப்பறம் அப்பறமான அத்தியாவசியமான
பணம் எடுக்க முடியாம,,,/

5 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நமக்காக அமைக்கப்பட்டுள்ள சிறைக்குள் நாம்.

கரந்தை ஜெயக்குமார் said...

வேதனை
மக்களின் வேதனையை முழுவதுமாய் அறுவடை செய்கிறார்கள்

vimalanperali said...

வணக்கம் டாக்டர் ஜம்புலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் சிரமம் சார்...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/