3 Jan 2017

பேப்பர் மடக்கு,,,,,,,,

மடக்கப்பட்டிருந்த காகித்ததின் நீள அகலம் எவ்வளவு எனத்தெரியவில்லை. அதன்மடக்குகள்எத்தனைஇருக்கும் என பிரித்துப்பார்க்கவும் தோணவில்லை,

என்ன பேப்பர் இது ,எப்படி இங்குவந்தது.அதை ஏன் அங்கு கொண்டு போய் வைத்ர்திருக்கிறார்கள் ,வைத்தது யார் தெரிய வேண்டும் முதலில்,அதை மடக்கி ஏன் வைக்க வேண்டும்,மடக்கலின் மத்தியம் வைத்த பேப்பர் ஏதோ டிசைன் கொண்டு உருவாகப்பட்டது போல் இருந்தது,

இது போலான வேலைகளை சின்னவள்தான் செய்வாள்,எதோ ஒரிகாமி என்கிறார்கள்,பேப்பரிலேயே செய்யும் பொம்மையை அப்படிச்சொல்கிறார்கள்.

மேலும் மேலை நாடுகளில் அது ஒரு கலையாகவே அளார்ந்து வருகிறது எனச்சொன்னார்நண்பர்ஒருவர்,இவனும்அவ்வப்பொழுதுநீயூஸ்பேப்பர் பார்க்கை யிலும் பார்த்திருக்கிறான்,

பேப்பரில்கலைஞாயிறு அல்லது ஓவியம் சம்பந்தமான பகுதியில் இவன் கண் டதுண்டு,

அந்நேரம் அது போலாய் செய்து பார்க்க ஆசைப்பட்டு மனம் துடித்ததுண்டு. அது அந்நேரமே அவ்வளவுதான்,விட்டு விட்டு மற்ற வேலைகளைப் பார்க்கப் போய் விடுவான்.

அலுவலகம்வீடு,பிரச்சனை,இத்தியாதி,இத்தியாதிஎனமூழ்கிவிடுகிற அன்றாட நகர்வுகளில் மாட்டிக்கொள்கிறவனாய் ஆகிப்போனபின்பு,,,,,நியூஸ் பேப்பர் அதில் பார்த்த,படித்த கட்டுரை ஓரிகாமி,பேப்பரில் கலைவண்ணம் என்கிற இத்தியாதி,இத்தியாதிகளெல்லாம் மறந்து போகும்,

முதலில் யார் வைத்திருப்பார்கள் இந்தப்பேப்பரை எனகேட்டுவிடுவது சாலச் சிறந்ததுஎன்கிற நோக்கில் மனைவியிடம் கேட்கிறான்,மூத்த மகனிடம் கேட்கி றான், இளைய மகளிடம் கேட்கிறான்,அனைவருமே ஒன்று சொன்னது போல் இல்லை என்கிறார்கள்.

அதோடுநிறுத்திக்கொண்டால் பரவாயில்லை,நீங்கள்தான் ஏதாவது பேப்பரைக் கொண்டு வந்து வைக்கிறீர்கள்,அதில் போன் நம்பர் குறித்துக்கொண்டு வருகி றீர்கள்,அல்லது ஏதாவது முகவரியை எழுதி வைத்திருக்கிறீர்கள், இல்லையா னால்ஏதாவதுஅலுவலகக்குறிப்புஎன குறித்து வைத்துக்கொண்டு வருகிறீர்கள், அது என்னமோ ஏதோ அதன் முக்கியத்துவம் என்னவோ என நாங்களும் எடுப்பதில்லை அதை/

அது போலான பேப்பர்கள் சேர்ந்து சேர்ந்து சேர்ந்து,,,,,,ஒரு வழியாய் இப்படி குப்பை போல் ஆகிப்போகிறதுதான் இந்த இடத்தில்,ஆகவே அதை முதலி அப்புறப்படுத்தப்பாருங்கள் என இந்த நேரத்தில் வலுவானதொரு கோரிக்கை வைக்கிறோம் தங்களிடத்தில்.

நீங்கள் மட்டும் யூனியன்,நிர்வாகம்,பேச்சுவார்த்தை என்கிற அடிப்படிடையில் கோரிக்கை கோரிக்கையாய் வைத்து போராடும் போது அப்படி கோரிக்கை வைக்கும் தங்களிடம் நாங்கள் ஒரு கோரிக்கை வைக்கக்கூடாதா,,,,,,?என்கி றதில் ஒன்று சேர்ந்து கொண்ட அனைவருடன் பேச்சுக்கு செவி மடுத்து தூங்கிவிட்டு மறு நாள் ஓட்டத்தில் கலந்த போது எல்லாம் மறந்து போக இப்பொழுது,,,,,,

ஏறிட்டுப்பார்க்கிற அளவு உயரம் கொண்ட ஷெல்பில் மூன்றாவது அடுக்கில் செல் போன் வைக்கிற ஸ்டேண்ட் அருகே இருந்தது,பேப்பர்.

ஸ்டேண்ட் எல்லாம் ஒரே தூசி,முன்பு கீ பேட் போன் புழக்கத்தில் இருந்த காலத்தில்வாங்கியஸ்டேண்ட்,மரமும்இல்லை.பிளாஸ்ட்டிக்கும்இல்லை, இரண் டும்கலந்ததுமாயும்அதுஅல்லாததாயும்இருந்தது,ரெண்டு கெட்டானாய், ஆனால் பார்க்க அழகாவே இருந்தது ,

ரெண்டு கெட்டான்கள் பார்ப்பதற்கும்,உபயோகிப்பதற்கும் அழகற்றுத் தான் இருக்க வேண்டுமா என்ன,,,?

அந்தபோன்கள் உபயோகத்தில் இருந்த போது வாங்கினான்,இரண்டு செல் போன்களுக்கு இரண்டு ஸ்டேண்ட்கள்/

,டச் போன் வந்து விட்ட இப்பொழுது அது வெறும் ஞாபகார்த்தப் பொருளாய் மட்டுமே வீட்டில்/

ஞாபகார்த்தப்பொருள் சரி,அதன்மீது படிந்துள்ள தூசி என அதைப்பார்க்கிற போதெல்லாம் அவன் மனது அவனைக் கேட்டு செல்லாமல் இல்லை.

செல் போன் ஸ்டேண்ட் அருகில் இருக்கிற பேப்பரை எடுத்து பார்க்கவும் இல் லை, அதன் அகல நீளம் எவ்வளவு எனத்தெரியவும் இல்லை.அதில் இருக்கிற மடிப்புகள் உத்தேசமாக எவ்வளவு இருக்கும் என்பதை இவன் ஊகித்துக் கொள்ள கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள் என கேட்க வேண்டும்.

மிகச்சரியாக நாற்சதுரம் கொண்ட பேப்பரை அல்லது அது அல்லாமல் ஏதோ முனை செவ்வகமாக,நீளமாக இருக்கிற பேப்பரை கையில் எடுத்துவிட்டால் போதும்,அல்லது கீழே கிடப்பதை பார்த்து விட்டால் போதும், அதை எடுத்து சாதா கப்பலிலிருந்து கத்திக்கப்பல் வரை எல்லாம் செய்த காலமெல்லாம் உண்டு,

அதுவும் பறக்கும் கப்பல் செய்வது என்றால் ரொம்ப இஷ்டம், சாதாகப்பலுக்கு நாற்சதுரமான பேப்பரில் நான்கு மடிப்புகள் போதுமானது,கத்திக்கப்பலும் அப்ப டியே,ஆனால்பறக்கும்கப்பலுக்கென்றால் மடிப்புகளும் முனைகளும் கொஞ்சம் கூடும்.

அதனால் என்ன,கூடிவிட்டால் கூடி விட்டுப்போகிறது, பேப்பரை எடுத்து மடித்து கப்பல் செய்கிற மெனக்கெடல்தானே இங்கு முக்கியம்.இவனுக்குத் தெரிந்த அரசின் உயர் அதிகாரி ஒருவர் இப்படித்தான் கண்ணில் காண விடமாட்டார் பேப்பரை.எடுத்து மடித்து ஏதாவது உருவம் செய்து விடுவார்.

முக்கியமாக அவரிடம் ஏதாவது பேசிக்கொண்டிருக்கும் போது கூட அப்படித் தான் ஆகிப்போவதை கண்டுவிடுவான் கண்கூடாக,அவரும் அதை மறைத்து வைத்தெல்லாம் செய்ய மாட்டார்.

டக்,டக்,டக்,,,,,,,,,கையும் கண்ணும் மனதும் ஒன்று சேர்ந்து உருவாக்கிய கூட்டுருவாய் மடமடவென செய்த ஏதோ ஒரு உருவம் அவரை திருப்பதியி ஆழ்த்திய திருப்தியோடு இவன் உட்பட எல்லோரும் பேசிக்கொண்டிருக்கீற மேஜை மீது வைப்பார்,

அவர் அது போலாய் உருவம் செய்து வைத்த கணத்தில் மறந்து போகும், பேசுகிற பேசப்போகிற பேசி விட்ட எல்லாமும்,,,/

அது போலான தருணங்களில் அவரை வியந்து பார்ப்பதுண்டுதான் இவன், இவரிடம் குடிகொண்டிருக்கும் குழந்தைத்தனத்தை,,,/

அது போலான குழந்தைத்தனம் கொண்டு யாரேனும் பேப்பரை மடித்து ஏதா வதுஒரு உருவம் செய்ய முயற்சித்திருக்கக்கூடும்,யாராக இருக்கக்கூடும் அது என்கிற நோக்கில் மனம் நிரம்பிய கேள்வியுடன் பேப்பரை கையிலெடுத்து பிரித்துப்பார்த்துக்கொண்டிருக்கும் போதுதான் அருகில் வந்து சொல்கிறாள் இளைய மகள்.

அப்பா நீங்கதானே முந்தா நேத்து இந்த பேப்பர வச்சி என்னவோ உருவம் செஞ்சிக்கிட்டு இருந்தீங்க,,,,,/

மடக்கப்பட்டிருந்த பேப்பரின் நீள அகலத்தையும் அதன் மடக்குகளையும் பிரித்துப்பார்த்த திருப்தியில் இப்பொழுது இவன்/

10 comments:

 1. வித்தியாசமான கலை.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் டாக்டர் ஜம்புலிங்கம் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. Replies
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக.

   Delete
 3. வித்தியாசமான
  பொறுமை தேவைப்படும் கலை நண்பரே
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 4. Replies
  1. வணக்கம் காசிராஜலிங்கம் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 5. Replies
  1. வணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக,,,/

   Delete