7 Jan 2017

ஒடிஞ்ச பக்கம்,,,,,,


இன்னுமாஇருக்கு என்பதுதான் அவரது பேச்சின் துவக்கப்புள்ளியாக இருந்தது இதற்கு என்ன பதில்சொல்ல,,,?ஆமாம் என்றால் அந்த சொல் ஆச்சரியகுறி தாங்கியதாக ஆகிப் போகும்.இல்லை என்றால் சொன்ன சொல்லின் கனம் தாங்காமல் சொல்லில் தொக்கி நிற்கிற ஆச்சரியக்குறி கீழே தவறி விழுந்து விடக்கூடும்.ஆகவே இரண்டிற்கும் பொதுவாக சிரித்து வைத்தான் கொஞ்சம்/

சிரிப்பதென்றால்நன்றாகவருகிறதுகொஞ்சம்காலமாக/ஆனால்ஒப்பனைக்குச் சிரிப்பதுதான்கொஞ்சம்சங்கடமாக இருக்கிறது.அந்த சங்கடத்தை உணர்ந்தான் இங்கு.

பச்சைக்கலர்,நீலக்கலர்,மஞ்சள்கலர்,,,,என்கிற அடர்த்தியான வண்ணங்கள் எப்போதுமே ஆகாது போலும் அவருக்கு./அல்லது அதற்குள்ளாக அடைபட மறுப்பவராக தெரிகிறார்,

வெளிர்நிறக்கலர்சட்டையும்,ஏதாவது அடர் நிறத்தில் பேண்ட்டும்தான் அவரது ட்ரெஸ் கோடாகஇருக்கிறது, (ஆடை நாகரீகமாக/) இவனுக்குத்தெரிந்து அவர் அப்படித்தான்பட்டுத்தெரிகிறார்.அதை அவரிடம் கேட்காமல் அவரை ஏறிட்டுப் பார்க்கிற பொழுது காதர் பாயின்ஞாபகம் வரும், மூட்டிக்கட்டப்பட்ட வெள்ளை வேஷ்டி,ஏதாவது ஒரு பூ டிசைன் போட்ட வெளிர் கலரில் சட்டை, இதுதான் அவரது ட்ரெஸ் கோட்,பெரும்பாலுமாக,,,, /

அதைஅவரிடம்கேட்டால்போதும் மாமா இது நமக்கு என்பார், இதைப் போடுற துக்கே நமக்கு கடைசிவரைவாய்க்கிறதேபெரிய விஷயம் மாமா என்பார், மேலும் சொல்வார், மாமா காலம் ஓடுற ஓட்டத்துல என்னவோ மாடல், என்னன்னவோ ரகம் என்னவோ டிசைன்னு நெறைய வந்துருச்சி மாமா, இருந்தாலும் நமக்கு இதுதான் புடிக்குதுமாமா என்பார்,

தூக்கிக்கட்டிய வேஷ்டியின் முழு உரு அவரது பருத்த வயிறு முட்டியும் கீழே கணுக்கால் வரை தூக்கிக்கொண்டும் நிற்கும்.அதற்கு மேலாய் அவர் போட்டிருக்கிற சட்டை கொஞ்சம் லேசாய் உடல் தெரியும் படியாயும் சட்டையில் பூத்திருக்கிற பூக்களின் வாசனையில் அவர் தன் வசமிழந்து திரிபவாராகவும் தெரிவார்.

கேட்டால்மாமாரெண்டு வருசத்துக்கு கொறையாம ஒழைக்குது மாமா,இந்த சட்டைத் துணி, வேஷ்டி ஆறு மாசத்துக்கு தான், ஏன்னா நம்ம ஒடம்பு சைஸ் அப்படி என்பார். எதுவுமே போதும் நெனைச்சா போதும் மாமா,போதான்னு நெனைச்சா போதாதுதான் மாமா என்பார் இது போலாய் பேசுகிற போதெல் லாம்,,,/

அதையேதான் இவரும் சொன்னது போல இருந்தது.அதெல்லாம் ஒரு காலம் சார்,உத்தியோகத்துலஇருக்குறபோதுபேண்ட்டுக்குமேட்சாசட்டை, சட்டைக்கு மேட்சாபேண்ட்டு,ரெடிமேட்,துணிஎடுத்துதைச்சது,குப்புக்கலருஸ்டைலு,கூலிங் கிளாஸீ,பவர் லெஸ் ஒயிட்கிளாஸ்ன்னு திரிஞ்சேன் சார்,

கேரளா கோயம்புத்தூர் சென்னையின்னு ட்ரான்ஸ்பர்போட்ட பக்கமெல்லாம் நெலையில்லாம சுத்துனேன் சார்.குடும்பத்த வுட்டு தனியா தங்குற சங்கடம் ஒருபக்கம் இருந்தாலும் கூட அதெல்லாம் ஒரு பாக்கியம்ன்னுதான் நெனைக் கணும்.ஏதோகவர்மெண்டுவேலையிலஇருக்கபோயி,,இல்லையின்னா நமக்கு எந்தக் காலத்துல அந்தப்பக்கமெல்லாம் போயி வர்ற பாக்கியம் கெடைக்க, சொல்லுங்க,என்பார்,

மேலும் நானும் ஒங்களமாதிரிதான் சார். கோயம்புத்தூர்ல வேலை பாக்குற போதுவாரம்ஊருக்குவர்றப்பஇந்தமாதிரிசாப்பாட்டுபையி ஒன்னு வச்சிருப் பேன்,அதுல அங்க கெடைக்கிறசாமான்கள்அள்ளித்திணிச்சிக்கிட்டு வருவேன். அதுல யும்காணாதப்பஏதாவது ஒருபைவாங்கிஅதுலயும்வாங்கீட்டு வருவேன் என்பார்.

இவனுக்கானால்அவரதுகடையில் போய் போகிற வேலையை முடித்துக் கொண்டு வருகிற அளவு தான் நேரம் இருக்கும். அல்லதுஅதை கேட்டுவிட்டு கிளம்பிப்போனால்போதும்என்பதாகவேஇருக்கும். அதையும் மீறி அவர் பேசு கிற பேச்சின் ஆரம்பத்தை கேட்டு விட்டு பேச்சினூடாக அவர் விடும் இடை வெளியில் சரி வருகிறேன் என கிளம்பி வந்துவிடுகிறான்.

இவன்செல்கிறநேரங்கள் பெரும்பாலும் மாலை வேளையாகத்தான் இருக்கும். இவனைப் பார்த்ததும் கடைக்காரர் கேட்டு விடுவார்.என்ன சார் மணி ஆறுக்கு மேல ஆச்சா என,,,/

நாள் முழுவதுமாய்வேலைபார்த்து உடலில் அப்பியிருக்கிற அலுப்பு,உடல் சோர்வு, மற்றும் மனச்சோர்வு,,,,ஆகியவற்றுடன் பசியும் சேர்ந்து கொள்ளும். அது பசியா அல்லது அசிடிட்டியா,,,,,,என்பது பற்றிய குழப்பம் இவனில் எப்பொ ழுதும் உண்டு.

முன்பெல்லாம் அல்சரால் வயிறு வலி பசி ஏப்பம் மற்றும் மற்றுமான உபாதை தவிர்த்து பெரியதாக உடல் ஒன்றும் செய்யாது.இப்பொழுது அப்படி யாய் வருகிற சமயத்தில் கைகால் நடுக்க மெடுத்து விடுகிறது.லேசான தலை சுற்றல் வேறு,,,,,

இதுஎதற்குநல்லதற்காகெட்டதற்கா,,,என்கிறவிடைதெரியாமல் கேள்வியுடன் பலநாட்கள்வீட்டிற்குசென்றிருக்கிறான்.வீட்டில்என்னவிடையா காத்திருக்குற து. மனைவி மக்கள் காத்திருப்பார்கள்.

இதில் மனைவியை விட பிள்ளைகளை ஒரு படி மேலே சொல்லலாம். யப்பா இந்த வேதனைஅனுபவிக்கிறீங்க,அப்புறம்ஏன் டீ டீன்னு ஓயாம,,,,/

இந்தா காலையிலஇருந்து சாயங்காலம் வரைக்கும் ஆபீஸ் போய் திரும்புற சாயங்காலத்துக்குள்ளஎப்பிடியும்பத்து டீய எட்டுத்தொடுற அளவுக்கு டீக் குடிச்சிருப்பீங்க,இன்னும் வீட்ல டீப்போட்டு தருவாங்க அம்மா,அதுவும் வேற சேர்த்தி,லீவு நாள்ன்னா டீக்குன்னு ஒரு தனி அட்டெண்டென்ஸே போடணும் ஒங்களுக்கு. என்பார்கள் பிள்ளைகள்.இவனும் சிரித்துகொண்டே நகன்று விடு வான்.அந்தநிகழ்வு இவனை சற்றே சங்கடப்படுத்தி விடுகிறதுண்டு சமயத்தில்/ ஆனாலும்சிறிது நாட்களில்,,,,,,,அதே நிலைதான் அது போலவே ,பிள்ளைகள் சொல்லும் படி ஆகிப்போகும்,

அதனால் பெரும்பாலுமாக மாலை வேளைகளில் அதிக நேரம் எங்கும் நின்று எதையும் வாங்கி யாரோடும் பேசும் பழக்கத்தை தவிர்த்துக்கொள்வான்.இவன் போனஅன்றுமாலையும் அப்படித்தான் ஆகிப் போனது.மழை பெய்தது லேசாக, ஏதோ சொல்வார்களே,காக்காய்க்கும், நரிக்கும் கல்யாணமென்று. நடக்கிற கல்யாணத்தில் ஏதேனும் பிரச்சனையா,,,? என்ன பின் ஏன் மழை விட்டு விட்டுப் பெய்கிறது,,,,?

தூறலுடன் லேசான காற்றும் கைகோர்த்துக்கொண்டு அடிக்கிறது.கொஞ்ச நஞ்சமாய் பெய்கிற மழையை காற்று அடித்துக்கொண்டு போய் விடும் போலி ருக்கிறதே,,/முதலில் லேசாக கால்களை நனைத்த மழை பின் உடல் நனைத்து சில்லிட வைக்கிறது. அங்குமிங்குமாய் ஓடி பின் ஒதுங்கிய மனிதர்கள் கடைக்கு எதிர் புறமிருக்கிற தெப்பக்குளத்தின் தெற்கு ஓர கொட்ட கையில் ஒதுங்கி நின்றார்கள். மெதுவாகவும்,வேகமாகவும் ஓடிய மனிதர்கள்குடை பிடித்தும் அது இல்லாமலும் போனவர்கள் நடையில் வேகம் காட்டினார்கள் ,வேகம் எடுத்த இரு சக்கர வாகனங்கள் எங்காவது ஒதுங்க இடம் கிடைக்காதா என பார்வையுடனேயே விரைந்தன.

தெப்பக்குளத்தின் ஓரமாக நின்ற வேப்ப மரம் காற்றுக்கு சில்லிட்டு தலை யாட்டியது ஈரமாக/

மரத்தின்அடர்ந்தகிளைகளில்ஒன்றில்தன்னைஅடைகாத்துக்கொண்டு கிளைக் கொன்றாய் நின்ற காக்கைகள் இரண்டு உடலில் நீர் பட இறக்கை உதறி சில்லிக்கொண்டன.காற்றுடன்கலந்துதூசிபோலவிசிறியடித்தகாற்றில் சாலை யில் நீர்பட்டுப்பறந்தது.சாலையின் இருபுறமுமாய் இருக்கிற கடைக ளின் முன்னிருந்த தார்ப்பாயை இறக்கி விட்டுக் கொண்டிருந்தார்கள்.

சாலையில் ஓடிக்கொண்டிருந்த நாய் ஒன்று வாலை மடக்கி ஈரத்துடன் ஒதுங்க இடம் தேடிக்கொண்டிருந்தது.தெப்பக்குள வாசலின் அருகிலிருந்த குழாயடியில் போய் ஒதுங்கிக்கொண்டது.குழாயடியில் போடப்பட்டிருந்த செட் அதற்கு கொஞ்சம் இடமளித்து இதம் தந்தது.

கடைக்காரர் ஏன் சார் நனையுறீங்க,கடைக்குள்ள வாங்க என்றார்.காலில் போட்டிருந்த செருப்புடன் கடைக்குள் நுழைவது அவ்வளவு உசிதம் இல்லை.

செருப்பை கழட்டிவிட்டு கடைக்குள் நுழைகிறான்,கடையின் உள் ஓரம் போக தயக்கம் காட்டியவனாய் வாசலோரமாகவே நின்று கொள்கிறான்.கடைக்காரர் எவ்வளவு வற்புறுத்திக்கூப்பிட்டும் கடைக்குள் போக மறுக்கிறவனாய்,,/

கடையின் நடை, கடைக்குள் இருக்கிற வாழை இலைக்கட்டுகள்,தேங்காய்கள், வெங்காயக் கூடை எல்லாவற்றையும் தாண்டி கடையின் ஓரத்திலிருக்கிற மேல்ப் புற பரணில் தீபாவளிக்கு விற்றது போக மிச்சமிருக்கிற வெடிகள் ரகவாரியாக பிரித்து அடுக்கப்பட்டிருந்தன.அதில் ஒரு பக்கம் ராக்கெட்டுகளும் இன்னொரு பக்கம் வெடிகளும்,கிப்ட் பாக்ஸ்களுமாக இருந்தன,பெயரை கிப்ட் பாக்ஸ் என வைத்து விட்டு அதற்கு காசு வாங்குகிறார்கள் என மேலோங்கி நிற்கிற வருத்தம் தவிர்த்து வேறொன்றும் இருப்பதில்லை, வெடி வாங்குகிற சமயங்களில்/

இரண்டொரு தடவை இங்கு வெடி வாங்கியிருக்கிறான்,வீட்டில் பிள்ளைகள் கூட சலித்துக்கொள்வதுண்டு,ஏன் இதை வாங்குகிறீர்கள் என/

இதில் ஒன்றுகூட வெடிக்கிற ரகம் இல்லை,எல்லாம் மத்தாப்பு புஸ்வாணம் ரகமாய் இருக்கிறது.பொட்டு வெடி வெடிக்க நாங்கள் என்ன சின்னப் பிள்ளை களா என்ன என பொய்க்கோபம் காண்பித்து கேலி செய்வார்கள்.அவர்களுக்கு தேவையெல்லாம் சர வெடி சார்ந்த ரகங்கள் தௌஸன் வாலா, பைவ் தௌ ஸன் வாலா டென் தௌஸன் வாலா என நிற்கிறார்கள்.

அவர்களைப்பொறுத்த அளவில் டமார் டமார் என சப்தம் எழுப்புகிற ஒன்று தான் வெடி ரகங்களை சேர்ந்தது என நினைக்கிறார்கள்.அதனால்தான் இத்த னை படோடோபங்களும் இத்தனை செலவுகளுமாய் ஆகிப்போகிறது. ஏகத் துக்குவிரவிக்கிடக்கிறமனோ நிலையும்,எதிர்பார்ப்புகளும் சேர்ந்து இப்படியாய் ஆகிப்போகிறது.இவனுக்கும் அப்படியெல்லாம் வாங்கலாம் என ஆசைதான் .ஆனால் பட்ஜெட் அனுமதிப்பதில்லை. தவிர காசை கரியாக்குவது இவனைப் பொறுத்தஅளவில்பிடிக்காதவிஷயமாகஆகிப்போகிறதுதான்.ஆகவேகட்டாயம் உயர் ரக வெடிகள் என வாங்குவதை விட்டு விட்டு பாக்ஸ் வாங்கி வந்து விடுகிறான்.பிள்ளைகள் வைதாலும் பரவாயில்லை என்கிற நினைப்பில்/

பார்த்திருந்த பார்வையை வெடி பார்சல்கள் மீதிருந்து எடுத்து கடைக்குள்ளாய் பரவவிட்டபோதுதான் தெரிந்தது.அது வெங்காயம் மட்டும் விற்கிற கடையாய் இல்லை.வாழை இலைக்கட்டுகள், தேங்காய்கள்,நார்ப்பெட்டி, விளக்குமாறு,,,, என கலந்து கட்டி விற்கிற கடையாய் இருந்தது.

பெரும்பாலும்ஞாயிறுகளின்காலைஇந்தப்பக்கம் வந்தால் கண்டிப்பாக வாழை இலை வாங்கிக்கொள்வான்.இவன் போய் கேட்பதே நாலு பேர் சாப்பிட என்று தான் கேட்பான்.வீட்டில் வந்து பிரித்துப்பார்த்தால் இலைகள் கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும்.ஆனால் இவன் உரியதற்கு மட்டுமே காசு கொடு த்திருப்பான்.அந்தஉரியது உயர்ந்தது போல் ஆக்கப்பட்டு இவனுக்கு பெருமைப் பட்டுத்தெரியஅடுத்தடுத்தநாட்களிலும்அது போல்வாங்கப்பழகிக் கொண்டான். கடைக்காரரும் சிரித்துக்கொள்வார்.அந்த சிரிப்பும் பெருமிதமும் மிகுந்து தெரிந்த நாட்களில் பழகிய கடைக்கு இன்று மாலை போயிருந்த போதுதான் இன்னுமா இருக்கு என்கிற கேள்வியே அவரது பேச்சின் துவக்கப்புள்ளியாய் இருந்தது.

மழை ஓய்ந்திருந்தது.சிறு தூறலாய் ஆரம்பித்து பெரு மழையாய் நின்று பெய்து ஓய்ந்திருந்த மழை கால்களில் ஆரம்பித்து பேண்ட சட்டையை நனைத்திருந்ததாய்/

ஒட்டியிருந்த ஈரம் உடலை நடுக்கியது.ரோட்டின் ஓரங்களில் பள்ளமாய் பார்த்து ஓடிய நீர் கடைகளின் தாழ்வாரங்களிலிருந்து சொட்டிக்கொண்டிருந்த நீரை வா வா என்றது.குழாயடியில் ஓரமாக ஒதுங்கிய நாய் மழை நின்று போனதைஅறிந்து ஓடியது.பாத சாரிகளும் இருசக்கர வாகனர்களும் எவ்வளவு சீக்கிரமாய் அப்படி முளைத்திருந்தார்கள் எனத்தெரியவில்லை.

ரோட்டை அடைத்த கூட்டமாய் நக்க ஆரம்பித்து விட்டார்கள்.இதைப் பார்த்த வாறே கடைக்காரரிடம் நன்றி சொல்லிவிட்டு நகர முற்படும் போதுதான் இவனுக்கு எதிர்தாற் போல் கடை வாசலில் நின்ற வயதான பாட்டி ஐயா ஒரு கிலோ சின்ன வெங்காயம் வேணும்யா,,,பேத்தி ஊர்லயிருந்து வந்திருக்கா,,, நாளைக்கு ஞாயித்துக்கெழம இல்லையா,,,,தாயில்லா புள்ள அதுக்கு நாக்குக்கு ருசியா ஏதாவது செஞ்சி குடுப்போம்ன்னுதான் வந்தேன். வந்த யெடத்துல மழை பேஞ்சிருச்சி.பெய்ஞ்ச மழைக்கு ஒரு கடையில ஒதுங்கி நின்னுட்டு மழை நின்னதும் வெளியே வந்தேன்,நான் ஒதுங்கி நின்ன கடை முன்னாடி ஒரே சகதி.கடைய விட்டு வெளியே வந்து சகதியில படாம கால் வச்சவ அப்பிடியே வழுக்கி விழுந்துட்டேன் மட்ட மல்லாக்க,,,/

சேலையெல்லாம்ஒரேசகதியாப்போச்சி/நல்லவேளையாஇங்க தண்ணிக் கொ ழாய் இருந்துச்சி.அதுல கொஞ்சம் ஒடம்பையும் சேலையையும் கழுவீட்டு வந்தேன்.விழுந்தெந்திச்சதுலயும் ,சகதியக்கழுவுனதுலயும் கையில வச்சிரு ந்த காச எங்கிட்டோ விட்டுட்டேன்.

கடை தெரிஞ்ச கடைதான்னாலும் கடன் சொல்லி வாங்க மனசில்லாம மருகி மருகி வாரேன் எனச்சொன்னவளை ஏறிட்டவனாய் வெங்காயம் வாங்கி அவளது கையில் கொடுத்தனுப்புகிறான்.

அவள்போகும்போதுமறக்காமல்சொல்லிவிட்டுச்சொல்லிவிட்டுச்செல்கிறாள்.  தம்பி அடுத்து ஒங்களப்பாக்கும் போது காசக்குத்துர்றேன் என,,,,,/

மழை ஓய்ந்து வானம் வெறித்திருந்தது.

8 comments:

 1. Replies
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. Replies
  1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 3. முடித்த விதம் நன்றாக இருந்தது

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அபயா அருணா அவர்களே,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 4. மிக அழகாக நகர்த்திக் கொண்டு சென்றிருக்கிறீர்கள். முடிவும் சிறப்பு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் துளசிதரன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete