17 Feb 2017

சிதறல்களாய்,,,,,,





தெருவிற்குள் செல்லும் போது மழை/
கட்டிடத்திற்கு நீர் ஊற்றிக்கொண்டிருக்கும்
பணியாள்/
          ##############
கால் முளைத்த பூக்கள் இரண்டு
நடை பயின்று செல்கின்றன,
அட தெருவோரம் சென்ற  நாய்க்குட்டிகள்
இரண்டு கருப்பொன்றும் வெள்ளையொன்றுமாய்,,,/
          ###############
தெருமுனையில் வாய் திறந்து கிடக்கிறது பள்ளம்.
வீடு ஊன்ற தோண்டப்பட்ட அஸ்திவாரக்குழி/
          ###############
வழியெங்கிலும் கைபற்றி வந்த நாணம்,
படர்ந்து பரந்திருந்த மேகக்கூட்டம் பின் தொடர்வதாய்,,,,/
          ################
உடற்பயிற்சி ஆரம்பமாகிவிட்டது
தெருவில் இருக்கும் வேகத்தடையில் ஏறி இறக்குறது
இரு சக்கரவாகனம்/
          #################
பூவுக்குள் பூகம்பம்,
கீரைக்காரப்பாட்டி சண்டையிலிறங்கி விட்டாள் 
குடித்துவிட்டு வந்து தெருவில் சப்தமிடுபவனுடன்/
              ###############
பச்சாதாபப்பார்வையுடன்  அவர்/
விற்காமல் தேங்கிக்கிடக்கிற காய்கறிகள் கடையினுள்ளே,,,,/
              #################
முடங்கிப்போனது பிழைப்பு
விற்காத வியாபாரம்/
               ##############
   
  
         

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமாய்...

அருமை...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கராந்தை ஜெயக்குமார் அவர்களே,
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/

Yarlpavanan said...

சிதறல்களாய்
சிந்திய வரிகள்
அருமை ஐயா!

Thulasidharan V Thillaiakathu said...

அனைத்துச் சிதறல்களும் அருமை ஆனால் சிதறவில்லை!!

vimalanperali said...

வணக்கம் காசி ராஜலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் துளசிதரன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/