22 Mar 2017

நன்றி வணக்கம் ,,,,,,,

வேலையின் மேல் கொண்ட காதலால்தான் வந்தேனேயன்றி வேறெதுவுமாய் இல்லை உள்நோக்கம் கொண்டு எனச்சொன்ன சொல்லின் கனம் தாக்கியவர் கள் அனைவரும் சிரித்தே விட்டார்கள்,ஆச்சரியம் சுமந்த விழிப்பார்வை தேக்கியும் காதல்ன்னா எப்பிடி சார்,நல்ல காதலா,கெட்ட கள்ளக்காதலா என்கிற கேள்வியை கொக்கியிட்டுமாய்,,,/

அட போங்க சார் இந்த ஐம்பது சொச்சத்துல காதல தேக்கி வச்சிருக்கருறதே பெரிய விஷயம்/இதுல நல்லதா கள்ளமானதான்னு கேட்டா எப்பிடி சார்,

ஆசைய அறுபது நாளைக்கும்,மோகத்த முப்பது நாளைக்குமா தத்துக் குடுத் துட்ட இந்தியக்குடும்பங்களோட பிரதி நிதியான ஏங்கிட்டப்போயி இப்பிடி ஒரு கேள்விகேட்டீங்கன்னா எப்பிடி சார்,,,?என்று கேட்டவன் இன்று அலுவலகத் திற்கு ஒன்பது மணிக்கு செல்வதற்கு பதிலாக ஒன்பது பத்திற்கு சென்றிருந் தான்.

அப்படிச்செல்வதற்கு அவன் பணி புரிகிற தனியார் அலுவலக மேலாளரிடம் முன்அனுமதிபெற்றிருந்தான்,நினைப்பதுதான்தினசரியின்நகர்வுகளில். 
 
ஆனால் நடக்கத்தான் மாட்டேன்கிறது.என்னதான் செய்யலாம் தெரியவில் லை.

காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும்,வாக்கிங்க் போக வேண்டும். வாக்கிங்க் முடித்து விட்டு சைக்கிளிங்க் அது முடிந்ததும் அப்படியே குளித்து முடித்து விட்டு சாப்பிட்டுக் கிளம்ப வேண்டும் அலுவலகத்திற்கு.என பூத்து கிளைவிடுகிற எண்ணத்தில் மறு நாளின் மறு நாட்களில் மாறுதல் வந்து போகிறதுதான்.

கை கால்கள் சூம்பி வயிறு உப்பி தலை கனத்துப்போன ஈனஸ்வரக் குழந் தையாக தோற்றம் கொண்டு விடுகிறதுதான் அப்படியே/

“நீங்கதான் காலையில சீக்கிரம் எந்திருச்சி ஏங்கூட வாக்கிங்க்வர்ற ஆளா என தினசரியாய் வசவு பாடி தண்ணீர் குடிக்கிற மனைவியிடம் இவனும் சொல் வதுண்டுதான்.என்ன செய்ய தூஙக் நேரமாகிப்போகிற ராத்திரி வேளைகளில் குடிகொண்ட தூக்கம் காலையில லேட்டா எந்திரிக்க வச்சிருது,இதுல எங்கி ட்டுப்போயி வாக்கிங்,சைக்கிளிங்,,,, அப்புறம் அப்புறமுன்னு இருக்க,,,,,,?”

”என்னவோ போ ஒருகாலத்துல யோகாவே கதின்னு கெடந்த ஆளுக்கு இப்ப எதுவுமே செய்யிறதுக்கு யோசனையா இருக்குறது ஆச்சரியமா இருக்கு, என் பான் இவன்,.அது போலான நாட்களிலும் அது அல்லாத தினங்களிலும் அலுவ லகத்திற்கு இவன் கிளம்ப அந்நேர மாகிப்போவதும்,அல்லது சிறிது தாமதப் பட்டுப் போவதும் இயற்கைதான்.

எப்படியாயினும்அந்த தாமதப்படுதல் ஒன்பது மணியைதாண்டாது. இவனைப் பொறுத்த வரையில் தாமதம் என்றால் ஒன்பது மணிக்குள்ளாய்/சீக்கிரம் என்றால் எட்டு முப்பதுக்குள்ளாய்/இதுதான் இவனது அன்றாட அலுவலக டைடேபிள்/

அந்த டைம்டேபிளில் எப்பொழுதாவதுஎழுந்து விடுகிற எழுத்துப் பிழைகள் இவனை வெகுவாய் சங்கடத்திற்குள்ளாக்கி விடுகிறதுதான் /

ஏனெனில்இவனைப்பொறுத்தஅளவில்வேலைஎன்பதுஆத்மார்த்தம், வேலை என்பது உள்ளகிடக்கை,வேலை என்பது அத்துவான வெளியில் பூத்துக் கிடக் கிற மலர் நிறைந்த வெளியின் சுவாசம், வேலை என்பது வேட்கை,வேலை என்பதுகாதல்,வேலை என்பது கடமையல்ல,இதோ செய்து முடித்து விட்டேன் பிடி,கொடு சம்பளத்தை என வாங்குவதற்கு/. என்கிற மனோ நிலை தாங்கி யவனாய்வருகிறேனேயன்றிவேறில்லைஎனச்சொல்லிவிட்டுவேலைபார்க்கிறான்,

நன்றி வணக்கம்.

4 comments:

 1. யதார்த்த நிகழ்வு வாழ்க்கை.

  ReplyDelete
  Replies
  1. மிகுந்த அன்பும் நன்றியும்!

   Delete
 2. சிறப்பான பதிவு
  பயனுள்ள ஆக்கம்

  மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
  https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

  ReplyDelete
  Replies
  1. அன்பின் மனதிற்கு நன்றி

   Delete