29 Mar 2017

சும்மாக்கிடந்த,,,,,,,,


சுப்பாராஜ் அண்ணன் ஹோட்டலிலிருந்து விடிகாலை வருகிற சுப்ரபாதம்தான் இவனைபெரும்பாலான நாட்களில் எழுப்பியிருக்கிறது,

எழுந்திருப்பது என்றால் சாமான்யமாக எழுந்திருக்கிற மனது வாய்க்கப் பெற் றதில்லை இவனுக்கு எப்பொழுதுமே/

எப்பொழுதாவதுஅதிசயம்தாங்கிய கனம் போல் நடக்கிற நிகழ்வாய் நிகழும்/ இதுநாள்வரை குளிர்காலம் கடந்து போய் விட்டது, ஐப்பசி கார்த்திகை தவிர் த்து,,,,,,,,,மார்கழி தை மாசி,,,,இந்தத்தடவை மாசியில் மச்சி வீடுகுளிர்ந்தது.

சின்னவளெல்லாம் தூக்கத்தில் நடுங்கிப்போய்விட்டாள் நடுங்கி பீரோவிற்குள் ளாய்மடக்கி வைக்கப்பட்டிருந்தக்கம்பளிப் போர்வையை எடுத்துப் போர்த்திப் பார்த்தான்.நடுக்கம்நிற்கவில்லை.நல்லஅழுத்தமானகம்பளி,வாங்கிஎப்படியும் ஒரு பத்து வருடங்கள் இருக்கும்,இன்னும் சாயம் கூட வெளுக் காமல் அப்படி யே இருக்கிறது,சாம்பல்க்கலரில் முழுக்க பரவியிரு க்கும் போர்வையில் நீள மாக ஓடிய இரண்டு தடித்த கோடுகள் அதன் கலரை ஒட்டியே பார்க்க இன்னும் அழகூட்டியதாய் இருந்தது போர்வைக்கு/

கடைக்காரரிடமிருந்து போரவையை கையில் வாங்கி தடவி முகர்ந்து பார்த்த தும் கடைகாரர் கேட்கிறார்,அதென்ன சார்,புதுசா எந்தத்துணி வாங்குனாலும் அதைகையிலிடுத்துமென்மையாதொட்டுத்தடவிமோந்து பாத்துதான் அப்புறம் பிரிச்சிக் குடுக்கச் சொல்லுறீங்க,நீங்க நம்ம கடைக்கி வழக்கமா வர்ற ஆளு, கிட்டத்தட்ட ஏங்கிட்ட பத்து வருசத்துக்கும் மேலா ஜவுளி வாங்குறீங்க, பணம்ன்னு கணக்கு வச்சி பாத்தம்ன்னாக்கா லட்சத்துக்கும் கொறவில்லாமா வாங்கியிப்பீங்க,,,,,என்னதான் தவணைக்கு வாங்குனாலும் அதுவும் கடந்தான சார் எனச்சிரிப்பார்,அது போலான தருணங்களிலும் இன்னும் பிற நேரங்களு லுமாக,/

இதுல ஆச்சரியப்படுறதுக்கு பெரிசா ஒண்ணும் இல்ல சார்,ஆனா லட்ச ரூபா ய்க்கு யேவாரம் வாங்குன என்னோட மனச விட இதுல அவ்வ ளவு ரூபா ய்க்கு என்ன நம்பி ஜவுளி குடுத்த ஒங்க மனசு இன்னும் ரொம்ப பெரிசு சார் என்பான் இவன் பதிலுக்கு,அட விடுங்க சார்,பெருசோ,சிருசோ,,,,,,,,,,,,, யேவாரம் நம்பிக்கை,,,,ஒங்கவச்சி நானு என்னைய வச்சி நீங்கன்னு ஓடிக்கிட்டு இருக்கு, ஓடட்டும் முடிஞ்சவரைக்கும் எதுவரைக்கும் ஓடணுமோ அது வரைக்கும், என்பார் கடைக்கார்,ஆமாமாம் அதுவும் சரிதான் ஓட்டத்துல தடங்கல் வராதா வரைக்கும் விரிசல் வுழுகாம இருக்குற வரைக்கும் நல்லது.எந்த நிமிஷம் விரிசல் வரும்ண்ணு நெனைக்கிறோமோ அந்த நிமிசம் நிறுத்தீறவேண்டிய துதான் என்பார்,கடைக்காரர்,

அவரது பேச்சு யாதர்த்தம் உணர்ந்தவர்களுக்கு சரி எனப்படும்,அது அல்லாமல் மொட்டையாய் அவரது பேச்சை கேட்கையில் ஒரு மாதிரி மூஞ்சில் அடித்தது போலத்தான் இருக்கும்.

என்னடா இது இவரது கடையில் கடன் வைத்து துணி எடுக்கிறோம் என்கிற இருமாப்பில் பேசுகிறாரோ என்கிற நினைப்பை தூண்டுகிறது போல, ஜவுளி எடுத்துத்திரும்புகிறஒருநாளில்அந்தக்கடையில்இவனைப்போலவே தவணை க்கு ஜவுளி எடுக்கிற ஒருவர் கடையை விட்டு வெளியே வருகையில் என்ன சார் கடைக்காரர் இப்படிப்பேசுகிறார்,நம்பிக்கையாக ஐந்து வருடத்திற்கும் மேலாக அவரிடம் வியாபாரம் செய்து வருகிறேன்,திடீரென இப்படிச் சொன் னால் எப்படிச் சொல்லுங்கள் என்ற அவரிடம் இவன் சிறிது பேச வேண்டிய திருந்தது,பின்அவரை அனுப்பி விட்ட பின் என்ன சார்,,,, என்ன சொல்றாரு அவரு,அவருக்குகொஞ்சம் சுண்டி பேச்சிட்டா போதும்,மொகம் வாடிப் போகும் அவருக்கு ஆமா என கடைக்காரர் சொன்னதும் அப்பிடியில்ல சார் யேவார ரத்துல இருந்துகிட்டு எதுக்கு சுண்டிப் பேசணும் சொல்லுங்க, ஒங்களுக்கு தோதுப்பட்டா அவரு கூட வரவு செலவு வச்சுக்கங்க,இல்லைன்னா விட்டுரு ங்க பாவம்,எதுக்குப்போட்டுட்டு பேச்சு, மனக்கசப்புன்னு போயிக்கிட்டு,,,,என் கிற இவனது பேச்சை ஆமோதித்த அவர் அன்றிலிருந்து இன்றுவரை அவர் யாரிடமும் அப்படியாய் பேசுவதில்லை, அப்படியாய் பேசினால் இவனிடம் மட்டும்தான் பேசுவார்.இவனுக்கும் கடைக்காரருக்கும்அப்படி ஒரு பொருத்தம், போர்வை வாங்கப்போன அன்றும் அப்படித் தான் கடைக்காரர் எடுத்துக் கொ டுத்த போர்வையை நீண்ட நேரமாக கையில் தாங்கி பார்த்துக் கொண்டிரு ந்தவனை என்ன சார் இது இப்பிடி அதைப்போயி கையிலவச்சிக்கிட்டு ரொம்ப நேரமா பாத்துகிட்டே இருக்கீங்களே,அப்பிடி அதுல என்னதான் இருக்கு என் றார்.

ஒண்ணும் இல்ல சார் எனச்சொன்னவன் ஒரு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி எங்கசொந்தக்காரரு ஒருத்தருசெத்துப் போனாரு. எங்க ஊருல ரெண்டு ஏக்கரு நெலம் வச்சி வெவசாயம் பண்ணுணவரு.

இந்தப்போர்வையப்பாத்த ஒடனே அவரோட நெனைப்பு வந்துருச்சி,இதுபோல இந்த போர்வை உருவாகுறதுக்கு பருத்தி வெளைவிச்ச வெவசாயி, நெசவாளி, அதை வியாபாரத்துக்கு கொண்டுவந்தவுங்க ,ஒங்களப் போல வாங்கி விக்கிற வுங்கன்னு எல்லாரோட நெனப்பும் வந்து போச்சு,,,கொஞ்சமா அதான்,,,,என இவன் சொன்ன போது,,,இப்பத்தான் தெரியுது சார்,நீங்க வாங்குற ஒவ்வொரு ஜவுளியையும்ஏன்இவ்வளவுதூரம்கையிலவச்சிபாக்குறீங்க ஆத்மார்த்தமான்னு என்றார் கடைக்காரர்.

அந்தக்கம்பளியை எடுத்து மகளுக்கு போர்த்துகையில் கடைகாரரின் ஞாபக மும் வாங்கிய நாளின் ஞாபகமும் வராமல் இல்லை. போர்த்திய கம்பளியும் போட்டு விட்ட சொட்டரும் நிறுத்த முடியாநடுக்கத்தை அடுப்பிலிருந்து இறக் கிய கடுண்டீயின்சூடு நிறுத்தியது,

இப்பொழுதும்அதை கேலி செய்து பேசுவான் பெரியவன், அவளுக்கு அன்னை க்கி குளுரும் அடிக்கல,ஒண்ணும் இல்ல.அந்நேரத்துல கடுண்டீ குடிக்கணுன் னு ஆசை அதுக்கு நீங்க எல்லாரும் பலியாயிட்டீங்க,நான் நல்லா கொரட்ட வுட்டு தூங்கீட்டேன் எனச் சிரித்தான்.

கள்ளமில்லா வெள்ளைச்சிரிப்பு என்பார்கள் அவனது சிரிப்பை நண்பர்கள் சிலர்.

இன்று காலையில் எழுந்திருக்கையில் சீக்கிரம் எழுந்து விட் டான். இப்போ தெல்லாம் காலையில் சீக்கிரமே விழிப்பு வந்து விடுகிறது, இன்றைக்கெல் லாம்காலை ஐந்து மணிக்கே விழிப்பு வந்து விட்டது. மணிக்கே விழிப்பு வந்து விடுகிறது.

இரவு எந்நேரம் படுத்தாலும் காலையில் சீக்கிரம் விழிப்பு வந்து விடுவது வழக்கமாகிப்போய் விடுகிறது,சீக்கிரம் விழிப்பு வந்து விடுகிற நாட்களில் ஒன்று வாக்கிங் போவான் அல்லது உட்கார்ந்து ஏதாவது படித்துக் கொண்டி ருப்பான்,இந்த நேரத்துல வீட்டுவேலையிலஏதாவதுஉதவியா இருக்கலாம்ல என கேட்கும் மனைவியிடம் ஒரு மாதிரியாய் சொல்லி சமாளிக்கிறான்,

இவன்இருக்கும் வீட்டிற்கு பக்கம்தான் சுப்புராஜ் அண்ணன் ஹோட்டல், தெருவிலிருந்து விரைந்து போய் திரும்பினால் நீளம் காட்டி ஓடித் தெரிகிற ரோட்டின் வலது புறமாய் அடுக்கியிருக்கிற காம்ப்ளக்ஸ் கடையின் வரிசை யின் மூன்றாவதாய் இருக்கிற கடைதான் சுப்புராஜ் அண்ணது கடை.

காலையில்எழுந்ததுமாய்அவரதுகடையில் போய் குடிக்கிற டீக்கு அவ்வளவு சக்தி உண்டு என இவன் எப்பொழுதுமே நினைத்ததில்லை.பொதுவாகவே அவரது கடையில்தான் டீக்குடிக்கும் முன்பாக ஒரு டீ,டீக்குடிக்கும் போது ஒரு டீ,டீ குடித்த பின்பாக ஒரு டீ என குடிக்கப்பழகியிருந்தான்,

அவன் அப்படி யான டீக்குடிக்கு அடிமையாகிப்போனது அவரது கடை டீயின் ருசியிலா அல்லது அவர் பேசும் பேச்சிலா என்பது இன்றுவரை புரியாத புதிராகவே,,,,/

வீட்டில் என்னதான் மனைவி டீப்போட்டுத்தருகிறேன் என்று சொன்ன போதும் கூட சரி போட்டு வை எனச்சொல்லி விட்டு மறு நிமிசம் போய் சுப்புராஜ் அண்ணன் கடையில் போய் நிற்பான். கடையில் பாடுகிற சுப்ரபாதத்திற்கும் அவரது செயல்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் சிறிதும் சம்பந்தமிருக்காது. மென்மை சுமந்த பாடல்களாக வருகிற சுப்ரபாத பாடல்கள் மனதை வருடி விடுகிற தருணங்களில் இவர் கடையில் அங்குமிங்குமாய் ஓடித்திரிபராய் காணப்படுவார்,சிறிது எசக்கேடாக பேசிக்கொண்டு /

ஏன்இப்பிடிஎனகேட்டேவிட்டான்ஒருநாளில்காலைவேளையாக,,,இப்படி முழு நீள நாத்திகர் போலவும் கடவுள் நிந்தனையாளர் போலவுமாய் காட்சி யளிக்கிற நீங்கள் அன்றாடம் பக்திப்பாடல்களை ஒலிபரப்பியே கடையின் நடை திறக்கிற ரகசியம் என்ன,, எனக் கேட்ட போது சொல்கிறார்,

இல்லை சார் அப்படியெல்லாம்,,,,,நான் நாத்திகவாதியோ இல்லை கடவுள் நிந்தனையாளனோ இல்லை.எல்லா எண்ணங் களும் முளைத்துக் கிளைத்துக் கிடக்கிற சாதாரணமனிதன் நான், மனதை இதப்படுத்துகிற பாடல்கள் எனக்குப் பிடிக்கிறது.போட்டுக் கேட்கிறேன், இது மனதைஇதுமனதை இதப்படுத்தும் என நம்புகிறேன். அவ்வளவே,மற்றபடி வேலைநேரங்களில் நான் நடந்து கொள்கிற முறையையும் இதையும் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம்.

6 comments:

 1. வித்தியாசமான மனிதர்தான்
  நன்றி நண்பரே

  ReplyDelete
  Replies
  1. நன்றியும் அன்பும்!

   Delete
 2. Replies
  1. பிரியங்களின் ஏற்புக்கு நன்றி!

   Delete
 3. குணாதிசயங்களில் இவ்வாறான தன்மையுள்ளோரும் உண்டு.

  ReplyDelete
  Replies
  1. நன்றியும் அன்பும்/

   Delete