16 Apr 2017

எல்லையின் விளிம்பு தொட்டு,,,,/

தொடர்பறுந்து போகிறது பேச்சு,தானாய் நடக்கவில்லை நடக்கவைத்து விட்டு வந்துவிடுகிறேன் தான் வேறு வழியற்று/

நானும் தோழர் மோகனும் பாண்டியனுமாய்த்தான் நின்றிருந்தோம்.அவரவது இரு சக்கர வானத்தை ஓரம் கட்டி நிறுத்திவிட்டு/

சிவப்புக்கலர் பார்டர் கட்டி சிமிண்ட கலர் ஹாலோ பிளாக்கற்கள் பதிக்கப் பட்டிருந்த சாலை பார்க்க அழகாக இருந்தது,

ஆச்சரியம் சாலையின் இடது ஓரமாய் புங்க மரங்கள் இரண்டும் வேப்பமரம் ஒன்றுமாய் சரியாக வளர்ச்சியற்று நின்று காணப்பட்டதாய்,பழுப்பும் வெளிப்பு மானஇளம்பச்சை தாங்கியதுமானஅதன் இலைகள் பார்க்கஅழகாக இருந்தன.

இரண்டாகநின்ற புங்க மரம் ஒன்றின் நுனியில் தெரிந்த இலை இளம்பட்டை பாரித்து பார்க்க கண்ணுக்கு அழகான இருந்தது.அதன் அருகிலேயே தெரிந்த முதிர்ந்த இலைஒன்று முரட்டுப்பச்சை காட்டி புழுவைத்தும் சூத்தைவிழுந்து போயுமாய்/

கம்ப்யூட்டர் ஜெராக்ஸ் ஆபீஸின் முன்பாகத்தான் இருந்த புங்க மரங்களைப் போல் சற்றுத்தள்ளி இருந்த டீக்கடை முன்பாகவும் சின்னச்சின்ன கன்றுக ளாய் இரண்டு மூன்று புங்கச்செடிகள் வரிசை கட்டி நட்டிருந்தார்கள்.

தண்ணீர் ஊற்றுவதற்கு தோதாக மரக்கன்றை பறிக்கப்பட்டிருந்த குழியுடன்/

இப்பொழுது நிறைய இடங்களில் டீக்கடை முன்பாக இப்படிசின்னத்தாய் புங்க மரங்கள் முளைத்திருப்பதையும் சின்னச்சின்னதாய் மரக்கன்றுகள் நடப்பட் டிருப்பதையும் பார்க்க முடிகிறது,

நீண்டுவிரிந்திருந்த சாலையின் ஓரமாக டீக்கடை முன்பாக நின்றிருந்த வேப்ப மரத்தின் அடியில் வண்டியை நிறுத்தி விட்டு போகும்போது டீக்கடைக் கடைக் காரர் பார்த்து விட்டு ஒரு வணக்கம் சொன்னார்.

அவர் இது போலான தருணங்களில் ஒன்றும் சொல்லிக்கொள்ளவோ பெரி தாக அலட்டிக்கொள்ளவோ மாட்டார்,எப்பொழுதாவது அவரது கடைக்கு டீக் குடிக்கப்போகிற சமயங்களில் கேட்பார், சார் ஏங் கடைக்கு முன்னாடியே வண்டிய நிறுத்தீட்டு இப்பிடி அடுத்தகடைக்குப்போயி டீசாப்புடப்போறீங்களே என்பார்,சிரித்துக்கொண்டே,அவர் சொல்கிற சமயங்களில் அவரிடம் நிரந்தர மாய் இன்னும் ஒட்டிக்கொண்டிருப்பது அந்த சிரிப்பு ஒன்றுதான் என எண்ணி விடத் தோணுகிறது போலவாய் இருக்கும்/

மேலும் அவர் சொல்கிறார்.சார் நீங்க ஒருஆளுதான் சார் இப்பிடி ஏங் கடை முன்னாடி வண்டிய நிறுத்தீட்டு போயி அடுத்த கடையில டீக்குடிச்சிட்டு வர்றீங்க என்பார்.

அதற்கு சங்கடமாய் சிரிக்கிற என்னிடம் ஒங்க பிரண்ட்செல்லாம் அங்க இருக் காங்க அதுனாலத்தான் போறீங்க ,தவுர அங்கயின்னா ஏதாவது டிபன் சாப்புட் டுக்கலாம்/இங்கயின்னா வெறும் வடையும் டீயும்தான,,,,,,,என்பார்,

இல்லை அதுக்காக மட்டும் இல்லை எனச்சொல்லும் இவனிடம் சொல்லுவார் டீக்கடைக்காரர்.சார்நீங்கடீடிபனுக்காக போற ஆளு கெடையாதுன்னு தெரியும், வேற எதுக்காக போறிங்கன்னு பாக்கும் போது பிரண்ட்ஸீகளுக்காக போறிங்கன்னுதெரிஞ்சிச்சி,கேள்வியும் பட்டேன்,பாக்கவும் செஞ்சேன், அதான் சார்அப்பிடித்தான்சார் நானும் சமயத்துல கடையப்பூட்டிப்போட்டுட்டு போயிரு வேன் வாங்கிவச்ச பாலு மிச்சம் இருந்தாக்கூட அப்பிடியே தூக்கி யாருக்கா வது தெரிஞ்ச கடைக்கி குடுத்துட்டு, நான்போன ஒடனே பால்குடுக்கப்போன கடைக்காரர்சிரிச்சுக்கிருவாரு.குடுத்து வச்சஆளப்பா நீயி/நெனைச்சா இப்பிடி பரதேசம் போற மாதிரி கெளம்பீர்றயே, நமக்கெல்லாம் இப்பிடி ஒரு குடுப்பின கெடைக்க மாட்டேங்குதேப்பா என்பார். மேலும் அவரே சொல்வார்,நீயி ஊரு சுத்துற சொகத்துக்காக போற ஆளு இல்லைன்னு தெரியும்.ஓன் நண்பர்களுக் காகப் போற,,,,அப்பிடி ஒரு ஒலகமும் வேணுப்பா சும்மா இப்பிடியே பல்லக் கடிச்சிக்கிட்டே குடும்பம் குட்டின்னு மட்டும் இருந்தா எப்பிடி,,,,நாலுதுக்கும் போகணும் வரணும் என்பார்,

அப்பிடியில்லண்ணேகும்பங்குறதுநான்பொண்டாட்டிபுள்ளகுட்டிகள சார்ந்தும், அவுங்க என்னச்சார்ந்துமா இருக்குற ஒரு ஒறவு,ஆனா நானே ஏங் நண்பர்க ளோ அப்பிடியில்ல,அவங்க ஏங்கிட்டயும்,நான் அவுங்ககிட்டயுமா என்னைய பகிர்ந் துக்கிர்ற உறவு, என்பான்,பொண்டாட்டி புள்ளைகள்கிட்டயும் அதுதான எனக் கேட்ட போது அப்பிடியில்ல அது ,பொண்டாட்டி புள்ளககிட்ட பகிர்ந்து க்கிற பகிர்வுவேற,நண்பர்கள்கிட்ட பகிர்ந்துக்கிர்ற பகிர்வு வேற.எனச்சொல்லி விட்டு பாலைஅந்த டீக்கடைக்காரரிடம் கொடுத்து விட்டு வந்து விடுவார் இந்த டீக் கடைக்காரர்.

அது போன்ற புரிதலே அவரிடம் எப்பொழுதுமாய் உறை கொண்டிருக்க என்னிடமுமாய் அந்த டீக்கடைக்காரர் அர்த்தம் மிகுந்த சொல்லாய் சொல்லிச் சிரிப்பார்.

அவரது கடை முன்வாகனங்களை ஓரம் கட்டி நிறுத்திவிட்டு வருகிறோம்.

வித் கியர் வண்டிகள் இரண்டு,மோகனதும் பாண்டியனதும்/வித் அவுட் கியர் வண்டிகள் வண்டி என்னது.வித் அவுட் கியராகி உருமாறியிருந்த வண்டியை வாங்கிய நாளில் கையிலிருந்தஎழுபது சி சி வண்டியை விற்று விட்டுத்தான் வாங்க வேண்டியிருந்தது,பழைய வாகனத்தை எடுத்த விலை போக புது வாக னத்திற்கான மிச்ச விலையை தவணை முறையாககட்டுவதென தீர்மானித்து ஐந்தாறு பேப்பர்களில் கையெழுத்துப்போட்டு விட்டு வாங்கி வந்த வண்டி/

ஆ ர் சி புத்தகம் ,ரிஜிஸ்ட்ரேஷன்,லைசென்ஸ்,இன்சூரன்ஸ் வண்டிக்குக்கட்ட வேண்டிய மாதாந்திரத்தவணை எல்லாம் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது இந்த நிமி டம் வரை/

வண்டியின் தவணை இன்னும் இருபதாயிரம் ரூபாய் வரைக்குமாய் இருக்கி றது.அதைக்கொடுத்தால் முடித்து விடலாம் ,பெரிதாக வேறொன்றுமில்லை.

ஆனால் கொடுக்க பணம் வேண்டுமே கையில்/அது இல்லாமல்தான் தள்ள மாடுகிறது வண்டி இப்பொழுது/

ஆனால் தவணைமுறையில் வாங்கிய இரு சக்கர வாகனத்தை தள்ளமாடா மல் வாங்கி வந்து ஓரம் கட்டி நிறுத்தி விட்டு நண்பர்களுடன் பேசிக் கொண் டிருந்தான்,

தோழர் மோகன் தான் போன் பண்ணியிருந்தார்.அவர் போன் பண்ணுகையில் மாலை ஐந்து மணியை நெருக்கி இருக்கலாம்.செல்போனை தலை மாட்டில் தான் வைத்திருந்தான். மதியம் சாப்பிடதுமாய் கண் அயர்ச்சி வந்து விட்டது. தூங்கி விட்டான்.சிறிது நேரம்தான்.நன்றாக தூங்கினால் அரைமணிநேரம்கூட தூங்கியிருக்க மாட்டான்.விழிப்பு வந்து விட்டது.ஆழமான நித்திரையில் பத்து நிமிடம் இருந்தால் கூட ஏதாவது ஒரு கனவு வந்து விடுகிறது,

படுத்தவுடன் தூங்கியும் விட்டான்.தூங்கியதுமா இல்லை சிறிது நேரம் கழித் தாவெனத்தெரியவில்லை. வந்து விட்டது கனவு.கனவில் இவன் ஏதோ பஸ் ஸில் பயணித்துக் கொண்டிருப்பது போலவும் பயணித்துக்கொண்டிருந்த பஸ் திடீரென ஒரு கூட்ட அறையாய் மாறி அவரவர் உட்கார்ந்திருந்த இருக்கை யை கையில் எடுத்துக்கொண்டு வந்து அவரவர்கள் எதை வரிசை என நினைக்கிறார்களோ அதன் படி போட்டமர்ந்து கொண்டு இருக்கிறார்கள்,

அந்த வரிசையில் நான் முன்னால் அமர்ந்து கொண்டிருக்கிறேன்.இவன் முன் னால் ஒரு சிறுவயது பெண் கிளாஸ் எடுத்துக்கொண்டிருந்தாள்.நன்றாக இருந் தால் எனது மூத்த மகனின் வயது இருக்கும் அவளுக்கு.

மூத்த மகள் கல்லூரியில் படிக்கிறாள்.முதுகலையில் மூன்றாம் ஆண்டு. உள்ளூர் கல்லூரியில்தான் படிக்கிறாள்.வெளியூரில் இருந்து மாறுதலில் வந்த பொழுது இந்தக்கல்லூரிதான் தட்டுப்பட்டது முதலில்/

வேறு ஒரு கல்லூரி இதுநாள்வரை தட்டுப்பட்டுத் தெரியவில்லை. வீடு பார்த்து உட்கார்வதே பெரும்பாடாய் ஆகிப்போனது, சரி முதலில் கிடைத்த கல்லூரியில் சேர்ந்து விடுவோம்.என நினைத்துச்சேர்த்ததுதான்,இரு பாலர் கல்லூரி அது.கல்லூரியில் சேர்த்த நாளில் கூட கொஞ்சம் தயக்கமாக இருந் தது.ஆனால் நாட்கள் போகப்போக தயக்கம் தீர்ந்து லேசான மனதினன் ஆகிப் போனேன்.அந்தலேசைகைகொடுத்துக்காப்பாற்றியவளாய் இருந்த மகளின் வயதை ஒத்த வயதாய் இருந்த அவள் என்ன படித்திருக்கக் கூடும் என்பது தெரியவில்லை.

ஒரு நிமிஷம் தனது மகள் இப்படி வந்து நின்று பாடம் எடுத்தால் எப்படி இருக்கும் என்கிற யோசனை அந்த நேரத்தில் வராமல் இல்லை.கண் விழித்து பார்த்த போதோ அல்லது கனவு கலைந்த போதோ போன் சபதம் காதை எட்ட எட்டி எடுக்கிறேன்.தோழர் மோகன்தான் பேசினார்.வாங்க அப்பிடியே நேரம் இருந்தால் ஒரு சின்ன சந்திப்பப்போடலாம் என்றார்.சரி போடுவம் என எழுந்தவன் குளித்துவிட்டு கிளம்பும் போது மனைவியும் உடன் வருகிறேன் என்கிறாள்,

வருசப்பொறப்பும்அதுவுமாகோயிலுக்குப்போகணும்.எனச்சொன்னதும்கிளம்பி விடுகிறோம் இரண்டு பேருமாய்/

பாலம் கட்டுகிற வேலை நடந்து கொண்டிருப்பதால் முதலாவது கேட் வழி யாகப் போக முடியாது.ரயில்வே லைன் வழியாகத்தான் சென்றோம்.வேறி வழியில்லை.

அந்தநேரத்தில்இரண்டாவது ரயில்வே கேட் மூடியிருக்கும்.அதைவிட்டால் மேம்பாலம் கருமாதிமடம் முக்கு வழியாகத் தான் செல்ல வேண்டும்.அங்கு போய் சுற்றி பஜார் வழியாகத்தான் வந்து திரும்பவும் வடக்கு நோக்கித்தான் வரவேண்டும் .அதற்கு பேசாமல் வடக்கில் போய் ரயில்வே லைன் வழியாக யாகவே வந்து விடலாம்.

அப்படி வந்தால் முதலில் வருவது ராமர் கோயில் பின் மாரியம்மன் கோயில் முருகன் கோயில் வெயிலு கந்தம்மன் கோயில்,இதற்கெல்லாம் போய் விட்டு சொல்லுகிறேன் போனில்.

அப்படியே வந்து கூட்டிக்கொண்டு போய் விடுங்கள் எனச்சொன்ன மனைவி யை கோவிலில் இறக்கிவிட்டு விட்டு கிளம்புகிறேன் நண்பர்களைப் பார்க்க/

8 comments:

'பரிவை' சே.குமார் said...

அருமை அண்ணா...

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

Kasthuri Rengan said...

thodarvom tholar

vimalanperali said...

பிரியங்களின் அன்பு!

vimalanperali said...

பாராட்டும் அன்பு!

vimalanperali said...

நல் உள்ளத்தின் பாராட்டு!

vimalanperali said...

தொடரட்டும் அன்பு4