3 Apr 2017

உருண்ட உலோகம்,,,,



சிலீர் என காதுக்கே கேட்காமல்
மென்மை தாங்கி கீழே விழுந்தோடி
உருண்ட வளையத்தை எடுக்கக்குனிகையில்
அது மேலும் மேலுமாய் உருண்டோடிப்போய்
கதவிடுக்கிலாய் ஓடி ஒளிந்து கொண்டு
போக்கு காட்டி சிரிக்கிறது,
சாதாரண உலோகமான சின்னதான
என்னை பிடிக்க முடியவில்லையா
எட்டி,என்கிறதாய்/
விழுந்த இடம் ஒன்றாயும் 
அடைந்த இடம் வேறொன்றாயும்
இருந்த அதை எடுக்கக்குனிகையில் கேட்கிறேன்
வெள்ளியா நீ என,/
அதற்கு இரு கரங்களையும் கொண்டு
வாய்பொத்தி சிரித்த அது சொல்கிறது
மெலிதாக,கொட்டிக்கிடக்கிற ஆயிரம் மலர்களில்
தரம் பிரித்தும் பெயர் சொல்லியுமாய்
தனியாக எடுத்து விடுகிற ஒற்றைப் பூவைப்போல
என்னை கடையில் வாங்குகிற போது
எவர்சில்வர் வளையம் எனச் சொல்லித்தான்
வாங்கினான் தங்களது இரண்டாவது மகன்,
ஆகவே எனது பெயரை
எவர்சில்வர் என அறுதியிட்டே அழைக்கலாம்
உறுதியாக எனக்கூறிய அதை எடுக்க
கதவிடுக்கில் கை விடுகையில்
அது உள்ளே நுழைய மறுத்து பிடிவாதம் காட்டுகிறது.
சரிதானே,,,,,,,,,,
பின்னே இத்துணூண்டு அளவு இருக்கும்
கதவிடுக்கில் பருத்துத்தடித்திருக்கும்
கை எப்படி நுழைய முடியும்,?
இதில் கை சைஸை கம்மி பண்ணி விடவோ
இல்லை கதவின் இடுக்கை
பெரிதாக்கிவிடவோ முடியாதுதான் என்கிற நினைப்பில்
ஓரமாமக்கிடந்த விளக்குமாரின் குச்சியை
எடுத்து கதவிக்கில் இருக்கும் வளையத்தை எடுக்கிறேன்.

8 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

படிக்கும்போது, எடுக்க மேற்கொண்ட சிரமம் தெரிகிறது.

KILLERGEE Devakottai said...

ரசித்தேன் சிரமத்தை...
த.ம.

mstalin.blogspot.com said...

காலங்காத்தால இவ்வளவு கவணமும் நுட்பமும்..இதுவும் நல்லா தான் இருக்கும் என்ன?

vimalanperali said...

வணக்கம் டாக்டர் ஜம்புலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கில்லர் ஜி சார்,
அன்பின் வழிசொல்லிச்செல்லும்
நன்றி கருத்துரைக்கும்,வருகைக்குமாக/

vimalanperali said...

உலகளவாய் நடக்கிற கார்த்தால
விஷயங்களில் இதுவும் ஒன்றாய்/

vimalanperali said...

அன்பின் வழி நன்றி
கருத்துரைக்கும்,வருகைக்குமாக/

vimalanperali said...

சிரமங்களை அடையாளம் கொள்ளாத
வீடுகள் இப்பொழுது இல்லை உலகில்/