5 Apr 2017

விநாடியும்,நிமிடமுமாய்,,,,,,/


பத்திற்கும் பதினொன்றுக்கும் ஊடாக அல்லாடி ஓடிக்கொண்டிருந்தது மணி.

கடந்த நிமிடங்கள் யாவுமாய் விநாடியுடன் கைப்பிடித்து ஒவ்வொரு அடியாய் எட்டெடுத்து கடந்தறிவித்து சென்று கொண்டிருந்ததாய்,,/

பத்து வருடங்களுக்கு முன்பாய் தேனாண்டாள் ஸ்டோர்ஸீற்கு பக்கத்தில் இருக்கிறவாட்ச்கடையில்வாங்கியது.பத்து வருடங்களுக்கு முன்பாகவே பழக்க மாகிவிட்ட தேனாண்டாள் ஸ்டோஸீற்கும் இவனுக்குமான பழக்கம் வேர் விட்டு கிளைத்து விட்டது இன்று வரை.

விட்ட வேரின் பக்கவாட்டுச்சிம்புகள் தரை பரப்பெங்கும் பரவி விரிந்து காணப் படுவதாக/கணக்குவைத்துசரக்குவாங்குவான்.

ஜெனரல்மெர்ச்செண்ட்ஸ்டோர்ஸில்வேறென்னவாங்க,வீட்டிற்குதேவையான சோப்பிலிருந்து மற்றமற்றதான எல்லாம் அங்குதான்.ப்ளாஸ்க் கண்ணாடி ஷேவிங் செட் ப்ளேடு டீ ட்ரே உட்பட இன்னும் இன்னுமாய் நிறைய அங்கு தான் வாங்கினான்.

பெரியவரின் இறப்பிற்கு முன்பாக கோதுமை மாவு ரவை, மைதா உளுந்தம் பருப்பு,நல்லெண்ணெய்,கடலைஎண்ணெய்,சூரியகாந்திஎண்ணெய்,,,,என இதர இதரவாய்எல்லாம்கிடைத்தது.கடலை எண்ணெய்யை அட்டைப் பெட்டி பேக்கி ங்கில்முதன்முதலாக பார்த்ததும் வாங்கியதும் அவரது கடையில்தான், ஏதோ பெயர்தெரியாதகம்பெனியின்தயாரிப்பாய்இருந்தது.புழங்குவதற்கும்நன்றாகத் தான் இருந்தது,

கடைக்கார பெரியவரும் சொன்னார் நல்லா இல்லைண்ணா வச்சிருப்பமா நாங்க,நல்லா இல்லைன்னா முக்கியமா ஒங்களுக்குச்சொல்ல மாட்டேன் இத வாங்கச்சொல்லி எனவும் அது தவிர்த்து அடுத்தடுத்துமாய் நிறையப் பேசிக் கொண்டிருந்த ஒரு நாளின் அகாலத்தில் இறந்து போகிறார்.

இவனுக்குத் தெரியாது அவர் இறந்தது,பின்னர் கடைக்குப் போன ஒரு நாளில் சொன்னார்கள்.அடசண்டாளப்பாவிகளா,இறப்பின்விளிம்பில்நிற்கிற வயது
தான் அவருக்கு என்ற போதும் கூட இப்படி சட்டென இறந்து போயிருக்கக் கூடாது தான்,

மாலைவேளையாக அவர் வழக்கமாக கேட்கிற எப்,எம் ரேடியோவின் பாட்டுச் சப்தம்இனி அந்தக்கடையிலிருந்து வராதுதான், மாலை ஐந்து டூ ஐந்தரையில் அந்தப்பெட்டியிலிருந்து வெளிவருகிற பழைய பாடல்கள் மனம் அள்ளும் ரகங்களாய் இருக்கும்,

அதிலும் பீ,பீ சீனிவாசஸும், சுசீலா அம்மாவும் இணைந்து பாடுகிற பாடல் களில்எம்,எஸ்,விஅவர்களின்ஆன்மாஇருக்கும்.அந்நேரமாகஇவன் கடைக்குப் போனானனென்றால் சரக்கு வாங்குவதை விடுத்து சிறிது நேரம் அப்படியே நின்று விடுவான்.பாடல்களின் தாலாட்டில் லயித்துப்போன மனம் பாடல்கள் நின்ற பின்பாய் வாங்க வேண்டியவைகளைவாங்கி கொண்டு வரும்,

இப்படியெல்லாம் பாட்டுக்கேட்கிற அவர் அவருக்கு இருக்கிற இளைப்பு கூடிப் போன தினங்களில் எப் எம் மை பாட விட மாட்டார்,கடையின் உள்ளாக ஒரு ஓரத்தில் போய் அமர்ந்து கொள்வார்,

பரந்துவிரிந்து சின்னதான ஏரி போல் இருந்த கடையில் அவர் அமர்ந்திருக்கி ற இடம்தெரியாது.கடைக்குள்சரக்குஎடுத்துக்கொடுக்கும்இடத்தில்அவர்இல்லை என்றால்அவருக்குஅன்றுஇளைப்புகொஞ்சம்அதிகமாகஇருக்கிறது,கடைக்குள் எங்காவதுஒருமூலையில்அவர்அமர்ந்திருக்கிறார்,எப்,எம்இன்றுபாடாதுஎன்று அர்த்தம்.

அது அல்லாது சாதாரணமாக இருக்கிற நாட்களில் எப் எம் ரேடியோ பாடவும் அதே ரீங்காரம் தாங்கி அவர் பேசவும் சரியாக இருக்கும்.

இவன் வேலை பார்க்கிற அலுவலகத்திற்காய் சாமான்கள் வாங்க வருகிற போது கடையில் இருக்கிற சரக்குகளைப்பார்த்து இவனுக்குள்ளாய் மெலிதாய் முளைவிட்டஆசையை கண்பார்வையிட்ட கடைக்காரர் ”உங்களது நினைப்பெ ல்லாம் சரிதான்தம்பிநீங்கள் என்னுடைய கடையில் கணக்கு வைத்து சரக்கு வாங்கிக் கொள்ளலாம்,முதல் மாதம் வாங்குகிற பொருள்களுக்கு அதற்கு அடுத்த மாதம் பணம் கொடுத்தால் போதும்”,,,, என்ற சொல்லை இறுகப்பற்றிக் கொண்டவனாயும் நல்லதொரு நம்பிக்கையாளனாவும் இதுநாள்வரை சரக்கு களை வாங்கிக் கொண்டு வருகிறான்,மறைந்து போன அவரின் நினைவு சுமந்து/

இப்பொழுது அவர் நின்ற இடத்தில் அவரது மகன் நிற்கிறார்,அவர் பரவாயில் லை போலிருக்கிறது,குணவளங்களில் அவரது அப்பாவை மிஞ்சி விடுவார் போலிருக்கிறார் இவர்.அவரதுமகனிடம் அவரது அப்பாவின் இறப்பிற்கு வரு த்தம் தெரிவித்து விட்டு கடிகாரம் வேண்டும்இருக்கிறதா,,,,,வீட்டில் இது நாள் வரை சுவர் கடிகாரங்களே இல்லை ,கடிகாரம் அலங்கரிக்காத வெற்றுச் சுவர் வெறுமை தாங்கியும் மூளியாயும் காணப்படுகிற மனக்குறை வீட்டில் உள்ள எல்லோருக்கும் இருக்கிறது.ஆகவே அந்தக் குறையை போக்கி விடலாம் எனவும்கடிகாரம்வாங்கி விடலாம் எனவுமாய் முடிவெடுத்து கடைக்காரரிடம் கேட்டபொழுதுஇல்லை திருப்பதி சார் கடிகாரம் என்றார்.

அவர்பெயர் சொல்லிதான் இது நாள்வரை இவனை அழைத்துள்ளார். அவரது அப்பாவும் அப்படியே அழைப்பார்.

என்னதான் அண்ணன் தம்பி,சார்ன்னு கூப்பிட்டபோதும் கூட பேர் சொல்லிக் கூப்புட்ட மாதிரி இருக்காது.திருப்பதி என்பார்,

இவனதுமுழுப்பெயர்திருப்பதி ராஜன்,என்ன நான் சொல்றது திருப்பதி என்பார், ஒரு நேரம் திருப்பதி,ஒரு நேரம்ராஜன்,என்னதிருப்பதிராஜன்சார், இப்பிடிபேர் முழுசாசொல்லிக்கூப்புடலையேன்னு ஒங்களுக்கு ஏதும் வருத்தம் இருக்கா எனகேட்கும் பொழுது இவன் சொல்வான்

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல சார், நீங்கஎன்னைய டேய்ன்னு கூட கூப்பிடு ங்க, பரவாயில்ல அதுனால ஒண்ணும் கொறஞ்சி போயிரப்போறதில்ல இப்ப, என்னசார் நீங்கஎன்னைய எப்பிடிக்கூப்புட்டபோதும் எனக்கான மரியாத ஒங்க மனசுக்குள்ள இருக்கு,அதுபோல ஒங்களுக்கான மரியாத ஏங் மனசுக்குள்ள பொதஞ்சி கெடக்கு,இதுல என்ன சார் பெயரச் சொல்லிக்கூப்புறதுனால மரியா தை கொறஞ்சிறப்போகுது எல்லாத்துக்கும் காரணம் நம்ம மனசுதான் சார். என்பான் இவன் பதிலுக்காய்,சிரிப்பார் அவர்,

பற்கள் எல்லாம் பாதி உதிர்ந்து போயிருக்கும்.இருக்கும் பற்கள் கூட வெற்றி லைக்கறை படிந்து போயிருக்கும்,என்ன ராஜன் செய்யச்சொல்றீங்க,முப்பது வருசத்துக்கும் மேலா இந்தப்பழக்கத்த மடியில கட்டிக்கிட்டு அலையிறேன், விடமுடியலஎனச்சொல்கிறஅவர்சட்டைப்பையில்மூக்குக்கண்ணாடிக்கவரும்,  பால்பாயிண்ட் பேனாவும் எப்பொழுதும் இருக்கும்,

“இங்க் பேனான்னா கசிஞ்சி போகுது,முக்கியமான நேரத்துல கைகுடுக்க மாட் டேங்குது, ஒரு நாள்ன்னா பாருங்க ராஜன்,பேனாவுல இருக் குற மை கசிஞ்சி சட்டை பூரா ஆகிப்போச்சி,அன்னைக்கின்னு ஒரு வேலையா போயிருந்தேன் கவர்மெண்ட்டு ஆபீஸீக்கு.அங்க போன ஒடனே கையெழுத்துக் கூட போட பேனாவ எடுக்கப்பாத்தா அது கசிஞ்சி நிக்குது,

எனக்குன்னாஅவமானம்ஒருபக்கம்,அசிங்கமாவும் ஆகிப்போச்சி,என்ன செய்ய பின்ன பக்கத்துல இருந்த ஒருத்தரு அவரோட பேனாவக்குடுத்து கப்பலேறப் போன ஏங் மானத்த காப்பாத்துனாரு.நல்ல வேளை தப்பிச்சது மானம், கப்ப லும் அந்த யெடத்தவிட்டு நகறாம தரை தட்டி அங்கேயே நின்னு போச்சிங் குற திருப்தி வந்த அன்னைக்கி முடிவு செஞ்சேன் இனிம இந்தப் பையில இங்க்ப் பேனாவவைக்கக்கூடாதுன்னு/அன்னையிலஇருந்து இன்னைக்கி வரைக் கும் பால்பாயிண்ட் பேனாதான் ராஜன் என முடிப்பார்,

அவர் அப்படித்தான் எப்பொழுதும் பேச்சை தொடுத்து ஆரம்பிக்கிற நேரத்தில் திருப்பதி எனக்கூப்பிடுகிற அவர் முடிப்பதற்குள்ளாக ராஜன் திருப்பதி என மாறி மாறி பெயர் சொல்லி பேச்சை தொடர்வார்.

அப்படியான அவரது பேச்சு அவரது வெற்றிலைப்பெட்டியில் வைத்திருக்கிற இளம் வெள்ளை வெற்றிலையைப் போல் இளசாகவும்,நன்றாகவும் இருக்கும். கொஞ்சம் பதம் கலந்தும் இதம் கலந்துமாய்/

இப்படியாய் பேசிக்கொண்டிருந்தஒருநாளில் அவரதுவயதை கேட்டு விட்டான் தப்பான கேள்வியை கேட்டுவிட்டானே என்பவனை பார்ப்பது போலாய் பத்து விநாடிகள் வரை குறுகுறுத்து விட்டும்,சப்தமாக சிரித்துவிட்டும் சொன்னார்.

”திருப்பதி வெளியில சொல்லாதீங்க,இதைபோயி என்றவராய் தனது வயது எழுபத்தி இரண்டு என்றார்,உண்மையா இது என்கிற சந்தேகத்தில் இவன் இருக்கிற போது சொல்லியே விட்டார்,

“திருப்பதி பார்த்தா ஐம்பத்திச்சொச்சம் போலத்தான் தெரிவேன்,ஆனா இதுநாள் வரை இந்த ஒடம்பு எதையே ஒண்ண தாங்கீட்டு ஓடுது அவ்வளவுதான், எனச் சொல்லும் அவர் இதுக்காகவெல்லாம் சிறப்பா நான் ஒண்ணும் பயிற்சியெல் லாம் மேற்கொள்றது இல்ல.ஏதோ ஓடுது வண்டி,,,,”என அந்த நாளில் சொன்ன பேச்சைச்சொல்ல அவரும் இல்லை,சொன்னாலும் கேட்க ஆள் இவனைத் தவிர வேறு யாரும் இல்லை.

திருப்பதிராஜன் என்கிற இவனது பெயரை முழுதாகச்சொல்வது இவனது மனைவி மட்டுமே,மிஸ்டர் திருப்பதி ராஜன்,மிஸ்டர் திருப்பதி ராஜன் என காதருகில் வந்து சொல்லி விட்டுப் போவாள் அதுவும் குளித்து முடித்துவிட்டு ஆபீஸிற்கு கிளம்பப் போகிற வேளையாக/

எப்பொழுது கொஞ்ச வேண்டிய கொஞ்சலை எப்பொழுது வந்து கொஞ்சுகிறாய் என்செல்லமே,ஐம்பதை நெருங்கி பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து பேரன் பேத்தி எடுக்கப்போகிற இந்த வயதில் போயா,நரை கூடிப் போன போதும் கூட சேட்டைகளுக்குகுறைவில்லை எனக்கண்ணடிக்கும் போது”சும்மாயிருங்கள் நீங்கள் பேசக்கூடாது அதிகமாய்.திருமணமான புதிதில் நான் வேலை செய்கிற வெளியூருக்குக்கூப்பிட்டுப்போக முடியாது உன்னை என இங்கே உங்களது உறவினர்களிடம் விட்டுவிட்டு எதோ ரீலீஸான புதுசினிமாவைப்பார்ப்பது போல்வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை என தவணைமுறையில்ஐந்துவருடங்களாக வந்து பார்த்துச்சென்ற உங்களை இப்பொழுதுதான்முழுமையாக பார்க்கிற பாக்கியமும் பேசுகிற பாக்கியமும் கிடைத்திருக்கிறது,இதில்நரை கூடினால்தான் என்ன ,கிழப்பருவம் எய்தினால் தான் என்ன,,,இளமை பூத்து நிற்கிற மனதை கழட்டி சட்டைப்பையிலோ அல்லது முந்தானையிலோவா முடிந்து வைத்துக்கொள்ளமுடியும்,,,?என் கண வனிடம் பேசுவதற்கும், கொஞ்சு வதற்கும் இப்பொழுதான் நேரம் கிடைத்தி ருக்கிறது.பயன்படுத்திக்க்கொள்கிறேன்.இதில் போய் வயது வரம்பை காரணம் காட்டி திறந்து நிறைந்திருக்கிற மனதுக்கு தாள் போட்டால் என்ன அர்த்தம் சொல்லுங்கள்,,,”எனச்சொல்லிவிட்டு”மிஸ்டர்திருப்பதிராஜன்,மிஸ்டர் திருப்பதி ராஜன்,,”எனசப்தமாகக்கூறி விட்டு ஓடி விடுவாள்.

அவள்தான் சொன்னாள் கடிகாரம் வாங்குற போது என்னையும் கூப்பிடுங்கள் என/

அவளது சொல் ஏற்று கூப்பிட்டுக்கொண்டுபோய்தேனாண்டாள் ஸ்டோர்ஸில் கடிகாரம் இருக்கிறதா எனக்கேட்ட பொழுது இல்லை சார்.நாங்கள் கடிகாரமெ ல்லாம்விற்பதில்லை.முதலில்அதைஎங்களதுகடையில்வாங்கிவைத்துப்பழக்க மில்லை.இரண்டாவதாய்அதை விற்கிறநம்பிக்கையைஜனங்களிடம்இன்னும் நாங்கள் விதைக்கவில்லை.மூன்றாவதாய் அதை எங்களது கடையில் வாங்கி வைத்து பத்திரப்படுத்தவும் பாதுகாக்கவும் இயலாது.என்கிற எண்ணம் என்னு ளாய் ஆழமாய் வேர்விட்டுப்போனது.ஆகவே கடிகாரம் விற்கிற எண்ணத்தை கைவிட்டுவிட்டு தியாகித்து பக்கத்து கடைக்கு விட்டுவிட்டேன்.என்று சொன் னவரின் பேச்சை ஏற்று பக்கத்துக்கடையில் போய் நின்றார்கள். சின்னதாகத் தான்இருந்ததுகடை,கொஞ்சமாகத்தான்வைத்திருந்தார்கடிகாரங்களை.போய்க்  கேட்டதும் பத்து மாடல்களை எடுத்துக்காண்பித்தார் ,

“சார் என்னிடம் இருப்பது இப்போதைக்கு இவ்வளவே,போதும் இவ்வளவு இது, திருப்தி அளிக்கிறது எனக்கு என்றால் பாருங்கள் இல்லை போதாது எனக்கு இன்னும் இன்னுமாய் வேண்டும் மாடல்கள் என்றால் நான் எடுத்துக் கொடுத் ததை பார்த்துக் கொண்டிருங்கள் வந்து விடுகிறேன் இதோ கூப்பிடு தொலை வில்எனது அண்ணன் கடை இருக்கிறது,அது கொஞ்சம் பெரிய இடம் நிறைய வைத்துக் கொள்ளலாம் ஸ்டாக்.ஆதலால் நிறைய இருக்கும் கடிகாரங்கள் எடுத்து வந்து விடுகிறேன் என அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவர் எடுத்து வைத்த பெட்டிகளில் ஒன்றின் மீது ஒட்டப்பட்டிருந்த கடிகாரத் தின் படம் இவனை கவரவே எடுத்துப்பார்க்கிறான் அதைப்பிரித்துக்காண்பிக்கச் சொல்லிப்பார்த்ததும் அதன் வடிவம் இவனையும் உடன் வந்த மனைவியை யும் கவர்ந்து விடவே அதையே வாங்கி விடுகிறான்.

மேலே கூம்பிய முக்கோண வடிவத்திலும் அதிலிருந்து கீழ் நோக்கி இருக்கிற அரை வட்ட வடிவத்திற்கும் இதற்குமாய்இடையில் ஒரு கோடு வந்தது போல் தடித்து இறங்கிய ஒற்றை கம்பு போல் இருந்ததைச் சுற்றி வட்டமாக மூன்று கம்பிகள் போல் ஓடிக்காட்டிய பிளாஸ்டிக் வட்டம் இருந்த கடிகாரத்தின் டிசைன் நன்றாக இருந்தது பார்ப்பதற்கு/

நூற்றி ஐம்பது ரூபாய் என்றார்கள். இந்த விலையில் இப்படி ஒரு சுவர் கடிகா ரமா,,,,? ஆச்சரியம்.பொதுவாக சுவர் கடிகாரங்கள் முந்நூறு ரூபாய்க்குக் குறை யாமல் விற்கும் என்றுதான் கேள்விப்பட்டுள்ளான்,ஆனால் இந்தவிலையில் இவ்வளவு விலை மலிவாகவும், இவ்வளவு நல்ல டிசைனிலும் கிடைக்கிறது என்றால் ஆச்சரியமே,,,என்கிற மனோ நிலை தாங்கி வாங்கி வந்த கடிகாரம் அன்றிலிருந்து இன்று வரை பழுதென ஒன்றுமில்லாமல் ஓடிக்கொண்டிருக் கிறதுதான்.

அதிகபட்சமாய் அதற்கென இவன் செய்கிற செலவு இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை பெண்டார்ச் செல் என்று சொல்லப்படுகிற சின்ன செல் வாங்கிப் போடுவதோடு சரி.

மற்றபடி இன்றுவரை நேரத்தை தவறாமல் அல்லது இவனது வீட்டுக்காரர்கள் முள்ளை நகட்டி வைத்து அஜஸ் பண்ணச்சொல்லி வைப்பது போல் நேரம் காட்டிமுறையாக ஓடிக்கொண்டிருக்கிற கடிகாரத்தை திரும்பவும் ஒரு முறை யாய்ப்பார்க்கிறான். திரும்பி/

பத்திற்கும் பதினொன்றுக்கும் ஊடாக அல்லாடி ஓடிக்கொண்டிருந்தது மணி.

கடந்த நிமிடங்கள் யாவுமாய் விநாடியுடன் கைப்பிடித்து ஒவ்வொரு அடியாய் எட்டெடுத்து கடந்தறிவித்து சென்று கொண்டிருந்ததாய்,,/

6 comments:

இராய செல்லப்பா said...

தில்லியில் இருக்கும்போது ஆறு சுவர்க்கடிகாரங்கள் இருநூறு ரூபாய் என்று வாங்கினேன். (சாந்தினி சவுக்கில் 6க்கு குறைந்து தரமாட்டார்கள்.) மற்றவர்களுக்கு கொடுத்தது போக, இரண்டு என் வீட்டுச் சுவர்களை அலங்கரித்தன. ஒன்று இருபத்தைந்து வருடம் உழைத்தது. இன்னொன்று பத்துவருடம் நன்றாக ஓடிக்கொண்டிருந்தது. இப்போது வாங்குவதெல்லாம் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு மேல் வருவதில்லை. காலம் காட்டும் கருவிகளுக்கு நல்ல காலம் இல்லையோ? எல்லாம் கலிகாலம்!

- இராய செல்லப்பா நியூஜெர்சி

கரந்தை ஜெயக்குமார் said...

இப்போது வாங்குவதெல்லாம் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு மேல் வருவதில்லை. காலம் காட்டும் கருவிகளுக்கு நல்ல காலம் இல்லை
எல்லாம் வியாபார தந்திரம்தான்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வியாபார உத்தியை அனைத்திலும் கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பதே உண்மை.

vimalanperali said...

வணக்கம் டாக்டர் ஜம்புலிங்கம் சார் ,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம்கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் செல்லப்பா சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/