14 Jun 2017

கல்யாணப்பத்திரிக்கை..,,,,,,,

எடுத்துக்கொடுத்தபத்திரிக்கையைப்போலவேகொடுத்தவளின்மனதும்விசாலப் பட்டிருக்க வேண்டும்.

இல்லையாபின்னே,,,?பளிச்செனவிசாலப்பட்டுச் சிரிக்கிறாள்,மனம் கொள்ளை போகிற வெள்ளைச்சிரிப்பு அது.சிரிப்பவரும் நோகாமல் சிரிப்பை பார்ப்பவரும் கேட்பவரும் நோகாமல் இருக்கிற சிரிப்பாய் பட்டுத்தெரிகிறது,

கூட இருப்பவர் அருகில் நிற்பவர்,அக்கம் பக்கம் என யார் மனமும் புண்பட்டுப் போகாத வெள்ளைச்சிரிப்பு அது.யாரும் பார்த்து எதற்காவும் கண் வைத்து விடாதீர்கள் ஸ்டாப் எனச்சொல்ல வேண்டும் போலிருக்கிறது.

சிரிக்கிறபளிச்சில்வெண்மை பட்டுத்தெரிந்த பற்களுக்கும் கன்னத்தில் விழுந்த இருபக்க குழிகளுக்கும் தொடர்பு இருக்கத்தான் வேண்டும் போலி ருக்கிறது.

ஒவ்வொருகுழிக்கும்ஊற்றலாம்ஒரு படி எண்ணை என்பதுபோலாய் தோணிய எண்ணத்தைமனைவிடம்சொன்னபோதுவைதாள்அவள்,சும்மாஇருங்கஆமாம், மக வயசுப்பொண்ணப்போயி இப்பிடியா ரசிப்பாங்க எனச்சொன்ன போது மகவயசு மட்டும் இல்ல,மக வயசுல இருக்குற பொண்ணுகள பாக்கும் போது மகள்ன்னேநெனைச்சிகொண்டாடத்தோணுது,மனசுஉருகிப்போகவும்தோணிப் போகுதுதான் என்பான்.

தவிர மகளப்போலவும் மகளாவே நினைச்சிக்கிட்டிருக்கிருக்குற ஒருத்தியப் பத்தி நெனைக்காம வேற யாரப்பத்தி நெனைக்க சொல்லு என்பான்.

பூசியது போல் பூரித்துதெரிந்த கன்னக்கதுப்புகள் அவளது அழகுக்கு இன்னும் கூடுதல்அழகூட்டியதாகவே,,,/

அழகு மட்டும்இல்லைவிசாலங்களிலும் இன்னும் பிறவற்றிலுமாய் கூடிப் போகிறதுதான்மனது.இதுபோன்றசிரிப்புகளில்பறிபோகிறமனம்இவனுக்கில்லை யாருக்குவாயக்கபெற்றாலும்வரமேஅதுஎன்பான்பலசமயங்களில் பலரிடம்.

அலுவலகத்திற்கு சற்றே கூட்டம் குறைந்த நேரத்தில்தான் வந்தாள்.அவள் பச்சைக் கலரில் சேலை அதற்கு மேட்சாய் ஜாக்கெட்போட்டுக்கொண்டு வந்தி ருந்தாள்,

தலையில் வெள்ளையாய் அள்ளிச் சிரித்த மல்லிகைப்பூ,அவளது தலையில் இருந்ததால்அந்த பூவுக்கு அழகா இல்லை,அந்தபூவால்அவளதுதலை அழகு பட்டதா தெரியவில்லை.

வெள்ளையாய் நீண்டுதொங்கிய மல்லிகையை அவள் தலைக்கு வீ ஷேப்பாக அழகு தெரிந்தது.தொங்கிய பூவின் வலதுமுனை அவளது கரும்பச்சை நிற ஜாக்கெட்டின் ஓரம் தழுவி நின்றது.தழுவி நின்ற பூவிலிருந்து மொட்டொ ன்று கழன்று கீழே விழுந்தது இவன் பார்க்கிற நேரமாய்,/

சே,,,,,/இவன் பார்க்கும் நேரம் தானா இப்படியெல்லாம் நடக்க வேண்டும்.பூ விழுந்தால் என்ன, வைத்திருந்தவர்விழுந்தால் என்ன,,,,?இரண்டும் ஒன்று தானே என நினைக்கத் தோணுகிறது இவன் பார்க்கிற நேரமாய்/

அலுவலகத்தில் சற்றே கூட்டம் குறைந்த நேரத்தில்தான் வந்தாள்.

அதனால் என்னசின்னச்சிறு கிளைகளை காத்துக் கொள்கிற தாய்க் கிளைப் போல அவள் ஒருத்தியின் வரவு பத்துப்பேரை அழைத்து வந்தது போல் இரு ந்தது.

இலைகளும் தலைகளும் பூவும் பிஞ்சும் காயும் கனியுமாய்,,,,,,,,,,/

ஆனாலும்சந்தேகம்அவளதுபேச்சிற்கிம் சிரிப்பிற்கும்பத்துப்பேர்தாங்குவார்களாஎன்பதுகேள்விக்குறியே,,,,/தாங்காவிட்டால் என்ன பத்தை தாண்டிய பதின் னொன்றில்தான் அவள் இருக்கிறாளே,,?

இவனிலிருந்து மூன்றாவதாய் அமர்ந்திருந்த நபரிடம்தான் பேசிக் கொண் டிருந்தாள்.பத்திரிக்கையைக்கொடுத்தவாறே/

சாரிடம் இப்பொழுது போகலாமா பத்திரிக்கையைகொடுக்க,,,,என அங்கிங்கெ ணாத படி அலுவலகத்திற்குள் நின்றிருந்த வாடிக்கையாளர்களில் சிலர் கேஷ் கவுண்டரின் முன்பாக நிற்பதை பார்த்து விட்டு சார் இவ்வளவு பிஸியா என்பது போல கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவள் கேட்ட கேள்வியின் சூடும் பேசிய பேச்சின் அவசரமும் காதைக்குத்த கேஷ் கவுண்டரின் முன்பாய் நின்ற வாடிக்கையாளர்களை அனுப்பி விட்டு வாப்பா,வாப்பா என்னப்பா விஷயம் சந்தோஷமான விஷயந்தான என்றதும் ”சார் எனக்கு கல்யாணம் அடுத்த முகூர்த்தத்துல,பத்திரிக்கைகுடுக்கவந்தேன், அதான் ஆள்க இருக்குறப்ப வரக்கூடாதுன்னு ஒதுங்கி நிக்கிறேன்.எனச் சொன் னவளிடமிருந்து வாப்பா கொண்டாப்பா நல்ல சேதியத்தானப்பா அச்சடிச்சி கொண்டாந்துருக்க,கும்புடு போட்டு வாங்கிக்கிறேன் என கல்யாணத்தேதி மண்டபம் மாப்பிள்ளை அவரது ஊர் என்ன வேலை பார்க்கிறார்,என்பது உட் படவும்இன்னும்இன்னுமாகவும்நிறைய பேசி விட்டு பத்திரிக்கையை வாங்கிக் கொண்டான்,

கொடுத்தபத்திரிக்கையின்ஈரம்கொடுத்தவளின்மனம்போலவே.இதில் இந்தப் பேச்சு நடந்த வேலையும் பத்திரிக்கைக்கொடுக்கப்பட்டதும் ஒன்று தொட்டு ஒன்றாகவே நடந்து முடிந்தது,.

பொதுவாகபெண்பிள்ளைகளிடம்பேசும் போதும் அவர்களை கூப்பிடும் போதும் வாப்பா போப்பா என்னப்பா எப்பிடியிருக்கீங்க நல்லாயிரு க்கீங் களா,,,,என்ன வேணும் சொல்லுங்க என்பதாகத்தான் இருக்கும்.இந்தப் பழக்கம் இவனில் எப்படி வந்தது,எந்த சமயம் இவனில் காலூன்றியது என்பது பற்றிசரியாக விபரங்கள் ஏதும் இவனிடம் இல்லை.

யாரையும் பார்த்துப் பேசக் கற்றுக்கொண்டானா இல்லை இவனாக இப்படி யொன்றை வரைந்து வழக்க மாக்கிக்கொண்டானா என்பது தெரியவில்லை.

இது நாள் வரையிலுமாய்.இப்படிப்பேசக்கற்றுக் இப்படித்தான் பேசினானா இல் லை பெண் குழந்தை இல்லை என்கிற குறை இப்படி பேச வைத்திருக்கிறதா எனவுமாய் தெரியவில்லை.

பெண்பிள்ளை ஆண் பிள்ளை எதுவானால் என்ன எல்லாம் பிள்ளைதானே என்கிற பேச்சு வழக்கில் இவனுக்குக்கொஞ்சம் கருத்து மாறுபாடு உண்டுதான்.

திருமண வீடுகளில்,விஷேசவீடுகளுக்குச் செல்லும் போது ஜவுளிக் கடைக ளுக்குச்செல்லும் பொழுதும்,,,,,,சரி அது போக பஜார் மற்றும் இன்னும் இன்னு மான பொதுஇடங்களில் பெண் பிள்ளைகளை பார்க்கும் பொழுதும் சரி ஒரு விதமனநெகிழ்வுவந்து விடுவதுண்டுதான்

பெண் பிள்ளைகள் எப்பொழுதும் அசைந்து வருகிற பூங்கொத்து போலவும் நடந்து வருகிற பூச்செடி போலவுமாய் என்பான் இவன்.

ஏதாவது நடை தடுமாறிப் போச்சின்னா அது போல மன வாதனை எதுவும் கெடையாது என்பாள் என் பாள் மனைவி.

வாஸ்தவம்தானோஅவள்சொல்வதும் என்கிற நினைப்பு மேலோங்குகிற சமய ங்களில் பெண்பிள்ளைகள் தெளிவு பெற்று நடமாட ஆரம்பித்து விடுகிறார்கள். அப்புறம் என்ன அதே வாஞ்சை மிகுந்த வாப்பா, போப்பா,,,, என்கிற பேச்சும் நட்புத்தன்மையும் இருக்கும்.அது சமயத்தில்/

இப்பொழுதுஅந்தப்பழக்கம்வளர்ந்துவளர்ந்து சமயத்தில் இவனது அம்மா வயதி னரைக்கூட அப்படியாய் அழைக்க வைத்து விடுகிறதுண்டு.

இதில் மிகப்பெரியஆச்சரியம் இப்படிக் கூப்பிடுவதை அவர்கள் விரும்புவதும் தடை சொல்வதும் கிடையாது.

அதுவே அவனது பேச்சிற்கு கிடைத்த முழுநீள அங்கீகாரமாய் எடுத்துக் கொ ள்வதுண்டு.

இப்படிப்பேசுவது சரியா,தவறா என தோணுகிற சமயங்கள் இவனில் இருந்த போதும் கூட இவனிடமிருந்து அந்தப்பேச்சு அகலவோ இல்லை அந்தப் பேச்சை இவன் விட்டவனாகவோ இல்லை.

அது போல்தான் பத்திரிக்கை கொடுக்க வந்த அவளையும் அழைத்தான். அவ ளிடமும் பேசினான்.அவள் கொடுத்த பத்திரிக்கையையும் வாங்கிக் கொண் டான்.

அடர் பச்சை நிறத்தில் லேமினேட்டட் செய்யப்பட்டிருந்த பத்திரிக்கையில் மும்மதக்கடவுள்களின் படங்களும் அச்சிடப்பட்டிருந்தது. அதன் கீழே இடம் விட்டு பெண்ணின் பெயரும் மாப்பிள்ளையின் பெயரும் திருமணம் நடக்க விருக்கிற மண்டபத்தின் பெயரும் அச்சிடப்பட்டிருந்தது.

பத்திரிக்கையைப் பிரித்துப் பார்த்து விட்டு எந்த மண்டபம் எங்கிருக்கிறது போன்ற விபரங்களையும் கேட்டறிந்து விட்டு கண்டிப்பாக வருகிறான் என்று அனுப்பி வைத்தான்.

எடுத்துக்கொடுத்தபத்திரிக்கையைப்போலவேகொடுத்தவளின்மனதும்விசாலப் பட்டிருக்க வேண்டும்.

அதற்காகவே கண்டிப்பாக திருமணத்திற்குப்போக வேண்டும்.

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

வாஞ்சை மிகுந்த வாப்பா, போப்பா,,,, என்கிற பேச்சும் நட்புத்தன்மையும் இருக்கும்.

உண்மை நண்பரே
அருமை
தம 1

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/