17 Jun 2017

செலவு வரவு,,,,



நான் கடைக்குள் சென்றபோது
பெண்கள் இருவர் மட்டுமே இருந்தனர்,
அவர்களின் வயதிற்கு பெண் பிள்ளை ஒன்றும்
ஆண் பிள்ளை ஒன்றும்,
அல்லது பெண் பிள்ளை இரண்டும்
ஆண் பிள்ளை இரண்டுமாக இருக்க வேண்டும்.
அவர்களின் படிப்பு கல்லூரி இளங்கலை வகுப்பையோ
அல்லது பள்ளியின் இறுதி வகுப்பையோ
எட்டியிருக்க வேண்டும்.
கடையின் ஓனர் ஊருக்குப்போயிருப்பதாகவும்
அவர் வர இரண்டு நாட்கள் ஆகும்
எனவுமாய் சொன்னார்கள்,
தவணைப்பணம் கொஞ்சம் கட்டவேண்டும்
அதுதான் வந்தேன் எனச்சொன்ன போது
கொடுங்கள் பணத்தை எங்களிடம் நம்பி,
இவ்வளவு பொருட்கள் அடங்கிய கடையை
நம்பி எங்களிடம் ஒப்படைத்து விட்டுப்போயிருக்கும்பொழுது
ஆயிரத்துக்குள் தரப்போகிற உங்களது பணத்தை
பத்திரமாக வைத்திருந்து
எந்த வித சேதாரமும் இல்லாமல்
ஒப்படைத்து விடுவோம் அவரிடம்
எனச்சொன்ன அவர்கள் இருவருமாய்
சேர்ந்து சொன்ன சொல்
இன்னும் மனம் நிறைப்பதாக,
எப்பொழுதும் மனைவியைக்
கூட்டிக்கொண்டுதானே வருவீர்கள்,
இன்று மட்டும் தனியாக வந்திருக்கிறீர்களே,
அவர்களது நிறத்திற்கு ஏற்ற சேலையை
எடுத்து வைத்திருக்கிறோம்,
அவர்களது டேஸ்டும் நிறத்தேடுதலும்
எங்களுக்குத்தெரியும் ஓரளவிற்கு,
ஆகவே எடுத்து வைத்திருக்கிற
புடவையை கொண்டு போய்
அவர்களிடம் கொடுங்கள் எந்த வித மன மறுப்புமற்று,
பின் என்ன சொல்கிறார்கள் எனக்கேட்டு
வந்து சொல்லுங்கள் அல்லது
அவர்களை வந்து சொல்லச்சொல்லுங்கள்,
என பையில் போட்டு தயாராக வைத்திருந்த
புடவையை எடுத்து இவனது
கையில் திணிக்கிறார்கள் வலுக்கட்டாயமாக/
பணத்தைக்கொடுப்பவர்களின் திருப்பியே எங்களது திருப்தி/

                   ++++++++++++++++++++++++++ 

எடுத்த ஜவுளியின் விலை குறித்த பில்
கைக்கு வந்த போது
பையில்  இருந்த பணம் கரைந்து போகிறது
எந்தத்தடயமும் அற்று/
அது வரை இல்லாத சந்தோஷம்
ஓடோடி வந்து ஒட்டிக்கொள்கிறது சடுதியில்
பிள்ளைகளின் முகத்தில்/

4 comments:

KILLERGEE Devakottai said...

பிள்ளைகளின் சந்தோஷம் அது ஒன்றே போதும்.
த.ம.1

கரந்தை ஜெயக்குமார் said...

பிள்ளைகளின் மகிழ்ச்சிதானே பெற்றோரின் மகிழ்ச்சி

vimalanperali said...

வணக்கம் கில்லர்ஜி சார்,
நன்றியும் அன்புமான கருத்துரை,,,
மனமகிழ்ச்சி/

vimalanperali said...

மகிழ்வு சுமந்த பிள்ளைகள் ,
பெற்றோர்களின் திருப்தி,,,,
நன்றி கருத்துரைக்கு
கரந்தை ஜெயக்குமார் சார்