22 Jun 2017

கொடிப்படர்வின் நுனி பட்டு,,,,,,,


குட் செட் ரோடு வழியாகத்தான் போக வேண்டியிருக்கிறது,

மாலா அக்கா சொல்கிறாள்,”ஏன் போயிட்டு அந்தப்பக்கமா,பேசாம பாலத்து வழியா போயிருங்க,இல்ல ரெண்டாவது இல்ல மூணாவது கேட்டு வழியா போயிற வேண்டியதுதான”,என,

வாஸ்தவம் சுமந்து நிற்கிற அவளது சொல்லை தட்டவோ இல்லை கேட்கக் கூடாது என்பதோ அந்த நேரத்தில்; மணியின் விருப்பமில்லை,ஆனால் நடப்பு யதார்த்தம் வேறு மாதிரி இருப்பதை மாலா அக்காவுக்கு எப்படி புரிய வைப் பது எனத்தெரியவில்லை,

இல்லமாலாக்கா,அந்த வழிய போகக்கூடாததுன்னோ,இல்ல அது தாண்டி யோசிக்கக்கூடாதுன்னோ கெடையாது,காலையில் எந்திரிச்சி குளிச்சிட்டு கெளம்பி ஆபீஸ் போகும் போது சரியா இருக்கு நேரம்,

இதுலநான் போற நேரமா ரயிலுக்காக கேட் அடைச்சிருந்தான்னா சொல்லவே வேண்டியதில்ல,உறுதியா ரயில் போனதுக்கப்புறம் கேட் தெறந்தாலும் கால் மணி இல்ல இருபது நிமிஷமாகும் கேட்டைக்கடக்க,அவ்வளவு கூட்டம் சேந்துரும்,அதைதவிர்க்குறதுக்காகத்தான் இப்பிடி வந்துர்றது குட் செட் ரோடு வழியா,இதுலன்னா அந்த வம்பு இல்ல,/

தவிர ராத்திரி இந்த வேக்காட்டுல இயற்கையாவே தூக்கம் வர மாட்டேங்குது, தவிர்த்து ராத்திரி பிள்ளைங்க டீ.வீ இண்டர்நெட்டுன்னு ஒரே தூங்க லேட்டாக் கிருறாங்க,

அவுங்க தூங்க லேட்டாகும் போது நாங்களும் தூங்குறதுக்கு லேட்டாகித்தான் போகுது என்ன செய்யச்செல்லுங்க,அவுங்க கையில வச்சிட்டுப் பாக்குற டீவி ரிமோட்டயோ ,இல்ல லேப்டாப்பையோ பிடுங்கி வைக்க மனசு வரல,மிஞ் மிஞ்சிப்போனா அதட்டலா ஒரு சத்தம் மட்டும்தான் குடுக்க முடியுது.

அந்த அதட்டல் சுமந்த சத்தத்தக்கூட சரியா குடுக்க முடியல,பலவீனம் சொம ந்துதான் குடுக்க வேண்டி இருக்குது,மனசு கேக்கல,அதை மீறி அப்பிடியெல் லாம் ரொம்ப அதட்டலா கறாரா இருக்கும் போது என்னாகிப்போகுதுன்னா புள்ளைங்க மனசு சங்கடப்பட்டு சுருங்கிப்போகுதுங்க,

அதுக்காகவே பாதி எதுவும் சொல்றதில்ல,எங்க அம்மா சொல்லுவாங்க, திங் கிறது தூங்குறதுலதான் செல்லம் எல்லாம்,மத்தபடி படிப்புன்னு வந்துட்டா ஒழுக்கமா இருக்கணும் பாத்துக்க என்பார்கள்.

அது மாதிரியே படிப்புக்கு அவுங்க எந்தவித பங்கமும் வைச்சதில்லை, ஆனா இது போலான சேட்டைகளை தாங்கிக்கிறத்தான் முடியல.

பேசாமஅவுங்க படிக்கிற பள்ளிக்கூடங்கள்ல காலேஜ்கள்ல இது மாதிரியான பழக்கவழக்கங்களஎப்பிடிஒருஅளவோடவச்சிக்கிறலாம்ன்னுசொல்லிக் குடுக்கச் சொல்லணும்,

ஏன்னாஊரே இப்பிடித்தான் இருக்கும் போல இருக்குது,இப்பிடியே போயி ஒரு சர்வேஎடுத்துப்பாத்தமுன்னா எல்லா வீடுகள்லயும் புள்ளைங்க இப்பிடித் தான் இருக்கும் போல இருக்குது.என மாலா அக்காவிடம் குறைபட்டுக் கொள்ளும் போதுஎன்ன செய்யச்சொல்லு இன்னைக்கி புள்ளைகளுக்கு இருக்குற பொழுது போக்கு அது ஒண்ணுதான்னு ஆகிப்போச்சி, கலக்கமத்துபோயி பக்கத்து வீட்டு எதுத்தவீட்டுபுள்ளைங்ககிட்டப்போயி பழகுறாங்களான்னு கேட்டா அது இல் லைன்னு ஆகிப்போச்சி/

நம்ம காலங்கள்ல வீட்டுல சாப்புட்டுட்டு வெளையாடுற யெடங்கள்ல போயி கைத்தொடைச்சிக்கிருவம்,ஒடம்பு பூரா அடிபட்டு செராய்ச்சி ரத்தம் கன்னிப் போயி காயமா இருந்தப்பக்கூடயும் கையி கால்ல ஏதாவது சேதாரம் ஏற்பட் டப்பக்கூடயும் கூட புள்ளைங்க ஒறவு முறிஞ்சி போனது கெடையாது,மாறா ஒறவு பலப்பட்டு நிக்கும்,

இப்பஇண்டர்நெட்டுலயே பழகி ,இண்டர்நெட்டுலயே பேசி,இண்டர்நெட்டுலயே போட்டு இண்டர்நெட்டுலயே சண்ட போட்டு இண்டர் நெட்டுலயே பிரிஞ்சிரு றாங்க,

பின்ன எப்பிடி பலப்படும் புள்ளைங்க ஒறவு சொல்லு என்பாள் மாலா அக்கா,

அவளுக்குப்பிடித்தபூப்போட்ட சேலைகளிலும் கட்டம் போட்ட டிசைன் சேலை களிலும் காட்டன் புடவைகளிலுமாய் அவள் அழகாவே தெரிந்திருக்கிறாள், இது நாள்வரை.

அவளுக்குப்பிடித்ததென அம்பர் சேலைகள் இரண்டு வைத்திருக்கிறாள்,

என்னக்கா இருக்குற சேலையெல்லாம் போதாதுன்னா இத வேற எடுத்து வச்சி ருக்குற எனக்கேட்டால் நீயிசும்மா இரு மணி அந்தமானிக்க, நான் என்னவோ பீரோநெறைய சேலையா அடுக்கி வைச்சிருக்குற மாதிரியும்அம்பர் சேலைகள அதுக்கு தொணையா கூட சேத்து வச்சிருக்குற மாதிரியுமில்ல சொல்ற என்பாள்,

ஏற்கனவே புள்ளைங்க சொல்லீட்டு திரியுறது பத்தாதுன்னு நீ வேறயாக்கும், புள்ளைங்கங்கரெண்டும்ஒங்க மாமாவும் சேந்துட்டா போதும், என்னைய கேலி பண்ணி தலைய உருட்டவே நேரம் பத்தாது அதுகளுக்கு/

இத்தனைக்கும்பொடவையா எடுத்து வந்து போடுறதும் அவருதான், புள்ளைங் களோட சேந்து கேலி பண்ணுறதும் அவருதான்.

அப்பிடியே பஜார்பக்கம் போனாருன்னா ஜவுளிக்கடையில் கட்ட வேண்டிய தவணைப்பணத்தகட்டி முடிச்சிட்டு ஒரு பொடவைய எடுத்துட்டு வந்துருவாரு வெளிய தெரியாம ரகசியமா பைக்குள்ள வச்சி.

”எனக்கெதுக்கு இத்தன இருக்குறது பத்தாதா,ஒங்களுக்கும் புள்ளைகளுக்கும் எடுத்துக்கிற வேண்டியதுதானன்னு சொன்னா,,,,,,,,,இப்ப என்ன புள்ளைகளுக் கும் எனக்கும் எடுக்குறதுனால ஒனக்கு எடுக்கக்கூடாதுன்னு எதுவும் இருக்கா என்ன,எனக்கு இருக்குற ஆசையில கடையையே அப்பிடியே அள்ளிக் கொ ணாந்து ஓம் முன்னாடி வச்சிறலாம் போல இருக்குதான்,என்ன செய்ய அந்த அளவுக்கு வசதியும் இல்ல,வீட்ல யெடமும் இல்லன்னு கடைக்காரரு கிட்ட சொல்லீட்டு வந்துட்டேன்னுவாரு,சிரிச்சிக்கிட்டே”/

ஓங்கிஅந்தமானிக்கி தலையில ஒன்னு வச்சேன்னா தெரியுமான்னு சொல்லிக் கிட்டே நான் அவரு தலையில குட்டீட்டு இப்ப என்ன எனக்கு எதுக்கு இவ்வ ளவு,,,,ன்னு கேட்டமுன்னா ஏங் அழகு தேவதைக்கு வாங்கீட்டுக்குடுக்காம யாருக்கு வாங்கிகுடுக்கப்போறேன் சொல்லுன்னுவாரு,

பதிலுக்கு நான் என்ன அவ்வளவு அழகான்னு கேட்டு மனுப்போட்டமுன்னா ஒங்க மாமகிட்ட இருந்து வர்ற பதிலு என்னைய கெறக்கி கிறுகிறுத்து வேற லெவல்ல கொண்டு போயி வச்சிரும்,என்ன செய்ய பின்ன,,,அன்னைக்கும் அப்பிடித்தான் கேட்டுப்புட்டேன் அவரு தேவதைன்னு சொன்ன வார்தையில மயங்கி/

ஒனக்கென்னடி, அழகுச்சொல்லத்துக்குன்னு கண்ணடிச்சாரு,

ம்,கண்ண நோண்டுனாத்தான் சும்மா இருப்பீங்க போலருக்கு/ கண்ணடிக்கி றேன் காதடிக்கிறேன்னுட்டு,,,,,,தோளுக்கு மேல வளந்து நிக்குற பொட்டப் புள்ளைங் கள வச்சிக்கிட்டுகொஞ்சம் கூட வெக்கம் இல்லாம.ரெண்டும் பாத்துச்சின்னா மானக்கேடு.

”ஆமா இது என்ன புதுப்பழக்கம் வாடி போடின்னு இத்தன வருசத்துல இல் லாத புதுப்பழக்கமா இல்ல இருக்குன்னு சொன்னா,,,, ஆமா புது பழக்கம், பெரிய,,,,,,,,பழக்கம்,ஏதோஏங் வீட்டுக்காரிய அப்பிடி கூப்பிடணுமின்னு தோணி ச்சி கூப்புட்டேன்,இது தப்பா ,நீயி வேணும்ன்னா இதுக்கு இந்திய தண்டனைச் சட்டத்துல ஏதாவது ஒரு பிரிவின் கீழ என்னைய வேணுமுன்னா தண்டிச் சிரேன்”னுவார்.

”ஆமாஒங்கள தண்டிச்சி அந்த மானிக்கி தூக்குல போடப்போறாங்க,என்னமோ ஏன் தலையெழுத்து இப்பிடி ஒரு கிறுக்குப்புடிச்ச மனுசனுக்கு வந்து வாக்கப் பட்டுட்டேன்,ஒங்க வீட்ல இருந்து நாலாவது வீட்ல இருந்த ஒங்களத்தான் கட்டிக்கிறுவேன்னு ஒத்தக்கால்ல நின்னு கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தேன் பாருங்க,அதுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்ன்னு பொய்க்கொபம் காட்டீட்டு மொகத்த ஒரு மாதிரி தூக்கி வச்ச மாதிரி நடிப்பப்போட்டம்ன்னு வச்சிக்க,மனுசன் ஆடிப்போ”வாரு ஆடி/

”அப்புறம் என்ன ஏங்கிட்டயே நடிக்கிற கழுதைன்னு என்னோட நடிப்ப கண்டு பிடிச்சவறா தலையில தூக்கி வச்சிட்டு ஆட ஆரம்பிச்சிருவாரு,,”எனவும் இன் னும் இன்னுமாகவுமாய் அக்கம் பக்கத்து பெண்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அரசல்புரசலாககேட்டிருக்கிறான் கேள்வியும் பட்டிருக்கிறான் மணி,/

சரிதான் இரண்டு பேருக்கும் நடுவிலே இருக்கிற அந்நியோன்யத்திற்கு எதற்கு அனாவசிய தாழ்பாள் எதற்கு என விட்டு விலகிப்போயும் விடுவான்,

மாலா அக்கா அன்று சொன்னபடி இரண்டாவது அல்லது மூன்றாவது கேட் வழியாகச் செல்லலாம்.

கூட்டம் அள்ளிவிடுகிறது,ஒரு பத்து நிமிடம்,வேண்டாம் ஐந்து நிமிடம் போது ம், கேட் மூடி விட்டால் இரண்டு பக்கமுமாய் ஆட்கள் சேர்ந்து விடுகிறார்கள்.

அதிலும் பீக் அவர் என்றால் ஒரே பிக்கலும் பிடுங்கலுமாய்தான்.

கேட் மூடிய இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் வண்டிகள் சேர்ந்து விடும், ஆட்டோக்கள்,இருசக்கரவாகனங்கள் ,சைக்கிள்கள்,பாதசாரிகள் இன்னும் இன்னுமாய் நிறைந்து போனவர்கள் நின்று கொள்வார்கள்,கேட்டின் இந்தப் பக்கம் இருபதிலிருந்து முப்பது வாகனங்கள்,ரோட்டின் அந்தப்பக்கம் முப்பதி லிருந்து இருவது என வாகனங்கள் சேர்ந்துவிடும்.இதில் ஆட்டோ ,கார் ஜீப் எல்லாம் அடக்கம்,

போனவாரம் இப்படித்தான் ஒரு சிவப்புக்கலர் ஜீப் ஒன்று கேட் திறந்து வெகு நேரமாகியும் கூட ஜீப்பை நகட்டவில்லை,யாரும் எது சொன்ன போதும் ஜீப்பின் டிரைவர் கேட்கவில்லை.என்றார்கள்.

திறந்தகேட்திரும்பவுமாய் மூடப்போகிறது கண்டு தூரத்திலிருந்து பார்த்த போது வண்டியில் வந்து கொண்டிருந்த மணிக்குத் தெரிந்தது,

வேகமாகவந்துகேட்டைகடக்கும் பொழுதுதான் இப்படி ஒரு காட்சியை பார்க்க முடிந்தது, கேட்டதற்கு வண்டியை நிறுத்திவிட்டு டிரைவர் உள்ளேதான் இருக் கிறாராம், பெரிய இடத்து வண்டியாம்.சொன்னார்கள் ,சரிதான் இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது பெரிய இடங்கள்,,,,,,,,,,,,,,,,,,,,,,/என நினைத்தவாறே கிளம்பிப்போய் விட்டான்,

இரண்டாவது கேட் என்றால் இன்னும் கூடுதல் வம்பு.இத்தூண்டாக இருக்கும் சின்னத்தெருவை கடந்து போக வேண்டும் வரவேண்டும்,

அப்படியாய் கடக்கிற நேரத்தில் கேட் அடைத்து விட்டால் போதும் அவ்வளவு தான்,கேட்டிற்கு அந்தப்பக்கமும் இந்தப்பக்கமுமாய் குறைந்தது முப்பதிலி ருந்து ஐம்பது இரு சக்கரவாகனமாவது சேர்ந்துவிடும்,கேட்டிற்கு இந்தப்பக்கம் அரைக்கிலோ மீட்டர்,இந்தப்பக்கம் அரைக்கிலோ மீட்டர் வண்டிகள் வரிசை கட்டி சாரைசாரையாய் நிற்கும்.

கேட்திறந்தவுடன் அந்த சாரைகள் வரிசை குலைந்து போகும் போதுஒன்றின் மீதுஒன்றாக முட்டி உராய்ந்து மன மோதல் ஏற்பட்டு நசுங்கிப் போக வேண்டி இருக்கும்.

குட்செட் வழியாகவோ அல்லது பாலத்தின் வழியாக போய் விட்டால் இந்த வம்பு தும்பு எதுவும் கிடையாது,

இதில் பாலத்தின் வழியாகப்போவது சுற்று என நினைத்து பெரும்பாலுமாக இருசக்கரவாகனர்கள் மற்றும் சைக்கிள் வாசிகள் குட்செட் வழியாகத்தான் போவதுண்டு.

போகலாம்பிரச்சனையில்லை.வழியாஅது,ஒரேபிச்சலும்பிராண்டலும் அழுக்கும் தூசியுமாக/

அதிலும் இரண்டு மழை பெய்து விட்டால் போதும்,அடேயப்பா அந்த வழியில் போக முடியாத அளவிற்கு ஒரே துர்நாற்றம் வீசும்.

இந்தா நேற்று இரவு மழை பெய்திருக்கிறது,மாலையில் அலுவலகம் விட்டு வருகிற நேரமாய் சூழ் கொண்டு நின்றது மேகம்,ஆனால் மழை பெய்யவில் லை.

மணி கூட நினைத்தான் ,வீட்டிற்கு போய் விட முடியுமா என,,,,,,/

சின்னவள் சொல்லியிருந்தாள்,வரும்போது இனிப்பு ஏதாவதுவாங்கீட்டுவாங்க என/

அவளது தேவையைக்கூட அதிர்வற்று நோக்கமறிந்து நுட்பமாகக்கேட்பவள், ”என்னப்பா கையில காசு கீசு வச்சிருக்கீங்களா,இல்ல சும்மாதான் டீ சாப்புடுற அளவுக்குத்தான்கையிருப்புஇருக்கா,,,,”என்பதை உறுதிப்படுத்திக் கொள்வாள்,

”கேட்டால்உங்களால்டீசாப்பிடாமல்இருக்கமுடியாதுஎன்கிறீர்கள்அப்பா,உடலின் களைப்பும், மூளையின் களைப்பும் நீங்கள் சாப்பிடும் ஒரு மடக்கு டீயில் போய் விடுவதாய் நினைக்கிறீர்கள்,அல்லது சொல்கிறீர்கள்.

அது சரியா அல்லது தவறா தெரியவில்லை அல்லது விளங்கவில்லை, ஆகவேதான் உங்களிடம் இப்படியெல்லாம் கேட்டுக்கொள்கிறேன்,சரிதானா என்கிற மனப்பேச்சின் ஆரம்பத்துடன் முற்றுகையிட்டு கேட்டுக்கொள்கிறேன் இப்படியெல்லாமும் எனத்தான் ஆரம்பிப்பாள்.

அவள் கேட்ட இனிப்பை வாங்க அன்று கையிருப்பாய் காசு இல்லை, கை இருப்பு இல்லாத சமயங்களில் சாப்பாட்டுப்பையில் எதற்கும் இருக்கட்டும் என வைத்திருக்கிற காசு இருக்கும்,அதுவும் கூட இல்லை அன்று,

இப்படித்தான்கையிருப்பு இல்லை என்றால் என்ன இப்பொழுதுஅதுதான் கைப் பையில் இருக்கிறதே பிக்ஸட் டெபாசிட் போல அதை எடுத்து பயன் படுத்திக் கொள்வோம்என்கிறஉயரியதைரியமனோநிலையில் இருந்து விட்டான். இது நாள் வரை/

அதுவும் இவன் நினைத்தது போலவே காய்கறி வாங்குகிற மற்றும் மற்று மான சமயங்களில் கைகொடுக்கும்.

இவனும் அந்த தைரியத்தில் தான் இதுநாள்வரை நடமாடியும் இருந்திருக்கி றான்,இன்னும்நடமாடிக்கொண்டுமாய்இருக்கிறான்.பொருளாதாரம் ஒரு மன நிமிர்வைதந்துவிடுகிறதுதானே,,,,/என்கிறஅகராதிசுமந்தமனதுசெல்லும் திசை யெல்லாம் ஒருமனநிம்மதி காட்டிச்செல்கிறது.

அப்படியான மனநிம்மதி அம்புக் குறியிடுகிற திசையெல்லாம் சென்று சிறகு விரித்துபறந்து பறந்து தேவையானதை வாங்கிக்கொண்டு திரிபவன்,

இன்று அப்படியாய் பறந்து பறந்து கூட அல்ல நடந்து நடந்து வாங்க முடிய வில்லை.அப்படியான நாட்களில் பெரிதாய் பிரச்சனை ஒன்றும் வந்து விடப் போவதில்லை.இவனுக்குக்கூட கொஞ்சம் தயக்கம் இருக்கும்.அவள் டேக் இட் ஈஸி பாலிசிதான்,அட விடுங்கப்பா,என்ன இப்ப,இன்னைக்குக்கெடைக்காத ஸீவீட்டு நாளைக்குக்கெடைச்சிட்டுப்போகுது.அவ்வளவுதானே,

நீங்க ஒரு வேளை நீங்க நாளைக்கு வாங்கீட்டு வராட்டி கூட நாளைக்கழிச்சி இல்ல அதுக்கடுத்தடுத்து வர்ற நாட்கள்ல வாங்கீட்டு வாங்க,அப்பிடியே மறந் து போயிவாங்கீட்டு வாரலைன்னாக்கூட பிரச்சனையே இல்ல.என்பாள்.

அவள்அப்படிஒன்றும்பெரிதாகஎதற்கும்அடம்பிடிப்பதில்லை,டேக்இட்ஈஸிதான் எல்லாவற்றிலுமே,,,,,,,,,/

ஆமாம் சுடிதார் மெட்டிரியல் வாங்கப் போனயே ஒனக்குப் பிடிச்சிருந்ததா இல்லை வெலக்கொறவா இருக்குன்னு ஒங்க அப்பன் சொன்னதால வாங் கீட்டயாஎனயாரும் கேட்டால் விடுங்க என்ன இப்ப அதுனால எங்கப்பாவுக்கு பிடிக்காமயா இதுவயசுவரை நான் வளந்து நிக்கிறேன்,நான் ஒண்ணு யோசி ப்பேன்,எங்கப்பாவயசுக்குஅவருவேறயோசிப்பாரு எந்த ஒரு விஷயத்துலயும். அது போலத்தான் ட்ரெஸ் விஷயமும்,இப்ப என்ன அப்பாதான எடுத்துக் குடுத் தார்,உடுத்திகிறவேண்டியதுதான,,,?வருசமெல்லாம்மனசுக்குப்பிடிச்சதமட்டும் எடுத்துக் குடுத்துக்கிட்டே இருக்க முடியுமா என்ன?ஒரு தடவையா வது தாய் தகப்பன்எடுத்துக்குடுத்தத,மனசுக்குப்பிடிச்சதாஆக்கிக்கிற வேண்டியதுதான,,? என்பாள்,

அப்படித்தான் ஆக்கியும் கொள்வாள்.அவள் கல்லூரிக்குப்போய் வந்த நாளன் றின் மாலை வீடு அல்லோகல்லபட்டுக்கொண்டிருந்தது,

கல்லூரியில் ஒரு பையன் அவளது அழகி ரசித்து வர்ணித்து விட்டானாம். வீட்டில் ஆளாளாக்கு ஒருபக்கமாக கம்பில்லாமல் சிலம்பு சுற்றிக் கொண்டி ருந்தார்கள்.

கால் மணி அரை மணி எனபேசாமல் இருந்து பார்த்த அவள் பேசாம விடுங் கப்பா,,வர்ணிக்கிற ஒடம்ப தாங்குன வயசு எனக்கு/ வர்ணிக்கிற வயச உட் கொண்டஒடம்பு அவன் வயசு/

இதுல எங்கிட்டு இருந்து அவன் பேசுனதுல பெருசா ஏங் மானத்துக்கு பங்கம் வந்துருச்சி,விடுங்கப்பா பேசாம,,,,,என்றாள்,அப்படி சொன்ன அன்றுக்கு பின்னா டியாய் இன்று வரை அவள் எந்த வம்பும் இல்லாமல் கல்லூரிக்குப்போய் வந்து கொண்டுதான் இருந்தாள்.

அப்படிப்போய் வந்தமழை நாளன்றின் மாலை வேளையில் அவளது அப்பா டீக்கடைக்குப்போய்வந்துகொண்டிருந்தவேளையில்கல்லூரியில்வம்புகட்டிய இளைஞன் அவளது அப்பாவைப்(இவனை) பார்த்து மன்னிப்புக் கேட்டுக் கொண் டிருந்திருக்கிறான்.

கல்லூரியில் தங்களது மகளிடம் அப்படி நடந்து கொண்டதற்காக.என,அவளது அப்பாவும்(இவனும்) பெரிதாக ஒன்றும் சொல்லாமல் ஒனக்கு ஒரு தங்கச்சி இருந்து ஏங் மக வயசுல ஒரு மகன் இருந்து இந்த மாதிரி நடந்திருந்திருச்சி ன்னுவையி,என்னசெய்வநீயி,அதேதான் நானும் செஞ்சேன்,தப்பா என்றான்,

அதற்கு அவன் அய்யோ சார்,பெரிதாக அந்த அளவிற்கெல்லாம் யோசிக்க வேண்டாம்.சொல்லத்தோணுச்சிநல்லாஇருந்தயின்னுசொன்னேன்,சொன்னது தப்புன்னு ஒங்க வீடே பீல் பண்ணுனதா ஒங்க மக வந்து சொன் னா ங்க, அன் னைக்கிலயிருந்து ஒங்கள தேடி வந்து மன்னிப்புக் கேக்க ணுன்னு நெனை ச் சிக்கிருந்தேன்,கேட்டுட்டேன். வர்றேன் சார்,என திரும்பிப் பார்க்காமல் போய் விட்டான்.

அதை மகளிடம் வந்து இவன் சொன்ன போது அட ஏம்பா இன்னுமாஅத மறக்கல நீங்க,நான் மறந்து எத்தன நாளாச்சி,ஓடுற ஓட்டத்துல இதெல்லாம் கரைஞ்சி போகக்கூடிய விஷயம்ப்பா,இதபோயி பெருசா எடுத்துக்கிட்டு,,,,,,,,,,?

நாங்க ஓடிக்கிட்டே இருக்கோம்,நீங்க ஒக்காந்துக்கிட்டே இருக்கீங்க, அதுனா லயே ஒங்களுக்கு இதெல்லாம் பெரிசா தெரியுது என்றாள்.

அவளின் அந்தப் பேச்சு வீட்டில் நிலை கொண்ட நாளிலும் சரி அது அல்லா மல் சாதாரணமாக வீடு இருந்த நாட்களிலும் சரி,இயல்பாகவே இருந்தாள் அவள்.

அப்படியாய் இயல்பு சுமந்து இருந்த நாட்களில் இருந்த வீடு மிகவும் நிம்மதி பட்டே/

அந்த நிம்மதியை கடத்திவிட்டு அடுத்த தெருவிலிருக்கிற மாலா அக்காவை வாரம் ஒருமுறையாவது போய் பார்த்து விட்டு வந்துவிடுவாள் மணியின் மகள்/

6 comments:

 1. தொடரட்டும் நினைவுகள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் மது சார்,
   நன்றியும் அன்பும்/

   Delete
 2. Replies
  1. அன்பும் நன்றியும்!

   Delete
 3. வணக்கம் நண்பரே
  உங்களுடைய பதிவு மிகவும் அருமை தொடரட்டும் உங்களுடைய இந்த பயணம்
  வாழ்த்துக்கள்
  discount coupons

  ReplyDelete
  Replies
  1. நன்றியும் அன்புமாய்,,,/

   Delete