18 Jun 2017

மண்ணின் விதையொன்று,,,,,,,



மண் கீறி முளைத்த செடியொன்று
துளிர்த்த நாளில் ரத்தமும் சதையுமாய்
ஜனித்த அவன்
ஆஸ்பத்திரியில் சிறு குழந்தையாய்
வீட்டில் ஒரு நல்ல மகனாய்
பள்ளியில் மாணவனாய்
வெளியுலகில் இளைஞனாய்
கல்லூரியிலும், பல்கலைக்கழகத்திலும்
இளங்கலை மற்றும் முதுகலையில்
பட்டம் பெற்றவனாய்
வேலையில் ஒரு அரசாங்க காரியஸ்தனாய்
தனியார் நிறுவன ஊழியராய்
தொழில்க்காரராய்,வியாபாரியாய்
எல்லையில் தீரமுடன் நிற்கும்
பாதுகாப்புப்படை வீரராய்,,,,,,,,
இன்னும் இன்னுமாய்
நிறைந்து போயிருக்கிறவைகளில்
தன்னை தக்க வைத்துகொண்டு
குடும்ப வாழ்க்கையில்
ஆண் ஒன்றும், பெண் ஒன்றுமான

மகவுகளுக்கு தந்தையாய் ஆகி நிற்கிற
அனைவருக்கும் தந்தையர் தின நல் வாழ்த்துக்கள்
கூடவே தந்தையர் தினம் பற்றிய
எந்த அறிதலும் இன்றி
தான் பிறப்பெடுத்தே
உழைத்து வாழ்வதற்கு மட்டுமே
என தனது உடலோடும் உணர்வோடும்
உழைப்பை சேர்த்துத்தைத்துக்கொண்டு
தனது குடும்பத்திற்காய்
உதிரத்தை வேர்வையாய் சிந்தி உழைக்கிற
தகப்பனார்களுக்கும் சேர்த்தே
தந்தையர் தின நல் வாழ்த்துக்கள்/

6 comments:

KILLERGEE Devakottai said...

அருமை தந்தையர் தின வாழ்த்துகள் நண்பரே
த.ம.1

கரந்தை ஜெயக்குமார் said...

தந்தையர் தின வாழ்த்துக்கள்நண்பரே
தம2

vimalanperali said...

நன்றியும் அன்புமான தந்தையர் தினம்.
நன்றி வருகைக்கு/

vimalanperali said...

நன்றி சார் வருகைக்கு,
வாழ்த்துக்கள் தந்தையர் தினம்
சுமந்த நினைவுகளுக்கு/

கவிஞர்.த.ரூபன் said...

.வணக்கம்
இனிய தந்தையர் தின நல் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

vimalanperali said...

வணகம் சார்,நன்றி வாழ்த்திற்கு/