9 Jul 2017

எறும்பு ஊறும் பாதை,,,,,


சென்றுகொண்டிருந்தஇரு சக்கர வாகனத்தின்
அடியில் நகர்ந்த இடம் கறுப்புக் கலர் சாயம்
பூசிக்கொண்ட தார்ச்சாலையாய் இருக்கிறது,
விரித்த வைத்த கறுப்புப்போர்வையாய் தோற்றமளித்த
சாலையில் அங்கங்கே குண்டும் குழியுமாய்
ரோடு பெயர்ந்து போயுமாய் காணப்பட்டது,
காணப்படுகிற சாலை காட்சிப்பட்ட நேரத்தில்
உங்களுக்கும் எனக்குமாய் யாருக்குமாய்
சொந்த மற்றும் நம் அனுபதியில்லாமல்
நம் வீட்டிற்குள் நுழைந்து உரிமையுடன்
ஊர்ந்து திரிகிற எறும்புகள் இரண்டு
தோள் மேல் கால் போட்டு
பேசிகொண்டும் சிரித்துக்கொண்டுமாய் நகர்கின்றன,
 கண்களில் காதல் தேக்கி
சாலையில் வருகிற இரு சக்கர வாகனங்களுக்கும்
பாதசாரிகளுக்கும் வழிவிட்டும்
அவர்கள் செல்கிற வேலையை முன் மொழிந்துமாய்,,,/

              ****************************


சற்றே நேரம் பிடிக்கலாம்பஜார் சென்று வர,
அங்கு எனக்கெனகாத்தும்கை கோர்த்துமாய்
இருக்கிற பிரத்யோக வேலைகள் தவிர்த்து
எனக்கே எனக்கென காத்திருக்கிற நண்பர்கள் 
 சிலரை சந்திக்க வேண்டும்,பேச வேண்டும்  
மனம் விட்டும்,மனம் அவிழ்த்துமாய்,
தவிர்த்து எனக்கென காத்திருக்கிற நண்பர்களில்  
ஒருவனது குடும்பத்திற்கு தேவையான பலசரக்கு 
மற்றும் அரிசி பருப்புகளை வாங்கித்தரப்போகிறோம்,  
நண்பர்கள் அனைவருமாய் சேர்ந்து/
சென்ற மாதம்தான் அவனது தந்தை இறந்து போனாராம்/

                                  **********************

போட்டுக்கொடுத்ததேநீரின் சுவை
நன்றாக இருக்கிறது.
நாவின் சுவையறும்புகள் தோறுமாய்
பட்டுப்படர்ந்து உள்ளின் உள்ளே சென்று
ஏதோ செய்கிறது.
தேநீர் குடிக்கும் ஆசையை சற்றே கூட்டி விட்டும்
அதன் சுவைகளை முன் அறிவித்துச்செல்வதுமாய் இருக்கிறது,
ஆகவே இன்னும் சிறிது கிடைக்குமா தேநீர் எனக்கேட்ட பொழுது
சற்றே பொருங்கள் கை வேலையை முடித்து விட்டு போட்டுத்தருகிறேன்
என சமையலறையில் இருந்து சொன்ன மனைவியின் குரலை மாடிப்படியிலிந்து எதிர் கொள்கிறான் கணவன்/

                         *************************

முடியாது அவ்வளவு எளிதில்லை இந்த வேலை
என நினைத்ததை வெகு எளிதில்
செய்து கொடுத்தவன் மீது
ஏற்பட்ட மரியாதை சராசரியை விட்டு
சற்று கூடுதலாகவே/

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தேநீரின் சுவை போல அருமை...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும் கருத்து்ரைகுமாக/

M0HAM3D said...

அருமை...

vimalanperali said...

வணக்கம் முகமது அல்தாப் சார்,
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/