26 Aug 2017

கிராதிப்பூக்கள்,,,,

 
வீடு தாண்டிப்போகும் போது நிலை வாசல் கேட்டின் ஓரமாய் இடித்து விடுகி றது.

இடித்து விட்ட கை வலதுகையாய்ப்போகிறது.டாக்டர் சொல்லியிருந்தார் கை வலி எனப்போனபோது,கொஞ்சம் கவனமாக இருங்கள்,முக்கியமாக கிராதி வைத்தஇரும்பு கேட்டை கடக்கையில் கொஞ்சம் பார்த்து,,,/

கேட்டைகடக்கையில் கூட ஒன்றும் இல்லை சார்,மனிதர்களைக்கடைக்கை யில் வேலை நேரத்தில் வேகமெடுத்து விடுகிற கை வேலைகளை இழுத்துப்போட்டு செய்து விட்டு அப்புறம் கை வலி கால் வலி என இழுத்து வைத்துக்கொண்டு வந்து நின்றால் என வைகிறார் டாக்டர்,

என்ன செய்யச்சொல்றீங்க சார்,காக்காவலிப்புக்காரனுக்கு கையில இரும்பக் குடுத்தாத்தான் நிக்கும்ங்குறது மாதிரி எனக்கு வேலைக்குப்போற யெடத்துல்க அப்பிடி பரபரப்பாவும் வேகமாவும் இருந்தாத்தான் வேலை செஞ்சது போல இருக்கு,நான் என்ன செய்யட்டும் சார்,இது மாதிரியான வேகம் நிக்கிறதுக்கு வேணுமுன்னா ஏதாவது மருந்து மாயம் இருந்தாக்குடுங்க என்றபோது சார் சும்மாயிருங்க நாட்டுல தன்னால ஒங்க வயசுல வேகம் இல்லைன்னு சொல் லி ஏங்கிட்ட வர்றவங்க வேகம் வேணும்ன்னு ஏங்கிட்ட மருந்து வாங்க வர்றாங்க,நீங்க என்னடான்னா இருக்குறத வேணாம்ன்னு சொல்லி மருந்து மாயம் வேணாம்ன்னு சொல்லி வந்து நிக்கிறீங்க,,,/

அதெல்லாம் வேணாம் மொதல்ல இந்த யெடத்தவிட்டுகெளம்புங்க,வேகம் ஒங்களோடயேஇருக்கட்டும்,நிதானமானவுங்கஏங்கிட்டவந்துவேகம் வேணும் வேகம் வேணுமின்னு மருந்து மாயம் வாங்கீட்டுப்போகட்டும்,

தானா வாய்ச்ச வரப்பிரசாதத்த கைவிட்டுறாதீங்க,என்று சொல்லியவராய் அனுப்பி வைத்த டாக்டர் இவன் ஆஸ்பத்திரியை விட்டு கடக்கையில் டாக்டர் சொன்னார்,

சார் ஒங்களுக்கு இந்த பேண்டும் சர்ட்டும் நல்லாயிருக்கு சார்,என/ பிரவ்ன்க் கலர் பேண்ட்டும் வெள்ளை சட்டையும் அணிந்திருந்தான்.

அணிந்திருந்த சட்டை ரெடிமேடாகவும் பேண்ட் தைத்துபோட்டதாகவுமாய் இருக்கிறது,முன்பெல்லாம் அளவு கரெக்ட் கச்சிதம்,,,என தைத்த துணிகளில் ரகம் பார்ப்பவன் இப்பொழுதெல்லாம் தைத்து வந்தவுடன் போடுவதற்கு சரியாக இருக்கிறதா போதும் என விட்டு விடுகிறான்,கரெக்ட்டும் கச்சிதமும் ரெடிமேட் சர்ட்டுகளில் இல்லாதபோதும் அமையாத போதும் கூட அட்ஜெஸ்ட் செய்து அணிந்து கொள்கிறான்,

அந்த அட்ஜெஸ்ட்டே இவனது ஆடை டேஸ்டை மாற்றி இருக்கிறது போலும், முன்பெல்லாம் கறுப்புக்கலர் பேண்ட்,அதற்கு மேட்சிங் அற்று ஏதோ ஒரு கலரில் ஒரு சட்டை,இதுதான் இவனது உடை நாகரீகமாக இருந்தது,அதிலும் டீ சர்ட் என்றால் கொஞ்சம் விருப்பம் அதிகம்.டீ சர்ட் தேடி பைத்தியமாக அலைவான்,ஊர் காட்டில் இருக்கிற கடைகள் எங்குமாய்.

அப்பொழுதெல்லாம் கடன் வைத்து துணி எடுக்கிற அளவிற்கு பழக்கம் கிடை யாது.பஜார்ப்பக்கமாய் போகிற போது பார்த்து வைத்துக்கொள்வான், அடுத்த மாதம் சம்பளம் வாங்கியதும் போய் முதல் அல்லது கொஞ்சம் தாமதமாக வேனும் வாங்கிக் கொள்வான்.

அப்பொழுதெல்லாம் கட்டம் போட்ட சட்டை மீதும் ப்ளைன் பேண்ட் துணி போடப்பிடிக்காது,இப்பொழுது அது போலான துணிகள் மிகவும் பிடிக்கிறது.

ஆனால் போடுவதற்கும் வாங்குவதற்குமாய் கொஞ்சம் கால தாமதம் ஆகிப் போகிறது.

அதற்குள்ளாய் வேறொரு டிசைன் வந்து விடுகிறது,இருந்தாலும் இவனுக்கு கட்டம் போட்ட சட்டை மீது இவனுக்கு மேகம் குறைந்த பாடாய் இல்லை.

செல்கிற வேலையின் அவசரம் கருதி நடையையோ ,நடை வாசலில் இருக் கிற கேட்டையோ அல்லது எதிர்ப்படுகிற மனிதர்களையோ இடித்து விடுகிறது போல் செல்ல வேண்டாம்,அது உங்களுக்கும் உங்களைச்சார்ந்திருக்கிற மற்ற வர்களுக்கும்உறவுகளுக்கும்நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் நல்லதில்லை. எச்சாரிக்கை என்றிருந்தார் டாக்டர்.

வீட்டில் கூட சொன்னார்கள்,ஏன் இப்பிடி மடமடன்னு திரியிறீங்க,பரபரப்பா திரியாம மெல்ல நிதானமா சூதானமா போனாத்தான் என்னவாம்,

அவர்கள் சொல்கிற நிதானமும் சூதானமும் வேறு வேறு பட்டதாய் தெரிகிற து.

அந்த வேறு படல்களில் இவன் எப்பொழுதும் எச்சரிக்கையாகவே இருக்கிறா ன், ஆனாலும் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

வாஸ்தவம்தான் கொடுத்த எச்சரிகையை மீறிச் செல்கிற போது ஏதாவது இது போல் நடந்து விடுகிறதுதான், கடந்து போன வாரத்தின் ஒரு நாளில் அலுவல கத்தில் ஏதோ ஒரு வேலையின் காரணமாக வேகம் காட்டி சென்ற போது எதிர்த்தாற்போல் வந்த உயர் அதிகாரியின் மீது இடித்து விடத் தெரிந் தான்,

அவர் கூட பின்னால் ஒரு அலுவலக ஊழியரிடம் சொன்னதாக சொன்னார் கள்,ரொம்பவும்தான்வேகமாகஇருக்குறாருஎன/இதுதான்எனதுமைனஸாகவும் பிளஸாகவும் இருக்கிறது என்றான்,அப்படிச் சொன்ன நபரிடம்/

சரி விடுங்க அப்பிடித்தான் பிளஸ் மைனஸ் கலந்ததுதானே வாழ்க்கை,அதில் அடுத்தவர் விருப்பம் பார்த்தோ நாம் நடந்து கொள்ள முடியாது.பார்ப்போம் இருக்கும் வரையும் ஓடும் வரையுமாய். இருக்கும் வரையுமாய்ஆடிஅசைந்து கூட ஜீவிதம் செய்து கொள்ளலாம்,ஆனால் ஓடும் வரை வேகம் காட்டித் தான் ஆக வேண்டி இருக்கிறது என அந்த நண்பரிடம் சொன்ன போது சரி அப்படியே செய்து கொள்ளுங்கள்,

ஆனால் காட்டுகிற வேகத்தில் எதிர் வருகிற எங்களை கீழே தள்ளி மென்னி யில் ஏறி மிதித்துவிட்டு சென்று விடாதீர்கள்.என்ற போது ஐய்யையோ அப்படியெல்லாம் ஆசை இல்லை சார் எனக்கு,என் பணி சுமந்த அவசரம் அப்படி,அதனால் ஓடுகிறேன்,இல்லையெனில் அப்படியெல்லாம் போக வேண் டிய அவசியம் எனக்கு இருக்காது என நினைக்கிறேன் என்ற போது சொன் னவர் சிரித்தார் இவனது தோள் தட்டி/

நேற்றைக்கு முன் தினம் அலுவலகம் வந்திருந்த வாடிக்கையாளர் சொன்னார் ரொம்ப வேகமா இருக்கீங்களே சார் என,

ஆமாம் எங்களை நம்பி வருகிற உங்களை விரைவில் உங்களது பணி முடித் து அனுப்புவது எங்களது கடமை, தவிர இந்த இடத்தில் அமர்ந்து கொண்டு டல்லாகவும் சோம்பேறித்தனம் பூசியும் அமர்ந்திருந்தேனானால் என்னைப் பார்க்கிறவர்களுக்கும்அலுவலகத்திற்குவருகிறவாடிக்கையாளர்களுக்குமாய் மனம் சூம்பிப்போகக்கூடும்,ஆகவே பிடிக்கிறதோ இல்லையோ இது போல் நடந்துகொள்ளபழகிவிட்டேன்எனஅவரிடம்சொன்ன போது உண்மையிலேயே உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட் சார்,எனச்சொல்லி விட்டுப்போனார்,

பச்சை நிறம் வைத்த இரு சக்கர வாகனத்தை நிறுத்துகிற இடத்தில் நின்றி ருந்த கொன்றை மரத்தில் பூத்து அடர்ந்திருந்த பூக்களை சுமந்திருந்த மரம் அந்த இடத்திற்கு அந்நியபட்டுத்தெரிந்ததாய்/

வண்டியை நிறுத்துகிற போதெல்லாம் மெலிதாக அடிக்கிறமூத்தி நாற்றத்தை தாங்கிக்கொண்டுதான் நிறுத்திவிட்டுவரவேண்டியதாய் இருக்கிறது,

அலுவலகத்திற்கு பக்கத்தில் இருக்கிற அந்த சந்தும் சந்தில் நிலை கொண்டி ருக்கிற பூக்கள் சுமந்த கொன்றை மரமும் அந்த இடத்திற்கு அந்நியப்பட்டுத் தெரிந்ததாக/

வாங்கம்மா நல்லா இருக்கீங்களா என்பதே மாதம் முதல் இரண்டு நாட்களுக் குள்ளாக அலுவலகத்திற்குவருகிற அந்த அம்மாவிடம் இவன் முன் வைக்கிற பேச்சாக இருக் கும்,வாங்கம்மாஎப்பிடியிருக்கீங்க ,நல்லாயிருக்கீங்களா, வீட்லஎல்லாரும் எப்பிடியிருக்காங்க,,,,?

நல்லாயிருக்காங்கதம்பி,அய்யாவுக்குதோட்டம்காட்டகட்டிக்கிட்டுபொறழவே நேரம்சரியாஇருக்கு,வாங்க ஒரு நா ஒரு பொழுதாவது ஆபீஸ் பக்கமா போயி ட்டு வருவோன்னு சொன்னா கேக்க மாட்டேங்குறாரு,வேணாம் அதுக்குதான் நீயி இருக்கயில்லன்னு என்னைய ஒதுக்கி விட்டுருறாரு,சும்மா சொல்லக் கூடாது அவரையும், எந்த ஜென்மத்துல என்ன புண்ணியம் பண்ணுனேனோ நான்அவருக்குபொண்டாட்டியாவாச்சதுக்கு/என்னையபொண்ணுபோலபாத்துக் கிறாரு,இந்தஅம்பத்துசொச்ச வயசுல பெரிசா எங்களுக்குள்ளஒண்ணும் கருத்து வேறுபாடோ சண்டையோ வந்ததில்ல,ஏதோ சின்ன சின்னதா அப்பப்ப வர்றது தானே தவிர்த்து பெரிசா ஒண்ணும் இல்ல இது நாள் வரைக்கும் எனச் சொல் பவர் ஏன் ஒத்தையில வராட்டி புள்ளைங்க யாரையாவது கூட கூட்டிக் கிட்டு வரவேண்டியதுதானே என்கிற கேள்விக்கு,,,இல்லைய்யா,,,,,, புள்ளைங்க யாரும் இங்க பக்கத்துலஇல்ல,எல்லாம்தூரத்துலஇருக்காங்க

ஒருத்தன்பெங்களூர்லவேலையாஇருக்கான்,அவன் குடும்பம் புள்ளைங்கன்னு ஆகிப்போச்சி, பொண்ணு உள்ளூர்லயே கட்டிக்குடுத்துருக்கேன்,அவளையும் சும்மாசொல்லக்கூடாது,அம்மாவுக்குஒண்ணுன்னாதுடிச்சிப்போவா துடிச்சி,,,,,,

ஆனாலும் பொழப்ப போட்டுட்டு வர முடியாது,அவளுக்கும் குடும்பம் குட்டி ன்னு ஆகிப்போச்சி, எதுக்குப்போட்டுக்கிட்டு அவள வம்பா இழுத்துக்கிட்டு, எதுக்குஅனாவசியமாஅவுங்களப்போயிக்கிட்டு,,,,,நம்மளாலமுடிஞ்சஅளவுக்கு ஓடுவம்யா,,,முடியா தப்ப வந்து படுத்துக்கிருவோம்,புள்ளைங்க மனசு வந்து பாத்தா பாக்கட்டும், இல்லைன்னா அனாதையா தெருவுல கெடப்போம் என்ன இப்போ என்பார்,

இல்லாம்மா அப்பிடியெல்லாம் சொல்லாதீங்கம்மா புள்ளைங்க அப்பிடி ஒண் ணும்கடினமனசோடஇருந்துறப்போறதில்ல,அவுங்கசூழ்நெல,அப்பிடி இருக்கச் சொல்லுது அவுங்கள,சில நேரம் வந்து உதவி பண்ணனும்ன்னு நெனச்சாலும் செய்ய முடியாமப்போகும்,சில நேரம் செய்யணும்ன்னு நெனச்சி வருவாங்க, இங்கன ஏதாவது முட்டுக்கட்டையா இருக்கும் மனசளவுலயோ,இல்ல நடப்பு லயோ,,என இவன் சொன்னதும் என்ன தம்பி பெரிசா,மனசு நடப்புன்னுக்கிட்டு, என்னமோ,எல்லாம் வந்துக்கிறவள்க பண்ணுற வேல,

அப்பிடியெல்லாம்சொல்லாதீங்கம்மா,பாவம்அவுங்கசூழ்நிலைஅங்கஎப்பிடியோ, தெரியலையில்லம் மா பாவம்,நீங்க தூரத்துலயிருந்து பாக்குறீங்க,பக்கத்துல போயிபாத்தாத்தான்கஷ்டம் தெரியும்,ரெண்டாவது ஒங்க வயசு வேற ,அவுங்க வயசு வேற, எதையும் சீர்தூக்கிப்பாக்குற மனசு ஒங்களுக்கு இந்த வயசுலயும் ஒங்க அனுபவத்துலயும் கெடச்சிருக்கும்மா,ஆனா அவுங்களுக்கு அதுகெடை க்க இன்னும் லேட்டாகலாம்.அதுவரைக்கும் கொஞ்சம் அப்பிடி இப்பிடித்தான் இருக்கும்.பொறுத்துக்கங்க,அவுங்கஎன்ன வருசமெல்லாமும் இப்பிடியா இருந் துறப்போறாங்க,

கவலைப்படாதீங்கரொம்பத்தானா,நீங்கஒங்கயெளம்பிராயத்துலஎப்பிடிஇருந்து
ருப்பீங்க, நாங்களெல்லாம் செய்யிறத விட இன்னும் ரெண்டு மடங்கா இல்ல செஞ்சிருப்பீங்க,இதுலஎங்களப்பத்துன குற்றச்சாட்டுவேற.எனச்சொன்னவனா ய் இன்னும் இன்னுமாய் கொஞ்சம் பேசி விட்டு அனுப்பி வைப்பான் அந்த அம்மாவை/

அந்தம்மாவும் இவனது சொல்லை தட்டாமல் ஏறுக்கொண்டு போய் விடுவார்/

கறுப்புகலர் வைத்து கிராதி போட்ட இரும்பு கேட்,கீழிருந்து கூஜா செய்து பூக்களை வளைய விட்டிருந்தார்கள்.வளர்ந்து நின்ற பூக்கள் எல்லாம் ஒரே டிசைனில் கலர் தரித்து காணப்பட்டதாக/

பூத்திருந்தபூக்களிள்யாவும்ஒன்றின்மீதுஒன்றுஇடித்துவிடாமலும்இடைவெளி விட்டுமாய்காணப்பட்டது.இப்படியாய் ஒன்று போல் ஒன்றன் மீது ஒன்று மோதி சேதப்பட்டுவிடாமலும் மிகையில்லாமலுமாய் தூக்கி வைத்து இந்தப் பூக்களை இங்கு இந்த கேட்டின் சட்டகத்திற்குள் பதியனிட்டு வளர்த்தது யார், என்கிற ஆச்சரியம் கேட்டை கடக்கிற பொழுதெல்லாம் இவனுள்ளாய் பட்டு எழாமல் இல்லை.

இடித்தவலது கையை விடவும் கேட் எழுப்பிய சப்தம் கொஞ்சம் பெரிதாகவே/ வலது கையில் இருக்கிற வலி எப்பொழுதும் போல் கேட்டில் இடித்த போதும் வலிக்கத்தான் செய்தது.புஜத்திலிருந்து புறப்பட்டு கையின் நடுவாந்திரமாய் அடைகொண்டு கைபூராவுமாய் பரவி நிற்கிற வலியாய் இருந்தது.

வீட்டை தாண்டிப்போகும் போது நிலைவாசல் கேட் இடித்து விடுகிறது.

No comments: