1 Oct 2017

தெடகால் அரிசி,,,,,,


அரிசி வாங்கச்சென்ற கடையில் பருப்பு இல்லை,

அவர்தனியாகஅரிசிக்கடைமட்டுமேவைத்திருந்தார்,டவுனுக்குப்போகிறவழியில் இருக்கிற பால் பண்ணை அருகில்.

அரிக்கடை பக்கத்தில் பால் பண்ணை ஏதோ ஒரு குறியீடு என்பான் இவன் கடைக்காரரிடம்.

பாலைக் காய்ச்சி டீப்போடுவதிலிருந்து சாப்பாடு வெந்து விட்டது என குக்கர் விசில் சொல்வது வரை அடுப்படியில் பால் மணமும் அரிசியின் துணிஅயும் கை கோர்த்துக்கொண்டதாய் காணப்படுகிறது என்பதுதான் அது.

பால் பண்னை திறக்கிற நேரமாய் அரிசிக்கடை திறக்க முடியாது என்றாலும் கூட காலையில் ஆறு மணிக்கு கடையை திறந்து விடுவார் கடைக்காரர்,

பால்வாங்குபவர்கள் ஒரு கிலோ அரைக்கிலோ என தேவைக்கு அரிசி வாங்கிப் போவார்கள்தானே,,,? என்பார் கடைக்காரர்/

அதெப்பிடிஉங்களுக்குதெரியும்அந்நேரம்வீட்டுக்கு அரிசி வாங்குவாங்கன்னு,,, ,, எனக்கேட்டால் எல்லாம் நம்ப வீட்டுல இந்நேரம் அரிசி இல்லைன்னா என்ன செய்வோம்னு யோசிச்சதோட விளைவுதான் என்பார்.

தவுரஎல்லாராலையும்மாசம்பொறந்தஒடனேமொத்தமாஅரிசி வாங்கிப் போட  முடியாது.எனவுமாய் சொல்வார்.

வீட்டிற்கு அரிசி வேண்டும் என நினைத்தால் போதும் மனதில் நினைத்ததை கரெக்டாக கண்டு பிடித்தவர் போல இதோ கொண்டு வந்து விடுகிறேன் என்பார்,

சொல்லில் மட்டும் அல்ல அந்த கொண்டு வந்து விடுகிறேன் செயலிலும் இருக்கும்.

அவர் அப்படிச்சொன்ன அரை அல்லது ஒரு மணி நேரத்தில் அரிசி மூடை வந்து இறங்கி விடும் வீட்டிற்கு/

”எப்பிடிண்ணே இப்பிடியெல்லாம்,,,,,,என்றால் சில பேரு நான் கொண்டு போற அரிசிய வச்சிதான் சோறே பொங்குறாங்க,குக்கர அடுப்புல வச்சிட்டு போன் பண்றபலபேருஇருக்குறாங்க,அவுங்கநெனைப்புக்கும்அவசரத்துக்கும்தகுந்தாப் புல நான் அரிசி கொண்டு போகலைன்னா போச்சி,அன்னக்கில இருந்து அந்த வீட்டுக்கு அரிசி போடுறத நான் மறந்துற வேண்டியதுதா,எந்த ஒரு வேலை யையும் தொழிலையும் எடுத்துக்கிட்டாலும்போட்டிக்குரெடியா பத்து பேரு காத்துக்கிட்டு நிக்குறாங்க,

”என்ன ஒண்ணு காத்துக்கிட்டு இருக்குற பத்து பேரும் ஞாயமா தொழில் பண்ணுறதில்லை,பிளாக்குலடிக்கெட்விக்கிறமனோநிலையிலையேதொழிலப் பண்ணுறது,பண்ணுறதொழிலுக்கு விசுவாசமா இருக்குறதில்ல,எதோ வேஷம் கட்டுனவன்கணக்காதொழில்லவந்து நடிக்கிற போது வெளிறிப் போயிருறான், பின்னஎன்னபண்ணுவான்,ஆட்டோமேட்டிக்கா வெளிய போயிருறான் தோத்துப் போயி.,

”இதுஇல்லாம வந்து நின்ன பத்துப்பேருல ஜெயிச்சி நின்னுருறான் பாருங்க ரெண்டுபேருஅவுங்க நம்ம யேவாரத்த காலி பண்ணாட்டிக்கூட நம்ம யெடத்த நோக்கிவந்துர்றாங்க,

“அப்பிடிநம்மகஷ்டமர்கள்ல ஒன்னு ரெண்டுபேரு அங்கிட்டு சாய்ஞ்சிருறாங்க, இலவசம்,ஒரு மூடை அரிசிக்கு பிரியாணி அரிசி இலவசம், ஒரு சிப்பம் அரிசிக்கு பாசுமதி அரிசின்னு யெறங்கி வேலை செய்யும் போது ஜனம்ஒன்னு ரெண்டு அங்கிட்டு போறதுல ஆச்சரியம் இல்லை,என்ன அப்பிடி போன ஜனத்துக்கு அவன் குடுக்குற இலவசத்துக்கு காசு வச்சிறான்ங்குறது கொஞ்ச நாள் கழிச்சிதான் தெரியுது,

“அப்படி தெரியிறப்ப அவுங்களால அவன வுட்டு கழண்டு வர முடியிறதில்ல, ஏன்னாஅவங்கிட்டகடன் வாங்கி வச்சிருக்குறாங்க,என்ன செய்ய பின்ன மொத மாசம் வாங்குன அரிசிக்கு கடன் தீருறதுக்குள்ளஅடுத்த மாசம் கொண்டு வந்துகுடுத்துர்றான்,அதுஅடுத்த மாசம்,அடுத்த மாசம்ன்னு அப்பிடி அப்பிடியே சேந்து போகுது.பின்ன என்ன செய்யும்,,,, அவங்கிட்ட போன ஜனம் திரும்ப நம்பள மாதிரி ஆள்ககிட்ட வர பிரியப்பட்டாலும் முடியாம போகுது,

“இதுல ரெண்டு பேரு வந்து அவங்ககிட்ட இவ்வளவு கடன் இருக்கு,நீங்க அந்த காசக்குடுத்தீங்கன்னா அவங்ககிட்டகுடுத்துட்டுஒங்ககிட்டயே நெரந்தமா அரசி வாங்க வந்துர்றேன்னுவாங்க,நாந்தான் அப்பிடியெல்லாம்வேணாம், இனி மேலாவது நெரந்தரமா ஒரு யெடத்துல யேவாரம் பண்ணுங்கன்னு சொல்லி
அனுப்பீருவேன்.

“இதகேள்விப்பட்டசம்பந்தபட்ட கடைக்காரங்க ஐயா சாமி நல்ல வேளை செஞ் சீங்கன்னு சொல்லீட்டு வருவாங்க, சரிதான்னு நானும் சிரிச்சிக்கிட்டு ரெண்டு பேச்ச பேசி அனுப்பி வைப்பேன்.

”ஏன்னா நாளைக்கி எனக்கும் அந்த நெலமை வரலாம் பாருங்க, அதுக்காகத் தான்மனசுக்குபுடிக்குதோபுடிக்கலையோ அப்பிடி பேசுறது.பின்ன என்ன செய்ய சொல்லுங்கஅதுக்காவும்நம்மபொழப்பநெலைநிறுக்கிறதுக்காவும்தான்இப்பிடி எல்லாம் செஞ்சிக்கிற வேண்டியதிருக்கு.

“அதுலஒரு வேலையாதான் நாங்க வீடுகளுக்கு கொண்டு போயி அரிசி போடு றதும் நீங்க மனசுல நினைச்ச ஒடனே வந்து நிக்குறதும்ன்னு சொல்றேன்” என்பார் அரிசிக்கடைக்காரர்,

இவர் சொல்வது சரிதான் என வைத்துக்கொண்டாலும் பிடிபடாத ஒன்றாய் இருக்கிறது.

அப்பொழுது இவன் மாவட்டத்தின் கடை நிலை கிராமம் ஒன்றில் அரசாங்க ஊழியனாய் பணி புரிந்து கொண்டிருந்த சமயங்களில் அரிசி வீட்டிற்கு அரிசி வாங்கிச் செல்வதென்பதுஒரு பெரும் பிரச்சனையாகவே இருந்து வந்துள்ளது,

அரசாங்க ஊழியன் என்றால் சாதாரணமா என்ன, குடியிருந்த கிராமத்தில் அன்றாடம் சென்று வருகிற கடைக்காரர் ஒரு வீவு நாளன்றின் மதியமாய் இவனது வீடு தேடி வந்து விட்டார்,

இவன் ஏதோ வேலை நிமித்தமாய் இருந்ததாய் ஞாபகம்,

ஞானபாக்கியம்அக்காதான்சொன்னார்கள்,”ஏலே ஒன்னைய தேடிக்கிட்டுதான் கடைக்காரதம்பிவந்துருக்குது,அதுவும்வீட்டுக்குள்ள படக்குன்னு வர்றதுக்கு
யோசிக்கிட்டு வெளியவே நிக்குது,நீயும் வீட்டுக்கு வெளியில என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு தெரியாம ஒக்காந்து அந்த பெட்டிய நோண்டிகிட்டு இருக்க, கழுதஅப்பிடி என்னதான் இருக்கு அந்த பெட்டிக்குள்ளைன்னு இப்பிடி போட்டு அதோட மல்லுக்கட்டிக்கிட்டு இருக்க,

“நீமட்டுமாஎங்கவீட்டுலஒங்கமாமாவும்புள்ளைங்களும்எந்நேரமும்அதுக்குள்ள தான் தலைகோர்த்துக்கிட்டு வெளிய எடுக்க மாட்டாம ஒகாந்துக்கிட்டு கெடக் காங்க,

“சோறுதண்ணி,சாப்பாடுபாத்ரூமூன்னுஎதுவும்அதுகளுக்குமுக்கியம்இல்லை வேலை நாளைன்னைக்கி ராப்பூராம் வச்சி பாத்துக்கிட்டு இருக்காங்க,லீவு விட்டா போதும் அது அப்பிடியே கூடிப்போயி பித்துப்பிடிச்ச மாதிரி ராவும் பகலுமா அதே கதின்னு கெடக்காங்க,“அப்பிடி அதுல என்னதான் இருக்கோ என்ன எழவோ,,,,, என அவள் பேசி அல்லது பாடி முடிக்கும் போது மிதம் சுமந்த ஒரு வேற்று மொழி பாடல் போல இருக்கும் அவள் பேசியது,

அவள் பேச்சு மட்டும் அல்ல அவள்உடுத்துகிற சேலை ஜாக்கெட்,மற்ற மற்ற தான துணி மணிகள் எல்லாம் நன்றாக இருக்கும்,

நைட்டியைக்கூட செலக்ட் பண்ணித்தான் எடுப்பாள்,ஏதோ ஒன்றைஎடுத்து வந்து கொடுத்தால் உடுத்த மாட்டாள்,

”என்னாக்கா புது சேலையும் புது நைட்டியுமா பளபளக்குது, ஆமாடா நீ ஒரு திக்கம்,,,அக்காவபாத்துகேக்குறகேள்வியாஇது,கிறுக்குபயலே,நீயும் என்னைய மாதிரி தலைக்கி மேல வளந்த ரெண்டு பொம்பளப்புள்ளைய வச்சிருக்குறவன், அமயசமயம்பாத்து டவுனுக்கு கோயிலுக்கு சினிமாவுக்கு ஓங் பொண்டாட்டிய கூட்டிக்கிட் டு போறவன்,நீயி கேக்குறயாக்கும் கேள்வி, எனச்சொன்ன மறு கணமே டேய் சும்மா சொன்னேனப்பா அக்கா,ஒடனே நீயி மூஞ்ச தூக்கி வச்சிட்டு இருக்காத,

“எனக்கு இது போல ஒன்னைய விட்டா பேச ஆள் யாரு இருக்கா, எதுனாலும் நான் நம்பி பேசிறது ஏங் புருசனுக்கு அப்புறம் ஓங்கிட்டயும் ஓங் பொண்டாட் டிகிட்டயும்தான்.,வேறயார்கிட்டயும் போயி இவ்வளவு நம்பிக்கையாவும் நெருக்கமாவும்பேசிறவும் பழகீறவும் முடியாது,ஒடனே பல்ல இளிச்சிக் கிட்டி வேற ஒன்ன கேப்பான் தராதரம் கெட்ட பய, இல்லைன்னா பேச்சு பேச்சா இருக்கும் போது பார்வை ஒடம்பு பூரா மேயும் பொசகெட்டபயலுகளுக்கு,

“முந்தாநாஇப்பிடித்தான் ஒருத்தனோட பேசிக்கிட்டு இருந்தேன், சொந்தக்காரப் பையதான்,ஒரு மொறைக்கிப்பாத்தா ஏங் மொறப்பையன் வேணும்,பேசிக்கிட் டு இருக்கும் போது ஒருபக்கம் மாராப்பு எப்பிடியோ வெலகீருச்சி போல இருக்கு நான் கவனிக்கல,தீவிரமா நான் பேசினத பூரா கவனிச்சிக்கிட்டே இருந்தவன் போலஇருந்தவன் பார்வைக்கு வெலகி இருக்குற மாராப்பு மட்டும் கண்ணுக்கு தெரிஞ்சிக்கிட்டேஇருந்துக்கு,,,,,என்னடா இது அவன் பார்வையில ஒரு கள்ளம் தெரியுதேன்னு பாத்தப்ப ஏந்தப்பு என்னன்னு எனக்குத் தெரிஞ்சது, ஒடனே ஒண்ணும்சொல்லாம எந்திரிச்சி வந்துட்டேன்,அவன்கிட்டபேசுறத நிறுத்தீட்டு,

“கிறுக்குப் பைய அவன் வயசு என்ன ஏங் வயசு என்ன,ஏங் பெரிய மக வயசு தான் அவனுக்குன்னு ஓங் பொண்டாட்டி கிட்ட சொல்லி ஆதங்கப்பட்டப்ப விடுங்கக்காக போறான் தொலைஞ்சின்னு ஏங்கிட்ட சொல்லீட்டு அவன் வீட்டுக்குப்போயி அவனப்புடிச்சி வாங்கு வாங்குன்னு வாங்கீட்டு காட்டுக்குப் போன அவங்க அம்மா வந்த ஒடனே சொல்லீட்டுத்தான் வந்துருக்குறா,

”அவன் அம்மாகாரி ஆத்தமாட்டாம அழுதுக்கிட்டேபுள்ளையா நாலு சாத்தி சாத்திருக்குறா,அன்னையிலஇருந்துஎந்தவீட்டுலயும் போயி யாருகிட்டயும் அனாவசியா எதுவும் பேசுறதில்ல.

“ஒன்னையப்போல ஆம்புளைகளும் ஓங் பொண்டாட்டியப்போல இருக்குற பொம்பளைங்களும் எந்த ஆபத்தும் இல்லாதவுங்க, ஒங்க கிட்ட நம்பி பேசலா ம்பா”என ஆரம்பிப்பாள் பேச்சை /மென்மை சுமந்த இறகுக் கட்டு ஒன்றை இறக்கி வைப்பதன் சூட்சுமம் போல/

”அதென்னடா நீயும் அக்கான்னு கூப்புடுற ஓங் பொண்டாட்டியும் அக்கான்னு கூப்புடுறா ஒனக்கு நான் சொந்தம் இல்லாட்டி கூட ரெண்டு பேரும் இப்பிடியா அக்காஅக்கான்னுசொல்றது”,,,,?எனகேட்கும்போது இவனின் சொல் ஒன்றாகத் தான்இருந்திருக்கிறது,

“இதுலஎன்னஇருக்குக்கா,கூப்புடுறதுஎப்பிடியாஇருந்தாலும்ஒங்கமேலவச்சிரு க்குற மரியாத துளி கூட கொறையாமா இருக்கே அதுதானக்கா முக்கியம் என்பான்.

அவளும் சப்தமிட்டு சிரித்துக்கொண்டே சொல்வாள்,அது ஒண்ணுமில்லப்பா போனவாரம் புள்ளைங்க பள்ளிக்கூடம் போயிருந்த ஒரு நாள்ல நானும் ஒங்க மாமாவுமாடவுனுக்குப்போயிருந்தோம்,அப்பஎடுத்ததுதான்.இந்தப்பொடவையும் நைட்டியும்,

“ஒங்கமாமவப்பத்திதான்ஒனக்குத்தெரியுமே,யெரநூத்திஅம்பது,முன்னூறுக்கு மேலபொடவைஎடுக்கசம்மதிக்கமாட்டாருன்னு/அப்பிடி சம்மதிச்சிட்டார்ன்னா அன்னைக்கி மழை வந்துரும்ன்னு தெரியாதா ஒனக்கு,என்ன இப்ப அந்த மழையகொஞ்சம் பின்னுத்தள்ளி ஒரு அம்பது ரூவாய கூட்டிருக்காரு,

“இந்தப் பொடவ முன்னூத்தி அம்பது ரூவா,காட்டன் பொடவை, பாக்க நல்லா வும் சிம்பிளாவும் இருந்துச்சி,எடுத்துக்கிட்டேன்,அன்னக்கி அதே கடையில எடுத்ததுதான் இந்த நைட்டியும் ரெண்டும் சேத்து அறுநூறுக்கு மேல ஆச்சி, சரின்னு எடுத்திட்டேன்,ஒங்கமாமாவும்ஒண்ணும் சொல்லல,ஆச்சரியம்தான், அப்பிடியே கடையில போயி சாப்புட்டுட்டு வந்தோம்,

“முன்னாடி கல்யாணம் ஆன புதுசுலஇப்பிடி வெளியில போனா சினிமாவுக்குப் போவோம்,இப்பதான்சினிமாவநடுவீட்டுக்குள்ளகொண்டுவந்துருதே டீ வி, அது னால நாங்க இப்பயெல்லாம் சினிமாவுக்குப்போறதில்ல,போனாக்கூட பாதிப் படத்துல எந்திரிச்சி வர்ற மாதிரி ஆகீரும்.

“பின்ன என்ன நீயே சொல்லு, இத்துப்போன டீசர்ட்டு ரெண்டுகள வச்சிக்கிட்டு எங்கபோனாலும்ஒங்கமாமாஅததூக்கிமாட்டுக்கிட்டுவந்தா,,,,,,,,சகிக்க முடியல பாக்குறதுக்கு,,,, சொன்னாலும் கேக்கமாட்டேங்குறாரு,வேற என்ன செய்ய எதுக்கோ ஒண்ணுக்கு ஆசை பட்டுஎதுக்கோ ஒண்ணுக்கு வாக்கப்பட்டகதையா ஆகிப்போனகதையா சரின்னு அவருகூட போனா போற வர்ற சனமெல்லாம் இவரப்பாத்து கேலி பேசுது, அதுவும் யெளவட்டப்பையலுகளுக்கு அந்த மாதிரி கேலிப்பேச்சுன்னா கரும்பு தின்னதுமாதிரி,

”கெழடுக்குஆசையப்பாத்தயாடீசர்ட்டபோட்டுக்கிட்டு,,,,பெரியயெளவட்டம்ன்னு நெனைப்புன்னுஇன்னும் கொஞ்சம் சேத்து பேசுவாங்க,,, காதுபடவே,

“அதுக்கு கூச்சப்பட்டுக் கிட்டே பாதியில எந்திரிச்சி ஓடி வந்துருவோம், நம்ம ளா ஒதுங்கிட்டாதான் உண்டு இது போலான சொல் பேச்சுகளக்கேட்டு, எத்த னை பேறப் போயி பேசாத நீ வாயடகீட்டு இருன்னு சொல்றது.அதான் எந்திரி ருச்சி ஓடிவந்திர்றது.

“அதுக்கப்புறமும்ஒங்க மாமா அந்த டீசர்ட்ட போடுறத நிப்பாட்டுவாருன்னு பாத்தயா,அதுகளபோட்டுட்டுமினிக்கிட்டுத்தான்திரிவாரு,போனவாரம்இப்பிடித் தான் அவரு வாட்டம் வட்டக்கழுத்து பனியன் ஒண்ண எடுத்துக்கிட்டு வந்துட் டாரு,,,,,இதப்போட்டுக்கிட்டு தெருவுல யெறங்கி நடந்தீங்க,அவ்வளவு தான் பாத்துக்கங்க,,,,,ன்னு சத்தம் போட்டப்பெறகு அத யெடுத்து சின்ன மகளுக்குக் குடுத்துட்டுட்டாரு,,,,நைட் ட்ரெஸ்ஸா போட்டுக்கன்னு அப்புறம் தான் எனக்கு நிம்மதி ஆச்சு/

”சரி தம்பி நான் பேசிக்கிட்டே இருக்கேன் நீ என்னவோ அந்த பொட்டியில இருந்து பார்வைய வெலக்காம ஏங்பேசுக்கெல்லாம் ஊம் கொட்டிக்கிட்டே இருக்கயே என்ன அர்த்தம்,

“நான் பேசுற பேச்ச கேக்குறயா சும்மா ஒப்புக்கு தலைய ஆட்டுறயான்னு தெரியணும் என அவள் சொல்லி முடித்த நேரம் கம்ப்யூட்டரிலிருந்து தலை யை எடுத்த இவன் ”என்ன செய்யச் சொற அக்கா,காலையில எட்டு மணிக்கு வீட்ட விட்டு கெளம்புறவன் ராத்திரி எட்டு மணிக்குத்தான் வர்றேன். அது வரைக்குமா ஏங் ஒடம்ப ஆபீஸுக்கு ஒப்புக்குடுத்துடுற நானு அங்க முடியாத வேலைகளா இங்க வீட்டுல கொண்டு வந்து செய்யிறேன். மத்தபடி எனக்கு அந்த பெட்டிய வச்சி ஏதும் வெளையாடணுன்னுஆசை ஒண்ணும் கெடையா துக்கா,,,,

”புள்ளைங்கதான் லீவு நாளைகளுக்கு ஏதாவது வச்சி வெளையாடுவங்க ,அதுவும் முழுக்க முழுக்க வெளையாட்டுன்னு சொல்லீற முடியாது. பிரயோ ஜனமா ஏதாவது படிக்க எழுத மத்த மத்தபடியான வேலைகளையெல்லாம் செய்யன்னுஇருப்பாங்க.அப்பிடிஇருக்குறவுங்களுக்கு இந்தப்பெட்டியும் இந்தப் பெட்டியாலஅவுங்களும்பிரயோஜனப்பட்டுக்குர்றாங்கக்கா”,எனஅவன்சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளூர் பலசரக்குக்கடைக்காரர் வீட்டின் வாசலை மிதித்து விட்டார்,வணக்கம்ண்ணே என்ற குரலோசையுடன்/

அவர்அப்படித்தான்யாராக இருந்தாலும் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவருக்கு அண்ணேதான்,

வணக்கம்ண்ணே,,,,,அந்தக்குரலில் இருக்கிற ஈரமும் ஒட்டுதலும் வேறு எப்படி அழைப்பதிலும் கிடைப்பதில்லை என்பார் கேட்டால்,

ஒரு முறை கடைக்கு வந்து விட்ட லேபர் ஆபீசரிடமும் அதே வணக்கம் அண்ணேதான்.

வந்தஆபீஸர் கடைக்கு சரக்கு வாங்க வந்தது போல் வந்திருக்கிறார், முன்னப் பின்னதெரியாதஆள்,என்னசொல்லிஅழைக்க,,,?வழக்கம் போல வாங்கண்ணே என்ன வேணும்ண்ணே எனக்கேட்டு விட்டார்,

கேட்டு விட்டு திரும்பிய பின்னர்தான் தெரிந்திருக்கிறது, கொஞ்சம் யோசனை வர,,,/அப்புறமாய் வராத வார்த்தையை வலியக் கட்டி இழுத்து வாங்க சார் நல்லாயிருக்கீங்களா என்றிருக்கிறார்,வந்த ஆபீஸருக்கு வெகு சங்கடமாய் போய் விட்டது, கொஞ்சம் தர்ம சங்கடமாயும்கூட,,,,/

பின் கூட வந்த பியூனை அழைத்து விபரம் சொல்லச்சொல்ல அவரும் சொல் லியிருக்கிறார், அப்பொழுதும் வாங்க சார், நல்லாயிருக்கீங்களா என அதே தொனி மாறாமல் கேட்டவாறே கலர் பாட்டிலை எடுத்து நீட்டி யிருக்கிறார்.

வந்தவருக்கு கொஞ்சம் கோபமாக ப்போய் விட்டது, தன்னை அவமானப் படுத்தி விட்டார் அல்லது மரியாதை குறைவாக பேசி விட்டார் என்றில்லை. அவருக்குத்தெரியாதா ஊரெல்லாம் சுற்றுபவர் பல மனிதர்களை பார்வர்கள் அவர்கள் எப்படியிருப்பார்கள் என,,,,?

ஆனாலும் அவரை மீறி லேசாக கோபம் வரக் காரணம் இவன் விபரம் தெரிந்துதான் பேசுகிறானா இல்லை அவனது இயல்பே இதுதானா என்பதை கண்டு பிடிக்கத்தான் கோபப்பட்டது போல் நடித்தார்.என்ன அதனால் இப்பொ ழுது வியாரியின் மனதை உட்பொதித்துக் கொள்ள முடியாத அசல் கிராமத்து மனிதன் அவன் எனச் சொல்லியவாறே வந்த வேலையை முடித்து விட்டு கடைக்காரனிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினார்,

பின்னாலேயேபோனகடைக்காரன்பியூனிடம்விபரம் கேட்க ”அவரும் ஒங்களப் போல கிராமத்து மண்ணுல பொரண்டு வளந்த ஆளு, பேசாம இருங்க எதை யாவது கேட்டு வச்சிறாதீங்க கோபப்பட்டுறப் போறாரு, இப்ப நீங்க குடிச்ச கலரக்கூட ஏங்குடிச்சாருன்னா ஒங்ககிட்ட இருக்குற அசல் தன்மை அவரு க்கு ரொம்பப்பிடிச்சிப்போச்சி,அதுனாலத்தான் எனச் சொல்லி சென்று விட்டார்,

அதகப்புறமும் சரி அதற்கு முன்பும் சரி, இப்பொழுதும் சரி, எப்பொழுதும் போலவேவாங்கண்ணேநல்லாயிருக்கீங்களாஎன்பதேகடைக்காரனது பேச்சின் துவக்கமாய் இருந்தது,

இவன் முன்னும்ஆரம்பித்தஅந்தவார்த்தைகள்தான் இவனை நிமிர்ந்து உட்கார வைத்தது.மன்னிக்கணும்ண்ணே இன்னைக்கிலீவு நாளு ,வீட்டுல ரெஸ்டா இருக்குற ஒங்கள வந்து தொந்தரவு பண்ண வேணாம்ன்னு நெனைச்சேன்,

“அதுதவுரதண்ணிகிண்ணிசாப்புட்டுரெஸ்ட் எடுப்பீங்களோன்னு வேற டவுட்டு, எனக்கு,அதுக்குத்தோதாகாலையிலகறிக்கடையிலவேறநின்னீங்களா,,அதுதான் எனஇழுத்தகடைக்காரனைநோக்கி,,,,,,,,,

“இல்லைப்பாஅப்பிடியெல்லாம்ஒண்ணும்,நான்என்னைக்காவதுகுடிச்சிருக்கே ன்னு கேள்விப்பட்டுருக்கியா,மிஞ்சிப்போனா கண்ணன் கடையில குடிக்கிற டீயோட சரிப்பா, என்ன ஒரு நாளைக்கு பத்து டீ வரைக்கும் கூட போயிரும் கொஞ்சம் அளவு மீறி/

“இன்னைக்கி லீவு நாள் வேறயா,டீயோட எண்ணிக்கை கொஞ்சம் கூடும், அவ்வளவுதானே ஒழிய நீ நெனைக்கிற மாதிரி தண்ணி வெந்நியெல்லாம் ஒண்ணும் கெடையாது தம்பி என்றான் இவன்,

”அப்பிடின்னாதைரியமாபேசலாம்எனஆரம்பித்தகடைக்காரன்பெரிசா ஒண்ணு மில்லண்ணே,மாசா மாசம் மொத்தமா டவுன்ல போயி பலசரக்கு வாங்கீட்டு வந்திர்றீங்க,அரிசியையும் சேத்து,ஒங்களப்போல ஆட்க ஏங்கிட்ட யேவாரம் வாங்கலைன்னா வேற யாரு வந்து வாங்குவா சொல்லுங்க,,,,,

அதுக்காகவீட்டுக்குதேவையானஅத்தனைசரக்கையும்ஏங்கிட்டவாங்கச்சொல்லி சொல்ல,அரிசிமட்டுமாவதுவாங்கிக்கிறாலாம்ல,டவுன்லபோடுறஅதேவெலை க்கி ஒங்களுக்கு கொண்டுவந்து குடுக்குறேன்,

“வேணுமுன்னாசொல்லுங்க,மொத்தமா மூடைக் கணக்குல தூக்குனீங்கன்னா  இன்னும்கொஞ்சம் விலை கொறைச்சி தர்றேன் என்றான்,

”அது சரி எந்த நம்பிக்கையில ஏங்கிட்ட வந்து இப்பிடி கேக்குற தம்பி ஓங்கிட்ட மொத்தமா அரிசி தூக்குனா நான் கரெக்டா காசு தருவேங்குறதுக்கு என்ன உத்துரவாதம்,,,எனச்சிரிக்கிற இவனை நோக்கி அட போங்கண்ணே சும்மா கெடங்க நீங்க பாட்டுக்கு என்னத்தையாவது பேசிக்கிட்டு,,,/இந்த வார்த்தைக போதும்ண்ணே நீங்க சம்மதம் சொன்னதா எடுத்துக்கிறேன்,

“அண்ணனுக்குஎதுவும்சங்கடம்இல்லைன்னா இப்பவேபோயி அரிசி மூடையா தூக்கீட்டுவந்துர்றேன்கடையிலஇருந்து,,” என போய் விடுவான் கடைக்காரன்,

மூடையுடன் வாங்கிய அரிசியும்,அரியுடன் கடைக்காரனிடம் இவன் வாங்கிய நம்பிக்கையும் வைத்துக்கொண்டு இவன் பணி நிமித்தமாய் வெளியூரில் வந்து குடி கொண்ட நாட்களில் அரிசி வாங்கப்போன கடையில்பருப்பு கிடைப்பதில் லை,

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
தம +1

vimalanperali said...

அன்பும் பிரியமும்!