3 Oct 2017

ஏழையின் சிரிப்பில்,,,,/



மணிமாஸ்டரின் சிரிப்பு இவனுக்கு மிகவும் பிடிக்கும். 

தனது நீணட பல்வரிசை காட்டிஅவர்சிரிக்கிறஅழகுக்கு அங்கிருக்கிற கட்டிடங் களையும் கடைகளையும் கூட எழுதி வைத்து விடலாம்,

கட்டிட உரிமையாளரும் கடைகளின் உரிமையாளரும் சண்டைக்கு வந்து விடுவார்களோ என்கிற பயத்தில் அப்படியெல்லாம் செய்வதில்லை.

அல்லது தெருவில் அவர் மனதுக்குப்பிடித்தவரை திருமணம் செய்து வைத்து விடலாம்,

கேட்டால்சொல்லுவார்அடஏண்ணேஇனிமஅந்தநெனைப்பு,அப்பிடியேஅந்தமாதிரிநெனைப்பு வந்தாக்கூட வீட்டம்மாகிட்டயும் தலைக்கு மேல வளந்து நிக்குற புள்ளைக கிட்டயும் கேக்க வேண்டி இருக்கும்,

அதெல்லாம் ஒரு பொற்காலம்ண்ணே ,வேலை பாக்குறது டீக்கடை மாஸ் டருதான்னாலும் கூடபெல்பாட்டம் பேண்ட்டும் ,பாபிக்காலர் சட்டையுமாத்தா ன் வருவேன்.கடைஓனரும்ஒண்ணும்சொல்லமாட்டாரு,வேலை நடந்தா சரின்னு விட்டுருவாரு.

அப்பயெல்லாம்இப்பமாதிரிடீகாபிமட்டும் கெடையாது, டீ காபி, போன் விட்டா, ஹார்லிக்ஸீ,,,,,,,இதுபோகமசாலா பாலுன்னு தனியா பெரிய வாணலிச் சட்டி யில பால் வெந்துக்கிட்டு இருக்கும்,ஒரு பக்கம் வடைக நாலைஞ்சு வகைகள் ல, வேற போடுவம்,இந்த ஊர்ல மொத மொத காய்கறி வடை போட்டது நம்ம கடையிலதாண்ணே,,,,,/

அப்பயெல்லாம்டீக் கடைகள்ல வேலை பாக்குற மாஸ்டருகளுக்காக டீ ஓடும், அப்பிடி மாஸ்டார்க வேலை பாக்குற கடைகள தேடிப் போயி டீக்குடிப்பாங்க, அவுங்களும் தினம் வர்றவுங்கள் கண்டு வச்சிக்கிருவாங்க, .அவுங்களுக்குத் தகுந்தாப்புல டீப் போடுவாங்க,அப்பிடி ஒரு ஆத்து, இப்பிடி ஒரு ஆத்து .பால சட்டியில்இருந்து மோக்குறதும் தெரியாது,டிக்காக்சன கலக்குறதும் தெரியாது. அப்பிடி ஒரு வேகம் அப்பிடி ஒரு நறுவிசு,அப்பிடி ஒரு பறுவிசு, டக்,டக், டக்குன்னு டீயப் போட்டு குடுப்பாங்க,மேல் கப்புல இருந்து கீழ் கப்புக்கு வற்ர டீ கிளாஸ்ல நெறஞ்சி தொண்டையில யெறங்கி நாக்க நனைச்சி போகும் போது ஏ,,,யப்பா அது ஒரு தனி சுவைதானப்பா,,,,

அதுஎன்னன்னு தெரியல அப்பிடி அவுங்க போட்டுக்குடுக்குற டீயில ஒரு தனி ருசி இருந்துச்சி,அது அவுங்க கை ராசியா தொழில் ரகசியான்னு தெரியல,

என்னாடா ஏதுட்டான்னு நானும் ஒரு டீ மாஸ்டர்தாங்குற மொறையில போயி கேட்டம்ன்னா இந்தா பாத்துக்க இந்தகையிலதான் போடுறேன். இந்த ஒடம்பு தான் டீப்போடும் போது பட்டறையில நிக்குது,,,,அப்பிடீன்னு பேச்ச மாத்தி பேசுவான்க,,,,நானும் விடாம போயி அவுங்களுக்கு தேவையானபீடி சிகரெட் டுன்னுவாங்கிக்குடித்துகேட்டாலும்கூடஒண்ணும்சொல்லமாட்டான்க,நானும் அலுத்துப்போயி போங்கடான்னு விட்டுறுவேன்,

“இதுலஎனக்குதொணப்போனமாஸ்டர்ஒருத்தன் இருக்கான்,அவனும் என்னை யப் போல ஒல்லிப்பிச்சாந்தான்.அவன்கிட்ட கேக்கும் போது பெரிசா மூடு மந்திரமாஒண்ணும்சொல்லீறமாட்டான்.அண்ணேன்னுன்னுதான்கூப்புடுவான், என்னைய விட ரெண்டு வயசு மூத்தவன் ,அண்ணேன்னு கூப்புடாதன்னு சொன்னாலும் கேக்க மாட்டான்,சரி கூப்புடுக்கன்னு நானும் விட்டுறதுதான், பின்ன என்ன அவன் பேச்சுக்கு பூட்டா போட முடியும்,,?

“அவன்சொல்லுவான்பெரிசாஒண்ணும்இல்லைண்ணே,நான்கடைக்கிப்போயி டீப்போடபட்றையிலஏறிநின்னுட்டேன்னாநான்வழக்கமாகுடிக்கிறபீடிசிகரெட்டு எதுவும்கெடையாது,வடைசாப்புடுறதக்கூட நிப்பாட்டீருவேன்.கடையில குடுக் குறத மத்தியான சாப்பாட்டுக்கு வச்சிக்கிருவேன்.பச்சத்தண்ணி தவிர எதுவும் கெடையாது,டீக் கூட எப்பயாவது ஒண்ணுதான்.சில பேரப்போல ஊத்திகிட்டே இருக்க மாட்டேன், அதுனாலயோ எனக்கு டீ ருசியா அமஞ்சி போறதா நானா நெனைச்சிக்கிறேன்,

எங்க சொந்தக்காரர் கிட்ட ஒருதடவ பேசிக்கிட்டு இருக்கும் போது கேக்கை யில அதெல்லாம் பெரிசா ஒண்ணுமில்லை,செய்யிற தொழில்ல கண்ணும் கருத்துமாஇருந்தாலேஇதெல்லாம்தானாவாய்க்கும்,அதுஇல்லாமபட்றையில நின்னுகிட்டுடீப்போடும்போதுரோட்டகவனிக்கிறது,வீட்டுநெனைப்பக்கொண்டு வந்து டீக்கிளாஸ்ல திணிக்கிறது,யாருகூடவாவது பேச்சுக் குடுத்துக்கிட்டே இருக்குறது,இதெல்லாம் இல்லாம இருந்தாலே போதும் தொழில்ல தன்னால கவனம் குவியும்,அப்பிடி குவியும் போது நீ செய்யிற வேலை சிறப்பா இருக் கும், நல்லாவும் பேரு வாங்கும்,அது எந்த வேலை செஞ்சாலும் சரின்னாரு ,

“அவரு பேச்சு ஒருபக்கமும் எனக்குள்ள இருந்த இந்த பழக்கம் ஒருபக்கமுமா சேர்ந்து என்னைய இந்த மாதிரி ஆக்கீருச்சி,பேரும் நின்னு போச்சி நல்ல மாஸ்டருன்னு,”நல்லமாஸ்டரா இருக்குறதுனாலகடைக்கும்நல்லகடைன்னு பேரு வந்துருச்சின்னு சொல்லுவான்,

அது போலான நல்ல கடையில நம்ம கடையும் ஒண்ணு, என்னையச் சேத்து மூணுமாஸ்டரு கடையில, பகலுக்கு, சாயங்காலத்துல இருந்து நைட் வரைக் கும் ஒருத்தரு, காலையில நாலு மணியில இருந்து சாய்ங்காலம் வரைக்கும் ஒருத்தரு, அப்புறமா சாயங்காலத்துல இருந்து நடு ராத்திரி வரைக்கும் ஒருத்தருன்னு மூணு பேரு ஆகிப் போச்சா,,,,,

“இதுல பெரும்பாலுமா நானு பகல்ல நிப்பேன். இல்ல காலையில நிப்பேன், காலையிலதான் என்னைய விரும்பி வரச்சொல்லுவாங்க,நான் நின்னா டீ நல்லா ஓடுமுன்னு கணக்கு அவுங்களுக்கு,தவுர மாஸ்டருகளுக்காக ஓடுற டீக்கடைகள்ல ஒண்ணா நான் வேல பாத்த கடையவும் ,அந்த மாஸ்டர்க கூட்டத்துல என்னைய ஒரு ஆளாவும் அடையாளப்படுத்தி வச்சிருந்தாங்க, அதுனால மொதலாளியும் ஏங்மேல நல்ல அபிப்ராயம் வச்சிருந்தாரு,,,,/

”டீ வடை மாசாலாப்பாலுன்னு நானும் அத்தனைஐட்டங்களுக்கும்சுத்திச்சுத்தி வருவேன். அப்பிடியெல்லாம் வந்தப்பக் கூட நம்மகிட்ட வேலையில ஒரு இம்மி கவனப் பெசகு இருக்காது பாத்துக்கங்க,

“மத்த கடை போல எங்க கடையில ஜாக்ரீம் டீ போட மாட்டோம், அரை கிளாஸ்தான் டீ நிக்கும்,மிச்சம் அரை கிளாஸீக்கு சாக்ரீம் மொறைதான் நிக்கும் அந்த டீயில../

“டீக்கிளாஸகையில வச்சிக்கிட்டு ஒரு அஞ்சு நிமிசம் நின்னம்ன்னு வையிங்க, நொறையெல்லாம்வத்திப்போயி டீயும் சவக்களிஞ்சி போயி பச்சத் தண்ணியா நிக்கும்,குடிக்கவே ருசிக்காது,அதப்போல டீ போட்டுத்தரச் சொல்லி கேட்டு வர்றவுங்கசிலபேருக்குகறாரா அந்த மாதிரி டீ இல்லைன்னு சொல்லீருவோம்.

எங்ககடைமொதலாளி கூட சொல்லுவாரு,”ஏம்பா அது போல டீ போடலாம்ல, விரும்பிகேட்டுவர்றவுங்களுக்கு குடுக்கலாம்லன்னுவாரு, நாந்தான் வேணாம் மொதலாளி.அது அவ்வளவா நல்லாயிருக்காது, நல்லாயிருக்குற கடை பேர யும் ஏன் கெடுத்துரும்ன்னு சொல்லுவேன்.சரின்னு கேட்டுக் குருவாரு,

”நம்மசொல்றத கேக்க வேண்டியதுதானன்னு நெனைக்காம, தொழில்காரன் அவனுக்குத்தான் தெரியும் தொழிலோட மேடு பள்ளம்ன்னுவாரு. தொழில் சம்பந்தமா எது செய்யணும்ன்னாலும் என்னையக்கேக்காம செய்ய மாட்டாரு.

“என்னைய மட்டும் இல்லை,மத்த ரெண்டு மாஸ்டர்களையும் வடை மாஸ் டரையும் கலந்து பேசிக்கிட்டுதான் செய்வாரு,அப்பிடி கலந்து பேசுனாலும் கூட நான் சொன்ன யோசனையத்தான் மெயினா வச்சிக்குருவாரு,

அதுக்கு எதுக்கு அவுங்க ரெண்டு பேரும் வடை மாஸ்டரும்ன்னாக்கா அவுங் களயும் கூப்புட்டு வச்சி பேசாட்டி அவுங்களுக்கும் ஏதாவது மனத்தாங்கல் வந்துருங்குற கணக்குதான் அவருக்கு,

“இப்பிடித்தான் கடைக்கு கூட்டம் நல்லா வந்து போற நேரத்துல எதிர்பாராத விதமா பொம்பளைங்க கொஞ்சம் கடைக்கு டீ சாப்புட வந்தாங்க,என்னோட இத்தன வருச சர்வீஸீல இப்பிடி நான் பாத்ததேயில்ல. ஏங்மொதலாளி கூட கேட்டாரு என்னப்பா இது புதுசா இருக்கு மிஞ்சி மிஞ்சி போனா பார்சல் டீ வாங்க வருவாங்க பொம்பளைங்க,அதுவும் கூட ஆம்பளைக இல்லாத நேரமா பாத்து தயங்கத்தயங்கி வருவாங்க,ஆனா இப்பப் பாரு கூசாம வந்து டீக் குடிச்சிட்டுப்போறாங்க எந்தக் கூச்சமும் இல்லாம, கொஞ்ச நேரம் நின்னு பேசீட்டு கூடப்போறாங்க,எனச்சொன்னவர் ஏய் டீ மாஸ்டர் நீ இருக்குற போது தானப்பா வர்றாங்க,மத்த ரெண்டு பேரு இருக்கும் போது வாரதில்லையே,,,/ ஏன் அப்பிடின்னு தெரியலைன்னு என்னைய கொஞ்சம் வம்பிழுக்குற மாதிரி பேசுவாரு,

“நானும் விட்டுக்குடுக்காம அப்பிடியெல்லாம் ஒண்ணும் இல்லைண்ணாச்சி, நம்ம கடை புடிச்சி போயி வர்றாங்க ,போக நான் நிக்கிற நேரத்துலதான் அவு ங்களுக்கு டீ சாப்புடுற நேரம்,அதுக்குதான் வந்துருப்பாங்களே ஒழிய நான் நிக்கிறேன்னு வந்திருக்க மாட்டாங்கன்னுவேன், சிரிப்பார் சத்தமாக/

வடை மாஸ்டர் சொல்லுவார் அவர் போன பின்பாக,அவர் சொல்றது உண்மைதான், நீ இல்லைன்னா கடைக்கு வர்ற ஒன்னு ரெண்டு பொம்பளைக கூட வர்றதில்ல,ஏதோ ஓங் நடவடிக்கையும் ஒழுங்கும் பொம்பளைகளுக்கு புடிச்சிப் போச்சின்னு நெனைக்கிறேன்.

ஒரு மனுசன் மேல விழுகுகிற நம்பிக்கைதானப்பா முக்கியம்,நீ அந்த நம்பிக் கைய வாங்கி வச்சிருக்கன்னு நெனைக்கிறேன்,அதுவும் பொம்பளைககிட்ட/ அதுஒருகுடுப்பினைன்னுசொல்லலாம்,அதுஎல்லாருக்கும்லேசுலவாய்க்காது. அது ஒனக்கு வாய்ச்சிருக்கு,அத அப்பிடியே தக்க வச்சிக்க,எந்த ஜென்மத்துல என்ன புண்ணியம் பண்ணுனயோ,ஒங்க ஆயி அப்பன் என்ன தவம் செஞ்சாங் களோ இந்த மாதிரி ஒரு நல்ல பேர நீயி சம்பாதிக்கிறதுக்கு,என்றார் ஒரு நாளின் மதியமாக/

அது மட்டும் இல்ல ஒன்னோட ஒழைப்பால நீ இந்தக்கடைக்கு நல்ல பேரு வாங்கி குடுத்திருக்க,அத உணர்ந்தவறாத்தான் மொதலாளி கடைக்கி பக்கத் துல இருக்குற இன்னொரு காம்ளக்ஸ வாடகைக்கு புடிச்சிருக்காரு,

”அதுல இப்ப டீக்குடிக்க வர்ற பொம்பளைக மட்டும் உட்கார மாதிரி ஏற்பட்டு பண்ணனுன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு,ஓங்கிட்டதான் அது சம்பந்தமா கேக்கணும்ன்னு சொல்றாரு,அனேகமா இன்னும் ரெண்டொரு நாள்ல நம்ம எல்லாரையும் கூட்டி வச்சி பேசுவாருன்னு நெனைக்கிறேன்.நாங்க யாரு என்ன பேசுன போதும் ஓங் யோசனைதான் அவருக்கு மெய்ன்ப்பா,ஏன்னா நாங்களெல்லாம் பேசுறப்ப பேச்சுல மட்டும் பலத்த காண்பிக்கிறவங்க,நீயி செயல்ல காண்பிக்கிறவன்,ஓங்கிட்ட ஒரு வேளைய ஒப்படைச்சா அது கண்டிப்பா முடிஞ்ச மாதிரின்னு சொல்லுவாரு,எங்ககிட்டயெல்லாம் அப்பிடி நம்பிஒருவேலைய குடுக்க மாட்டாரு,

“ரெண்டு மாசத்துக்கு முன்னாடி அப்பிடித் தான்ஒரு தடவை அந்த கரண்ட கால் வீங்குன மாஸ்டர்கிட்ட கரண்டு பில்லு கட்டணுன்னு பணம் குடுத்து விட்டுருக் காரு.மதியம் கரண்டு பில்லு கட்டீட்டு வர்றேன்னு போனவன் வீட்ல போயி சாப்டுட்டு தூங்கீட்டான்,

தூங்குனவன்கண்ணமுழிச்சி பாக்கும் போது மணி அஞ்சுக்கு மேல ஆயிருக்கு. என்னசெய்ய இனின்னுமண்டைய சொரிஞ்சிட்டு இருக்கும் போது மொதலாளி போன் பண்ணி கேட்டுருக்காரு,பேச்சுலயே இழுவையா இழுத்துருக்கான்.

”மொதலாளிதலையால அடிச்சிக்கிட்டு என்னைய விட்டு அவன் கிட்ட பணத்த வாங்கிட்டு வரச் சொன்னாரு,அவ்வளவு நேரம் தூங்கீட்டு இருந்த பைய எவ்வளவு வேகமா கடைக்கிப் போயிட்டு வந்தான்னு தெரியல,நா போகும் போது தண்ணி மெதப்புல நிக்குறான்.

“அட கண்றாவி புடிச்சவனேன்னு ரெண்டு சத்தம் போட்டுட்டு மொதலாளி குடுத்த பணத்த வாங்கீட்டு வந்து அவர்ட்ட குடுத்துட்டு விஷயத்த சொன்னப்ப தூன்னு காரி துப்பீட்டு அவன நம்பி ஆயிரக்கணக்குல பணம் குடுத்து வுட்டு ஒரு வேலைய முடிக்கச்சொன்னேன் பாரு, அதுக்கு ஏங் புத்திய செருப்பால அடிக்கணும் ,இந்த லட்சண மயிருல குடுத்தனுப்புன பணத்துல கொஞ்சம் எடுத்து தண்ணியடிசுருக்கான்,

நாளைக்கு வரட்டும் வெட்டிப் பைய அவனுக்கிருக்கு வேடிக்கைன்னு சொல் லீட்டு இன்னைக்கித்தான கடைசி நாளு கரண்டு பில்லுக்கு,அதுக்குதான டீப் பட்றையில நின்ன அவன அனுப்பி பில்லு கட்டீட்டு வரச்சொன்னேன்,

”நம்பீ அனுப்பிச்சேனேடா,இந்நேரம் அந்த ஒல்லிப்பிச்சான் மாஸ்டர்ன்னா இப்பிடிசெய்வானா சொல்லு,நான் அனுப்புன வேலையும் செஞ்சி முடிச்சிட்டு கடைக்கு தேவையான ஏதாவது ஒண்ண கடை வீதியில பாத்தான்னா அந்த கடையில இருந்தே எனக்கு போன் பண்ணி வரச் சொல்லி அந்த யேவாரத்த வாங்கீட்டு வந்துருவோம் ரெண்டு பேருமா சேந்து,

”வாங்குன யேவாரத்த வாடகை வண்டி பிடிச்சிக்கூட தள்ளிக்கிட்டு வர விட மாட்டான்,அவன்கிட்டஇருக்குறஇத்துப்போனசைக்கிள்ல்ல வச்சிதான் தள்ளிக் கிட்டு வரணும்ன்னு சொல்லுவான்.சொல்லுறது மட்டுமில்ல,செஞ்சும் காட்டு வான்,அவனோடஅதுபோலானசெய்கைகளபாக்கும்போதெல்லாம்பிராயத்துல நான்டீக்கடையில வேலை செய்யும் போது எப்பிடி இருந்தேனோ. அப்பிடியே இருக்கான்னு தோணும்ன்னுவாரு,,,/

,அந்த மாதிரி பையன்கிட்ட பணத்தக்குடுத்தணுப்பாதது ஏங் மொத தப்பு, ரெண் டாவதா இந்த மாதிரி மனசு கெட்ட பையங்கிட்ட குடுத்து அனுப்புனது மகா தப்பு,

நாளைக்கு ஈ பி ஆபீசுல இருந்து லயன்மேன்வந்துபாடாப்படுத்துவான், பில்லப் போயி கட்டீட்டு வந்துர்றேன்னு சொன்னாலும் கேக்க மாட்டான் படுபாவிப் பைய, மொத வேலையா மரத்துல ஏறி பீஸ புடுங்கீட்டுதான் மத்த வேலய பாப்பான், என்ன சொன்னாலும் என்ன கெஞ்சுனாலும் கால்லயே விழுந்தாலும் கூட கேக்க மாட்டான்,

நாளைக்கு வடைக்கிப்போடுறது.சட்னி ஆட்டுறது எல்லாம் காலியா, பாவிப் பயலாள ஒரு நாள் யேவாரம் போச்சி,நாளைக்கி ஒரு நாள் யேவாரம் போனா நம்ம கடைக்கி ரெகுலரா வந்து போற ஜனம் நம்பிக்கை யெழந்து போகுமே, இந்நேரம் போனா அந்த கடையில இந்த வடை சூடா கெடைக்கும்ங்குற நம்பிக்கைதான இது நாள் வரை கடைய காப்பாத்தீட்டு வந்துருக்கு.அது இனி கொறஞ்சி போகுமே,

“நாளைக்குஒருநா கொறையிற நம்பிக்கைபின்னாடிவர்றநாட்கள்லயெல்லாம் பாதிக்கும்.

மொதவேலையா நாளைக்கி யார் ஈ பி ஆபீஸிக்குப்போயி யார் கையக் காலப் புடிச்சாவது பில்லக் கட்டீட்டு பீஸ புடுங்கவுடாம பாத்துக்கணும்.அப்பிடி புடுங் கீட்டான்னு வையி, நாளைக்கி கடை மானம் கப்பலேறிப்போகும் பாத்துக்கன் னு அவர வருத்தப்பட வச்சவன் அவன்.

அதுக்காக மறுநா வேலைக்கி வந்த அவன அவரு ஒண்ணும் யெசக்கேடா பேசீறல,டேய்பாக்குற வேலைக்கி கொஞ்சம் விசுவாசம இருடா,ஏதோ ரூவாய் வாங்கீட்டுப்போனோம்,சாப்புட்டஒடனேஅசந்துட்டம்,அப்பிடியின்னாபரவாயில்ல

”நீயி போகும் போதே கடையில போயி தண்ணியடிச்சிகோழிக்கறிஎடுத்துட்டு போயிருக்குற,என்ன ஏதுன்னு கேட்ட ஓங்வீட்டுக்காரிகிட்ட மொதலாளிதான் அரைநாளு லீவு குடுத்து அனுப்பிச்சிட்டாருன்னு சொல்லீருக்க,,,, சரி அப்பிடித் தான்தண்ணியடிச்சதுதான்அடிச்சகழுத கரண்டு பில்லு கட்டலைன்னாவது ஒரு தாக்கல் சொல்லீருக்கலாம்ல,இல்ல ஓங் வீட்டுக்காரிகிட்ட குடுத்து ரூவாயஏங்கிட்டகொண்டு வந்து சேத்துருக்கலாம்ல,,,,மூதேவின்னு வஞ்சிட்டு இனிம இந்தக்கடைப்பக்கம் வந்துறாதன்னு சத்தம் போட்டு அனுப்பிச்சிட்டாரு,

”அனுப்பிச்சவரு மனசு கேக்காமா ரெண்டு நாள் கழிச்சி என்னைய விட்டுதான் கூட்டிக்கிட்டு வரச்சொன்னாரு..நாந்தான் போயி கூட்டிக்கிட்டு வந்தேன்,நல்ல வேளையாநாபோற நேரமாப்பாத்து தண்ணியடிக்க கெளம்பிக்கிட்டு இருந்தா ன்,

நான்போயிவிவரம்சொல்லவும் நா கொண்டு போன சைக்கிள்லயே என்னைய ஒக்காரவச்சிடபுள்ஸ் போட்டு கூட்டுக்கிட்டு வந்தான்,

வந்தவன் கிட்ட பெரிசா ஒண்ணும் பேசல மொதலாளி.போ இனிமேலாவது புத்தியோட பொழச்சிக்கன்னு கடைக்குள்ள அனுப்பிச்சி வச்சாரு,,,,அவனும் அன்னையிலயிருந்து இன்னைக்கி வரைக்கும் ஒழுங்காத்தான் இருக்குறதா காட்டிக்கிட்டு திரியிறான் பாப்போம்,சாயம் வெளுக்கும் போது எல்லாம் பல்ல இளிச்சிரும்ல,,,”எனச்சொன்னவடைமாஸ்டர்ஓங்ஆலோசனையாலும் ஒத்து ழைப்பாலும் அவரோட முடிவாலும் பக்கத்து காம்ளக்ஸீல லேடீஸ் ஒக்காந்து டீ சாப்புறதுக்குன்னு ஒரு தனி யெடம் ஒதுக்குனாரு,

“இந்த பக்கத்துல லேடீஸ்க வந்து டீகுடிச்சிட்டுபோற கடையின்னு பேறெடுத்த கடையா நல்லா பேரெடுத்து ஓடிக்கிட்டு இருக்கும் போது கடை ஓனரும் ஒடம்பு சரில்லாம படுத்துட்டாரு,

“ஏற்கனவே ஒட்டுப்போட்ட ஒடம்பு அது. டாக்டர்கிட்ட போகவும் வரவுமாத் தா ன் இருந்தாரு மனுசன்,

அந்தபோக்கும்வரத்தும் ஒரு நா அவர பெட்ல படுக்கப் போட்டுருச்சி, எப்பயும் போலடாக்டர்கிட்டபோனவரடாக்டர்இனிமே நீங்க ரொம்ப நடமாட்டம், ரொம்ப சிந்தனைரொம்ப உழைப்புன்னு எதுவும் வச்சிக்கிறக்கூடாது, என்னோட முழு கட்டுப்பாட்டுலதான் இருக்கணும் நீங்க,சாப்பாடு உட்பட நான் சொல்ற படிதான் சேக்கணும்,ஒடம்பு கொஞ்சம் தெம்பாயிருச்சேன்னு பழைய டீக்கடைப் பைய னா மாறீரக் கூடாது.ரொம்ப கண்டிப்பான வார்த்தைக இது,நான் சொல்ற படி கேட்டீங்கன்னா இன்னும் கொஞ்ச நாள் தள்ளலாம் ஆயுள,இல்ல நான் ஒண்ணும்சொல்றதுக்கில்லன்னுடாக்டர் சொன்ன நாலு மாசத்துலயே பொட்டு ன்னு போயி சேந்துட்டாரு,

“அதுக்கப்புறம் அவரோட மகனுக எடுத்து நடத்துனப்ப அவுங்க போக்கு பிடிக் காம நீங்களும்கடையவிட்டு நின்னுட்டீங்க, அதுக்கப்புறம் கடையும் மெல்ல மெல்ல போயிருச்சி,,,,என அன்று வடை மாஸ்டர் சொன்ன வார்த்தை கள் மனதில் ஒலிக்க இன்று வேறு கடையில் டீ ஆற்றிகொண்டிருக்கிற மணி மாஸ்டரின் வாஞ்சை மிகுந்த சிரிப்பு இவனுக்கு மிகவும் பிடிக்கிறதாய்,,,,,/

2 comments:

'பரிவை' சே.குமார் said...

அருமை அண்ணா....

vimalanperali said...

அன்பும் நன்றியுமாய்...!