16 Dec 2017

ஈரங்களின் வடு சுமந்து,,,,


பெய்து முடித்திருந்த மழையின் ஈரம் இன்னும் காயாமல்,,/

மழை என்றால் மழை சரியான மழை,,ஆம் அதை சரியான மழை என்றுதான் சொல்லத் தோனுகிறது இப்போதைக்கு.ஆமாம் அன்றைக்கு பெய்தது அப்படித் தான் இருந்தது,

நள்ளிரவு பணிரெண்டு மணி இருக்கும்,யாருக்கும் யாரும் சொல்லாமல் கொ ள்ளாமல் ஆகி விட்ட பொழுது,

மாலைப்பொழுது முடிந்து இரவு தன்முகத்தை எட்டிக்காட்ட ஆரம்பித்திருக்கி ற நேரம்,அலுவலகம் முடிந்து அப்போது தான் வந்திருந்தான்.

காலையிலிருந்து மாலைவரை தன் உழைப்பை உறிஞ்சி சாப்பிட கொடுத்து விட்டு மீதமிருக்கிற சக்தியைஉடம்பினுள்ளாய் பாதுகாத்து வைத்துக் கொ ண்டுவீட்டிற்குவந்து விட்டிருந்த மாலை வேளை வீட்டில் துளி கூட காய்கறி இல்லை என்பதை வலியுறுத்தி சொல்லிக்கொண்டிருந்த மனைவி ”இல்ல பரவாயில்ல விடுங்க,இன்னைக்கி ஒரு நாளைக்கு இங்கன பக்கத்துல இருக் குறகடையிலவாங்கிக்கிருவோம்.நாளைக்கி ஆபீஸ் விட்டு வரும் போது வாங் கீட்டு வந்துருங்க என்றாள்.இல்ல நானு இன்னைக்கே வாங்கீட்டு வந்துருக்க னும்,ஏதோஒருஞாபகத்துல வந்துட்டேன்,காலையில ஆபீஸ் கெளம்புற போது கூட பையி குடுத்து விட்ட, கூடவே பணமும் குடுத்த,நாந்தான் மறந்து போனேன்.

”என்னவோ ஒரு ஞாபகம் ,போ,இன்னைக்கி ஒரு அம்மா ஆபீஸீக்கு நகை அடமானம் வச்சி பணம் வாங்கவும்,ஒரு நகைய திருப்பவும் புத்தகத்துல இருக்குற பணத்த எடுக்கவும் வந்தாங்க,அந்தம்மா வந்த நேரம் கொடுமையி லும் கொடுமை பாத்தின்னா அந்தம்மாவோட வீட்டுக் காரனும் கூட வந்துருந் தான்,

“அவன் சரியான குடிகாரன் போலயிருக்கு, அந்தம்மாட்ட கேட்டா நான் எங்க அவர கூட்டிக்கிட்டு வந்தேன்.அவர்தான் ஏங்கூட வந்துட்டாரு,நேத்து ராத்திரி குடிச்ச போதையேகாலையில வரைக்கும் தீரல,அது பத்தாதுன்னு காலையில யாரோ தெரிஞ்சவுங்க கல்யாண வீடுன்னு போயிட்டு தண்ணியோட வந்துட் டாரு, கழுத எதுக்கு காசு இல்லைன்னாலும் செய்யலைன்னாலும் இதுக்கு எங்கன இருந்துதான் வருதோ தெரியலையே,ஒரு மனுசன் இப்பிடியெல்லாம் இருக்க கண்டமா, சொல்லுங்க,

”ஏதோ விருந்துக்கும் மருந்துக்கும்ன்னா சரிங்கலாம். எந்நேரமும் அதே வேளையா இருந்தா,தெனம் நைட்டு எது எப்பிடிப் போனாலும் குடிச்சே ஆக ணும் அவருக்கு.

“சரி குடிச்சி முடிச்சிட்டு வீட்டுக்கு வந்து கம்முன்னு சாப்புட்டு படுப்போ ம்ன்னு படுக்க மாட்டாரு,ஊரு கடையெல்லாம் சுத்திஅங்கன யாருகிட்டயாவது நொரண்டு இழுத்துக்கிட்டு வந்து நிப்பாரு,

“தெரிஞ்சவுங்கன்னா நான் போயி சமாதானம் சொல்லீட்டு வருவேன். பெரும் பாலும் இவரு தெரிஞ்சவுங்ககிட்டதான் இதுவரைக்கும் வம்பு பேசிருக்காரு வம்பு வச்சிருக்காரு. சண்டை இழுத்துருக்காரு,மாறி இழுத்தார்ன்னா அடிப் பூடுவான்னு பயமோ என்னவோ தெரியல.நானும் இது பத்தி அவர்கிட்ட கேட்ட தில்ல,

”அவரா எப்பவாவது சொல்லுவாரு,வீட்ல புள்ளைங்க இல்லாத நேரமா பாத்து,

”ஏய் இவளே நான் தண்ணியடிச்சி கெட்டுப்பொறேன்னு மட்டும் பெரிசா கொற சொல்லுறியே,என்னக்காவது தண்ணீயடிக்கிறத காரணம் காண்பிச்சி வீட்ட கவனிக்காம விட்டுருக்கேனா சொல்லு,

“அப்பிடி இருந்தா சொல்லு இந்த யெடத்துலயே நாண்டுட்டு செத்துப் போயி ருறேன்னுவாரு,

நான் சொல்லுவேன் பதிலுக்கு,அட ஏன்யா ஊர் ஒலகத்துல குடிக்காத ஆணு உண்டுமா சொல்லு,என்னமோ நீயி ஒண்டிதான் அதிசிய மயிரா குடிக்கிற மாதிரியில்ல பேசிக்கிற,

இப்ப நீயி வீட்ல ஆளா இருக்குறதும் ஒண்ணுதான் ,நாண்டுட்டு செத்துப் போ றேன்னுசொன்னதும்ஒண்ணுதான்,ரெண்டுக்கும் பெரிசா வித்தியாசம் ஒண்ணு மில்லைன்னு சொன்னதுதான் தாமதம் எந்த்ரிச்சி அடிக்கப்போரது போல வருவாரு கோபத்டோட /

கோபன்னா கோபம் அப்பிடி ஒரு கோபம் வரும் அவருக்கு,எல்லாருக்கும் மூக்குக்கு மேல கோபம் வந்தா அவருக்கு மட்டும் அவருக்கு மட்டும் மூக்கு க்கு கீழதான் கோவம் வரும் பாத்துக்கங்க,

அவ்வளவு கோபத்டோட வர்றவரு நிச்சயம் இன்னைக்கி அடிக்கிற அடியில ஒடம்பு கிழிஞ்சி தொங்கப் போகுது நார் நாரான்னு நான் நெனைச்சிக்கிட்டு இருக்குற வேளையில அவ்வளவு வேகாலமா படத்த தூக்குன மானிக்கி வந்தவரு அப்பிடியே படத்த கீழ போட்டுட்டு சடார்ன்னு பக்கத்துல உக்காந்து ருவாரு,

என்னதான் இருந்தாலும் அவரு நான் விரும்பி கட்டிக்கிட்ட ஆளு,லாபமோ நஷ்டமோ அனுபவிச்சித்தான ஆகணும் நானு.

”பக்கத்துலவந்துஉக்காருரவரு அப்பிடியே கல்யாணநாளன்னைக்கி என்னைய கோயில்ல பாத்த மாதிரியே பாப்பாரு,

அப்புறம் என்ன ரெண்டு பேரும் பழைய நெனைவுகள மூழ்கிக்கிட்டு இருக்கும் போதுதுத்துல புள்ளைங்க வந்துருங்க,

அப்புறம் எங்கிட்டு சின்ன வயசு நெனைப்பு,,,,அதுக்கு அழுத்தமா ஒரு முற்றுப் புள்ளி வைச்சிட்டும் அத அழிச்சிட்டும் மனசடக்கிக்கிட்டு இருந்துருவோம் ரெண்டு பேரும்/

அப்பிடியே ஏங்கிட்ட பேசிக்கிட்டு எந்திரிச்சி போறவருதான்,போயி வம்ப கையில கோர்த்துக்கிட்டு வந்து நிப்பாரு,,/

இவரு பண்ணுன வம்பு பஞ்சாயத்து ரூபமெடுத்து ஏங்கிட்டதான் வந்து நிக்கும் கடைசியில,

பஞ்சாயத்து என்ன பெரிய பஞ்சாயத்து, அந்த மானிக்கி கிழிக்கப் போறேன், நான் அந்தளவு பஞ்சாயத்து பேசுற அளவுக்கு பெரிய ஆளும் இல்ல,கைகட்டி நின்னு கேக்குற அளவுக்கு ஏங்கிட்ட பேச வர்ற ஆளுங்க சின்ன ஆளுங்களும் இல்ல,

என்னத்தையோ பழகுன பழக்கம்,கை குடுக்குது ஆளுங்கள சாமியா நெனை ச்சி பழகுனது, உசுரா நெனைச்சி நெருங்குனது பூரா இப்ப கைகுடுக்குது பாத்து க்கங்க,

அந்த பழக்கமும் நெருக்கமும் ஏங் பேச்ச அவுங்க ஏத்துக்குற அளவுக்கு கொ ண்டு வந்து நிறுத்தியிருயிருக்குன்னா நல்லதுதானே,,,

என்னத்தையோ அந்த நேரத்துல மனசுக்குள்ள ரெண்டு வஞ்சிக்கிட்டுனாலும் போயிருறாங்கல்ல,அரைமனசோடயும்ஓங்மொகத்துக்காகத்தான்விடுறேங்குறவார்த்தையோடயும்/

”சரி இத்தன வம்பு வீடு தேடி வருதே போயி வீட்டுக்குள்ள போயி சாப்புட்டுப் படுப்போம்ன்னு படுக்க மாட்டாரு, நானு அங்கிட்டு போன ஒடனே இங்கிட்டு எங்கனயாவது கடைக்கி போறேன்னு போயிருவாரு,

போனவாரம் இப்பிடித்தான் இது போல வீட்டுக்கு ஒரு வம்பு வந்துருச்சி, தெரி ஞ்சவுங்கதா,சொந்தக்காரங்க மாதிரின்னு வச்சிக்கங்களேன்,பேசி முடிச்சிட்டுப் போகும் போது ஏங் காதுக்கிட்ட வந்து ரகசியமா சொல்றா,அந்த வீட்டுக்காரம் மா,

“ஓங் வீட்டுக்காரராவது பரவாயில்ல,ஏங் வீட்டுக்காரரு கதைய வெளியில சொல்லீற முடியாதுன்னுட்டுப் போனா,என்னான்னு விசாரிச்சா அவரு கதை இத விட கண்றாவியா இருக்கு, ஏங் வீட்டுக்காரராவது தண்ணியப்போட்டுட்டு வாயி பேச்சா பேசீட்டு வந்துருவாரு,ஆனா அவரு அப்பிடியில்லயாம். தண் ணிய போட்டுட்டாருன்னா ஒரே ரகளதானாம், ரணகளம்தானாம், கையில கம்ப எடுத்துக்கிட்டு தெருவுல நின்னுக்கிட்டு ஒரே கரைச்சல்தானாம், யாரு சொன்னாலும் கேக்க மாட்டாராம்,அவருக்கு தெனசரி வேலைகுடுக்குற கட்டட காண்ட்ராக்டரு ஒரு ஆளுக்கு பேச்சுக்குதான் கட்டுப்படுவாராம்.

”அவரு சொன்னாத்தான் கேப்பாராம்.அவரும் என்னடா இது இவனோட பெரிய ரோதனையாப் போச்சு நித்தமுன்னு அழுத்துக்கிட்டு வந்து சத்தம் போட்டுட்டு போவாராம்.

“காண்ட்ராக்டரு சத்தம் போட்ட மறு நிமிஷம் போயிருவாராம்,அந்த வகை யில பாத்தா எங்க வீட்டுக்காரருக்கு அவரு கொஞ்சம் பரவாயில்லைன்னு தோணுது, எங்க வீட்டுக்காரரு தண்ணி உள்ள போயிருச்சின்னா யாரு சொன் னாலுமில்ல கேக்க மாட்டாரு.

“போன வாரம் இப்பிடித்தான் தண்ணியப் போட்டுட்டு கடைக்கி சாப்புட போயி ருக்காரு. கடை வாசல்ல பார்சல் வாங்க வந்த பையன் செல்போனு பேசிக்கி ட்டு நின்னுக்கிட்டு இருந்துருக்கான்,

“இவரு கடைக்கி சாப்புடப் போன மகராசன் சாப்புட்டுட்டுவரவேண்டியதுதான பேசாம,பொத்திக்கிட்டு/செல்போனு பேசுன பையனையே உத்து உத்து பாத்துக் கிட்டே இருந்துருக்காரு ரொம்ப நேரமா,

அவனும் பேச்சநிப்பாட்டுருறதுமாதிரி தெரியல போல இருக்கு,இவருக்குன்னா என்னடா இது நம்ம வந்து நின்னுகிட்டு இருக்குறோம்,இவன் நம்ம முன்னா டியேஇந்தப்பேச்சுபேசுறானேன்னு கடுப்பாயிருச்சி போலயிருக்கு,

அவன் என்ன செய்வான், இவருஎன்னபெரியகவர்னரா, இவரு போயி நின்ன எல்லாரும் இவருக்காகதான் வேலையப்போட்டுட்டு ஒழுக்கம் காட்டி நிக்கிற துக்கு. அந்தப் பையன் பேசுன பேச்சு இவருக்கு ஒரு மாதிரியாஇருந்துருக்கு போலயிருக்கு/

இவரும்கொஞ்சம்பொறுமையாத்தான்இருந்துருக்காரு,ஏதோபொம்பளப் புள்ள கூட பேசீருப்பான் போல,லவ்வு மேட்டரோ என்னவோ தெரியல,,,, மொறச்சி பாத்துக்கிட்டே இருந்தவரு போயி முதுகுல ஓங்கி சத்துன்னு அடிச்சிட்டாரு, தண்ணி வேகம், வெறும் வயிறு,,தலை நிறைஞ்ச போதை வேற, அடிச்சிபுட் டாரு,அவனும் வயசுப் பைய,அவனாட்டம் சிரிச்சி பேசிக்கிட்டு இருந்தவன எதிர் பாக்காத நேரத்துல அடிச்ச ஒடனே அவன் பேதலிச்சிப் போயிட்டான் பேதலிச்சி/

விழுந்த அடி கொஞ்சம் வேகமா விழுந்துருச்சி போலயிருக்கு,அடி விழுந்த வேகத்துல அவன் பேசிக்கிட்டு இருந்த சொல்போனு கீழ விழுந்து தெறிச்சிப் போச்சி/ இவனும், தள்ளமாடி கீழ விழப்போனவன் அந்நேரம் பாத்து கடைக்கி வந்தவரு மேல போயி சாய்ஞ்சதால தப்பிச்சிருக்கான்.இல்லைன்னா அன்னை க்கி கீழ விழுந்து அடிபட்டிருப்பான்னுதான் சொன்னாங்க, அடி விழுந்த வேகத் தோட அவன் போயி அவங்க வீட்டுல இருந்து அப்பா அண்ணன கூட்டிக்கிட்டு வந்துட்டான்.,வந்தவுங்களோட அக்கம்பக்காதர்க ரெண்டு பேரும், பையன் கூடப் படிக்கிற காலேஜ் பசங்களுமா சேந்து வந்துருக்காங்க, வந்த வுங்கள பாத்தாவது இவரு ஓரமா ஒதுங்கி வந்துருக்கலாம் ஒண்ணும் தெரி யாத மாதிரி,அங்கயே நின்னு சலம்பிக்கிட்டு இருந்துருக்காரு, பையனோட போன வுங்கபோனவேகத்துலஅவரு சலம்பிக்கிட்டு அலைஞ்சதப் பாத்ததும் இன்னும் கோபம் அதிகமாகி அடி அடின்னு அடிச்சிருக்காங்க,

அடின்னா அடி ஒங்க வீட்டு அடி,எங்க வீட்டி அடி இல்ல, சரியா அடி,,,,,,இவரு செஞ்சதுக்கு அவுங்க செஞ்சது சரிதான்னு சொன்னாலும் கூட அந்த அடி ஜாஸ்திதான்,

“பாவம் என்ன செய்வாரு மனுசன்,அடி தாங்க மாட்டாம கீழ விழுந்துருக்காரு, விஷயம் கேள்விப்பட்டு நாங்க போயி தூக்கிட்டு வந்தோம், அன்னை யில யிருந்து இன்னைக்கி வரைக்கும் கிட்டத்தட்ட ஆறு மாசமா மாறி மாறி ஆஸ் பத்திரிக்கும் வீட்டுக்குமா ஓடிக்கிட்டுதான் இருக்காரு,ஒண்ணு தண்ணியடிச்சி விழுந்துட்டா போயி சேந்துரணும்.இல்ல தெடகாத்திரமா இருக்கணும்.இப்பிடி ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் அலைஞ்சிக்கிட்டு இருந்தா கூட கெடந்து சீப்படுறது யாரு,,,,,?

வீட்டப் பாத்து பிள்ளைகளப் பாத்து பேரன் பேத்திகள பாத்து இவருக்கு ஆஸ் பத்திரியில போயி சவரட்னை பண்ணி முடிக்கிறதுங்குள்ள ஏங் தாவு தீந்து போகுது நித்தம்.

”சின்னவ மாப்புள மலேசியாவுல இருக்காரு,இப்பத்தான் போயி ஒரு வருசத் துக்கு பக்கத்துல ஆகப்போகுது,கல்யாணத்துக்கு அப்புறம்தான் ஏங் மாப்பிளை க்கு பாரின் போற யோகம் கெடைச்சிச்சி/

”அந்த வகையில அவுங்களுக்கு ரொம்ப பெருமை,ஏங் பொண்ண கட்டிக்கிட்ட ராசிதான் மாப்புள பாரின் போறயோகம்கெடைச்சிருச்சின்னு,இப்பக்கூடஅவரு அங்கதான் இருக்காரு,மகளும் பேரனும்தான் ஏங்கூடத்தான் இருக்காங்க,ஏங் பொண்ணு மாசமா இருக்கும் போது போனாரு, இப்ப புள்ள பொறந்துருச்சி, ஆம்பளப்புள்ள, ரெண்டு பேரும் ஏங்கூடதான் இருக்காங்க,நல்லா இருக்காங்க, அவள கட்டிக்குடுக்குறதுக்கு முன்னாடி எப்பிடி பாத்துகிடேனோ அது போலத் தான் இப்பவும் பாத்துக்கிடுறேன், இப்பக்கூட அவளுக்காகத்தான் நான் ஏங் நகைய வச்சி அவ நகைய திருப்பீட்டு போகலாம்ன்னு வந்தேன்,

“அந்த நகை என்னவோ அவளுக்கு ராசியாம், மூன்றரைப் பவுன் செயின்,அவ கல்யாணத்தப்ப போட்டது.மத்த நகைகளோட நகையா,/

இத்தனைக்கும் அது பழைய நகைதான். நான் போட்டுருந்ததுதான். அதுல என்ன அவளுக்கு பிடிச்சிருக்குதுன்னு தெரியல,ஒரு வேளை நான் வச்சிருந்த துன்னு செண்டிமெண்டா நெனைக்கிறாளோ என்னவோ தெரியல,எதையுமே வெளிய பேசிக்கிற மாட்டா,சொல்லிக்கிறவும் மாட்டா,எங்க அம்மா மாதிரி அவ, கமுக்கமான ஆளு.அமைதியா இருப்பா,ஆனா பிரச்சனையின்னு வந்து ட்டா அவ்வளவுதான் ஆள உண்டு இல்லைன்னு பண்ணீருவா/

அப்பிடி ஆளு அவ உடுத்துறதும் நகி போட்டுக்கிறதும் பாத்தா அவ்வளவு நறுவிசா இருப்பா,,,,,,

நூத்தம்பது ரூவா பூணம் சேலையின்னாலும் தேய்ச்சிதான் கட்டுவா,ஏதாவது ஒரு நல்லது கெட்டதுக்கு, வெளியூரு, கடை கண்ணி கோயில்,கொளம்ன்னு எங்கன போனாலும் அவளுக்கு அந்த செயின் வேணும்,அதுஇல்லைன்னா அவளுக்கு மொளுக்கட்டையா வெறும் கழுத்தோட போன மாதிரி ஒரு உணர்வு இருக்குதாம்,

“கழுத்து நிறைய எத்தன கெடந்தாலும் சரி அதுதான் வேணும்ங்குறா,என்ன செய்ய சொல்லுங்க,,,அதுதான் திருப்பலாம்ன்னு,,,,,,/

நாளைக்கி ஒரு விசேஷ வீடு. சுத்தி இருக்குற பத்து வீட்டுக்காரங்களுக்கு மத்தியில நாம ஏன் நம்ம கௌரவத்த விட்டுக் குடுத்து வெறும் கழுத்தோட போன மாதிரி ஒண்ணு ரெண்டு மட்டும் போட்டு அனுப்பனும்,கழுத்து நெறை ய போட்டுட்டு போகட்டுமே, என்ன இப்ப கொறஞ்சி போச்சி.அப்பறம் அதுக நாலு நாலு பேசும்,நம்மளால சும்மா இருக்க முடியாது இதையெல்லாம் கேட்டுக் கிட்டு/ கோபம் வரும்,ஏதாவது வேகாளாமா பேசிருவேன். இதெல்லாம் எதுக்கு வீணான்னுதான் நகைய திருப்பிருவோம்ன்னு திருப்பீட்டுப் போக வந்தேன் என்றவள் புத்தகத்திலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு போன விஷயத்தை யும் அவளது கணவனை கை தாங்கலாக கூட்டிக்கொண்டு போன தையும் அதன் முக்கியத்துவத்தையும் மனம் தாங்கிக் கொண்டிருந்த போது நீ சொன்ன விஷயம் மறந்து போனது இயல்பே, என்றான் மனைவி யிடம்/

சரி டீப்போடு குடிச்சிட்டுப்போயி இந்தா வாங்கீட்டுவந்துர்றேன், ரூபாயக் குடு,நீயி காலையிலகுடுத்த பணம் வண்டிக்கு பெட்ரோல் போட சரியாயிப் போச்சி, இனி ஏங்கிட்ட இருக்குறது ஒரு ஐம்பது ரூவாயிக்கு கொறவாத்தான் இருக்கும்.அத வச்சி எப்பிடி காய்கறி வாங்க சொல்லு,,,,என மனைவிடம் பணம் வாங்கிக் கொண்டு கிளம்பினான்,

இவன் போன நேரம் கடையில் ஓனர் இல்லை,கேட்டதில் வீட்டுக்கு போயி ருக்கிறார் என்றார் கடையில் இருந்த பெரியவர்.பொதுவாக அவர் இருந்தால் இவன் கடைக்குப் போவதில்லை,

இப்பொழுது கூட அவர் இல்லை என்கிற நினைப்பில்தான் போனான். அவரி டம் இவனுக்கு ஏதும் கோபமோ இல்லைகாழ்ப்புணர்வோ இல்லை. அவரிடம் காய்கறி வாங்குற பையில் ஏறகனவே தேங்காய் வெங்காயம் எதுவும் இருந் தால் இதெல்லாம்தான் எங்ககிட்ட இருக்குல்ல,ஏன் வேற கடையில போயி வாங்குறீங்க ,ஒண்ணு வாங்குனா எங்க கடையிலயே எல்லாம் வாங்குங்க, இல்லையின்னா வெங்காயம் தேங்காய் வாங்குற கடையிலயேமத்த காய் கறிகள வாங்கிக்கங்க என்பார்,

அது மட்டும் இல்லை,அப்படியாய் போகிற நாட்களில் காய்கறிகளின் விலை யை எக்குத்தப்பாக சொல்லுவார்.

தவிர பேச்சில் பழக்கத்தில் ஒரு ஒழுங்கு இருக்காது,ஏதோ அவர் இருக்கிற கடையில் காய்கறி வாங்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்கிறது போல பேசுவார்.

போன தடவை கடையின் ஓனர் இல்லாத போது வாங்கிய காய்கறிகளின் வி லை அதிகம் போல் பட மறுநாள் காய்கறிகளின் விலை குறித்திருந்த பேப் பரை கடை ஓனரிடம் காட்டி கேட்ட போது எல்லாம் பார்த்து விட்டு விலை அதிக மாக போட்டிருந்த காய்கறிகளுக்கு உரிய விலையை மட்டும் குறித்துக் கொண்டு அதிகமான மிச்சத் தொகையை கொடுத்து விட்டார்,

இது ஒரு மாதிரி பெரிய கொடுமை சார், ஒங்ககிட்ட அதிகமா வெலை சொல் லி வித்த காய்கறிகளுக்கான காச கல்லாவுல போட மாட்டாரு,

காய்கறிகளுக்கு நான் என்ன வெலை நிர்ணயிச்சிருக்கேனோ ,அந்த வெலைய மட்டும்கல்லாவுல போட்டுட்டு மிச்சத்தை ஆந்த மனுசன் பாக்கெட்டுல போட் டுக்குருவாரு இதுவரைக்கும் ஒங்களப் போல பத்து பேருக்கு மேல சொல்லீ ட்டாங்க சார் இந்தமாதிரின்னு,,,/

என்ன இருந்தாலும் அவுங்க சம்பளக்காரங்கதான சார்.அதுக்கு தகுந்தாப்புல தான் அவுங்க வேலை இருக்கும்,

“நம்ம இருக்குறதப் போல இருக்காதுன்னு தெரியுதுதான் சார் ,ஆனாலும் என்ன செய்ய சொல்லுங்க,கரெக்டா நீங்க ஆபீஸ் விட்டு வர்ற நேரம் பாத்து பள்ளிக்கூடம் விட்டு வர்ற ஏங் புள்ளைங்கள வீட்ல விடுறதுக்காக நான் வீட்டுக்குப் போக வேண்டியிருக்கு.

பொம்பளைப் புள்ளைங்க, தனியா அதுகள வீட்டுக்கு அனுப்பவும் பயந்து கெட க்கு,ஒண்ணுமாயிறப்போறதில்லபெரிசா,அதுகபாட்டுக்குசைக்கிள்ல போயிட்டு சைக்கிள்ல வரப்போறதுகதான்.

ஏரியாவுல நாலு விருதாப் பையலுக சுத்திக்கிட்டு போறவர்ற பொம்பளப் புள்ளைங்கள கேலி பண்ணவும் வம்பு பேசவுமா இருக்காங்கெ,அதுக்குதான் கொஞ்சம் யோசிக்க வேண்டியதிருக்கு,

வீட்ட மாத்தலாம்ன்னா இப்ப இருக்குற ஏரியாவுல நல்ல பழகியாச்சு,தாயா புள்ளையா அவுங்க வீட்டு விசேஷங்களுக்கு நாங்க போகவும் எங்க வீட்டு விசேசங்களுக்கு அவுங்க வரவுமா இருக்குற அளவுக்கு ஆகிப்போச்சி,

இனி இத விட்டு எங்கிட்டுப்போறது கூட்டபிரிச்சிட்டுப்போற மாதிரி, அது எலி க்குப் பயந்து வீட்டக்கொழுத்துனது போலவும் ஆகிப்போகும்.

கழுதப்பயலுக,எத்தன காலத்துக்கு இப்பிடியே இருந்துருவாங்க,இல்ல இருந்து ற முடியும், என்னைக்காவது ஒரு நா அந்த சாக்கடைய விட்டு வெளியில வந்துதான ஆகணும்,அப்பத்தெரியும் அவனுக்கு அருமை,

அவனும் தாய் புள்ளைகளோட பொறந்தவந்தான சார், அவனுக்கும் அம்மா, அக்கா தங்கச்சின்னு இருக்கத்தான செய்வாங்க,,,?

வருவாங்கெ சார் திருந்தி ஒரு நா முழு மனுசனா, அப்பம் தெரியும் இந்த வாழ்க்கையோட அருமை,

நம்மளெல்லாம் நம்ம காலத்துல எத்தனை பாத்துருக்க மாட்டோம் சார்.

நம்ம புள்ளைகங்க மேல நமக்கு நம்பிக்கை இருக்கு,அது ஒழுக்கமா போயி ஒழுக்காமத்தான் வரும்ன்னு/

நம்ம புள்ளைங்களப்பத்தி நமக்கு தெரியாதா என்ன,இருந்தாலும் காலம் கெட க்குற கெடையில எதையும் நம்ப முடியாமத்தான இருக்கு அதுக்குதான் நானே கொண்டு போயி விட்டுட்டு வர்றேன்,என்றார் கடைக்காரர்,

அவர் பேச்சை கேட்டு விட்டு காய்கறிகளை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்த பொழுது மணி இரவு எட்டாகிப் போயிருந்தது,

வாங்கி வந்த காய்கறிகளை கொடுத்து விட்டு கைகால் கழுவி விட்டு சாப்பி ட்டு படுத்த வேளை எப்பொழுதும்போல் இல்லாமல் சீக்கிரம் தூங்கி விட வேண்டும் என்கிற முடிவில் ஒன்பது மணிக்கெல்லாம் சாப்பிட்டு விட்டான்,

பின் கொஞ்சம் டீவி,கொஞ்சம் பேச்சு ,கொஞ்சம் படிப்பு என கலந்து கட்டிய வையாய் செய்து முடித்து விட்டு படுக்கலாம் எனப் போகும் போது கனத்துக் கொண்டிருந்த இமைகள் கண்களைப் போர்த்திக் கொள்ள மறுப்பவையாய் இவனுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தது, 

ஒன்று தூக்கம் கொள்வதானால் தூங்கிப்போ,இல்லையானால் வா விழிப்பி ன் கை பிடித்துக் கொண்டு நகர்வோம்,களி கொள்வோம் வாழ்க்கையில் வா என்னுடன் என தூக்கமும் விழிப்புமாய் மாறி மாறி இவனை இம்சித்துக் கொண்டிருந்த வேளையில்தான் வீட்டிற்கு வெளியெரெ சடசடவென சப்தம் கேட்கிறது,

வெளி லைட்டை போட்டு விட்டுகதவை திறந்து கொண்டு எட்டிப் பார்க்கிறான்,

அங்கே வானத்திற்கும் பூமிக்கும் நட்டு வைத்த வெள்ளிக் கம்பிகளைப் போல சரம் சரமாய் மழை பெய்து கொண்டிருந்தது.

இந்த நள்ளிரவில் மழை பார்க்கிற பாக்கியம் எத்தனை பேருக்கு வாய்த்திரு க்கிறது எனத் தெரியவில்லை, இவனுக்கு வாய்த்திருந்தது.இப்படி ஒரு மழை இந்நேரத்தில் பெய்யும் என இவன் எதிர் பார்த்திருக்கவில்லை.

பெய்யட்டும் மழை ,நனையட்டும் மண்ணும் மனதும் என இவன் மழை பார் த்துக் கொண்டிருந்தான் கை கட்டி நின்றவனாய்/

பெய்து முடித்த மழையின் ஈரம் இன்னும் காயாமலும் அப்படியே பச்சையா யும் தன் நிறம் காட்டியுமாய்,/

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

பலர் வீடுகளில் இப்படித்தான்
வெகு நேர்த்தியாய் படம் பிடித்துக் காட்டியுள்ளீரகள்
நன்றி நண்பரே
தம +1

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக,,,/

'பரிவை' சே.குமார் said...

மிக நீண்ட பகிர்வு...
அருமையாய்....
வாழ்த்துக்கள் அண்ணா.

vimalanperali said...

வணக்கம் சே குமார் அண்ணா,கதையின் போக்கு கொஞ்சம் நீளம் காட்டி இழுத்துச் சென்று விடுகிறதுதான்.