24 Jan 2018

டயல் டோன்,,,,,,

போன் பண்ணியது ராஜியாகவும் எடுத்தது இவனாகவும் ஆகித்தெரிகிறார்கள்.

அந்த ஆயிரம் சதுர அடி வீட்டில்,பாத்ரூம்,ஜன்னல்,கிச்சன்,சிங்க்,ஹால்,டைல் ஸ் வராண்டா,புதிதாக பூசப்பட்ட பெயிண்ட் என எல்லாம் கலந்தது மட்டுமில் லை வீடு,

வீட்டின் முன்னால் அழகுக்காக எத்தனை எத்தனை செடிகள் ,மற்றும் பூந் தொட்டிகள் வைத்திருந்த போதிலும் முல்லைசெடி ஒன்று படர்ந்து மாடி மேல் ஏறி நின்றிருந்த போதிலும் கூட மனிதர்கள் குடி இருந்தால்தான் அது வீடாய் பட்டுத்தெரிகிறது இல்லையேல் அது வெறும் செங்கலும் சிமெண்டும் கலந்து நிற்கிற அசையாப் பொருளே என்பாள் ராஜி.

“டேய் போடா டேய் நீ போயிக்கிட்டு இங்கயிருந்து மெனக்கெட்டுப் பத்து கிலோ மீட்டர் தள்ளிப்போயி செடிக வாங்கப் போறானாமுல்ல.அதுவும் என்ன செடின்னு கேட்டா பூச்செடி,பூக்காத செடின்னு சொல்ற.போடா வேல மெனக் கெட்டவனே,,,போடா போயி மத்த வேலைகள கவனி,

“செடி வைக்கிறது மரம் வளக்குறது மண்ணு போடுறது குரோட்டன்ஸ் வைக் கிறது வீட்டுக்கு முன்னாடி பூந்தொட்டி வைக்கிறது எல்லாம் சரிதான்,எல்லாம் வாஸ்தவம்தான்.நல்லாச்செய்யணும்தான். இன்னும் சொல்லப் போனா அதை கவனமா பராமரிக்கணும்தான்.

”ஆனா அதுக்கு முன்னாடி செடிகள் நட தோண்டுற குழிகளுக்கு பக்கத்துலயும் வீட்டச்சுத்தியும் கொஞ்சம் மனிதாபிமானத்த நட்டு பதியம் போடு.இது போல செடிகளையும் கண்டுகளையும் தேடிக்கிட்டு அங்கிட்டு இங்கிட்டு அலையாம பேசாம, ஏங் வீடு இருக்குற ஏரியாவுல வந்து கேளு,அங்க கெடக்கு நர்சரி கார்டன் ஒண்ணுக்கு ரெண்டு,என்பாள் ராஜி ,

“என்னடா இது இப்பிடி பேசுறாளேன்னு நான் செடி கொடிக வைக்கிறதுக்கு எதிரின்னும் அது வைக்கிறது அனாவசியம்ன்னு சொல்றேன்னு நெனைக்க வேணாம்.

“ஏங் வீட்டுக்கு வந்து பாரு,எட்டு நூத்தி சொச்சம் சதுர அடிதான் வீடு ,வீட்டச் சுத்தி வெறும் மரமும் மட்டையும் செடியும் செத்தையுமாத்தான் கெடக்கும், என்ன சில பேரப்போல அலங்காரத்துக்காக மரம் வளக்காம,செடி நடாம செடி யும் மரமும் இருந்தாலும் அது பிரயோஜப்பட்டு இருக்கணுமுன்னு நெனைக்கி றேன்,வளக்குறேன்,

“கத்திரிக்கா,வெண்டைக்கா,தக்காளின்னு செடிகளும் முருங்கை மரம்,வேப்ப மரம் கருவேலை பப்பாளின்னு வளக்குறேன்.அது வீட்டு தேவைக்கும் ஆகிப் போச்சி,உடல் உழைப்புக்குமா நல்லதுன்னு ஆகித் தெரியுது.

”காலையில எந்திரிக்கிறவ செடிக மொகத்துலதான் போயி கண்ணு முளிக்கிற து,  தக்காளி பப்பாளி வெண்டைன்னு ஒவ்வொரு செடிபக்கத்துலயுமா ஒக்காந் து அதோடவாசனைய உள்வாங்கி அதோட மூச்சுக்காத்தும் என்னோட மூச்சுக் காத்தும் மோதி சுக்கிறத கண்டுட்டு செயும் மரங்களும் ஏங்கிட்ட வெட குடுக்கும்.நானும் செடிககிட்டயும் மரங்க கிட்டயும் ஏதாவது வேலை இருக்கா என்ன ஏதுன்னு கேட்டுக்கிட்டும் பாத்துக்கிட்டும் போயிருவேன் வேலைப் பாக்க,

”தினசரிஅந்த வேப்ப மரத்து ஓரத்துலயுமா இருக்குற அகத்திச்செடியில இருந் து கொழைகள ஒடிச்சிக்கிட்டு போயி குடுத்துட்டு வருவேன், அது விக்கிறதுக் குன்னு இருக்குற யெடத்துல போயி,,,,,

”செடிகளும் மரங்களும் சும்மா அழகுக்காக வளக்குறதுல எனக்கு ஈடுபாடு இல்ல.அது வளக்குறதுனால நமக்கும் பிரயோஜனமா இருக்கணும்,,,,” என சொல்லிவிட்டு நகர்வாள் அவள்.

சரி இருக்கட்டும் அவளது எண்ணம் அது,என விட்டு விடுவான் இவன்,

அவள் சொல்வது போல பிரயோஜனம் மட்டுமே படுகிற விஷயங்களை செய்து கொண்டிருந்தால் அழகுக்காகவும் மற்ற மற்ற பயன் பாட்டிற்காகவும் மெனக்கெடுவதும் அதற்காக வேலைசெய்வதும் யார் பொறுப்பும் வேலையும் ஆகும் என்பான் ராஜி அப்படிச்சொல்லிச் செல்கிற நேரங்களில்/

”அவளுக்கு வேற வேலையில்ல பொழுதன்னைக்கும் யாருக்காவது ஏதாவது போன் பண்ணிக் கிட்டே இருப்பா,என்னாவாம் இப்ப என கோபப்படுவான் ராஜியின் போன் வருகிற நேரங்களில்/ ஏன் இப்ப இவ்வளவு கோபப்படுறீங்க, நம்மள விட்ட அவளுக்கு வேற யாரு இருக்கா,நமக்கு அவளும் அவளுக்கு நாமளும் பரஸ்பரம் தோள் சாஞ்சிக்கிற வேண்டியதுதான்.அவளும்தான் என்ன செய்வா பாவம்,,,,,”என இவனது மனைவி பரிதாபப்படுகிற ராஜிக்கு இங்கு திருமணம் செய்து வருகிற போது அவளுக்கென்ற இடத்தில் யாரும் அவளது அருகில் இல்லை.

அவளது தோள் தொடவோ அவளை அரவணைத்துக்கொள்ளவோ அவளை வாஞ்சையாய் உச்சி முகர்ந்து தோள்சாய்த்துக்கொள்ளவோ ஆள் இல்லை அருகில்,

கணவன் காலையில் வேலைக்குப்போனால் மாலை அல்லதுஇரவு ஆகிப் போ கும் வேலையிலிருந்து திரும்ப,

அவளது கணவனைப்போல்தான் இவனும் யூனியன் வேலை அல்லது அலுவ லக வேலை என அலைந்து கொண்டிருப்பான், கேட்டால் ”பையிலிருக்கிற இரண்டு ரூபாய் பேனாவிலிருந்து நான் சாப்புடுகிற சாப்பாடு வரை இந்த அலுவலக வேலை கொடுத்தது,அது மட்டுமல்லாமல் இந்த சமூகம் எனக்குக் கொடுத்திருக்கிற அந்தஸ்த்து வீடு வாசல்,பேறு இன்னும் இன்னுமான மற்ற ,மற்ற எல்லாமும் கொடுத்தது இந்த வேலைதானே ,அப்படி இருக்கிற போது என்னஎனது அலுவலகத்திற்காகவும் யூனியனுக்காவும் என்னை ஒப்புக் கொடு க்காமல் எப்படி இருப்பேன் சொல்லுங்கள்” என்பான்.

அப்படியான ஒப்புக்கொடுத்தலில் இது போலான தாமதங்கள் தவிர்க்க இயலா ததாகிப் போகிறதுதான் என்பான்.

“ஆமாமாம் இப்பிடியே பேசிக்கிட்டே இருங்க, ஒரு நா இல்லாட்டி ஒரு நா ஆபீஸீ,,,,,,ஆபீஸீ தலையபிச்சிக்கிட்டு ரோட்டுல அலையப் போறீங்க, நாங்க ளும் பாக்கத்தான் போறோம் என்பாள்” இவனது மனைவி.

”அட விடும்மா என்ன இப்ப கெட்டுபோச்சி அதுனால அப்பிடியே அலைஞ்சா லும் ஆபீஸூசு பேரச்சொல்லித்தான அலையிறேன்,பொழப்புக் குடுத்த ஒருத் தர ரோடபேரச்சொல்றதஎப்பிடி பெருமையாவும் கடமையாவும் நெனைக்கிற மோ அது போல இதயும் சொல்ல வேண்டியது நம்ம கடமையும் பொறுப்பும் தான,இல்லையா,,,,” என்கிற இவனது பதில் பேச்சில் மனச்சமாதானம் ஆகிப் போவாள் மனைவி.

வேலைக்குப் போய் விட்ட இவன் வீடு திரும்பி வருகிறது வரை அவளுக் கும் வேலை சரியாக இருக்கும்,

துணி துவைக்க பாத்திரம் விலக்க,வீடு சுத்தம் செய்ய,,,,என இதர இதரவான வேலைகள்,,,,/

அது முடிந்து கடைக்குப்போய் காய்கறி மற்றும் தேவையான சாமான்கள் வாங்கப்போகிற போது கடைகார சாமியண்ணன்தான் சொல்லியிருந்தார். ”இது மாதிரி ஒங்க ஊர்க்காரப்பொண்ணுதான் இங்க கல்யாணம் கட்டி வந்து ருக்கு, பாத்தா பாவம் பூஞ்சை பூத்த புள்ள போல ஒடம்பு வத்திபோயி ஙேன்னு நிக் குது பாவம்,இன்னைக்கி காலையில கடைக்கி வந்திச்சி,பாவம் ,கடைக்கு வந்த பொம்பளைங்க பூராம் சேந்து அத பாடாபடுத்தீருச்சி.பாதிஜாடைபேசுதுக, பாதி சிரிக்கிதுக கெக்கபிக்கேன்னு,அதுல ஒண்ணுன்னா நேரடியா போயி கேட்டுருச்சி, ”என்னம்மா ஒங்க வீட்டுல ஒன்னைய சோறு கீறு போட்டு வளத்தாங் களா இல்ல வெறும் பச்சத்தண்ணிய ஊத்தி வளத்தாங்களான்னு சொல்லவும் குனிஞ்ச தலை நிமிராம வீட்டப்பாத்து போயிருச்சி.

”அப்பறம் ஏங் வீட்டுக்காரி போயி கூட்டிக்கிட்டு வந்தா சமாதானம் சொல்லி, நாந்தான்அதுவரவும்,ஏம்மா இப்பிடி இருந்தா எப்பிடி,,,, தைரியமா இருக்கணும் பொம்பளப்புள்ள,வீட்டுஆம்பளைங்க ஒன்னய நம்பித்தான வீட்ட ஒப்படைச்சிப் போயிருறாங்க.நீ என்னடான்னா கடைக்கி வர்ற பொம்பளைங்க பேசுன பேச் சுக்கே இப்பிடி மனம் கோணிப்போறியே,,,,

“எப்பயோ கடைக்கி வர்றஒனக்கே இப்பிடி இருக்குன்னாநாங்கள்லாம் வருசம் பூராம் கடையே கதின்னு கெடக்கோம்.

“இந்தாஇருக்காளேஏங் பொண்டாட்டி இவளும் இப்பிடித்தான் ஒன்னையப் போலத்தான்.ஆரம்பத்துல கடையில நிக்க பலியா பயப்புடுவா,யாராவது கடை க்கி வர்ரவுங்க கொஞ்சம் சத்தம் கூட்டி வெல கேட்டுட்டுட்டாலே நடுங்கிப் போவா நடுங்கி,அப்பறமா மெல்ல மெல்லஅவளும் தைரியம் வந்தவளா ஆயி ட்டா, இப்ப நா அவள நம்பி ரெண்டு நாளைக்கிக்கூடகடையப் போட்டுட்டுப் போயிருவேன்.அவயாருகிட்டஒரக்கப்பேசணும்,யாருகிட்டபதனாம பேசணும். கடைக்கி சரக்கு போட வர்ற யேவாரிககிட்ட எப்பிடி பேசணும்,கடைக்கி சரக்கு போட்டுக்கிட்டு வர்றவன் கிட்ட எப்பிடி பேசணும்ன்னு நல்லா கத்து வச்சிக் கிட்டா பாத்துக்க,

“இப்பிடித்தான் கடைய விட்டுட்டு ஒரு நா வெளியூர் போயிட்டேன்,வழக்கமா கடைக்கி வர்ற ஆளு ஒருத்தன் தண்ணியப் போட்டுட்டு வந்துருக்கான்.நான் இருந்தேன்னா அவன ஒரு மாதிரி அவன் பாஷையிலயே பேசி சமாளிச்சி அனுப்பீருவேன்,

“வந்தவன் அப்பிடி ஒண்ணும் மோசமான ஆளு கெடையாது,நல்லவந்தான், அவன் நல்லவங்குறத அவன் குடிச்சிருந்த தண்ணி நம்ப விடமாட்டேங்குது, வந்த பைய என்னமோ பலசரக்கு கேட்டுருக்கான்,ஏன் பொண்டாட்டி காசு கேட்டுருக்கா,வருசமெல்லாம் கணக்குல வாங்குறவன்கிட்ட காசு கேட்டதும் கோபம் வந்துருச்சி அவனுக்கு,

என்ன இது ஏன் இப்பிடி கேக்குறீங்க,வழக்கமா கடன் சொல்லி வாங்குற வந் தான,துட்டெல்லாம்டான்னுகுடுத்துருவேனேல்ல,,,அப்பறம்எதுக்குகாசு கேக்கு றீங்க, நான் தண்ணி போட்டுருக்கேன்னு என்னைய நம்ப மாட்டீங்கிறீங்களா ன்னு,,,,”ஒரே சத்தம் ஆகிப்போயிருக்கு.

”ஏங்பொண்டாட்டிக்கு என்ன பயம்ன்னா நிதானமில்லாம இருக்குறவன நம்பி யேவாரம்பண்ணுனமுன்னா நம்ம காசுக்கு பங்கம் வந்துரும்ன்னு பயந்துட்டா, அவனும் விடுற மாதிரி இல்ல ,இவளும் சரக்கு குடுக்க மாட்டேன்னு ஒரே பிடிவாதமா இருந்துட்டா,,,,

அவன் பேச பதிலுக்கு இவ பேச இவஇவ்வளவு பேச்சு பேசுனப் பெறகு இனிம கடைக்கிட்ட நின்னயின்னா மானம் மருவாதி கெட்டுப்போகும் பாத்துக்கன்னு சொல்லவும் அவனுக்கு கோவம் ஜிவ்வுன்னு தலைக்கி ஏறிருச்சி,

“நல்ல மதிய வெயில் நேரம் ,தலைக்கி ஏறுன போதை,வயித்தக்கிள்ளுன பசி கேட்ட சாமான் தராத அவமானம்,,,,,எல்லாம் ஒண்ணா சேர தலைக்கி ஏறுன கோவத்தோடஎன்னபேசுறமுன்னேதெரியாமஎசக்கேடா பேசீருக்கான், பொறுத் துப் பாத்த இவளும் மனசு பொறுக்க மாட்டாமயும் கோவத்த அடக்க மாட்டா மயும் வீட்டுக்குள்ள போயி அருவாமனைய எடுத்துக்கிட்டு வந்துட்டா, ஒழுக்கமா ஓடிப்போயிருடா நாயின்னு,,,,

“ஏண்டா தண்ணி போட்டா தாய்க்கும் தாரத்துக்கும் வித்தியாசம் தெரியாம போயிருமாஒனக்கு.போதையிலபோயிஆத்தாள இழுத்துருவியா நீயி, நாயே,,, ஒங் மக வயசிருக்குமா எனக்கு என்னையப்போயி படுக்கைக்கு கூப்புடுற யேடா தராதரம் கெட்டவனே, ஒழுக்கமா ஓடிப்போயிரு,இல்ல அருவா மனை யாலயே வெட்டி கொன்னுபோடுவேன் கொன்னு பாத்துக்கன்னு சத்தம் போடவும் கடைக்கி வந்த ஆள்களும் தண்ணியடிச்சவரு குடியிருக்குற வீட்டு க்கு பக்கத்துல இருக்குறவுங்களுமா சேந்து ஏங்பொண்டாட்டிக்கு சமாதானம் சொல்லீட்டு அவன கூட்டிக்கிட்டுபோயிருக்காங்க,,,

“ஆரம்பத்துல கடையிலநிக்கறதுக்கே பயப்புட்ட ஆளு,எப்பிடி ஆயிட்டா பாத்தி யா எல்லாம் சூழ்நிலைதான், நமக்கு என்ன தேவையோ அதுதான் நம்ம பொ ழப்ப தீர்மானிக்கிது பாத்துக்க,நீயி வாட்டுக்கு அப்பிடியே ஒரம் கட்டியே நின்னயின்னா ஒன்னைய ஓரமா கொண்டு போயி நிறுத்தீரும் ஊரு,

“நீ வாட்டுக்கு வா கடைக்கி,என்ன பலசரக்கு தேவையோ நான் தர்றேன்,ஓங் வீட்டுக்காரருஏங்கிட்டசொல்லீட்டுபோயிருக்காரு,சரக்குவாங்காட்டிகூடஇந்தா இருக்கா ஏங் வீட்டுக்காரி அவ கூட ரெண்டு பேச்சு பேசிக்கிட்டு இரு,என்ன யேவாரம் என்ன வெலைக்கி வாங்கிறீங்க,என்ன வெலைக்கி விக்கிறீங்கன்னு கேளு,சொல்லுவா,அத விட்டு சும்மா வீட்டுக்குள்ளயே அடைஞ்சி கெடந்தை யின்னு வையி,மனசும் ஒடம்பும் கெட்டுப்போகும்,ஒடம்பு கெட்டுப்போனாக் கூட பாத்துக்கலாம்,மனசு கெட்டுப்போச்சின்னா ரொம்ப செரமம்மா பாத்துக் கோ,,, என கடைக்காரர் சொல்லிய நாளிலிருந்து  இப்பொழுதெல்லாம் அடிக் கடி கடைக்கு வருகிறாள்.

”அவளும் வர்றா,முன்னப்போல இல்லாம இப்ப கூச்சமத்து பழகுறா, கடைக்கி வர்ற பொம்பளைங்க யாராவது வாய் குடுத்தா சமாளிக்கிறா நின்னு,,,என கடைக்காரர் சொல்லிய நாளின் முன் பகலில்தான் அவளை பார்க்கிறாள் இவனது மனைவி.

”கொஞ்சம் இருங்க, இதோ அவ வர்ற நேரம்தான்,வந்தப்பெறகு பேசிக்கங்க ,நான் வேணுமுன்னா அறிமுகம் செஞ்சி வைக்கிறேன்” என கடைக்காரர் சொல்லியதும் இவனதுமனைவி அங்கேயே உட்கார்ந்து விட்டாள்.

உட்கார்ந்தநேரத்திற்கு பொழுது போக வேண்டுமே,,,, என்ன செய்வாள் பாவம். காய்கறி கீரை பலசரக்கு என கொஞ்சம் மற்றும் கடையில் இருக்கிற சேவு மிக்சர் என கொஞ்சம் கொஞ்சம் வாங்கிக் கொண்டாள்.

இவனுக்கு சேவு மிக்சர் என்றால் பிடிக்கும் ,சாப்பாட்டைக்கூட தள்ளி வைத்து விடுவான்,சேவு மிக்சர் என்றால்/

அந்தளவிற்கு அவனுக்கு மனம் பிடித்த பண்டங்களின் லிஸ்ட்டில் சேவும் மிக்சரும் இடம் பிடித்திருக்கும் கண்டிப்பாக.

அவனது நண்பர்களும் கூட்டாளிகளும் உறவினர்களில் சிலரும் கூட இவனை கேலி பேசுவதுண்டு அவ்வப்பொழுது,போடா சேவு திண்ணிப் பயலே என, இதற்கெல்லாம் மேலாகப் போய்இவன் மச்சினன் கேலி பண்ணுவான், ”பேசாம நீங்கஎங்கஅக்காளகட்டுனதுக்கு யாராவது சேவுக்கடைக்காரரு வீட்டுல பொண் ணு எடுத்திருக்கலாம்.சேவு மிக்சரு வாங்குற செலவாவது மிஞ்சும். என்பான் ,,,,இவனும் சிரித்துக் கொள்வான் அதற்கு,,

கடைக்காரர்தான்கூப்பிட்டுஅறிமுகப்படுத்தினார்,அவளைஇவன்மனைவிக்கு,,/ சிறிதுநேரம் அவளைப் பார்த்தவள் ”ஆமா நீ பாரிஜாதம்தான புள்ள,,,” என்று விட்டு படக்கென நாக்கை கடித்தவளாய்”பாரிஜாதம்தான நீங்க”என பேச்சை ஊன்றினாள்.

அவளும் ஆமாம் என தலையை அசைத்தவளாய் இவனது மனைவி அருகில் வந்து நின்று கொண்டாள்,பஞ்சாரத்திற்கு ஒதுங்கி நிற்கிற கோழியைப்போல/

இவனது மனைவியும் அடை கொண்ட குஞ்சை தாய்க்கோழி காப்பது போல காத்து வீட்டிற்கு கூட்டி வந்தாள்.

அவள்அப்படிகூட்டிவந்தநேரம்மதியப்பொழுதாய் இருந்தது,சாப்பிட்டயா எனக் கேட்டதற்கு சாப்பிட்டேன் என்றாள்.அப்புறம் ஏங் மொகம் வாடிப் போயிக் கெடக்குஎன்றதற்குஇல்லைகாலையிலசாப்பாடு லேட்டாத்தான் சாப்புட்டேன்,  அதுனாலத்தான் அப்பிடி சொன்னேன் என்றாள்,

வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்து வீட்டுக்கு போகணும் அவரு வேலை விட்டு வந்துருவாரு என்றபடியே இருந்தாள்,

“அட சும்மா கெட வரட்டும் அவரு இப்ப என்ன அப்பிடி வந்தா கொஞ்ச நேரம் காத்துருக்கட்டுமே,,,,

“மொதல்ல அமைதியா மனசடக்கி ஒரு யெடத்துல உக்காரு நீ,ஓங் வீட்டுக் காரருபோன் நம்பரக்குடு நான் பேசிக்கிறேன்,,,” என அவரிடம் பேசிய போது அவரு நான் வேலை முடிஞ்சி வர நைட் எட்டு மணி கூட ஆகிப்போகும் என்றிருக்கிறார்,

”சரி நம்ம வீட்டுல இருக்குறதுக்கு சங்கடப்பட்டுக்கிட்டுதான் சொல்றான்னு நெனைச்சிக்கிட்டு சரி மொதல்ல சாப்புடு நீ,இல்ல எங்க வீட்ல சாப்புட புடிக் கைலையின்னா வா அப்பிடியே நடந்து போயி போஸ்ட் ஆபீஸ் முக்குல இருக்குற கடையிலசாப்புட்டுட்டுவருவோம். என இவன் மனைவி சொன்னத ற்கு அரை மனதுடன் சரி என சொல்லிவிட்டாள்.

கடையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதுதான் சொன்னாள்,அவள்.

இது போல கடைக்கி வந்தெல்லாம் எனக்கு பழக்கமேஇல்ல.சின்னப் புள்ளை யில அப்பா வீட்டுல வளரும் போதும் சரி,இப்ப கல்யாணம் ஆகி வந்துட்டப் பின்னாடியும் சரி,இது நா வரைக்கும் ரோட்டுல போகும் போதும் வரும் போதும்தான் கடைய ஏக்கத்தோட பாத்துருக்கேனே தவிர்த்து கடைக்குள்ள வந்ததோ உக்காந்து சாப்புட்டதோ இல்ல,.,,,,என சொன்னாள்.

அவள் அப்படி சொல்லும் போது அவளது கண்களில் கண்ணீர் கட்டி விட்டிருக்கிறது.

“ஒங்களுக்கே தெரியும்க்கா,நான் ஊர்ல வளரும் போதும் படிக்கும் போதும் இப்பிடித்தான் இருந்தேன்,நாலு பேரு கூட நல்லா பழகாம தைரியமில்லாம இருந்தேன்,அது இப்பவரைக்குமா தொடருது.

”ஏங் வீட்டுக்காரரு கூட சொல்றாரு.நாலு பேரு கூட நல்லா பழகி நாலு பேரு இருக்குற யெடத்துக்கு போயிட்டு வந்துக்கிட்டு இரு தைரியம் தானாவரு மு ன்னு,

எனக்குக்கூட அவரு சொல்லும் போது ஒண்ணும் பெரிசா தெரியல. என்னத்த இனிமே போயி தைரியமா இருந்து என்ன பண்ணப்போறோமுன்னு தோணு ச்சி,ஆனா அன்னைக்கி கடைக்காரரு அவரோட பொண்டாட்டி கதைய சொன் னத கேட்டதுல இருந்து எனக்கும் அப்பிடியெல்லாம் தைரியமா இருக்க ணு முன்னு தோணுதுக்கா,இருக்கணுமுன்னு முடிவும் பண்ணீட்டேன்,,,, என்ற வாறு சாப்பிட்டு முடித்து வெளியே வந்தார்கள்,

No comments: