23 Apr 2018

பழையதின் நீட்சியாய்,,,,


முதன் முதலாய் இரண்டு ரூபாய்க்கு வாங்கியதாய் ஞாபகம்,
அப்போதெல்லாம் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன,

ரோஸ்க்கலரும் ஆரஞ்சு நிறமும் கலந்து இருந்த இரண்டு ரூபாய் தாளும்,சாம்பல் பூத்தகலரில் இருந்த ஒறறை ரூபாய்த்தாளும் கையில் இருந்தாலே மிகவும் மதிப்பாக இருந்தது,

அப்பொழுது இருந்த மதிப்பு இப்பொழுது இரண்டாயிரம் நோட்டை கையில் வைத்திருக்கும் பொழுது கூட இல்லை,

கேஷியர் சாருக்கு எப்பொழுதும் தேங்காய் பன் மீது ஒரு தனிப் பட்ட விருப்பம் இருந்தது.அவர்தான் சொல்லுவார், தம்பி வரும் போது ஒரு தேங்கா பன்னு ஒண்ணு வாங்கீட்டு வந்துருங்க போதும்.என,,/

அலுவலகத்தில் ஏதேனும் விஷேசம் பார்ட்டி என்றால் கூட மிகை அளவான ஏதாவதான தின் பண்டத்திற்கு ஆசைப்பட மாட்டார்.

அந்தபன்னு பன்னு பன்னுதான், பன்னுக்கு ஏங்கியவன் என என்னை யார் சொன்னாலும் கூட பரவாயில்லை, நான் பன்னை மட்டும் வாங்கி சாப்பிட்டுக் கொள்கிறேன். அது போதும் எனக்கு,உயர் ரக கேக்குகள் எல்லாம் இந்த உடலுக்கு ஏற்றதல்ல என்பார்.

காலங்கள் உருண்டோடி விட்டது இப்பொழுது அந்த தேங்காய் பன் இல்லை,
அதை விருப்பமாய் வாங்கிச் சாப்பிட்டவர் எங்கிருக்கிறார்எனத் தெரியவில் லை.

அந்த இரண்டு ரூபாய்த்தாளும் ஒற்றை ரூபாய் நோட்டும் இப்பொழுது புழகத்தில் இல்லை.

மாறாக வந்து விட்ட உயர் மதிப்பிலான ரூபாய்களும் அதில் புழங்கும் மனிதர்களுமாய் காட்சி தருகிறார்கள், அவர்கள் வாங்கும் விலைக்கூடிய தேங்காய் பன்னில் அன்றைய பழைய ருசி இல்லை.

No comments: