24 Apr 2018

பிரதி பட்டு,,,,


அப்படியே அசப்பில் அக்காவின்
சின்ன வயது அடையாளத்தில் இருந்தாள்,
நிறம் கொஞ்சம் தூக்கலாகவும்
சிறிதே ஒடிசலான உடலுடனும் காணப்பட்டாள்.

வந்த வேலையை என்னிடம் பரிந்துரைக்கும் போதும்
வேலை முடிந்து செல்லும் போதும்
ஏறிடுகிறேன் அவள் முகத்தை,,,/

பாவம் காட்டியும் பாந்தமாயும் இருந்த அவள் முகம்
எனது அக்கா சிறுவயதில் பிசைந்து கொடுத்த
கம்பங்கஞ்சியையும் அதிலிருந்த உயிர்ப்பையும்
பிரதிபலித்தது,

இடுப்புப்பட்டியில் அழுக்கேறிய சிவப்பு டவுசரும்
 நூல் துண்டுமாய் அடையாளம் பூண்டு திரிந்தஎன்னை
வேலைக்காரன் ,,,,வேர்வை தரித்தவன்,,
அழுக்கை அள்ளி உடலில் அப்பிக்கொள்பவன்,
நாளெல்லாம் மண் வெட்டியோடும்,
கலப்பை கட்டிக்கொண்டும்
தோட்டம் காடு,வயல் வெளி ,களத்து மேடு,
இன்னும் இன்னுமாய் ஆடு மாடு,,,,,
என மண் பூசிய அடையாளங்கள் உறை கொண்ட இடத்தில்
முளைத்தெழுந்த காட்டாஞ்செடி என எண்ணாமலும்
எண்ணி ஒதுக்காமலும் வாஞ்சையோடு உச்சி மோந்து
அவளிட்ட சோறும் சோற்றுக்கு மேலான அன்பும்
அவள் கை தூக்கிவிட்டு வளர்ந்த உடலும்
கூடவே வந்த வயதும் நரை கூடிய பருவமும்,
பெரும் வரமாய் கிடைத்த வாழ்வும்
அவள் எனக்கிட்ட பிச்சை என்பதை
சொல்லிச்சென்றது
அவளது முகம்,,,/

3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களது தமக்கைப் போற்றுதலுக்கு உரியவர்

vimalanperali said...

வணக்கம் சார்,போற்றுதலுக்குரிய
தமக்கைகள் எல்லா குடும்பங்களிலும்,,,/

vimalanperali said...

பதிவை இணைக்க முடியவில்லையே,,,சார்/