26 May 2018

வலிகளின் வழி சுமந்து,,,,



ஊர்ந்து சென்ற எறும்புகள்,
மலர்ந்து நின்ற பூக்கள், அசைவுற்றுத் தெரிந்த மனிதம்,,,,,,
எய்யப்பட்ட அம்புகள்,,,
                *********
எறும்புகளின் அசைவுகளும் பூக்களின் மலர்தலும் மனிதங்களின் அசைவுகளும் எய்யப்பட்ட அம்புகளும் இலைக்கை நோக்கியாய்,,,,/
              **********
நோக்கிய இலக்குகளின் பயணங்கள் சீர் கொண்டும் சீர் படுத்தப்பட்டுமாய்,,,/
              **********
சீர் கொண்டு செல்கிற சாலைகளின் பயணங்கள் நேர் கொண்டு செல்வதாகவே சொல்கின்றன,,,,,,
                      **********
சொல்லி விட்ட எல்லாமும் கேட்டுவிட்ட எல்லாமையும் விட வலிமை பாய்ச்சிய தோற்றம் கொண்டதாய்,,,/
                     *********
பூண்டு விட தோற்றத்தின் மெய்மையும் பொய்மையும் வெளிச்சம் பட்டுப்போன பின்னாய் வெளுத்தும் ,செல்லரித்துமாய்,,,
                     **********
செல்லரித்த சொல்லும் சொற்கட்டும் எப்பொழுதும் எதன் முன்னும் தன் உயர்த்தி நிற்க முடியாததாகவே,,,/
                         ***********
தன் உயர்த்தி நிற்க பலமில்லாதது நிலை கொள்ளா ஆட்டம் காட்டி,,,/
                            ************
நிலை கொள்ளா ஆட்டங்களில் நின்றாடும் மனிதம் தோற்றும் ஜெயித்துமாய் ஆடும் பரமபத ஆட்டங்கள்,,/
                         **********
நின்று விடா பரம பதங்களில் மேலேறியும் கீழிறங்கியுமாய் நெளிகிற பாம்புகளின் வித்தைகள் கண் முன்னே படம் விரித்தாய்,,/
                    **********
விரித்த படங்களின் வீர்யங்கள் திரும்புகிற திசையின் வீச்சில் நிலை கொண்டும்,இலக்கிட்டுமாய்,,/
                   ***********
இலக்கிட்ட மனிதம் வாழ்வியல் நோக்கி எரிகிற அம்பு திசை தப்பியும் நேராயும்,,/
                           **********
நேரிட்டது எதுவும் சரி என்பதல்ல,
குறுக்கிட்டது எதுவும் தவறானதென்பதல்ல,,,/
என விதையிட்டுச் செல்வதாய்செல்வதாய் வாழ்க்கை,,,         

6 comments:

Thulasidharan V Thillaiakathu said...

அருமை அருமை சகோ! அனைத்தும் ரசித்தோம்...

iramuthusamy@gmail.com said...

சிறந்த கவிதை சிறந்த கருத்து

Yarlpavanan said...

எண்ணங்கள் வலுவானது
அருமையான வரிகள்

vimalanperali said...

அன்பும் நன்றியும்,,,,/

vimalanperali said...

நன்றி கருத்துரைக்கு,/

vimalanperali said...

வணக்கம் சார்,
நன்றி அன்பிற்கும் ஆதரவிற்குமாய்,,,,/