30 May 2018

நேர் கோட்டின் நெளிவுகளில்,,,

இழுத்து வைத்து தைக்கப்பட்டிருந்தது போன்ற கோடுகள் கசங்காமலும் செய் து வைக்கப்பட்டிருந்தது போன்ற மடிப்புகள் கலையாமலுமாய் இருந்த திக் ஊதாக்கலர் பேண்டை பீரோவிலிருந்து எடுத்த போதுதான் தெரிந்தது ,அதை ஏதும்கைவைக்காமல் போட முடியாது என /,

கை வைப்பது என்றால் உள்ளும் புறமும் மேலும் கீழும் நடுவும் கடைசியும் எடுத்துப் பார்த்து ஆல்ட்ரேஷன் பண்ணி போடுவதுதான் ஆகும் இப்போதை க்கு,

பஜாரின் நடுவிலிருக்கிற தையல்மாலில் கொண்டு போய்க்கொடுத்தால் மறு நாள் அல்லது மறு நாளைக்கு மறுநாள் கொடுத்து விடுவான்.

திக் கலர் ஊதா பேண்டா போடப் போறீங்க,பாத்து யாரும் கண்ணு கிண்ணு போட்டுறாம என்றாள் மனைவி இவன் பெண்டை கையில் எடுத்ததும்/

அவளுக்கு ஏதாவது ஒரு சாக்கில் இல்லை சறுக்கில் இவனை கேலியும் கிண்டலும் பேசுவதென்றால் அல்வா சாப்பிட்ட மாதிரி ஆகிப்போகும்/

ஆமா சும்மாவே நீ ரொம்பத்தான் பேசுவ,இது போலான கேலிக்கும் கிண்ட லுக்கும் யெலக்காயிட்டா சும்மாவா இருப்ப நீ,,,?கேக்கவா வேணும் ஓங் கேலிக்கும் கிண்டலுக்கும்என்றால்ஆமாம் நான் கேலியும் கிண்டலும் பண் ணாம ஒங்கள யாரு வந்து பண்ணுவா,அப்பப்ப இப்பிடி பண்ணலைன்னாலும் நீங்களும் ஏங்கிப் போயிருவீங்க ஏங்கி என்பவள் வாசலில் வைத்து கேலி பண்ணும்போது பக்கவாட்டுபார்வையில் அப்படியே சொக்க வைத்து அள்ளிக் கொள்வாள்/

வீட்டிற்குள் என்றால் கொஞ்சம் பேசுகிற பேச்சும் ஓடுகிற கேலியுமாய் கை கோர்த்து ஓயும் நேரம் அப்படியே தோளில் சாய்ந்து கொள்வாள்,என்ன என்றால் ”அப்பிடித்தான் விடுங்க”,,சும்மா இதுக்கெல்லாமா கேப்பாங்க,இல்ல ஒரு பொண்டாட்டி புருசன் தோள் மேல சாயிறதுக்கு யார்கிட்டயவது அனுமதி வாங்கணுமா என்ன,,? ,இவ்வளவு பேச்சுக்கும் கேலிக்கும் சொந்தக் காரியா இருக்குற எனக்கு ஒங்க தோளும் மடியும் மட்டும் சொந்தமில்லாம போயிரு மா சொல்லுங்க” என்பாள்.

”தோளும் மடியும் மட்டுமா,,,,,?நானே ஒனக்குத்தான,என்னைக்கி ஒன்னைய எனக்கு கட்டிக்குடுத்தாங்களோ அன்னைக்கே எனக்கு இந்த உடல் பொருள் ஆவி எல்லாம் ஒனக்குத்தானம்மா” எனச் சிரிப்பான் இவன்.

எனக்கு சொந்தம்ங்குறதெல்லாம் சரிதான்.ஆனா சொந்தமான எழுத்துல அப்ப ப்ப கொஞ்சம் கீறல் விழுந்துருதே,,/விழுந்த கீரல சரி பண்ணுறக்குள்ள விரி ஞ்சிக்கிடுற விரிசல் ரொம்பப்பெரிய தொட்டிப் பள்ளமாயிறுதே,,,/ என்பாள் அவள் சிரித்துக்கொண்டே,/

அவளுக்கு எதற்கெடுத்தாலும் சிரிப்புத்தான்,சிரிப்பு சிரிப்பு சிரிப்பே,,,/சிரிப்பே சிறந்த மருந்து என எடுத்துக்கொள்வாள்,

பிரச்சனையை பேசுகிற போதும் சரி.அதற்கு தீர்வு இதுதான் இப்படித்தான் என நினைக்கிற கணங்களிலும் சரி. பிரச்சனையில்லாமல் வாய் நிறைய சிரித்து விடுவாள்.

”என்ன இப்பிடி எடுக்கெடுத்தாலும் சிரிப்புங்குறது சரிதான்.அதுக்காக கோபமா பேசிக்கிட்டு வர்றவங்கிட்ட கூட போயி சிரிச்சிக்கிட்டு நின்னா எப்பிடி,,,. சொ ல்லு,”என்றதற்கு சரிதான் இப்ப கோபமா அவன்கிட்ட போயி பேசி என்ன பண்ணப்போறீங்க,அவன்தண்ணியப்போட்டுட்டுதன்நிலையில்லாமநிக்கிறான், அவங்கிட்ட போயி கோபப்பட்டு பேசி சண்டை போட்டு ஆகபோறது என்ன சொல்லுங்க,அவன் ஒங்கள வம்புக்கு இழுக்கணுன்னுதான பேசுறான்,அது கூடவா ஒங்களுக்கு தெரியல,மத்ததுலயெல்லாம் தெளிவா இருப்பீங்க,இதுல போயிஎப்பிடி,,,?இவ்வளவுமல்லுக்கட்டிக்கிட்டுஇருக்கீங்களே .அவன் யாரு,,,,? எப்பிடிப்பாத்தாலும் ஒங்களுக்கும் எனக்கும் நெருங்குன சொந்தக் காரப் பைய தான,அவங்கூடப்போயி சரி சமமா சண்டை போட்டுக்கிட்டு நின்னையிங்கின் னா பாக்குறவுங்க ஒங்களத்தான் தப்பாச்சொல்லுவாங்க,என்னப்பா நீயாவது கொஞ்சம்அனுசரிச்சிப்போகக்கூடாதான்னு,அதுனாலத்தான் அப்பிடி சிரிச்சிப் பேசிசமாளிக்கவேண்டியதாகிப்போச்சிஅவங்கிட்ட,,,”என்றாள்மனைவி,

போன வாரம் ஊரில் ஒரு துஷ்டிக்குப்போயிருந்த போது சாவு வீட்டிற்கு வெளி யே அடித்துக்கொண்டிருந்த கொட்டுக்கு ஆடிய ஒருவன் ஆடிக் கொண்டே வந்து ஒரு ஓரமாய் பெஞ்சில் உட்கார்ந்திருந்த இவன் மீது விழுந்து விட்டான்,

இவனும்தூக்கிவிட்டுவிட்டுபாத்துப்போஎனசொல்லும்போதுதான்போதையின் உச்சத்தில் இருந்த அவன் கொஞ்சம் யெசக்கேடாக பேசி விட்டான். பேசிய தோடு நில்லாமல் கையையும் ஓங்கி விட்டான்,

விட்டால்இவனும்அடித்துதுவைத்திருப்பான்அவனை,அதற்குள்ளாய் இவனது பக்கத்தில் அமர்ந்திருந்த மனைவியும் வேறு சிலருமாக வந்து இவனை பிடித் துஉட்காரவைத்துவிட்டு அவனைதள்ளிக்கொண்டுபோய் விட்டார்கள், தள்ளிக் கொண்டு போன பின் இவன் மனைவிதான் கொஞ்சம் சொல்லி சமாதானப் படுத்தினாள்.அந்த சமாதானப்படுத்தலில் கொஞ்சம் சிரிப்பும் பேச வேண்டிய நிர்பந்தம் ஆகிப்போனது ,அதைத்தான் சொல்லிக்காட்டுகிறான் இவன்.

அப்படியாய் சிரிப்பும் பேச்சும் கலந்திருக்கிற சமயங்களில்தான் இது போல் எதிர்பாராமல் தோளில் சாய்ந்து கொண்டு சொல்வாள்.

அப்படி சொல்கிற சமயங்களில் சமயத்தில் அவளது கண்களில் நீர் துளிர்த்து நிற்கும். ஏன் என்று கேட்கிற போது அது அப்படித்தான் கண்டுக்காமல் விட்டு விடுங்கள் என்பாள்,

தோள் சாய்தலும் கேலியும் பேச்சும் போல் இதுவும் ஒரு உயிர்ப்புச் செயல் என்பாள்.

அவள் அப்படி சொல்கிற சமயங்களில் அவளில் பூத்துக் காணப்படுகிற பூரிப்பிற்கும் சந்தோஷத்திற்கும் அணையிடுவது சற்று சிரமமே/

அந்தசிரமத்திலும் இருவரிலுமாய் எழுந்து பட்டுபடர்கிற சிரிப்பிற்கும் சந்தோ சத் திற்கும் அளவிருக்காது. ஒனக்கு தோள் சாய்தலும் கேலியும் எவ்வளவு முக்கியமோ அதுபோல எனக்கு ஓங் இடுப்பப் புடிச்சிக் கிள்ளுறதும் சடையப் புடிச்சி இழுக்கு றதும் ஏங் உரிமைன்னு சொல்வேன் என இவன் அவளை துரத்திக்கொண்டு ஓடும் பொழுது வீடு மொத்தமும் குலுங்கிப்போகும்.

சந்தோஷத்தில் சமயலறையில் பூத்துகுலுங்குற பூவின் மணம் வராண்டா வரை வந்து போகும். புதுசாய் சாயம் கொண்ட சுவர்களின் கலர்களில் படங்கள் முளைத்துத் தெரியும்/ முளைத்த படங்கள் மூலைக்கொன்றாய் திரிந்து அலைந்து சிரிக்கும்.பூத்திருந்த பூக்களும் அலைந்து திரிகிற படங்க ளும் ஒன்றுடன் ஒன்றாய் கை கோர்த்துக் கொண்டு ஓடி பாய்ந்து கும்மி அடிக்கிற நேரங்களில் மகிழ்ந்து போகிற மனது வீட்டின் மூலைகளெங்குமா ய் பிரதிபலித்து மொத்தப்பரப்பெங்குமாய் ஒட்டிக் கொண்டு சிரிக்கும்,

அப்படியான சிரிப்பொன்றின் அலை பாய்கிற நாள் ஒன்றின் மாலைநேரமாய் வீட்டுக்கு வந்த நண்பரும் நண்பரின்மனைவியும் ”இன்னும் சின்னப் புள்ளையி ன்னு நெனைப்பா ஒங்களுக்கு,

”சுத்தி வீடு இருக்குற யெடங்களல கொஞ்சம் கூட லஜ்ஜை இல்லாமா இப்பிடி ஓடிக்கிட்டு திரியிறீங்களே, வெக்காமாயில்லையா ஒங்களுக்கு” என் றார்கள் கொஞ்சம் கோபமாகவே,,,/

”அப்பிடியா பொண்டாட்டி கூட ஓடிப்பிடிச்சி வெளையாடுறதுக்கும் அவகூட கொஞ்சுறதுக்கும் வெக்கமும் கூச்சமும் படணுமாக்கும் என்றவாறே அவர் களை வீட்டின் உள் அழைத்து டீக்கொடுத்து பேசிக்கொண்டிருந்த போது சொல்கிறான் இவன். மனைவியின் பேச்சுக்கலப்புடன் ,

”சரி ரைட்டு,,,,நாங்க புருசன் பொண்டாட்டி ரெண்டு பேரும் செய்யிறது லஜ் ஜை இல்லாத செயல்ன்னா நீங்க செய்யிறது மட்டும் லஜ்சை கொண்ட செயலா என்ன சொல்லுங்க,

“ஆசைய அறுபதுக்கும் மோகத்த முப்பதுக்கும் தத்துக் குடுத்துட்ட நீங்க வாழ வேண்டிய வாழ்க்கைய பயந்து பயந்தும்,பெறத்தியார் யாரும் என்னமும் பேசீருவாங்களோங்குற நெனைப்புல வாழ்றதாவே தெரியுது எனக்கு,,/

”மனசத்தொட்டுச் சொல்லுங்க,ஒங்க ரெண்டு பேருக்கும் இது போலான ஆசை எதுவும் இல்லைன்னு,நீங்க வெளி சமூகத்துக்காவும் புள்ளைங்க தலைக்கு மேல வளந்து நிக்கிறாங்குறதுக்காவும் மட்டும் ஒங்க ஆசைகளை மனசுக்கு ள்ள போட்டு பொதைச்சிக்கிட்டு வாழுறது எப்பிடி சரியா இருக்க முடியும்.

”ஒங்களுக்கு இது போலான ஆசையெல்லாம் இல்லாம இருந்துற முடியாது, அப்பத்தான் குளிச்சி முடிச்சிட்டு வந்து நெறை உருவமா நிக்கிற பொண்டா ட்டியஅப்பிடியேஅள்ளிக்கிறணுமுன்னு ஒங்களுக்கு தோணாம இருக்காது, ஏதா வது ஆந்து அலைஞ்சி வர்ற நேரங்கள்ல ஒங்க தோள்லயும் மடியிலயும் சாய்ஞ்சிக்கிறணும்,,படுத்துத்தூங்கணுங்குறநெனைப்புஅவுங்களுக்கும்இல்லாம இருக்காது.பரஸ்பரம் ஒங்க ரெண்டு பேருக்குள்ளயும் வர்ற நெனைப்ப ஆத்திக் கிறாம அப்பிடியே அணை போட்டு கட்டி வச்சிக்கிட்டு ரொம்பக் கறாரா இருகிப் போன மொகத்தோட இருக்குறது எப்பிடி சரியா இருக்கும்.,,,,?

“மனசு பூரா இருக்குற ஆசையா ஆழமா குழி தோண்டி பொதைச்சிட்டு இப்பிடி கறாரா இருக்குற மாதிரி காமிச்சிக்கிட்டு எங்களபோல எதார்த்தமா திரியிற வுங்கள குத்தம் சொல்லிகிட்டும் லஜ்ஜை இல்லாதவுங்கன்னும் குறை பாடிக் கிட்டு இருந்தா எப்பிடி சொல்லுங்க,உண்மையிலையே ஒங்க ரெண்டு பேரு மனசுலயும் எங்களப்போல இல்லாட்டிகூட கொஞ்சத்துக்கு கொஞ்சமாவது பொண்டாட்டியபுருசனும்புருசனபொண்டாட்டியும்கொஞ்சணுங்குறநெனைப்பு இல்லைன்னு சொல்லுங்க,நாங்க ரெண்டு பெரும் லஜ்ஜை இல்லாதவுங்கன் னு ஒத்துகிடுறம்” ,எனச்சொன்னதும் அவர்கள் இருவரும் இவர்கள் காலில் விழாத குறையாக ”இல்ல அப்பிடியெல்லாம் ஒங்கள சொல்ல வரல நாங்க, வெளி சமூகத்துல அப்பிடி பேசுறாங்க அப்பிடியான ஒரு நடப்ப வச்சிக்கி றாங்கங்குறதுனாலத்தான்அப்பிடிசொன்னமோஒழிய ஒங்களதப்பா ஒண்ணும் பேசீறல,,,,,என்றார்கள்,

அதோடு மட்டுமில்லாமல் “விட்டா நாங்க ரெண்டு பேரும் இப்பிடியே ஊரு பூரா ஓடிப்புடிச்சி வெளையாடுவோம் அவ்வளவு தூரத்துக்கு ஆசை இருக்கு. ஆனா ஏதோ ஒண்ணு தடுக்குது எங்கள,அதுனாலத்தான் இப்பிடி இருக்கோம். நாங்க” என அவரது மனைவியின் தோள் மீது கை போட்டவாறு வெளியே றினார் நண்பர்,”சரி பாப்போம்,இனிவர்ற காலங்கள்ல எப்பிடி இருப்போம்ன்னு தெரியல” எனச்சொல்லியவாறே,,,/

அவர்களிருவரும் வெளியேறியதும் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பிள்ளைகள்இருவரும் பேசிக்கொண்டார்கள்.

“பிள்ளையில்லாவீட்லன்னு கேள்விப்பட்டுருக்கோம் ஆனா பிள்ளைங்க நாங்க இருக்கும் போதே இப்பிடியா” என சொல்லிச் சிரிப்பார்கள்,

அப்படியான அவர்களது சிரிப்பிலும் பேச்சிலும் ஓட்டத்திலும் பூத்துச் சிரிக்கும் வீடு/,

அவர்களது நில்லாத சந்தோஷத்தின் ஓட்டம் கொண்ட நாழிகையில் இப்படி யாய் உறை கொண்ட வீட்டை படம் பிடித்தும் காட்சிப்படுத்தியுமாய் சொ ல்லிச் செல்கிற சொற்கட்டைக்கொண்ட காட்சியை அடைப்படுத்திய நிமிடங் களாய் நகர்கிறது திக் ஊதாக்கலர் பேண்டை பீரோவிலிருந்து வெளியில் எடுத்த நேரம்.

பேண்டை கையிலெடுத்துப் பார்த்த போதுதான் தெரிந்தது.அதை ஆல்ட்
ரேஷன் பண்ணாமல் போட முடியாது என,,,/பேண்ட் எடுத்த அன்றே செய்த முடிவு தான் ,

கடைக்காரர் கூடச் சொன்னார்,ஏன் சார்,இப்பிடியேவா எடுத்துட்டுப் ப்போகப் போறீங்க அப்பிடியே எப்பிடி போடுவீங்க,ஆல்ட்ரேஷன் பண்ணாம போட முடியாது என,/

உண்மைதான் அவர் சொன்னது. இவனது சைஸிற்கு என எடுத்த பேண்ட்டில் இன்னொரு ஆள் நுழையலாம் போலிருந்தது.

பேண்ட்டின் கலரும் துணியும் மனம் பிடித்திருக்க எடுத்து விட்டான்,250 ரூபாய்க்கு இது போலான ஒரு பேண்ட இந்தக்காலத்துல தலகீழா நின்னாலும் எடுத்துற முடியாது பாத்துக்கங்க,என்ற போது அவர் சொல்லில் இருந்த வாஸ் தவம் போக சரி எடுத்துப்போடுவம் ,தையல் மார்க்கெட்டுல இருக்குற போயி ஆல்ட்ரேஷன் பண்ணிக்கிறலாம் என்கிற மனச்சமாதானத்துடன் எடுத்து வந்த பேண்டை ஒரு வருடம் கழித்து இப்பொழுதான் கையில் எடுக்கிறான்.

இழுத்து வைத்து தைக்கப்பட்டிருந்தது போன்ற கோடுகள் கசங்காமலும் செய் து வைக்கப்பட்டிருந்தது போன்ற மடிப்புகள் கலையாமலுமாய்,,,,,/

2 comments:

Yarlpavanan said...

வலுவான எண்ணங்கள்
சிந்திப்போம்

vimalanperali said...

நன்றி கருத்துரைக்கும் வருகைக்கும்,,,/