16 Jun 2018

தொட்டுத்தொடர்ந்து,,,,,,,


ஓடி விளையாடிய தரையின் வெளிகள் புல்பூத்தும் அது கட்டிடம் விளைந்துமாய்,,,/
                           *********
விளைந்து நிற்கிற கட்டிடங்களின் வீர்யங்கள் விளை நிலங்களில் காயடித்து காட்சிப்படுகிறதாய்,,,/
                         *********
காட்சிப்படுகிற காயப்பட்டவைகள் விளை நிலங்களை தின்று பெருத்தவையாகவே,,,/
                  *********
தின்று பெருத்தவைகள் நின்று காட்சிப்படுகிற காட்சி புதுப்புது வர்ணம் காட்டிச்சிரிப்பதாய்,,,,/
                  ********
வர்ணம் காட்டிச்சிரிக்கிற காட்சிகளின் உறைவு நிரப்பப்பட்ட பக்கங்கள் யாவுமாய்,,,/


                           *********
யாவுமாகி நின்ற பக்கங்களின் உறைவு காணக்கிடைக்கிற காட்சி கொண்டதாய்,,,/  
                            ********
காணக்கிடைக்கிற காட்சிகளின் கனம் மனம் சுமந்ததாயும் அது அல்லாததாயும்,,,/
                     *******
அல்லாததாயும் உள்ளாதாயுமாய் உறைகொண்ட காட்சிகளின் உயிர்ப்பு தொட்டுத் தொடர்கிறதாகவே,,,/
                     *********
தொட்டுத்தொடர்கிற பந்தங்களை சுற்றங்களை நட்புகளை மற்றும் தோழமைகளை விட்டுச்செல்லா மனம் ,,/
                              ****************
விட்டுச்சென்றால்தான் என்ன, பட்டுச்சென்றால்தான் என்ன என கேட்கிற நட்பும் தோழமையும் நம்மை சுற்றிய கொடியாகவும் மனமிறங்கிய வேராயும்,,,
                 ********
வேர்களின் பலம் தெரியா விழுதுகளும் விழுதுகளின் பலமறியா வேர்களும் மண்ணையும் மரத்தையும் அடை கொண்ட கவசம் கொண்டு,,,/
                  **********
கவசம் பூண்டவைகளின் உள்ளும் புறமும் அறியத்தரப்பட்டிருக்கிற வெளிகள் பட்டு படர்ந்து காட்சி கொண்டதாய்,,,/
                    **********

காட்சி கொண்டவைகளின் படர்வு உள்ளம் பூரித்தும் அது அற்றுமாய்,,,,/

                       ********
பூரித்த உள்ளங்களின் களிகொண்டாட்டம் உன்னிலும் என்னிலும் நம்மிலுமாய்,,,/
                       ********
களி கொண்டாட்டம் கொண்ட உள்ளங்கள் உடல் பற்றியும் உயிர் பற்றியுமான யோசனையில்,,,,,,/
                    *********
யோசனையின் கொண்டாட்டங்கள் எழுதிச்சென்ற பக்கங்களில் திருத்த நேர்ந்து போகிற பிழை,,,,/
                 *********
பிழைகளாகிப்போனால்தான் என்ன ,,?  எழுதிக்கொடுத்துவிட்டுச் சென்று விடுகிற வாய்ப்பு திருத்தி கொடுத்து விட்டுப்போகிறததுதான்,,,,/
          ********
எழுதுவதும் திருத்துவதுமாய் சென்றடைகிற வாழக்கை வலியதின் பாதையிலும் எளியதின் பாதையிலு மாய்,,,,
                               ********
வலியதிலும் எளியதிலுமாய் மாறி மாறி பயணிக்கிற வாழ்க்கை தன் வலிவு காட்டி காட்சிப்படுவதாய்,,,/
                *********
காட்சிப்படுகிற வலிவின் அழுத்தங்கள் உறை கொள்கிற பொழுதுகள் தன்னிலை காட்டிச்செல்வதாகவே,,,/
                    *********
தன்னிலை காட்டிச்செல்கிற பொழுதுகளின் நகர்வுகள் ஊனிச்செல்கிறவைகள்அழுத்தம்காட்டியே,,,/



No comments: