12 Aug 2018

பாட்டி நடை,,,,

சிறிது வேகம் காட்டித்தான் வந்து கொண்டிருந்தான்,

தேவையும், அவசியமும் தான் எதையும் தீர்மானிக்கிறது என்கிறார்கள்.இவன் விஷயத்தில் அது மிகவும் சரியாகவே இருந்தது.

இவன் வேகத்தை விரும்பவிலையென்றாலும் கூட வேகம் இவனை விடுவ தாய் இல்லை,

எப்பொழுதும் நாற்பதுக்கும் முப்பது கிலோமீட்டர் வேகத்திற்கும் இடைப்பட் டதுதான் இவனது வேகம், அதற்கு மேல் என்றால் ”நோ” சொல்லி விடுவான், டவுனுக்குள் அந்த நோவுக்கும் வேலை இல்லை.

இருபது கிலோ மீட்டருக்கு மேல் போக முடியாது,அதற்கு மேல் போக வேண் டுமென்றால் கொஞ்சம் நெஞ்சுரமும் தைரியமும் வேண்டும்,அல்லது கொஞ் சம் நன்றாக மோட்டார் ஓட்டுகிற பழக்கமாவது இருக்க வேண்டும், இவனிடம் இரண்டும் இல்லை,ஏதோ பெயருக்கு ஒரு வித் அவுட் கியர் வண்டியை வைத்துக் கொண்டு ஓட்டி வருகிறான்.

இதில் எங்காவது போக வேண்டும் என்றால் இரு சக்கர வாகனம்தான்,

இப்போதைக்கு வீடு டவுன், பஜார், இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஆபீஸிற்கு என மட்டுமே போய் வந்து கொண்டிருந்தவன் மருதனூருக்கு மாறுதல் ஆனதிலிருந்து நாளிலிருந்து கொஞ்சம் வேகம் காட்டித்தான் ஆக வேண்டி இருந்தது,

இல்லையென்றால் போய் சேர வேண்டிய இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு போய்ச்சேர முடியாது.

தனது இரு சக்கர வாகனத்தில்,இவனது வீட்டிலிருந்து மருதனூர் இருபத்திர ண்டு கிலோ மீட்டர் தூரம் எனச் சொன்னார்கள்,

இவனுக்கு அந்த ஊர் அவ்வளவு தூரமாவா இருக்கும் என ஆரம்பத்தில் கொஞ்சம் சந்தேகமே,மாறுதல் உத்தரவு வந்த அன்று திருப்பதி அண்ணனிடம் பேசிக்கொண்டிருந்தான்,மருதனூரைப்பற்றியும் அதன் தூரம் பற்றியும்/

அவர் ஊரைப்பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் அந்த ஊருக்கு இருபத் தி இரண்டு கிலோ மீட்டர் தூரம் என்றும் சொன்னார்,அவர் சொன்னதை அப்ப டியே ஏற்றுகொள்ள முடியவில்லை.அவ்வளவு தூரம் இருக்காது. கொஞ்சம் குறைவாகவே இருக்கும் வாய்ப்புதான் உள்ளது என அவரிடம் சொல்லிவிட்டு வருகையில் அவரை ஏறிடுகிறான்,

அடர்க்கலர் பேண்ட்டிலும் வெளிர்க்கலர் சட்டையிலும் பார்க்க அழகாகித் தெரிந்தார், இப்பொழுது இப்படி உடுத்துவதுதான் ட்ரெண்ட் போலிருக்கிறது .அவரால் அவர் அணிந்திருந்த உடைகளுக்கு அழகா,,,?இல்லை உடையால் அவர் அழகாகித்தெரிந்தாரா,,?என்ப்கிற குழப்பம் அவரை விட்டு வந்த பின்னு மாய் சற்று நேரம் நீடித்திருந்தது.

இது போல் ஒரு நல்ல ட்ரெஸ் வாங்க வேண்டும்.வாங்கினாலும் இவனுக்கு நன்றாக இருக்குமா எனத்தெரியவில்லை,

தொந்தியும் தொப்பையுமாய் இருந்து கொண்டு இப்படி பிட்டான உடைக்கு ஆசைகொள்வதுதவறுதான் என முளைத்துதெரிந்த எண்ணத்தை கையோடு கிள்ளி எறிந்து அதை மண் மூடி போகச்செய்தும் விட்டான்,

மூடச்செய்த கையோடு கிளம்பி வந்தவந்தான் இப்போது அன்றாடங்களில் இரு சக்கர வாகனத்தில்போக்கு வரத்தை மேற்கொண்டவனாய் இருக்கிறான்,

இப்போதைக்குள்மருதனூர்பக்கமாகஇவன்போய் வந்ததாக நினைவு இல்லை. இரண்டு வருடத்திற்கு முன்பாக இவனும் மனைவியுமாய் ஒரு தடவை சொ ந் தத்தில் நடந்த கல்யாணத்திற்கு போய் வந்தார்கள் இரு சக்கர வாகனத்தி ல்

அதற்குப்பின் எப்பொழுதோ எதற்காகவோ,,,,, ”ஆங்”அண்ணி பெண்ணின் மாமி யார் இறந்ததற்காக போய் வந்தான், அவ்வளவே/

அதற்கப்புறமாய் அலுவலகப் பணிகளே சரியாகி விட அதுவும் அதன் முன் தோற்றமும் என இருந்து விட்டான்,எங்கும் போகவில்லை ,

இப்பொழுதுதான் மருதனூருக்கு செல்ல அவசியம் நேர வெளியூர் எனச் செல்கிறான்,

வெளியூர்,பஸ் பிரயாணம்,சைக்கிள் மிதி,இரு சக்கர வாகனப்பிரயாணம்,நடை என மாறி மாறி ஓட்டம் கொண்டிருந்த நேரம் போய் இரு சக்கர வாகனத்தில் இவ்வளவு தூரம் செல்வதே ஒரு சாதனையாய் தெரிகிறதான்,

இருபதும் இருபதும் நாற்பது கிலோ மீட்டர்,அதில் இரண்டும் இரண்டுமாய் நான்கு கிலோ மீட்டர் தூரத்தை குறைத்து கொண்டதில் ஒரு சின்ன திருப்தி,

அந்த தூரத்தைக்கடக்கவும் திரும்பி வரவுமாய் கொஞ்சம் வேகம் காட்டித்தான் வர வேண்டி இருக்கிறது,காலையில் தூங்கி எழும் போது எப்படியும் ஏழு மணிக்குக் குறையாமல் ஆகிப்போகிறது, அதற்குக்காரணம் முதல் நாள் இரவு முழிப்பதுதான்.எப்படிச்சுற்றியும் ஏதாவது ஒரு வேலையாய் இரவு படுக்க பணிரெண்டு அல்லது ஒரு மணியாகிப்போகிறது.அந்நேரம் வரை தூக்கம் பிடிக்கவில்லை,இல்லையென்றால் ஏதாவது ஒரு யோசனையில் நேரம் ஓடிப் போகிறது.அது மறு நாள் காலை எழுதுதலை கொஞ்சம் பாதித்து விடுகிறது தான்,

அந்த பாதிப்பை இது நாள்வரை பெரிதாய் எதுவும் இடைஞ்சலாய் நினைத்த தில்லை,நினைத்து வருத்தப்பட்டதும் இல்லை.உடல் கொஞ்சம் சோம்பல் அப்பிப்போய் இருக்கும் அவ்வளவே/

மற்றபடி நடைமுறை பணிகளுக்கு அது என்றும் தடையாய் இருந்ததில்லை. மனைவி கூடச் சொல்வாள் அடிக்கடி,ஏன் கொஞ்சம் சீக்கிரம் எந்திரிச்சி கெள ம்பி பஸ்ஸீக்குப் போகலாமில்ல என.

”வாஸ்தவதான் நீ சொல்றது, பஸ்ஸீக்கு கெளம்பிப்போறதுன்னா எட்டரை மணிக்கு வீட்ட விட்டு கெளம்பியாகணும் ,நீ அந்நேரம் சமைச்சி குடுத்துரு வயான்னு தெரியல,புள்ளைங்க ரெண்டு பேருக்கும்,நம்ம ரெண்டு பேருக்குமா காலையில டிபன் செஞ்சு மதியம் சோறு வச்சிக் குடுக்கறதுக்குள்ளயே நீ பெரும்பாடுபட்டுப் போற,இதுல நீயி ஸ்கூல் புள்ளைகளுக்கு செஞ்சி குடுத்தது மாதிரி எட்டரை மணிக்கெல்லாம் சாப்பாடு டிபன் ரெடி பண்ணி குடுத்துக் கிட்டு இருந்தயின்னுவையி,நீயிபடுத்துருவ,தலசுத்துது,மயக்கமாவருது,பி,பின்னு,,,,,
அப்புறம் ஆஸ்பத்திரி மருந்து மாத்திரைன்னு அலையணும் ,இப்பத்தான் கொஞ்சம் ஆஸ்பத்திரி மருந்து மாத்திரைன்னு இல்லாம இருக்கோம்,அது அப்பிடியே ஓட்டட்டும் எதுக்கு வம்புன்னுதான் டூ வீலர்லயே போயி வந்துக் கிட்டிருக்கேன்,

“இதுன்னா வீட்ட விட்டு ஒன்பது மணிக்கு கெளம்புனாக் கூடப் போதும், கொஞ்சம் ஒனக்கும் ரிலாக்ஸீ,எனக்கும் ஒரு அரைமணி நேரம் கெடச்சா மாதிரி இருக்கும்.அரை மணிக்குள்ள பெரிசா ஒண்ணும் பண்ணீற முடியாது ன்னாலும்கூட ஏதோ ஒன்ன சாதிச்சிட்ட மாதிரி ஒரு நிம்மதி கெடைக்கும், அந்த நிம்மதி முக்கியமில்லையா மனுசனுக்கு அதுதான் அப்பிடியே போயி வந்துக்கிட்டிருக்கேன்,

“அப்பிடிப்போகும் போதும் வரும் போதும் வழக்கத்த விட கொஞ்சம் வேகம் கூட்டித்தான் போயி ஆக வேண்டியிருக்கு என்ன செய்ய வேற வழியில்ல, எனச் சொல்லிக் கொண்டிருந்தான் நாட்களில் நகர்வுகளினூடான பொழுதொ ன்றில்/

இறக்கை கட்டிக் கொண்டு பறக்கிற வேகம் இல்லையென்றாலும் கூட நாற்ப தைந்து அல்லது ஐம்பது கிலோ மீட்டர் வேகத்திலாவது போக வேண்டி இருக்கிறது. நாற்பத்தைந்து கிலோ மீட்டர் வேகத்தை தொட்டு விட்டாலே ஸ்பீடா மீட்டர் முள் சிவப்பு பார்டரை தாண்டி ஐம்பதிற்கும் நாற்பத்தைந்தி ற்கும் ஊடாக ஓடிக் கொண்டிருக்கும். ஓடிக்கொண்டிருக்கும் அந்த இரு சக்கர வாகனத்தின் உயிர் துடிப்பைப் போல்/

அந்த உயிர்த் துடிப்பின் அதிர்வில் சாலையோரமாய் குடிகொண்டு அமர்ந் திருக்கிற செடிகள் மற்றும் அதில் மீதமர்ந்து பிடிவாதம் காட்டி பூத்திருக்கிற பூக்கள் புற்கள் புற்களை விலக்கிவிட்டு பூமி துளைத்து கிளை பரப்பியும் இலை தாங்கியும் நிற்கிற வேப்பம் மற்றும் புளிய மரங்களும் அதனுடன் நாட்டுக் கருவேலை மரங்களுமாய் வரிசை கட்டி நின்று கொண்டிருந்தன,

அதிலிருந்து பறக்கிற பூச்சிகளும் வண்டுகளும் புல் மற்றும் செடி மலர்த் திருந்த பூவில் அமர்ந்து அமர்ந்த இடத்தின் முகர்வு பிடித்தும் அது அற்று மாய் பறந்து மரங்களின் இலைகளையும் கிளைகளையுமாய் ஊடறுத்து பறந்து செல்கிறதைப்பார்க்கிற போதும் நன்றாக இருக்கிறது.,

இதில் பறந்து செல்கிற வண்டுகளையும் பூச்சிகளையும் செடிகளின் மீதும் தரை காத்து அமர்ந்திருக்கிற புற்களின் மீதுமாய் இருந்து பறக்கிற பறவை களில் ஒன்றிரண்டு அவற்றைபிடித்துச் சாப்பிட்டு விடுகிறதாய் பிராது வரு கிறது சமீப தினங்களின் நகர்வுகளில்/

பிராதில் கையெழுத்திடுபவைகளில் முதல் மற்றும் கடைசி நபராக புழுக்க ளும் கை கோர்த்துக் கொள்கிறதுதான்,

இதில் எது எதை சாப்பிடுகிறது என்பதுதான் இங்கு சத்தியம் சுமந்த நிகழ் வாயும் நனவாயும் ,

காக்கை சொல்கிறது நான் அவைகளைப் பிடித்து உண்பதில்லை, அவைகள் தான் நாங்கள் பறக்க்கிற போது கண்ணில் வந்து விழுந்து பயணத்தை தடை செய்கின்றன என்கிறது.குருவிகளும்அதையே அப்படியே முன் மொழிகி ன்றன, ”எங்களுக்கும் காக்கைகளும் காடுகரைகள் விளைந்து கிடக்கிற வரை உணவுக்குப் பஞ்சமில்லை.அப்படி இருக்கிற போது இவைகளை நாங்கள் உண்ண நினைப்பது கூட இல்லை.அது சரி நாங்கள் அதை உண்னக்கூடாது இதை உண்ணக்கூடாது எனச்சொன்னீர்களானால் எப்படி நிவர்த்தியாகும் எங்க ளது உணவுத்தேவை” என்கிற கேள்வி வரும் பொழுது அதை பஞ்சு அக்கா விடம் கேட்டு விடலாம் என்கிற முடிவெடுத்து நகர்கின்றன பூச்சிகளும் புழுக்க ளும் அவைகளுடன் கைகோர்த்துக்கொண்டு காக்கைளும் குருவிகளுமாய்/

அவை கைகோர்த்துக்கொண்டு நகர்ந்து வந்த இடம் பஞ்சு அக்கா அமர்ந்திரு க்கிற இடமாய் இருக்கிறது,

பஞ்சு அக்கா முள் வெட்ட வருகிற நாட்களில் பெரும்பாலுமாய் தோட்டத்தின் அருகில் இருக்கிற இலவம் பஞ்சு மரத்தின் அடியில்தான் அமர்ந்து சாப்பிடு வாள்.

“ஏன் இப்பிடி வேகாத வெயில்ல முள்ளு வெட்டு சாகுற,அதான் புள்ளைக உத்தியோகத்துக்குப் போயி கை நெறைய சம்பாதிக்குதில்ல,அப்புறம் என்ன,,,, எனக் கேட்டால் வாஸ்தவம்தான் இல்லைன்னு சொல்ல,இப்பயே உக்காந்து தின்னு சொகம் கண்டுக்கிட்டம்ன்னா சோம்பேறியாகிப்போன ஒடம்பு மிச்ச நாட்களஓட்டகஷ்டப்பட்டுப்போகும், அதுக்குதான் இப்பிடி ஓடிக்கிட்டு இருக் கேன் காலக்கால இழுத்துக்கிட்டு/

”காலமெல்லாம் ஒழைச்ச ஒடம்பு,இந்த ஊரு காடுகரைகள்ல ஏன் காலடி படாதயெடமுமில்ல,ஏங் ஒழைப்போட நெழலு படாத நாளுமில்ல.

“வாக்கப்பட்டு வர்றதுக்கு முன்னாடி எங்க ஊர்ல வேலை செஞ்சிக்கிட்டே இருந்தேன்,இப்ப வாக்கப்பட்டு வந்த பின்னாடியும் அந்தப்பாடு நின்ன பாடில்ல, கல்யாணத்துக்குமுன்னாடி எங ஊர்ல அஞ்சாக் கிளாஸ் வரைக்கும் படிச்சேன், அப்புறமா படிப்ப நிறுத்த வேண்டியதாப்போச்சி, படிப்பு ஒண்ணும் மண்டை யில ஏறலைன்னு இல்லை,வீட்டுக்கு ஆள் தேவைப் பட்டுச்சி, சோறு தண்ணி பொங்குறதுல இருந்த மத்த மத்த எல்லா வீட்டு வேலைகளுக்கும் ஆளு வேணுமுன்னு ஆகிப்போச்சி,நான் இல்லைன்னா வீட்டோட இயக்கமே நின்னு போற அளவுக்கு வந்துருச்சி.எங்கம்மா ஒடம்புக்கு முடியாதவுங்க அதோடதா இழுத்துக்கிட்டுத்தான் திரிஞ்சாங்க,எங்கப்பா தினசரி கூலிக்குப் போகலை ன்னா வீடு நின்னு போகும்,இதுக்கு ஊடால தம்பி தங்கச்சியோட படிப்பு வேற,

“நானு,அம்மா,அப்பா தம்பி தங்கச்சின்னு அஞ்சி ஜீவன்களுக்கும் தினமும் மூணு வேளை பதினஞ்சி தடவை தட்டு கழுவ வேண்டியிந்துச்சி,வீட்டுல அதுவே ஒரு பெரியசவால நின்னுச்சிஎங்க முன்னாடி. என்னதான் தலை கீழநின்னு தண்ணி குடிச்சாலும் கூட கா வயிறு அரை வயிறுன்னுதான் எங்க பாடு ஆகிப் போச்சி/

அம்மாவுக்கு ஆசை நான் எட்டாவது வரைக்குமாவது படிச்சிறமுன்னு, ஆனா சூழ்நிலை அதுக்கு ஒத்து வரல,வீட்ல மூணு வேளைக்கும் கம்பங்கஞ்சி இல்ல கூழுதான்னு ஆகிப்போச்சி, என்ன செய்ய,,,?

“நாங்க குடியிருந்த தெருவுல எல்லார் வீட்லயும் நெல்லுச்சோறுதான்,அந்த விடுகள்லஇருந்து நெல்லுச்சோறு வாசமும் கொழம்பு வாசமும் வரும் போது எங்க எல்லார் மூஞ்சிகளும் செத்துப் போகும். அம்மாவுக்குன்னா எங்கள நிமிந்து பாக்கவே சங்கடமாயிரும்,அது போலான சமயங்கள்ல ஏதாவது ஒரு வேலை சொல்லி என்னையும்தம்பி தங்கச்சிகளையும் வீட்ட விட்டு வெளி யில அனுப்பிருவாங்க,

”அவுங்களுக்கு நெனைப்பு,அப்பிடியே வெளியில போயிட்டு வந்தா அந்த சாப்பாட்டு நெனைப்பும்பாதிப்பும்கொஞ்சம்மாறுமுன்னு,ஆனா அப்பிடியெல் லாம் இல்லை, வெளியில போயிட்டு வர வரத்தான் அந்த நெனைப்பு கூடிச் சே தவிர்த்து கொறையல.

“நானும் தம்பி தங்கச்சிகளும் கூடிப்போன நெனைப்புகளப் பத்தி பேசிக்கிரு வோமே தவிர்த்து அம்மாகிட்ட ஒரு வார்த்த கூட சொன்னதில்ல இதப்பத்தி, ஆனா அவுங்களுக்கு எப்பிடியும் எங்க மனசும் பேச்சும் புடிபட்டுப் போகும், பெத்தவங்கல்லையா,அப்பிடியேஎங்களப்புரிஞ்சிக்கிருவாங்க,கொஞ்சம் சங்கடப்பட்டநடையோடவும் மனசோடவும்கடைக்கிப்போயி அரிசி வாங்கீட்டு வந்து பொங்கிப் போட்டுருவாங்க,

”இப்பிடியான நாட்கள்ல சாப்புட்டாத்தான் நெல்லுச்சோறு,மத்த நாட்கள்ல கூழும் கம்பங்கஞ்சியும்தான்,

“எங்களுக்குன்னா பெரிய சங்கடமா இருக்கும்.கூழுக் குடிக்கிறதுக்கோ கம்பங் கஞ்சி குடிக்கிறதுக்கோ இல்லை அந்த சங்கடம்.கம்பஞ்கஞ்சி காய்ச்ச ஒரல்ல கம்பு குத்தணும்.நல்ல வேளையா எங்க வீட்டு முன்னாடி ஒரல் கெடந்துச்சி, பகல்ல அதுல போயி கம்பு குத்த கூச்சமா இருக்கும். ராத்திரிக்கி ஊர் தூங்கிப் போன பெறகு கம்பு குத்துவோம்,தெருவே தூங்கிப்போச்சின்னு நாங்க நெனை ச்சாலும் கூட எங்க மூணாவது வீட்டு அம்மா தூங்காம முழிச்சிக்கிட்டு இருப் பாங்க,அவுங்க அவங்க வீட்ல ரவைக்கி செஞ்ச ஏதாவது ஒண்ண திங்கிறதுக் குன்னு எங்களுக்குன்னு எடுத்துக்கிட்டு வருவாங்க,நாங்களும் மறுக்காம வா ங்கிக்கிருவோம்,

”அவுங்க எங்ககிட்ட குடுக்கும் போது மறக்காம ஒங்கம்மாவுக்கும் கொஞ்சம் குடுங்கப்பா,அவபாவம் சின்னப்புள்ளையில நல்லா தின்னு வளந்தவன்னு,,,/ ஒங்கப்பன் வழக்கம் போல தண்ணியக்குடிச்சி வந்துருக்கான், அந்த கருமத்தக் குடிக்கிற காசுல புள்ளைகளுக்கு ரெண்டு ஏதாவது தின்பண்டம் வாங்கீட்டு வரலாம்ன்னு நெனைப்பு இருக்கா அவனுக்கு,நாரப்பைய,சரி அவனச் சொல் லியும் குத்தம் இல்லை.மாடா வேலை செய்யிறான், ஒடம்பு வலிக்கு ஆத்த மாட்டாம வாரத்துக்கு ஒரு தடவை கொஞ்சம் வாங்கி ஊத்திக்கிறேங்குறான். மத்தவுங்களப்போலதண்ணியக்குடிச்சிட்டுவீட்டுக்கிட்டவந்துசத்தம்போடாம
பேசாம படுத்து எந்திரிச்சிர்றான்ல்ல,அதுவே பெரிய விஷயந்தான்னு சொல் லீட்டுப் போவாங்க,

”இப்பிடி ஆதரவும் தூசனையுமா வாழ்ந்துக்கிட்டு வந்த நாட்கள்ல எங்க தம்பி தங்கச்சிக்குபள்ளிக்கூடத்துக்கு போட்டுட்டுப்போறதுக்குக்கூட மாத்து உடுப்புக் கூட இல்லைன்னு ஆகிப்போச்சி.இதுக்கு மேல நான் வம்படியா படிச்சிக்கிட்டு இருந்தேன்னு வையிங்க,அப்புறம் ஒட்டு மொத்த வீடும் உடுமாத்துக்கு செரமப்பட்டுரும்.என்ன செய்ய பின்ன,அவங்களாவது நல்ல படியா படிக்கட்டு மின்னு விட்டுட்டு வந்துட்டேன் மனச கல்லாக்கிக்கிட்டு,

”பள்ளிக்கூடத்துல ஏங் கூடப் படிச்ச புள்ளைகளுக்கும் டீச்சர்களுக்கும் நான் படிப்ப பாதியில நிறுத்தீட்டு போறதுல விருப்பம் இல்ல, இல்லாத வீட்டுப் புள்ள இவ்வளவு நல்லாப் படிக்கிதேன்னு அவுங்களுக்கு ஒரு பக்கம் விருப் பம், என்னைய விட மனசில்லை. வீட்லயெல்லாம் வந்து பேசிப் பாத்தாங்க, புள்ளைக்கு ஏதாவது செலவு வந்தாகூட நாங்க பாத்துக்கிறோம்,அதுக்காக படிப்ப பாதியில நிறுத்த வேணாமுன்னு கேட்டுக்கிட்டாங்க/

ஆனா அம்மாதான் ஒரே பிடிவாதமா அதெல்லாம் சரிம்மா,நீங்க அவ படிப்புச் செலவ ஏத்துக்கிட்டாலும்கூடஎங்க வீடு நடக்கணுமேஅன்றாடம்,அதுக்குஅவ இல்லாம முடியாது,ஏதாவது ஒண்ணக் குடுத்துத்தான ஒண்ண வாங்க வேண் டியிருக்கு,அவ படிப்ப வித்து பொழப்ப வாங்குறோம்ன்னாங்க,

“வீட்டுக்கு வந்திருந்த டீச்சர்ங்க வாயடைச்சிப்போயி நின்னுட்டாங்க,நானும் அம்மா வோட கை புடிச்சி நடை பழகுற சின்னப்புள்ள மாதிரி கூலி வேலை க்குப் போக ஆரம்பிச்சிட்டேன்.

“நான் படிப்ப பாதியில நிறுத்துன நேரம் காடு கரைக எல்லாம் நல்லா வெளை ஞ்சி நின்ன நேரம்,வேலைக்குப் பஞ்சமில்லை,சொல்லப்போனா வேலை செய்யத்தான் ஆள் கெடைக்கல,அதுனாலயே நான் வேலை கத்துக்க முடிஞ் சிச்சி.

”ஒரு ஆறு மாசம்தான்,அம்மா கூடயே வேலைக்குப்போனேன்,அதுக்கப்புறம் கையூனி எந்திரிச்சி நின்ன நேரம் வேலைக எனக்கு வசப்பட ஆரம்பிச்சிரிச்சி, உள்ளூர்ல மட்டும் காட்டு வேலை,தோட்டத்து வேலை,வயல் வேலைன்னு போயிக்கிட்டு இருந்த நானு கொஞ்சம் எட்டிப்போக ஆரம்பிச்சேன்.ஒடம்ப உழைப்புக்கு ஒப்புக்குடுத்துத்தால் கொஞ்சம் துட்டு சேந்துச்சி கையில,நான் சேத்து வச்சிருந்தபணம்,அப்பாசேத்து வச்சிருந்தது கொஞ்சம் அம்மா போஸ்ட் ஆபீஸில போட்டு வச்சிருந்ததுன்னு எல்லாத்தையும் எடுத்து சேத்துக் கூட்டி தங்கச்சிக்கு கொஞ்சம் நகை செஞ்சி நல்லதா ஒரு எடத்தப்பாத்து கல்யாணம் பண்ணி வச்சோம்,

அடுத்தஒருரெண்டு வருசத்துல தம்பிக்கு ஒரு வழியப்பண்ணீட்டு நான் கல்யா ணம் பண்ணிக்கிட்டு வந்துட்டேன், அன்னையிலயிருந்து இன்னைவரைக்கும் ஒழைப்பு ஏங் ஒடம்பொட ஒட்டிப்பொறந்த சங்கதி போல ஆகிப்போச்சி/

“வீட்ல என்னதான் வசதி வாய்ப்புன்னு இருந்தாலும் புள்ளைங்க வசதியா ஆக்கிப்போட்டாலும் கூட எனக்கு இது போல இருக்குறதுதான் புடிக்குது.

“ஒடம்புல உசிரு ஒட்டிகிட்டு இருக்குற வரைக்கும் சொந்தக்கைய ஊனி நிக்க ணுமுன்னு ஆசை எனக்கு,நிக்கிறேன் அவ்வளவுதான்,

இதுலபிடிவாதமெல்லாம் பெரிசா இல்ல,இப்பிடி இருக்குறது எனக்குப் புடிச்சி ருக்கு,இருக்கேன் என்றாள் பஞ்சு அக்கா சாப்பிட்டுக்கொண்டே,/

அள்ளி முடிந்திருந்த அவளது கொண்டையில் அங்கிருந்த பெயர் தெரியாச் செடியின் பூவை பறித்துச் சொருகியிருந்தாள்.

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சொந்தக்காலில் நிற்கும் மன'திடம்' தான் அந்தக் காலத்து மூத்தவர்களின் சிறப்பே...!

vimalanperali said...

நன்றியும் அன்பும் என்கிற ஒற்றைச்சொல்
தவிர்த்து கருத்துரைக்கு மிக்க நன்றி/

ஸ்ரீராம். said...

//அண்ணி பெண்ணின் மாமி யார் //

அதென்ன அண்ணி பெண்ணின்? அண்ணனின் பெண் என்று சொல்வதுதானே நேர்?

vimalanperali said...

அண்ணனின் பெண் அண்ணிக்கும்
பெண் தானே,,,?
அக்கா பெண் என்கிற சொல்
ஏற்றுக்கொள்ளப்பட்ட சொல்தானே,,,,?

கரந்தை ஜெயக்குமார் said...

சொந்தக்காலில் நிற்பதுதானே
அக்காலத்தியப் பெரியவர்களின் பெருமை

vimalanperali said...

இப்பொழுதும் அப்படித்தானே...?

வலிப்போக்கன் said...

உழைப்பே உயர்வு தரும் என்றார்கள்..உழைத்து உழைத்து ஓடாகிபோவதுதான் மிச்சம் -எனது அனுபவம்..

vimalanperali said...

உழைப்புக்கு தன்னை ஒப்புக்கொடுத்து
விட்டவர்களின் வாழ்கை
சில நேரங்களில் நன்றாகவும்,
இன்னும் இன்னுமான சில நேரங்களில்
அது அற்றுமாய் இருக்கிறதுதான்,/