19 Sept 2018

பூப்பூத்து,,,,

சரியாக ஐந்து முப்பது மணிக்கு அங்கு போக வேண்டும்,

இப்பொழுது என்ன போயே ஆக வேண்டுமா,போகாவிட்டால்தான் என்ன,,,? என்கிற முன் தர்க்கமும் ”சே” இதற்குப்போகாவிட்டால் எப்படி,,,?என்கிற மனச் சமாதானமும் உடன் விழுந்து எழுகிறது,

மாலையில்தான், காலையில் என்றால் ஒன்று முடியாமல் போய் விடலாம் அல்லது முடியாது என்பதே சாஸாதமாகிப்போகும்,அதற்கு மேலாய் போக வேண்டும் என்றால் கட்டாயத்தின் பேரில் நடக்கிற விஷயமாகிவிடும்.

அழுத்தம்தருகிறவேலைகளைசிரிப்பும்பேச்சுமாய்முடித்துவிட்டு(இல்லையென்றால் நெஞ்சு வெடித்துபோகும் வெடித்து,,,) அலுவலகத்திலிருந்து கிளம்பிய போது மணிஐந்தே காலுக்குள்ளாய் அடங்கியிருந்தாய் சொல்லிச் சென்றது கடிகாரம்,

வட்ட வடிவமாய் சுவர் உரசி தொங்கிய கடிகாரத்தின் வயது என்னவென சரியாகத்தெரியவில்லை,

உத்தேசமாக சொல்ல வேண்டும் என்றால் அதன் வயது இரண்டு மூன்று வருடங்களுக்குள்ளாய் இருக்கும் எனத்தான் கொள்ள வேண்டி இருக்கிறது,

பொருளுக்கென வயதென தனியாய் இருப்பதாய் இதுவரைக்கும் இவன் அறிந் ததில்லை.வேண்டுமானால்நாமாகநிர்ணயித்துக்கொள்லலாம் அதன் வயதை, பொருளின் தயாரிப்புத்தேதியிலிருந்து அது வாங்கி உபயோக்கிற இன்று வரை வேண்டுமானால் அதன் வயது இன்னது என வைத்துக் கொள்ளலாம்.

பொருளுக்கு ஏது வயது,அதற்கேது முடிவு தேதி.அதுவும் இது போல் ஒரு நல்ல பொருளாயும் மாடனான ஒன்றாகவும் அமைந்து விடுகிற ஒன்றிற்கு ஏது எக்ஸ்பெயரிகள் எனத்தான் கேட்கத் தோணுகிறது,

மனிதர்களைகொண்டாடுகிறோமோஇல்லையோ,அவன்செய்வித்த பொருட்க ளை கொண்டாடுவென்பது பழகிப்போனதும் தொன்று தொட்டு தொடராமல் தீடீரென முளைத்த நாகரீக பழக்கமாகிப் போனது.

ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு கேக் வாங்கி அதில் சுமார் ஐநூறு ரூபாய் பெறுமான கேக்கை சக நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முகங்களில் தேய்த்து விட்டு மீதம் இருக்குற கேக்கில் ஜிகினா பேப்பர்களின் சிதறல்கள் சிதறிக்கிடக்க அதை நுனி விரல் தொடு ஆளுக்கு கொஞ்சம் அறுத்துக் கொடு த்து விட்டு விரல் நுனியில் ஒட்டி இருக்கிற கிரீமையும் கேக்கின் பிசுபிசுப் பையும் துடைத்து விட்டு இது போதும் என மிச்சக்கேக்கை ஓரம் கட்டி வைத்து விட்டு அல்லது குப்பைக் கூடைக்கு அருமாகமையாய் நகர்த்திவிட்டு ஆடம்பர மாய் பிறந்த நாட்கள் கொண்டாடுகிற மனதுகளைத்தாண்டி இன்னமும் நூற்றாண்டு வயது கொண்ட பொருட்களை பத்திரம் காட்டி பாதுகாத்து வைக்கும் மனது இருக்கிறதுதான் இங்கு என்பது ஞாபகம் வருகிறது கடிகாரத் தைப்பார்க்கிற நேரங்களில்/

கடிகாரம் பார்த்து வந்த காதல் என்று சொல்வார்களே அது இதுதானோ,,,?

இல்லை அது வேறு என்கிறான் நண்பன்.

“அதுவந்து மாப்புள அப்பிடியில்லடா கதை,அவன் இருக்கானே அவன் அதான் டயம் பாத்து காதல் பண்ணுறவன்,அவனுக்கு குறிப்பிட்ட நேரம் பாத்துதான் காதல் வருமாம்,காலையில் விடிஞ்சி எந்திரிச்சதும்,பின்ன மதியம் சாப்புடும் போதும்,அதுக்கப்புறமா சாய்ங்காலம் மற்றும் ராத்திரி வேளையிலதான் வெளக்கு வச்சி காதலிப்பானாம்,

காதல் ,காதல் ,காதல் காதல் இல்லையேனும் காதல், காதல், காதல்தான் என்பது அவன் அகராதியில் உண்மைதான் என்ற போதிலும் கூட அதை அழுத்திச் சொல்வதில் வல்லமை பெற்றிருந்தவனாயும் வன்மை கொண்டவ னாயும் ஆகித்தெரிந்தான்.

கேட்டால்சொல்கிறான்,

“காதல்ங்குறது ஆத்மார்த்தமான விஷயம்,ஒரு புனிதம் கொண்டதுதான், ஒருத்தருக்காக ஒருத்தரு அவன்இல்லைன்னா அவ இல்லை, அவ இல்லை ன்னா அவன் இல்லைங்குறளவுக்குப்போயி நிக்குறதுதான், வீட்ட எதுத்து சொ ந்தங்கள பகைச்சிக்கிட்டு,வேற யாரும் வேணாம் கொண்டவன் ஒருவனே போதும்ன்னு சொல்லி அத்துக்கிட்டும் நிக்கிறதுக்கு தயாரா ஒருத்தியும் ,ஒரு வனும் இருக்கும் போது அந்த யெடத்துல காதல் புனிதமாகிப் போகுதுதான், அப்பிடிபுனிதமாகிப்போனகாதல் பல காரணங்களால தோத்துப் போயி நிக்கும் போது நெனைச்சி உருகுனவுங்க ஒருத்தருக்கொருத்தர் கை பிடிக்க முடியாம போயிறப்ப அதையே நெனைச்சி உருகிப் போறதுல்ல வாழ்க்கை, அதையும் தாண்டி கடந்து வரப் பழகிக்கிறணும்தான்,

“நம்ம வாழ் நாள்ல நாம பொறந்ததுலயிருந்து இன்னை வரைக்கும் எத்தனை யோ விஷயங்கள் நல்லதும் கெட்டதுமா நம்மள கடந்து போயிருக்கு, நல்லது நடக்கும் போது சந்தோஷம் களி கொண்டு ஆட்டம் போடுறதும், கெட்டது நடக்கும்போதுஒறைஞ்சி போயி ஒக்காந்துர்றதுமா ஆயிறக்கூடாது . நடக்குற எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு அதுகள கடந்து வரப் பாக்கணுமே ஒழிய அங்கயே நின்னுரக்கூடாது,“அப்புறம் அதுக்குன்னு சிக்னல் வச்சி ட்ராபிக்க கிளியர் பண்ணுற மாதிரி ஆகிப்போகும் நெலம பாத்துக்கங்க,

நல்லா யோசிச்சிப் பாருங்க,நம்மளப்போல யெளந்தாரிப்பையலுகளுக்கும் பொண்ணுகளுக்கும் மட்டுமா காதல் வந்துருக்கு,நம்ம முன்னோர்களான நம்ம பாட்டன் பூட்டன் காலத்துலயிருந்து ஒருத்தருத்தர் மனசுலயும் காதல் இருந்துக்கிட்டு தான் இருந்துக்கு,அவுங்களுக்கெல்லாம் நெனைச்சி ஆசைப் பட்ட காதல் கை கூடி வந்துருக்க வாய்ப்பில்லஏன்னா அந்த கட்டுப் பெட்டி யான காலத்துல அப்பிடித்தான் ஆகியிருக்க வாய்ப்பிருக்கு, அப்பிடித்தான் இருந்துருக்க முடியும், அதுக்காக அவுங்க அதையே நெனைச்சிக்கிட்டேவா இருந்தாங்க, நல்லது கெட்டது எல்லாத்தையும் தங்கிட்டு அதக்கடந்துதான் வந்தாங்க,அப்பிடி வந்தததுனாலத்தான் நீங்களும் நானும் இப்ப ஒரு உயிரா ஜனிச்சி நிக்கிறோம்,

“அவுங்க நமக்கு இப்பிடி நடந்து போச்சே ஆசைப்பட்டது கெடைக்கலை யேன்னு அப்பிடியே ஒறைஞ்சி நின்னுருந்தாங்கன்னு வையிங்க,இந்த சமூகம் அப்பிடியே அசைவற்றுப் போயில்ல நின்னுருக்கும், இல்லையா,,,? அதுனால தோத்தாலும் காதல் காதல் காதல்தான் மனக்கொண்ட நினைவுகளை அள்ளிச்சொமந்துக்கிட்டு பயணிச்சிக்கிட்டே இருக்கணும்,

காதல் உயிர்வாதைதான் .இல்லைங்கல, அதுக்காக அது போயிருச்சின்னா அந்த யெடத்துலயே சுழியடிச்சாப்புல ஒக்காந்துருந்தா சரிப்பட்டு வராது, அதையும் கடந்து வரப்பழகிக்கிறணும் நாம”ன்னுவான்.

அப்பிடிசொல்லும் போதுதான் அந்த நெனைப்புக வருமாம்,அப்பிடி வர்ற நேரங்கள்ல கடிகாரத்தப் பாப்பானாம், கடிகாரம் கடிகாரம் அவன் நிர்ணயிச்ச நேரங்கள்ல இல்லைன்னு வையேன், காதலிக்க மாட்டானாம்,அந்த பொண் ணு கூட செல் போன்ல கூட பேச மாட்டானாம்,மனசு நெறைஞ்சி இருக்குற காதல்நெனைவுகளைகழட்டிகீழவச்சிருவானாம்,

“அட படுபாவிப்பயலே இப்பிடிப் பண்ணிக்கிட்டு திரியிறயேன்னு அவன் காதலி சொன்னாலும் கூட அவன் நிர்ணயிச்சிருக்குற நேரத்துல அரை மணி தாண்டுனாக்கூட மூச் காட்டப்புடாது,அப்புறமா பேசிக்கிருவோம்.விடு ரொமா ன்ஸ் டயம் ஓவர்”ன்னுருவானாம்,

”அது ஏண்டா அப்பிடியிருக்க பொங்கி பிரவகிக்கிற தண்ணி ஓட்டம் போலத் தானப்பா காதலு அதுக்கு ஏங் போட்டு அணைகட்டுறைன்னு கேட்டா,போடா டேய் போடா,நம்ம என்னதான் காதல் நீரோட்டத்துல கலந்து தெளைச்சி ஓடுனாலும் கூட கறாரா இருக்கணும்டா. மணி பாத்துதான் சாப்புடுறோம், மணி பாத்துதான் தூங்குறோம்,மணி பாத்து தான் ஆபீஸிக்கு போறோம்,மணி பாத்துதான் பள்ளிக்கொடத்துக்கு புள்ளைங்கள அனுப்புறோம் ,இன்னும் என்னென்னமோ மணிபாத்து நடக்கும் போது காதலிக்கிற நான் மட்டும் மணி பாத்து காதலிக்கக்கூடாதா,,” என்ன என பேசுகிற அவனை இடை மறித்து ”அட படுபாவிப் பையலே பொங்கி வர்ற எண்ண அலைகளுக்கு ஏதுடா கடிவா ளம்,அதுக்கு எதுக்குடா கட்டுக்கயிறு,,” என்றால் ”நான் அப்பிடித்தான் எல்லாம் மணி பாத்துதான் நடக்கும்” எங்கிட்ட என்பான்,

”அப்பிடியா பாத்துடா,,” என அர்த்ததோடு பார்த்தால் ஏய் ஒழுக்கமா போயிரு என்பான், என்றான் நண்பன்.கடிகாரம் பார்த்துக்காதலிக்கிறவனைப் பற்றி சொல்லும் போது,/

இதில் ஒரு கொடுமை என்னவென்றால் கடிகாரம் பார்த்து காதலிக்கிறவ னைப் பற்றி சொல்லி விட்டு நண்பன் கைக்கடிகாரம் பார்த்துக்கொண்டான் கிளம்பவேண்டும் சீக்கிரம் எனச் சொல்லியவனாய்/

ஞாபக அடுக்குகளை பொட்டலம் கட்டி தனக்கு அனுப்பி வைத்த கடிகாரத் திற்கு நன்றி சொல்லிவிட்டும் அதனை எறிட்டுப்பார்த்தவனாயும் வருகிறான் அலுவலகம் விட்டு./

கடிகாரமும் அதனுள் குடி கொண்டிருந்த சின்னதும் பெரியதுமான முட்களும் விநாடி முள்ளும் கைகோர்த்துக்கொண்டும் ஒன்றின் மீது ஒன்றான கூட்டி சைவுடனாய் நகர்ந்து மணி சொல்லிக்கொண்டிருப்பதாகப் பட்டது/

ஊதா நிற வர்ணம் காட்டிய சுவரிலிருந்து பூத்தெழுந்து கிளைத்திருந்த மலர் கள் ஒன்றுடன் ஒன்றாய் கைகோர்த்தும் உறவிட்டும் நடனமாடியுமாய் கடிகாரத்தின் மீது படர்ந்து சென்றதாய்/

5 comments:

வலிப்போக்கன் said...

ஆசைப்பட்டது கெடைக்கலை யேன்னு அப்பிடியே ஒறைஞ்சி நின்னுருந்தாங்கன்னு வையிங்க,இந்த சமூகம் அப்பிடியே அசைவற்றுப் போயில்ல நின்னுருக்கும-- நிஜந்தான்..

திண்டுக்கல் தனபாலன் said...

கெட்டிக்கார நண்பன்...

vimalanperali said...

அன்பின் கருத்துரைக்கு
நன்றியும் பிரியமும் சார்/

vimalanperali said...

வனக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றியும் அன்பும் கருத்துரைக்கு/

vimalanperali said...

நண்பனைப் பாராட்டிய கருத்துரைக்கு நன்றி/