18 Oct 2018

வெளிச்சம் பட்ட வெளிகளில்,,,,

ஜன்னல் வழியே பார்க்கிறான். கிராதி வைத்த ஜன்னல்,

இப்பொழுதுதான் ஒரு மாதம்முன்பாய் பூசிய வர்ணத்தில்அழகுகாட்டி நின்றது, பிங்க்கலர் அது.

அதற்கு வர்ணம் பூசும் முன் கலர் தேர்ந்தெடுக்க கருத்துக் கணிப்பு மட்டும் தான் நடத்தவில்லை,மற்ற எல்லாம் செய்திருந்தார்கள்,சின்னவள் விடலை வயசு, அது சார்ந்த மனசு, ஏழாவது படிக்கிறாள்.சேர்ந்தாற்போல் நல்லதாய் நாலு செட் ட்ரெஸ் கிடையாது யூனிபார்ம் தவிர்த்து, அதுவும் அளவாகவே/

கேட்டால் அது போதும் என்பாள்.தேவைக்கு அதிகமாக நான் வைத்துக் கொள்கிற துணி வேறு யாருக்காவது உதவுமல்லவா என்பாள்,

சாப்பாடு கூட்டு குழம்பு தண்ணீர் மற்ற மற்ற எல்லாவற்றிலும் அப்படித்தான், தேவைக்கு அதிகமாய் தட்டிலும் இருக்காது ,பக்கத்திலும் வைத்துக்கொள்ள மாட்டாள்.

கேட்டால் தேவைப்பட்டால் கிச்சன் பக்கத்தில்தானே இருக்கிறது,போய் எடுத்துப் போட்டுக்கொள்கிறேன் தேவையானதை.

எல்லாம் கைக்குப்பக்கத்திலேயே இருந்து விட்டால் அல்லது கிடைத்து விட் டால் நம்மிடம் இயகையிலேயே இருக்கிற முயற்சியும் தேடுதலும் இல்லா மல் போய் விடும்.

அப்புறம் தேடுதலற்றதே பழகிப்போய் சூன்யம் பூத்துப் போவோம் என்பாள்.

தேவை என வரும் போது ஒரு தேடுதல் இருக்கும், தேவைகள்தானே எதை யும் தீர்மானிக்கிறது என அப்பா சொல்வது சரிதான் என்பாள்.

எது ஒன்றையும் எதற்கு தேவைக்கு அதிகமாய் வைத்துக்கொள்ள வேண்டும். அது ட்ரெஸ் ஆனாலும் சரி,மற்ற எதுவானாலும் சரி என்பாள்.

கொஞ்சமாக வைத்திருந்தாலும் அதை நீட்டாக துவைத்து தேய்த்து புதுசு போ ல் வைத்திருப்பாள்.

அவளுக்கென துணி துவைக்க ஒரு தனி சோப்,அதுவும் அவளது சேமிப்பில் வாங்கி கொள்வாள்,

அவளுக்கென்னசேமிப்பு,,,?,எப்படிஎனத்தானேகேட்கிறீர்கள்,இருக்கிறதே,அம்மா தருகிற பாக்கெட் மணி,தவிர அம்மாவிற்குத்தெரியாமல் அப்பாவும் தந்து விடுகிற அதே பெயரிலான பணம்/

செலவழித்தது போக எல்லாமும் சேமிப்பில் இருக்கும்,அந்த சேமிப்புதான் அவளுடைய அவளுடைய சட்டையில் இருக்கிற பாக்கெட்டை துவைக்கிற சோப்பாக மாறியிருக்கிறது,

கடையில் போய் துணி துவைக்கிற சோப் எனக்கேட்டு வாங்கி வந்து விட மாட்டாள்.

கடைக்காரரிடம் என்ன சோப் இது ,எப்பொழுது வந்தது,தயாரிப்புத்தேதி என்ன, அது முடிவடைகிற தேதி என்ன என தெளிவாய் கேட்பாள்.

கடைக்காரர் நொந்து போவார்,ஆயிரக்கணக்குல போட்டு சரக்கு வாங்குற நாங்களே இவ்வளவெல்லாம் பாக்குறதில்ல,நீயி ஒரு சோப்பு வாங்குறதுக்கு இவ்வளவு படுத்துறயே என்பார் சிரித்துக் கொண்டே/

பரவாயில்லண்ணெ ஒங்க பொண்ணு ஒரு சோப்பு வாங்குறதுக்கு இந்தப்பாடு படுத்துறாளே,அத படுத்தி எடுக்குற விஷயமா பாக்கக்கூடாது,தெளிவுன்னு வேணுமுன்னா எடுத்துக்கிறலாம்.

எனக்கும் ஒரு பொண்ணு இருக்கா சார்,வெந்தத தின்னுட்டு விதி வந்தா சாவோம்ங்குற மாதிரி இருப்பா அவ பாட்டுக்கு என பின்நாளில் அவளது அப்பாவைப் பார்க்கும் போது சொல்லியிருக்கிறார் கடைக்காரர்/

இதுபோக சின்னதாய் அயன் பாக்ஸ் ஒன்று வாங்கி வைத்திருந்தாள், வாங்கிய சோப்பை வைத்துக் கொள்ள அழகு வாய்ந்த சோப்பு டப்பாவை எப்படி வாங்கி னாளோ அதே போல் அயன் பாக்ஸ் வைப்பதெற்கென தனி அட்டைப் பெட்டி ஒன்று வாங்கினாள்,

துவைத்த துணிகளையெல்லாம் மொத்தமாக எடுத்து வைத்துத்தான் தேய்ப் பாள், லூவு நாளின் ஒரு பொழுதில்/

அவள் துணி தேய்க்கிற போது வீட்டில் எந்த சப்தமும் இருக்காது.எப்படி இருக்கும்,விடியற் காலைஐந்துமணிக்கு எந்தச்சப்தம் வந்து வீட்டை நிறைத்து விடும்,,?

டீ வி யில் தனக்கு மட்டுமாய் கேட்கக்கூடிய சப்தத்தில் மெலிதாக பாடல்க ளை பாட விட்டு கேட்டுக் கொண்டே தேய்ப்பாள்.

கேட்கிற பாடல்கள் மனதை நிறைத்தாலும் கை வேலையை கவனிப்பதில் தவறாது.

பளபளவென விடியும் முன்னாய் தேய்த்து முடித்து விட்டு விடிந்த பின்னர் அம்மா தருகிற ஒரு டம்ளர் டீயுடன் வாசல் படியில் போய் நிற்பாள் விளக்கு மாறும் கையுமாய்.

தெளிக்கிற தண்ணீரும்,போடுகிற கோலமும் சுத்தம் செய்த வாசலில் மறு முறை செய்து ஓடோடி வந்து ஒட்டிக் கொள்ளும்/

ஆனால்பெரியவள்அதற்குநேரெதிர்/அம்மாச்செல்லம்,அவளைமிகவும்கஷ்டப் படுத்தாமல் வைத்திருப்பதாய்கெடுத்து வைத்திருந்தாள்,வீட்டு வேலைகள் எதிலும்அவள் கை கலப்பதில்லை,

காலையில் எழுந்திருக்க காலேஜிற்குப் போக மாலையில் வர படிக்கிறேன் பேர் வழி என தனியாய் ரூமிற்குள் போய் அடைந்து கொள்ள இதற்கே அவ ளுக்கு நேரம் சரியாகிப்போவதாய் தோற்றம் காட்டி வீட்டு வேலை மற்றும் வெளி வேலை எதிலும் கலந்து கொள்ளாமலும் கண்டு கொள்ளாமலுமாய் தப்பித்து வந்தாள்.

சின்னவள் அப்பாச்செல்லம், அப்பாவுக்கு இரண்டு பிள்ளைகளுமே செல்லம் தான். பெரியவளிடம் தென்படாததை சின்னவளுக்கு ஊட்டி வளர்த்தார்,

”பெரியவளிடமும்சொல்லிப்பார்த்தார்,கேட்கவில்லை,வீட்டுக்காகஇல்லாட்டிக் கூட ஒனக்காக வேலைகள செய்ய பழகிக்க, பின்னாடி கை ஊனி எந்திரிச்சி நிக்க ஒதவும்.யார் கையையும் எதிர்பாத்து நிக்க வேணாம், பாத்துக்க” ,,,,,,என்கிற பேச்சை தயவு தாட்சணை இல்லாமல் தட்டி விட்டாள் அவளது அம்மா,

”போதும்,போதும் ஏங் புள்ளை வீட்டு வேலைகளப் படிச்சது,அதுக்குத்தான் ஒங்க ரெண்டாவது பொண்ணு இருக்காளே, போதாதா,,,,” என்கிற பேச்சில் அதை மட்டம் தட்டி விடுவாள்.

ஆனால் அந்தப் பேச்சிற்குப் பின்னால் இருந்த உண்மை இதுதான் சின்ன வளை நம்பி முழு வீட்டையும் ஒப்படைத்து விடலாம்,ஆனால் பெரியவளை நம்பி அப்படிச் செய்து விட முடியாது.என்பதுதான் உண்மையிலும் மிகப் பெரிய உண்மை என அக்கம் பக்கத்தில் பேசிக்கொண்டார்கள்.

சின்னவள்தான் சொன்னாள், இந்தக் கலர் அடித்தால் கிராதிக்கு நன்றாக இருக்கும் என ,அதில் பெரியவளுக்கு கோபம், தான் தேர்ந்தெடுத்த கலரை அடிக்கவில்லை என /

நடுவில் பூத்திருந்த பூ ஒன்று விரிந்து திறந்திருந்த இலைகளின் நடுவாய் நின்றிருந்தது.

அது என்ன பூ எனத்தெரியவில்லை ,என்ன இலை என்பதும் புரியவில்லை கிராதி செய்தவரைப்பொறுத்தவரை பூ,இலை என்பதுதான் கணக்கு. எந்தப்பூ எந்த இலை என்பதும் அதை எந்த இடத்தில் எப்படி சாய்த்து எத்தனை டிகிரி கோணம் காட்டி வைக்க வேண்டும் என்பதெல்லாம் அனாவசியம்.

பார்க்கநன்றாயிருந்தது,கம்பியிலே கண்ட கலை வண்ணம், இரும்பை உருக்கி வளைத்து தன் எண்ணத்திற்கு வண்ணம் கொடுத்த கலைஞன்.அவரை காண வேண்டும் கண்டிப்பாக.

வீடு கட்டுகையில் காண்ட்ராக்டர் கொண்டு வந்து வைத்த கிராதி,நல்ல கனம் கொண்டிருந்தது.

அவரைப்போலவே.பறுத்துப் பெருத்திருந்த அவர் எப்பொழுதும் வெள்ளைச் சட் டைதான் போட்டிருப்பார்,

பெரும்பாலும் அவர் அணிவது வெள்ளை வேஷ்டி வெள்ளைச் சட்டைதான் என்றாலும் எப்பொழுதாவது ஒரு நாளன்றின் போது பேண்ட் சட்டையில் வரு வார்,

அப்படி வரும் போது மறக்காமல் தனது லக்கி சர்ட் ஒன்றை அணிந்து வருவார்,

அப்படியானால் லக்கிப்பேண்ட் என ஒன்று இருக்கும்வேண்டும் தானே எனக் கேட்கிற பொழுது ”அப்படியெல்லாம்வைத்துக் கொள்ள விரும்பவில்லை, லக்கியை சட்டையில் தேடியவன் பேண்ட்டில் தேடி எடுத்து வைக்க மறந்து போனேன்,,” என்பார்.

வெளிர் நிறம் காட்டியிருந்த ஊதாக்கலர் ஸ்கூட்டரில் அவர் கனத்த தாங்கி வரும்போது அது வீதி உலா வருகிற தேர் போல இருக்கும்,

அந்தத்தேரில்தான் கிராதியை வைத்துக் கொண்டு வந்தார் கட்டிடம் கட்டிக் கொண்டிருந்த ஒரு நாளில்/

அப்பொழுதெல்லாம் கனம் லேசு பார்க்க நேரமிருந்ததில்லை,கட்டி முடிக்கப் போகிற வீட்டில் எப்பொழுது குடியேறலாம் என்பது தவிர்த்து/

பார்த்துபார்த்து பண்ணிப்பண்ணி ஒவ்வொன்றையும்செதுக்கி செதுக்கி அதற் காய் மெனக்கெட்டு மெனக்கெட்டு செய்கிற மனோ நிலை தன்னைப்போல் வீட்டை கட்டிக் கொடுத்தவருக்கும் இருக்க வேண்டும் என நினைத்தது தப்பாய்ப்போனது,

அவரே சொன்னார் ,ஒரு சொல்லில்,

சார்,நீங்கயெடத்தகுடுத்துருறீங்க,நாங்கஅந்த யெடத்துல வீட்ட ஊனி சாவியக் குடுத்துருறோம்,

இதுல வீடு யெடம் சாவிங்குறது போக நீங்க எங்கள நம்பி வேலைய ஒப்ப டைச்ச அந்த நம்பிக்கை முக்கியம் சார்,அதுக்குதான் இவ்வளவு பாடும்/

நாங்க நல்லா இருக்கமோ இல்லயோ ,சாப்புட்டமோ சாப்புடலையோ, தூங் குனமோ தூங்கலையோ,எங்க குடும்பத்துக்காக நேரம் ஒதுக்கனமோ இல்லை யோங்குற இன்னும் இன்னுமான ஏக்கம் தாங்கிய பல விஷயங்கள மனசுக் குள்ள போட்டு பூட்டி வச்சிக்கிட்டுதான் ஓடிக்கிட்டு இருக்கோம் என்பார்.

இதுல நீங்க சொல்றது போல எப்பிடி சார் சாத்தியம்,நீங்க நிக்கிற மண்ணும் அது மேல ரத்தமும் சதையும் உயிரும் உணர்வும் கொண்டவங்களால கட்டி எழுப்படுற கட்டடமும் உங்களது சார்,நீங்க இருக்கலாம், மெனக்கெடலாம், முழு உணர்வு கொட்டி இங்க இருக்கலாம்,ஆனா நான் அப்பிடி இல்லை, கூலிக்கு மாரடிக்க வந்தவன்,இப்படி வீடு கட்டிகுடுக்குற யெடங்களயெல்லாம் போயி நாங்க உயிரும் உணர்வுமா நின்னமுன்னு வச்சிக்கங்க,எங்களுக்கு மாரடிக்க யாராவது வரவேண்டியதா போயிரும் சார்,அதுனால நாங்க கட்டி எழுப்புற கட்டிடடத்துக்குள்ள போயி கழுத்தநொழச்சிக்கிற மாட்டோம், வெளி யில நின்னுக்கிட்டு எங்களால முடிஞ்ச அளவுக்கு வஞ்சனைஇல்லாமசெஞ்சி தர்றோம் சார்,அதுவே பெரிசு எங்களப்பொறுத்த அளவுக்கு,

இத்தனைக்கு இத்தனை வீடு, இத்தனை ரூமு,வராண்டா,கிச்சன்,பூஜை ரூமு, பெட் ரூமு,,,எதெது எங்கிட்டு, இத்தனைஜன்னலு,இத்தனை செல்பு,இத்தனை கதவு,,,,,அதுலமரம்இத்தனை, இரும்புக்கிராதி இத்தனை,,,இன்னும் எக்ஸட்ரா, எக்ஸ ட்ராவா என்ன வேணும்முன்னு நீங்க எங்ககிட்ட சொல்லியிருக்குறத கணக் குப் போட்டு கட்டுபடுயாகுற ரேட்டுல சொல்லி பேசி முடிச்சி கட்டிக் குடுப் போம், அவ்வளவுதான்,

,,ஒங்களுக்கு இதுதான் வீடு,எங்களுக்கு இது போல பல வீடுக,,,,,, கட்டிக் குடுக்கப்போற யெடத்துல,,,,அந்த யெடங்கள்லயெல்லாம் போயி உருகி உருகி நின்னுக்கிட்டு இருந்தோமுன்னு வையிங்க அவ்வளவுதான் தொலைஞ்சோம் நாங்க”,,,,எனச் சொல்லியவாறே அவர் கட்டிக் கொடுத்த கட்டிடத்தில் ஒட்ட வைக்கப்பட்டு பூத்திருந்த ஜன்னலாய் அது/

பூத்திருந்த பூவை போர்த்தியிருந்த போர்வையை விலக்கிப்பார்த்த போது சிவப்புக்கலரில் தெரிந்தபூ கண் சிமிட்டி சிரித்தது இவனைப்பார்த்து.”என்ன நல் லாயிருக்கேனா பாக்குறதுக்கு” என்றவாறு/

ஒனக்கென்ன இருக்குற யெடத்துல நல்லாத்தான் இருக்க,ஆனா பாக்குற நாங்களும் ரசிக்கிற என்னைப்போலானவுங்களும்தான் கெட்டுப் போயிருறா ங்க மனசக் குடுத்து என்றான் பொதுவாக.

அகன்று விரிந்திருந்த இலைகளுக்கு பச்சையும்,பூவிற்கு சிவப்புமாய் பூசியிரு ந்த வர்ணம் கொஞ்சம் உதிர்வு காட்டி வெளுத்திருந்தது.

வெளுத்து உதிர்ந்திருந்த பெயிண்ட் ஆங்காங்கே திட்டுதிட்டாய் விட்டுத் தெரிய சொறிபிடித்திருந்த இடம்போல் காட்சிப்பட்டது.

திரையை விலக்கி ஜன்னல் வழியாகப்பார்க்கிறான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எல்லாம் தெரிகிறது,அவசர அவசரமாய் ஓடி வந்து சுவர் எழுந்து மறை க்கும் கட்டிடங்களின் பக்கவாட்டிலும் அது சார்ந்தும் அருகிலுமாய் நின்ற மரங்களையும் அதன் அடர்த்தியையும் தாண்டி ஊடுருவிச்செல்லும் பார்வை தூரத்தின் தூரத்திலிருக்கிற காட்சிகளையும் அது தாண்டிய ஒன்றையும் காட்சிப் படுத்திச் செல்வதாக/

இலைகளும் கிளைகளும் காயும் கனிகளுமாய் இருக்கிற மரங்களில் பெரும் பாலும் வேம்பும் புளியமும் காட்சிகொண்டு தெரிவதாகவும் சில இளவயதின் வாசலிலும் சில முதுமை கொண்டுமாய் காட்சிப் படுகிறது,

இளம் பச்சையும் கறும்பச்சையும் வெளிர் மஞ்சள் நிறமுமாய் இருந்த இலைகள் சில மரங்களின் கீழ் உதிர்ந்தும் தரை படர்ந்துமாய் காணப்பட்டது,

உதிர்ந்த இலையில் ஒன்று மரத்தின் மீது கீழே விழாமல் பிடிவாதம் காட்டி மரத்தின் மீதே ஒட்டிக்கொண்டிருந்ததாய்/

ஒட்டிக்கொண்டிருந்த இலையின் மீது அவசரமாய் ஓடிய பல்லி ஒன்று சரசரவென மரத்தின் உச்சிக்கும் கீழேயுமாய் ஓடி ஓடி போக்குக் காட்டிக் கொண்டிருந்தது,

இலைகள் அடர்ந்த பகுதிக்கு ஓடவும் பின் அங்கிருந்து வெளியே வந்து சற்று நின்றவாறுமாய் இருந்த பல்லி மரத்தின் கீழுக்கும் மேலுக்குமாய் பறந்து பறந்து அமர்ந்த பறவையின் போக்கை அவதானித்துக் கொண்டிருந்ததாய்/

உயிர் காத்துக்கொள்ளும் விடாத முயற்சியில் இருந்த பல்லி உயிரெடுக்க வந்த பறவைக்கு போக்குக்காட்டி அதை களைப்புறச் செய்து அனுப்பி விடுகிற தாய் சிறிது நேரத்தில்/

போன பறவை திரும்பி வந்தாலும் இருந்த பல்லி அங்கேயே அடை கொண் டிருந்தாலும் அதே அவதானிப்பும் அதே பறத்தலும் அதே களைபுறச் செய்த லும் தொடரும்தானே,,?

ஜன்னல்வழியாகப்பார்க்கிறான்.காலை வெயிலின் இளம் கிரணங்கள் இவன் முகம் பட்டு சமையலறையில் வீற்றிந்த ஸ்டவ்வில் வந்து விழுந்து மின் னியது,

ஸ்டவ்வின் மீது வைத்திருந்த குக்கரிலிருந்து கிளம்பிய ஆவியில் ஜன்னல் கம்பிகளின் தடமும் கலந்து பறந்து கொண்டிருந்தது,

காற்றின் திசையில் சொல்லித்திரிந்த ஒளி அலைகள் டீ ஆற்றிக் கொண்டி ருந்த மனைவியின் முகத்தில் பட்ட வெயில் அவளது முகத்தின் வலது பாதி யை விடுத்து இடது பாதியை வெளிச்சமிட்டுக் காட்டியது,

அது ஏன் இடது பக்கத்தில் மட்டும் அவ்வளவு வெளிச்சம் எனத் தெரியவில் லை.

ஒரு வேளை அவளது அன்றாட சமையலறை பாடுகளை இடதுபக்கம்தான் அதிகம் வெளிச்சமிட்டுச் செல்கிறதோ என்னவோ,,,?

அன்றாடங்களில் அவள் சுட்டடுக்கிய தோசையும் ,அவித்தெடுத்த இட்லியும், பொங்கி வடித்த சோறும் இன்னும் இன்னுமாய் அவளை சமையலறைப் பது மையாய் மட்டுமே நிற்க வைத்த இன்ன பிறவைகளுமாய் சூரிய கிரணங் களின் இளம் வெளிச்சத்தில் பட்டுக்கலந்து கொண்டிருந்தாய்/

8 comments:

ஸ்ரீராம். said...

சிறு நிகழ்வுகளை எளிதாகக் கதையாக்கி விடுகிறீர்கள்..

vimalanperali said...

அன்பும் நன்றியும் சார்.

வலிப்போக்கன் said...

எல்லாம் கைக்குப்பக்கத்திலேயே இருந்து விட்டால் அல்லது கிடைத்து விட் டால் நம்மிடம் இயகையிலேயே இருக்கிற முயற்சியும் தேடுதலும் இல்லா மல் போய் விடும்.--அனுபவ உண்மை..

vimalanperali said...

அன்பும் பிரியமும் சார்,வருகைக்கு/

Nagendra Bharathi said...

நிகழ்வுகள் கண்முன் விரிகின்றன.

vimalanperali said...

அன்பும் நன்றியும்/

கரந்தை ஜெயக்குமார் said...

தேவைக்கு அதிகமாக நான் வைத்துக் கொள்கிற துணி வேறு யாருக்காவது உதவுமல்லவா என்பாள்,

எத்துணை பெரிய மனம்

vimalanperali said...

அன்பும் பிரியமும்/