13 Oct 2018

வேரிலைபட்டு,,,,

இதோ வந்து கொண்டிருக்கிறேன் பறந்து,உடனடியாகவோ இல்லை சற்று தாமதம் காட்டியோ,,,,,/

கோபப்பட்டுக்கொள்ள வேண்டாம் தயவு செய்து/

கோபம் இருபக்கமும் கூர் கொண்ட முள் முனை போன்றது.சமயத்தில் நம்மையே பதம் பார்த்து விடக்கூடும்,கூடும் என்ன கூடும் கண்டிப்பாக பதம் பார்த்து விடும்தான்.

பார்க்கிற பதம் கைகாலை கிழித்துவிட்டால் பரவாயில்லை,இதயத்தை கிழித் து விடுபையாக சமயத்தில்/

பக்கத்து பக்கத்து வீட்டில் இருக்கிற அக்கா தங்கை இருவரும் சின்னப் பையன்கள் பிரச்சனைக்கா கம்பைதூக்கிக்கொண்டு நின்றார்கள். போன அமாவாசைக்கு முன் தினம்,

செல்லாயி அக்காவும் ,சுகந்தி அக்காவும் கூடப்பிறந்தவர்கள்,இரண்டு பேரின் கணவர்மார்களூம் மிலிட்ரியில் இருக்கிறார்கள்,

பார்டரைக்காக்கவும், சண்டை போடவும் லீவுக்கு வீட்டுக்கு வந்து போகவும் மட்டுமே சரியாய் இருக்கும் அவர்களுக்கு பொழுதில் போகிற தினங்களில்/

சின்ன அக்கா செல்லாயியின் வீட்டுக்காரர் பார்க்க சிவப்பாய் சுண்டி விட்டால் ரத்தம் வருகிற அளவிற்கு இருப்பார்,ஆனால் செல்லாயி அக்காவை தொட்டு பொட்டு வைத்துக் கொள்ளலாம்,

“என்ன மாமா இப்படி என்றால் அட போடா நெறத்துல என்னடா இருக்கு, எல்லாம் மனசுல இருக்குறதுதானடா,அவகிட்ட என்னைய எது ஈர்த்துச்சுன்னு சொல்ல முடியலடா,என்னமோ சொல்லுவாங்களே, கண்டதும்,,,,,,,,,அப்டின்னு அது போலத்தாண்டா ஆகிப்போச்சி ஏங்கதை,

சரி நம்மகிட்டதான் வந்து விழுந்துட்டானேன்னு இல்லாம என்னைய தூக்கி வச்சி கொண்டாடுறா இந்த நாப்பது வயசுக்கும் மேல.,இது கண்டதும் காதல் ரகம் மட்டுமில்ல,அதுக்கும் மேல கட்டிக்கிட்ட பெறகும் வந்து வளர்ந்து வேர் விட்டு விழுது பாய்ஞ்ச காதல்ன்னு சொல்லலாம்.அவ்வளவு தூரத்துக்கு யோசிக்கிற அளவுக்கு பண்ணிட்டா என்னைய என்பவர் செல்லாயி அக்காவை தலை மேல் தூக்கி வைத்து தாங்கிக்கொண்டிருக்கிறார்,

”ஊம்,போதும் ரெண்டு பேரும் மாறி மாறி ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு திரியி றது, தலை நரைச்சிப்போன இந்த வயசுல போயி என்ன அப்பிடி வேண்டியி ருக்கு,நாங்க ரெண்டு புள்ளைங்க வயச மடியில கட்டிக்கிட்டு திரியிறம்ங்குறத மறந்துறாதிங்க,

”நாங்க ரெண்டும் பரவாயில்ல அந்த வகைக்கு,எங்க அண்ணன்னு ஒருத்தன பெத்து வைச்சிருக்குறீங்களே,வெளங்காத தறுதலை.,உறுப்படியா வீட்டுக்கு ஏதாவது பண்ணுனதா,இல்ல ரெண்டு தங்கச்சிக இருக்குதுகளே வீட்டுல ,நம்ம அதுகளுக்கு அண்ணன்னு சுத்திக்கிட்டு திரியிறமே,ஏதாவது அதுகளுக்கு செய் வோமுன்னு என்னைக்காவது நெனைச்சிறுக்கானா,கிறுக்குப்பைய,கேட்டா அவந்தான் இந்த வீட்டோட செல்லம்ங்றீங்க,நல்ல வேளையா நீயும் அம்மா வும் மாத்தி மாத்தி இடுப்புல தூக்கி வச்சிட்டு கொஞ்சாம போனீங்க,நல்ல அண்ணன்,நல்ல அப்பா, அம்மா,,,,,,”என இரண்டு பெண்பிள்ளைகளும் பொறா மை மூச்சு விட்டபடியே பேசும் போது வீடே பொசுங்கிப் போகும்,

அந்த அளவிற்கான அவர்களது பேச்சில் வந்து விழுகிற கேலிகளை கடந்து சிரித்து விடுவார்கள்,இருவருமாய் /

“ஏய் விடுங்கடி சும்மா ரூட்டக் குடுக்காதீங்கடி அக்காளும் தங்கச்சியும்,நீங்க சொல்ற மாதிரி ஒங்கண்ணன் யாரையாவது இழுத்துக்கிட்டு வந்துதான் நிப்பா ன்னாஅப்பிடி நிக்குறத நானும் நீயும் தடுத்துற முடியுமா,ஒங்க அப்பா நெனை ச்சாலும் முடியாது அது,அது அவனும் அவனோட வாழப்போறதா அவன் தேர்ந்தெடுக்குற பொண்ணும் சேர்ந்து செய்ய வேண்டிய முடிவு,நம்ம முடிஞ்ச ளவு சொல்லித்தான்ப் பாக்கலாம்.அதுக்கு மேல நம்ம கையில் என்ன இருக்கு, இறுக்கி வச்சி புடிச்சிக்கிட்டா இருக்க முடியும்,,,,?இப்பிடிப்பட்ட பையலப் போயிக்கிட்டு,,,,,.சொல்லுங்க,

“அது கெடக்கட்டும் விடுங்க அவன் அப்பிடி ஆகப் போறா னோ இல்லையோ, நீங்க ரெண்டு பேரும் சேத்து அவன அப்பிடி ஆக்கீருவீங்க போல இருக் கே/,,,,என்று சிரித்தவாறே சொன்ன செல்லாயி அக்காவின் கணவர் நாங்க இந்த வயசுலையும் இப்பிடி இருக்குறதுல ஆச்சரியம் இல்லை. இன்னும் சொல்லப் போனா இப்பிடித்தான் இருக்கணும் எல்லாருமுன்னு ஆசைப் படுறவன் நானு.இப்பிடி சிரிப்பு பேச்சும் அன்பும் ப்ரியமுமா இருக்குற போது அனாவசியங்கள் எப்பையும் வீட்டுக்குள்ள நொழையிறக்கு யோசிக்கும், அதையும் மீறி நொழைஞ்சா எங்க ரெண்டு பேரையும் பாத்துட்டு வந்த வழி யேலேயே திரும்பிப்போயிரும் ஆமா பாத்துக்கங்க,,,,”என கடகடவென சிரிக்கிற செல்லாயி அக்காவின் கணவர் லீவில் வந்திருந்த போதுதான் இந்த சப்தமும் சண்டையும் என பேசிக்கொண்டார்கள்,

சப்தம் சரி என்ன சபதம் ஏது என அறிவதற்குள்ளாய் சுகந்தி அக்காவைப் பற்றியும் அவரது கணவர் பற்றியும் கண்டிப்பாய் தெரிந்து கொண்டே ஆக வேண்டும்,அப்பொழுதான் சரியாக இருக்கும்,

கல்யாண விஷயத்தில் சுகந்தி அக்காவின் கனவு வேறு மாதிரியாக இருந்தது. நல்ல வேலையுள்ள கை நிறை சம்பாத்தியம் கொண்டவர்தான் கணவராக வர வேண்டும் என்பதெல்லாம் இல்லை. கண்ணுக்கு லட்சணமாக இருக்கிற ஒருவர் அன்றாடக்கூலியாக இருந்தாலும் பரவாயில்லை என்கிற கனவுடன் இருந்தவளின் முன் மிலிட்ரிக்காரரை மாப்பிள்ளையாக நிறுத்தி அவளை சம்மதிக்க வைத்து பரிசம் கல்யாணம் என முடித்த நான்கு வருடங்களில் அடுத்தடுத்து இரண்டு ஆண்பிள்ளைகளுக்கு தாயானாள்.

கல்யாணமான பின்பும் செல்லாயி அக்காவின் குடும்பத்தினரைப்போல காதல ர்களாக வாழா விட்டாலும் கூட கணவன் மனைவி என்கிற இலக்கணத்தி ற்குள்தான் வாழ்ந்தார்கள்,

செல்லாயி அக்காவின் பிள்ளைகளுக்கு சுகந்தி அக்காவின் பிள்ளைகளும் ஒன்றிரண்டு வயது வித்தியாசத்தில் வளர்ந்தார்கள் அருகருகாமை வீடுகளில், தங்கச்சி அண்ணன்,அண்ணன் தங்கச்சி என்கிற உறவில் அவர்களுக்குள் ஒருபோதும்விரிசலும்கருத்து வேறுபாடும் வந்ததில்லை,வழக்கமாய் வருகிற சிற்சில மனமுரண்கள் தவிர்த்து/

என்னதான் மனமுரண்கள் அவர்களுக்குள் இருந்த போதும் கூட செல்லாயி அக்காவீட்டு பிள்ளைகளின் முகத்தில் சுகந்தி அக்கா பிள்ளைகளின்முகமும் சுகந்தி அக்காவீட்டு பிள்ளைகளின் முகத்தில் செல்லாயி அக்கா பிள்ளை களின் முகமும் மனசுமாய் பட்டுத்தெரிய பிரதிபலித்தார்கள்,அது தற்செயல் ஒற்றுமையா இல்லை அவர்களாய் செய்து கொ ண்ட ஏற்பாடா எனத்தெரிய வில்லை,

ஒரே இடத்தில் அருகருகாமையாய் வளர்ந்த இரண்டு மரங்கள் ஒன்றின் மீது ஒன்றான தோள் தளுவளோடு வேரும் விழுதும் விட்டு படர்ந்து பாவிக் காணப்பட்டதாய் தெரிந்தது,

”என்னாடி இது நீயி கருப்பு அவ வெளுப்பு ,இப்பிடி இருக்கும் போது ஒங்க ளுக்குள்ள ஒத்துப்போயி எப்பிடி பக்கத்துபக்கத்து வீடுகள்ல குடி வந்தீங்க என கேட்டவர்களிம் சொன்னாள் சுகந்தி அக்கா,

”ஆமாம் நான் வெளுப்பு அவ கறுப்பு சரிதான நீங்க சொன்னது என்ற சுகந்தி யக்காவிடம் நெறத்தச்சொல்லடி,நீ கறுப்பு வெள்ளைன்னா அவ கலரு,நீயி எம்.ஜியாருன்னா அவ சிவாஜி,நீயி இளையராஜா ன்னா,அவ கே.வீ மகாதே வன், அவ பழைய சோறுன்னா நீயி இட்லி தோசை ,,,, இப்பிடி இருக்கும் போது ஒங்களுக்குள்ள எப்பிடி ஒத்துப்போயி இங்க குடி வந்திங்கன்னுதான் கேக்கு றேன்எனச்சொன்னவர்களிடம்செல்லாயி அக்காவோ, சுகந்தி அக்காவோ சொன்ன பதில் எல்லாத்துக்கும் மனசுதான் காரணம்,அது எங்க ரெண்டு பேருக்கும் இருக்கு,எனக்கு ஒண்ணு தேவைன்னா அவ விட்டுக் குடுப்பா, அவளுக்கு ஒண்ணு தேவைன்னா நான் விட்டுக்குடுத்துருவேன், இதுதான் பரஸ்பரம் எங்க ரெண்டு பேரையும் நகத்தி கொண்டு போகுதுன்னு நெனைக்கி றேன்.போகட்டும் என அவள் சொன்ன நாளொன்றின் நகர்வில்தான் அந்த சண்டை நடந்து முடிந்து போகிறது,

மிகவும் மூர்க்கம்கொண்ட சண்டை என இல்லாவிட்டாலும் கூட கொஞ்சம் நாரசமாகிப் போனது மாதிரியாய் அம்பலபட்டு விட்ட காட்சி காண்போரை முகம் சுளிக்க வைத்து விடுகிறதாய்/

இவர்களது வீட்டிலிருந்து மூன்றாம் வீட்டிலிருந்த பையன் செல்லாயி அக்காவின் பெண்களைப் பார்த்துதான் கேலி பேசுகிறான் தினசரி, பையன் களை சேர்த்து வைத்துக்கொண்டு என கோபம் கொண்ட செல்லாயி அக்கா தனது மிலிட்ரிக்கார கணவனிடம் சொல்லவும் அவன் நேராக ஆளுயரக் கம்புடன் போய் சண்டைக்கு நிற்கவும் பதறிப்போன மூன்றாம் வீட்டுப்பையன் தனது காலேஜ் நண்பர்களுக்கு சொல்லிவிட்டு நேராய் போலீஸ் ஸ்டேசன் போய் விட்டான்,

மிலிட்ரிக்காரரும் செல்லாயி அக்காவும் போலீஸ் ஸ்டேசன் போனபிறகுதான் தெரிந்திருக்கிறது, அந்தப் பையன் தனது பெண்ணை கேலி பேசவில்லை, மாறாக மாலை நேரத்தின் ஒரு குறிப்பிட்ட வேளையில் அந்தத்தெருவில் வந்து அலப்பரை பண்ணுகிற விருத்தாக்களை எப்படி விரட்டுவது என தனது நண்பர்களுடன்பேசிக்கொண்டிருந்ததுஇப்படிதிரித்துஅர்த்தம்கொண்டுவிட்டது கண்டு அந்தப் பையனிடம் மன்னிப்பு கேட்டு விட்டு வந்தார்கள் மிலிட்ரிக்கார ரும் செல்லாயி அக்காவும்/

கண்ணை மறைத்த கோபமும் மனதை மறைத்த வெஞ்சினமும் கை கோர் த்து விட்டால் ஆபத்தே ,அந்த ஆபத்து நம்மை நெருங்காமல் கொஞ்சம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் நிஜத்திலும் நிஜம் என செல்லாயி அக்காவின் கணவர் லீவு முடிந்து போகும் போது அடுத்த லீவுக்கு வந்திருந்த சுகந்தி அக்காவின் கணவரிடம் சொல்லி விட்டுப் போனார்.

கோபம் கோபம் கோபம்,,,,கோபம் என்பது உடனடி ஆயுதமாகவும் செயல் பாடற்ற தனத்தின் வெளிப்பாடாய் ஆகித்தெரிகிறதுதான்,

ஏன் அப்படித்தெரிய வேண்டும்,என்கிற சொல்லாக்கத்திற்கு பின்னால் சப்தமி ல்லாமல் ஒளிந்து கொண்டிருப்பது பொறுமையற்ற மனோ நிலை என்பதை அறிய முடிகிறது,

ஏன் அப்படி வெளிப்பட்டு அறிய வேண்டும்?அவசரம் அவசரம் அவசரம்,,,என கட்டவிழ்த்து விடப்பட்ட மனது உடனடி தீர்வாய் வந்து அடை கொள்வது கோபத்தில்தான்.நான் ,எனது ,என்னை….என்கிற இத்தியாதி இத்தியாதித் தனங் களின் கைகோர்ப்பே கோபம் என நினைக்கிறேன்.

அடை காத்து சரியான இடத்தில் வெளிப்படுத்துகிற கோபத்திற்கு அர்த்தமும் அடர்த்தியும் மிகவும் ஜாஸ்தி/

ஆனால் குளிருக்காய் அவசரமாய் எடுத்து போர்த்திக்கொள்ளப்படுகிற போர் வை தங்களை குளீரிலிருந்து பாதுகாத்து விடும் என்கிறதைப்போல கோபம் கொண்டு விட்டால் தங்களைடம் யாரும் நெருங்கி விட மாட்டார்கள் என அன்றாடம் அணிகிற சட்டையைப் போல கோபத்தை அணிகலனாய் அணிந்து கொண்டு விடுகிறீர்கள்.

அப்படியெல்லாம் அணிந்து கொள்வதினால் தாங்கள் அதிலிருந்து தப்பித்து விட்டதாகவும் பாதுகாக்கப்பட்டதாகவும் நினைக்கிறீர்கள்,

ஆனால் அது அற்று வருபவர்களுக்கு எது பாதுகாப்பு சொல்லுங்கள்,

அவர்களின் பாதுகாப்பும் தன்னம்பிகையும்,அவர்கள் கைக்கொண்ட வாழ்க்கை நடை முறைகளும் அன்றி வெறென்னவாக இருந்து விட முடியும்?

போகிறபோக்கில்சொல்லிவிட்டுப் போகிறார்.செல்லாயி அக்காவின் கணவர்,,/

பறக்கையில் சிறகில் ஏற்பட்டுப்போன ஒரு சின்ன சிக்கலை தீர்த்துக் கொ ண்டு வந்து விடுகிறேன் உடனே/

கனம் கொண்ட இறகுகள் இரண்டை தூக்கிக் கொண்டு காற்றின் திசையிலும் அதை எதிர் கொண்டுமாய் பறக்கும் பொழுது சிறிதே தாமதம் ஆகிப்போகி றதுதான்,

காற்றின் வேகத்திற்கும் அதன் மெது தன்மைக்கும் ஏற்ப என்னை ஆட் படுத்திக் கொண்டு வந்து விடுகிறேன்.

சொல்லிச் செல்கிற காற்றின் திசைகள் எதை அறியும்?என்ன சொல்லும் என்பது தெளிவாக விளங்கவில்லையானாலும் கூட எனது கதையை தெளி வாக சொல்லிவிட்டுசெல்லும் என்பது திண்ணம்.

காக்கைக்குருவி நீள் மலை, மற்றும் இதர இதரவானவைகள் எனது கூட்டமே எனச் சொல்லிச்சென்ற மகாகவி என்னைச் சொல்லவில்லை. ஏனெனில் நான் இருந்திருக்கவில்லை அப்போது/ஆனால் அது மெய்ப்படுகிறதுதான் இப்போது. வானத்தில் பறந்து மலையில் படர்ந்து தரையில் குதித்து இதோ வந்து விடுகி றேன், தங்களைப் பார்க்க/

இந்த உடனே என்கிற சொல்பதத்திற்கு உடனே ஆளாகிவிட முடியாது என்பது தான் சோகத்திலும் பெரிய சோகமாய்/

சந்தோஷம் சோகம் துக்கம் கண்ணீர் சிரிப்பு மற்றும் மற்றுமான இன்னபிற போலானவைகளைலெல்லாம் வாழ்வின் ஊடு பாவாய் நெசவு காட்டி வந்து செல்பவைதான்.

இருந்தாலும்அந்தநெசவை அறுத்து விட முடியா மனதுடனும் அறுத்து விடக் கூடாத கவனத்துடனும் பார்த்துக்கொண்டு கடக்க வேண்டியதுள்ளதுதான் வாழ்வை/

அப்படிக் கடைக்கையில் சில காலதாமதம் ஏற்பட்டுப்போகலாம் என்னையறி யாமலோ இல்லை என்னை மீறியோ,ஆகவே உடனே என்கிற வார்த்தையை சுமந்து வருகிற நான் கொஞ்சம் காலதாமதம் ஆனாலும் பொறுத்துக்கொள்ள வேண்டும்/.வழக்கம்போல் கோபப்பட்டு விடக்கூடாது.பின் அவிழ்ந்து போன தை அள்ளி விட முடியா சோகமாகிப்போய் விடும். பார்த்துக் கொள்ள வேண் டும் கவனமாய்/

3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

சந்தோஷம் சோகம் துக்கம் கண்ணீர் சிரிப்பு மற்றும் மற்றுமான இன்னபிற போலானவைகளைலெல்லாம் வாழ்வின் ஊடு பாவாய் நெசவு காட்டி வந்து செல்பவைதான்.

உண்மை
உண்மை
அருமை

vimalanperali said...

அன்பும் பிரியமும் சார்,,,/

ஹிஷாலி said...

அருமை