27 Oct 2018

கொக்கியிடும் அம்புகள்,,,,/


”என்ன மங்களாக்கா நல்லாயிருக்கீங்களா” என்கிற உற்சாககேள்வியுடன்தான் உள் நுழைகிறான் சௌந்திரபாண்டியன்,

கோடு போட்ட சட்டை ,அடர்க்கலரில் ஒரு பேண்ட்,இதையே மாற்றி அப்ப டியேஅடர்க்கலரில்சட்டை,வெளிக்கலரில்பேண்ட்,டக்விழுகாதஇன்னிங்க்ஸ், ரோமக்கட்டை தட்டாத ஷேவிங்,பள பளவென பாலீஸ் போடப்பட்ட சூ,சுத்த மாக துடைக்கப்பட்டு எண்ணெய்போடப்பட்ட சைக்கிள்,என்பதுதான் அவனின் அடையாளம்.

அணிந்திருக்கிற சட்டை பேண்ட்டில் அவன் பொருந்திப்போனானா இல்லை அவன் அணிந்திருப்பதால் அந்த சட்டை பேண்ட்டிற்கு அழகு வந்து விட்டதா என்பது சரிவரத் தெரியா விட்டாலும் கூட அவனுக்கு நன்றாக இருந்தது என்பதுதான் உண்மை/

ஒரு தடவை அவனது மாமா கூடக் கேட்டார் ”எங்கடா ஒனக்குன்னு பேண்ட் சட்டையெல்லாம் அமையுது,எடுத்துத்தைக்கிறையா ,இல்ல பூமியில இருந்து தோண்டி கீண்டி எடுக்குறை”யா,,,,என,,,/

திறந்து கிடக்கிறது வீடு.

குமிழ்வைத்து தைத்த வீடு என்பான்அந்த வீட்டை/ ,”ஏண்டா அப்பிடி சொல்ற,,” என மங்களாக்கா கேட்கிற நேரங்களில்”இல்லக்கா சோப்பு மொறையில வருதுல்ல குமிழு அது போல பளபளன்னு பாலீஸ் போட்டு மூடியிருக்குறது போலவே இருக்குக்கா வீடு,“தூரத்துல இருந்து பாக்கும் போது சும்மா தொட ச்சி வச்சது போல பளிச் சுன்னு இருக்குறதாலயும் சோப்புக் குமிழிக்குள்ள அடை பட்டது போல இருக் குறதாலயும் அந்தப்பேர வச்சிட்டேன் என்பான்,

”மாமா பிடிவாதம்தான் ஒங்களுக்குத் தெரியுமே தனக்கு தெரியாத வேலைன் னாக்கூட நாலு பேர் கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிட்டு மொத்த வீட்டுக்கும் ஒத் தை மனுசனா நின்னு பெயிண்ட் அடிச்சாரு பாருங்க,அதுதாக்கா பெரிய விஷயம், நம்மாளால இது முடியுமான்னு கொஞ்சம் தவங்கி இருந்தார்ன்னா அவரால இவ்வளவு பெரிய வேலைய செஞ்சிருக்க முடியாது. கூடமாட நீங்களும் புள்ளைங்களும் கைகுடுத்து ஒதவுனது வேற,நீங்க பரவாயில்ல, பெரியவ வயசுப்புள்ளைன்னு கொஞ்சம் கூட கூச்சப்படாம வெயில்ல நின்னு மாமாவோட இவளும் ஒரு வேலையாளா காய்ஞ்சாளே,அதெல்லாம்பெரிய விஷயமில்லையா,,,?அப்பிடி ஒங்க எல்லார் மனசும் கையும் சேந்து உருவான வீடு சோப்பு குமிழிக்குள்ள அடைபட்ட வீடு மாதிரி பளபளன்னு இருக்குறது னாலத்தான் அப்பிடி சொல்லுறேன், குமிழியிட்ட வீடுன்னு,,, தப்பா அது,,” என்பான் மங்களாக்காவிடம்/

”தப்பேயில்லட்டா தப்பேயில்ல,நீ சொன்னா எல்லாம் சரியாத்தான் இருக்கும், என்னையப் போனானவளுக்கு ஏதாவது உருப்படியா சொல்றதே நீதாணடா,நீ சொல்றதப்போயி எப்பிடி,,,?எது பேசுனாலும் அதுக்கு புதுசா ஒரு விளக்கம் சொல்லிஎன்னைய நம்ம வச்சிர்ற ,நீ சொல்றதும்நெஜமாத்தான்இருக்கு, ஆனா அப்பிடியான நெஜங்களுக்குப்பின்னால சமூகப்பெரியவுங்க,விஞ்ஞானிங்க, வர லாற்று ஆசிரியர்கள்,,,இன்னும் இன்னும் பல பேரோட பேரும் அவுங்க உழை ப்பும் தியாகமும் இருக்குதுன்னு தெரியுது,

“சைன்ஸ்ங்குற,வரலாறுங்குற தத்துவம்ங்குற இன்னும் இன்னும் என்னென் னமோ சொல்லுற,அது ,எனக்கு பாதி வெளங்கி பாதி வெளங்களைன்னாக்கூட நீ சொல்ற விஷயம் நல்ல விஷயம்ன்னு மட் டும் தெரியுது என்பாள்,கூடவே ஆமா நீயி என்னைய விட கொறைவா படிச்சவந்தான,எப்பிடி இப்படி நெறைய தெரிஞ்சி வச்சிருக்குற ,இவ்வளவு படிச்ச எனக்கு ஆனாவுக்கு அடுத்து என்ன ன்னு கேட்டா கொஞ்சம் யோசிச்சி சொல்ல வேண்டியிருக்கு, நீயி,,, எனக் கேள்விக்குறியிடுகிற மங்களாக்காவிடம்,,,,

”அடவிடுங்கக்கா,படிப்பு என்னக்கா பெரிய படிப்பு,ஏட்டுப்படிப்ப எந்தவயசுல வேணுமுன்னாலும் படிச்சிக்கிறலாம்க்கா,ஆனா அனுபவத்த எங்க போயி கத்துக்குற முடியும்,ஒரே நாள்ல கூட்டி வச்சி கொண்டாந்துற முடியாது,அத அனுபவிச்சி உணந்தாத்தா கத்துக்கிற முடியும்,அப்பிடி அனுபவிச்சி வந்ததும் கத்துக்கிட்டதும்தான் இந்த மாதிரி விஷயங்களெல்லாம்,அதுக்காக நான் ஒண்ணும் பெரிய ஆளுன்னு சொல்ல வரல,நானும் ஒங்களப்போல சின்ன ஆளுதான்,ஏதோஎனக்குத்தெரிஞ்சதுக்கா,கற்றதுகையளவு,கல்லாததுமலைய ளவுன்னுவாங்க,நான் மலையளவ மடியில கட்டிக்கிட்டு திரியிற ஆளு, என் னையப் போயி நெறைய விஷயம் தெரிஞ்சவுங்க லிஸ்ட்டுல சேத்துக்கிட்டு”,,, ,, என சிரித்துக்கொண்டே நகர்வான் மங்களாக்காவிடம் அப்படி பேச நேர்கிற நாட்களில்/

கண் உறுத்தாதகலரில் மெல்லிய பாடர் வைத்த காட்டன் புடவை அதற்கேற்ற கலரில் ஜாக்கெட்,உச்சி வகிடெடுத்து நெற்றிக்கிட்டிருக்கும் குங்குமம் அதன் கீழ் ஒற்றைக்கீற்றாய் நீண்டிருக்கும் திருநீறு லேசாய் அலம்பி விட்டது போல் பூசப்பட்டிருக்கிற முகப்பவுடர் மற்றும் கண்ணுக்கு இட்டிருக்கிற மை இதுதான் அவளது அடையாளம் /

முக்கால் வாசி சாத்தப்பட்டு கால்வாசி மட்டும் திறந்திருந்த கதவின் வழியாக நுழைந்த மெல்லிய காற்றுடன் சேர்ந்து இவனும் நுழைகிறான். கதவைக் கொஞ்சம் அகலத்திறந்தவனாய்/

வீட்டின் நடுவாய் தவழ்ந்து விளையாடுகிற குழந்தையாய் சுவற்றின் இடது ஓரமாய் டீவி வைத்த டேபிளும்,அதன் அருகாமையாய் காதி பவனில் வாங்கிய பாம்பேச்சேரும் கிடந்தது,

வலது சுவர் ஓரமாய் இருந்த தையல் மிஷினில் ஊசியில் மாட்டி வைக்கப் பட்டிருந்த ஜாக்கெட் துணி டேபிளின் நுனி தொட்டு தொங்கிக் கொண்டிருந் தது.

துணியின் நுனியில் தொங்கிய நூல் கறுஞ்சிவப்பில் தன் நிறம் காட்டி கண் சிமிட்டியது,சிமிட்டிய கண்ணின் பார்வை விழி கழண்டு தரை தொட்டு அருகிலிருந்த பிளாஸ்டிக்சேர்களின்மீது அமர்ந்து சற்றே இளைப்பாறி வந்தது,

ஹாலின் நடுவே காய்கறி நறுக்கிய அரிவாள் மனையும் அதன் அருகே காய்கறிச்சிதறல்களும்உரித்தப்போட்டிருந்தவெங்காயச்சருகுகளும் அறுத்துப் போடப்பட்டிருந்த கத்திரிக்காய் காம்புளும் குடைக்காளானாய் அருகருகாய்க் கிடந்தது கவிழ்த்திப் போடப்பட்டிருந்த குடைக்காளானை ஞாபகப்படுத்திச் சென்றதாய்,,/

குடையின் நிழலில் கொஞ்சம் இளைப்பாறிச் செல்லலாம் போல் தோன்றியது. சின்னக்குடை,பெரிய மனிதன்,,, எப்படிக் காணும் அந்த இடம்,,,?

ஒரு வேளை தரையின் அடியில் கொஞ்சமாய் குழி பறித்து அந்த இடத்தில் நின்று கொண்டு குடைக்கு தலை குடுக்கலாம் போலிருக்கிறது, தலையும் தாங்கும்,குடையும் சேதமாகிக் கொள்ளாது,ஆனால் தரை தோண்டுவது கொஞ் சம்சிரமமானவிஷயமாக,,,/

செங்கலும் சிமிண்டும் உயிரும் உணர்வுமாய் இந்த வீடு கட்டிக் கொண்டிருக் கும் போது கடைசியில் இவன் வந்து கொஞ்சம் கையையும் மனதையும் கலந்தான்,

சரியாக டைல்ஸ் ஒட்டும் போது எனச்சொல்லலாம்,டைல்ஸ் வாங்கிய போது இவனும் மங்களாக்காவும்தான் சென்றார்கள்,கடைக்கு/

இவனுக்கு இஷ்டப்பட்ட டிசைன் மங்களாக்காவிற்கு கொஞ்சம் மனம் இடித்தது, மங்களாக்காவிற்கு இஷ்டப்பட்ட டிசைனும் கலரும் இவனை கொஞ்சம் மனம் இடறி பின் வாங்க வைத்தது,

”கடைக்குப்போயி டிசைன் செலக்ட்பண்ணிக்க்கிட்டுஇருங்க,நான் அதுக்குள்ள போயி ஃபிரண்ட பார்த்துட்டு வந்துர்றேன்,,” எனச்சொன்ன மங்களாக்காவின் இளைய மகள் கடைக்கு வந்து விட்டாள்.

இவர்கள் இருவரும் முன்னும் பின்னுமாய் போய்க்கொண்டிருந்த போதும் பரஸ்பரம் மனம் இடறிக்கொண்டிருந்த போதும்,/

கடைக்குள் நுழையும் போதே டைல்ஸ்களை பார்த்துக்கொண்டே வந்தவள் யாரும் அதிகமாக போய்ப் பார்க்காத டைல்ஸ்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த செக்‌ஷனுக்குச்சென்றாள்,அங்கு போனதும் கிளி கொத்தி எடுத்த சீட்டாய் இந்த டிசைன் நன்றாக இருக்கிறதே,,, என முடிவெடுத்து அந்த டைல்ஸ்களையே வாங்க வைத்து விட்டாள்.

ஆசையாசையாய் பார்த்துப் பார்த்து மனம் ஒன்றிப்போய் பெற்ற குழைந் தையை உச்சி மோர்ந்து தூக்கி வருவது போல் கொண்டு வந்தார்கள்,

வீடு முழுவதும் ஒட்ட வைக்கப்பட்டிருக்கிற டைல்ஸ்கள் பரந்து பாவிக் கிடப்பதை பார்க்கிற கணங்களிலெல்லாம் ஒரு குழந்தை கால் நீட்டி படுத்திரு ப்பது போலவே தோணுகிறது,அதன் மேனியை எப்படி காயப்படுத்தி தோண்டி எடுக்க,,,?

அப்படியெல்லாம் குடை பிடிக்காவிட்டால் போகிறது,

”குடையில் விழுந்து விடுகிற ஓட்டையும் நழுவி விடுகிற அதன் கை நழுவ லும்கைகோர்க்கிறவேளையில்குழந்தைவிழித்துப்பார்த்துவீறிட்டுவிட்டால்,,,?
”வேண்டாம் இந்த வம்பு என கை கழுவி விடுகிறான்.

ஒன்றின் மீது ஒன்றாக சொருகப்பட்டு அடுக்கப்பட்டிருந்த மூன்று பிளாஸ்டிக் சேர்களில் அடியிலிருந்த சேரின் விளிம்பிலிருந்த தூசியை துடைத்து விட்டு மேலிருந்த சேரை எடுத்துப் போட்டுஅமராமல் அதன் முதுகில் கை ஊன்றி நிற்கிறான்,திரும்பவும் ஒரு முறை மங்களாக்கவை அழைத்தவாறே,,,,/

“ஏண்டா கத்துற அதான் வர்றேன்ல்ல,நீயி எனக்கு மட்டும் கூப்புடுறீயா இல்லை இந்த தெருவுக்கே கூப்புடுறியா, நீ கத்துற கத்தப்பாத்தா ரோட்டுல நடந்து போயிக்கிட்டு இருக்குறவங்க கூட திரும்பிப்பாத்துருவாங்க போல இருக்கே என்பாள்.

”ரூமுக்குள்ள கூட்டிக்கிட்டு இருந்தேன், கொஞ்சம் நேரமாகிப்போச்சி,எப்பயும் கூட்டீட்டு அப்பிடியே வந்துருவேன், இன் னைக்கி ஜன்னல் கதவுல இருக்குற தூசியெல்லாம்தட்டிகொஞ்சம் ஒட்டடை அடிச்சி சுத்தம் பண்ணுனேன். அதான் நேரம் ஆகிப் போச்சி, அதுக்குள்ள கத்தாட்டி என்னவாம்,,,,,?

“நானா கத்துறேன். நீதான் இப்பிடி கதவ தெறந்து போட்டுட்டு ரூமுக்குள்ள போயி நிக்குற,நான் வந்தது கூடத்தெரியாம,எனக்குப்பதிலு இந்த நேரத்துல வேற யாராவது வந்துருந்தா,,,,?

ஆமா வர்றாங்க,மங்களா வீடு இதுதான் தேடி கண்டு பிடிச்சி,அப்பிடியே வந்தா லும் இங்க என்னடா இருக்கு ,ரெண்டு பண்டபாத்திரம் குக்கர்,மிக்ஸி,கொஞ்சம் பலசரக்கு சாமான் அரிசி பருப்பு ஸ்டவ்வுன்னு இருக்கு, அவ்வளவுதான், அதுக்கப்புறம்நான்இருக்கேன்,வேணுமுன்னாஎன்னையதூக்கீட்டுப்போனாஉண்டு, அப்பிடியே தூக்கீட்டுப்போனாலும் நீயும் மாமாவும் வந்து என்னைய மீட்டுட்டு வந்துற மாட்டீங்க,இல்ல சனியன் தொலைஞ்சதுன்னு விட்டுரு வீங்களா,

“ஒன்னையபத்தி எனக்குத்தெரியாது.நீ என்ன இருந்தாலும் ஓங் மாமாவப் போலத்தானயோசிப்ப,ஆம்பளைங்கஅப்பிடித்தாணடாஇருக்கீங்க.தாரம்போயிட்டா மறுமாசமே கல்யாணம் பண்ணிக்கிற கல் மனசு ஒங்களுக்கு எங்க இருந்து வாய்க்கிதுன்னு தெரியலைடா என்ற கையோடு சரிடா நான் ஒரு கூறு கெட்டவ,வீட்டுக்கு வந்தவனவான்னு கூட கேக்காம என்னனென்னமோ பேசிக்கிட்டு இருக்கேன் பாரு,,,என்றவளாய் டீ சாப்புடுறீயா என்றாள்,

“நீதான் டீ சாப்புடுறதுக்குக்கூடஒரு கதை சொல்லுவியே அதென்னவோ டீக்குடிக்கிறதுக்கு முன்னாடி ஒரு டீ ,டீக்குடிக்கும் போது ஒரு டீ,டீகுடிச்ச பின்னாடி ஒரு டீன்னு,,,,அது போல எனக்கு குடுக்க முடியாட்டிக் கூட ஒரே ஒரு டீ தர்றேன்,என்றவளை தடுத்து “இல்லக்கா வேணாம்,டீக்கெல்லாம் ஒண்ணும் கொறவில்ல,வரும் போதுதான் கோழிக்காரரு கடையில டீக்குடிச் சேன் அவரு கடையில எப்பவுமே டீக்குடிச்சதில்ல,சொல்லுவாங்க, நல்லாயி ருக்கும் டீ,ஆனா வெலைதான் மத்த கடைகள விட ரெண்டு வெலை ஜாஸ்தி ன்னு, பரவாயில்ல,அந்த ஜாஸ்திய அவரு குடுக்குற டீயும் வடையும் ஈடு கட் டீரும்ன்னும் சொல்லுவாங்க,ஆனாலும் இது நா வரை அங்க போனதில்லை, இன்னைக்கித்தான் அங்க போக வாச்சிச்சி,அவருகிட்ட பேசிக்கிட்டு இருந் தேன் கொஞ்ச நேரம் ,இவ்வளவு நல்ல டீய இது நாள் வரைக்கும் குடிக்க விட்டுப் போனது பத்தி/

“அவரும் சொன்னாரு,நீங்க எங்கெங்க போயி டீக்குடிப்பீங்க, எத்தனை டீக் குடிப்பீங்க,எந்த டேஸ்ட்டுல குடிப்பீங்கங்குறது பத்தி எனக்கு நல்லா தெரியும், அதுல என்ன வருத்தம் ஒங்க மேலைன்னா இத்தனை டீய விரும்பிக் குடிக்கிறவரு ஏங் நம்ம கடைக்கி வரமாட்டேங்குறாருங்குறதுதான், ஏன்னா ஒங்களப்போல விரும்பி டீக்குடிக்கிறவுங்க ஏங் கடைக்கி வர்றத நான் ரொம்ப விரும்புவேன் தம்பின்னு சொன்னவர யெடை மறிச்சி எல்லாம் சரிதாண்ணே இவ்வளவு தன்மையா பேசவும் பழகவுமா இருக்குற ஒங்க கடைக்கி ஏன் ஆள்க அவ்வளவா வர்றதில்லன்னு கேட்டப்ப அவரு சொன்னாரு,

“அதில்ல தம்பி,ஒரு டீக்கடைன்னு வந்துட்டாலே வந்து ஒரு டீய வாங்கி வச்சிட்டுஎன்னவேணாலும்பண்ணலாமுன்னுநெனைப்புஇருக்குசில பேருக்கு. நான்ரொம்பகாராறாயெசக்கேடானபேச்சு,யெசக்கேடான பழக்கம் இதெல்லாம் அனுமதிக்கிறதுஇல்ல,டீக்குடிக்க வந்தியா,குடிச்சிட்டு போயிக் கிட்டே இரு ,அனாவசியமான பேச்சும் நடப்பும் இங்கஇருக்கக் கூடாது இங்கன் னுருவேன், அதுனாலயே நம்ம கடைக்கி சிடு மூஞ்சி கடைக்காரருன்னு பேராகிப் போச்சி, ஆனா அதையும் மீறி ஆட்கள் வரத்தான் செய்யிறாங்க என்னைத்தையோ ரெண்டு ஓடுது தம்பி நிக்காமன்னு சொன்ன கடைக்காரர கடந்துதான் வீட்டுக்கு வந்தேன்”என்றான்,மங்களாக்காவிடம்/

தெருவில் நுழைந்து முக்கு திரும்பும் போது கோழிக்காரர் வீட்டை கடந்து தான்வரவேண்டிஇருக்கும்,

பெரும்பாலான நாட்களில் சௌந்தரபாண்டியன் அவரது வீட்டைக் கடக்கும் போது வீட்டின் வெளியில் நின்று சிரித்துக்கொண்டு இருப்பார், அந்த சிரிப்பிற்கு இவன் அவரைப் பார்த்து ”நல்லாயிருக்கீங்களா” எனக் கேட்பதற்கு முன் நல்லாயிருக்கேன் நான் எனச்சொல்வதாய் அர்த்தம்.

தெருவிற்குள் நுழைந்து மங்களாக்கா வீடு போகிறது வரை எல்லோர் வீட்டு வாசலிலும் நிற்பவர்களைப்பார்த்து நல்லாயிருக்கீங்களா என நலம் விசாரித் தவாறே செல்வான், அவனது விசாரித்தலிலும் கேள்வியிலும் ஒரு மெல்லிய சுய நலம் இருந்தது,அதன் விளிம்பில் நின்று தான் பரஸ்பரம் கேள்வி கேட்டலும் நலம் விசாரித்தலும் நடக்கும்,

கோழிக் காரரின் வீட்டைக்கடக்கும் போது அதன் மீது மோதி விடாமலும் அது எளிதாய் செல்வதற்குமாய் வழி பண்ணி சின்னதாய் ஒரு சிக்னல் அமைத் தால் நன்றாக இருக்கும்,என நினைத்தவாறே வீட்டிற்குள் நுழைகிறான் ”என்ன மங்களாக்கா நல்லாயிருக்கீங்களா,,” எனக்கேட்டவாறே/

6 comments:

வலிப்போக்கன் said...

அது என்ன பழக்கமோ..தெரியவில்லை... உடம்புக்கு முடியாமல் இருந்தாலும் நல்லாயிருக்கீங்களா என்று கேட்கும்போது...சட்டுன்னு நல்லாயிருக்கேன்னு தான் பெரும்பாலோனர் சொல்கிின்றனர். நண்பரே..!!!என் அனுபவமும் அப்படித்தான்...

vimalanperali said...

வணக்கம் வலிப்போக்கன் சார்,
உங்களது அனுபவம் மட்டுமல்ல,
கிட்டத்தட்ட எல்லோர் அனுபவமும் அதுதான்,
அது ஒரு நாகரீக சொல்லாக்கமும் கூட.
நன்றி வருகைக்கு/

Tamilus said...

வணக்கம்,

www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.

இத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.

அதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.

நன்றி..
Tamil US
www.tamilus.com

vimalanperali said...

நன்றி சார்!

கரந்தை ஜெயக்குமார் said...

அதில்ல தம்பி,ஒரு டீக்கடைன்னு வந்துட்டாலே வந்து ஒரு டீய வாங்கி வச்சிட்டுஎன்னவேணாலும்பண்ணலாமுன்னுநெனைப்புஇருக்குசில பேருக்கு.

உண்மைதான் நண்பரே

vimalanperali said...

வணக்கம் சார்.அன்பும் நன்றியும் வருகைக்கு!