29 Oct 2018

இறகுதிர்த்து,,,,,

இறகுதிர்த்த கோழிக்கு என்ன தெரியும் இப்படியெல்லாம் வந்து இரு சக்கர வாகனத்தின் முன் விழிந்துவிடக்கூடாதெனவும்சாலையில்சென்று வருவோ ருக்கு இடைஞ்சல் பண்ணக்கூடாது எனவுமாய்,,/

கோழிதானே பாவம் அது,தலையில் முளைத்த கொண்டையுடனும், அது அற்றும் சுதந்திரமாய் சுற்றித்திரிந்த ஜீவனை கூட்டில் பிடித்து அடைத்து ஊசி போட்டு உற்பத்தி செய்து குறுகிய நாட்களில் அதன் வளர்ச்சி காட்டி கடைக்கு எடுத்து வந்து கறிக்கு என ஆனவுடன்தான் இப்படி ஆகிப்போனதோ என்ன வோ ,,, கோழிகள்.

அலுவலகத்தின் பணி நிறை மனதினையும் அலுப்பையும் கழட்டி வைத்து விட்டுவந்துகொண்டிருந்தஒருமாலை வேளையில் கரும்புகையாய் தலைக்கு மேல்படர்ந்திருந்தமேகமும் கைகோர்க்க வேகமெடுத்துப்போய்க் கொண்டிருந் தான், இரு சக்கர வாகனத்தில்/

இன்னும்ஆறு கிலோ மீட்டர்தான்,உந்திதிருகினால் போய் விடலாம் வீட்டிற்கு சீக்கிரமாய்என நினைத்தவனாய்நடுக்கூரின் எல்லை தொட்ட நேரம் ஊரின் வாசலில் போடப்பட்டிருந்த வேகதடையை கடக்கிற போது மறுமுனையில் எதிராய் வந்த டவுன் பஸ்ஸில் எங்கிருந்து வந்தது எனத் தெரியாமலேயே புகை போல பறந்து வந்த வெள்ளைக்கலர் போந்தாக்கோழிகள் இரண்டு பஸ்ஸின் ஊடாய் அவசரம் காட்டி விழுந்து விட அவசரமாய் பிரேக்கிட்ட பஸ்ஸின் சப்தம் கேட்டு பஸ்ஸின் முன் புறத்தை யார் அனுமதியும் இன்றி தட்டித்திரும்பி இவனது இரு சக்கர வாகனத்தின் முன் சக்கரம் தொட்டு படபடவென சிறகடித்துமாய் இறகுதித்துமாய் போய் விடுகிறது,

காற்றின் திசையில் வேகம் கொண்டு ஓடிய கோழிகளைப்பார்த்ததும் ஏதோ சொல்ல விட்டுப்போன சங்கதி சுமந்தவன் போல் வண்டியை பிரேக்கிட்டு நிறுத்தி விடுகிறான்.

பயமாகிப்போய் விடுகிறது இவனுக்கு.இந்த வழியாக போய் வந்து கொண்டி ருந்த இத்தனை நாட்களில் இவனது வண்டியின் ஒரு சின்ன ஜீவன் கூட விழுந்ததில்லை. இவனது வண்டிக்கு ஊடாக/இன்று இப்படி ஒன்றா,?

கோழிக்கு பெரிதாக ஒன்றும் அடிபட்டதாகத் தெரியவில்லை.சட்டெனபாய்ந்து சக்கரத்தின் பக்கவாட்டாக ஓடி விடுகிறதுஅவ்வளவே /

எதுவானாலும் சட்டென வண்டியை நிறுத்தி விட்டான்.சாலையின் ஓரமாய் நின்று கொண்டிருந்த இருவரில் ஒருவர் ”என்ன ஒங்ககால்ல அடி பட்டிருச்சா” என்றார் இவனிடம்,

”கால்ல அடி பட்டா பட்டுட்டுப் போகுது,கோழிக்கு ஒண்ணும் இல்லையில்ல,,,” எனக்கேட்கிறான்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல ,போங்க நீங்க வாட்டுக்கு” என்றவரின் சொல் தாங்கி”தப்பிச்சமுடா சாமி”எனசாலை ஓர கோயில்களில் குடி கொண்டி ருக்கும் தெய்வங்களுக்கு நன்றி சொல்லியவனாய் கிளம்பிய வேளையில் இறகுதித்த கோழிகள் இரண்டும் ஏதோ சொல்லிச்சென்றதாய் தோணுகிறது.

”நல்ல வேளை அந்த கோழிகளுக்கு ஒன்றும் ஆகவில்லை,அப்படி ஏதாவது ஒன்றுஆகியிருந்தால்இந்நேரம் நான்குழம்பில்கொதித்துக் கொண்டிருப்பேன் என்கிற மிகை மீறிய நினைப்பில் வந்தது மல்லிகாக்காவுக்குத் தெரியாது,

தெரிந்தால்என்ன,,,.வைவாள்கொஞ்சம்,அவளுக்குஇல்லாதஉரிமையா,அடிப்பதற்குக்கூட உரிமை இருக்கிறதுஅவளுக்கு/

“அப்பிடிஎன்னடாஉரிமையக்கண்டுட்டஏங்கிட்ட,கிறுக்குப்பையலே,நான்என்ன ஒனக்கு ஒட்டா ஒறவா,இல்ல கூடப்பொறந்த பொறப்பா சொல்லு, எங்கயிரு ந்தோ வந்த, எப்பிடியோ பழக்கமான ஓங் நல்ல மனசும் வெளந்தி பழக்கமும் எங்க எல்லாருக்கும் புடிச்சிப்போக நீ எனக்குதம்பியா உருவெடுத்துட்ட, இத்தாண்டி என்னடா உரிமை ஓங்கிட்ட எனக்கு சொல்லு” என ,மல்லிகாக்கா சொல்லும் போது,“அப்பிடியில்லக்கா நீ இல்லைன்னா எனக்கு இந்தபொழப்பு ஏது,இந்த சாப்பாடு ஏது,இந்த பேண்ட் சட்டை ,இந்த டூ வீலர் ஏது,,?இந்த மிடுக்குஏது,,,?இந்தப்பேச்சும் ,பழக்கமும் நாலு பேரோட நட்பும் ஏது சொல்லு,?”

”கண் முழியாத கோழிக்குஞ்சா ஓன் வீட்டுக்கு எங்கம்மா என்னைய கூட்டிக் கிட்டு வந்தநாளு இன்னும் பசுமையா நெனைவுல இருக்குக்கா,அப்பல்லாம் கண்ணத் தெறன்னாவாயத்தெறப்பேன்,இப்ப மட்டும் என்னவாம் அப்பிடித் தான் இருக்கேன்னு கூடச் சொல்லலாம்.ஆனா அன்னைக்கி இருந்தது விபரம் தெரியாம, இன்னைக்கி இருக்குறது ஈவு யெறக்கம் பாத்து,

“தெறந்த வாய மூடுறதுக்குக் கூட மதியத்துப்போயி ஒக்காந்துருப்பேன் ஒரு யெடத்துல,அடுத்துஎன்ன யாரு கூட ,பேசுறது,பழகுறது,இன்னும் இன்னுமான எந்தவிதமான யதார்த்தமான பழக்க வழக்கங்களும் தெரியாம வளந்த எனக்கு வயசுக்கேத்த பக்குவமும் வெளிப்பழக்க வழக்கமும் இல்லாம இருந்த நாட்கள்லதான் மில்லுக்குப் பக்கத்துல இருக்குற ஆபீசுல வேலைக்குச் சேத்து விட்டாரு. மாமா,

“அவரு வேலைக்கு சேத்துவிட்ட இந்த அஞ்சு வருசத்துல நானும் ஒரு ஆளாகி நிக்குறேன்,நாலு பேச்சு,நாலு சொல்லு.நாலு பழக்க வழக்கம், ஜவுளிக் கடையிலயும் ,பலசரக்குக் கடையிலும் இன்னும் சில யெடங்கள்லயும் கடன் சொல்லி ஜாமான் வாங்குற அளவுக்கு சம்பாதிச்சிகிட்ட நல்ல பேரு,எந்த யெடத்துலயும் யார் கிட்டயும் நெஞ்ச நிமித்தி பேசுற தைரியம் இன்னும் இன்னுமான மத்த மத்த விஷயங்களெல்லாம் எப்பிடி வந்தது, நீயில்லாம இதெல்லாம் நடந்திருக்குமா சொல்லு,

“மாமாகூடகொஞ்சம்மலச்சப்பநீதான அவருக்கு தைரியம் சொல்லி என்னைய இந்த வேலையில சேத்து விடச்சொன்ன,,நீ மட்டும் அன்னைக்கிக்கொஞ்சம் பின் வாங்கீருந்தைன்னா ,அவ்வளவுதான் எனக்கு இந்தப் பொழப்பு இப்ப வாய்ச்சிருக்குமாங்குறதுசந்தேகமே,,,/“இந்தளவுக்குநான்வந்துருப்பேனாங்குறதும் சந்தேகமே,,,, என நீளமாக பேசிய வனை இடை மறித்த மல்லிகாக்கா டேய் நிறுத்துடா என்னாவோ நான் ஓங் கூடவே இருந்து ஒன்னைய முழுசா இயக்கிட்டுஇருக்குறதுமாதிரியில்லபேசீட்டுஇருக்க,வேலையிலசேத்துவிடச் சொன்னதும்,சேத்ததும்நானும்,மாமாவுமா இருக்கலாம், அதுக்காக என்னாலத் தான் இதெல்லாம் வந்துச்சின்னு சொல்லாத, ஆமா.ஒனக்கு தெறமை இருக்கு வந்துட்ட, கட்டாந்தையிலமொளைச்சி நிக்குற செடி போல,,,,/

“அப்பிடிப்பாத்தா ஒன்னோட வேலை பாக்குறவுங்களெல்லாம் ஒன்னையப் போலவா இருக்காங்க,இல்லையில்ல,,அவுங்கள்ல பாதிப்பேரு யாராவது மூலமாத்தான வேலைக்குச் சேந்துருப்பாங்க, அவுங்களுக்குள்ள ஓங்கிட்ட இருக்குறது போல தெறைமை மொளைவிட்டா கெடக்குது, என்றவளை இடை மறித்து அப்பிடி யெல்லாம் இல்லக்கா,எனக்கு ஒரு தெறமை இருக்குன்னா அவுங்களுகு ஒன்னு இருக்கும்,கண்டிப்பா ஒவ்வொருத்தருக்குள்ளயும் ஒரு தனி தெறமை இருக்குமுக்கா,அது அவுங்கவுங்க நிக்குற யெடத்தப் பொறுத் தும் அங்கவிடுற வேரப் பொறுத்தும் இருக்குற சூழலப் பொறுத்தும் இருக்குக் கா, நீசொன்னது போலவும் ஆச்சரியப்பட்டு பேசுறது போலவும் எனக்கு அப்பிடி ஒரு சூழலும் நல்ல ஒரு யெடமும் அமைஞ்சிருக்குக்கா,அதுக்கு மேல என்னைய கைதூக்கி விட்ட சாமிக்கும் மேலா ஒங்களப்போல கண்ணும் மனசும் நெறஞ்சவுங்க பழக்கம்,,,,,எல்லாம் சேந்துஎன்னைய தூக்கி விட்டுச் சின்னு சொல்லலாம்க்கா” என்றான்,

மில்லைத்தாண்டி வந்து கொண்டிருக்கும் போதுதான் ஞாபகம் வந்தவனாய் குடிக்க மறந்த டீயை குடித்துவிட முடிவு செய்தவனாய் மில் கேண்டினில் டீ சாப்பிட்டுவிட்டுப் போகலாம் என ஓரம் கட்டுகிறான் இரு சக்கரவாகனத்தை/

கேண்டீனின் மொட்டை மாடியில் யாரோ வம்படியாய் இழுத்து வந்து காயப் போட்டதைப்போல தன் ஆகுருதி காட்டி பரந்து விரிந்திருந்த ஒற்றைக்கொன் றை மரம் ஒன்று தன்னில் பாரமாய் இருக்கிறது எனக்கருதி பூ ஒன்றை உதிர் த்து விடுகிறது இவன் கடக்கிற நேரத்தில்/

உதிர்ந்த பூ உருட்டிக் கொண்டு போன இரு சக்கர வாகனத்தின் ஸ்பீடா மீட்டரில் விழுந்து அழகு காட்டி நின்றது.

சரிந்து விழுவதைப் போலிருந்த பூவை கையில் எடுத்தவனாய் கேண் டீனை நோக்கிப் போகிறான்,கேண்டீன் சுவர் ஒட்டி வளர்ந்திருந்தமரத்தை அண்ணா ந்து பார்த்தவனாயும் வண்டியை உருட்டியவனாயும்./

“என்ன சார் சின்னப்புள்ளைங்க மாதிரி கையில் பூவ தூக்கீட்டு திரியிறீங்க, இங்க விழுகிற பூக்களையெல்லாம் இப்பிடி பெறக்கி கையில வச்சிக்கிட்டு திரியனுமின்னா இன்னைக்கி பொழுது பத்தாது ஆமா,அத தூக்கி அங்கிட்டு போட்டுட்டு வாங்க,ஒங்களுக்குப்பிடிச்சமான உளுந்த வடை இருக்கு,சூடா, சாப்புட்டுட்டு ஒரு டீப்போட்டுட்டு கெளம்புங்க என்றவராய் இவனை எதிர் பாராமலேயே கிழித்து தொங்கவிட்டிருந்த நீயூஸ் பேப்பரில் ஒன்றை எடுத்து வடையை வைத்துக் கொடுத்தார்.

இது போலான பூக்கள் என்றால் மல்லிகா அக்காவிற்கு மிகவும் பிடிக்கும், கையிலிருந்துவாங்கிஅழகுபார்த்துதலையில்வைத்துக்கொள்வாள் படக்கென/

”ஒனக்கெதுக்குப்பூ நீ என்ன அத காதுல சொருக்கிருவயா என்பாள் இவனைப் பார்த்து/

”இல்லக்காஇப்பநாஅங்கியிருந்துஇதபத்திரப்படுத்திக்கொண்டுவரப்போயித்தான தலையில வச்சிக்கிட்ட இல்லைன்னா என்ன செய்வ,நீயெல்லாம் அந்த மரம் இருக்குற யெடத்துக்கு போனனையின்னு வையி. நாள்பூராஅங்கயிருந்த வர மாட்ட,அவ்வளவு பூக்கள் உதுருது ஒரு நாளைக்கு, பூக்களா கொட்டி மேடை அமைச்சிருக்குற பாதையிலதான் நடந்து போயிதான் கேண்டீனுக்குப் போக ணும், அவ்வளவு கெடக்கும், அதுமட்டுமில்ல அதோட அழகும் ரம்மியமும், மனச சொக்க வச்சிரும் சொக்க.,,,என்பான்.

”அப்பிடியெல்லாம் சொக்கிப்போகாமயும் கேண்டீன்க்காரர் சொன்னது போல பூவ தூக்கி எறியாமலும் ஒனக்காக கொண்டு வந்தேன் பாரு ஏங் புத்திய” ,,,,,என இவன் முடிக்கும் முன் ”அந்தா இருக்கு வராண்டாவுல ,எடுத்து வேணு முன்னா அடிச்சிக்க” என்பாள்,

“ஏண்டா எத்தனை நாளைக்குடா செருப்பக் கொ ண்டியே அடிச்சிக்கிருவீங்க, ஒரு மாறுதலுக்கு வேணுமின்னா வெளக்கமாத்தக் கொண்டி அடிச்சிக்கிற வேண்டியதுதான”,,,,என்பாள் பெருங்குரலெடுத்து சிரித்தவாறே,/

மிகவும் அதிர்வற்றும் ,மெல்லியதாயும் அல்லாமல் அவள் சிரித்துக் கொண்டி ருக்கிற வேளையிலேயே எங்கிருந்து வந்தது எனத்தெரியாமலேயே டீயையும் பிஸ்கட்டையும் தருவாள்,கூடவே என்றாவது ஒரு நாளில் தட்டு நிறைந்த மிக்சர் இருக்கும்.”

”என்னக்கா மாமா வாங்கீட்டு வந்ததா, நல்லாயிருக்கு,என்பான்,அவரு வாங் கிட்டு வர்ற மிக்சர் சேவெல்லாம் நல்லாத்தான் இருக்கு,அவருநடவடிக்கதான் நல்லாயில்ல தம்பி,

“என்ன செய்யச்சொல்லு மாசத்துக்கு ஒரு தடவை இப்பிடி மிக்சர் சேவுன்னு தின்பண்டத்த வீடு கொள்ளாம வாங்கிப்போட்டுட்டுமனுசன் வீடு தங்காம திரிஞ்சார்ன்னா நானு என்ன செய்யட்டும் சொல்லு,ஏதோ ஆத்துர அவசரம் ன்னா ஓங்கிட்ட சொல்லலாம், எதுக் கெடுத்தாலும் ஒன்னைய கூப்புட முடியு மா சொல்லு.நீயே ஓன் நேரம் ஒன்னது இல்லைன்னு அலையிற ஆளு,இப்ப கிட்டத்தட்ட வெளிசுத்துலதாம்பா இருக்காரு கேட்டா அந்த வேலை, இந்த வேலைங்குறாரு,அப்பிடி என்ன வேலையோ போ,போன மாடம் பூரா ராமநாத புரத்துக்கு ஆறு தடவைக்கு மேல போயிட்டுவந்துட்டாரு மனுசன், கேட்டா மில்லு வேலையா போனேங்குறாரு,

”தீடிர்ன்னு மீட்டிங்ன்றாரு, கூட்டம்ங்குறாரு,வெளியூர் போறேங்குறாரு, இன் னைக்கி வீட்டுக்கு வரமாட்டேங்குறாரு,அப்பிடியே மில்லுலயே தங்கிக்கிறே ங்குறாரு,,,கல்யாண வீடுங்குறாரு,விஷேசவீடுங்குறாரு,,, “இப்பிடியாஏதாவது ஒண்ணு சொல்றாரு தம்பி,,,

“அவரு அப்பிடி இருக்குறதுல எனக்குக்கொஞ்சம் உடன்பாடுதான்னாலும் கூட நானும் புள்ளைங்களும் என்னாவோம் சொல்லு,

”அன்னைக்கி இந்த மிக்சர் பொட்டலம் வாங்கீட்டு வந்த அன்னைக்கி ராத்திரி புள்ளைங்களெல்லாம் படுத்து தூங்குனப்பெறகு வந்தாரு,காலையில வெள் ளென நாலு மணிக்கு எந்திரிச்சி போயிட்டாரு,ராத்திரி சரியா சாப்புடக்கூட இலல,கேட்டதுக்கு ராத்திரி வேலையில இப்பிடி அரை வயிறு சாப்புட்டாத் தான் நல்லதுங்குறாரு,நல்லா ஜீரணம் ஆகுங்குறாரு,இதென்னா புதுக்கூத்தா இருக்குன்னு கேட்டா ஆமாம் புத்தகத்துல படிச்சேங்குறாரு,எந்தப்புத்தகத்துல அப்பிடி சொல்லீருக்குன்னு தெரியல,அப்பிடி இவரு எந்த புத்தகத்தப்படிச்சா ருன்னும் புரியல,நல்லா சாப்புட்டுக்கிட்டு நல்லா திரிஞ்ச மனுசன் இப்பிடி புத்தகம்படிச்சேன்,சாப்பாட்டக்கொறைச்சேன்னுதிரியக்கண்டோமா.கொடுமை யிலும் கொடுமை இது முழுக்கொடுமையாவுல்ல இருக்கு,

“அதுமட்டும் இல்ல, பொண்ணு இப்பத்தான் கொஞ்சம் நல்லா படிச்சிக்கிட்டு வர்றா,அவளுக்குகூடமாட இருந்து ஒத்தாசையா ஏதாவது சொல்லிக் குடுத்தா வுள்ள அவளும் படிச்சி முன்னேறுவா, ஊர்க்காரியம், ஊர்க்காரியமுன்னு திரியிறது சரிதான்,அப்பிடியே ஊருக்குள்ள இருக்குற நம்ம குடும்பத்தையும் பாக்கணுமில்லன்னாஅதான் நீ இருக்கயில்ல ஒன்னயைய விட யோசனைக் காரி யாரு இருக்கான்னு என்னைய ஒரே தூக்கா தூக்கி வச்சி பேசீட்டு போயிருறாரு, நானும் இப்பிடி பொழம்புன வாயும் ஒழைச்ச கையுமா இருக் கேன் ஆமா,,,” என்றாள்,

பாதி வடையை சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே அடர்ந்து படர்ந்திருந்த கரும்புகையாய் மேகம் திரண்டு நின்றது,

இன்னும் பத்து கிலோ மீட்டர் போக வேண்டும்,கொஞ்சம் இழுத்துபிடித்து அழுத்தினால் போய் விடலாம்,

இந்த அவசரமும் படபடப்பும்தான் கொஞ்சம் நிலைகுழைந்து போகச் செய்து விடுகிறது சமயா சமயங்களில் என்கிற நினைப்பில் குடித்த டீக்கு காசு கொடுத்து விட்டு வண்டியை எடுக்கிறான்,

வர வர வண்டியை கொஞ்சம் சூதானமாகவும் பயந்து பயந்தும்தான் வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது

போனவாரத்தின் செவ்வாயன்று மாலை இது போலான மழை வேளையில் வேகமெடுத்து வந்து கொண்டிருக்கும் போது பி.கே.ஆர் பள்ளியின் அருகி லுள்ள ஸ்பீட் ப்ரேக்கில் ஏறி இறங்கும் போது ஆக்ஸிலேட்டர் கேபிள் கட்டா கி ப் போகிறது,

இந்தப்பக்கம் வந்த வழியே திரும்பி ஒர்க்‌ஷாப்போக வேண்டுமென்றால் ஐந்துகிலோ மீட்டராவது போக வேண்டும்,

இந்தப்பக்கம் என்றால் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கும் குறையாது,

ஆனால் ஒர்க் ஷாப்பில் வண்டியைப்போட்டு விட்டு வீட்டுக்குப்போய் விட லாம் என்கிற நினைப்புடன் ஒர்க் ஷாப்பிற்கு போன் பண்ணி விட்டு ஊரை நோக்கி நடக்கிறவனாகிறான் இரு சக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு,/

2 comments:

வலிப்போக்கன் said...

தூரப்பயணம்... ஜாக்கிரதையாகத்தான் இருக்கனும் போல....

vimalanperali said...

வணக்கம் வலிப்போக்கன் சார்,
தூரப்பயணங்கள் தூரப்பயத்தையும்
ஏற்படுத்தி விடுவது உண்டு/
நன்றி வருகைக்கு/